Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.thinakkural.com/2004/June/02/moorthy.gif' border='0' alt='user posted image'>
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
"அனுபவம் ஆபத்து வராமற் காக்கும்"
"சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது"
ஆகா தமிழில் தான் எவ்வளவு அழகழகான பழமொழிகள்!!
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணா - கிழக்கின் கலவரம் - ராம்ஜீ
Thursday, 03 June 2004
<i>"....அப்படியானால் கருணா இராணுவத்திற்கு தகவல்களை வழங்கும் Informer ஆக மாறிவிட்டாரா? பல இராணுவ நடவடிக்கைளில் முன்னின்ற தளபதி ஒரு காலத்தில் இராணுவத்தின் உயர்மட்ட தளபதிகளுக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கருணா இன்று அவர் எதிர்த்து போரிட்ட அதே இராணுவத்தின் முகாமில் கைதியாக இருக்கலாம் என்ற ஊகங்களில் உள்ள உண்மை சுடுகின்றது.... "</i>
<b>ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்..</b>
<b>செய்தி</b>
விநாயகமூர்த்தி முரளீதரன் என்ற இயற்பெயருடைய விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கேர்ணல் கருணா கடந்த மார்ச் மாதம் 6 ம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன் இலங்கை ஊடகங்களில் மட்டுமல்ல சர்வதேச ஊடகங்களிலும் முதன்மைப்படுத்தப்பட்ட செய்தி இது தான். உலகின் மிகப்பலம் வாய்ந்த விடுதலைப்போராட்ட அமைப்பாக விளங்கும் விடுதலைப்புலிகளின் கதை முடிந்து விட்டதாக ஆருடங்கள் கூறப்பட்டு தமிழ் மக்களின் எதிர்காலமும் சில சிங்கள ஊடகங்களால் எதிர்வு கூறப்பட்டுக்கொண்டும் இருந்த பொழுதில்...
கருணா செய்தது நியாயமா இல்லை விடுதலைப்புலிகள் நடந்து கொண்ட விதம் சரியானது தானா என்ற வாதப்பிரதிவாதங்களை பலரும் செய்து விட்ட நிலையில் இன்றைய மற்றும் எதிர்காலம் குறித்தான சிக்கல் நிறைந்த கேள்விகளுக்கான விடை தேடும் முயற்ச்சி இது
கிழக்கில் கேணல் கருணா புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட பின் முக்கிய பல சந்திப்புக்களில் ஈடுப்ட்டிருந்தார் என்ற தகவல்கள் வெளியாகின.குறிப்பாக தனது பிளவிற்கு நியாயம் கற்பிக்கவும் ஆதரவு திரட்டவும் கருணா தீவிர முயற்ச்சிகளை மேற்கொண்டார் இதில் சிங்கள ஊடகவியலாளர்கள் சிலர் கருணாவுடன் கூடவே தங்கியிருந்து அவர் <span style='color:#4800ff'><b>Orange Juice</b> க்கு பொருத்தமான நடவடிக்கையாக அது அமைந்திருக்கும்.ஆனால் கருணா இராணுவ நடவடிக்கைக்குரிய ஏற்பாடுகளில் பெரிதாக நாட்டம் கொள்ளவில்லை ஏன் ஏன்றால் ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த சில மேலிட உத்தரவாதங்களில் அவர் கொண்ட தீவிர நம்பிக்கை மற்றும் கிழக்கில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு புலிகள் இப்போது முயற்ச்சிக்கமாட்டார்கள் என்ற தவறாகிப்போன எண்ணம்.
கருணா இந்த பிளவை ஏற்படுத்த பல மாதங்களாக திட்மிட்டுள்ளார் இது குறித்த புலனாய்வு அறிக்கைகள் சரிவர கிடைத்தும் கூட புலிகளின் தலைவர்கள், கருணா மீது கொண்ட அதீத நம்பிக்கையால் இவற்றை கணக்கிடவில்லை என்ற சலசலப்பும் கூட இப்போது கேட்கின்றது.உண்மையில் கருணா தானும் பிரபாகரன் போன்ற ஒரு தலைவனாக உருவாக வேண்டும் என்பதற்கான முயற்ச்சிகளை பலமாதஙகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார் என்பதற்கு பல்வேறு வெளிப்படை ஆதாரங்கள் <b>External Sources</b> உண்டு
தனக்கென தனியான ஒரு பத்திரிகை - தமிழ் அலை தனக்கென ஒரு இணையத்தளம் பாடுமீன் தனக்கென ஒரு படை முகாம் - மீனகம் தனது சந்திப்புகளை நடத்த தேனகம் என மட்க்களப்பை தனது இராஜ்ஜியமாக்க கருணா பலமான அடித்ளங்களை எல்லாம் ஆரம்பம் முதலே போட்டுவந்துள்ளார்.
எனவே தான் கருணா இராணுவ நகர்வு குறித்து சிந்திப்பதை விடவும் தன்னை பிரபாகரனுக்கு இணையான அல்லது மேலான ஒரு தலைவனாக சித்தரிப்பதற்கு பகீரத முய்றச்சிகளை மேற்கொண்டாhர்.அதில் அவர் வெற்றி அடையாமல் போனதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன.ஒன்று கருணாவின் எதிர்பார்புகளுக்கு அப்பால் சிந்தித்து புலிகள் தலமை தமது படைகளை முன் நகர்த்திய விதம் மற்றும் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்காமல் கருணா பின்வாங்கிச்சென்ற விதம் ஆகியவை மெதுவாக கருணா கட்டி வளர்த்த <b>Image</b> ஐ விரைவாக சரித்துவிட்டன.
இலங்கையின் படைத்துறை நிபுணர்கால் வியந்து போற்றப்பட்ட ஒரு பேர்குணம் நிறைந்த தளபதி தனக்கு எதிரான படைநடத்துகை ஒன்றை எதிர்க்க முடியாமல் போனதன் பின்னணி என்ன?
எத்தனை வியூகங்கள் வகுத்தும் என்ன பயன்?? தலைவன் இட்ட கட்ளையை நடவடிக்கையாக்க மட்டுமே தெரிந்த ஒருவன் தான் கருணா என்பதையும் தன்னால் திட்மிடவோ தாக்குதலுக்கு வளிகாட்டவோ முடியாது என்பதையும் கருணா தற்போதைய பின்னடைவுகள் மூலம் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.
கருணா சர்வதேசத்திலும் இலங்கைக்குள்ளும் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை விமர்சித்து தான் ஒன்றுமே அறியாதவன் தன்னையும் தன்னைச்சார்ந்த மக்களையும் புலிகள் ஏமாற்றிவிட்டார்கள் என்ற கதையை சொல்லி சொல்லியே அனுதாபம் திரட்டும் முயற்ச்சிகளில் தீவிரமாக ஈடுபடடடுக்கொண்டிருக்க அவருக்கு தெரியாமலே அவருடன் இருந்தவர்கள்அவருடைய நடவடிக்கைகள் சந்திப்புகள் திட்மிடல்கள் குறித்து வன்னிக்கு தகவல்களை உடனடியாக அனுப்பிக்கொண்டிருந்தனர்.
தான் பயன்படுத்திய பிரதேசவாதம் என்ற பிரம்மாஸ்திரத்தில் தன்னுடன் இருப்பவர்கள் எல்லாம் கட்டுண்டுவிட்டார்கள் என்ற நம்பிக்கையில் கருணா திளைத்துக்கொண்டிருக்க வன்னியல் கிடைக்கும் தகவல்கள் மற்றும் பல புலனாய்வு அறிக்கைகள் திரட்டப்பட்டு தீவிர வியூகம் வகுக்கப்பட்டுக்கொண்டிருந்த விடயம் கருணாவிற்கு தெரிந்திருக்க வாய்பில்லை.
கருணாவின் இந்த நடவடிக்கைகளின் பின்னணி குறித்து முன்பே தெரிந்து வைத்திருந்த புலிகளின் தலைமை கருணாவை நசுக்க ஊhநஉம வைத்தது கொழும்பில். இராணுவ நடவடிக்கை மூலமாக கருணாவை கிழக்கிலிருந்து வெளியேற்றுவதானது பலத்த சிக்கல்களை தோற்றுவிக்கக்கூடியது காரணம் கிழக்கில் சகோதர யுத்தம் ஒன்றை ஆரம்பிப்பது பொதுமக்களிடம் வெறுப்பபை சம்பாதிக்க வேண்டிய நிலைய ஏற்படுத்துவதோடு தேடி அழிக்கும் நடவடிக்கை கருணாவிற்கு கூடுதல் மக்கள் செல்வாக்கையும் பெற்றுக்கொடுத்துவிடும்.இதைவிட கிழக்கின் கள நிலமைக்ளை தெரிந்து அதற்கேற்ப போரிடக்கூடிய போராளிகளின் எண்ணிக்கை பற்றாக்குறை.தாக்குதலை ஆரம்பித்தால் தொடர்வதற்கான தொடர்ச்சியான விநியோக மார்க்கம் காயமடைந்த போராளிகளை களத்திலிருந்து வெளியயேற்றுவதில் உள்ள சிக்கல்கள் பரிசீலிக்கப்பட்டே புலிகளின் இந்த <b>Check</b> உம் பொழும்பில் வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இது தான் அந்த <b>Check</b> உம் இலங்கையில் தொங்கு பாராளுமன்றம் ஒன்று உருவாகக்கூடிய நிலையில் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தடுமாறிக்கொண்டிருந்த ஐனாதிபதிக்கு புலிகள் தரப்பு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் தான் நிலமைகளை திருப்பிப்போட்டிருக்க வேண்டும் என்று அவதானிகள் கருத்துரைத்துள்ளனர்.
ஏற்கனவே பொது ஐன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தால் யுத்தம் ஒன்று ஏற்படும் என்று எதிரணிகள் எச்சரித்துக்கொண்டிருந்த நிலையில் கிழக்கில் கருணாவிற்கெதிராக ஆரம்பிக்கப்படும் யுத்தம் இலங்கைப்படைகளுக்கெதிராக திருப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம்.பாராளுமன்றம் கூட முன்னரே யுத்தம் ஒன்றிற்கு அரசாங்கம் செல்வது அதன் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தையும் பாதிப்பதோடு எத்தனையோ தியாகங்களோடு ஆட்சிபீடம் ஏறும் நிலைக்கு வந்துள்ள சுதந்திர மக்கள் ஐக்கிய முன்னணியின் அரசியல் எதிர்காலத்தையும் பாழடித்துவிடும் அபாயம்.இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தம் தொடங்கினால் சர்வதேச சமூகம் இலங்கையை மீளக்கட்டி எழுப்புவதற்கென வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த 4.5 பில்லியன் அமெரிக்க நநிதி உதவி உட்பட அனைத்தும் நிறுத்தப்படும்.சர்வதேச சமூகத்தின் இந்த நிதி வழங்கல் மூலம் நாட்டில் பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமது ஆட்சியை மேலும் பல ஆண்டுகளுக்கு நீடிக்க கனவு கண்டுகொண்டிருக்கும் ஜனாதிபதியின் அத்தனை திட்டங்களையும் மீண்டும் ஒரு யுத்தம் பாழடித்துவிடும் என்ற ஐதார்த்தம் தெளிவாக புலிகள் தரப்பால் ஐனாதிபதிக்கு அறிவிக்கப்ட்டிருக்க வேண்டும்.இதை விட முக்கியம் கருணாவிற்கு அரசாங்கதரப்பு அல்லது படைத்தரப்பு வழங்குவதாக உறுதிஅளித்த விடயங்கள் தொடர்பான முழுவிபரங்களும் புலிகளால் தெரிவிக்கப்பட்டு தமது பலம் கருணாவின் பலவீனம் என்பன விளங்கவைக்கப்பட்டாகவும் ஒரு தகவல்.பலம் மிக்கதான புலிகளுடன் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு செல்வதில் உள்ள நெருக்கடிகளை உணர்ந்த ஜனாதிபதி தனது முடிவுகளை மாற்றிக்கொண்டதோடு படைஉயர் அதிகாரிகளுக்கும் சில கண்டிப்பான உத்தரவுகளை உடனடியாகவே பிறப்பித்துள்ளார்.
அவற்றின் சாரம் கருணாவிற்கு பாதுகாப்பு மட்டும் வழங்கவும் கருணாவிற்கு எதிராக புலிகள் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிராக இராணுவமோ கடற்படையோ செயற்படக்கூடாது.முக்கியமாக புலிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யத்தநிறுத்த மீறலாக கூட இருக்கலாம் ஆனால் அவை குறித்து நீங்கள் மௌனம் சாதிக்க வேண்டும்.புலிகளால் உங்களுக்கு எந்தவித ஆபத்தும் நேரிடாது அவர்கள் கருணாவை தேடட்டும் கருணா அடைக்கலம் கோரினால் அதை வழங்குங்கள் மேற்கொண்டு எந்த ஒரு சந்தர்பத்திலும் தாக்குதல் முயற்ச்சிகளில் ஈடுபட வேண்டாம்.இது தான் ஜனாதிபதியின் உத்தரவாக இருந்திருக்கவேண்டும் ஏன் என்றால் முதலில் கருணாவை சந்தித்த படைதுறையினர் அப்போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக கருணாவை கடைசி நிமிடத்தில் கைவிட்டுவிட்டார்கள். ஜனாதிபதியின் இந்த உத்தரவில் சில படை உயரதிகாரிக்களுக்கு வருத்தம் என்றும் சொல்லப்படுகின்றது.இதற்கு காரணம் கருணாவிற்கு ஆதரவாக யுத்தம் ஒன்றை வலிந்து ஆரம்பித்தால் அதன் மூலம் பணம் பர்த்திருக்கலாமே என்ற சுயநலம்.மற்றொன்று அரசாங்கப்படைகளுக்கே சிம்மசொப்பனமாக விளங்கும் புலிகளை இந்த முறை ஆவது தாம் வெற்றிகொண்டு புகழ் பெறலாம் என்ற போதை.இரண்டும் நிறைவேறாமல் போனதில் வருத்ப்பட்டவர்கள் இவர்கள்.
கிழக்கில் புலிகளின் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படாது என்பதற்கு கருணா கொண்டிருந்த ஓரே நம்பிக்கை கிழக்கின் நீர்பரப்பும் இலங்கை கடற்படையும் ஆயுதங்களுடன் கிழக்கில் தாக்குதல் மேற்கொள்ள வன்னியிலிருந்து புலிகள் வருவதற்குள்ள மார்கம் ஒன்று வெருகல் மற்றையது கடல்.இதில் வெருகல் இல் தனது தம்பி றெஜி உட்பட சில முக்கிய தளபதிகளை கொண்டு வியூகம் அமைத்த கருணா கடற்பரப்பை கண்டும் காணாமலே விட்டிருந்தார்.எந்த ஒரு நடவடிக்கையிலும் வெற்றி தோல்வியை ஒரு சிறு விடயம் தான் தீர்மானிக்கும் எதிரியின் பாதுகர்பில் எங்காவது ஒரு பலவீனம் கட்டாயம் இருக்கும் அதை கண்டுபிடிப்பது தான் வெற்றியின் இரகசியம் என்பதை பிரபாகரன் அடிக்கடி தனது தளபதிகளுக்கு கூறிக்கொள்வாராம்.ஆனால் கருணா அதன் தார்ப்பரியத்தை அப்போது அறிந்திருக்கவில்லை.
தேர்தல் முடீவுகள் வெளியான ஏப்பில் மாத்தின் முதல் வாரம் தேர்தல் சந்தடிகள் ஓயந்து கொண்டிருக்க வெருகல் நோக்கி திருகோணமலையில் இருந்து புலிகளின் படையணிகள் நகர்த்தப்படுகின்றன.இது கருணா எதிர்பார்த்த ஒன்று தான் ஆனால் கருணா எதிர்பாராதது எந்த போராளிகள் வன்னியில் சிறைவைக்கப்பட்டிருப்பதாக கருணா கூறிக்கொண்டிருந்தாரோ அந்த போராளிகள் தான் எதிர்முனையில் நிற்கின்றார்கள் என்ற கசப்பான உண்மையை.புலிகளின் சிறப்பு படையணிகளில் ஒன்றான ஜெயாந்தன் படையணி அதன் தளபதி ஜெயாத்தன் மற்றும் மட்டு அம்பாறை சிறப்பு தளபதி ரமேஷ் ஆகிபோரின் வளிப்படுத்தலில் மட்டக்களப்பிற்குள் நுழைவதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றது.
மகாபாரதத்தின் குருஷெத்திர போர்களத்தை நினைவூட்டிய படைநகர்வு இது.இரு புறமும் மட்க்களப்பு போராளிகள்.மண்ணை மீட்கவென்று ஆயதம் ஏந்தியவர்கள் தவறான வளிநடத்தலால் இன்று எதிர் எதிர் துருவங்களில் மோதலுக்கு தயாராகி நிலை எடுத்தபடி இருக்கின்றார்கள்.இது தமிழனின் தலை விதி
<b>ஏப்பிரல் 10 ம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை நேரம்</b>
கடற்பரப்பால் புலிகள் நுழைந்தால் இராணுவம் பார்த்துக்கொள்ளும் என்று கருணா கனவு கண்டுகொணடிருந்த வேளை இதே கடற்பரப்பின ஊடாக உள்நுழைந்த புலிகளின் படையணிகள் தரையிறக்கம் நடந்துகொண்டிருக்கின்றது.சீரான விநியோகம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டவுடன் கட்டளைகள் சீறிப்பறக்கின்றன.நிலை எடுத்திருந்த புலிகள் தாக்குதல்களை ஆரம்பிப்பார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு பின்புறம் நீர்பரப்பில் வந்த புலிகளின் அணிகள் தரையிறங்கி யுத்தத்தை ஆரம்பிக்கவும் தடுமாற்றம் ஏற்படுகின்றது. குழம்பிப்போகின்றது கருணாவின் படையணி.முற்றிலும் எதிர்பாராத இந்த நகர்வை முறியடிக்க வளி தேடுவதற்கான நேரம் அப்போது இருந்திருக்கவில்லை.தளபதிகளின் கட்டளைக்காக காத்திருந்தவர்கள் தற்காப்பு யுத்தத்தை ஆரம்பித்தனர் ஆனால் கட்டளைகள் வரவில்லை மாறாக தரையிறங்கிய புலிகளிடமிருந்து சரணடையுமாறு கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.தமது மண்ணின் சொந்தங்களால் விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கமுடியாமல் பல போராளிகள் ஆயதங்களுடன் சரணடைகின்றார்கள் .புலிகளின் இராணுவ நகர்வு இரத்தம் சிந்தாமலே முடிவடைகின்றது.புலிகளின் இந்த படைநடத்துகையால் குழம்பிப்போன கருணா தனது மீனகம் முகாமில் போராளிகளை சந்தித்து நிலமையினை விளக்கி அனைவரையும் தமது வீடுகளுக்கு செல்லுமாறு கூறிவிட்டு தனது நெருங்கிய சகாக்களோடு தொப்பிக்கல நோக்கி தப்பிச்சென்றதாக கூறப்பட்து.பின்னர் புலிகளின் அணிகள் தொப்பிகல காட்டுபகுதிக்குள் நுழைந்தவுடன் மாவடிவேம்பு இராணுவமுகாமில் கருணாதரப்பினர் தஞ்சம் அடைந்ததாக செய்திகள் வெளியான போதும் இராணுவம் அதை மறுத்திருந்தது.
வாகரை கதிரவெளி வெருகல் ஆகிய மூன்று இடங்களிலும் கருணாவின் போராளிகள் சிலர் எதிர்தாக்குதலை மேற்கொண்டதாக மீட்புப்படைகளின் தளபதி கூறியுள்ளார் ஆனாலும் இதில் பெரிய அளவு இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்த புலிகள் எதிர்புகள் எதுவுமின்றி அம்பாறை மாவட்டததையும் மீட்டனர்.
இவை அனைத்துமே ஒரு சில நாட்களிலேயே நடத்தி முடிக்கப்பட்டமை தான் இங்கு முக்கியத்துவமானது
கிழக்கின் கலவரமாய் இருந்த கருணா தற்போது எங்கே என்ற கேள்விக்கு பலவாறான பதில்கள் கூறப்படுகின்றன.
கருணா தனது விசுவாசிகளோடு தனியான முகாம் ஒன்றை பொலன்னறுவைப்பகுதிக்கு அண்மைய காட்டுப்பதியில் அமைத்திருப்பதாகவும் இங்கும் புலிகள் வந்தால் தப்பிச்சென்றுவிட வவதியான புவியில் அமைவிடத்திலேயே இந்த முகாமை அமைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.அப்படியானால் <b>Whats Next? எனறொரு கோள்வி எழக்கூடும் சுமார் 6000 அதிகமான போராளிகள் 2 ஆட்லறிகள் மற்றும் பல அதி நவீன ஆயதங்கள் போரியல் அனுபவம் கொண்ட தாத்தா றெஜி போன்ற தளபதிகள் எல்லாம் உடனிருந்தும் புலிகளை எதிர்க்க முடியாமல் பின்வாங்கிய கருணா இப்போது ஒன்றுமே இல்லாத நிலையில் என்ன செய்யப்போகின்றார் என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது.
இதேவேளை கருணா இராணுவ முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் புலிகளின் இராணுவ ஆயத பலம் முகாம்களின் அமைவிடம் உட்பட முக்கியமான தகவல்களை இராணுவத்தினர் கருணாவிடமிருந்து திரட்டிவருவதாகவும் இதன் ஒரு கட்டமாக கருணாவின் சகாக்கள் சிலர் சில முக்கியமான படங்களை உருப்பெருக்கி பெற்றுச்சென்றதாக கொழும்பில் உள்ள முக்கிய புகைப்பட பிரதி எடுக்கும் நிறுவனத் தகவல் ஒன்று கூறுகின்றது.அப்படியானால் கருணா இராணுவத்திற்கு தகவல்களை வழங்கும் [b]Informer</b> ஆக மாறிவிட்டாரா? பல இராணவ நடவடிக்கைளில் முன்னின்ற தளபதி ஒரு காலத்தில் இராணுவத்தின் உயர்மட்ட தளபதிகளுக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கருணா இன்று அவர் எதிர்த்து போரிட்ட அதே இராணுவத்தின் முகாமில் கைதியாக இருக்கலாம் என்ற ஊகங்களில் உள்ள உண்மை சுடுகின்றது.
- ராம்ஜீ / சூரியன் வெப்தளம்</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
இவங்களுக்கு சகோதரச்சண்டை தேவைப்பட்டிருக்குது.. அதுமட்டும் நல்லாப்புரியுது..
தன்னுடைய போராளியளை எப்படி நடாத்தினான் எண்டதுதான் இப்பத்தைய மட்டக்களப்பு நிலைமையிலிருந்து தெரியுதே..
அவன் அங்கை அதுக்குள்ளைதான் இருக்கிறான்.. அவனுடைய கட்டுப்பாட்டுக்குள்ளைதான் மட்டக்களப்பு இருக்கெண்டதுதான் உண்மை..
துரோகிப்பட்டம் கொடுத்து இத்தனையையும் வாங்கிவைத்துக்கொண்டு..
எல்லாம் கட்டமைக்கப்பட்ட மேடை நாடகம்தான்..
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
சக்தி ரிவி செய்தி கேட்டன்.. சிரிப்பு அடக்க முடியேல்லை.. ஒருபக்கம் இராணுவ சோதனைச்சாவடிகளை அகற்று எண்டு ஆர்ப்பாட்டம் செய்யிறாங்கள்.. மற்றப்பக்கம் சோதனைச்சாவடியளை போடு எண்டு ஆர்ப்பாட்டம் செய்யிறாங்கள்.. அறிக்கையளும் விடுறாங்கள்..
அவங்கள் செய்தால் கொலை.. இவங்கள் செய்தால் களை.. இந்த வன்னித்தத்துவம் மட்டக்களப்பு சனத்துக்கு விளங்குமென நினைக்கிறன்.. மட்டக்களப்பு நிர்வாகப் புலியளுக்கு மட்டக்களப்பு மக்களிடம் உள்ள ஆதரவைத்தானே இது படம்பிடிச்சு காட்டுது
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
கொழும்பிலே கைவிட்டுவிட்டு ஓடித்தப்பிய தோழர்கள்,போரில் முன்னரங்க நிலைகளில் நிறுத்தப்பட்ட சிறுவர்கள் இவர்களையெல்லாம் கேட்டால் கூடச் சொல்வார்கள் அவன் தனது போராளிகளை எப்படி நடத்தினான் என்பது
நீங்கள் எப்போதிருந்து கருணாவின் கொ.ப.செ. ஆனீர்கள்
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அதென்ன கொ.ப.செ? கொள்கை பரப்பு செயலாளரா? அது திராவிட கட்சிகளில் சினிமா நடிகர், நடிகைகளுக்குதானே கொடுப்பார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ராஜனி திரணகமவைக் கொன்றது ஈ.பி.ஆர்.எல்.எப் என்று கூறி அதற்குரிய காரணங்களை அலசுகின்றது இந்த கட்டுரை படித்து பாருங்கள் ... http://kavithai.yarl.net/archives/001023.html#more
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 59
Threads: 2
Joined: Feb 2004
Reputation:
0
BBC Wrote:ராஜனி திரணகமவைக் கொன்றது ஈ.பி.ஆர்.எல்.எப் என்று கூறி அதற்குரிய காரணங்களை அலசுகின்றது இந்த கட்டுரை படித்து பாருங்கள் ...http://kavithai.yarl.net/archives/001023.html#more
எந்தவகையிலும் நியாயம் கற்பிக்க முடியாத ஒரு கொலை உரிமை கோர படவில்லை என்பதைவிட யாராவது ஒருவரை அதற்கு பொறுப்பு ஏற்க வைக்கவேண்டிய காலத்தின் காட்டாயம்..........
மற்றைய கொலைகளுக்கும் இவ்விதி வருங்காலத்தில் கணக்கு கேட்கும்...
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Eelavan Wrote:கொழும்பிலே கைவிட்டுவிட்டு ஓடித்தப்பிய தோழர்கள்,போரில் முன்னரங்க நிலைகளில் நிறுத்தப்பட்ட சிறுவர்கள் இவர்களையெல்லாம் கேட்டால் கூடச் சொல்வார்கள் அவன் தனது போராளிகளை எப்படி நடத்தினான் என்பது
நீங்கள் எப்போதிருந்து கருணாவின் கொ.ப.செ. ஆனீர்கள் அதுதான் மட்டக்களப்பில் இராணுவத்தை சோதனைச்சாவடிகள் போடு என்று கேட்பதிலிருந்து தெரிகிறதே..
விருப்பமில்லாதவர்களை ஆரம்பத்திலேயே வீட்டுக்கு அனுப்பியதும்.. சகோதரக்கொலைகள் தொடங்கியதும் எரிக் சொல்கெய்ம் ஊடாக யுத்த நிறுத்த அறிக்கைவிட்டு சகோதர படுகொலைகளை நிறுத்தியதும் உங்களுக்கு கெடூரமாகத் தெரிகிறதோ..?
:?: :!:
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மூத்த பத்திரிகையாளர் கோபாலரத்தினம் தேசியத் தலைவரால் பாராட்டி விருது வழங்கி கௌரவிப்பு
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் குறிப்பாக பத்திரிகை உலகில் பணியாற்றி தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் இனத்தின் எழுச்சிக்கும் மகத்தான சேவையாற்றிய கோபு என்று அழைக்கப்படும் எஸ்.எம்.கோபாலரத்தினம், தமிழீழ தேசியத் தலைவரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவரது கௌரவம் குறித்து விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை வருமாறு:
அரசியல்துறை
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
04-06-2004
மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் (கோபு) தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பாராட்டி விருது வழங்கிக் கௌரவிப்பு
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் குறிப்பாக பத்திரிகையுலகில் பணியாற்றி தமிழ்தேசியத்திற்கும், தமிழ் இனத்தின் எழுச்சிக்கும் மகத்தான சேவையாற்றி உள்ளார்.
எழுத்துத்துறையில் இவரின் எழுத்து நடையானது, கருத்துக்களின் முன்வைப்பு, முன்வைத்த கருத்துக்களுக்கு ஏற்ற தலைப்பால் மிகவும் வித்தியாசமானதாகவும் கூர்மைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கும் அதே நேரத்தில் வாசகர்களின் மனங்களை கவ்விப்பிடித்து அவர்களை அதன்பால் சிந்திக்க து}ண்டும் ஈர்ப்பினை கொண்டதாகவும் இருக்கும். வாசகர் பரப்பில் இருக்கக்கூடிய எல்லாத்தரப்பினரையும் கருத்தில் எடுத்து எளிய நடையில் புரியும் வகையில் சொற்களையும், சொற்தொடர்களையும் கையாண்டு ஆக்கங்களை படைத்துள்ளார்.
இதன்மூலம் எல்லா மக்களையும் போராட்டத்தின்பால் சிந்திக்க து}ண்டிய சேவையை மிகத்திறம்பட ஆற்றியுள்ளார். இவரின் இச்சேவையைப் பாராட்டி இன்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் புலிச்சின்னம் பதித்த விருது வழங்கிக் கௌரவி;த்துள்ளார்.
பத்திரிகையாளனுக்கு இருக்கவேண்டிய முக்கிய பணியாகிய எதிர்காலத்தை நிகழ்காலத்துடன் இணைத்துக் கருத்துக்களை முன்வைக்கும் சிறப்பு இயல்பு இவரிடம் ஆழமாக குடிகொண்டிருந்தது இதனால் அவரது ஒவ்வொரு படைப்புக்களும், அந்த படைப்புக்களின் தலைப்புக்களும், உயிரோட்டமுள்ளவையாகவும் உள்ளன.
இத்தகைய ஒரு சிறந்த பத்திரிகையாளன் தொடர்ந்தும் தனது சேவையை ஆற்றி பத்திரிகை உலகிற்கும் தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலை வரலாற்றுக்கும் பெரும்பணியாற்ற வேண்டும் அத்துடன் வளர்ந்துவரும் இளைய ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதையும் தெரிவித்து அவரின் நீண்டகால சேவையை பாராட்டுவதோடு தொடர்ந்தும் சிறப்பாகப் பணியாற்ற எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
தகவல் மையத்திலை ஏதொ விவாதமெல்லாம் செய்செய்து ஓப்போடு.. மன்மதராசாபாட்டுக்கள்பற்றி காரசாரமா விமர்சனமும் செய்தாங்கள்..அதுக்கு ஏதோ தீர்மானமும் எடுத்தாங்கள்.. எல்லாம் முடிஞ்சிதுபோலை.. ஏதோ அப்படியான விளங்காத பாட்டுக்களதான் போகுது.. ஏதோ.. அப்படி போடு.. எண்டு போகுது.. இதுக்கு முதல்பாட்டு விளங்கவேயில்லை.. வானொலியிலை வந்து சொன்ன நேயர்களுக்கு இதுபற்றி பிறகு கவலையில்லையாக்கும்.. ஏதொ நாங்கள் போட்டு பிரசித்தமாக்காட்டில் எண்ட ஏதோவெல்லாம் சொன்னாங்கள்.. நாங்கள் சொல்லி கேக்கமாட்டாங்கள்.. ஏதோ அவங்க பாஷையிலை கெட்டுப்போற சமூகத்தை திருத்தட்டும்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தகவல் மையம் என்றால் அது ஐபிசியில் வரும் நிகழ்ச்சியா தாத்ஸ்? மன்னிக்கவும் நான் வானொலி கேட்பதில்லை, எப்போதாவது இணையம் வழி கேட்டால் தான் உண்டு. அதுவும் தொடர்பு சீரின்மையால் சரியாக கேட்க முடியாது.
அது இருக்கட்டும் அப்படி போடு கில்லி பாடல் நல்ல கருத்தான பாடல்தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
BBC Wrote:தகவல் மையம் என்றால் அது ஐபிசியில் வரும் நிகழ்ச்சியா தாத்ஸ்? மன்னிக்கவும் நான் வானொலி கேட்பதில்லை, எப்போதாவது இணையம் வழி கேட்டால் தான் உண்டு. அதுவும் தொடர்பு சீரின்மையால் சரியாக கேட்க முடியாது.
அது இருக்கட்டும் அப்படி போடு கில்லி பாடல் நல்ல கருத்தான பாடல்தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம்.. ம்.. அதுதான்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
thampu Wrote:BBC Wrote:ராஜனி திரணகமவைக் கொன்றது ஈ.பி.ஆர்.எல்.எப் என்று கூறி அதற்குரிய காரணங்களை அலசுகின்றது இந்த கட்டுரை படித்து பாருங்கள் ...http://kavithai.yarl.net/archives/001023.html#more
எந்தவகையிலும் நியாயம் கற்பிக்க முடியாத ஒரு கொலை உரிமை கோர படவில்லை என்பதைவிட யாராவது ஒருவரை அதற்கு பொறுப்பு ஏற்க வைக்கவேண்டிய காலத்தின் காட்டாயம்..........
மற்றைய கொலைகளுக்கும் இவ்விதி வருங்காலத்தில் கணக்கு கேட்கும்...
எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத கொலை ரஜனியின் கொலை அதைப் புலிகளே செய்திருப்பினும் கூட.
ஆனால் நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லவில்லை என்பது எனது கருத்து இதனை யார் செய்திருக்கக் கூடும்,90 களின் பின்னர் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல UTHR செயற்பாடு தடம்புரண்டதா என்பதில் கொஞ்சம் விளக்கம் தேவை
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தனது மனைவி மதிவதனியுடன் கிளிநொச்சியில் நடைபெற்ற முதியோர் இல்ல திறப்பு விழாவில் பங்குபற்றியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.
இந்த புகைப்படத்தில் இருப்பவர்தான் பிரபாகரன் மனைவியா என்பது சரியாக தெரியவில்லை.
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/06/anpucholai_2.jpg' border='0' alt='user posted image'>
படம் - தமிழ் நெட்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இருவரின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளது போல தோன்றுகின்றது. படம் பிடிப்பதில் ஏற்பட்ட கோளாரா தெரியவில்லை,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
இவர்தான் மதிவதனி(தாத்தா சண்டைக்கு வரப்போகிறார்)
\" \"
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
|