Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
திமுக தலைவர் புத்திசாலியாக நடந்துகொள்கிறார் என்பது புலப்படுகிறது... அவர் ஆட்சி 91ல் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார் என்ற காரணத்துக்காக கலைக்கப்பட்டது.... அப்படியிருந்தும் புலிகள் கலைஞரை ஒரு பொருட்டாக என்றுமே மதித்தது கிடையாது.....
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
அவரும் மத்திய அரசில் பங்கு வகிப்பவர் தானே அகிலன் !! அவர் தமிழ்ர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல் பட அனுமதிக்க மாட்டார்
.
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
அகிலன் உங்களுக்கு புரியுமோ புரியதோ எனக்கு தெரியாது....
கலைஞர் உங்களை ஆதரித்தது இன உணர்வால்....
ஜெயலலிதாவோ, எம்.ஜி.ஆரோ உங்களை ஆதரித்திருப்பார்களேயானால் அதில் கண்டிப்பாக அரசியல் இருக்கிறது.... இதைப் பற்றியெல்லாம் விவாதித்து நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.....
,
......
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
கலைஞர் இந்திய இராணுவ வீரர்களை சந்திக்க மறுத்தமையும், இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வாக ஈழம் செக்கெச்சுலோவியா போல அமைதியாக பிரிந்து விட வேண்டும் எனக் கூறியிருந்தமையையும், தமிழீழம் கிடைத்தால் தான் மிக மகிழ்வடைவேன் என சொல்லியிருக்கின்றமையையும் நாம் நன்கு அறிவோம். ஒருவேளை அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக தனது எண்ணத்தை தற்போது பகிரங்கமாக கூறமுடியாதவராக இருக்கிறாரோ தெரியவில்லை.. தனிப்பட்ட ரீதியில் தொடர்புகள் இரக்கின்றதா என்பது புலிகளுக்கே வெளிச்சம்
, ...
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
காவடி
ஜெயலலிதா எந்த இடத்திலும் ஆயுதம் வழங்கக் கூடாது என்று சொல்லவில்லை. அப்படி வழங்குவதற்கு முன் அதுபற்றி நன்கு ஆராய வேண்டமென்றெ குறிப்பிட்டுள்ளார். அதுபோல் ஆசிரியர்கள் என்பதையும் நீங்கள் தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். செவிலித்தாய்கள் ( தாதிகள் ) என்பதைத்தான் அப்படி தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். அதுபோல் கலைஞர் கருணாநிதியும் இலங்கைத்தமிழ் மக்கள் விடயத்தில் தாம் பாரா முகமாக இருந்து விட முடியாது என்றும் இது விடயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரவு அளிப்பதாகவே குறிப்பிட்டுள்ளார். இதனை சரியாக புரிந்து கொள்ள முன்வரவேண்டும். திமுகவை பொறுத்தவரை எந்தவித ஆதரவையும் நேரடியாக சொல்ல முடியாது. ஏற்கனவே திமுக அரசு இவ்விடயத்தால் கவிழ்க்கப் பட்டதை நாம் மறக்கவும் கூடாது. ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் இந்திய அரசு பாதகமான நடவடிக்கைகள் எடுப்பதை ஆதரிக்கவும் மாட்டார்கள். இதற்கு இராமதாஸ் வைகோ போன்றோரும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது எமக்குச் சாதகமான விடயமே.
<i><b> </b>
</i>
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
97 இன் இறுதியில் வன்னியில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலாவிற்கு உடல்நிலை மிக மோசமாப் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை இந்தியாவிற்கு அனுப்பி மருத்துவ சிகிச்சை வழங்க நினைத்ததாகவும் அதற்கு அப்போதைய தமிழக அரசியல் வாதிகள் பலர் உதவிபுரிவதாய் சொன்னதாகவும் அடேல் பாலா எழுதிய நூலில் குறிப்பிடுகிறார். ஆயினும் பயண மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டு அவர் கடல்வழியாக தெற்காசிய நாடொன்றிற்கு சென்றிருந்தார். (தாய்லாந்தாக இருக்கலாம் என்பது என் ஊகம்).
மீண்டும் 2002 இல் அவருக்கு மருத்துஉதவிகள் தேவைப்படுவதால் தென்னிந்தியாவில் எங்காவது தங்கியிருந்து புலிகளின் தலைவரை வன்னியில் வந்து சந்திப்பதற்கு அனுமதி இந்திய அரசிடம் கேட்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் வாஜபேய்.. அதனை மனிதாபிமான அடிப்படையில் சாதகமாக பரிசீலிப்பதாய் சொல்லியிருந்தார். ஆனாலும் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். கருணாநிதி என்ன நீலைப்பாடு கொண்டிருந்தார் என தெரியவில்லை..
, ...
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
96ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் மிக மோசமாக நடத்தப்பட்ட நேரம்....
கலைஞர் அதை கண்டித்து சென்னையில் மாபெரும் மவுன ஊர்வலம் நடத்தினார்.... கட்டுக்கடங்காத கூட்டம்....
தேனாம்பேட்டையை ஊர்வலம் நெருங்கும்போது மாலை 6.30.... அப்போது ஆட்சியில் இருந்த ஜெ. தெருவிளக்குகளை எல்லாம் மின்சாரத்தை துண்டித்து அணைத்தார்....
இது தான் ஜெயா உங்கள் மீது கொண்டிருக்கும் பாசம்......
,
......
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
சச்சிதானந்தம் என்ற அறிஞர் ஈழத்தவர் இந்தியாவிலிருக்கிறார்...பண்டராவன்னியனை பற்றி கருணாதி அவர்கள் எழுத தகவல்களை வழங்கியவர்...கருணாதியின் மிக நெருங்கிய நண்பரும் கூட..கருணாதியின் பதவியேற்ப்பு வைபங்களில் கூட இவரை அழைத்து கெளவரபிப்பார்...சச்சிதானந்தம் தீவிர ஈழ விசுவாசி..கருணாதிக்கு ஈழபோராட்டத்தை பற்றி முழூமையாக தெரியும் ஆனால் இங்கு இன உணர்விலும் பார்க்க வர்த்தக அரசியல் நலன்கள் முக்கியமாக இருப்பதால் ஒன்றும் செய்யமபடியாதுள்ளதென்று நினைக்கிறன்.
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
கொஞ்சம் சீரியசாக போகின்றதனால் நகைச்சுவைக்காக இதை செருகுகின்றேன். அதாவது புலிகளை ஆதரிக்க மாட்டோம். ஆனால் தமிழீழம் அமைந்தால் மகிழ்ச்சியடைவோம் என்று சிலர் கூறுகிறார்கள். அது எவ்வாறு இருக்கின்றதென்றால் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதை விரும்ப மாட்டோம். ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியடைவோம் என்பது போல இருக்கிறது என்றார் ஒரு நிகழ்வில் தேனிசை செல்லப்பா
, ...