11-22-2003, 12:24 PM
தாத்தாவிற்கு எல்லாம் விளங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. ஆயினும் என்ன செய்ய செஞ்சோற்றுக் கடன் என்று ஒன்று இருக்கின்றதே. அதற்காவது நாலு வார்த்தை இப்படி எழுதாவிட்டால் எப்படி? இருபத்தி ஏழு வருடத்தில் கிழித்ததன் பிரதிபலனை இனித்தான் நாம் அனுபவிக்கப் போகின்றோம். உங்களைப் போன்றவர்கள் போய் அந் நாடுகளின் சுக போக வாழ்வை வர்ணித்தால் மற்றவன் வரத்தானே செய்வான். ஆயினும் மண் பற்றுள்ளவன் அசையமாட்டான். அரசு என்றிருந்தால் வரிகட்டத் தான் வேண்டும். நாம் எல்லோரும் உளப் புூர்வமாக வி.பு களை எமது பாதுகாவலர் அரசு என்று என்றோ தீர்மானித்து விட்டோம். நாளைய முன்னேற்றத்திற்கு வரி வட்டியென்ன அதற்கு மேல கேட்டாலும் கொடுப்போம். அது சரி மதி மண் மீட்புக்கு வாங்கிதை எல்லாம் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். போய் வாங்கப் பாருங்கள். சும்மா நொய் நொய் என்று உடைந்த ரெக்கோட்பிளேயர் மாதிரி தேய்த்துக் கொண்டிருக்காமல். நிச்சயமாய் அந்தத் தலைவனின் தீர்க்கதரிசனத்தால் நாம் எல்லோரும் ஒரு முன்னேற்றமான அமைதியான வாழ்வு வாழத்தான் போகின்றோம். அதைப் பார்த்து நீங்கள் உங்களைப் போன்றவர்கள் வயிறு எரியத் தான் போகின்றீர்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->