Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்...
#61
எப்படிச் சொல்லுறிங்க ஈழவன்.....! வெள்ளைக்காரனும் காரியும் நிக்கிறதாலையா...???! உங்கை மேற்கிலும் நேற்றைய நாள் கழிந்ததுதான்...மூச்சே காணம்...சாதாரணமாக் கழிஞ்சுது...எல்லாரும் அம்மா தினத்தோடு (மதேர்ஸ் டே) கடும் 'பிசி'.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#62
ஏன் இங்கு கிழக்கில் கூடக் கொண்டாடவில்லை ஏனெனில் இவர்களுக்கெல்லாம் ஏற்கனவே விடுதலை கிடைத்துவிட்டது இப்ப எங்கள் பெண்களுக்கும் கிடைத்திருக்கும்
\" \"
Reply
#63
அப்ப இதுவா அவர்களின் விடுதலை...அப்ப சரி...அது கிடைச்ச மாதிரித்தான்.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
<span style='font-size:30pt;line-height:100%'>பெண்ணுரிமை</span>
-<span style='color:#001bff'> சபேசன் -


<b>சர்வதேச மகளிர் தினம் மார்ச் மாதம் 8ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அவுஸ்திரேலியாவைப் பொறுத்தமட்டில், முதல் முறையாக 1928ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதியன்று M.W.M. என்று அழைக்கப்பட்ட Womens Movement என்ற இயக்கத்தால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அப்பேரணியில் பெண்களுக்கும் ஆண்களைப் போல் சம ஊதியம், எட்டு மணி நேர வேலை, மற்றும் வேலைத்தள வசதிகள் என்ற கோரிக்கைகள் வற்புறுத்தப்பட்டன.

பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை என்ற கருத்தாக்கங்கள் குறித்துச் சற்று ஆழமாகப் பார்ப்பதற்கு இச்சந்தர்ப்பத்தை நாமும் பயன்படுத்த விரும்புகின்றோம். ஆண்களுக்கான சட்ட பூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்கின்ற நோக்கோடு எழுந்த முதலாளியப" பெண்ணியம், குடும்பம்-உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத்தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியம், தந்தைவழிச் சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உணர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம், இவை அனைத்தும் பெண்| என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.

இதன்படி, உடற் கூற்றை அடித்தளமாக, அதாவது Biological Foundationஐ அடித்தளமாகக் கொண்டு, பெண்ணுறுப்புகளைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளை ஒன்றெனக்கொண்டு, அந்த உயிரிகளைப் ~பெண்| எனக்கண்டன. ஒட்டுமொத்தமான பெண்களின் விடுதலையை இந்தப் பெண்ணிய இயக்கங்கள் வலியுறுத்தின. பெண் என்றால் யார்? பெண் என்ற சொல்லின் பொருள் என்ன? எந்த ஒரு சொல்லுக்கும், பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைக் காட்டுவதல்ல. சொல் என்பது ஒரு தனித்துவமான பொருளுடன் தீர்மானமான உறவைக் கொண்டுள்ளது என்று சொல்வதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப் பின்னலாக அது விரிவு பெறுகின்றது என்பதே சரியாகும். இதன் அடிப்படையிற்தான் நாம் பெண் என்ற செல்லின் கருத்தை அணுகவேண்டும்.

பெண்ணியம் - Feminism - என்பது பெண்ணை ஒரு ஆய்வுப்பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். FEMINISM என்கின்ற ஆங்கிலச்சொல் கி.பி. 19ஆம் நூற்றாண்டில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. 18ஆம் நூற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது உண்மைதானென்றாலும் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது 19ஆம் நு}ற்றாண்டிற்தான். இந்தக் கோட்பாட்டின் தோற்றம்பற்றியும் இரண்டு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

முதலாளித்துவத்திற்கு எதிராக எழுந்த மார்க்சிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்களை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் வேர் என்றும், இதிலிருந்துதான் பின்பு பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்று மார்க்சியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.

ஆனால், Pure Feminists என்று சொல்லக்கூடிய தூய பெண்ணியவாதிகள் இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியமென்பது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மேலைநாடுகளில், பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வேண்டிப் பெண்கள் எழுப்பிய குரலில் தோற்றம் பெற்றது என்று வாதிடுகின்றார்கள். தோற்றம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பெண்கள் தங்கள்மீது ஏவிவிடப்பட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, தீர்க்கமாக எழுப்பிய குரலே பெண்ணியத்திற்கு எழுச்சியூட்டியது என்ற கருத்தில் வேறுபாடில்லை.

மேற்கத்தைய நாடுகள் போலவே, கிழக்கத்தைய நாடுகளிலும் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் வேரூன்றி நிற்கின்றன. இச் சமுதாயக் கொடுமைகள் குறித்து அறிவதற்குத் தமிழ் இலக்கியங்கள் உதவுகின்றன. உதாரணத்துக்குப் புறநானு}ற்றில் ஒரு பாடலைப் பார்ப்போம்.
[b]பூதபாண்டியனின் மனைவியான பெருங்கோப்பெண்டு பாடிய இந்தப் பாடலை, இதுவரைகாலமும் வந்த ஆய்வுகள் பலவும், கணவன்மீது மனைவி கொண்ட அன்பினைக் காட்டுவதாகவே சொல்லி வந்துள்ளன. ஆனால் இந்தப் பாடலை ஒரு பெண்ணியப் பார்வையில் பார்க்கும்போதுதான் அக்காலத்துச் சமுதாயக் கொடுமைகள் தெளிவாகப் புலனாகின்றன</b>.

[size=18]அனல்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ்போனல்லிளர் நறுநெய் தீண்டாது,
அடையிடைக் கிடந்த கழிபிழி பிண்டம்
வெள்ளாட் சாந்தோடு புளிப்பெய்து
அட்டவேளை வெந்தை வல்சியாக,
நீ பரற்பெய் பள்ளிப்பாய் இன்று வதியும்"
(புறநானு}று 246)</span>

இந்தப் பாடலின் கருத்து என்ன?
<b>வெள்ளரி விதைபோன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளியைக் கூட்டிச் சமைத்த வேளைஇலை ஆகியவற்றை உண்டும், பாயில்லாமல் பருக்கைக் கற்கள் மேல் படுத்தும், கைம்மை நோற்கும் பெண்ணல்ல நான்! எனக்கு ஈமத்தீயில் இறப்பதே மேல் - என்பது இப்பாடலின் கருத்தாகும். கணவனை இறந்த பின்பு பெண்கள் வாழுகின்ற விதவை வாழ்க்கை எவ்வளவு கடுமையானது, கொடுமை யானது என்பதை இப்பாடலின் உட்கருத்துச் சொல்லுகின்றது அல்லவா! தவிரவும், இப்பாடலில் கணவன்-மனைவி அன்புநிலை குறித்து ஒரு வரியிலும் தென்படவில்லை.</b>
இப்படியாக, கைம்மை பற்றிய சங்கப் பாடல்களைத் தொகுத்துக் காணும் போது, <b>அக்காலத்தில் கைம்மை என்ற பெயரில் நடந்த கொடுமைகளையும், அவற்றைச் சகியாது பெண்கள் சாவுக்குத் துணிந்த அவலத்தையும் இனம்காண முடிகின்றது.</b> அதேநேரம், இவர்கள் இப்படி இறப்பதற்கும் பழைய விதிமுறைகள் தூண்டிவிடுகின்றன.

வடநாட்டு காசிகாண்டம் என்கின்ற நூல் கீழ்வருமாறு கூறுகின்றது:-

கணவனோடு சதி இறங்கி உயிர் நீக்கும் பெண்,
தனது உடம்பிலுள்ள உரோமங்கள் ஒவ்வொன்றுக்கும்
ஆயிரம்கோடிக் காலம் இன்பம் அடையும் பேற்றைப் பெறுவாள்"


இவ்வாறு, பல மூடநம்பிக்கைகள் சமுதாயத்தில் பரப்பப்பட்டன.

இதைப்போலவே, சிலப்பதிகாரத்தைப் பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்யும்போது சமுதாயக் கொடுமைகள் புலனாகின்றன. தனது கணவன் கோவலன் மாதவியிடம் சென்றபோது அவனுடைய நடத்தை தவறு என்று கண்ணகி சுட்டிக்காட்டவில்லை. அவன் தனது செல்வம் யாவும் இழந்தபோதும் அவனைத் தடுக்கவில்லை. அவன் மாதவியை வெறுத்துத் திரும்பியபோது கண்ணகி தனது சிலம்பைக் கோவலனிடம் கொடுத்த தானது, அவனது கெட்ட நடத்தையை நியாயப்படுத்துவதுபோல் உள்ளது. அதாவது, கற்புக்கரசி என்பவள் கணவன் எந்தத் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டக்கூடாது. பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது கண்ணகி தன்னை அடிமையாக ஆட்படுத்திக்கொண்டாள் என்றும், ஆணினுடைய மேலாண்மைக்குத் துணை நின்றாள் என்றும் குற்றம் சாட்டத் தூண்டுகின்றது.

இதேபோல், கண்ணகி தனது கணவன் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டான் என்பதை அறிந்தவுடன்
வீறிட்டு எழுந்து, அரசனிடம் சென்று வாதிட்டு, நீதியை நிலைநாட்டுவதைப் பார்க்கும்போது இங்கே
இவளைப் பெண் விழிப்புணர்ச்சிக்கு வித்திடுபவளாகக் காணவும் முடிகின்றது. இரு வேறுபட்ட
நிலைகளை இங்கே காணுகின்றோம்.


<b>ஒரு பெண்ணிற்குப் பிறந்த தினத்திலிருந்து அவள் இறக்கும்வரை பல விதமான விலங்குகளை அவளுடைய சமுதாயம் மாட்டிவிடுகின்றது. </b>தமிழ் இலக்கியத்தில்,

ஒரு பெண்ணுக்கு, கற்பு நிலையைப் பேணும் நிலை மூன்றாகச் சொல்லப்படுகின்றது:-

1) கன்னிப்பருவக் காவல்: அதாவது திருமணத்திற்கு முந்திய கன்னிப் பருவத்தில் கன்னிமையைக் காத்தல்.

2) கடியிற் காவல்: அதாவது, திருமணமான பின்பு தன் கணவனோடு இல்லறம் நடாத்தும்போது. பதிவிரதா தர்மத்தை|ப் பேணுதல். இது மனையறம் என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.

3) கைம்மைக் காவல்: தனது கணவன் இறந்தபிறகு, அவனது நினைவாக நோன்பு நோற்று, தன் மனத்தையும், உடலையும் காத்தல். இது மாதவம்| என்று அழைக்கப்படுகின்றது. போற்றப்படுகின்றது.

இப்படியாக, ~கற்பு| என்ற சொல்லை வைத்து, பெண்ணை இன்னமும் அடிமையாக்குகிறது எமது இனம். கற்பின் பெயரால் கடும் மூட நம்பிக்கைளை, மதம்சார்ந்த சடங்குநெறிகளை, பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை புராண நு}ல்களும் பரப்பின. இங்கே, புராண நூல்கள் குறித்தும், புராணகாலங்கள் குறித்தும் சில கருத்துக்கள் சொல்ல வேண்டியது அவசியமாகின்றது. புராணகாலம் என்றால் மிகப் பழைய காலம் என்ற பொருளே வழக்கத்திலிருந்து வருகின்றது. ஆனால், உண்மையில் இப்புராணகால இலக்கியங்களும் நூல்களும் தோன்றிய காலம் கிறீஸ்துவுக்குப் பின் 12ஆம் நூற்றாண்டிற்கும் பிற்பட்ட காலமாகும். அவ்வேளையில் தமிழில் அதிகமான நு}ல்கள் சமயம் சார்ந்து எழுதப்பட்டன. வட மொழியிலுள்ள ஸ்கந்தபுராணம், பாகவதபுராணம், விநாய புராணம் போன்றவையும் பின்னாளில் மொழிபெயர்க்கப்பட்டன. கி.பி. 15ஆம் நூற்றாண்டிற்கும் பின்னர் தலபுராணங்களும் குறிப்பிடத்தக்க அளவு தோன்றின. இப்புராணங்களில் கற்பு| பற்றியும், கற்புக்கரசிகள்| பற்றியும் செய்திகள் அதிகம் உண்டு. கற்பு பற்றிய அச்சுறுத்தல்களும் உண்டு. அவைகுறித்துச் சிலவற்றைச் சொல்லலாம் என்று நம்புகின்றோம்.

ஸ்கந்தபுராணம், கற்பு என்பது மகளிர் தம் கணவரைக் கடவுளாகக் கருதி வழிபடுதல் என்று
சொல்கின்றது. திருக்குற்றாலப்புராணம் பெண்கள் கற்புக்கரசிகளாக விளங்குவதற்கு 12
செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றது:-

<b>1. சிறுகாலை எழுதல்.
2. உடன் சமையற்கட்டிற் புகுதல்.
3. நன்றாகக் கூட்டிச் சமைத்தல்.
4. சுவை குன்றாது அதனைப் பரிமாறுதல்.
5. வீட்டைத் திருத்துதல்.
6. வருந்தும் காலத்திலும் விருந்து உபசரித்தல்.
7. குழந்தைகளைப் பெறுதல்.
8. பெறும்போது இன்புறுதல்.
9. அச்சம், மடம், நாணம் உடையவளாக இருத்தல்.
10. கணவன் உறங்கியபின் உறங்குதல்.
11. அவன் எழுவதற்குமுன் எழுதல்.
12. காலை எழும்போது அவனைத் தொழுது எழுதல்.</b>

கற்பு என்பதற்குப் பலவிதமான பொருள்கள் சொல்லப்படுகின்றன. கன்னிமையைக் காத்தல், பதிவிரதா தர்மத்தைப் பேணுதல் என்ற கருத்தாக்கங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. சங்க காலத்தில் கற்பு என்பது கணவனுக்கு உண்மையாக நடப்பதாகும். பின்னர் வந்த புராணகாலத்தில் கணவனின் அடிமை மனைவி என்ற கருத்தாக்கம், கற்பு என்பதன் பெயரால் உருப்பெற்றது. கற்பு என்ற கருத்தாக்கம், பெண்ணை அடக்கி, அடிமைப்படுத்தி, உடமைப் பொருளாக்கி, இருட்டுலகில் தள்ளிவிட்டது என்று நவீன பெண்ணியவாதிகள் கடுமையாகச் சாடி வருகின்றார்கள்.

<b>இப்போது, ஆண்களிடமும் ~கற்பு| பற்றிய சிந்தனைகளில் ஓரளவு மாற்றத் தைக் காணமுடிகின்றது. பல ஆண்கள் விசாலமான பார்வையை உடையவர்களாக இருந்தாலும், கற்பு என்ற கருத்தாக்கத்தை அடி மனதில் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்ருக்கின்றார்கள். முன்பு பெண்ணை மூடிமறைத்து வைத்தவர்கள், இன்றைய காலகட்டத்தில் பொருள்தேவை கருதி வேலைக்கு அனுப்பிவிட்டு, பின்னர் அவர்கள்மீது வீண்பழி போட்டுக் கோபதாபங்களைக் காட்டுபவர்களும் உள்ளார்கள்</b>. அதுகுறித்து ஆங்கிலம் கலந்த புதுக்கவிதையொன்று அழகாகச் சொல்லுகின்றது.

<b>ஸ்கூட்டர் வாங்கவேண்டும் என்பதற்காகவும்
பிரிஜ் வாங்கவேண்டும் என்பதற்காகவும்
அலுவலகம் செல்ல நாம் அனுமதிக்கப் படும்போது,
எங்களின் கற்பின் எல்லை விரிவாக்கப்படுகின்றது!||</b>

இந்தப் புதுக்கவிதை ~கற்பு| என்ற சொல்லையே கேலி செய்யவில்லையா, என்ன?

ஆண்-பெண் இருபாலாரும் சரிசமமான சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்ற நிலைமை ஏற்படவேண்டும் என்றால் ~கற்பு| என்பதன் அடிப்படை இலட்சியமும், கொள்கையும் மாற்றப்பட்டு, ஆண்-பெண் இருவருக்கும் ஒருப்போன்ற நீதி ஏற்படவேண்டும் என்ற பெரியாரின் கருத்து, பெண்ணியத்திற்கு ஏற்றதொன்றாகவே காணப்படுகின்றது.

இன்று உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழீழத்தில் பெண் விடுதலை என்பது பரிபூரண வளர்ச்சியை நோக்கிச் செல்வதை நாம் பெருமையுடன் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு அடித்தளமாக அமைந்தது, தமிழீழப் போராட்டம் என்பது முக்கியமான காரணமாகும். இன்று தமிழீழப் பெண்ணானவள் தன்மீதான அடிமைத்தனத்திற்கு எதிராக, தனது பெண்ணினத்தின் மீதான அடிமைத்தனத்திற்கு எதிராக, தனது இனத்தின்மீதான அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடுகின்றாள். இவளது விடுதலைப் போராட்டம், விரிந்து பரந்ததாக இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம்.

பெண் விடுதலை குறித்து, பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள் கூறியது ஈண்டு கவனிக்கத் தக்க தொன்றாகும். உலகின் உயரிய சிந்தனாவாதிகளுக்கு இணையாக இக்கருத்து உள்ளதாகவே நாமும் எண்ணுகின்றோம். எமது தேசியத் தலைவர் சிந்தனையாளராக மட்டுமிராது, செயல்வீரனாகவும் திகழ்வது, அவரது இச்சிந்தனைக்கு மேலும் அர்த்தமூட்டுவதாகவே அமைகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு, உலக மகளிர் தினத்தை ஒட்டி தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையிலிருந்து ஒரு கருத்தை இங்கே தருவதில் நாம் மகிழ்ச்சிகொள்கின்றோம். பெண்ணினத்தின் சம உரிமையை வலியுறுத்துகின்ற அதேவேளை, அதற்குரிய கௌரவத்தையும் தலைவர் குறிப்பிடுகின்றார். -

<b>பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது!
பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக,
ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக,
இந்த மனிதத்தை இனம்கண்டு கௌரவிக்குமாறு
பெண்ணினம், ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது.
ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம்
இந்த அன்புக்கரத்தைப் பற்றிக்கொள்ளும் போதுதான்,
ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்</b>."

இந்தக் கட்டுரைக்கு -
கலாச்சாரத்தின் வன்முறை:
பெண்ணியம் - அணுகுமுறைகள்:
கற்பு - கலாச்சாரம்:
புறநானூறு
போன்ற நூல்களும், எரிமலை சஞ்சிகையும் பயன்படுத்தப்பட்டன.
பெண்ணியம்-அணுகுமுறைகள் நூலிலிருந்து பல சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டன.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எமது நன்றிகள்
![/color]

- சபேசன் -
நன்றி - தமிழ்நாதம்
Nadpudan
Chandravathanaa
Reply
#65
நன்றி நன்றி
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#66
தமிழ் நெட்டில் வந்த யாழ்ப்பாண மகிளிர் தின செய்தியை போட்டபின் அதை கொச்சை படுத்துறமாதிரி சிலபேர் எழுதிய கருத்துக்களை பார்த்து உண்மையிலேயே மனவருத்தமடைந்தேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#67
BBC Wrote:தமிழ் நெட்டில் வந்த யாழ்ப்பாண மகிளிர் தின செய்தியை போட்டபின் அதை கொச்சை படுத்துறமாதிரி சிலபேர் எழுதிய கருத்துக்களை பார்த்து உண்மையிலேயே மனவருத்தமடைந்தேன்.

இதுக்கெல்லாம் மனவருத்தபடுறதே. வீதியிலை பேகேக்கை சில நாய்கள் குரைக்கத்தான் செய்யும். அமைதியா போய் பாருங்கோ குரைச்சு குரைச்சு களைச்சுப்போம்கள்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அது மாதிரி இவற்றையும் கண்டும் காணாமல் விட்டிட வேணும். :wink:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#68
உண்மைதான் பிபிசி. நானும் மிகவும் வேதனைப்பட்டேன். திருப்பி பதில் எழுதக்கூட விரும்பவில்லை.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#69
நான் கூறியது பெண்ணிய வாதிகள் யாரையாவது புண்படுத்துவதாக நினைத்தால் மன்னிக்கவும்
\" \"
Reply
#70
அன்பின் நண்பர்களுக்கு
இதுவரை நடந்த விவாதத்தைப் பார்வையாளராக இருந்து அவதானித்தேன் எனது கருத்தைக் கூறுமுன்னர் மற்றவர்களின் மனநிலையை பார்ப்பதற்காக யாழ்ப்பாணப் பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்ற கூற்றை முன்வைத்தேன்
அதற்கு பின்வருபவர்களின் பதில்

kuruvikal Wrote:அப்ப இதுவா அவர்களின் விடுதலை...அப்ப சரி...அது கிடைச்ச மாதிரித்தான்.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

BBC Wrote:தமிழ் நெட்டில் வந்த யாழ்ப்பாண மகிளிர் தின செய்தியை போட்டபின் அதை கொச்சை படுத்துறமாதிரி சிலபேர் எழுதிய கருத்துக்களை பார்த்து உண்மையிலேயே மனவருத்தமடைந்தேன்.

இணையத்தில் தேடிப்பாருங்கள் சந்திரவதனா அக்கா,நளாயினி அக்கா தவிர்ந்த பலர் நிறைய எழுதியிருக்கிறார்கள் வெட்டி ஒட்டுங்கள்

nalayiny Wrote:
BBC Wrote:தமிழ் நெட்டில் வந்த யாழ்ப்பாண மகிளிர் தின செய்தியை போட்டபின் அதை கொச்சை படுத்துறமாதிரி சிலபேர் எழுதிய கருத்துக்களை பார்த்து உண்மையிலேயே மனவருத்தமடைந்தேன்.

இதுக்கெல்லாம் மனவருத்தபடுறதே. வீதியிலை பேகேக்கை சில நாய்கள் குரைக்கத்தான் செய்யும். அமைதியா போய் பாருங்கோ குரைச்சு குரைச்சு களைச்சுப்போம்கள்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அது மாதிரி இவற்றையும் கண்டும் காணாமல் விட்டிட வேணும். :wink:

நான் கடந்த வருடம் யாழ் மண்ணில் இருந்த போது நடந்த பெண்கள் தின கூட்டமொன்றில் கலந்து கொண்டிருந்தேன் அப்போது மேடையில் முழக்கமிட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணியவாதி?யைப் பார்த்து ஒருவர் இவ்வாறு சொன்னார்
\" \"
Reply
#71
அன்பின் நண்பர்களே

சந்திவதனா,நளாயினி,சாந்தி அக்காமார் போன்று பெண்ணியம்,பெண்விடுதலை முதலாளித்துவப் பெண்ணியம்,மார்க்ஸியப் பெண்ணியம் இதெல்லாவற்றிலும் எனக்கு அவ்வளவு புலமை இல்லை ஆயினும் அன்பான ஒரு தாய்க்கு மகன் என்ற முறையிலும் பாசமான சகோதரிகளையும் நண்பிகளையும் கொண்டவன் என்ற முறையில் எனது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என நினைக்கிறேன்.வெறுமனே நாண் சார்ந்திருக்கும் ஆண் வர்க்கத்தின் குரலாக பெண்களைக் குறைகூறுவதாக இல்லாமல் எமது சமுதாயக் கட்டமைப்பின் குறைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்

ஒரு காலத்தில் யாழ் மண்ணில் பெண்களுக்குக் கட்டுப்பாடு இருந்தது அதனை அடக்குமுறை என்று சொல்வது பொருந்தாது ஏனெனில் நீங்கள் சொல்வது மாதிரி ஆண்கள் போட்ட சட்டதிட்டங்கள் அல்ல அவை சமூகம் என்ற போர்வையில் பெற்றோரால் அதுவும் குறிப்பாக தாய்மாரால் பல சட்டதிட்டங்கள் போடப்பட்டிருந்தது உதாரணமாக பெண்ணைக் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் பாடசாலை அனுப்புதல் சமூகத்தின் மத்தியில் வருவதற்கான கட்டுப் பாடுகள் இவற்றை விதிப்பதில் தாயே முன்னின்றிருப்பாள்
இவையெல்லம் கட்டுப்பெட்டித்தனம் என்று உதறித் தள்ளப்பட்டு ஆண்களுக்குச் சமனாக படிப்பிலும் சரி பல்வேறு துறைகளிலும் சரி போராட்டத்திலும் சரி பெண்கள் மிளிர்ந்து வருகிறார்கள்

இன்று நீங்கள் கூறும் பெண்ணடிமைத்தனம் பற்றிய வரையறைகளைப் பார்த்தால் குடும்பம் என்ற ஒன்றுக்குள் மட்டுமே இன்னும் பெண்ணுக்கு சில உரிமைகள் கிடைக்கவேண்டியிருக்கின்றன

ஆனால் இதனைத் தீர்ப்பதற்கு வெறுமனே மேடைகளில் ஏறி நின்று வேண்டும் பெண்ணுக்கு விடுதலை, ஆண் சமூகமே பேண்ணுக்கு உரிமை கொடு என்றெல்லாம் தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்துவதாலேயோ. கொள்கைகள் கோட்பாடுகள் பற்றி பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் எழுத்தித் தள்ளுவதாலேயோ முடியாது இவையெல்லாம் வெறும் முகமூடிகளாக மட்டுமே இருக்குமன்றி முகங்களின்
தாற்பரியம் வேறு
இவற்றைத் தீர்ப்பதற்கு சமுதாயத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும் எமது கட்டமைப்பின் படி பெண்ணுக்கு பெண்தான் எதிரி ஒழிய ஆண் அல்ல பாலியல் ரீதியில் மட்டுமே ஆண்களால் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் மற்றும் படி குடும்பங்களில் நடக்கும் பிணக்குகள் சீதனப் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் அடிப்படைப் பிரச்சனை பெண்தான்

"ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்கிடச் செய்பவன் தந்தை மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் தாய்" இது ஆண் மட்டுமே உழைத்துவந்த காலத்து யாழ் குடும்பங்களின் கட்டமைப்பு பின்னர் காலப்போக்கில் வருமானம் செலவீனம் போன்ற காரணிகளால் பெண்களும் வேலைதேடி உழைக்கத் தொடங்கிய போதும் வீட்டு நிர்வாகம் பெண்ணின் கைகளில் தான் ஆண் பெயருக்குக் குடும்பத் தலைவன் சில இடங்களில் விதிவிலக்குகள் இருந்தாலும் இதுதான் பெரும்பாலான நடைமுறை

நாங்களும் உழைக்கிறோம் தானே நாங்கள் மட்டுமா வீட்டு வேலைகள் செய்யவேண்டும் என ஒரு காலத்தில் பெண்கள் குரலெழுப்பினாலும் பின்னர் புரிந்துணர்வுடன் பெரும்பாலான ஆண்கள் வீட்டு வேலைகளில் துணை புரிவதை நாம் இன்று கண்கூடாகக் காணமுடிகிறது
எனக்குக் கல்வி கற்பித்த பெரும் பாலான ஆசிரியைகள் வீட்டுக்கு நான் சென்றிருக்கிறேன் அங்கு பெரும்பாலும் கணவனும் உத்தியோகத்தரகவோ அல்லது ஏதாவது தொழில் புரிபவராகவோ இருப்பர் எப்படியிருப்பினும் வீட்டு வேலைகளில் அவர்களும் பங்கு பற்றுவதை பார்த்திருக்கிறேன் யாழ்ப்பாணத்தில் காதல் திருமணங்கள் பெருகி வருவதும் உயர்கல்வியும் இதற்கு காரணமாக இருக்கலாம்

னீங்கள் வாழும் மேற்குலகில் வேண்டுமானால் பல்வேறு கோட்பாடுகளால் உந்தப்பட்டு பெண்கள் பல்வேறு தேவைகள் பிரச்சனைகள் போன்றவற்றை உணர்ந்துகொண்டாலும் யாழ்ப்பாணப் பெண்களுக்கு அடிப்படை தேவை அல்லது அவர்கள் பிரச்சனை எல்லாமே எனது குடும்பம் என்பதுதான் கல்யாணமாகும் வரை அது தாய் தந்தை,சகோதரர் என்றிருக்கும் கல்யாணமான பின்னர் அது தனது கணவன் தனது குழந்தைகள் என்று அடங்கிவிடும் இது ஆண்களுக்கும் பொருந்துமெனினும் பெண்களின் குடும்பம் மீதான பிடிப்பு பலமானது சமுதாயம் பற்றியோ அல்லது சமுதாயத்தில் பெண்களின் பங்கு பற்றியோ அவர்கள் கவலைப் படுவதில்லை எனது குடும்பம் நன்றாக இருந்தால் தான் சமுதாயம் என்னை மதிக்கும் என்று சமுதாயத்தில் தனது இருப்பை தனது குடும்பத்தோடு பிணைத்துக் கொள்கிறார்கள்
சரி குடும்பத்தில் பெண்களின் இருப்பைப் பார்த்தோமானால் யாழ்ப்பாணப் பெண்க்களுக்கு அவர்களின் குடும்பத்தில் சரியான இடம் வழங்கப்பட்டுள்ளது
அதனை விட தனது குடும்பம் சார்ந்த விடயங்களில் முடிவெடுக்கும் உரிமை இப்போது பெண்கள் கைகளிலேயே உள்ளதை காணலாம் பிள்ளைகளின் படிப்பு கல்யாணம் இன்ன பிற விடயங்களில் ஆண் ஆலோசனை கூறுபவனாகவும் முடிவைச் செயற்படுத்துபவனாகவுமே இருக்கின்றான் அல்லது மனைவியின் கூற்றுக்கு அங்கீகாரம் வேண்டி பேச்சாளனாக இருக்கிறான்

உதாரணமாக பிள்ளையொன்று முதலில் தாயிடம் தான் போய் தனது வேண்டுகோளை வைக்கும் அம்மா நான் தையல் படிக்கப் போகிறேன் என்றோ அல்லது கராத்தே பழகப் போகின்றேன் என்றோ கேட்கும்போது பெரும்பாலான தாய்மார் சொல்வது போய் அப்பாவிடம் கேள் ஆனால் பிள்ளையின் வேண்டுகோள் செயற்படுத்தக் கூடியதா இல்லையா என்பது தாயால் தான் முடிவெடுக்கப்படும் தந்தை கூட மனைவியின் கருத்தறிந்தே சொல்வார் யார் எதனைச் சொன்னாலும் இது யாழ்ப்பாணத்தில் இன்றைய நடைமுறை இப்படியான சமுதாயக் கட்டமைப்பில் பெண்விடுதலை பற்றிய கோசங்கள் தேவையா என்பதுதான் எனது கேள்வி

நீங்கள் சொல்வது போல பெண்ணை வற்புறுத்தி கல்யாணம் கட்டிவைப்பது ஆணாதிக்கத்தின் ஒரு வெளிப்பாடு என்பது கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது பெண்ணை கல்யாணத்துக்கு வற்புறுத்துவது பெற்றோர் என்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்துதானே இதில் எப்படி ஆணை மட்டும் குறை சொல்லமுடியும் அதிலும் பொதுவாக தந்தையர்கள் பெண்பிள்ளைகள் மேல் பாசம் உள்ளவர்கள் அப்படியிருக்க தாஇயினால் எடுக்கப்படும் முடிவே செயற்படுத்தப்பட ஆணை எப்படிக் குற்றம் சாட்டலாம்?

அடுத்தது சீதனம் இன்று யாழ்ப் பெண்களுக்கு முக்கிய எதிரி சீதனம் இதனால் தான் இன்று யாழ் மண்ணிலும் சரி வெளிநாட்டில் வாழும் யாழ்ப்பாணத்தவர் மத்தியிலும் சரி குடும்பங்களுக்குள் குழப்பங்களும் மனமுறிவுகளும் ஏற்படுகின்றன
இந்தச் சீதனம் என்பதை ஒரு பெண்ணிடமிருந்து கேட்டு வாங்குவது இன்னொரு பெண்தான் ஆணைப் பேரம் பேசுவது அவனைப் பெற்றவளும் பெண்ணைப் பெற்றவர்களும் தான் ஒரு வழமையான யாழ்ப்பாணத்து பெண்தேடும் படலத்தைப் பார்த்தால் ஆண் வீட்டார் சம்பந்தம் பேசும் போது ஆணின் தகப்பனார் பல்வேறு விடயங்களையும் பேசுவார் ஆனால் சீதன விடயம் பேசுவது தாய் தான் அல்லது மரியாதை நிமித்தம் மனைவியின் கருத்தைத் தாம் ஒப்பிப்பார் இங்கே அந்தப் பெண்மணி தான் தனது குடும்பம் என்பதை மட்டுமே பார்ப்பார் ஒழிய அந்தக் குடும்பத்தின் நிலமை அல்லது இதனால் பாதிக்கப்படப் போவது இன்னொரு பெண்தான் என்பதைக் கவனிக்கமாட்டார்

எனது கண்கூடாக எத்தனை ஆண்களைப் பார்த்திருக்கிறேன் படிக்கும் காலத்திலும் சரி பட்டம் பெற்ற காலத்திலும் சரி சீதனம் வேண்டாமல் தான் கல்யாணம் செய்வேன் என்று சபதமிட்டுவிட்டு பின்னர் சீதனம் வாங்கியவர்கள் இவர்கள் வாங்கிய சீதனம் இவர்கள் பேரம் பேசி வாங்கியதல்ல தாயாரால் கேட்கப்பட்ட சீதனத்துக்கு படித்த பகுத்தறிவுவாதிகள் என்ற பெயரில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கடைசியில் தாயாரின் கட்டளைக்கும் கண்ணீருக்கும் பயந்து தலையை நீட்டியவர்கள் எத்தனை பேர்
மகன் காதலிக்கிறான் என்று தெரிந்தவுடன் உண்ணவிரதம் இருந்து மனதைக் கலைத்த தாய்மர்கள் எத்தனைபேரைப் பார்த்திருக்கிறேன் தனக்குத் தெரியாமல் சீதனம் இல்லாமல் கல்யாணம் செய்த மகன் மீதுள்ள வன்மத்தை வந்தவளில் காட்டும் எத்தனை தாய்மார் சகோதரிகளைப் பார்த்திருக்கிறேன்
தங்களுக்குச் சீதனத்துக்காக தமையன் வெளிநாட்டில் கஸ்டப்பட்டு உழைக்க அல்லது கொழுத்த சீதனத்துக்காக இன்னொருத்திக்கு கணவனாக தலையை நீட்ட பொது மேடைகளில் பெண்ணடிமை பற்றி முழங்கும் எத்தனை சகோதரிகளைப் பார்திருக்கிறேன் இவர்கள் யாராவது தம்மால் பாதிக்கப்படப் போவது இன்னொரு பெண்தான் என்று உணர்வார்களா

பெண்விடுதலை என்று முழங்கிய எத்தனை பெண்கள் தமது மகனை சீதனம் வாங்காமல் திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள்
கொழுத்த சீதனம் கொடுத்து கல்யாணம் செய்து கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் இவரது சகோதரிகள் அல்லது தாயார் நன்றாக இருக்க எனது சகோதரன் அல்லது தந்தை எவ்வளவு கஸ்டப்பட்டார்கள் என்ற உண்ர்வு மேலோங்கும் போது அவளது வன்மம் கணவனில் குறைபிடிப்பதாகத்தான் வெளிப்படும்
இப்படி எத்தனை ஆண்கள் தாய் சகோதரிக்காக சீதனம் வங்கி விட்டு அதனை அனுபவிக்க முடியாதவராய் அதன் மூலம் மனைவியின் வெறுப்பையும் சம்பாதித்தவராக நரக வாழ்க்கை வாழ்கிறார்கள் இவற்றை பெண்கள் உணர்ந்து கொண்டால் மட்டுமே பெண்விடுதலை சாத்தியப்படும்

வெறுமனே ஆணாதிக்கம் பெண்விடுதலை என்று கடந்து போன கசப்பான காலகட்டங்களை நினைவுக்குக் கொண்டுவருவதை விட்டு பெண்ணினாலே பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் களைய இவர்கள் முன்வரவேண்டும்

இவை சமுதாயத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள் குடும்பத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு அன்பு பாசம் நேசம் என்பவற்றின் அடிப்படையில் ஏற்படுவது அதனை வெறுமனே மேடைகளில் முழங்குவதால் சட்டப்படி 8 மணி நேர வேலை போன்று சட்டப்படி கணவன் மனைவி உறவைத் தான் ஏற்படுத்தலாமேயொழிய குடும்பத்தை உருவாக்கமுடியாது
\" \"
Reply
#72
இதெல்லாம் சுத்த முட்டாள் தனம்...ஆண் ஆண் தான் பெண் பெண் தான்....! அதை யாரும் மாற்ற முடியாது...உங்க பலபேர் குரைச்சுத்தான் களைச்சுப் போய்க்கிடக்கினம்....எல்லாம் அனுபவம் பாருங்கோ....!

இன்னும் கொஞ்சப் பேர் என்னமா நடிக்கிறீனம்...அப்போ...இவையின்ர நடிப்பிலதான் அவை மேடையில கலக்க முடியுது போல....ரசிகர்கள் இருந்தால்தானே காட்சி நடக்கும்....ரசியுங்கோ ரசியுங்கோ...ஏதோ பொழுது போனாச் சரி....!

உலகத்தில மனிதருக்கு இப்ப அடிப்படையானதும் தேவையானதுமான சகல உரிமைகளும் நுணுக்கமான சட்டப் பாதுகாப்புடன் வழங்கப்பட்டிருக்கு...தேவையானவன் தேவைக்கேற்ற மாதிரி அவற்றைப் பாவித்துக் கொள்ளலாம்..அவற்றை பாவிக்க முன் அவற்றை முறையா இனங்காணவும், இனதனித்துவத்துக்கான சமுதாய பண்பாட்டுக் கோலங்களையும் விழுமியங்களையும் இயலுமானவரை கட்டிக்காத்தும் வாழப்பழகிக் கொள்ள வேண்டும்...அங்கு ஆண் என்றோ பெண் என்றோ வேறுபாட்டிற்கு இடமில்லை...ஆனால் உலகில் ஆணுக்குப் பெண் எல்லா வகையிலும் நிகர் என்பது சுத்தப் பித்தலாட்டம்....!

யாருக்கும் எதிலும் சலுகைகளோ முன்னுரிமைகளோ வழங்கப்படக் கூடாது....! பெண்கள் எனிமேலும் சலுகைகள் அநுதாபங்கள் வெற்றுவேட்டுக்களால் காலம் தள்ளாலாம் என்பதையும் மறந்துவிடுங்கள்...! சட்டத்தின் முன் சகலரும் சமன்....!

பிறகேன் மேடையும் கூத்தும்...அதுதானே உங்கள் வழமையாச்சே காட்டுங்கோ காட்டுங்கோ....! உங்க உலகத்தில இருக்கினம் அநுதாபம் என்று சொல்லிக் கொண்டு பொண்டுகள் வால்பிடிக்க... ஆக....வேணும் என்றால் அவைய ஏமாத்தலாம் உலகத்தை எனியும் ஏமாற்ற முடியாது....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#73
அன்பின் நண்பர் குருவிகாள்

ஆண் ஆண் தான் பெண் பெண் தான் ஆனால் ஆணுக்குப் பெண் எந்தவிதத்தில் சரி சமமென்று கேட்கிறீர் உமக்கு துணையாக உடல் பலத்தை மட்டுமே சாட்சியாகக் கொள்கிறீர்

இலங்கையில் வாழ்ந்த ஆதி திராவிட இனத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெண்ணைக் கூட்டத்தலைவியாக கொண்ட சமூக அமைப்பும் விலங்குகளை வேட்டையாடுவதை மட்டுமல்ல தமது இனத்தவரை விலங்குகள் பகைவர்களிடமிருந்து பாதுக்காப்பதைக் கூட பெண்களே செய்தனரென்றும் தெரியவரும்

ஒட்டகச்சிவிங்கிக்கு காலத்தின் கோலத்தால் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியால் கழுத்து நீண்ட கதை தெரியுமா அதே போன்று தான் பெணகள் போகப் பொருளுக்கு ஆசைப்பட்டு வந்த பிணக்குகளாலும் காலமாற்றத்தாலும் நிலை மாறி ஆண்கள் கைகளில் குடும்பப் பொறுப்பும் சமூகப் பொறுப்பும் வந்து சேர்ந்தது எங்கே தம்மை மேவி விடுவார்களோ என்ற பயத்தால் காலத்துக்குக் காலம் எம்மவர்கள் புராணம் இதிகாசம் என்று ஏதோதோ கூறி பெண்ணெண்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வகுத்ததற்கேற்ப வீட்டிலேயே அடங்கிக் கிடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதனால் உண்டான விளைவுதான் உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும் பெண்கள் பலவீனமானது

வெறுமனே இதனை மட்டும் ஆதாரமாகக் கொண்டு பெண்கள் ஆண்களுக்கு எந்தவிதத்திலும் நிகரானவரல்ல என்று கூற வேண்டாம் இன்று போராளியாயிருக்கும் ஒரு பெண் உடல் பலத்தில் மட்டுமன்றி மனத்தளவிலும் கூட தனது வயதொத்த ஆண்களுக்கு நிகரானவர் என்பதை நீர் மறுப்பீரா? இதுதான் காலத்தில் ஏற்பட்ட மாற்றம்

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்ற பாரதி வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா என்று வெறுமனே மேடைகளில் முழங்குபவர்களை எனக்கும் பிடிப்பதில்லை
\" \"
Reply
#74
வாகனம் ஒன்றின் சாரதியாக இருக்கையில் இருக்கிறபோது ஐயோ நடைபாதையாளர் கடக்கும் கோடுவருகிறது கவனம், வலதுபக்கம் திரும்புவதற்காக முன்னால் போகும் வாகனச்சாரதி சிக்னல் போடுகிறான் கவனம் ,றிவேஸ் எடுக்கிறியள் பக்கத்திலை நிக்கிற வாகனத்திலை முட்டப்போகுது சந்தியில் சிக்னல் பச்சையாக இல்லை வேக வீதியில் இனி அதிவேக வீதிக்கு மாற்றுங்கள் என உங்களை [size=18]ஒருவர் சிந்தித்து செயல்படவே விடாமல் அருகில் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு என்ன பதிiலை தரப்போகிறீர்;கள்??:::!!!
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#75
மாதர் தம்மை இழிவுபடுத்துவது எமது நோக்கம் அல்ல ஈழவன்....மனித இன நடத்தைக் கோலமும் அதன் ஆண் பெண் பால்பிரிவும் தெளிவான உடற்தொழில் கட்டமைப்பு நடத்தை வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன....எனவே ஆணுக்குப் பெண் எல்லா விதத்திலும் சமன் என்று பாரதி என்ன எவர் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததே...!

பாரதி காலத்தில் மாதரை இழிவுபடுத்தி இருக்கலாம்....ஆனால் எங்கள் காலத்தில் நாம் பெண் என்பதற்காக இழிவுக் கண்ணோட்டம் வைத்திருந்தோம் என்றால் அது சுத்தப் பொய்...ஒவ்வொரு வீட்டிலும் அம்மாவையும் சகோதரிகளையும் என்ன இழிவுக் கண்ணோட்டத்திலா அப்பாவும் பிள்ளைகளும் சகோதரங்களும் நோக்குகின்றனர்....அதில் எமக்கு பாரதியின் கருத்துடன் அதுவும் இக்காலத்தில் தெளிவாக முரண்பட முடியும்....!

பெண்கள் ஒன்றும் விசேட பிறப்புக்கள் அல்ல...அவர்களும் மனித சமூக அங்கத்தவர்களே...எனவே சமூகப்பிரச்சனைகள் என்பது எல்லோருக்கும் இருக்கு..அது பெண்களுக்கு என்று மட்டுமானதென்பதும் அது ஆண்களால் தான் வருவதென்பதும் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.....! மனித சமூகத்தில் சமூகக் குற்றவாளிகள் என்பவர்கள் ஆண்களிலும் உண்டு பெண்களிலும் உண்டு. ஆண்கள் தங்கள் குற்றங்களையும் பெண்கள் தங்கள் குற்றங்களையும் களையும் போது தானாகவே இருவரும் சுதந்திரத்துடன் பீதி இன்றி வாழ முடியும்...! ஆனால் பெண்கள் அப்படிச் சொல்லவில்லையே....அவர்களின் நினைப்பு ஆண் பலமானவன்... எனவே அவன் ஆதிக்கம் செலுத்தித்தான் நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்று கற்பனை செய்து கொண்டு தமது தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க விளைகின்றனர்....ஆனால் ஒரு சமூக உயிரினக் கட்டமைப்புக்குள் இனப்பெருக்க ரீதியான பாலியல் நடத்தைகள் தவிர்ந்த வேறு எதிலும் ஆண் விலங்கு பெண் விலங்கின் மீது செல்வாக்குச் செலுத்த முனைவதில்லை...ஆனால் அது கூட மனிதனில் பகுத்தறிவு விருத்தியின் பின் வெகுவாகக் குறைந்துவிட்டது....!

ஆனாலும் மனிதப் பெண்களின் இயலாமையும் ஆணில் சார்ந்து வாழும் நிலையும் (அது எல்லா சமூக விலங்குகளுக்கும் பொதுவானது....ஆண் யானைதான் கூட்டத்திற்கு தலைமை தாங்கும்....வழிகாட்டும்....மனிதக் குரங்குகளில் அப்படி....ஏன் சேவலைப் பாருங்கள் பருந்து வந்தால் உடனே எச்சரிக்கை வழங்கி தனது சுற்றத்தை உசார்ப்படுத்தும்...பேட்டுக் கோழி குஞ்சு பொரித்தால் அன்றி அதுக்கு பருந்தைப்பற்றிக் கவலையே கிடையாது.....ஏனெனில் சேவல் இருக்கென்ற தைரியம்....) பரிணாம வளர்ச்சியின் பின்னும் அகன்றுவிடவில்லை...ஆனாலும் விவசாயப் புரட்சியைத் தொடர்ந்த கைத்தொழில் புரட்சியின் பின் வேகமாக மாறும் சமூக பொருளாதாரச் சூழலுக்கேற்ப பெண்களையும் விரைந்து தொழிற்பட வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது அதனால் தான் பெண்களினுள் புதைந்துகிடக்கும் மனித வலுவை பயன்படுத்த வேண்டிய தேவையும் வந்தது... அன்றி ஆண்தான் பெண்களுக்கான மனித வலுவையும் வழங்க வேண்டி வந்திருக்கும்... அது பெரிய ஒரு சனத்தொகையில் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக அமையச் சாத்தியம் குறைவு...!

இதன் பொருட்டு எழுந்ததுதான் "வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்களை வெளியே கொண்டுவா" எனும் முழக்கம்...அந்த முழக்கம் கூட ஆண்களால்தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது....ஆனால் இன்று அந்த முழக்கம் மனித சமூக சீரழிவுக்கும் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறிவருவது வேதனை அளிக்கும் விடயம் என்பதும் அதுவே ஆண்களை குற்றவாளிகள் ஆக்கி பெண்கள் சலுகைகள் தேடவும் பயன்படுத்தப்படுகிறது...!

இதன் மூலம் பெண்ணிடம் இருந்து பெறப்பட வேண்டிய சரியான மனித வலுவை இன்னும் பெற முடியாதே மனித இனம் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது....அதுவும் மனித சனத்தொகையில் பாதி இந்தப் பெண்கள் ஆவர்...! இவர்களுக்காக தமது மனிதவலுவையே ஆண் இன்றும் வழங்கிக் கொண்டிருக்க...இந்தப் பெண்களோ எங்கே சோம்பேறிகளாக பதுங்க முடியுமோ அங்கே போய் பதுங்க... இப்போ பெண் விடுதலை என்று கூறி உள்ள சமூகச் சீரழிவுகளுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கின்றனர்....! இதுதான் பெண் விடுதலையின் இன்றைய நிலை....!

இது நமக்குத் தேவையா...பெண் இயல்பாகச் செய்ய வேண்டியவற்றை சாதனையாகக் காட்டுவதுதான் பெண் விடுதலையா.....????! சரி அது பெண்ணை உற்சாகப்படுத்தவென்றால் ஏற்றுக் கொள்ளலாம்...ஆனால் அது பயன்படுவது ஆண்களை குற்றவாளியாக்கவும் பலவீனப்படுத்தவும்...அதனால் தான் அந்த இடங்களைக் கைப்பற்றவும் அல்லது சோம்பேறித்தனம் வளர்க்கவும் அல்லது ஆணை அடக்கி ஒடுக்கி தனது சோம்பேறித்தனத்தையும் பலவீனத்தையும் (மனம், உடல் இரண்டும்...அதுவும் பெண்களின் கற்பனையால் அவை இரண்டும் இயல்பைவிட மிக அதிகளவில் பெருக்கப்பட்டுள்ளது) அதிகரிக்கவும் மறைக்கவும்....ஆனால் ஆணை அடக்குதல் என்பது எப்போதும் சாத்தியமில்லாத ஒன்று....!

பெண்கள் இதை இப்போதே சிந்தித்து செயற்படுவது அவர்களின் எதிர்காலத்துக்கும் செழிப்புக்கும் உறுதுணையாக இருக்கும்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#76
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Confusedhock: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#77
[quote=nalayiny]வாகனம் ஒன்றின் சாரதியாக இருக்கையில் இருக்கிறபோது ஐயோ நடைபாதையாளர் கடக்கும் கோடுவருகிறது கவனம், வலதுபக்கம் திரும்புவதற்காக முன்னால் போகும் வாகனச்சாரதி சிக்னல் போடுகிறான் கவனம் ,றிவேஸ் எடுக்கிறியள் பக்கத்திலை நிக்கிற வாகனத்திலை முட்டப்போகுது சந்தியில் சிக்னல் பச்சையாக இல்லை வேக வீதியில் இனி அதிவேக வீதிக்கு மாற்றுங்கள் என உங்களை [size=18]ஒருவர் சிந்தித்து செயல்படவே விடாமல் அருகில் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு என்ன பதிiலை தரப்போகிறீர்;கள்??:::!!!

இதற்கு இரண்டுவிதமாகக் காரணம் கொள்ளலாம்

1)உங்கள் மீதான அதீத அக்கறை அதன் காரணமாக எழுந்த பயம் இயல்பாகவே எல்லோரையும் இப்படிக் கூறத் தூண்டும்
2)தன் உயிர் மேலுள்ள பயம் இது சாதாரணமாகவே எல்லோருக்கும் எழக் கூடியது

இவை இரண்டும் அவருக்கு ஏற்பட முக்கிய காரணி அவர் உங்களின் சாரத்தியத்தில் கொண்டுள்ள அவநம்பிக்கையே அடிப்படை

இதற்கு நீங்கள் இருவகையில் தீர்வு காணலாம் உங்களின் சாரத்தியத்தில் நம்பிக்கை ஏற்படும்படி அவருக்கு எடுத்துக் கூறலாம் அல்லது செய்து காட்டலாம்
அல்லது உங்களின் திறமை மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் அவர் சொல்வதற்கு செவிமடுக்காமல் வாகனத்தை ஓட்டலாம்
எது எப்படியிருப்பினும் வாகனம் விபத்துக்குள்ளானால் உங்களுக்கும் பாதிப்பு உண்டு
\" \"
Reply
#78
இங்கு வாகனச் சாரதி பயிற்சியா நடக்கின்றது.
:roll:
Reply
#79
இல்லை குடும்ப வண்டி எப்படி ஓட்டுவதென்று பயிற்சி வேண்டுமானால் கலந்து பாருங்களேன் பிற்காலத்தில் உதவும்
\" \"
Reply
#80
[quote=nalayiny]வாகனம் ஒன்றின் சாரதியாக இருக்கையில் இருக்கிறபோது ஐயோ நடைபாதையாளர் கடக்கும் கோடுவருகிறது கவனம், வலதுபக்கம் திரும்புவதற்காக முன்னால் போகும் வாகனச்சாரதி சிக்னல் போடுகிறான் கவனம் ,றிவேஸ் எடுக்கிறியள் பக்கத்திலை நிக்கிற வாகனத்திலை முட்டப்போகுது சந்தியில் சிக்னல் பச்சையாக இல்லை வேக வீதியில் இனி அதிவேக வீதிக்கு மாற்றுங்கள் என உங்களை [size=18]ஒருவர் சிந்தித்து செயல்படவே விடாமல் அருகில் இருந்து சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கு என்ன பதிலை தரப்போகிறீர்கள்??!!!இப்பத்தான் கார் றிப்பயராலை திரும்பி வந்திருக்குது.. இதுவரை கார் காயப்பட்டது போதும்.. என்னாலை இனிமேல் தாக்குப் பிடிக்கேலாது.. முட்டிக்கிட்டிப்போடாதை.. எண்டு சொல்லாமல் சொல்லுறார்.. உதுகூட விளங்கேல்லையே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)