Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை
#41
மட்டக்களப்பில் பிரதேசவாதம் (சில அடிவருடிகளால்)தலைதூக்க முற்பட்டபோது அங்குள்ள பொது சனத்தக்கும் உலகநாடுகளுக்கும் அதன் உண்மைநிலையை எடுத்துசொன்ன கிழக்கு வாழ் அறிஞர்களில் நடேசன் ஜயா சிவராம் ஜயா இப்ப பரராசசிங்கம் ஜயா எல்லாரையும் இழந்து விட்டோம் இனியும் பொறுமை காத்து மௌனமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பதுக்கு நாம் என்ன இ....வா... ளா????;
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்... Cry Cry Cry
[size=18]<b> ..
.</b>
Reply
#43
<b>ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம்</b>

தமிழ்த் தேசப்பற்றாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்த் தேசப் பற்றாளரும் மனித உரிமை விழுமியங்களை மதித்து மனித உரிமை மேம்பாட்டுக்காக உழைத்தவருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு நகரின் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள சென் மேரிஸ் தேவாலயத்தில் 24 டிசம்பர் 2005 நள்ளிரவு அன்று நத்தார் பண்டிகை ஆராதனையில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறையினரும் அவர்களது கருணா குழு, ஈ.பி.டி.பி உள்ளிட்ட ஒட்டுக்குழுவினராலும் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவரது மனைவி திருமதி சுகுணம் உட்பட ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஏழு பேர் காயமடைந்திருக்கின்றனர்.

வருகைக்கால ஆராதனையில் கலந்து தனது மக்களின் சமாதானத்திற்காகவும் விடுதலைக்காகவும் மன்றாட்டுச் செய்துவிட்டுப் பேராயரிடமிருந்து நற்கருணைப் பிரசாதம் பெற்றுத் திரும்புகையில் தேவாலயத்திற்குள் புகுந்திருந்த சிறிலங்காப் படைப் புலனாய்வாளர்களும் ஒட்டுக் குழுவினரும் இணைந்து இந்தத் தேசப்பற்றாளரைத் துப்பாக்கிச் சூட்டில் கொடூரமாகக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காகச் சர்வதேச அரங்கிலும், இராஜதந்திர அரங்கிலும் குரல் எழுப்பி, மனித உரிமை அமைப்புக்களோடு தொடர்புகளைப் பேணி வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செலகத்தின் உருவாக்கத்திற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட இந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரை சிறிலங்கா படைப் புலனாய்வுத்துறையினர் மண்ணில் வீழ்த்தியுள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய போன்ற தெற்கின் இனவாத சக்திகளின் கரம் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறை வரை நீண்டு செயற்படுவதை திட்டமிட்ட இக்கொலை நிரூபித்து நிற்கின்றது. மக்கள் தொண்டனாக தமிழ்த் தேச விடுதலைக்காகவும் மனித உரிமை மேம்பாட்டிற்காகவும் அயராது உழைத்த இவரை இந்த இனவாத சக்திகள் மரணிக்கச் செய்திருக்கின்றன.

இந்த ஈவிரக்கமற்ற கொடூரக் கொலையினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அன்னாருடைய மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>புதினம்
.

.
Reply
#44
MUGATHTHAR Wrote:மட்டக்களப்பில் பிரதேசவாதம் (சில அடிவருடிகளால்)தலைதூக்க முற்பட்டபோது அங்குள்ள பொது சனத்தக்கும் உலகநாடுகளுக்கும் அதன் உண்மைநிலையை எடுத்துசொன்ன கிழக்கு வாழ் அறிஞர்களில் நடேசன் ஜயா சிவராம் ஜயா இப்ப பரராசசிங்கம் ஜயா எல்லாரையும் இழந்து விட்டோம் இனியும் பொறுமை காத்து மௌனமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பதுக்கு நாம் என்ன இ....வா... ளா????;

:roll: Cry Cry அண்மைக்காலத்தில் அதிகமான பெரியவர்களை ஈழதமிழர்கள் நாம் இழந்து விட்டோம் என்ன... அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி
Reply
#45
<b>மாமனிதர் விருது.</b>

சுயநலவாழ்வைத் துறந்து, பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து, அந்த உயர்ந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த ஒரு உத்தம மனிதரை இன்று தமிழீழ தேசம் இழந்துவிட்டது. தமிழீழ மண்ணினதும் தமிழீழ மக்களினதும் விடிவிற்காக ஓயாது ஒலித்த ஒரு உரிமைக்குரல் இன்று ஒடுங்கிவிட்டது. பகைவனின் கோழைத்தனமான கோரமான தாக்குதலுக்கு ஒரு மகத்தான மனிதர் பலியாகிவிட்டார். இது தமிழீழ விடுதலை வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் துயர நிகழ்வு.

திரு. ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர், அசாத்தியமான குணவியல்புகள் கொண்டவர். இனிமையான பேச்சும், எளிமையான பண்பும், பெருந்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் சிறப்பியல்புகள். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான அரசியல்வாதி. தமிழீழ மக்களால் பெரிதும் போற்றப்பட்ட சிறந்த மனித உரிமைப் போராளி. அனைவரையும் கவர்ந்த ஒரு தமிழினப் பற்றாளர். இவரது சாவு தமிழர் தேசத்திற்கு என்றுமே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் வாழ அவர் என்றும் விரும்பியதில்லை. இந்த அடக்குமுறைக்குள் தமிழீழ மக்களது வாழ்வு சிக்குண்டு சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார். இந்த அடக்குமுறையில் இருந்து தமிழீழ மக்கள் முற்றாக விடுபட்டு, விடுதலை பெற்று சுதந்திரமாக கௌரவமாக நிம்மதியாக வாழ்வதையே தனது வாழ்வின் இலட்சியமாக அவர் வரிந்து கொண்டார். இந்த இலட்சியத்தால் உந்தப் பெற்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக நின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்தார். பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் ஆபத்துகளுக்கும் மத்தியில் மிகுந்த துணிவுடன் தமிழ்த் தேசியத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் பல்வேறு வழிகளில் கைகொடுத்து உதவினார். மட்டக்களப்பு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் நிறுவுனர்களில் ஒருவராகவும் தமிழீழ மக்களது உரிமைக்காக இடையறாது தொடர்ந்து உழைத்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும் உண்மைகளையும் உலகுக்குப் பரப்புரை செய்தார். அன்னார் ஆற்றிய அரும்பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றுமே பாராட்டுக்குரியவை.

திரு. ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியை கௌரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகனாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர் என்றும் வாழ்வார்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இப்படிக்கு
வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.
::
Reply
#46
ஐயா ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் பூதவுடல்,,,,,,,, Cry Cry Cry Cry
http://www.nitharsanam.com/?art=14062

நன்றி நிதர்சனம்,,,
[b]

,,,,.
Reply
#47
<img src='http://img511.imageshack.us/img511/4086/josephforces0wx.jpg' border='0' alt='user posted image'> படத்தின் மூலம் www.tamilcanadian.com

கடந்தவாரம் அரச அதிபரோடான தமிழ் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பில் இராணுவத்தளபதிக்கு அருகில் இருந்து கருத்தாடியவர் மாமனிதர் யோசப் பரராஜசிங்கம்.

அந்த சந்திப்பில் நிலவிய சூழ்நிலைபற்றி தினகுரலில் இருந்து...
"வடக்கு நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது கூட்டமைப்பினர் தெரிவித்த பல்வேறு முறைப்பாடுகளையும் கேட்டு அவற்றுக்கு பரிகாரம் காண்பது போல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கருத்துகளை தெரிவித்த போதும்இ ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அங்கு வந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாஇ இராணுவத்தினரை முகாம்களினுள் முடக்குவதன் மூலமே தற்போதைய மோசமான சூழ்நிலையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முடியுமென்ற கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியை விட இராணுவத் தளபதியே தனது அதிகாரத்தை அங்கு நிலை நிறுத்த முயன்றுள்ளார். இதுஇ குடாநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலை வடக்கில் ஏனைய பகுதிகளிற்கும் பரவக் காரணமாகிவிட்டது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டையும் மீறி விட்டதாகவே கருதப்படுகின்றது.

புதிய ஜனாதிபதிஇ புதிய பிரதமர்இ இவர்களைச் சார்ந்த பிரதான கூட்டணிக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவின் அதி தீவிரவாதங்களை விடஇ புதிய இராணுவத் தளபதியின் கடும் போக்கு நிலைஇ போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக தமிழர் தரப்பை கருத வைத்துள்ளது."

http://www.thinakural.com/New%20web%20site...25/vithuran.htm
Reply
#48
<img src='http://img516.imageshack.us/img516/3581/pararajasingam13wq.jpg' border='0' alt='user posted image'>
<b>கொலையுண்ட
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்
அவர்களது
கொலை சம்பந்தமான
புகைப்படங்களைப் பார்க்க:-</b>

http://www.nitharsanam.com/?art=14062

<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/josep251205-5.jpg' border='0' alt='user posted image'>

- நன்றி : நிதர்சனம்
Reply
#49
மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் மரண விசாரணைகள் முடிவடைந்து அவரது உடல் வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் மரண விசாரணைகள் முடிவடைந்து உடல் உறவினர்களிடம் கைளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடலம் தற்சமயம் மட்டக்களப்பில் அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு;ள்ளது. உடலம் எப்போது நல்லடக்கம் செய்யப்படும் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

இதேவேளை சுட்டுக்கொல்லப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் உடலத்தை அஞ்சலிக்காக மட்டக்களப்பின் தமிழீழ விடுதலை புலிகளின் கடடு;ப்பாட்டு பகுதிக்கு எடுத்துச்செல்லும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


¿ýÈ¢:À¾¢×.¦¸¡õ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#50
விடுதலைப் புலிகளே ஜோசப் பரராசசிங்கத்தை சுட்டுக்கொன்றனர் - சிறீலங்கா கூட்டுப்படைத் தலைமையகம்.
விடுதலைப் புலிகளாலேயே ஜோசப் பரராசசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிறது சிறீலங்காவின் கூட்டுப்படைத் தலைமையகம்.




தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கூட்டுப்படை தமைமையகம் தெரிவித்துள்ளது.கூட்டுப்படை தலைமையகம் இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்;டுள்ளது.

இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கையொப்பமிட்டு எமது செய்திசேவைக்கு இன்று பிற்பகல் 3.42 க்கு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு புனித மரியாள் தேவஸ்தானத்தில் ஆராதணையில் ஈடுபட்டிருந்தபோது நேற்று இரவு 1.10 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தேவாலயத்திற்கு செல்ல ஆயத்தமாகி இருக்கவில்லை எனினும் அவருக்கு நேற்று இரவு 10 மணியளவி;ல் கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்தே அவர் தேவாலயத்திற்கு சென்ற தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது ஜோசப் பரராஜசிங்கத்தின் மீது 7 துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு;ள்ளன.இதன்போது ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவியான சுகுணம் பரராஜசிங்கம் படுகாயமடைந்து மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவரைத்தவிர மேலும் 7 பேரும் இந்த சம்பவத்தின்போது காயமடைந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#51
ஜோசப் பரராஜசிங்கத்துக்கு மலர் வணக்கம் செலுத்தினார் தேசியத் தலைவர்
மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் உடலுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கிளிநொச்சியில் மலர் மாலைகள் அணிவித்து வணக்கம் செலுத்தினார்.

<img src='http://img412.imageshack.us/img412/2134/200512280012qu.jpg' border='0' alt='user posted image'>
கடந்த ஞாயிறு நத்தார் தின நள்ளிரவு ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் புகழுடல் தாங்கிய ஊர்தி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் கிளிநொச்சியை வந்தடைந்தது.

<img src='http://img412.imageshack.us/img412/4739/200512280046ph.jpg' border='0' alt='user posted image'>




கிளிநொச்சியில் உள்ள தூயவன் அரச அறிவியல் கல்லூரி மண்டபத்தில் வைக்கப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் புலிக்கொடியைப் போர்த்தினார்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முக்கிய தளபதிகள், போராளிகள், பொறுப்பாளர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
http://www.eelampage.com/?cn=22899
Reply
#52
அன்னாருக்கு எமது குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலிகள்.
Reply
#53
ரிரின் ஒளிப்படங்கள் எனது தளத்தில் இனணக்கப்பட்டுள்ளது
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)