Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்ணே நீயும் பெண்ணா
kuruvikal Wrote:புலத்தில என்ன எங்கையும் மனிதன் எல்லாரும் தான் துன்பத்தை அனுபவிக்கிறான்...அது ஏன் பாருங்கோ சில பேருக்கு பெண்களின் துன்பம் எண்டோடன கருசணை பொங்கி வழியுது.....அதுதான் விளங்கல்ல....! ஏதேனும் எதிர்பார்ப்போ வேண்டுதலோ என்னவோ.....???! கடவுளே கெதியா வரும் கொடுத்தால் நல்லம்....! இல்ல பப் வழிய மிணக்கட்டுட்டு இங்க வந்து...வேதம் ஓதி.....பெண்கள் மேல கருசணை காட்டிறது போல நடிச்சு...அவைய ஏமாத்திற கூட்டம் தான் அதிகம்......?????!

கற்புக்கு பாதுகாப்புத் தேடினமோ....அல்லது தங்கட கற்புக்கு விலை பேசினமோ.....????!
அவங்களாவது பப்புக்குப் போட்டு வந்தெண்டாலும் அப்பிடி இப்பிடி ஆடுறாங்கள்.. இந்தாளின்ரை கதையைப் பார்த்தால் பப்புக்குப்போகாமலே புள் மப்பிலை நிக்கிறமாதிரிக்கிடக்கு.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
Kanani Wrote:
Quote:வெறுமனே பெண்ணின் மனவிருப்பத்துக்கெதிராக உடலுறவு கொள்வதுதான் கற்பழிப்பு எனின் பல கணவன்மார் தம் மனைவி மாரை தினம் தினம் கற்பழித்துக் கொண்டுதான் இருப்பார்கள்

ஒரு கேள்வி...உங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டதா? அல்லது காதல் அனுபவம் உண்டா?
நான் கேட்டறிந்ததும்..எனது அனுபவத்திலும் (காதல்) நாங்கள் 'அ' போட்டால் 'ஃ' போட்டு முடிப்பது அவைதானே :wink: :wink: :wink:

சின்ன வயதில் நான் கதறக் கதற மணலில் விரலை அழுத்தி "அ" தொடக்கினார்கள் கடைசியில் நான் தான் 'ஃ' எழுதி முடித்தேன் அப்படியென்று சொல்லவருகிறீர்களா?
\" \"
Reply
அதுதானே எதை 'அ' போட்டால் 'ஃ' போட்டு முடிப்பது அவர்கள் என்று சொல்கின்றீர்கள்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கணணி....இவைக்கு இப்ப பன்னிக் குட்டியப்பாத்தாலும் பெண்ணாத்தான் தெரியும்...பொறுங்கோ...கொஞ்சம் தெளியவிட்டுக் கதைப்பம்...அப்பவாவது விளங்குதோ எண்டு பாப்பம்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அவர் ஒருத்தர் பப்புக்கு அனுப்பிப்போட்டுத்தான் இருக்கார் போல இருக்கு வக்காளத்து வாங்கிறார்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
எங்கேயும் கருத்துக்கு பதிலை காணவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
kuruvikal Wrote:கணணி....இவைக்கு இப்ப பன்னிக் குட்டியப்பாத்தாலும் பெண்ணாத்தான் தெரியும்...பொறுங்கோ...கொஞ்சம் தெளியவிட்டுக் கதைப்பம்...அப்பவாவது விளங்குதோ எண்டு பாப்பம்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அவர் ஒருத்தர் பப்புக்கு அனுப்பிப்போட்டுத்தான் இருக்கார் போல இருக்கு வாக்காலத்து வாங்கிறார்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அன்பின் குருவிகாள்
ஆணாதிக்கம் எனக்குப் பிடிப்பதில்லை இது வெறுமனே பெண்கள் மீது கொண்ட எதிர்ப்பால் கவர்ச்சியால் வந்த ஆதங்கம் இல்லை பல்வேறு சந்தர்ப்பங்களில் உறவுகளுடனும் நட்புகளுடனும் பழகியதால் வந்த ஆதங்கம்

அதே போன்று தாங்கள் செய்வதெல்லாவற்றையும் செய்துவிட்டு ஆண்கள் மேல் பழியைப் போடும் பெண்களையும் நான் மதிப்பதில்லை அதானால் தான் ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று கூப்பாடு போடும் இவர்கள் கருத்தை மதித்து பதில் எழுதுவதில்லை

இதுதான் எனது நிலைப்பாடு இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் அல்லது ஆட்சேபணை இருந்தால் தயவு செய்து மறைமுகமாக இன்றி எனது பெயரை நீங்கள் நேரடியாகவே குறிப்பிடலாம் என்னுடன் ஒரு ஆரோக்கியமான வாதத்தை ஆரம்பிக்க விரும்பினால் நானும் தயார்.

உங்கள் கருத்து பொதுவாக இவை என்று சொல்லப்பட்டதால் எனது பக்கத்தை தெளிவு படுத்தவேண்டி இதனை எழுதுகின்றேன்
\" \"
Reply
Eelavan Wrote:

ஈழவன் கருத்தை நான் முற்றிலும் ஆதரிக்கின்றேன். வீண் சண்டைகளை விடுத்து நாம ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்தலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கணவனானவன் பாலியல் அறிவு உள்ளவனாகவும் உடலுறவுக்கு தகுதி (?) உள்ளவனாகவும் இருந்தால்.. இங்கே கணவன் மனைவிக்கிடையே 'பலாத்காரம்' என்ற பேச்சுக்கே இடமில்லை.. இதைக்கேட்க வேண்டிய இடம் அன்பான குடும்பத்திடம். எந்தநேரமும் கறார் பிறாரென கணவனோ மனைவியோ நச்சரித்துக்கொண்டிருப்பார்களேயானால் அங்கே பாலியலிலோ அல்லது அதுபற்றிய அறிவிலோ கோளாறு என்றுதான் அர்த்தம்!
.
Reply
சோழியன் அண்ணா
இதனைத் தான் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்வார்களோ?
\" \"
Reply
பல்கலைக்கழகமா..அப்ப அங்க யார் வேந்தர்...உபவேந்தர்...டீன்...கெட்....புற(f)வெசர்...லெக்சறர்...நொன் அக்கடமிக் ஸ்ராவ்....????!

பிறகு அதுக்க சண்டை வந்துதோ...நான் பெரிசா நீ பெரிசா....பல்கலைக்கழகம்..அம்போதான்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
பாட்டும் நானே பாவமும் நானே என்றில்லாது பாட்டும் நாமே பாவமும் நாமே என்பதுதான் குடும்பப் பல்கலைக்கழகம்

இங்கு வேந்தர் உபவேந்தர் பீடாதிபதி எல்லோரும் இரண்டிரண்டு

பல்கலையும் கற்பிக்கும் கழகத்தில் சண்டைவராது அரைகுறையாகக் கற்றவரிடம்தான் அதுவரும்
சரிதானே குருவிகாள்
\" \"
Reply
எங்களைப் பொறுத்தவரை ஆண் பெண் என்று பிரச்சனைகளை அணுகுவதைவிட மனிதன் என்ற பொது வடிவில் ஆணினதும் பெண்ணினதும் பிரச்சனைகள் ஏற்றத் தாழ்வுகள் இன்றி சமமாக பரிசீலிக்கப்பட்டு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க பொதுவான தீர்வுகள் எட்டப்பட வேண்டும்....! அதே வேளை அவை அவரவரின் தனித்துவங்களை பாதுகாக்கும் வகையிலும் சமூக கட்டமைப்பைப் பாதிக்காத வகையிலும் பாதுகாத்து உறுதிப்படுத்தும் வகையிலும் தூய அன்பின் பாலான புரிந்துணர்வுடனான செயற்பாடுகளுக்கு வழி சமைத்துக் கொடுக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதே எமது அவா....!

ஆண்- பெண் சார்ந்த ஒரு குற்றச்செயல் தொடர்பில் வெறுமனவே யதார்த்தப் புற நிலைகளுக்கு அப்பால் ஆணின் மீதோ அல்லது பெண்ணின் மீதோ தனித்து குற்றச் சாட்டுகளை வைத்து தாந்தோன்றித்தனமான சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் வளர்த்து உணர்வுகளைச் சீண்டி ஒருவர் மீது மற்றவர் வெறுப்புகளை வளர்த்து சமூகத்துக்க அவசியமான ஒழுக்கம் கட்டுப்பாடு ஆகியவற்றை இழந்து வாழ முயலுதல் மனிதன் என்ற சமூக விலங்குக்கு எப்போதும் வளமான வாழ்வுக்கு உதவப் போவதில்லை.....! அது மட்டுமல்லாமல் வெறுப்புக்களால் அன்பின் பாலான புரிந்துணர்வை நோக்கிச் செல்லுதல் என்பது சாத்தியமில்லாத ஒன்று....!

எனவேதான் மேலோட்டமாக, யதார்த்தத்தை, மனித வாழ்வியல் கோலங்களை எல்லாம் கடந்து எடுத்ததற்கெல்லாம் ஆணின் மீது குற்றம் சாட்டும் பெண்ணியத்தையும்.... பெண் சொல்கிறாள் என்பதற்காக தங்களளவில் சரியென்று பட்டதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் ஆண்களையும் ஆண் என்பதற்காக பெண்களையும் சக மனிதன் என்று பார்க்க மறுப்பதையும் அவர்களிடத்தில் யதார்த்தத்திற்கு அப்பால் உள்ள வேறுபாடுகளை திணிக்க முயல்வதையும் நாம் எப்போதும் ஆதரிக்க மாட்டோம்....!

அப்படியான கருத்துக்களைத் திணிக்கவோ அல்லது பரப்புரை செய்வதையோ எவராகிலும் எம்மட்டில் எதிர்ப்போம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
உண்மைதான் குருவிகாள்
மூன்றாம்தரப்பு மத்தியஸ்தம் இல்லாத புரிந்துணர்வு உடன்படிக்கையே குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்
\" \"
Reply
மதகு செதுக்கும் உளியின்பால்...

மதகு செதுக்கும் உளியின்பால்...

பெண்ணியத்தை ஒரு தோசைபோல்
சுட்டுக் காட்ட
சவால்விட்டபடியே வந்தனர் அவர்கள்.

இரத்தமும் சதையுமாய் உடல்
மாறுதலை நேசித்து
வளர்கிறது
நம்மைச் சுற்றியதெல்லாம் மாறுகிறது
மாறாத தத்துவங்களை திணித்தவர்களும்
காணாமல் போயினர்.
ஆனாலும் கல்தோன்றா காலத்து முன் தோன்றியவர்கள்
நாம்
கலாச்சார உளியுடன் அலைகின்றோம்
பெண்சிலை வடிக்க.

காதலின் வயப்படலில் எழும்
உணர்வுகளை
பெண்ணிடமிருந்து களவாடுகிறாய்.
போதைப் பொருளாய்
மிதக்கிறாள் அவள் உன் நினைவில்.

பெண்விடுதலை என்றதுமே
பெண்குறிமேல் மொய்க்கும் கருத்துகளோடு
இரைச்சலிடும்வரை
பெண்ணியம் என்ன
பெண்ணையும் நீ
பு£¤ந்துகொள்ள முடியாது போ!

நன்றி - ரவி (சுவிஸ்,24122003)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<span style='font-size:30pt;line-height:100%'> \"க\" சொல்லும் தஸ்லீமா நச்ரீன் </span>

அந்தப் பெண் எழுத்தாளர் எழுதும் ஒவ்வொரு புத்தகமும், ஒரு பரபரப்பை உண்டாக்கும். அவர் எழுதிய புத்தகம், பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றால்தான் ஆச்சரியம்! வழக்கம் போலவே கடந்த அக்டோபர் 23_ம் தேதியன்று, அவர் எழுதி, வெளியான "க" எனும் புத்தகம், பங்களாதேஷில் பெறும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்தப் புத்தகத்தைப் படித்த புலவர்கள், பண்டிதர்கள் "அய்யோ... அய்யோ" என்று அலறினார்கள். சிலர் "ஷாக்"கால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றும் சிலர் அந்தப் புத்தகத்தை "தடை" செய்யக் கோரி நீதிமன்றத்தை அணுகினார்கள். ஆனால், வாசகர்கள் அந்தப் புத்தகத்தை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கினார்கள். தற்போது அந்தப் புத்தகம் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. இத்தனைக்கும் அந்தப் புத்தகத்திலுள்ள கதைதான் என்ன என்கிறீர்களா?

"க" என்ற தலைப்புடன் தஸ்லீமா தன்னுடைய சுயசரிதையை எழுதினார். இதற்கு முன் தஸ்லீமா இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். முதல் பாகம் மேயபேலா (எண் குழந்தை பருவம்) உதல் ஹவா (சுதந்திர காற்று) எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த இரண்டு புத்தகங்களும், உடனே தீர்ந்துவிட்டன. ஆனால், இந்தப் புத்தகங்கள் ஆபாசமாக இருக்கின்றனவென்று பங்களாதேஷ் அரசு தடை போட்டது. இந்தப் புத்தகங்களுக்கு அப்புறம் எழுதப்பட்ட புத்தகம்தான் "க". வங்க மொழியில் முதல் மெய் எழுத்து "க". என்றால், எதாவது சொல்லுங்களென்று பொருள். இந்தப் புத்தகத்தில் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்ட கவிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி தஸ்லீமா எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில், இஸ்லாமிற்கும், முகம்மத்துக்கும் எதிராக சில கருத்துகள் வெளியிட்டிருக்கிறார். மேலும் பங்களாதேஷ் பிரதமர் பேகம் கலிதா ஜியா, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவி ஷேக் ஹசீனா நடுவிலுள்ள சண்டையைப் பற்றியும் அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். அதனால் அந்தப் புத்தகம் இலக்கிய துறை அன்றி அரசியலிலும் பரப்பரப்பாக பேசப்பட்டது.

என் வாழ்க்கை பயணத்தில் நான் சந்தித்த நபர்களைப் பற்றி எழுதியிருந்தேனென்று தஸ்லீமா சொன்னாலும், 415 பக்கங்கள் கொண்ட "க" புத்தகத்தில் எழுதப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள் இதைப் பற்றி லேசாக நினைப்பதில்லை. இத்தனை நாள் தமக்கு கிடைத்துக் கொண்டிருந்த பெயரும், புகழும் ஒரேயடியாய் தரை மட்டமானதைப் பார்த்து, பங்களாதேஷ் கவிஞர்களால் ஜீரணிக்க முடியவில்லை. சிலருடைய வீடுகளிலும் பிரச்னை ஆரம்பமானது. "தஸ்லீமா சொல்வதெல்லாம் பொய். அவருடைய எழுத்துக்கள் இதுவரை நாங்கள் படித்ததேயில்லை" என்று பலர் புலம்பத் தொடங்கினார்கள். சிலர் அந்தச் செய்தியை கேட்டு "ஷாக்"கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றும் சிலர் நீதிமன்றத்தை அணுகினார்கள். சய்யத் ஷம்ஷீல் ஹக் எனும் எழுத்தாளர், 10 கோடி டாகாக்கள் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்று நீதிமன்றத்தில் வழக்கைப் செய்தார். மொத்தத்தில் பங்களாதேஷ் எழுத்தாளர்கள் "க" புத்தகத்தை "தடை" செய்யக்கோரி அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, அப்புத்தகம் பங்களாதேஷ் நாட்டில் "தடை" செய்யப்பட்டது.

அந்தப் புத்தகம் நம் நாட்டில் "த்விகந்தித" எனும் பெயரில் வெளியிடப்பட்டது. நம் நாட்டின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சய்யத் ஹஸ்மத் ஜலால் என்பவரின் பெயரும், அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றது. இருவருக்கு நடுவில் வெறும் பேச்சுவார்த்தை தவிர, வேறு ஏதும் இல்லை என்று ஜலால் சொல்கிறார். மேற்கு வங்காளத்தில் முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு எதிராக, இந்து எழுத்தாளர்கள் செயல்படுகிறார்களென்று தஸ்லீமா எழுதியது, மேலும் விவாதத்திற்கு உள்ளானது.

இந்த பரபரப்பு ஒருபுறமிருக்க, தஸ்லீமா தன்னுடைய பணியில் மும்முரமாக இருக்கிறார். தற்போது அவர் ஹர்வர்ட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. செய்கிறார். இஸ்லாமிய நாடுகளை மதசார்பற்ற நாடுகளாக மாற்றுவதற்கான வாய்ப்புகள், மதச்சார்பற்ற தன்மைக்கும், பெண்ணீயத்துக்கும் நடுவிலுள்ள தொடர்பைப் பற்றி அவர் ஆராய்ச்சி செய்கிறார். இன்னொரு பக்கம், சுயசரிதையின் நான்காவது பாகத்தை எழுதும் வேலையிலும் தீவிரமாக இருக்கிறார்.

தஸ்லீமா எழுதியதைப் பற்றி பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவருடைய துணிச்சலை எல்லோரும் பாராட்டுகின்றனர். 41 வயது தஸ்லீமாவை, அனுபவங்கள்தான் வழி நடத்துகின்றனவென்று அவருடன் நெருங்கிய நண்பர்கள் கூறுவதுண்டு. அவர் ஒரு சம்பிரதாய முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு ஏழு வயதிருக்கும் போது, நெருங்கிய உறவினரால் கற்பழிக்கப்பட்டார். அதை வெளியே சொன்னால் அடிப்பார்களென்று அச்செய்தியை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டார். சிறு வயதிலிருந்தே இலக்கிய ஆர்வமுள்ள தஸ்லீமா, 15 வயதில் முதன் முதலில் ஒரு கவிதையை எழுதினார். மருத்துவக் கல்லூரி மாணவியாக மேலும் கவிதைகள் எழுதித் தள்ளினார். டாகா அரசு மருத்துவமனையில், கைனகாலஜிஸ்ட்டாக வேலை பார்க்கும்போது, பெண்களை ஆண்கள் சித்திரவதை செய்யும் கொடுமையை கண்கூட பார்த்தார். இந்த அனுபவங்கள் எல்லாம் அவரை ஒரு போராளியாக மாற்றிவிட்டன. சில மதத் தலைவர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகளுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகள், பரபரப்பை ஏற்படுத்தின.

பாப்ரி மசூதி இடிப்பிற்கு அப்புறம், பாங்களாதேஷில் இந்துக்களின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்களை "லஜ்ஜா" எனும் பெயரில் எழுதியதால், மதவாதிகள் "ஃபத்வா" விதித்தனர். அதன்படி அவருக்கு மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. அரசுகூட மதவாதிகளின் பேச்சை கேட்டதால், தாயை விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார். அவருக்குத் துணையாக உலகின் எத்தனையோ அமைப்புகள் குரல் கொடுத்தன. தாயின் கோரிக்கையை ஏற்று, 98_ல் மறுபடியும் சொந்த நாட்டில் அடியெடுத்து வைத்த தஸ்லீமா, மறுபடியும் மதவாதிகளின் எதிர்ப்பால் வெளிநாடுகளுக்கு கிளம்பினார்.

தன்னுடைய அந்நிய நாட்டு வாழ்க்கையைப் பற்றி தஸ்லீமா இப்படிச் சொல்கிறார். "எனக்கென்று சொல்லிக் கொள்ள எந்த நாடும் இல்லை. எல்லா நாடுகளும் பஸ் ஸ்டாப்களைப் போல் தோன்றுகின்றன. என் தாய்நாட்டிற்கு போக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஆனால், அங்கு கொண்டு போகும் பஸ்தான் கிடைக்க மாட்டேங்கிறது."

தீராநதி
Reply
மறுப்பு அறிக்கை

<b>மறுப்பு அறிக்கை ஆண்டாண்டுகாலங்களாக அடங்கிக்கிடந்த நம் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் இதுவரை இழந்து போனவைகளுக்கும் சமர்ப்பணம்</b>

<span style='color:#0900ff'>'இவையளுக்குச் சும்மா வைச்சுக்கொண்டிருக்கேலாமல் வெளிக்கிட்டிட்டினம். பெண்விடுதலையெண்டு பூச்சாண்டியா காட்டினம்? \"

'பெண்டுகளுக்கு என்னவேண்டிக்கிடக்கு விடுதலை? இவயளுக்குச் சுதந்திரம் குடுத்தா பிறகு எங்கடபாடு என்னவாகிறது?\"

'உதெல்லாம் வெள்ளக்காரியளுக்குத்தான் சரி. எங்கட பொம்பிளயளெண்டால் பொட்டுவச்சு, சாறியுடுத்து அம்சமா இருக்கவேணும்.\"

'பெண்விடுதலை பெண்விடுதலை எண்டுபோட்டு இவயள் ஏன் வெளிக்கிட்டுத்திரியினம் தெரியுமே? கண்டபடி ஆம்பிளயளோட படுக்கத்தான்.\"

எங்கள் மீதான அடக்குமுறை, பாகுபாடு நாங்கள் சிறுமிகளாகவிருக்கும்போதே ஆரம்பமாகிறது. உணவில், உடையில், விளையாட்டில், எங்கள்மீது செலுத்தப்படும் அன்பில், கல்வி கற்பதில், பின் கலியாணத்தில், கணவனுடனான வாழ்வில், காதலில், காமத்தில், கழுத்தில், களத்தில், மேலும் கடையில், தெருக்களில், வேலையில், தொடர்ந்து விடுதலைப்போராட்டங்களில், அரசியல் அமைப்புகளில், மதத்தில், மடத்தில், மலைகளில், படத்தில், இலக்கியத்தில், அடுப்படியில், விண்வெளியில், வீரத்தில், வாதத்தில்..
மேலும் மேலும் சொல்லமுடியாத சோகங்களைப்போல், எண்ணமுடியாத அணுக்களைப்போல், கொல்லமுடியாத வைரசுக்களைப்போல்..........
எம்மீதான அடக்குமுறை சொல்லமுடியாத சோகங்களைப்போல்;. ஆம் வார்த்தைகளால் சொல்லமுடியாத சோகங்களை;போல்!
பெண்விடுதலை என்பது சிலருக்கு பந்துபோல்
ஊதி வெடிக்கவைக்க முயல்கின்றனர்
எறிந்துவிளையாடுகிறார்கள்
தட்டிப் பார்த்து தமாசுசெய்கின்றனர்
பின்னால் குத்தி பிய்த்தெடுக்கப் பார்க்கின்றனர்
கருத்தியலாக, கருங்கல்லைப்போல் மட்டுமல்லாமல் இலைகளாகத் தளிர்த்து, செடிகளாக செழித்து, படர்ந்து, தென்னைமரம்போல் நிமிர்ந்து, சில இடங்களில் செம்பட்டை தரித்து நிற்கிறது ஆதிக்கம்!
பள்ளங்களாக மலைகளாக கடல்களாக.........மட்டுமல்ல
கவிதையாக, இலட்சியமாக, பின் நவீனத்துவமாக,
மாட்டுவண்டியிலும், விமானத்திலும், மின் அஞ்சலிலும்

கருத்தியலாக மட்டுமன்றி கடமையுணர்வு கொண்டதாகவும் பாசம்மிக்கதாகவும், நியாயப்படுத்துவதாகவும், உறுதியாகவும் தன் நிலையை ஆண்கருத்தியலைச்சார்ந்தும் எங்கள் சிலரினது சம்மதத்துடனும் சங்கமித்திருக்கிறது. ஆண்களினதும், ஏன் எங்களினது தலைகளுக்குள்ளும் கைவிரல்களுக்குள்ளும், மயிர்களுக்குள்ளும், இரத்தத்திலும், இடுப்புகளிலும். எங்கும் எங்கும்.
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான அசமத்துவம் எண்ணமுடியாத அணுக்களைப்போல். ஆம்
எண்ணமுடியாத அணுக்களைப்போலவே!

எந்தக் கவலையுமின்றி, கரைச்சலுமின்றி காற்சட்டை அணிகிறது, தத்துவங்களை உருவாக்குகிறது, அவற்றைத் தனதாக்கியும்கொள்கிறது, தலைமைதாங்குகிறது, கோட்டைகளைக்கட்டுகிறது, கோடீஸ்வரர்களும் ஆகிவிடுகிறது., கதவுகளைச் செய்கிறது, சுவர்களையும் கட்டுகிறது, காடுகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது போதாதென்று காசுவாங்கியும் கலியாணம் செய்கிறது.

பணத்தையும் வளங்கி, பத்தினியாய்ப்போனாள் சகி
வாழ்நாள் முழுவதுமே வேலைக்காரியானாள்
படித்துமுடிக்கமுடியாமல் எம்தோழி
பாதியில் நிறுதப்படுகிறாள்
பலர் முன்னிலையில் எம்சகோதரி
பலாத்காரப்படுத்தப்படுகிறாள்
விடுதலைக்கு வீரமுடன் சென்ற எம் தோழி
விறகுபொறுக்க அனுப்பப்பட்டாள்
விலைமாதாய் எம் சகோதரி
தன்னையே விற்க நிர்ப்பந்திக்கப்படுகிறாள்
அம்மாக்கள் அழுதார்கள்
அடிவாங்கி அடிவாங்கி
அங்கேயே இருந்தார்கள் அவர்களுடன்
நாங்களும்தான்!

எங்கள் மீதான அடக்குமுறைகள் கொல்லமுடியாத வைரசுக்களைப்போல்!
ஆம்! கொல்லமுடியாத வைரசுக்களைப்போல்!
ஏன்..ஏன்...ஏன்...???????
மார்படைக்க அழுது, மண்டைகளை போட்டுடைத்து, மன்னிக்கமுடியாதது என்றுணர்ந்து, மறுக்கப்படவேண்டியதென்று விளங்கி
எழுந்தோம்
எழுகிறோம்
இன்னும் இன்னும்
எழுவோம்.
இல்லை.
இல்லை.
ஆம் இவைகளை இல்லை என்றாக்குவது எப்படி?
நீட்டிநிமிர்ந்து கொட்டாவிவிடுகிறது. செமிபடமுடியாமல் துள்ளிக் குதிக்கிறது. நித்திரைசெய்கிறது. நரியாய் இருந்து பந்தைத்தட்டிவிடுகிறது. யானையாய் மிதிக்கப்பார்க்கிறது. புலியாய்ச் சீறிப்பாய்கிறது. இங்கும் எங்கும் எதிலும்.
ஆம்! எமது போராட்டம் மிகவும் சிரமமானது.
பெரும் வெள்ளப்பெருக்கையும், சூறாவளியையும், குண்டுத்தாக்குதல்களையும் முகங்கொண்டு உயிர்வாழ்கிறோம். இன்னமும் இன்னமும் உரிமைகளுக்காக!
செருப்பாய் வந்து காலைக்கடிக்கிறது, மழையாய், பனிக்கட்டி மழையாய் பெய்து உடலை நோகவைக்கிறது. காற்றாய் வந்து அள்ளிச் செல்லப்பார்க்கிறது. பனியாய் விறைத்துவிடமுயல்கிறது.
தாயகத்திலும் மலையகத்திலும்; புகலிடத்திலும் அகதிமுகாம்களிலும் வெள்ளைத்தலைகளுக்குள்ளும் பரீஸ் தெருக்களிலும் இங்கும் எங்கும் எதிலும்
இல்லை
இல்லை
இல்லை என்றாக்க எழுந்தோம். எழுகிறோம். எழுவோம்.
எமது போராட்டம் மிகவும் உறுதியானது! அதனாற்தானோ பல இடையூறுகளைக் கொண்டது?
எப்படி? எப்படி? இரண்டினையும் சமப்படுத்துவது?
சம்மதத்திலோ சங்கமத்திலோ சங்கம் அமைப்பதிலோ சரிபாதி
இனிவரும் சரித்திரத்தில் சரிபாதி!
ஒற்றைப் பாதையில் ஓடி, கடலில் அலைகளோடுமோதி பஞ்சுப் பனியாய்ப்பெய்து பாறைகளை உருக்கமுயன்று, அகப்பைகளால் அடித்துப்பார்த்து, எழுத்துக்களால் எடுத்துக்காட்டி......
எமது போராட்டம் கடுமையானது அதனால்த்தானோ நீண்டது?
எமது போராட்டம் நிஜமானது. நிம்மதிக்கானது. நிஞாயமானது.
வைரசுக்களைப்போல் கொல்லமுடியாத வைரசுக்களைப்போல், அணுக்களைப்போல் எண்ணமுடியாத அணுக்களைப்போல், சோகங்களைப்போல் வார்த்தைகளால் சொல்லமுடியாத சோகங்களைப்போல்......

'தோழர் நான் அவா நல்லாச் சோசலாப் பழகிறவ எண்டதுக்காண்டித்தான் அப்பிடிக் கேட்டனான். படுக்கிறதென்றால் இந்தப் பொம்பிளயளும் மற்றச் சாதாரணபொம்பிளையள்மாதிரிப் பயப்பிடீனம்? என்னதான் பெண்விடுதலை கிடுதலை எண்டு கதைச்சாலும் கற்பு கிற்பெண்டு ஒரு வட்டத்துக்குள்ளதான் இருக்கினம்.\"

'நாங்கள் உங்களுக்கு எப்பவும் விடுதலை தரத்தான் தயாரா இருக்கிறம். நீங்களும் அதுக்கேற்றமாதிரி உங்கள் மாத்தவேணும். என்ர மனிசீற்ர எப்பவும் நான் ஒரு பெமினிஸ்ராத்தான் நடந்துகொள்ளிறன்\"
'நீர் ஒரு பெமினிஸ்ற் என்று நினைச்சன். இவ்வளவு பிற்போக்குவாதியா இருப்பீரென்று நினைக்கவேயில்ல. சும்மா தொட்டுத் தொட்டுக் கதைக்கவே பிடிக்காதமாதிரி விலகிப்போறீர். பிறகென்னெண்டு விடுதலையடையப்போறீர்?\"

<b>ஆயிரம் பெண்களின் அணிவகுப்பு</b>

ஆண்டாண்டு காலமாக அடைபட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்த நாங்கள் எமது உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் மிகவும் கடினமான ஒரு போராட்டத்தினை இதுவரைகாலமாகவும் நடாத்திவருகிறோம். எமது போராட்டத்தின் தேவை எம்மால் உணரப்பட்டு பல ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் எமது விடுதலையை நாம் அடைந்து விடவில்லை. இதற்கு எம் தரப்பிலும் காரணங்கள் இருந்தபோதிலும் ஆணாதிக்கம் என்பது தனது அடக்கமுறையிலிருந்து து}க்கியெறியப்படாமல் இருப்பதற்கு (தன் சுயநலத்தை, சுரண்டலை) தனக்கு முடிந்தவரையில் தக்கவைப்பதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடித்துவருவதுவும் ஒரு முக்கிய காரணமாகும். இதற்கு எமது சுரண்டல் சமூக அமைப்புமுறையும் பலத்த ஆதரவளித்தவருகிறது.

<b>பெண்ணிலைவாதம் என்பது மேற்கத்தேய கோட்பாடு?</b>

பெண்விடுதலை என்ற பெயரில் எமது கலாச்சாரத்தை, பண்பாட்டை குலைக்கின்றனர், இது மேற்கத்N;தயக் கோட்பாடு எமக்குச் சரிவராதது என்று எமது விடுதலைக்கு எதிராக எமது சமுதாய அடைக்குமுறை ஆனாதிக்கவாதிகளினால் பல ஆண்டுகாலமாகவே எம்மீது பழி சுமத்தப்பட்டுவருகிறது. குடும்பத்தைக் குலைப்பவர்கள், ஆட்டக்காரிகள், அடங்காப்பிடாரிகள், வாய்காரிகள், என்று நாம் எமது உரிமைகளுக்காகவும் ஆண்பெண் சமத்துவத்திற்காகவும் போராடத்தொடங்கிய காலங்களிலிருந்தே இப்படிப்பட்ட தப்பவிப்பிராயங்களையும் அவது}றுகளையும் தாங்கிப் போராடிவருகிறோம். இந்தவேளையில் எமது போராட்டத்தைத் திசைதிருப்ப இன்னுமொரு கூட்டம் புறப்பட்டிருக்கிறது என்பதனையும் மிகவும் வேதனையுடன் விளங்கிக்கொண்டுள்ளோம். இங்குதான் நாம் மிகவும் எச்சரிக்கையாகவிருக்கவேண்டும்.

<b>பின்நவீனத்துவம் என்பது இன்றைய வழிபாடு!</b>

பெண்விடுதலை என்றால் அது பாலியல் விடுதலைமட்டும்தான் என்று தமக்குச் சுயநலமான கருத்தியலொன்றை உருவாக்கி வைத்துக்கொண்டு புகலிடத்து முற்போக்கு, புரட்சிகர எழுத்தாளர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் சில இலக்கியக்காரர்களின் போக்கு ஏற்கனவே பலசிக்கல்கள், எதிர்ப்புக்கள் நிறைந்த எமது போராட்டத்தினை திசைதிருப்பிட முயல்கிற போக்காகும்.(அப்போதுதான் இவர்கள் மேலும் பல நு}ற்றாண்டுகள் என்மைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்து அனுபவிக்கமுடியும்) விரதம் அனுஸ்டிப்பதாக வெளியில் கூறிக்கொண்டு வயிறுமுட்ட உண்பதுபோல் எமது விடுதலையைத் தாம் வென்றெடுத்துத் தந்துவிடப்போவதாக (பாலியலில்கூட எமது முடிவுகளை எதிர்பார்க்காதவர்கள், நாம் யாருடன் எப்போது எவ்வாறு ஒன்றிணையவேண்டும் என்பதைனையும் தாங்களே தீர்மானிக்கவிரும்புபவர்கள்) கதைகளெழுதி, கவிதைகள் படைத்து எமது போராட்டத்தினைக் கொச்சைப்படுத்துகிறார்கள். இதற்குப் பின்நவீனத்துவம் என்றும் பெயரிட்டுள்ளனர். இப்படிப்பட்ட போக்குகளை நாம் சமூகப் பொறுப்பற்ற செயலாகவும், ஆணாதிக்கத்தின் இன்னுமொரு வெளிப்பாடாகவே கருதுகிறோம்.

எமது விடுதலைக்கு எதிரான எந்தவொரு தத்துவத்தினையும் எதிர்ப்போம்!
எமது போராட்டத்திற்குத் தடையாகவிருக்கும் அனைத்தையும் து}க்கியெறிவோம்!
எமது சுதந்திரத்தைக் கொச்சைப்படுத்தும் எழுத்துக்களை நிராகரிப்போம்!
எமது போராட்டத்தினை பிழையாகக் காட்டமுனையும் பித்தலாட்டத்தனங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவோம்!

இன்று நாங்கள் ஆயிரம் பெண்களாக இந்த வலை அணிவகுப்பை ஆரம்பித்துவைக்கிறோம். எமது விடுதலையில் உண்மையான அக்கறைகொண்ட எவரும் இதில் கலந்துகொள்ளலாம்.
உங்களது கருத்துக்களை, எதிர்ப்புக்களை, நிராகரிப்புகளை சிறு துண்டுப்பிரசுரங்களாகவோ அல்லது வேறு வடிவங்களாகவோ தயாரித்து வழங்குங்கள்.

நன்றி - நிரூபா மற்றும் சக்தி இதழ்</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர்.

எந்தப் பெண்ணையும் சீராகச் சிந்திக்க விடுவதில், நம் ஆண்களுக்கென்னவோ, அவ்வளவாக பிடித்தமே இல்லை. பெண்ணை அடக்கி ஆளவே பழகிய விதம், ஆண்களை ஆட்டிப் படைக்கிறது. பெண்கள் படும் அவதியும், வேதனையும் அவர்களை விவகாரத்து தீக்குளிப்பு, தற்கொலை, கருக்கலைப்பு, வேறு மனைநாடுதல் என்ற அசாதராண செயல்கள் குறித்து யோசிக்கத் தூண்டுகிறது. செயற்பட வைக்கிறது. கொடுமைகளையும், ஆணாதிக்கத்தையும் அனுபவிக்கும் பெண்களில் இனப்பாகுபாடு, பணப்பாகுபாடு கிடையவே கிடையாது. இந்த வேதனை, அடக்குமுறையைப் பொறுத்தவரையில், இது பெண்களுக்கே உரிய பொதுவான சொத்து.
'டில்லியில் தொழிலதிபாராக இருக்கும் தன்னுடைய கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள் விவாகரத்துக் கோரி வழக்குத் தொடுக்கிறார். மும்பையில் முன்னணி நட்சத்திர நடிகை ஒருவர், தான் கர்ப்பிணியாக இருக்கும்போது கணவர் எட்டி உதைத்தர் என்று கூறி விவகாரத்து கோருகிறார். கொல்கத்தாவில் தன்னுடன் சேர்ந்து 'தண்ணி' அடிக்கவில்லை என்று கணவர் அடிப்பதாக மனைவி விவகாரத்து கோருகிறார். சென்னையில் குழந்தை இல்லையென்ற ஒரு காரணத்திற்காக அதிகார வர்க்கத்தில் இருக்கும் கணவனிடம் நீண்ட நாட்கள் மனதளவிலும், உடலளவிலும் வேதனைப்பட்ட மனைவி விவகாரத்து கோருகிறார்.

இப்படி நாட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் ஜாதி, மன,பேதம் இல்லாமல் பண்பாட்டையும், அன்பையும் கடந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வாழ்கையில் இவர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது.

சர்வதேச தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் நெட்வேர்க் உடன் இணைந்து சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையம் (ஜ.சி.ஆர்,டபிள்யூ) 2000 ஆவது ஆண்டு ஆய்வு மேற்கொண்டது. இதற்கு நாட்டின் ஏழு நகரங்களில் பத்தாயிரம் பெண்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. நாட்டில் 45 சதவீதப் பெண்கள் கணவன்மார்களால் அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, அறையப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறன்றனர். 75 சதவீதப் பெண்கள் கணவர்மார்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் என்பது தெரிய வந்தது. கடந்த 2002 இல் நாட்டின் நான்கு நகரங்களில் ஜ.சி.ஆர். டபிள்யூ ஆய்வு மேற்கொண்டது. இதில் 'ஆண்கள் இயற்கையாகவே மூர்க்கத்தனமாக இருப்பதில்லை' என்று தெரிய வந்துள்ளது.

'ஒருவர் ஆணாக இருந்தால் மூர்க்கத்தனமாக மாற வேண்டும் என்பது இல்லை. ஆண்மை என்பது ஒரு ஆண் எந்தளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறாரோ, அதனடிப்படையில்தான் மனைவிகளிடம் நடந்து கொள்வார்கள்' என்கிறார் ஜ.சி.ஆர்.டபிள்யூ உறுப்பினர் ஒருவர்.

'ஆண்களை எப்போதுமே 'சுபீரியர் செக்ஸ்' என்று போதித்து வந்துவிட்டோம் இதுதான் மனைவிகளைக் கட்டுப்படுத்த அவர்களைத் தூண்டுகிறது. எப்போது மனைவியை கணவன் அடிக்கலாம்? என்ற வழிகாட்டுதல்களுடன் சிறு குறிப்புப் புத்தகங்கள் டில்லி போன்ற நகரங்களில் கிடைக்கின்றன. இப்புத்தகத்தின் விற்பனை எந்தளவிற்கு இப்புத்தகம் படிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. மனைவி ஒழுக்கம் இல்லாதவராக இருந்தால் அடிக்கலாம் என்று இப்புத்தகம் வழிகாட்டுகிறது.' என்கிறார் அனைத்துப் பெண்கள் அமைப்பின் இயங்குநர் ஜோத்சனா சாட்டர்ஜி.

'கணவனுக்கு மனைவி மரியாதை கொடுக்காமல் இருபதுதான் அந்த ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது' என்பது ஜ.ஆர்.சி.டபிள்யூ. ஆய்வில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான், தமிழ்நாடு, பஞ்சாப், டில்லி போன்ற நகரங்களில் ஆண்களிடம் எடுக்ப்பட்ட மதிப்பீட்டில், தங்களது பேச்சை மனைவி கேட்காவிட்டால் ஆண்மைத்தன்மைக்கே இது அச்சுறுத்தலாக இருப்பதாக 77 சதவீத கணவர்கள் கூறியுள்ளனர். தங்களது ஆண்மையைக் காப்பாற்றிக் கொள்ள மனைவியிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கின்றனர்.

'அதிகார கலாச்சாரத்தில் ஊறிப் போயிருக்கும் ஆணின் தேவைகளில், ஏதாவது ஒன்று ப10ர்த்தியாகாமல் போனால், அது அந்த ஆணை மூர்க்கத்தனமாக்குகிறது. பெண்களை தங்களுக்கு இணையானவர்களாகக் கருதுவதில்லை. எந்த சந்தர்ப்பத்தில் ஒரு ஆண் மூர்க்கத்தனமாக மாறுகிறார் என்பதை நாம் கண்டறிய வேண்டும்' என்கிறார் டில்லி கல்லூரி பேராசிரியை ஒருவர். ஆண்மைக்குரியவர் என்பதுடன் வயது, ஜாதி, சழூக அந்தஸ்து, முக்கியமாக கல்வி ஆகியவையும் சேர்ந்து கொள்கின்றன.

பாலியல் ரீதியாகவும் கணவனால் மனைவி கொடுமைப்படுத்தப்படுகிறார். மனைவியிடம் இருந்து எஜமான விசுவாசத்தைப் பெற மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக 79 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரத்திற்கு அடிபணிய மறுப்பது, கணவருக்கு கீழ்படிய மறுப்பது, உரிமையை விட்டுக் கொடுக்காதது மற்றும் பாலியல் தேவையை திருப்தி செய்து கொள்ள முயற்சிப்பது போனறவையும் ஒரு ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது.

மூர்க்கத்தனம், சமூக, பொருளாதார அந்தஸ்து மற்றும் கல்வி ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. பாலியல் hPதியாக கொடுமைப்படுத்தும் ஆண்களில் படிக்காதவர்களை விட படித்தவர்களே முதலிடத்தில் உள்ளனர். பாலியல் கொடுமையில் ஒரு ஆண்டு கூட படிக்காத 32 சதவீத ஆண்களும், ஒன்று முதல் ஜந்தாம் வகுப்பு வரை படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். இது ஆறு முதல் பத்தாண்டுகள் படித்தவர்களில் 57 சதவீதமாக இருக்கிறது. இதே சதவீதம் மேல்நிலைப் படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களிடமும் காணப்படுகிறது.

சமூக, பொருளாதார, அந்தஸ்து படைத்தவர்களிடத்தில் அதிக வருமானம் பெறும் ஆண்கள், மனைவியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துகின்றனர். இவர்களிடம் 61 சதவீதம் காணப்படுகிறது. இது அந்தஸ்து குறைந்த ஆண் வர்க்கத்தில் 35 சதவீதமாக இருக்கிறது. உயர்ந்த படிப்பு, சமூக, பொருளாதார அந்தஸ்தில் உயர்ந்த பெரும்பாலான ஆண்கள் தான் மூர்க்கத்தனமாக மாறுகின்றனர். நன்கு படித்த, சமூக அந்தஸ்து உடைய ஆண்களிடம் மூர்க்கத்தனம் இருக்காது என்று வெளியுலகம் நம்பிக் கொண்டிருப்பது ஒரு மாயைதான்.

தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளிலிருந்து வெளியே வரபெண்கள்தான் முன்வரவேண்டும். திருமண வாழ்;க்கையில் இதெல்லாம் சகஜம். தவிர்க்க முடியாதது. 'கணவனே கண் கண்ட தெய்வம்' என்று பெரும்பாலான பெண்கள் நினைத்துக் கொள்வது பொறுத்துக் கொள்ளமுடியாது. இன்றும் 55 சதவீதப் பெண்கள் இந்த கொடுமைகள் எல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் இது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதைத் தவிர்க்க பாடசாலைகளில் இருந்தே ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் நடத்தப்படவேண்டும். இருவருக்கும் சமுதாயத்தில் சம அந்தஸ்து உள்ளது என்பதைப் புரிய வைக்க வேண்டும். அப்பொழுதான், ஒரு பட்ச சார்பான மூர்க்கத்தனத்தை ஒழிக்க முடியும்.

நன்றி தினக்குரல்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
[quote=kuruvikal]
[size=16]இந்த ஆய்வினால் கண்டதென்ன பெண்களுக்கு தங்கள் நிலையையே உணரக்கூட சிந்திக்க முடியவில்லை என்பதைத்தான்.....அதற்கு ஆண்கள் என்ன செய்ய முடியும்....??????! ஆண் "supreme sex" எண்டது என்னவோ மாற்ற முடியாத இயற்கையின் உண்மை.....! உண்மைக்கு அப்பால் சென்று எதைத் தேடினாலும் கோடி என்ன மனித இனம் அழியும் வரை பெண்கள் தங்கள் நிலையைப் சமூகத்தில் உணரமுடியாமலே இருக்கும்....! ஆணின் "Supreme sex" எனும் நிலையையும் அன்பால் புரிந்துணர்வின் பால் தகர்க்கலாம் சுயமாய்ச் சிந்தித்து முயன்று பாருங்கள்....முரண்டால் முட்டி மோதுவதுதான் வாழ்க்கை ஆகும்....!
(our view)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மறுப்பு அறிக்கை மற்றும் மேலே உள்ள கட்டுரை தொடர்பாக உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
[quote=BBC][quote=kuruvikal]
[size=16]இந்த ஆய்வினால் கண்டதென்ன பெண்களுக்கு தங்கள் நிலையையே உணரக்கூட சிந்திக்க முடியவில்லை என்பதைத்தான்.....அதற்கு ஆண்கள் என்ன செய்ய முடியும்....??????! ஆண் "supreme sex" எண்டது என்னவோ மாற்ற முடியாத இயற்கையின் உண்மை.....! உண்மைக்கு அப்பால் சென்று எதைத் தேடினாலும் கோடி என்ன மனித இனம் அழியும் வரை பெண்கள் தங்கள் நிலையைப் சமூகத்தில் உணரமுடியாமலே இருக்கும்....! ஆணின் "Supreme sex" எனும் நிலையையும் அன்பால் புரிந்துணர்வின் பால் தகர்க்கலாம் சுயமாய்ச் சிந்தித்து முயன்று பாருங்கள்....முரண்டால் முட்டி மோதுவதுதான் வாழ்க்கை ஆகும்....!
(our view)

supreme sex என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி இருந்தாலும் அது என்ன நிறைவேற்று ஜனாதிபதி பதவியா அடக்கி ஆள்வதற்கு?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)