Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்ணே நீயும் பெண்ணா
ஆளப்பிறந்த ஆரணங்குகள்

அடுக்களைக்கு உரியவள் பெண் என்ற காலம் மலையேறிப் போய்விட்டது. நான் ஆணுக்கு எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல என்று சொல்வதுபோல, இன்றைய பெண் ஆணுக்கு நிகராகப் பலதையும் சாதித்து வருகின்றாள். முன்பு சிறைப் பறவை போல, நாலு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்த பெண் குலத்திற்கு, இன்று தாராளமாகவே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிவதனால், சகல துறைகளிலும் இவளால் பிரகாசிக்க முடிகின்றது.
ஆணை முந்துமளவிற்கும் இவள் சாதனைகள், சில சமயங்களில் பல படிகள் மேலே சென்று விடுவதுமுண்டு. பெண் என்றால் பலவீனமானவள் என்ற பதத்திற்கு, என்றோ சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது என்று சுருங்கச் சொல்லிவிடலாம்.

ஒரு நாட்டையே ஆளுமளவிற்கு இன்று பெண் வளர்ந்து உயர்ந்து விட்டதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஒருவரல்ல இருவரல்ல, பல பெண்கள், தமது ஆளுமைக்குள், ஒரு நாட்டின் மக்களை வைத்துக் கொண்டு வழிநடத்துவது என்பது மிக எளிதான விடயமல்ல. பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதையே இந்த நிகழ்வுகள் நமக்கு நிரூபிக்கின்றன.

உலக நாடுகளின் தலைவிகளாக கோலோச்சுபவர்கள் பட்டியலைப் பார்த்தால் தென் கிழக்கு ஆசிய நாடுகளில்தான் ஆளும் பெண்களின் தொகை அதிகரித்து வருவதை நம்மால் காணமுடிகின்றது. அண்மையில் நடந்த இந்திய தேர்தலில் கூட ஒரு பெண்தான் இந்திய உபகண்டத்தை ஆளத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வேறு யாருமல்ல. ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்தி, இந்தத் தடவை அந்தப் பதவியை ஒப்புக் கொள்ளாமல் விலகிக் கொண்டு விட்டார். இந்தியாவில் தமிழ் நாட்டைத் தடம் புரள வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்னொரு உதாரணம். ஒரு நடிகையாக வெள்ளித் திரையில் பிரகாசித்தவர், தமிழ் நாட்டையே தன் தலைமைக்குள் கொண்டு வந்திருப்பது, ஓர் அசாதாரண சாதனை என்பதில் சந்தேகமே இல்லை.

தென் கிழக்கு ஆசிய நாடுகள் பக்கம் திரும்பினால், சிறீலங்காவின் இன்றைய ஜனாதிபதியாக இருப்பவர் ஒரு பெண்தான். கணவன் சுடப்பட்டு கொல்லப்பட்டபோதிலும், அரசியல் கொந்தளிப்பிடையே, ஆட்சிக் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் இவர்
இலேசுப்பட்டவர் அல்ல. ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மகள் என்று மூவருமே ஆட்சிப் பீடத்தில் உட்காருவது என்பது சுலபமான விடயமல்ல. இதை ஒரு உலக சாதனை என்றே கூறவேண்டும். மார்ச் 60ம் ஆண்டு இவரது தாயார் சிறீமாவோ பிரதமராகியபோது, உலகின் முதற் பெண் பிரதமர் என்று இவரது பெயர் சாதனை ஏட்டில் எழுதப்பட்டது. மே 65 வரை ஆட்சியிலிருந்த இவர், பதவியிழந்து, மீண்டும் மே70இல் இவர் ஆட்சிக்கு வந்தார். 77இல் பதவி இழந்து, மூன்றாவது தடவையாக நவம்பர் 94இல் இவர் மீண்டும் பிரதமராகத் தெரிவாகியது என்பது எல்லோருக்கும் முடிந்த காரியமல்ல. 1956இல் இவர் கணவர் பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்து, 1959இல் தன் அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். 94ம் ஆண்டில் மகள் சந்திரிகா ஜனாதிபதியாகி, தாயைப் பிரதமராக்கியதும் ஒரு சரித்திரந்தான். 2000மாவது ஆண்டில் சிறீமாவோ இயற்கை மரணம் எய்தினார்.

இந்திய உபகண்ட ஆட்சியிலும் குடும்ப ஆட்சி கொடிகட்டிப் பறந்திருக்கின்றது. 1947 இல் தந்தை நேரு ஆட்சிக்கு வந்தார். மகள் இந்திராகாந்தியோ ஜனவரி 66இல் ஆட்சியைப் பிடித்தார். 77இல் ஆட்சி முடிவுக்கு வர, மீண்டும் 1980இல் ஆட்சிக் கட்டிலில் இவர் அமர்;நதார். ஒக்டோபர் 84இல், பொற்கோவிலில், இவரது மெய்க்காப்பாளரால் கொல்லப்படும்வரை ஆட்சி தொடர்ந்திருக்கின்றது. இப்பொழுது 2004ம் ஆண்டு
இந்திராகாந்தியின் மருமகளுக்கும் நாட்டை ஆளும் வாய்ப்பு வந்து போயிருக்கின்றது.

பெண் ஆளுனர்கள் என்ற பட்டியலில், சிறீமாவோ, இந்திராகாந்தியைத் தொடர்ந்து, Golda Meyer பதவிக்கு வந்தார். இவர் மார்ச் 69ம் ஆண்டு இஸ்ரவேல் நாட்டின் பிரதமராகத் தெரிவாகினார். இவரது ஆட்சி 74ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இவர் 1978ம் ஆண்டு உயிர் நீத்தார். Iron Lady என்று வர்ணிக்கப்பட்ட நெஞ்சுரம் கொண்ட மார்கிரெட் தட்சர் என்பவர்தான் ஐரோப்பாவில் முதற்தடவையாகத் தெரிவாகிய பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகின்றார். இவருடைய ஆட்சி மே 79இல் ஆரமபித்து, நவம்பர் 1990 வரை ஐக்கிய இராஜ்ஜியத்தில் தொடர்ந்தது. இவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்.

பாகிஸ்தானின் ஆட்சியாளராக வந்த பெனாஸீர் பூட்டோவும், பெண் ஆட்சியாளர்கள் மத்தியில் மிகவும் குறிப்பிடத் தக்கவர்.இவருடைய தந்தையார் 1971இல் நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்ப 72ம் ஆண்டு மீண்டும் பிரதமராக இவர் ஆட்சியைப் பிடித்தவர். மகள் பெனாஸீர் 86ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சிக்கு வந்தார். 90ம் ஆண்டு பதவி இழந்து ,மீண்டும் ஒக்டோபர் 93இல் இவரால் ஆட்சிக்கு வர முடிந்திருக்கின்றது. பங்களாதேஷ் நாட்டையும் ஒரு பெண்ணே ஆண்டு வருகின்றார். மார்ச் 91இல் ஆட்சிக்கு வந்தவர் 96இல் தனது நாற்காலியை இழந்தாலும், மீண்டும் 2001வது ஆண்டில் ஒக்டோபர் மாதம் ஆட்சியைப் பிடித்தவர், இன்றுவரையில் ஆட்சியைத் தொடர்ந்தபடி இருக்கி;ன்றார். 96ம் ஆண்டு இவரிடமிருந்து ஆட்சியைப் பறித்ததும் ஒரு பெண்தான். சுதந்திரத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படும் பங்களாதேஷின் முதற் பிரதமரான முஜிபூர் ரஹ்மானின் மகளான ஹஸீனா வஜீட் என்பவரே இவரின் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் இவர் 2001 இன் பிற்பகுதியில் ஆட்சியை கைநழுவ விட்டு விட்டார்.

பெண்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றார்கள், எந்த அளவுக்கு மனோதிடம் னொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்பது இங்கு நன்றாகவே தெரிகின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டில் Ferdinand Marcos என்பவர் ஆட்சியலிருந்த போது, இவர் மனைவி இமெல்டா, செய்த அட்டகாசங்களை எழுத்தில் வர்ணிக்க முடியாது. 1965 தொடக்கம் 86ம் ஆண்டு வரை, நீண்ட காலம் ஜனாதிபதிபதியாக, மனைவியுடன் இணைந்து கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர் இவர். அரச கஜானாவைக் கணவனுடன் சேர்ந்து சு10றையாடிய பெருமை இமெல்டாவையே சாரும் . இறுதியில் மக்கள் புரட்சி, இவர்களை நாட்டை விட்டு ஓட வைத்தது. இதே நாட்டில் இவர்கள் ஆட்சி கவிழ, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் ஒரு பெண்ணே. Corazon Aquino என்ற பெயர் கொண்ட இவர்தான் ஆசியாவின் முதல் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றவர்.

பெண் ஜனாதிபதிகள் வரிசையில் மேலும் நோக்கினால், அயர்லாந்து நாட்டை இன்றும் Mary McAleese என்பவரே ஆண்டு கொண்டிருப்பதைக் காண முடியும். ஆட்சியிலிருந்த இன்னொரு பெண் ஜனாதிபதியின் நாற்காலியில் உட்கார்ந்தவர்தான் இவர்.

இவருக்கு முன்பு Mary Robinson என்பவர் டிசம்பர் 90ம் ஆண்டிலிருந்து, செப்டெம்பர் 97வரை ஆட்சியில் இருந்தார். ஐ.நா. சபையின் மனித உரிமைப் பிரிவில் உயர் ஸ்தானிகராகவும் இவர் கடமையாற்றினார். ஒரு பெண் ஜனாதிபதியை அடுத்து இன்னொரு பெண் அதே பதவியில் அமர்ந்தது உலக சாதனையாகிற்று.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவை 99ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டுவரை ஆண்டது ஒரு பெண்தான். இந்த நாட்டின் முதற் பெண் ஜாதிபதியான இவர் பெயர் Moscoso de Arias கனடாவின் கவர்னர் ஜெனரலாக ஒக்டோபர் 99 தொடக்கம் இன்றுவரை பதவி வகித்துக் கொண்டிருப்பது Adrienne Clarkson என்ற துணிச்சலான பெண்மணிதான். கனடா போன்ற ஒரு நாட்டின் மிக முக்கியமான ஒரு பதவிப் பொறுப்பை ஏற்று அதை ஐந்து வருடங்களாகத் தொடர்வது என்பது இலகுவான விடயமல்ல. இன்று நியூசிலாந்து நாட்டைக்கூட எலிஸபெத் கிளார்க் என்ற பெண்தான் ஜனாதிபதியாக ஆண்டு கொண்டிருக்கின்றார். 99ம் ஆண்டு முடிவில் இவர் ஆட்சிக்கு வந்தார். பின்லாந்து நாட்டின் பெண் ஜனாதிபதியாக Kaarina Halonen என்பவர் இப்பொழுது ஆட்சியில் இருக்கின்றார். இவர் ஆட்சியில் அமரும் வரை Jeny Shipley என்ற பெண்தான் இப் பதவியில் இருந்துள்ளார். இது கூட ஒரு சாதனைதான்.

ஆபிரிக்க நாடுகளில் கூட பெண்களின் ஆதிக்கம் இருக்கவே செய்கின்றது. மொஸாம்பிக் நாட்டின் பிரதமராக இன்றும் கடமையாற்றும் பெண்தான் Louisa Dias Diogo என்பவர். இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இவர் ஆட்சியில் அமர்ந்தார். மத்திய ஆபிரிக்க குடியரசை, 1975 தொடக்கம் ஒரு ஆண்டு காலம் Elisebeth Domitien என்பவர் பிரதமராக ஆண்டிருக்கின்றார். ருவண்டா நாட்டின் ஆட்சி ஒரு வருட காலம் 93ம் ஆண்டிலிருந்து Agathe Uwlingiyimana என்ற பெண்ணிடம் போயிருக்கின்றது.

இத்துடன் பட்டியல் முடிந்து விடவில்லை நோர்வே,இந்தோனேசியா, புருண்டி,பல்கேரியா, துருக்கி, போலந்து, பிரான்ஸ் என்று பரவலாக உலக நாடுகளில் பெண்களின் ஆட்சிக் கொடி பறந்திருக்கின்றது. பணக்கார நாடான அமெரிக்காவைக் கூட மாஜி ஜனாதிபதி கிளின்டனின் மனைவி ஹில்லறி ஒரு காலத்தில் ஆளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. காலப்போக்கில் இந்தியாவின் பிரதமராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நடிகை ஜெயலலிதா இன்னும் என்ன வித்தைகள் காட்டுவாரோ அதையும் சொல்ல முடியாது. ஜனாதிபதி பதவியைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, தமிழினத்திற்கு ஒரு சாபமாக வந்திருக்கும் சந்திரிகா அம்மையார் இனி என்ன என்ன திருக்கூத்துக்களை நடத்தி முடிப்பாரோ தெரியவில்லை.

சுருங்கக் கூறினால் பெண்கள் கை ஓங்குவதும், ஆண்களுக்கு சரிநிகராக இவர்கள் ஜொலிப்பதும் தொடரும் நிலையில், ஆண்களை இவர்கள் முட்டித் தள்ளிவிட்டு முன்னேறும் காலம் ஜனித்து விட்டது என்றே கூற வேண்டும்.


A.J.Gnanenthiran/Swiss
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
எல்லா அண்டப் புளுகுகளும் இருக்கட்டும்...உதில கூறப்பட்ட பல பெண்களின் வெற்றிக்குப் பின்னால் அடிப்படைக் காரணிகளாக ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தால் போதும்....<b>ஆணின்றி அணுவும் அசையாது...அவனின்றி உலகம் இயங்காது....!</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
சிவமின்றி சக்தி இல்லை
சக்தியின்றி சிவம் இல்லை.
Reply
shanmuhi Wrote:சிவமின்றி சக்தி இல்லை
சக்தியின்றி சிவம் இல்லை.

சரியாக சொன்னீர்கள் சண்முகி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இது உங்கள் பார்வைக்கும் கருத்துக்களுக்குமாக .......

பர்தா பெண்ணடிமையின் சின்னமல்ல பேரறிஞர் பி.ஜெய்னுல் ஆப்தீன்


நபியே (முஹம்மதே)உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும்,நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளை தொங்க விடுமாறு கூறுவீராக. அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும் தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.

(சூறா அஹ்ஸாப்33:59)

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் ஏன் கட்டளையிடுகின்றது ?

இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப் என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும் அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.

ஹிஜாப் என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரைகுறை உடையுடன் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கின்றான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் காட்சியளிக்கின்றான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி அரைகுறை உடையுடன் பணிபுரியவோ பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் அரைகுறை உடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அதுபோல் நடுத்தர வர்க்கத்து அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் அரைகுறை உடையுடன் வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லாவிட்டாலும் கடினமான வேலையின் போதும், கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு.அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.

அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமன்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில்கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன்? குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில்கூட அவ்வாறு காட்சிதர அனுமதிக்கப்படுவது கிடையாது.

ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப் பெண்களும் உணர்ந்துள்ளனர், ஆண்களும் உணர்ந்துள்ளனர் என்பதற்கு இந்தப் போக்கு சான்றாக அமைந்துள்ளது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதைத் தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக்கொள்கின்றார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு.ஏனெனில் அவர்களும்கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

இனி ஹிஜாப் என்பது பெண்ணின் பாதுகாப்புக்காகவும், அவர்களைக் கௌரவிப்பதற்காகவுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக்கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக்கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இருபாலாரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்களின் நிறம் அல்லது அவர்களின் அழகு அல்லது அவர்களின் இளமை அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும்போது அதை ஆண்கள் ரசிக்க விரும்புகின்றனர். திரும்பத் திரும்ப பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத்தான் ஆண்கள் எவ்வளவு குறைந்தளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. ஆண்களின் அழகையோ,கட்டுடலையோ,கொள்ளை கொள்ளும் நிறத்தையோ பெண்கள் விரும்பமாட்டார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை. நிச்சயமாக இதையெல்லாம் பெண்கள் விரும்பவே செய்வர்.

கணவன் கட்டுடலுடன் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது அவனிடம் முழுமையான ஆண்மை இருக்கும் என்று நம்புவதால்தான்.கணவன் நல்ல அழகுடனும் நல்ல நிறம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது மற்ற பெண்களிடம் பெருமையடிக்கவும் தங்கள் வாரிசுகள் அழகுடன் பிறக்கவேண்டும் என்பதற்காகவும் தான்.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.

ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்துகொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணொருத்தியிடம் எதை எல்லாம் பார்த்து ஒரு ஆண் ரசிக்க விரும்புகின்றானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். முறையின்றி பார்ப்பவனுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்துவிடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கின்றோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும் அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதை அன்றாடம் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டை குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில் மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

ஆண்கள், பெண்களைப் பார்த்து ரசிப்பது போலவே, பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக்கொண்டாலும்கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று.

ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்துவிட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விடமுடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாதவரை, அவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டுக் கிளர்ச்சியடையாதவரை பெண்களால் அனுபவித்துவிட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையானகிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு நிச்சயமாக, அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுவதை, ஹிஜாபைக் குறை கூறுவோர் சிந்திப்பதில்லை.

நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும், பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டித்து இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும் என்றெல்லாம் ஹிஜாபைக் குறை கூறுவோர் கூப்பாடு போடுகின்றனர்.

ஆனால் இந்த நிலைக்கு ஆண்களில் சிலரைத் தூண்டும் பெண்களின் உடையமைப்பும் முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிப்பது என்ன நியாயம்?

பெண்ணுரிமை இயக்கங்கள் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் போஸ்டர்களைக் கிழித்தல், சாயம் பூசி மறைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே, சுதந்திரத்துடன் அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம், அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது. அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும், கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன என்பது தெளிவு.

பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி இவ்விடயத்தில் எழலாம்.

நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கிய காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்புப் பாதிக்கப்படும் என்பது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பதற்காக முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறுசெய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

பெண்கள் என்று இல்லை. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப் பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

இதனால் தான் இஸ்லாம் முகத்தை மறைத்துக் கொள்ளுமாறு பெண்களுக்குக் கட்டளையிட வில்லை.

கொடுக்கல், வாங்கல், இன்ன பிறஅலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும்.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் உணர்வுகளைச் சீண்டி இழுக்கக்கூடியவை; அவர்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடை எனக் கூறுவதும் ஏற்கக் கூடிய வாதமன்று.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முழங்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆனால் பல பெண்களோ ஆண்களை விடக் குறைவான அளவு மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

குறைவான அளவு மறைத்தால் கேடுகள் ஏற்படுத்தாத ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர்மாற்றமாக நடப்பது தான் நமக்கு வியப்பாகவுள்ளது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும் எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும்,சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பின்னும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.தப்ஸீர்பி.ஜே.

நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
முதலில் ஒவ்வொரு மனிதனும் தன் மனதுள் புதைந்து கிடக்கும் அசிங்கங்களுக்கு விடை கொடுப்பான் என்றால் பர்த்தா என்ன புடவையும் அவசியமில்லை....! இதற்கு சுவாமி விவேகானந்தர் பற்றிய நூல் ஒன்றில் அவர் முன்னிலையிலேயே நிர்வாணமாய் நின்று வெறும் உணர்ச்சிகளோடு விளையாட முனைந்த வெள்ளையினப் பெண்மணியைப் பற்றி இருக்கிறது....சுவாமிகள் அந்தப் பெண்மணியிடன் உணர்சிகளால் பேசாமல் அறிவால் பேசி அவளின் தவறை அவளிற்கே உணர்த்தினாராம்....அதற்காக சுவாமிகள் உணர்ச்சி அற்ற மனிதரென்பதல்ல அர்த்தம்....எந்த உணர்ச்சியையும் மனிதன் தன் மனம் கொண்டு கட்டுப்படுத்தலாம் என்பதே உண்மை...அதுவற்ற பலவீனர்களுக்காக ஆண்களும் சரி பெண்களும் சரி போர்தி வைக்கப்பட வேண்டியவர்கள் தான்....என்ன செய்வது அவர்கள் தான் உலகில் 99.999999999 % ஆக இருக்கிறார்கள்.....!

ஆனால் இப்படிப்பட்ட அடிமட்ட உணர்ச்சிக்கு அடிமையாவது ஆண் என்பது போல் காட்டுவதுபோற் கொடுமை உலகில் வேறேதும் இல்லை....பெண்களுக்கும் நல்லா உணர்ச்சிகள் இருக்கிறது...நல்லா நரம்புத் தொகுதிகள் கிட்டத்தட்ட ஆண்களைப் போலவே விருத்தியடைந்திருக்கிறது....எனவே ஆண்களும் போர்க்க வேண்டியது எனிவரும் காலங்களில் அவசியமானாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை....என்ன இன்னொரு நபிகள் வந்தோ அல்லது அல்லா வந்தோ கட்டளையிட வேண்டும்....அதுவரைக்கும் ஆண்களுக்குக் கொண்டாட்டம் பெண்களுக்கு நேரடியாக் கொண்டாட்டமில்ல மறைப்புக்களுக்கால கொண்டாட்டம் தான்..காரணம் உள்ள நடிகைகள் எல்லாம் வழக்கு விசாரணைக்குப் போகும் போது பர்த்தா போடுகினமாம்...போட்டா எல்லாம் மறைஞ்சுடும் எண்டு நினைப்புப் போல.....! அப்ப பர்தாவுக்குப் பின்னால....இத்தனை ரகசியங்களா.....! :wink:


:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
பொட்டு

பொட்டு அல்லது திலகம் என்பதற்கு மங்கல அழகுச் சின்னமாக நெற்றியின் நடுவில் (புருவ மத்தியில்) குங்குமம் போன்றவற்றால் வைத்துக் கொள்ளும் சிறு வட்ட வடிவக் குறி என்கிறது தமிழ் அகராதி. அது அதற்கு மேல் எந்த விளக்கத்தையும் தரவில்லை. பொட்டு வைத்தல் என்பது இந்தியப் பண்பாட்டுக்குரிய முக்கிய அம்சமாகும். பெண்கள் மட்டுமல்ல ¬ண்களும் நெற்றியில் திலகமிடுவது நெடுங்காலமாக இந்திய மரபில் காணப்பட்டு வருகிறது.

தாம் சார்ந்த இந்து மதப் பிரிவின் அடையாளத்தைக் குறிப்பதற்காக ¬ண்கள் நெற்றியில் திலகமிடும் வழக்கம் பல நூற்றாண்டு காலமாக இந்தியாவில் நிலவி வந்திருக்கிறது. சக்தியை வழிபடும் சாக்தப் பிரிவினர் சிவந்த குங்குமத் திலகத்தாலும், வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர்கள் U வடிவில் அமைந்த நாமம் எனப்படும் வெள்ளை நிறப் பொட்டாலும், சூரியனை உயர் தெய்வமாக வழிபடும் சௌர மதப்பிரிவினர் செஞ்சந்தனத்தாலான பொட்டாலும் தம்மை அடையாளப்படுத்தினர்.

இந்து சமய ரீதியாக பொட்டணிதல் என்பது ¬ண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான மரபாகும். பொட்டிடுவதற்குப் புருவமத்தி தெரிவு செய்யப்பட்டமைக்குச் சில காரணங்கள் கூறப்படுகின்றன. தியானம் செய்யும் போது பார்வையும் மனமும் புருவ மத்தியில் குவிந்து ஒடுங்குகிறது. அவ்வாறு ஒடுங்கும் போது அந்த இடத்தில் ஒருவித அழுத்தம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்த அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும், புறத்தில் இருந்து வரும் சக்திகளின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவும் புருவ மத்தியில் பொட்டணிவதாகக் கூறப்படுகிறது.

உடலில் ஏழு சக்கரங்கள் சக்தி நிலைகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. பிறர் காணும் வகையில் வெளியில் தெரியும்படியாக அமைந்திருப்பது புருவ மத்தியில் அமைந்துள்ள ¬றாவது சக்கரம் மட்டுமே. இந்த சக்கரம் மூளை, நரம்புமண்டலம், காதுகள், நாசி, இடது கண் ¬கியவற்றைக் கட்டுப்படுத்துவதாகவும், புத்திக் கூர்மை, மனம், புத்தி, ¬ன்மசக்தி ¬கியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. அதனால் இந்த புருவ மத்தியைப் பாதுகாப்பதும், அதன் சக்தியை அதிகரிக்கச் செய்வதும் முக்கியமானதாக எண்ணப்பட்டதால் அந்த இடத்தில் பொட்டு வைக்கும் மரபு ¬ரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெண்கள் பொட்டணிவதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது பெண்களைத் தீய எண்ணத்துடன் பார்ப்பவரது பார்வையை அது தூய்மைப்படுத்துகிறது. ஒருவர் ஒரு பெண்ணின் கண்களை வேறுபட்ட எண்ணத்துடன் பார்க்கும் போது பொட்டு அவரது கவனத்தைத் திசை மாற்றுவதுடன், அது சிவனது மூன்றாவது கண்ணை நினைவூட்டுவதால் அவரது தீய எண்ணங்கள் மறைய உதவுவதாகவும் கூறப்படுகிறது.

ஞானக் கண்ணை அடையாளப்படுத்தும் பொட்டு அதை அணிபவருக்கு நல்லதிஷ்டத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

இந்து சமயம் பொட்டணிதல் பற்றி இவ்வாறு பல விதமான கருத்துக்களைக் கூறிய போதும் தமிழரைப் பொறுத்தவரையில் ¬ரம்பகாலத்தில் அழகுக்காகவே பெண்கள் திலகமிட்டதாக சங்க இலக்கியமான கலித்தொகையில் உள்ள சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரமும் அழகுக்காகப் பொட்டிடுதல் பற்றிக் குறிப்பிடுகிறது. நெற்றியில் பொட்டிடுதல் என்பது எப்போது பெண்களின் மங்கலச் சின்னமாகக் கருதப்பட ¬ரம்பித்தது என்பதும் தமிழ்ப் பண்பாட்டின் அம்சமாக அது எப்போது மாறியது என்பதும் தனியாக ¬ராயப்பட வேண்டிய விஷயங்களாகும். பண்டைக்கால ¬ரிய சமுகத்தில் திருமணத்தின் போது மணமகன் தனது இரத்தத்தை திருமணம் முடித்ததன் அடையாளமாக மணமகளின் நெற்றியில் பொட்டாக வைத்தது பற்றிச் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கம் பின்னர் மணமகள் திருமணத்தின் போது சிவப்பு நிறத்தில் பொட்டணியும் முறைக்கு வித்திட்டிருக்கலாம்.

தமிழர் வாழ்வுடன் பல நிறங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. அவற்றுள் சிவப்பு வெள்ளை நிறங்கள் முக்கியமானவை. சமூகவியல் ரீதியாக இந் நிறங்களுக்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. தமிழருக்குரிய சூடு, குளிர் என்ற பாகுபாட்டின் அடிப்படையில் இவ்விளக்கங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிறம் குளிர்மையையும், சிவப்பு நிறம் சூட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இவ்வியல்புகளை வெளிப்படுத்தும் வகையிலேயே திருமணத்தின் போது ¬ண்களதும் பெண்களதும் ¬டைகள் தெரிவு செய்யப்படுகின்றன. ¬ண் குளிர்மையான இயல்பு உள்ளவனாகக் கருதப்படுவதால் வெள்ளை நிற ¬டை அணிகிறான், சந்தணத் திலகமிடுகிறான். பெண் சூடுள்ளவளாக எண்ணப்படுவதால் சிவப்பு நிறச் சேலையணிந்து சிவப்பு நிறத்தில் பொட்டிடுகிறாள். சிவப்பு நிறம் சூட்டை மட்டுமல்ல, குருதியின் நிறம் என்பதால் வளத்தையும் குறிக்கும். வளம் என்னும் போது அது சந்ததி விருத்தியைக் குறிக்கும். சந்ததியை உடல் ரிதியாக விருத்தி செய்யும் வளம் பெண்ணிடம் இருப்பதாலும், அது சூடான இயல்புள்ளது என்று கருதப்படும் காமத்துடன் தொடர்புள்ளதாலும் அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிவப்பு நிற ¬டையை அவள் திருமணத்தின் போது அணிகிறாள். அத்துடன் அன்றே அவள் முதன்முதல் சிவப்பு நிறத்தில் பொட்டணிகிறாள். திருமணத்தின் பின் சந்ததியை விருத்தி செய்யும் நிலைக்கு அவள் தயாராகிவிட்டாள் என்பதை அவளது சிவப்பு நிற திருமண சேலையும் பொட்டும் குறிப்பாகக் காட்டி நிற்கின்றன.

தமிழ் பெண்ணின் வளம் கற்பு நெறியுடனும் தொடர்பு பட்டிருக்கிறது அதனாலேயே கணவன் மரணணமடைய நேரிட்டால் அவள் தனது சிவப்பு நிறப் பொட்டை நீக்கித் தனது வளமின்மையைப் பிரதிபலிக்கிறாள். அதே போல அதன் பின் அவள் வெள்ளை நிறச் சேலையணிந்து குளிர்மையடைந்துவிட்ட நிலையைக் காட்டுகிறாள். எத்தனையோ நிறங்கள் இருக்க பொட்டுக்கு குருதி நிறமான சிவப்பு நிறம் தெரிவு செய்யப்பட்டமைக்கு இதுவே காரணமாக இருக்க வேண்டும்.

1930 களில் தமிழ் நாட்டிலிருந்து சஞ்சிகைகள் யாழ்ப்பாணத்திற்கு வர ¬ரம்பித்த பின்னர் இலங்கையில் உள்ள தமிழ்ப் பெண்கள் பொட்டிடும் வழக்கத்தைப் பரந்த அளவில் ¬ரம்பித்திருக்கலாம். ¬யினும் காலப் போக்கில் இலங்கை அரசியலில் தமிழரைப் பாதிக்கும் வகையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிய பின்னர் பொட்டிடுதல் என்பது தமிழ் இனத்தைக் குறிப்பிடும் ஒரு குறியீடாக மாறியது. இதன் காரணமாகவே தமிழருக்கு எதிரான போக்கு கூர்மையடைந்த காலத்தில் கொழும்பில் வாழும் பெண்கள் தமது அடையாளத்தை மறைப்பதற்காக பொது இடங்களில் பொட்டிட்டுச் செல்வதைத் தவிர்த்தனர்.

வெளிநாட்டில் வாழ வந்த தமிழ் அல்லது இந்துப் பெண்கள், ஏன் பொட்டு அணிகிறீர்கள்? இதற்கு உங்கள் சமயத்தில் அல்லது பண்பாட்டில் ஏதும் முக்கியத்துவம் உள்ளதா? இது சாதியைக் குறிக்கும் அடையாளமா? என்று பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே பொட்டிடுதல் பற்றி அறிய விரும்புபவர்களுக்குச் சரியான விளக்கத்தை கொடுப்பதற்காக நாம் இதைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. நான் சுவீடனில் வாழ்ந்த காலத்தில் இந்தக் கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டி நேர்ந்தது. ஒரு தடவை புகை வண்டியில் பிரயாணம் செய்த போது ஒருவர் எனது பொட்டைப் பார்த்து விட்டு விளக்கம் கேட்டார். திருமணமான பெண்களுக்கு இது ஒரு அடையாளமாக விளங்குவதாக நான் கூறியதும் அவர் உடனே கேட்டார் traffic light இல் உள்ள red light போல எதிரே வருபவரை இவள் திருமணமான பெண் தூரத்தில் நில் என்று எச்சரிக்கின்றதா இந்தச் சிவப்புப் பொட்டு? என்று. அது ஓரு வகையில் நல்ல விளக்கமாகவே எனக்குப் பட்டது.

இன்று அழகுக்காக பொட்டணியும் வழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. அதனால் அதன் வடிவம் மட்டுமல்ல அளவும் மாறிவிட்டது. வட்டப் பொட்டு என்ற நிலை போய் சதுரம், மெல்லிய கோடு, நீள்வட்டம் (oval shape) நீர்த்துளி, சதுரம் போன்ற வடிவங்களிலும், பாம்பு, மயில், கிளி, ஏன் யானை வடிவத்தில் கூட பொட்டணியும் நாகரிகம் பரவியுள்ளது. இந்துக்கள் மட்டுமல்ல மற்றையோரும் விரும்பி அணியும் வகையில் நெற்றியிலும் உடலின் வேறு பல பாகங்களிலும் அணியும் விதமாக பல்வேறு வகைப் பொட்டுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. பாடகியான Madonna ¬ரம்பித்து வைக்க 'No Doubt' என்ற பொப் குழுவின் தலைமைப் பாடகியான Gwen Stefani தனது அடையாளமாகவே (trademark) பொட்டை ஏற்றுள்ளார்.

பொட்டு ¬ரம்பத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பெண்களால் மட்டும் அணியப்பட்டது. இதனால் இந்நாடுகளுக்குச் செல்லாத பிறநாட்டவர் இது பற்றிச் சிறிதே அறிந்திருந்தனர். ¬னால் இந்திய இலங்கைப் பெண்கள் புலம் பெயர்ந்து வாழ ¬ரம்பித்ததிலிருந்து பொட்டு பல நாட்டவர் இனத்தவர் அறியும் ஒன்றாகி விட்டது. பெண்களின் ¬டை மாறிய போதும் பொட்டுக்களின் வர்ணங்களும் வடிவங்களும் மாறிய போதும் பொட்டணிதல் என்பது பெருமளவில் மாறவில்லை. பிறநாடுகளில் பிறந்து வளர்ந்த இளம் இந்திய இலங்கைப் பெண்கள் தமது பண்பாட்டின் பல விஷயங்களை கைவிட்டுவிட்ட போதும் விசேட தினங்களில் நவீன வடிவங்களில் வந்துள்ள பொட்டை அணிவதை விடவில்லை. ¬யினும் பொட்டு வைத்தலுடன் இணைந்துள்ள பல விளக்கங்கள், காரணங்கள் என்பன முற்றாக மறக்கப்பட்டு வெறும் அழகுக்காகவும் அடையாளத்துக்காகவுமே பொட்டு இன்று அணியப்படுகிறது.

அமெரிக்காவில் பல வருடங்களின் முன்னர் பொட்டு வைப்பவர்களுக்கு எதிரான இனவெறி இயக்கம் ஒன்று தோன்றியதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். Dot buster என்ற இந்த இயக்கம் பொட்டு வைத்தவர்களைத் தாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியது. இந்தியர் அதிகமாக வாழ்ந்த மாநிலங்களில் தோன்றிய இந்த இயக்கம் பின் முக்கிய அமெரிக்க நகரங்களுக்குப் பரவியது. இது பின்னர் கட்டுப்படுத்தப்பட்ட போதும் அதனுடன் இணைந்த இனவெறியைப் பலர் மறந்து விடவில்லை. சில வருடங்களின் பின் இந்த எண்ணத்தை மாற்றும் நோக்கத்துடன் ஒரு 35 நிமிட வீடியோப் படம் எடுக்கப்பட்டது. அதன் தலைப்பு Just a Little Red Dot. இது ஒருவித தகவல் நாடக அதாவது Docudrama அமைப்பில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதே. இப்படத்தை உருவாக்கிய மித்ரா சென் என்ற இந்திய பெண் கனடாவில் உள்ள Toranto மாநிலத்தில் உள்ள Scarborough என்ற இடத்தில் உள்ள Tom' O'Shanter Junior என்ற அரச பாடசாலையில் ¬சிரியையாக இருந்தார். தனது வகுப்பறையில் நடைபெற்ற உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் படத்தை உருவாக்கினார். 1994 ம் ¬ண்டு மே மாதம் 20ம் தேதி இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த பார்வதி என்ற மாணவி அந்தப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்திருந்தாள். அவள் பொட்டு அணிந்திருந்த காரணத்தால் மற்றைய மாணவரால் ஏளனஞ் செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டாள். பின்னர் ¬சிரியையின் பிறந்ததினம் வந்த போது ஒவ்வொரு மாணவரும் அவருக்கு பரிசளித்தனர். அப்போது பார்வதி ஒரு packet பொட்டுகளை ¬சிரியையான மித்ராவுக்குப் பரிசளித்தாள். அவர் உடனே அவற்றில் ஒன்றை தனது நெற்றியில் அணிந்து கொண்டு அதன் பண்பாட்டு முக்கியத்துவம் பற்றி மாணவருக்கு விளக்கிக் கூறினார். அது அவர்களை அழகுபடுத்தும் என்பதைக் கேட்டவுடன் வகுப்பில் உள்ள மாணவிகள் ¬சிரியையிடம் பொட்டுக்களை வாங்கித் தமது நெற்றியில் அணிந்து கொண்டு விளையாட்டு மைதானத்துக்கு விளையாடச் சென்றனர்.

அங்கே அவர்களது ¬ர்வம் விரைவில் நசுக்கப்பட்டது. அவர்களது சகபாடிகள் அவற்றை Paki-dots உட்பட பல பெயர்களால் கேலி செய்தனர். அவர்களது மூர்க்கத்தனமான இனவெறியால் பாதிக்கப்பட்ட அவர்கள் வெட்கமடைந்தனர், அதிர்ச்சியுற்றனர், குழப்பமுற்றனர். இனவெறி என்றால் என்னவென்றறியாத அந்த 9, 10 வயதுப் பிள்ளைகள் உடனே தமது பொட்டுக்களை மனவருத்தத்துடன் அகற்றினர். ¬சிரியை அவர்களை இது பற்றி உரையாடும் படி கூறினார். «ô§À¡Ð அறிவுள்ள மாணவர்கள் சிலர், வேறுபட்ட தோற்றம், பண்பாடுகள் ¬கியவற்றை மதித்தல், சகிப்புத்தன்மை ¬கியன பற்றித் தமது பாடசாலைச் சகபாடிகளுக்கு, அறிவூட்டுதலின் அவசியம் பற்றிக் கூறினர். அந்த மாணவர்கள் பொட்டை cool-dots என அழைத்துத் தமது சகபாடிகளிடையே பிரபலியப்படுத்துவதில் வெற்றி கண்டனர். அப் பாடசாலையைச் சேர்ந்த ஏனைய ¬சிரியைகளும் பொட்டை அணிந்து அவர்களது ¬தரவைக் கொடுத்தனர். கேலி செய்தவர்கள் பொட்டு தமது பாடசாலையில் பெற்ற பிரபலியத்தைக் கண்ணுற்று தோல்வியை ஏற்று விலகினர்.

ஏற்கெனவே படத் தயாரிப்பில் அனுபவமுள்ள ¬சிரியையான மித்ரா சென் இந்த பொட்டு சம்பவம் ஒரு அறிவுட்டும் படத்திற்கு நல்ல வளமுள்ள அடிப்படை என்பதை உணர்ந்தார். எனவே இரண்டு வருட ஊதியமற்ற லீவை எடுத்துக் கொண்டு படத் தயாரிப்பில் இறங்கினார். இதற்காக அவர் பன்னிரண்டுக்கு மேற்பட்ட நாடுகளையும், இனங்களையும் சேர்ந்த 80 பிள்ளைகளைத் தெரிவு செய்து அவர்களை நடிகர்களாக்கினார். 1996ம் ¬ண்டு ஜூன் 25ம் தேதி அந்தப் படம் Ontario Science Centreல் திரையிடப்பட்ட போது அந்தப் படம் தெரிவித்த உள்ளார்ந்த செய்திக்காக மட்டுமல்ல சிறந்த பாத்திரப்படைப்பு, அதில் பயன்படுத்தப்பட்ட graphics, மிக அழகான இசை ¬கியவற்றிற்காக அப்படத்தின் இயக்குனரும் நடிகர்களும் பெரும் பாராட்டுதலைப் பெற்றனர். மனித உரிமைகள் நிர்வாக இயக்குனரான Dr Karen Mock என்பவர் இந்த சக்தி வாய்ந்த திரைப்படம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் எமது பல்லின சமூகத்திற்கு மிக அவசியமான ஒருவரை ஒருவர் மதித்தல், சாதகமான செயற்பாடு ¬கியவற்றை ஊக்குவிக்கிறது என்று பாராட்டினார். அத் திரைப்படம் பல உயர் விருதுகளைப் பெற்றதுடன் பல அரச உயரதிகாரிகளின் பாராட்டுதல்களையும் பெற்றது.

1996 கோடை காலத்தில் Little Red Dot Club ஒன்று பிள்ளைகளின் முயற்சியால் உருவாகியது. அதன் இணை தலைவரான 13 வயது Mandy Pipher கூறியதாவது பகிர்தல், மற்றைய பண்பாடுகளை விளங்கி ஏற்றல் ¬கியவற்றை எமது சந்ததியினரை உணரச் செய்வதே இந்த கிளப்பின் நோக்கம். இவ்வாறு உணர்வதன் மூலம் நாம் வளர்ந்ததன் பின்னர் எந்த நாட்டிலிருந்து வந்தவராயினும் சரி எந்தவிதமான தோற்றம் கொண்டவராயினும் சரி அவர்களுடன் எவ்வித பிரச்சினைகளுமின்றி ஒத்து இயங்க முடியும். ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட இந்த club Toronto நகரத்தில் உள்ள பல்வேறு ¬ரம்ப பாடசாலைகளில் இது பற்றி 120க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. தமது நிகழ்ச்சிகள் சிறுவர்களில் ஏற்படுத்தும் சாதகமான பாதிப்பையிட்டு மகிழ்ச்சியடையும் Mandy நிகழ்ச்சி முடிந்ததும் மாணவர்கள் தன்னிடம் வந்து பொட்டுக்களை கேட்பதாகக் கூறுகிறார். இந்த clubஐ நடத்துவதன் மூலம் அதன் அங்கத்தவர்கள் திட்டமிடல், பொது மேடைகளில் பேசுதல் அதற்கான பேச்சைத் தயாரித்தல், மானியத்துக்கு விண்ணப்பித்தல், வரவுசெலவு பட்டியலைத் தயாரித்தல் என பல்வேறு பயிற்சிகளையும் பெற்றனர். இந்த clubக்கு 1996ல் Trillium Foundation னில் இருந்து 10,000 டொலர்ஸ் மானியம் கிடைத்தது. கனடாவில் உள்ள இனவெறி எதிர்ப்பு நிறுவனங்களில் இது முக்கியமானதாக இயங்கி வந்தது.

இது 1998 ல் வெளிவந்த Hinduism Today இல் இடம் பெற்ற ஒரு கட்டுரையின் தமிழாக்கம். அந்த கிளப் இப்போதும் இயங்கி வருகிறதா என்பதை அறிய அவர்களது இணையத்திற்குச் சென்று பார்த்தேன். அதே நோக்கத்துடன் அது இன்றும் இயங்கி வருவதை அறிய முடிந்தது. Jassica என்ற மித்ராவின் படத்தில் நடித்த பெண் தற்போது இணை தலைவராக இருக்கிறார்.

நன்றி -சந்திரலேகா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
வெள்ளைக்காரனுக்கு கொஞ்சம் மூளை இருக்கும் எண்டு பாத்தா....Paki dot (டொட்) வைக்க மாட்டாங்கள் என்பது தெரியாது போல....அதுசரி Paki Indi Srilankan BBC (british born community) எல்லாம் ஒரே வம்புதானே செய்யுதுகள்....இருக்க விட்டதுகாக செய்யுற கூத்துகள்....எங்களாலேயே தாங்க முடியல்ல....தங்கட வரிப்பணத்தில கட்டி எழுப்பின நாட்டில மற்றவை போடுற கூத்து.....பாவம் வெள்ளைக்காரன் எத்தின ஊருகளில இருந்து முற்றாக காலி செய்துவிட்டுப் போயிருக்காங்கள்...அகதியா வந்து அவங்களையே அகதியாக்கிறாங்களப்பா என்ன கொடுமையிது...மிளகாய்த்தூள் வாசத்துலேயே ஓடுறாண் வெள்ளைக்காரன்....! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நீங்க மட்டும் என்னவாம்...ஊருக்கு ஒரு வெள்ளைக்காரன் வந்திட்டா போதும்...வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் எண்டு கத்துவியள்....ஏன் அவனையும் உங்கள மாதிரி மனிசன் எண்டு ஏத்துக்கிறிங்கள்...இல்ல White white என்று ஏன் சொல்லுறியள்....பாவம் அவன் என்ன செய்வான் இயற்கையா அவனுக்கு ஒரு குறைபாடு தோலில் மெலனின் உற்பத்தி குறைஞ்சு போய்க்கிடக்கு.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்கள் ஒரு கலேசுக்கு பொட்டுக்கு அலையுறியள்...அவன் பாவம் தன்ர இடத்திலேயே தன்ர கலாசாரத்தையே கேலி செய்யுறதுகளோட காலம் தள்ள வேண்டி இருக்கிறதைப் பற்றி யாரும் சிந்திப்பதாகத் தெரியல்ல.... :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
உங்க வெள்ளைக்காரனோட பொட்டுக்கு மோதுறாக்கள்....இதுகளையும் கொஞ்சம் கவனியுங்கோ..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மட்டு. மாவட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் 2,065 இளம் பெண்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் சுமார் 2,065 இளம் பெண்கள் வாழ்ந்து வருவதாக அண்மையில் மாவட்ட சமுர்த்தி பணிமனை மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சுமார் 200 பேருக்கு சுயதொழில் முயற்சிக்கான வாய்ப்பினை சமுர்த்திப் பிரிவினரால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 8,25000 ரூபா பெறுமதியான 30 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

(puthinam.com)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஒரு பெண்ணின் எழுதுகோலுக்குப் பின்.......!!!!!?

பெண் எழுத்தாளரை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று திருமணத்திற்கு முந்திய பெண் எழுத்தாளர். மற்றது திருமணத்திற்குப் பிந்திய பெண் எழுத்தாளர்.

இவர்களுள் திருமணத்திற்கு முந்திய பெண் எழுத்தாளரின் வருகை அதிகமாக இருந்தாலும் அதன் காலப்பகுதி மிக குறைவாகவே காணப்படுகிறது. காரணம் பெண்ணின் திருமண வயதென்பது பதினெட்டிலேயே ஆரம்பித்து விடுகிறது. இதனால் திருமணத்திற்கு முந்திய பெண் எழுத்தாளரின் கால எல்லை மிக குறைவே.

பல பெண் எழுத்தாளர்கள் திருமணத்தின் பின் மெதுமெதுவாக தமது எழுத்துப்பணியை முடித்துக்கொள்வதையே காணக் கூடியதாக உள்ளது. சில பெண்எழுத்தாளர்களே திருமணத்தின் பின்னும் எழுதிக்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் கணவன் பிள்ளைகள் வேலை வீட்டு வேலை என அவர்களின் நேரம் மிக குறைந்து வருவது கண் கூடே.

இதனால் காலப்போக்கில் அவர்களின் கையில் இருந்த பேனா மூலையில் முடங்கி விடுகிறது என்பது பெருந்துயரே. ஆனாலும் சில பெண்எழுத்தாளர் திருமணத்தின் பின்னும் எழுதிவருகிறார்கள். அதில் பெரும்பகுதியினர் குடும்ப வாழ்வைத் தொலைத்தவர்களாக தனித்து வாழ்ந்து கொண்டு எழுத்தை தொடர்பவர்களாக இருப்பது கண் கூடே. ஏன் ஒளவையாரை எடுத்தக்கொண்டாலே தனித்த மனிசியாக இருந்ததாகவே வரலாறு கூறுகிறது.

பெண் எழுத்தாளர் குடும்பத்தில் இருந்து பிரிந்து எழுத்தை தொடங்குவதற்கான காரணங்களை ஆராய்கிறபோது பல அதிர்ச்சிமிக்க தகவல்கள் கிடைத்தன.

கணவனின் அனுசரணை ஒத்துழைப்பு இன்மை. கணவனின் சந்தேகப்பார்வை . எழுதும் எழுத்தின் மீதான விமர்சனமின்றி அந்த பெண் எழுத்தாளர் மீது சந்தேகத்தோடு வைக்கும் வாசகரின் விமர்சனம். இத்தகைய தன்மையால் ஒரு உணர்வு மிக்க பெண் எழுத்தாளியால் கணவனோடு இருந்து எழுத முடியாமல் போகிறது . இதனால் அந்த பெண் எழுத்தாளி விவாகரத்தை பெற்றுக்கொண்டு தனித்து நின்று எழுத வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறாள்.

சமூகத்தின் எழுந்தமான விமர்சனத்தால் சந்தேகப்பார்வையால் மனம் துவண்டு தற்கொலை செய்த பெண் எழுத்தாளரும் உளர். அதேபோல் பேனாவை தூக்கி எறிந்து விட்டு குமுறும் மனதுடன் வாழும் பெண் எழுத்தாளரும் உளர். ஏன் சில பெண் எழுத்தாளர் கொலைசெய்யப்பட்ட சம்பவங்களும் உள. எத்தனை வேதனைகளுள் ஒரு பெண் எழுத்தாளி வளரவேண்டி உள்ளது.

ஆண் எழுத்தாளருக்கு இத்தனை துன்பமும் கிடையவே கிடையாது. சிந்தனை மலர மலர அவர்கள் எழுத வேண்டியது தான். வேலைப்பளுவோ அன்றி குடும்ப அக்கறையோ தேவையில்லை. மனைவி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வாள். அங்கே ஆண் எழுத்தாளி வைத்தது தான் சட்டம். மனைவி எதையுமே கேட்க மாட்டாள். அவள் தனது கணவனின் முன்னேற்றத்திற்கும், தனது குடும்பத்திற்குமாக மாய்ந்தே போவாள். இதை விட அது அந்த ஆணின் தொழில் என வேறு பிதற்றிவிடுவதும் உண்டு.

ஆண் எழுத்தாளி எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப்போகலாம். அது கருத்தோடு நோக்கப்படும். விமர்சனம் அந்த ஆணையோ அல்லது அவனின் குடும்பத்தையோ சாடாது. எழுத்தோடு மட்டுமே நின்று கொள்ளும். ஒரு ஆண் எழுத்தாளன் காதலை காமத்தை சமூக வரம்பு மீறலை எதையும் எழுதலாம். கற்பனையில் கூட தனது சிந்தனைக்குள் கொண்டுவந்து வார்த்தையால் வடித்து விடலாம்.

அது சமூகத்தில் நடப்பதைத்தானே எழுதுகிறான் என கூறும் வாசகர் கூட்டம் ஒரு பெண் எழுத்தாளி காதலை காமத்தை சமூக வரம்பு மீறலை எழுதிவிட்டால் அவளே அதை செய்ததாக குற்றச்சாட்டு வைத்து விமர்சனத்தை தந்துவிட்டுப்போகிறது. இதனால் ஒரு பெண் எழுத்தாளியால் உள்ளதை சமூகத்தில் கண்டதை அதனால் தனக்கு ஏற்பட்ட மன உணர்வுகளை எழுத முடியாதுள்ளது. ஏதோ சடைந்து சாக்குப்போக்குச்சொல்லி எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

ஆண்களுக்கு மட்டுமா காதல் உணர்வு உள்ளது பெண்களிற்கும் தானே.ஒரு பெண் எழுத்தாளி காதல் உணர்வை காமத்தை சமூக வரம்பு மீறல்களை எழுத பயப்படுகிறாள். சமூகம் தவறாக எடுத்து விமர்சித்துவிடுமோ என. இந்த நிலை மாற வேண்டும்.

ஆண் எழுத்தாளி பெண் எழுத்தாளி என்கின்ற பார்வை மாற்றப்படவேண்டும். அப்போதான் பெண் எழுத்தாளியாலும் நல்லதை படைக்க முடியும்.

பெண் எழுத்தாளி குடும்பத்தை விட்டு பிரிகிறாள் என்பது வேதனையே. அங்கு கணவனின் புரிந்துணர்வு அற்ற நிலையில் வெளியேறுதல் என்பது தவிர்க்க முடியாததாகிறது.

ஏன் இன்னும் சில பெண் எழுத்தாளர் குடும்பத்தை விட்டு வெளியேறி எழுத்தை தொடரும்போது அங்கு ஒரு ஆண் அவளை திருமணம் செய்ய முன்வருகிறபோது அதற்கு சம்மதித்து திருமணத்தை அவனுடன் ஏற்படுத்திக்கொள்கிறாள்.

இங்கு அவள் மீண்டும் ஒரு தவறைச் செய்ய முனைகிறாள் என்பது கண் கூடே. புதிய கணவனுக்கும்,பின்னைய நாளில் அந்த பெண் மீது அவள் எழுத்தின் மீதான விமர்சனங்களால் சந்தேகம் குடிகொள்ளாது என்பதில் என்ன நிச்சயம்?!! அங்கு மீண்டும் அவளால் இன்னோர் பிரிதலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.அல்லது பேனாவை தூக்கி எறிந்துவிட்டு குடும்பம் கணவன் என ரண மனதுடன் வாழவேண்டி வருகிறது

சில பெண் எழுத்தாளர் பிரிந்து தனித்திருந்து குழந்தைகளை கவனித்தக்கொண்டு எழுத்தை தொடர்பவர்களாக இருப்பதையும் காணக் கூடியதாக உள்ளது. ஆனாலும் பல மன உளைச்சலுக்கு ஆளாகிவருவது உண்மையில் தவிர்க்க முடியாததே. காரணம் தனது எழுத்தோடு தன்னால் ஒன்றித்து வாழமுடியவில்லையே என்கின்ற தவிப்பு கட்டாயம் இருக்கும். அதனால் அவளால் தொடர்ந்து நல்லதை சமூகத்திற்கு தரமுடியாதுள்ளது.

ஒரு ஆண் எழுத்தாளன் ஒரு பெண் எழுத்தாளி விட்ட அத்தனை தவறுகளையும் செய்தாலும் இந்த விமர்சகர் சமூகம் எதையுமே கூற தலைப்படாது. மனைவி சரியில்லை என கூறி அந்த பெண்ணின்மேல் பழியைசுமத்திவிடுவதையும் காணக் கூடியதாக உள்ளது.

உண்மையில் ஒரு பெண் எழுத்தாளியால் மட்டுமே சமூக நோக்கொடு பலதை தரமுடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவளாக இருக்கிறேன். காரணம் தாய்மைக் குண இயல்பு சமூகத்தில் குடும்பத்தில் அதிக அக்கறை உடையவள் பெண். ஆதலால் ஒரு பெண்ணால்மட்டுமே நிச்சயம் பல நல்லதை இந்த உலகத்திற்கு தரமுடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவளாக இருக்கிறேன்.

இத்தனை துன்ப துயரங்களில் இருந்து பெண் எழுத்தாளரை காப்பது எப்படி?!!

ஆண்கள் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்பவர்களாகவும், அவர்களிற்கென்று ஒரு உலகம் இருப்பதாகவும் அவர்களின் திறமையை வளர்ப்பவர்களாகவும் பெண்ணின் எழுத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவளைமேலும் பல படைப்புக்களை படைக்க செய்பவர்களாகவும். வேலைப்பகிர்தலை புரிந்துணர்வுடன் பகிர்பவர்களாகவும் அத்தனை தவறான சமூக விமர்சனங்களில் இருந்தும் அவளை பாதுகாத்து கொள்பவர்களாகவும் தைரியம் ஊட்டுபவர்களாகவும் இருத்தல் எத்தனை தேவை தெரியுமா!!!!!!!!

அத்தோடு வாசகர்கள் தமது விமர்சனத்தை அந்த பெண் எழுத்தாளிமேல் திணித்து அவளின் குடும்ப அங்கத்தவரை கணவனை அவளின் குடும்பத்தை பிள்ளைகளின் எதிர்காலத்தை மொத்தத்தில் அவளின் வாழ்வை எழுத்தை கனவுகளை சிதைத்து அவளை முடமாக்காது தமது விமர்சனத்தை அவள் எழுதும் எழுத்தின் மீதானதாக வைக்கப் பழக வேண்டும்.

அப்போ தான் ஒரு பெண் எழுத்தாளி நிலைக்க முடியும் பலதை சமூகத்திற்கு தரமுடியும்.

நாம் ஆண் எழுத்தாளரைப்போல் வாழ விரும்பவில்லை. எம்மை சமூக குடும்ப அக்கறையுள்ள உணர்வுள்ள எழுத்தாளர் என கூறுங்கள் அதுவே போதும். எம்மை முடமாக்க நினைத்தால் நான் மேலே எழுதிய சமூக சீரழிவுகள் தான் அதிகம் தொக்கும். அல்லது பெண் எழுத்தாளரே இல்லாது அழிந்து போய் விடுவார்கள்.

ஒரு ஆணின் வெற்றிக்குப்பின் பெண் என்பர். ஒரு பெண்ணின் வெற்றிக்குப்பின் .......!!!!?

ஒரு பெண்ணின் வெற்றிக்குப்பின் தாய் தந்தை அன்பான சகோதரர் அன்பான ஆளுமை மிக்க கணவன் நல்ல பிள்ளைகள் உள சுத்தியோடு நல்ல விமர்சகன் எமது தலைவன்.

ஆனாலும் இவர்கள் எல்லோரிலும் பார்க்க திட்டித்தீர்க்கும் விமர்சகரே அதிக பங்கு வகிக்கிறார்கள். இன்னும் எழுது எழுது என கூறுவது அவர்களே. !!!.

Thanx: நளாயினி தாமரைச்செல்வன்

உங்கள் கருத்துக்களுக்காக .........
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ஒரு பெண் எழுத்தாளர் இப்படி பிரச்சனையை எதிர் நோக்க வேண்டி வருமா......! கேக்கவே வருத்தமாக இருக்கிறது
<b> .</b>

<b>
.......!</b>
Reply
எழுத்து எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல....! உலகில் எத்தனையோ பெண் எழுத்தாளர்கள்... தாங்கள் பெண்களாகவும் இருந்து கொண்டு சமூகத்துக்கு நல்ல வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளனர்...! உதாரணம்... அன்னை திரேசா... அவர் எழுத்தாளர் மட்டுமல்ல...சமூக சேவகியும் கூட...அதேவேளை பெண்ணென்ற தனது சமூக நிலையையும் எவருக்காகவும் விட்டுக் கொடுத்து ஆண் மாதிரி வேடம் போட்டு வீரியம் பேசவில்லை....!

எழுத்தாளன் சமூகத்திற்கானவனே தவிர தனக்கானவன் அல்ல....! தற்பெருமையும் தற்புகழும் தேடுபவன் வளமான எழுத்தாளனாக இருக்க முடியாது....! இது ஆணுக்கும் பெண்ணிற்கும் பொது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)