Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொஞ்சக்கூட வெட்கம் இல்லை
#21
Quote:ஏன் தாத்தா குச்சிதானே சொல்லுது தான் தீக்குச்சி என்று... ஓ.... நீங்கள் அது உரசின குச்சியோ உரசாத குச்சியோ என்று படம்பிடிக்கிறீங்கள் போல... நடக்கட்டும் நடக்கட்டும்....
இங்க சீதனம் பற்றி கதைக்கிற இடத்தில தீக்குச்சிக்கும் தாத்தாவுக்கும் என்ன படம் வேண்டிக்கிடக்கிறது...???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#22
மாக்கற்றுக்கு வந்து ஒருத்தரும் எடுக்காட்டில் என்ன செய்யிறது.. குடுத்தாவது தள்ளப்பாருங்கோ.. அல்லாட்டில் குப்பையிலை போடுங்கோ..
Truth 'll prevail
Reply
#23
ஆனால் நான் அறிந்த அளவில் மாமியார் தானாமே கூடுதலாக சீதணம் கேட்கினம்.....? :roll:
[b][size=18]
Reply
#24
அப்படியா.....??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
அப்படி என்று தான் கேள்விப்பட்டேன்..... நீங்கள் அறியவில்லையா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#26
சிலர் தாங்கள் தப்புறதுக்கு இப்படி எல்லாம் சாட்டை கண்டுபிடிக்கிறது தான்..!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
tamilini Wrote:சிலர் தாங்கள் தப்புறதுக்கு இப்படி எல்லாம் சாட்டை கண்டுபிடிக்கிறது தான்..!
சிலர் தானே ..... ஆமா தமிழீழத்திலை வாங்க கூடாது ஏன் கொடுக்கவும் கூடாது தானே..... அப்புறம் என்ன பிரச்சனை.... சீதணம் வாங்குபவர்களில் மட்டும் தவறு உண்டு எனக்கூறமுடியாது கொடுப்பவர்களிலும் தவறு இருக்கிறது..... இருவரும் திருந்தினால் தான் நீங்கள் விரும்புவது நடக்கும்..... என்னை பொறுத்த அளவில் இது ஆணின் தப்பு அல்ல .. நீங்கள் சொல்வதின் படி பார்த்தால் ஏன் இதனை பெற்றோர் பெண்ணிடம் ஆணை விலை பேசி விக்கிறார்கள் என்றும் கூறலாமே..... இது யாருக்கு அவமானம் ? இங்கு வரதட்சணை சந்தையில் ஆண்களை விற்கிறார்கள் .. அதற்கு முக்கிய காரணம் யார்? எடுத்த எடுப்பிலை ஆண்களை மட்டும் குறை சொல்கிறீர்களே... வரதட்சணையால் கூடுதலாக பாதிக்க படுவது பெண்கள் தான்........ இதற்கு எல்லா ஆண்களும் பொறுப்பல்ல ... அத்துடன் பல பெண்களும் இதற்கு காரணம்........ எனவே உங்களின் கருத்து ஒரு பக்கத்தை மையமாக கொண்டு தான் இருக்கிறதே ஒழிய பொதுவான கருத்தாக எனக்கு தெரிய வில்லை.... ஆண்களை திட்ட வேண்டும் என்றால் திட்டுங்கள் .. ஏதோ ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#28
Mathivathanan Wrote:மாக்கற்றுக்கு வந்து ஒருத்தரும் எடுக்காட்டில் என்ன செய்யிறது.. குடுத்தாவது தள்ளப்பாருங்கோ.. அல்லாட்டில் குப்பையிலை போடுங்கோ..

தாத்தா...இதெல்லாம் ஓவராப்படேல்ல... பாவம் பெண்ணாய்ப் பிறந்திட்டுதுகள்... அப்படி இப்படி கத்தத்தான் செய்யுங்கள்... கண்டுக்காதேங்கோ...!

சரி சரி... சீதனம் வாக்கிறவை வாங்க.... கொடுத்து விலைக்கு வேண்டிறவ வேண்ட... அதையே சொல்லி பெருமை பேசிறவ பேச... ஏதோ குடும்பம் என்று ஒன்று உருவாக்கி சீரழிவில்லாமல் வாழ்ந்தால் போதும்...அதுதான் தேவை....!

சீதனம் வாங்கிறவையும் கொஞ்சம் கட்டிறதுகளையும் காலம் பூராவும் கண்கலங்காமல் காக்கலாம் தானே...வேண்டாம் எண்டுறவையும் எடுத்ததுக்கெல்லாம்...அவையப்போல நான் சீதனமா கேட்டனான் இல்லாமல் எல்லே கட்டினனான் என்று காலம் பூராவும் அதையே சொல்லி அதுகளின்ர சுதந்திரத்தைப் பறிக்கிறதும் சரியில்லை.... சீதனம் கொடுத்தம் எண்டதுக்காக தலைகால் புரியாம ஆடுற பெண்களும் கொஞ்சம் நிலைமையைப் புரிஞ்சு கொண்டு புரிந்துணர்வோட வாழ்ந்து கொடுத்த சீதனத்தை தக்கவைத்துக் கொள்ளப் பார்க்க வேணும்....சீதனம் கொடுக்காமல் செய்யுறவையும் கண்டதுக்கெல்லாம் நாய் மாதிரி எஜமான் விசுவாசம் போல வாலாட்டாமல் தங்கட சுயத்தோட கணவனை மதிக்க வேண்டிய இடத்தில மதிச்சு மிதிக்கும் படி நடந்தா இடிச்சு உரைச்சு புரிந்துணர்வோட வாழுறதுதான் வாழ்க்கை......ஆனா செயன்முறையில இதெல்லாம் எந்தளவுக்கு வெற்றி பெரும் என்று எங்களுக்குத் தெரியாது....நாங்கதானே குருவிகள் ஆச்சே....! எங்களக்கேட்டா கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் தான் சீதனம் என்றுதான் சொல்லுவம்....அதுதான் நீடித்த ஆயுள் வரையான சந்தோசமான குடும்ப வாழ்வுக்கு வித்திடும்...! அன்பை பணத்தால் பகட்டால் அன்றி அன்பால்தான் அரவணைக்க முடியும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
tamilini Wrote:
Quote:ஏன் தாத்தா குச்சிதானே சொல்லுது தான் தீக்குச்சி என்று... ஓ.... நீங்கள் அது உரசின குச்சியோ உரசாத குச்சியோ என்று படம்பிடிக்கிறீங்கள் போல... நடக்கட்டும் நடக்கட்டும்....
இங்க சீதனம் பற்றி கதைக்கிற இடத்தில தீக்குச்சிக்கும் தாத்தாவுக்கும் என்ன படம் வேண்டிக்கிடக்கிறது...???

அப்படியாங்க... நீங்க சொன்னா சரியிங்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா காதலிச்சுத் தான் கல்யாணம் கட்டினவ. ஆனால் தன் தாயிடம் தனக்கு 5 லட்சம் சீதனம் வேணும் எண்டு கேட்டவ. ஏனென்றால் தான் காதலிச்ச பொடியனின் தங்கச்சியின் கல்யாணத்திற்கு அது தேவைப்பட்டது.. தாயிடம் 5 லட்சம் வாங்கியே கல்யாணமும் கட்டினவ.. என்னைப் பொறுத்த வரை தந்தால் வாங்குங்கோ.. சில பெண்களின் பெற்றொர் சீதனம் கொடுப்பதை தங்களுடைய கௌரவமாக நினைக்கிறார்கள்.. அதே நேரம் சில ஆண்கள் வலிந்த சீதனம் தா... என்று கேட்பதை தங்களுடைய கௌரவக் குறைச்சலாகவும் நினைப்பதில்லை..

..
Reply
#31
sayanthan Wrote:எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா காதலிச்சுத் தான் கல்யாணம் கட்டினவ. ஆனால் தன் தாயிடம் தனக்கு 5 லட்சம் சீதனம் வேணும் எண்டு கேட்டவ. ஏனென்றால் தான் காதலிச்ச பொடியனின் தங்கச்சியின் கல்யாணத்திற்கு அது தேவைப்பட்டது.. தாயிடம் 5 லட்சம் வாங்கியே கல்யாணமும் கட்டினவ.. என்னைப் பொறுத்த வரை தந்தால் வாங்குங்கோ.. சில பெண்களின் பெற்றொர் சீதனம் கொடுப்பதை தங்களுடைய கௌரவமாக நினைக்கிறார்கள்.. அதே நேரம் சில ஆண்கள் வலிந்த சீதனம் தா... என்று கேட்பதை தங்களுடைய கௌரவக் குறைச்சலாகவும் நினைப்பதில்லை..

அந்த அக்கா கில்லாடி... பாத்திருப்பா இவன் பாவி காதல் காதல் என்று தன்னோட சுத்துறான்...பிறகு... தங்கச்சி கலியாணம் என்று இழுக்கிறான்...பேசாம 5 இலட்சத்தை வாங்கி தங்கசியாரைக் கரையேத்திட்டா... தான் இங்கால தொத்திக்கலாம் எல்லே....! உதென்ன ..யுயுபி மற்றர்...பெண்கள் உந்த விசயங்களில இறால் போட்டுச் சுறாப்பிடிக்கிறாக்கள் என்று எங்க குருவிகள் பாட்டி அடிக்கடி சொல்லித் தருவா....! பெண்களுக்கு பின் (pin) அதுவும் முழுச் சுயநலப் புத்தி... சீதனம் கேக்கிற மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்ல வக்கில்ல.... கலியாணமும் முடிக்கோணும்... பிறகு அவையோட குப்பையும் கொட்டோணும்...ஆனா மெளனமாவும் இருக்கோணும்..அதுக்கு எங்கிணையன் கேணையன் கிடைப்பான் பார்க்க வேண்டியதுதானே...அப்படி என்று சொன்னா உடன கேப்பினம் நாங்கள் என்ன கேணச்சியளா என்று...என்ன வெளியில சொல்லேல்லாவிட்டாலும் உண்மை அதுபோலத்தான் கிடக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
Quote:ஆனா மெளனமாவும் இருக்கோணும்..அதுக்கு எங்கிணையன் கேணையன் கிடைப்பான் பார்க்க வேண்டியதுதானே...அப்படி என்று சொன்னா உடன கேப்பினம் நாங்கள் என்ன கேணச்சியளா என்று...என்ன வெளியில சொல்லேல்லாவிட்டாலும் உண்மை அதுபோலத்தான் கிடக்கு....!
_________________
நேரடியாக கேணச்சிங்கள் என்டு நினைக்கிறீங்கள் என்டு சொல்லுறதுக்கு... ஏன் இப்படி பெரிய சுத்து சுத்துறீங்கள்..??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#33
Quote:நீங்கள் சொல்வதின் படி பார்த்தால் ஏன் இதனை பெற்றோர் பெண்ணிடம் ஆணை விலை பேசி விக்கிறார்கள் என்றும் கூறலாமே..... இது யாருக்கு அவமானம் ? இங்கு வரதட்சணை சந்தையில் ஆண்களை விற்கிறார்கள்
அது தானே உண்மை...!
Quote:ஆண்களை திட்ட வேண்டும் என்றால் திட்டுங்கள் .. ஏதோ .....
ஆண்களை திட்ட வேண்டும் என்று கு}றவில்லை.. மேலே கருத்துக்களை முன்வைத்தவர்களிக்கு பதில் அழித்தேன்.. அவைகள் ஒரு பக்கம் ஆக உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.. உண்மையை நடப்பதை தான் நான் சொன்னேன்...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
Quote:தாத்தா...இதெல்லாம் ஓவராப்படேல்ல... பாவம் பெண்ணாய்ப் பிறந்திட்டுதுகள்... அப்படி இப்படி கத்தத்தான் செய்யுங்கள்... கண்டுக்காதேங்கோ...!
தாத்தாவே தேவையில்லை பொல கிடக்கு...?? உண்மையை சொன்னால் கத்திற மாதிரி இருக்கா...??

அக்கா என்ன பெருந்தன்மையாக செயற்பட்டிருக்கிறா பாருங்கோ... தனது குடும்பத்தால் கொடுக்க முடிந்திருக்கு தானாக கேட்டு வாங்கி இன்னொரு பெண்ணுக்கு கொடுத்திருக்கா... அதைவிட்டு விட்டு பேரம் பேசினால்... என்னவென்று சொல்வது...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#35
ஐயோ கேணச்சிகளா நல்லா நடிப்பினம்..விட்டா கேணயன்களாகவே ஆக்கிப்போடுவினம்....அப்படித்தான் பல ஆண்கள் திருமணத்துக்குப் பின்னாடி இருக்குதுகள்.... ஏன் என்றுதான் புரியவில்லை....! பாவம் அறியாமல் பாதாளத்தில விழுந்திடுதுகளோ ஆண் சீவன்கள்...ஒளிதேடும் விட்டில் பூச்சி தீயோடு சங்கமமாவது போல...!

ஒரு இடத்தில அக்காவுக்கு டாக்குத்தர் மாப்பிள்ளை எடுக்க லட்சம் லட்சமாய் பணம் கொழும்பில அடுக்குமாடி வீடு கார் எல்லாம் கொடுத்தவை தங்கைக்கு ரீச்சர் மாப்பிள்ளை...அதுவும் அவாவா லவ்சில பிடிச்சது....ஆரம்பத்தில கொள்கைப் பிடிப்பில சீதனம் வேண்டாம் எண்டு கலியாணம் கட்டிப்போடு பிள்ளை குட்டிவரவிட்டு தாய் தகப்பனோட ஒட்டிற மாதிரி ஒட்டி அக்காவுக்கு அந்தளவும் கொடுத்தியள் எனக்கு என்ன தந்தனியள் என்று தினமும் புலம்பல்...இது உண்மைக் கதை..இந்தக் குருவிகளே கண்ட நிஜக்கதை....! இத்தனைக்கும் அந்த ரீச்சர் பொடி ஒரு அப்பாவி..தானும் தன்பாடும்... இது என்னத்தைக் காட்டுது...மனசுக்க பண ஆசை சொத்தாசை எல்லாம் இருக்கு...ஆரம்பத்தில பருவத் துடிப்பில வேண்டாம் எண்டுறது...பிறகு வேணும் எண்டுறது.... ஆண்களைப் போட்டு நச்சரிக்கிறது.... உங்க புலத்தில ஒரு அண்ணை தன்ர தங்கைகளை வாழவைக்கவென்று உழைத்து உழைத்து அந்தாளுக்கு நாற்பது வயசும் ஆச்சுது.... பாவம் அசைலமும் இன்னும் சரியாக் கிடைக்கல்ல.... தினமும் லூசு மாதிரி அலையுது வேலை வேலை என்று.... பாக்க பரிதாபமாவும் கிடக்கு.... இப்ப அந்தத் தங்கைகள் தாங்களும் உழைச்சுச் சம்பாதிச்சிருந்தா அந்தாளுக்கேன் இவ்வளவு பொறுப்பு...அதுபோக வாறவை தங்கைகளுக்கு கொடுக்க விடிவினமோ என்ற ஏக்கத்தில அந்தாள் வாழ்க்கையையே வேறு திசைக்கு மாற்றிப்போட்டு வாழுது.... உதுகளை எல்லாம் கண்டா பெண்கள் மீது ஆத்திரம் வராம என்னதான் வரும்....! ஒரு பெண்கூடவா இல்லை அந்த ஆணிற்கு உதவிக்கரம் கொடுக்க....?????! எத்தனை பெண்கள் முன்வருவார்கள் இப்படியான ஆண்களின் சுமைகளை இறக்க....!

பெண்கள் தேடுவதெல்லாம் காரும் பகட்டும் தோடும் கழுத்தில நாய்ச் சங்கிலியும் பியர் கானும் சிகரட்டும் என்று அலையுறதுகளையே தவிர உண்மையான அன்பு கொண்டவர்களை அல்ல... பெண்களுக்குத் தியாக குணம் என்பது அறவே இல்லை.....என்பதாகவே அவர்களின் செயற்பாடுகள் உணர வைக்கின்றன....!

உண்மையில் சீதனத்துக்கு எதிராக பெண்கள் சிலர் குரல் எழுப்பவும் சுயநலம்தான் அடிப்படைக் காரணம்...! பெண்கள் என்று தங்கள் சுயநலக் குணத்தையும் போட்டி பொறாமையையும் களைந்து தாங்களும் கணவனுக்கு நிகராக கணவனோடிணைந்து குடும்பத்தைக் கொண்டு நடத்த விளைகின்றார்களோ அன்று சீதனம் என்பது ஒரு பெரிய விடயாமாகத் தோன்றாது....அதுவரை சீதனம் வாங்கமாட்டம் என்று ஆண்களும் சீதனம் கொடுக்கமாட்டம் என்று பெண்களும் போடும் கூச்சல் வெற்றுவேட்டுகளே.....! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#37
[quote=tamilini][quote]
தாத்தா...இதெல்லாம் ஓவராப்படேல்ல... பாவம் பெண்ணாய்ப் பிறந்திட்டுதுகள்... அப்படி இப்படி கத்தத்தான் செய்யுங்கள்... கண்டுக்காதேங்கோ...!
[/quote]
தாத்தாவே தேவையில்லை பொல கிடக்கு...?? உண்மையை சொன்னால் கத்திற மாதிரி இருக்கா...??

அக்கா என்ன பெருந்தன்மையாக செயற்பட்டிருக்கிறா பாருங்கோ... தனது குடும்பத்தால் கொடுக்க முடிந்திருக்கு தானாக கேட்டு வாங்கி இன்னொரு பெண்ணுக்கு கொடுத்திருக்கா... அதைவிட்டு விட்டு பேரம் பேசினால்... என்னவென்று சொல்வது...!

அப்ப சீதனம் என்று ஆண்கள் தரப்பார் கேட்டால் கூடாது... அது பேரம்...பெண்கள் தரப்பே கேட்டு வாங்கிட்டா அது சுபம்....என்ன தத்துவம்....வாழ்க சீதனத்தின் புதுவடிவம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#38
aathipan Wrote:கவலையாகத்தான் இருக்கிறது
ஆனால்

வரதட்சனை வாங்க மறுக்கும் ஆண்களை யார் மதிக்கிறார்கள்....

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@2

அதென்டா உண்மைதான். யாராவது சீதணம் வேண்டாமென்டா உடனே பெண் பக்கத்தார் பெடியில ஏதோ குறை இருக்குதென்டல்லோ நினைக்கிறாங்கள்.
தமிழினி அக்கா சீதணம் வாங்குறது பிழைதான் ஆனால் நம் சனங்களே இப்படி பாக்கேக்க எப்படி வாங்காமல் இருப்பது.
Reply
#39
aathipan Wrote:
Quote: பெண் தனக்கு தேவையானவற்றை தானே வாங்க கூடிய நிலையில் இருந்தும் கணவனைக்கேட்க வேண்டிய நிலை இருக்கிறது காரணம்..
இருவரது வருமானத்திலும் தான் குடும்பம் ஓடுது.. கணக்குகளை அதற்கேற்றாற் போல தான் வகுத்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டிய தேவை இருக்கிறது...! இதில ஆணுக்கு தான் குடி.. புகை.. என்டு நிறைய செலவு..
குடும்ப சூழ்நிலையை புரிந்து வாழும் பெண்கள் தான் அதிகம்...!


பெண்கள் எங்கே ஆண்களைக்கேட்கிறார்கள்...
சீட்டுப்பிடிச்சு அந்தக்காலத்திலேயே பழகியவர்கள்..
கண்ணுக்கு மை உதட்டுக்கு சாயம், கைப்பை,
புதிது புதிதாய் சேலைக்கேற்ற செருப்பு, செருப்புக்கேற்ற சேலை.....
சமையலுக்கு
காப்பி போடுவதற்கு
றொட்டி சுடுவதற்கு என்று எத்தனை
எல்லாம் கேட்டா வாங்குகிறார்கள்.
பாவம் கணவன் வீட்டுக்கு வந்து பார்த்தால் அன்றைய மாத உழைப்பு வேண்டாத பொருளாக வீட்டில் குடியிருக்கும்

பெண் உழைப்பவள் என்றாள் தனது பணத்தை பக்குவமாக வங்கியில் போட்டுவிடுவாள்
இல்லை பெற்றோருக்கு அனுப்பி வைப்பாள்...
தம்பியை வெளிநாடுகூப்பிட வேண்டும் என்பாள்..
இல்லை என்று சொல்ல முடியுமா?...
சொன்னாள் இரண்டு வாரம் எங்கே சாப்பிடுவது....
பேச்சு வார்த்தை இருக்காது
ஆனால் வசவு மட்டும் இருக்கும்...
இதை எல்லாம் கேட்க முடியுமா?
கேட்டாலும் ஆணின் நற்பெயரை இதைவைத்தே சிதைத்துவிடுவாள் பெண்.

நீ சுயநலவாதி என்று பட்டம் கொடுத்துவிடுவாளே...
எல்லா ஆணும் பெண்ணிடம் நல்ல பெயர் வாங்கவே
வாழ்நாளை செலவுசெய்து வீணாகிறார்கள்...

வீணாகிப்போனதே என் வாழ்வு என்று
கொஞ்சம் குடிக்கிறார்கள்..
வேறு என்ன செய்ய முடியும் அவர்களால்...
பாவப்பட்ட இனம் ஆயிற்றே அவர்கள்...

Quote:ஒரு மனைவி எதிரிபார்ப்புகள்..கோரிக்கைகளை கணவன் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர் பார்க்கிறாளோ..? இல்லையோ.. கணவன் நிறைவேற்ற முயற்சியாவது செய்ய வேண்டும் இல்லாவிட்டால் என்ன கணவன்..??

மனைவியின் கோரிக்கைளை நிiவேற்ற வேண்டும் கணவன் இல்லை என்றாள்
என்ன கணவன்? என்று ஏளனமாய் பேசிவிடுகிறார்கள்...
என்ன மனைவியர்.. ? இவர்கள் வெறும் சுயநலவாதிகள்...
கணவனும் மனிதன் தானே...
அவனுக்கு துணையாக வாழ்வதை விட்டுவிட்டு
அவன் கேட்பதை கொடுக்கவேண்டும் இல்லை என்றாள் ஆண்மைக்கே இழுக்காக
ஒரு வார்த்தையை பிரயோகித்து கேவலப்படுத்துவது...

Quote:சீதனம் என்பது வாழ்க்கையை தொடங்குவதற்கு ஒரு முதலீடாக இருக்கலாம்.. அதை இருவரும் கொண்டுவரலாம்.. அது கூட ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் இங்கு பெண்கள் தான் சீதனம் கொண்டு போகிறார்கள் எத்தனை ஆண்கள் சீதனம் கொண்டு போனார்கள்.. போகிறார்கள் சொல்லுங்கோ பாப்பம்... அதைவிட சீதனமாக வாங்கப்படுகின்ற பணம் அவர்களது வாழ்வு தெரடங்குவதற்கு முதலீடாக போடபடபடுகிறதா என்றால் அதுவும் இல்லை.. அது ஆணின் குடும்பத்தாருக்கு தான் ஏதாவது ஒரு வகையில் பயன்படும்..! வாழப்போற இருவருக்கும் பயன்படுவது குறைவு...! சரி அப்படி பார்த்தாலும்.. கஸ்டப்பட்ட வசதி குறைந்த வீடுகளில் சீதனம் வாங்காமல் பெண் எடுக்க எத்தனை பேர் வாறார்கள்.. என்கிட்ட வசதியிருக்கு.. பெண் சீதனம் கொடுக்க தேவையில்லை என்டு எத்தனை பேர் திருமணம் செய்கிறார்கள்.. தங்களுக்கு ஏற்ற வித்தில் சீதனத்தை வாங்கி கொண்டு தானே திருமணம் செய்கிறார்கள்...!



சீதனம் மட்டும்தான் அவள் கொண்டுவருகிறாள்....
அதன்பின் எல்லாம் அவன்தானே...
கல்யாணம் செய்துவைத்தபின் பெண்வீட்டாரைப்பார்க்கவேண்டுமே...
எவ்வளவு சந்தோசமாய் இருப்பார்கள்...
இனிக்கவலையில்லை இனி செலவு எல்லாம்
அந்த இளிச்சவாயன் பார்த்துக்கொள்வான்...
விட்டுது தொல்லை என்று மகிழ்ச்சியாக இருப்பார்கள்..

ஏமாந்த ஆண் அதன்பின்
ஏற்படப்போகும் பெரிய பெரிய செலவுகளை
எல்லாம் அறியாதவனாய்..
தண்ணீர்கொதிக்கவைத்த பானைக்குள் இருக்கும் தவளைபோல
சுகமாக இருக்கிறது சுகமாக இருக்கிறது என்று
தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்கிறான்...

Quote:கிரடிட் காட்டை போட்டு காசை எடுத்து ஆண்கள் காட்டியதனால் தானே மேலத்தேய பெண்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள்... காட்டை இழுத்து கலர்ஸ் காட்டி பழக்கியது யார்..?? ஆண்கள் தானே பிறகு பெண்களை குற்றம் சொல்லி என்ன ஆகிறது.. சொல்லுங்கள்.. ஆண்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு காதலிக்கோ யாருக்கோ.. செலவு செய்து காட்டியிருந்தால்.. ஏன் இந்த வில்லங்கம் எல்லாம் வருகிறது... அதைவிட காதலுக்கும் காசுக்கும் இடையில் என்ன தொடர்பு காசுக்காக காதல் முறிந்து போக.. இது தானே வேண்டாம் என்கிறது....! ஒரு பெண்ணுக்கு காசை காட்டி தான் காதலிக்க வேணும் என்டால் அந்த காதல் தேவை தானா...?? அதுக்கு பேர் கூட காதல் கிடையாது...


தன் கைப்பணம் எல்லாம்
பெண்ணின் ஆசையைப்புூர்த்தி செய்ய முதலில் செலவு செய்துவிடுகிறான்
அப்படியும் அவை அடங்கவில்லை...
சரி இன்னும் முயற்சிக்கலாம் என்று
கடன் அட்டையைபயன்படுத்துகிறான்..
பேராசைபிடித்த பெண்கள் பணம் இல்லை என்றால்
கேவலமாக ஆணை மட்டம் தட்டிவிடுவார்கள்
என்ன ஆண் நீ
என்ன கவணன் நீ
என்ன காதலன் நீ.. என்று
என்ன செய்வார்கள் ஆண்கள்... பாவம் ..

Quote:தாயகத்தில் இருந்து பெண் எடுப்பதற்கு இது மட்டும் காரணம் கிடையாது... இங்க உள்ள பெண்களை அவ்வளவாக ஏமாற்ற முடியாது.. அங்கிருக்கிறவர்களை சில காலம் என்றாலும் ஏமாற்றலாம்... அதைவிட இங்க இருக்கிற பெண்கள் கூடுதலாக இங்கத்தைய கலை கலாச்சாரங்களுடன் பழக்கப்பட்டிருப்பார்கள் என்று பல காரணங்களைக் கொண்டு தான் எடுக்கிறார்கள்.. என்ன செய்வது அங்கு வாழ்பவர்களும் இதை எல்லாம் யோசிப்பது கிடையாது வெளிநாட்டு மாப்பிளை என்டால் எதையும் யோசிக்க மாட்டினம்.. தலையை அடைவு வைத்து என்டாலும் அனுப்பி விடுவினம்..!

தாயகத்தில் இருந்து பெண் எடுப்பது ஏன் என்றால்
அவளுடைய தேவைகள் குறைவாக இருக்கும்
அப்படியும் அவள் தேவைகளை அதிகப்படுத்திக்கொண்டாலும்
கொஞ்சம் நாள் எடுக்கும்...
அனால் இதற்கு விதிவிலக்கும் உண்டு
யாரையும் பார்த்து அது வேண்டும்
இது வேண்டும் என்று அடம்பிடிக்கும் தாயகப்பெண்களும் உண்டு.
இல்லை என்றால் மரியாதைஇல்லை என்று
மரியாதைக்காக பொருட்களைவாங்க வைத்து
கணவனை கடன்காரணாக்கம் பெண்களும் உண்டு

மகளுக்குகொடுத்த பணத்தை ஏன் பெண்வீட்டார் ஊரெல்லாம் சொல்லி
ஒப்பாரிவைக்கிறாhகள்....
அவள் நல்லா வாழ்வதற்கு உதவியாகத்தானே கொடுத்தது...

மாப்பிள்ளை வீட்டாரை மட்டம் தட்ட இது ஒரு நல்ல காரணமாக
பயன்படுத்துகிறார்கள்...

சரி எதற்காக இப்படியெல்லாம் சீதனம் கொடுத்து கட்டிவைக்கிறார்கள்...
சமுதாயத்தில் சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய
எத்தனையோ பேர் தயாராக உள்ளார்கள்..
அவர்களுக்கு பெண்களை கட்டிவைக்கலாமே..
அவர்களிடம் நொட்டைபிடிப்பார்கள்...
பணம்கொடுத்து வாங்கினாத்தான் எதற்கும் மதிப்பு இந்த சமுதாயத்தில்..
இல்லை என்றால் அது...
[/quote]

@@@@@@@@@@@@@@@@@@@@@@
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆதிபன் நல்லா பட்டுத்தேறியிருக்கிறார் போல..அனால் அனைத்தும் நடந்துகொண்டிருப்பவையே.
Reply
#40
சீதனம் வாங்காமல் திருமணம் முடிப்பது கௌரவம் என்ற ஒரு நிலை வரவேணும். ஆகக் குறைந்தது அந்த கௌரவத்திற்காவது இவங்கள் சீதனம் வாங்க மாட்டாங்கள்.. எங்கட சனம் கௌரவத்திற்குத் தானே எல்லாம் செய்துகள்.. சரி சரி தந்தால் வாங்குங்கோடாப்பா.. ம்... இன்னும் ஒரு நபர்.. வெளிநாட்டில தான் இருக்கிறார்.. பெண் வீட்டார் சீதனம் கொடுக்க அதை வாங்கி பெண்ணின் இரு தங்கைகளின் பெயரிலும் வங்கியில் போட்டு விட்டார்..

..
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)