Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடப்பு அரசியல்
தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள யார் கட்சி அமைத்தாலும் தெரிவுசெய்யப்போவது மக்களாச்சே.. கட்சி வரட்டும் .. வாக்கெடுப்பும் வரட்டும்.. யார் யாரை தெரிவுசெய்கிறார்களெனப் பார்ப்போம்..
Truth 'll prevail
Reply
அரைவாசி மக்கள் அரசியல் தெளிவோடா வாக்களிக்கிறார்கள்?

இப்போதும் அற்ப சொற்ப சலுகைகளுக்கும், பழிவாங்கலுக்கும் சிலர் வாக்குப்போடத்தான் செய்கிறார்கள்.

மஹாஜலவினால் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்றால் அவர்களை என்ன சொல்ல?
Cry Cry Cry Cry Cry
<b> . .</b>
Reply
<b>புதிய அரசியற் பயணத்திற்கு தயாராகின்றார் சந்திரிகா! </b>

தனது தற்போதைய பதவிக்காலம் முடிவடைந்த பிற்பாடு தேர்தலில் தனது அரசியல் எதிர்காலம் முற்றுப்புள்ளி பெற்றுவிடும் என்ற நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளிலே சந்திரிகா தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

ஒருவர் இரண்டு முறையே ஐனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என்ற வகையில் 2005ம் ஆண்டுடன் முடிவடையும் தனது பதவிக்காலத்தின் பின் சந்திரிகாவால் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை தோன்றியுள்ளது.

இந்த நிலையில், கிழக்கில் பதட்ட நிலையைத் தோற்றுவித்து புலிகளை மீண்டும் யுத்தத்திற்கு இழுத்து அவசர காலச் சட்டத்தை பிரகடனப்படுத்துவன் மூலம் தனது பதவியை சிறிது காலம் நீடிக்கலாம் என எதிர்ப்பார்த்திருந்த சந்;திரிகா, அது சாத்தியப்படாதையிட்டு மற்றுமொரு முனையில் களத்தில் இறங்கியுள்ளார்.

இதன் பிரகாரம் விடுதலைப்புலிகள் பற்றிய பயப்பிராந்தியத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்தி அதன் மூலம் பெரும்பாண்மைப் பலத்தைப் பெறமுனையும் சந்திரிகா அவ்வாறு பெரும்பாண்மையைப் பெற்று சனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து சகல அதிகாரமும் கொண்ட பாராளுமன்ற அரசை மீண்டும் ஆட்சிக்கு கொணர வழிவகுத்து அதில் தான் பிரதமராக இருக்க விருப்பம் தெரிவித்து அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக இதற்கான முன்னெடுப்புக்களை சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர் மேற்கொண்டு வரும் அதேவேளை, இது பற்றி சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர கருத்துப் பகிர்வை மேற்கொள்வதற்கு அவர் தனது இராஜதந்திரப் பணியாளர்களிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தவகையில், ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதியாக இருந்த சார்ளி மகேந்திரனின் இடத்திற்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள சிறீலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் இதற்கான முக்கிய பணிகளை ஆற்றத் தற்போது பணிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரையும் இப்பணியை ஆற்றும்படி பணித்துள்ள சந்திரிகா, டிசம்பர் மாதத்திலிருந்து அவரை கனடாவிற்கான பிரதம தூதுவராக நியமிப்பதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். தமிழ் பெண்ணொருவரை மணந்த சிறீலங்காவின் சமாதானச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் இப் பணிக்குச் சிறந்தவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தென்னிலங்கை வாக்குவாங்கியின் பலத்தை அதிகரிக்கும் வகையில் விடுதலைப்புலிகளிற்கெதிரான கருத்துப் பரப்புரையை மேற்கொள்ளும் செயற்பாடும் தீவிரப்படுத்தப்படவுள்ளது. அத்தோடு தமிழர்கள் புலம்பெயர்ந்து அதிகமாக வாழும் நாடுகளான கனடா, சுவிஸ் போன்ற இடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்களையும், அரச ஆதரவு ஆயுதக்குழுக்களுக்கு நெருங்கியவர்களையும் நியமிக்கும் பணியில் சந்திரிகா ஈடுபட்டுள்ளார்.

இந்தவகையில் ஏற்கனவே கனடாவில் ஒரு நகருக்கு கொன்சலேற்காகப் செயற்பட்டு வரும் தமிழரைக் தொடர்ந்து இரு வருடங்களிற்கு பேணவும், சுவிஸில் உள்ள ஒரு நகரத்தில் பணிபுரியும் அரச ஆதரவுக்குழுவிற்கு நெருக்கமானவரைத் தக்க வைக்கவும் பரிந்துரைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

இவ்வாறான செயற்பாடுகளினூடக பதட்டத்தைத் தோற்றுவித்து தனது பதவியைத் தக்கவைக்க அல்லது அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொண்டு தான் பிரதமராக வருவதற்கான நடவடிக்கைகளிற்கு சந்திரிகா கங்கணம் கட்டிச் செயற்படுவதாக உறுதியாகத் தெரியவந்துள்ளது.

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தமிழ் ஊடகங்களிலைதான் இப்படியான அறிக்கையள்.. ஊகங்கள் வருகுதே தவிர சிங்கள் ஆங்கில ஊடகங்களிலை வருகுதில்லையே.. அது ஏன்..?
Truth 'll prevail
Reply
பிபிஸி கேட்டனியளே..? சிங்கத்தாரிட்டை கருணா கட்சி தொடங்கிறது பற்றி கேட்க இப்படித்தான் முந்தியும் கட்சி தொடங்கினவை பலரும் 1994.. தேர்தல் ஒருதரத்தோடை காணாமலப்போனவை எண்டு அறிக்கை விட்டார்.. ஈறொஸ் பற்றின கொமென்ற் எண்டு நினைக்கிறன்... விட்டிட்டு ஓடினவங்களோ.. விடப்பண்ணி ஓடினவங்களோ..? புரியாத புதிராயிருக்கு..
ஏதோ இறங்கி வந்திருக்கொண்டும் ஒரு பதில் போச்சுது.. பேச்சுவார்த்தை தொடங்க உவரும் ஓடுறதுதானோ தெரியேல்லை..

http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil...tamil_worldnews
Truth 'll prevail
Reply
<b>கருணாவின் அரசியல் - நிலாந்தன்.</b>

யுத்தநிறுத்தத்தின் குழந்தையே கருணாவின் பிரச்சினை அது இப்பொழுது யுத்தநிறுத்தத்தையே முறித்துவிடும் ஒரு கட்டத்துக்கு நெருக்கமாக வந்து விட்டது.

யுத்த காலங்களில் இனமான உணர்வுகளே மேலோங்கும். பிரதேச அபிமானங்கள் பின்னால் போய்விடும், அல்லது இரண்டாம் பட்டசமாகிவிடும். ஒரு பொதுப்பகைவனுக்கு எதிராக எவ்வளவுக்கவ்வளவு ஐக்கியப்பட முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு ஐக்கியப்பட வேண்டிய ஒருதேவை எப்பொழுதும் யுத்தகாலங்களில் இருக்கும்.

யுத்த காலமொன்றில் கருணாவின் விவகாரம் போன்ற பிரச்சினைகளுக்கு இடமேயிருக்காது. எனவே கருணாவின் பிரச்சினை ஒரு யுத்த நிறுத்த குழந்தையே. ஆனால் அது அப்பொழுது யுத்தநிறுத்தத்தை முறிக்கும் நிலைக்குக் கிட்டவாக வந்துவிட்டது போலத் தோன்றுகிறது.

இதில் புலிகள், கருணாவை எந்தளவுக்கு ஒருபொருட்டாக எடுக்கிறார்கள் என்பதை விடவும் முக்கியமானது ? கருணாவுக்கு அரசாங்கம் புகலிடம் கொடுப்பதாக அவர்கள் நம்புவதுதான் ஏனெனில் யுத்தநிறுத்தத்தில் ஈடுபடும் ஒருதரப்பாகிய அரசாங்கம் கருணாவுக்கு புகலிடம் தருவதன் மூலம் வடக்குக்கிழக்கை பிரிக்க நினைப்பதென்பது சமாதானத்துக்கான அரசாங்கத்தின் அரசாங்கத்தின் அடிப்படை விசுவாத்தையே சந்தேகிக்க வைப்பது என்பதால் கருணாவுக்கு புகலிடம் தரும் ஒரு அரசாங்கத்தை நம்பிக் கதைக்கவோ சமாதானம் செய்யவோ முடியாது என்பது புலிகள் நம்புவது தெரிகிறது.

ஆரசாங்கமோவெனில், கருணா சனநாயக நீரோட்டத்திற்கு இணையப்போகிறார் என்று கூறி அதன் மூலம் கருணாவுக்கும் தனது அமைச்சர் தேவானந்தாவுக்கும் இடையிலான உறவை நியாயப்படுத்த முயற்சிக்கிறது.

கருணா தன்னுடன் இருப்பது தனக்கு பலம் என்று அரசாங்கம் நம்புகிறதா? ஆயின் அவர்கள் கருணாவை இரண்டு விதமாகப் பயன்படுத்தக்கூடும்.

முதலாவதாக, அரசியல் தளத்தில் அவரை கிழக்கின் தேவானந்தாக்குவது. அதாவது, வடக்குக்கிழக்கு இணைப்பை மேலும் பலவீனப்படுத்த முயற்சிப்பது.

இரண்டாவதாக, யுத்தத்தில் கருணாவை வைத்து எதையாவது செய்யலாமா என்பது அதாவது, கருணா குழுவை ராசிக்குழு மாதிரி ஒரு துணைப்படைக்குழுவாக வைத்திருப்பது.

இந்த இரண்டு சாத்தியக்கூறுகளுமே கருணாவை தமிழ் தேசிய அரசியல் அரங்கில் பெருமளவுக்கு தனிமைப்படுத்தி அவரது அரசியலை வரையறைக்குட்பட்டதாக ஆக்கக்கூடியவை. இமைச்சற்று விரிவாகப் பார்ப்போம்.

முதலாவதாக, <b>கருணாவை கிழக்கின் தேவானந்தாவாக்குவது.</b> தேவானந்தாவை விடவும் கருணாவிடம் மேலதிகமாக இருப்பவை இரண்டு ஒன்று பிரதேசவாதம், மற்றது, அவர் புலிகளின் முன்னாள் பிரதான தளபதிகளில் ஒருவராக இருந்த அனுபவம்.

கிழக்கின் அரசியல் கருணா ஒரு தேவானந்தாவாக எழுச்சி பெறலாமா இல்லையா என்பதை தீர்மானிக்கப்போவது யுத்தநிறுத்தமே. ஏனெனில் கருணாவின் பிரச்சினை யுத்தநிறுத்தத்தின் குழந்தை. அந்தக்குழந்தை தாயைத் தின்னியாக வளரும் போது அதாவது, யுத்தநிறுத்தம் முறியும் போது கருணாவின் அரசியல் மிகவும் வரையறைக்குட்பட்டதாக மாறிவிடும். ஏப்படியெனில் - யுத்தம் என்று வந்து விட்டால் அரசதுருப்புக்களின் பிரதேசம் பார்த்து யுத்தம் செய்வதில்லை. யுத்தம் அதற்கேயான குரூர விதிகளுடன் முன்னேறும் போது அழிவுகளும் கொலையும், வல்லுறவுகளும் நிகழும் போது தம்மை ஆக்கினைப்படுத்தும் எதிரியுடன் நிற்கும் ஒரு நபர் தமது அரசியலுக்கு தலைமை தாங்குவதை கிழக்கின் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதாவது யுத்தகாலங்களில் கருணாவின் அரசியலுக்கு கிழக்கின் மதிப்பு இருக்கப்போவதில்லை.

யுத்தகாலங்களில் தமிழர் ? சிங்களவர்கள், தமிழர் ? முஸ்லிம்கள் என்ற அடையாளங்கள் தான் மேலெழும், பிரதேச அடையாளங்கள் ஒரு யுத்தச்சு10ழலில் மங்கிப் பின் சென்று விடும்.

கருணா நம்புகிறார் பிரதேச வாதமும் அரசாங்கத்துடன் நிற்பதும் தனது பலங்கள் என்று. இவை இரண்டும் ஒன்று மற்றதின் விளைவாயிருப்பவை. கிழக்கில் பிரதேச வாதம் கதைத்த எவருமே இறுதியாகச் சென்றடைந் இடம் கொழும்புதான். அதாவது அரசாங்கத்திடம் தான். கருணாவும் இப்பொழுது அங்கே போய்ச் சேர்ந்துவிட்டார். ஆனால் யுத்தகாலத்தில் கிழக்கில் அரசபடைகள் குறிப்பாக எஸ்.ரி.எவ் தமிழர்களை வேட்டையாட வரும் போது கருணாவால் மக்களை காப்பற்றவோ, பாதுகாக்கவோ முடியாதிருக்கும்.

அதாவது, கருணாதனது பலம் என்று கருதுதுவது எதுவோ அதுதான் - அரசாங்கத்துடன் நிற்பது ? தமிழர்களின் தேசிய அரசியல் அவருடைய பிரதான பலவீனமாயிருக்கிறது.

இது யுத்த காலங்களில் மிக்குரூரமாக வெளித்தெரிய வரும் போது அதுவும் கிழக்கின் மிகச்சிக்கலான பல்லினச்சூழலில் கருணாவின் அரசியல் வரையறைக் குட்பட்டதாக மாறிவிடும்.

எனவே ஒரு யுத்தம் மூழ்வது ஒப்பீட்டளவில் கருணாவுக்கு பாதகமானது. ஆனால் இப் பொழுது கருணாவுக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான உறவே யுத்தமொன்றுக்கு போதுமான காரணமாகமாறி விடும்போலிருக்கிறது. இது கருணாவின் அரசியலில் காணப்படும் ஒரு வேர்நிலைமுரண்.

இரண்டாவது, கருணா குழுவை ஒரு துணைப்படைக் குழுவாக அதாவது ராசிக்குழு போலப் பயன்படுத்துவது. கருணா புலிகளின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவர் என்பதை வைத்துக் கொண்டு அவரைவைத்து யுத்தகளத்தில் நிறையச்சாதிக்கலாம் என்று அரசபடைத்துறை நம்பக்கூடும் ஆனால் கருணாவின் பிரச்சினை தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடப்பவற்றை தொகுத்துப்பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும். அதாவது <b>கருணா ஒரு சண்டை செய்யவல்ல தளபதியாக இருக்கலாம். ஆனால் அவரொரு போரியல் நிபுணர் அல்ல.</b>

அவர் தனது பிரச்சினையை தொடங்கி சுமார் 40 நாட்களின் பின்பே புலிகள் அவருக்கு எதிராப் படை நடவடிக்கை ஒள்றை தொடங்கினார்கள். இந்த 40 நாட்களும் கிழக்கில் யுத்தத்தை நடாத்தியது பெருமளவுக்கு பிஸ்ரல் குழுவே. இந்த 40 நாட்களிலும் கருணா தனக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய படை நடவடிக்கைகளைக் குறித்து எத்தகைய முன் அமானமும் இன்றி அல்லது குறைந்த பட்சம் ஊகங்களுமின்றிக் காணப்பட்டார். என்பதைத்தான் அவரது பிந்திய நடவடிக்கைகள் நிரூபித்தன.

அவர் 20 ஆண்டுகளாக உறுப்பினராகவும் தளபதியாகவும் இருந்த இயக்கமும் அதன் தலைமையும் எப்படியெப்படி அவரைச்சுற்றி வளைக்க முடியும் என்பது குறித்து சிந்தித்திருக்க வேண்டிய காலங்களையெல்லாம் அவர் தனது வல்லமைக்கு மீறிய பிரகடனங்களை வெளியிடுவதில் அல்லது தனது முதுகைத்தானே தட்டிக்கொள்வதில் தான் விரயம் செய்தார்.

அவர் சண்டையை எதிர் கொண்டவிதமும் பின்னர் தப்பியோடியவிதமும் அவருடைய படைத்துறை நிபுணத்துவத்தையோ மேதாவிலாசத்தையோ வெளிக்காட்ட தவறிவிட்டன. உண்மையில் கருணாவின் பிரச்சினை முதலில் புலிகள் பலத்திற்கு சோதனையாக தொடங்கினாலும் 40 நாற்பது நாட்களின் பின் அதுவே புலிகளின் பலத்தை மீள ஒரு தடவை திட்ட வட்டமாக நிரூபிப்பதாகவும் மாறியது. இதன்படி கூறின் கருணா சமாதான காலத்தில் புலிகளின் பலத்தை நிரூபித்தார் என்றே சொல்லவேண்டும்.
துவிர அண்மைக்காலங்களில் கிழக்கில் கருணா குழுவினரால் கொல்லப்பட்டவர்களில் பொரும்பாலானவர்களில் பெரும்பாலனவர்கள் ஆயுத பாணிகள் அல்ல என்பதை இங்கே சுட்டிக் காட்டவேண்டும். நிராயுதபாணிகள் அல்லது உடல்வலுக் குறைந்தவர்கள் மீதான கரந்துறைத்ததாக்குதல்களே பெரும்பாலானவை.

எனவே, தனது கிளர்ச்சியைத் தொடங்கியதிலிருந்து கருணா இதுவரை தனது குழுவின் போர்த்திறணையோ அல்லது தனது தனிப்பட்ட இராணுவ மேதாவிலாசத்தையோ வியக்கத்தக்க வகையில் நிரூபித்திருக்கவில்லை. இதுவரையிலும் அவர்களால் முடிந்ததெல்லாம் நாட்டை யுத்தத்திற்கு கிட்டவாகக் கொண்டு வந்ததுதான்.

இந்நிலையில் இத்தகைய ஒரு நபரை நம்பி அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை முறிக்கப்போகிறதா என்பதே இப்போதுள்ள கேள்வி.

கருணாவின் அரசியல் எனப்படுவது எல்லாவிதங்களிலும் நாட்டை யுத்தத்தைநோக்கியே இட்டுச் செல்வதாகியுள்ளது. கருணாவை அவர்கள் ரீதியாகப் பாவித்தாலும் அது வடக்கு கிழக்கு இணைப்பை பலவீனப்படுத்தும் ஒரு செயலாகவே புலிகளால் பார்க்கப்படும். இது சமாதானம் செய்வதைக் கடினமாக்கும் இரண்டாவதாக, கருணாவை படைத்துறை ரீதியில் பாவிப்பது என்றாலும் அதற்கு யுத்தத்தை தொடங்கியாக வேண்டும்.

எனவே எப்படிப்பார்த்தாலும் கருணாவின் அரசியல் யுத்தத்திற்குக் கிட்டவாக வருகிறது.

ஒரு இரத்தக்களரியைத் தவிர்ப்பதற்காகவே தான் அலிசாகிர் மௌலானாவின் உதவியுடன் தப்பிச்சென்றதாகக் கருணா கூறியிருந்தார். ஆனால், அவர் தப்பிச் சென்ற போது கிழக்கில் பிரகடனம் செய்யப்படாத ஒரு நிழல்யுத்தத்துக்கான களத்தையும் திறந்து விட்டே சென்றிருக்கிறார். கிழக்கில் இப்பொழுது புத்திஜீவிகளும் பத்திரிகையாளர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே நகர் புறங்களில் யாரும் யாரையும் நம்பிக்கதைப்பதில்லையாம். சொந்தச் சகோதரர்களே ஒருவர் மற்றவரை சந்தேகத்துடன் பார்கும் ஒரு நிலை, ஒரு பத்திரிகையாளர் சொன்னார்? மோட்டார் சைக்கிள் ஓடும் போது யாராவது பின்தொடர்ந்து வருகிறார்கள் என்று கண்ணாடியில் தெரிந்தால் காது கூசுகிறது. உயிரும் கூசுகிறது என்று இதைவிட யுத்தம் பறவாயில்லை ஏனெனில் அது அதிகம் வெளிப்படையானது என்று ஒரு கூர்மையான அவதானி சொன்னார்.

<b>சமாதானத்தை விடவும் யுத்தம் வெளிப்படையானது, அல்லது பறவாயில்லை என்று கூறும் ஒரு நிலையை கிழக்கில் தோற்றுவித்ததன் மூலம் அந்தமக்களுக்கு கருணா விட்டுச்செல்லப்போவது எதை?.</b>

நிலாந்தன் - Eelanatham/ Sooriyan
<b> . .</b>
Reply
யுத்தம் யாருக்கு தேவைப்பட்டது..? யாருக்கு தேவைப்படுகின்றது..? யாருக்கு தேவை..?
Truth 'll prevail
Reply
தமிழர் இரண்டாம்தரப் பிரஜைகளாக நடாத்தப்படவில்லையென நம்புவர்களுக்கு யுத்தம் தேவையில்லை. கூட்டுக்குள் இருக்கும் பறவை தான் சுதந்திரத்தோடு இருக்கிறேன் என்பதை நம்புவர்களுக்கும் யுத்தம் தேவையில்லை.

காந்தீய வழியில் போராடி சிங்களவரிடமிருந்து எதையும் பெறமுடியாது என்பவர்களுக்கும் உரிமைகளைப் போராடித்தான் பெறவேண்டும் என்று நம்புவர்களுக்கும் யுத்தம் தேவைதான்.

நான் முதலாவது வகையினரை கற்பனாவாதிகள் என்றுதான் எண்ணுகிறேன்.
<b> . .</b>
Reply
2001 ஆம் ஆண்டிலிருந்து காந்தீய வழி யில்தான் அரைகுறை சமாதானமாவது இருக்கின்றது நடக்கின்றது என்பது தெரியதாவர்களுக்கு நிஜம் கற்பனையாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை..

யுத்தம் தேவை என வெளிப்படையாக பிரச்சாரம் செய்யமுடியாமல் கோழைத்தனமாக மறைமுக யுத்தத்தை திணிப்பவாகளுக்கு நிஜம் கற்பனையை விட அகோரம் என்று மீண்டும் வலியுறுத்தப்படவேண்டிய தூரதிஸ்ட நிலையை மக்கள் போதிப்பார்கள் என்பது நம்பிக்கை..
Truth 'll prevail
Reply
காந்தீய வழியென்றால் ஆயுதங்களை ஒப்படைக்க முடிந்திருக்குமே. வன்முறையைக் கைவிட்டுவிட்டோம் என்று அமெரிக்கனுக்கு வாக்குறுதி கொடுத்திருக்க முடியுமே.
<b> . .</b>
Reply
நாடாளுமன்ற உறுப்பினாகளில் ஒரு சிலரைத்தவிர பலரும் சமாதானப் பாதையைத்தான் விரும்புகிறார்களே தவிர யுத்தப் பாதையையல்ல..

பிபிஸி பேட்டிகளை கவனித்தால் தெரியும்.. நேற்றைய செய்தி இன்னும் தளத்திலிருக்கின்றது.. இனைப்புக்கூட கொடுக்கப்பட்டுள்ளது..

அமெரிக்கனுக்கும் இந்தியனுக்கும் பயந்துதானே நாளுக்கு ஒரு அறிக்கை விதவிதமாக வைக்கப்படுகின்றதே.. இந்தியாவிடம்கூட காலில் விழாத குறையாக் கெஞசி அறிக்கைகள் விடுவதிலிருந்து யுத்தத்தின் தன்மை புரிகின்றதே..
Truth 'll prevail
Reply
சமாதானப் பாதையில் போய் சுடுகாட்டைத்தான் அடைய முடியும். ஏனெனில் சிங்களவர் தரும் சமாதானமென்பது தமிழரை இல்லாதொழிப்பதாகும். இது புரியாமல் ஏதோ கிடைக்கும் என்று நம்புவர்கள் தங்களைத் தாங்களே ஏமற்றிக் கொண்டிருப்பவர்கள்.
<b> . .</b>
Reply
இரண்டுவருட காலமாக பேச்சுவார்த்தை என்று நடைபெற்றது.. தற்போது நடைபெறுவது என்ன..? சுடுகாட்டுக்கான அஸ்திவாரமா..?
Truth 'll prevail
Reply
அப்படியா மதிவதன ஐயா..? அடடா.. பிறகு...? இன்னும் ஏதாவது எழுதுங்கோவன்.. மாற்றுக்கருத்துக்கும் இடம் கொடுக்க வேணுமெல்லோ.. என்ன நான் சொல்லுறது மதிவதன ஐயா..

..
Reply
Mathivathanan Wrote:இரண்டுவருட காலமாக பேச்சுவார்த்தை என்று நடைபெற்றது.. தற்போது நடைபெறுவது என்ன..? சுடுகாட்டுக்கான அஸ்திவாரமா..?


<b>அஸ்திவாரமோ?யாழ்ப்பாணத்தில் எதுக்கோ போட்ட அஸ்திவாரகல் நட்ட பின் மறுநாள் அஸ்திவாரகல் நல்லூர் கோயில் முன்னால் இருந்ததாமே.</b> :roll: Confusedhock:
----------
Reply
பேச்சுவார்த்தை சர்வதேச நாடுகளில் சிங்கள அரசின் முகமூடியைக் கிழிக்கவும், தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கு வலுச் சேர்க்கவும்தான் என்பது அரசியலில் ஆர்வமுள்ள கற்றுக் குட்டிகளுக்குக் கூடத் தெரியும்.
<b> . .</b>
Reply
<span style='font-size:25pt;line-height:100%'>கருணா அணியினர் மீதான தாக்குதல்: சம்பவ இடத்தைப் பார்வையிட்ட செய்தியாளரிடம் இருந்து தகவல்கள்</span>

கொழும்பை ஒட்டிய பன்னிப்பிட்டியாவின் வீடொன்றில் நடந்த இந்த கொலைச் சம்பவம் குறித்து ராணுவ அதிகாரி சுமேத பெரைரா வழங்கிய தகவல்களையும், கொலைகள் நடந்த விதம் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றையும் விளக்குகிறார் சம்பவ இடத்திற்குச் சென்று வந்துள்ள செய்தியாளர் கருணாகரன்.

எட்டு பேரும் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக தலைமைக் காவல் அதிகாரி தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

கொல்லப்பட்டுள்ள நபர்களுடன் தங்கியிருந்தவர்களே இக்கொலைகளைச் செய்துவிட்டு தப்பித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுவதாகவும் கருணாகரன் கூறினார்.


<span style='font-size:25pt;line-height:100%'>கருணா விவகாரம் சமாதானமாகத் தீர்க்கப்படுகின்ற வழி எப்போதோ கைநழுவி விட்டது - ஆய்வு</span>

தற்போது நோர்வே தரப்பு எடுத்துவரும் முயற்சிகளுக்கு இந்த சம்பவம் பின்னடைவைத் தருமா என்பதையும், கருணா அணி முற்றிலுமாக வலுவிழந்துவிட்டதை இச்சம்பவம் குறிக்கிறதா என்பதையும் ஆராய்கிறார் கனடாவில் வாழும் இலங்கை அரசியல் ஆய்வாளர் D.B.S.ஜெயராஜ்.



<span style='font-size:25pt;line-height:100%'>கொழும்பில் கருணா அணியினருடன் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்திற்கு இலங்கை பாதுகாப்பு செயலர் மறுப்பு</span>

கொழும்பில் கருணா அணியினருடன் கொல்லப்பட்டுள்ள ஒருவர், தம்மிக என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். இவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று சந்தேகங்கள் தெரிவிக்கப்படுசின்றன. ஆனால் இது தவறு என்றும், தம்மிக யார் என்பது விசாரணையில் தெளிவாகும் என்றும் பாதுகாப்புச் செயலர் சிரில் ஹேரத் கூறியுள்ளார்.


<span style='font-size:25pt;line-height:100%'>கறுப்பு ஜூலை நினைவு தினத்தை ஒட்டி இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடையடைப்பு</span>

1983ல் நடந்த கறுப்பு ஜூலை இனக்கலவரங்களை நினைவு கூர்ந்தும், வெலிக்கடை சிறைக்கைதிகள் படுகொலை மற்றும் பல படுகொலைகளைக் கண்டித்தும் இன்று வடக்கு கிழக்கில் நடந்த கடையடைப்பின் விபரங்கள் அடங்கிய செய்திக் குறிப்பு.


<span style='font-size:25pt;line-height:100%'>இந்திய இலங்கைப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டால் அது இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு பாதகமாக அமையும் - பெங்களூர் மாநாட்டில் தீர்மானம்</span>

பெங்களூரில் நடந்த தமிழ் தேசியவாத அமைப்புகளின் மாநாட்டில் இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த மாநாட்டில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பலர் பங்கேற்றபோதும், மாநாட்டில் உரையாற்றிய முக்கியத் தலைவர்கள் யாரும் விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்துப் பேசுவதை தவிர்த்தார்கள் என்று, பெங்களூர் சென்ற, எமது செய்தியாளர் கோபாலன் தெரிவிக்கிறார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
Truth 'll prevail
Reply
நன்றி தாத்ஸ்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
அனுரா..கருணா சிங்கப்பூர்..அமெரிக்க முடிச்சுப் போட்டாங்கள்.. தொடர்ச்சியைக் காணேல்லை..

பயங்கரவாத தடுப்புக் கூட்டத்திலை பேசுறது எண்டாங்கள் அதுக்குக்கூட றிப்போட்டர்மார் போகேல்லை..

லண்டனிலைகூட ஒருத்தரும் VIP றிசீவ்பண்ணப் போகேல்லைப்போலை.. என்னப்பா Follow up இல்லாத செய்தியள் சொல்லுறாங்கள் இவங்கள்..?
Truth 'll prevail
Reply
ஒரு வித்தியாசமான பொலோஅப் வந்திருக்கிது.. இது நம்ம புதினம் தளத்தான் இருந்தாலும் நெருப்பு தளத்தை சாடி வந்திருக்கிது படிச்சுப் பாருங்கோ..

ஹோம்வேக்கிலை கோட்டை விட்டிட்டு பிடிபட்டிட்டார்.. இந்த தேசிகள்.. பாயாசத்திலை இல்லை தேசிகன்.. தேத்தண்ணியிலை..

கொழும்பிலிருந்து -தேசிகன்- புதினம் Wrote:நீல் தம்மிக இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவரே[size=24]???


கொட்டாவாவில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான நீல் தம்மிக என்பவர் இராணுவத்தையோ அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவையோ சார்ந்தவரல்ல என்று சிறீலங்காத் தரப்புத் தொடர்ந்து தெரிவித்து வந்தது.

மேற்படி நீல் தம்மிக மட்டக்களப்பிலுள்ள வெளிநாட்டு புனரமைப்பு நிறுவனமொன்றில் சாரதியாகக் கடமையாற்றியவர் என்றே இதுவரை வெளிவந்த தகவல்கள் தெரிவித்தன.

ஆனால் பொலநறுவை மாவட்டம் வெலிகந்தையைச் சேர்ந்த நீல் தம்மிக இராணுவத்தில் இருந்தாரென்றும், சுமார் 18 மாதங்களிற்கு முன்னர் இராணுவத்தை விட்டுத் தப்பியோடினார் என்றும் இப்போது கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தெரிவிக்கும் தகவலிலிருந்து முற்றாக மாறுபடும் இச் செய்தியின் பிரகாரம், சுமார் 18 மாதங்களாக நீல் தம்மிக இராணுவப் புலனாய்வுப் பிரிவில் செயற்பட்டு வருகிறார் என்ற கருத்துப்படவே ஊடகவியலாளர்களால் நோக்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, கருணாவின் பெயரைப் பாவித்து சந்திரிகாவிற்கு நெருக்கமான தமிழ் ஆயுதக் குழுவொன்றினால் நடாத்தப்படும் இணையத்தளமொன்று மேற்படி நபர்களிற்கு பாயாசத்தில் மயக்கமருந்து கொடுத்தே இக் கொலைகள் செய்யப்பட்டதாகவும், ஆறு புலிகள் வந்தே இக் கொலைகளைச் செய்ததாகவும் புரளியொன்றைக் கிளப்பி விட்டுள்ளது. கருணா கொழும்பிற்குத் தப்பியோடியதும் இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டதும், கொழும்பு ஆங்கில-சிங்கள ஊடகங்களினால் இது பிரபல்யப்படுத்தப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதேசவாதத்தைப் பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் இத்தளம் கருணா சார்ந்தவர்களால் இலங்கையில் வைத்து நடாத்தப்படுவதான தோற்றத்தை மேற்படி தளத்தின் செய்திகள் ஏற்படுத்தினாலும் அது கனடாவில் இருந்து சந்திரிகா சார்பு தமிழ் ஆயுதக்குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கப்படுவதான செய்தியை கொழும்புப் பத்திரிகைகளின் பத்தியாளர்களும், செய்தியாளர்களும் அண்மையில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தனர்.

பிரதேசவாதத்தை ஏற்படுத்தவும், புலிகள் மீதான காழ்ப்புணர்வை கொட்டித் தீர்க்கவும் செயற்படும் இத்தளம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதுடன், சிங்களப் பத்திரிகையாளர்களிற்குத் தீனி போடும் ஒரு தளமாகவே செயற்பட்டு வருகிறது.

பொலிஸ் மாஅதிபரே புலிகளை இவ்விவகாரத்தில் காரணமின்றி குற்றஞ்சாட்டமுடியாது என்று தெரிவித்துள்ளதோடு, இவ்வீட்டிலிருந்த இருவரே இக்கொலைகளைச் செய்தார்கள் என்ற ரீதியில் விசாரனைகள் நடைபெற்று வரும் போதும் இத் தளங்கள் திட்டமிட்ட பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகின்றன.

இவ்வாறான தளங்கள் இலங்கையில் இயங்கவில்லையென்பதையும், இவை வெளிநாடுகளிலிருந்து சந்திரிகா சார்பு ஆயுதக்குழுவால் இயக்கப்படுகின்றன என்பதையும் தற்போது சிங்கள-ஆங்கில ஊடகங்கள் கிரகிக்கும் நிலையை அடைந்துள்ளன என்பதை ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் செய்தியாளர் தெரிவித்துள்ள போதும், கருணாவால் தனது பெயரில் மேற்கொள்ளப்படும் இச் செயற்பாடுகளைக் கூட நிறுத்த முடியாத கையாலாக நிலையே கருணா இருப்பது கருணா பற்றிய பிரமையை ஆய்வாளர்களிடமிருந்து அடியோடு இல்லாது செய்துவிட்டது என்றும் தெரிவித்தார்.
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)