Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேர்தல்????
#21
[quote=anpagam][quote]இந்தியா என்ன சொல்லுது என்று சொல்ல சங்கரியும் தேவைதானே...[/quote]
[quote]கதைச்சதுக்கே இவ்வளவு பிரச்சனை.. சொல்ல விடுவாங்களெண்டோ..? [/quote]


அப்ப உங்க இருவரின்ர கதையபார்க்க அவர்கள் தான் உங்களுக்கு(ஈழத்தமிழருக்கு) ஏதோ செய்யப்போகிறார்கள் [size=18]இவ்வளவு காலம் செய்ய முயற்சிக்கிறார்கள் ஆனால் இவர்கள்தான் சொல்ல செய்ய விடுகிறார்கள் இல்லை
Truth 'll prevail
Reply
#22
சங்கரியர் தானும் விடுதலைப்புலிகளைத்தான் ஆதரிப்பதாகவும் அவர்களுடனேயே மட்டும்
பேச்சுவார்த்தை நடாத்தவெண்டும் என்றும்
நேற்றைய பிபிசியில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

பிபிசிக்கு சொன்னதை இந்திய அதிகாரிகளுக்கும் சொல்லியிருப்பார்தானே..

பிறகு இதிலென்ன குழப்பம்???
Reply
#23
<b>யார்யார் குழப்புகிறார்கள் குளம்புகிறார்கள் என மக்களுக்கும் வேண்டியவர்களுக்கும் நன்றாக தெரியும் அதைவிட்டு நீங்களும் இங்கு ஏன்குளப்புறீர்கள் குளப்புகிறீர்கள்.... :?: :!: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இந்தியா என்றாவது சுயனலம் இல்லாமல் ஈழத்தமிழருக்கு என்ன செய்தார்கள் அல்லது வரலாற்றில் என்ன எமக்கு நன்மை செய்துள்ளார்கள்..... எமக்கு ஒண்டும் வேண்டாம் எம்மை நின்மதியாக வாழ விடுங்கள் அதுவே போதும்...</b>
Reply
#24
இந்தப் பச்சோந்தி ஆ.சங்கரிதான் இப்ப கோர்ட்டில தடயும் வாங்கி கோவணத்துக்குள்ள வச்சுக்கொண்டு திரியுது. இவனுகளுக்கெல்லாம் தமிழன் எண்ட ஒரு பேர். :twisted:
...... 8)
Reply
#25
Quote:உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் பண்ணாமல் வாழப்பளகிக்கொள்
அதுஎல்லோருக்கும் முக்கியமானது மானத்தமிழனுக்கு ஆனால் நீர் நய்நா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> எடுத்துவிடும் ... இல்லையேல் உமது கருத்து <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> aaka போய்விடும் ..... :roll: Idea :wink:
Reply
#26
anpagam Wrote:
Quote:உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் பண்ணாமல் வாழப்பளகிக்கொள்
அதுஎல்லோருக்கும் முக்கியமானது மானத்தமிழனுக்கு ஆனால் நீர் நய்நா எடுத்துவிடும் ... இல்லையேல் உமது கருத்து <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> aaka போய்விடும் .....


adipadda_tamilan
Gender:
Joined: 26 Jan 2004
Posts: 29

Posted: Yesterday at 2:35 am
--------------------------------------------------------------------------------
இந்தப் பச்சோந்தி ஆ.சங்கரிதான் இப்ப கோர்ட்டில தடயும் வாங்கி கோவணத்துக்குள்ள வச்சுக்கொண்டு திரியுது. இவனுகளுக்கெல்லாம் தமிழன் எண்ட ஒரு பேர்.
_________________

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் பண்ணாமல் வாழப்பளகிக்கொள்

அவர் அப்படி வாழப்பளகிக்கொண்டு இருக்கட்டுமே.. உங்களுக்கென்ன..?
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
#27
எவர் சங்கரியா????/
\" \"
Reply
#28
1948 ஆம் ஆண்டு சிறீலங்கா 'சுதந்திரம்' அடைந்தது. இதன்பின்னர் சிங்கள அரசியல் தலைவர்களாலும், அவர்களது அரசியல் முரண்பாட்டுத் தன்மைகளாலும், தமிழர்கள் எவ வாறு புறக்கணிக்கப்பட்டார்கள் அல்லது உரிமைகள் மறுக்கப்பட்டன என்பது பற்றியும், தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் சிங்களப் பேரினவாத அரசாங்கங்களால் நசுக்கப்பட்டமை பற்றிய விபரங்களை அறிந்திருக்கின்றோம்.
1956ஆம் ஆண்டு சிறீலங்காவின் பிரதமராக எஸ்.டபிள்யுூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா பதவியேற்றதும் தமிழர்களுக்கெதிரான செயற்பாடுகள் உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்றது. '24 மணித்தியாலங்களில் சிங்களம் அரச கரும மொழியாக்கப்படும்' என அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகளும், கலவரங்களும், பண்டா-செல்வா ஒப்பந்தங்களும் பின்னர் அவை கிழித்தெறியப்பட்டமையும் மறைக்கமுடியாத உண்மைகள்.
அன்றிலிருந்து நடந்தேறிய அரசியல் நடவடிக்கைகளையும், சிங்கள அரசியல் கட்சிகளின் தேர்தல்கள், பிரச்சாரங்கள் மற்றும் தமிழ்க்கட்சிகளின் தேர்தல் பங்களிப்புகள் அதனால் விளைந்த ஏமாற்றங்களும் வரலாற்றிலே பதியப்பட்டுள்ளன.
1958ஆம் வருடம் பிரதமர் பண்டாரநாயக்க அவருடன் நெருங்கிப்பழகிய சகாக்களின் சதித்திட்டங்களால் சோமராம என்ற பிக்குவால் சுடப்பட்டார். இவருடன் களனி விகாரையின் மடாதிபதி புத்தரகித்ததேரோ என்ற 26 வயதுப் பிக்குவும், இவருடன் இரகசியத்தொடர்பு வைத்திருந்த விமலா விஜயவர்த்தன என்ற பெண் அமைச்சரும் கைதுசெய்யப்பட்டனர். காலித்தொகுதி அமைச்சர் தகநாயக்கா தற்காலிக பிரதமரானார். பின்னர் அமைச்சரவையில் ஏற்பட்ட குழப்பங்களால் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் புதிய தேர்தலுக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டது.
தேர்தலில் தமிழரசுக்கட்சியும், தமிழ் காங்கிரசும் தமிழ் மக்கள் சார்பில் போட்டியிட்டன. இடதுசாரிக்கட்சிகளின் ஒற்றுமையால்தான் தமிழர்களுக்கும் விமோசனம் கிடைக்கும் வகுப்புவாதம் பேசினால் வாக்குரிமையின்றி நாடற்ற பிரஜைகளாக வாழும் 10 லட்சம் தோட்டத் தொழிலாளர் ஒதுக்கப்பட்டுவிடுவார்கள் என்றும் தொழிலாளர் கட்சியான இடதுசாரிக்கட்சிகள் அவர்களையும் ஆதரிப்பர், இந்நாட்டின் பிரஜைகளாகவும் ஆக்குவர் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இடதுசாரிகள் பிரிந்துபோய் கொம்யுூனிஸ்ட், சமசமாஜிக் கட்சிகளில் போட்டியிட்டனர். காலித்தொகுதியில் தகநாயக்கா தோற்கடிக்கப்பட்டார். தமிழ் காங்கிரஸ் தலைவர் பொன்னம்பலமும் தோல்வியடைந்தார். 151 ஆசனங்களில் ஐ.தே.க. 50, சுதந்திரக்கட்சி 46, தமிழரசு 15, மீதியான ஆசனங்களை மற்றக் கட்சிகள் கைப்பற்றிக்கொண்டன. 1956இல் தோல்வியடைந்த ஐ.தே.கட்சி மீண்டும் தலைதூக்கியது. டட்லி சேனநாயக்க பிரதமரானார். சுதந்திரக்கட்சியைச் சேர்த்து கூட்டரசாங்கம் அமைக்க டட்லி விரும்பினார். அது ஈடேறவில்லை. தமது கோரிக்கையை நிறைவேற்றும் பேரத்தில் தமிழரசுக்கட்சி இறங்கியது. பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு முதல் விடயமாக அரசின் கொள்கைகள் அடங்கிய அரியாசனப்பேச்சு விவாதம் நடைபெற்றபோது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைப் பிரேரித்தனர். நான்கு வாரங்களே ஆட்சியிலிருந்த அரசு வீழ்ந்தது.
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை பண்டாரநாயக்கவின் மனைவி சிறீமாவோ ஏற்றுக்கொண்டார். அத்துடன் இடதுசாரிகளுடனும் ஒப்பந்தம் செய்துகொண்டார். தமிழருக்கு ஏதாவது சலுகைகள் சுதந்திரக் கட்சி மூலமே கிடைக்கமுடியுமென்றும் பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்படுமென்ற நம்பிக்கையும் தமிழ் மாகாணங்களில் சிங்களக் குடியேற்றம் ஏற்படாதவாறு பார்த்தாலேபோதும் என்பதாகவும், ஐ.தே.க. இதற்கு சம்மதியாததாலேயே பேச்சு முறிந்தது எனவும் தமிழரசுக் கட்சியினர் நம்பினர். ஆனால் ஐ.தே.கட்சியோ சுதந்திரக் கட்சிக்கும், தமிழரசுக் கட்சிக்கும் இரகசிய ஒப்பந்தமொன்று இருப்பதாகவும், இலங்கை இரண்டாகப் பிளவுபடப்போகின்றது. மாவட்ட சபைகள் மூலம் தமிழருக்கு தனியாட்சி கொடுக்கப்போகின்றார்கள். சிங்களமொழிக்கு ஆபத்து வரப்போகின்றது என்பதான பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன.
எழுத்தளவில் இல்லாவிட்டாலும் தமிழரசுக் கட்சியின் ஆதரவு கிடைத்தால் பண்டா-செல்வா ஒப்பந்தம் அளவுக்கு சலுகை அளிப்பதாக சிறீமாவோ பண்டாரநாயக்க சொல்லியிருந்தும் பிரச்சாரக் கூட்டங்களில் இதை மறுத்துரைந்தனர். பிரச்சாரக் கூட்டங்களில் சிறிமாவோ அம்மையார் கண்ணீர் மல்க தமது கணவரைக் கொன்றவர்களுக்கு தக்க நீதி வழங்கத் தமது கட்சியையே தெரிவுசெய்யுமாறு கேட்டு மனமுருக வேண்டுகோள் விடுத்தார். விதவை கண்ணீரால் வெற்றிபெற நினைக்கின்றார் என ஐ.தே.கட்சியினர் கேலி செய்தனர். பத்திரிகைகள் சுதந்திரக் கட்சியையும் வன்மையாகத் தாக்கின. இடதுசாரி ஆதிக்கம் ஏற்பட்டால் உண்டாகக்கூடிய சர்வாதிகார ஆட்சி பற்றியும் வெளியிட்டன.
சிறீமாவோவை கம்யுூனிஸ்ட் கட்சியின் பீற்றர் கெனமனுடனும் என். எம். பெரேராவுடனும் இணைத்து கேலிச்சித்திரங்கள் வரைந்து தள்ளின. புனித இலங்கையின் புத்தமதம் அழிந்துவிடப் போவதாகவும், பயமுறுத்தின. வடக்கு - கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்களும் முக்கியமாக மலையகத்தமிழரும் சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்கப்போவதையறிந்த ஐ.தே.க.வினரின் பத்திரிகைகள் இந்தியருக்கெதிராகவும் பிரச்சாரம் செய்தன. தமிழ்ப் பகுதிகளில் தமிழரசுக்கட்சி தமிழ்க் காங்கிரசை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது. சுதந்திரக் கட்சி கத்தோலிக்கர், பெரிய முதலாளித்துவ வாதிகளையெல்லாம் தாக்கியது. இறுதியில் சுதந்திரக் கட்சியே எதிர்பார்த்ததைவிட அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றது. சுதந்திரக் கட்சிக்கு 75 ஸ்தானங்களும், ஐ.தே.க.வுக்கு 30ம், இடதுசாரிகளுக்கு 60 ஸ்தானங்களும் கிடைத்தன. உலகின் முதலாவது பெண் பிரதமரானார் சிறீமாவோ. நாடெங்கிலுமுள்ள வெளியார் கட்டுப்பாட்டிலிருந்த பாடசாலைகளை அரச மயமாக்க அரசு தீர்மானித்தது. பெரும்பாலான பாடசாலைகள் கத்தோலிக்க, கிறீஸ்தவ, இந்து, பௌத்த சபைகளின் நிர்வாகத்திலேயே இருந்தன. ஆயினும் இலவசக் கல்வி ஆரம்பித்த காலம் முதல் அரசாங்கமே ஆசிரியர்களது சம்பளங்களை கொடுத்து வந்தது. பத்திரிகைகளும், கத்தோலிக்க பீடங்களும் இதை வன்மையாக எதிர்த்தன. அடுத்து தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளை மறந்து, சிங்கள மொழியைத் திணிக்க முயன்றது சிறீமாவோ அரசு. மலையக மக்களின் வாக்குகளைப்பெற்ற அரசாங்கம் தமிழ் மொழியையும், தமிழர்களையும் நசுக்க முயன்றது. தமிழ்ப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளையும் அரசாங்கம் எடுத்தபின் இலகுவாக சிங்களத் திணிப்பை ஏற்படுத்தவும் முயன்றது. அரச சேவையிலுள்ளோர் சிங்களம் படிக்கவேண்டுமென்றபோதும், படிப்பதில்லை என்ற வைராக்கியம் புூண்டனர். தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகள் எதனையும் அரசு ஏற்க மறுத்தது. தேர்தலின்போது தம்மிடையே உடன்பாடு இருந்ததாகவும் அதை மீறியுள்ளதாகவும் தமிழரசுக் கட்சி குற்றம்சாட்டியது.
சிங்கள அரசாங்க ஊழியர்களை தமிழ்ப் பகுதிகளுக்கனுப்பி சிங்களத்தில் அரசாங்க அலுவல் சம்பந்தமாக கடிதங்கள் அனுப்புவதை தமிழரசுக்கட்சி வன்மையாகக் கண்டித்தது. தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளுக்கு செவிசாயாது தமது மொழிக் கொள்கையை அரசு அமுல் செய்தது. இதன் விளைவாக அரச அலுவலகங்கள் முன் சத்தியாக்கிரகம் செய்ய தொண்டர் படைகளைத் திரட்டியது தமிழரசுக் கட்சி. சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அரசாங்க அலுவல்கள் யாவும் சீர்குலைந்தன. சிங்களமொழி தம்மிடையே நுழைவதை எதிர்த்துப் போராடுவதாகவும், இதில் வெற்றி பெறமுடியுமென்றும் நம்பினர். ஆனால், அரசாங்கமோ இதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. சிறீமாவோ பண்டாரநாயக்கவின் வெளிநாட்டுப் பயணங்கள் பல நடைபெற்றபோதும் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
வட கிழக்கு மாகாணங்களில் சிங்கள அரசின் ஆட்சி ஸ்தம்பித்துவிட்டதென்றும், தமிழரசார் தமது ஆட்சியை நிலைநாட்டலாமென்றெல்லாம் பலரால் பேசப்பட்டும், பத்திரிகைகளும் செய்திகளைத் திரித்து வெளியிட்டன. அரசு தக்க நடவடிக்கை எடுக்காத நிலையில் தமிழரசுத் தலைவர்களுக்கும் விரக்திநிலை ஏற்பட்டாலும், அரசின் கவனத்தை மீண்டும் கவர்வதற்காகப் புதிய தபால் முத்திரைகளை வெளியிட்டு தபால் சேவையொன்றை ஆரம்பிக்கப்போவதாகவும் அறிவித்தது. சிங்களப் பத்திரிகைகளோ தமிழரசுக் கட்சி சட்டங்களை மீறிப் புதிய ஆட்சி ஒன்றை ஏற்படுத்த முயல்வதாகவும், இனியும் அரசு மௌனமாக இருந்துவிட முடியாதெனவும் கண்டன மொழிகளில் எழுதித் தள்ளின.
அரசாங்கம் திடீரெனக் கூடியது. உடன் நாடெங்கும் அவசரகால நிலையை பிரகடனம் செய்து, வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தது. தமிழரசுக் கட்சித் தலைவர்களையெல்லாம் பலாத்காரமாகக் கைதுசெய்ததோடு விமானத்தில் கொழும்புக்கனுப்பி தடுப்புக் காவலில் வைத்தது. சத்தியாக்கிரகிகள் யாவரும் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இரவோடிரவாக அடித்துக்கலைக்கப்பட்டனர். தமிழ் மக்களால் பிரமாதமாக எதிர்பார்க்கப்பட்ட, ஆதரிக்கப்பட்ட மிகப்பெரும் போராட்டம் சிதையுண்டது. தமிழரசுக் கட்சியின் தோல்விகளுக்கிடையே அக்கட்சியும் தடைசெய்யப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது. அவசரகால நிலைமை நீடித்தது. நாட்டில் தற்காலிக அமைதி நிலவியது.
தேர்தலின்போது தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளை ஏற்றுப் பல சலுகைகளை செய்வதாக வாக்களித்திருந்த சிறீமாவோ பண்டாரநாயக்கவின் சோஸலிசப் பசப்பு வார்த்தைகள், அரசாள நினைப்பவர்கள் எவராயினும் எப்படியும் வேஸம் போடுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.

நன்றி: எரிமலை
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
இலங்கை: தேர்தலில் வென்றால் போர் நிறுத்தம் வாபஸ் மிரட்டுகிறது இனவாத ஜே.வி.பி.

இலங்கைத் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், புலிகளுடன் ரணில் அரசு செய்த போர் நிறுத்தத்தை உடனடியாக விலக்கிக் கொள்வோம் என்று அதிபர் சந்திரிகாவின் கூட்டணிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா மிரட்டியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சந்திரிகாவின் கட்சி, சிங்கள இனவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந் நிலையில் ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் விமல் வீரவன்ஸா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

விடுதலைப் புலிகளுடன், இலங்கைப் பிரதமர் ரணில் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை இலங்கையின் பாதுகாப்பாக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். வரும் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், புலிகளுடன் செய்யப்பட்ட போர் நிறுத்தத்தை விலக்குவோம்.

நாட்டின் பாதுகாப்புக்கு இடையூறு இல்லாத வகையில் புதிய உடன்பாடை மேற்கொள்வோம். இலங்கை அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் செய்யப்பட்ட இந்தியாஇலங்கை அமைதி உடன்பாட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

:evil: :roll: :evil:


-------------
thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)