07-27-2004, 02:29 AM
<b>பஸ்சில் தாலி கட்ட முயன்ற வாலிபர் கைது</b>
ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்குத் தாலி கட்ட முயன்ற வாலிபர் தர்ம அடி வாங்கி, போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (22). இவர் இதே ஊரைச் சேர்ந்த, புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு பயிலும் மாணவியை ஒரு தலையாகக் காதலித்து வந்தார்.
தினமும் அந்த மாணவி கல்லூரிக்குச் செல்லும்போது பேருந்து நிலையம் வரை சென்று தனது காதலை ஏற்றுக் கொள்ளச் சொல்வது இவரது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் அந்த மாணவி பாலமுருகனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
இந் நிலையில் கல்லூரிக்குச் செல்ல அந்த மாணவி பஸ்சில் ஏறியபோது, பாலமுருகனும் உடன் ஏறிக்கொண்டார். பஸ்சில் மாணவியிடம் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தத் தொடங்கினார். இதற்கு அந்த மாணவியும் அவரது சக மாணவிகளும் பாலமுருகனைக் கண்டித்தனர்.
அதற்கு பாலமுருகன், இவள் எனது மாமன் மகள், எனவே நீங்கள் பேசாமல் இருங்கள் என்று கூற, உடனே அந்த மாணவி, இவர் எனது உறவினர் இல்லை. எனக்கும், இவருக்கும் எந்த சம்பந்தமும்இல்லை என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் திடீரென தான் தயாராக வைத்திருந்த தாலி கயிறை எடுத்து மாணவியின் கழுத்தில் கட்ட முயன்றார். ஆனால் மாணவி விரைந்து விலகி, காலில் இருந்த செருப்பைக் கழற்றி பாலமுருகனை அடித்தார். அவருடன் சேர்ந்து சக மாணவிகளும் பாலமுருகனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இதனையடுத்து பயணிகள் பாலமுருகனை பிடித்துக்கொண்டனர். இதனையடுத்து வடகாடு என்ற இடத்தில் பஸ்சை நிறுத்தி பாலமுருகனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஒடும் பஸ்சில் மாணவிக்கு கட்டாயத் தாலி கட்ட முயன்றது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(thatstamil.com)
-----------------------
இதெல்லாம் எதன் பாதிப்பு...வேற என்ன... சினிமாதான்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>