Posts: 30
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
குழப்புவது யார் ?குழம்புது யார் ?கூடாதவர் யார்?கோடரிக்காம்பாக மாறுவது யார்?
மூன்று அமைச்சுகள் கலைப்பு ;பாராளுமன்றம் இடை நிறுத்தம்:அவசரகாலநிலை பிரகடனம்.போர்நிறுத்தம் என்னவாகும்?பேச்சுவார்த்தை என்னவாகும்?என்று தமிழ்மக்கள் மட்டுமல்ல சர்வதேசசமூகமும் ஆர்வத்தோடு நோக்குகின்றன.கோயில்களில் குணடுவீசப்பட்ட போது கேட்காதவர்கள்,தேவாலயங்கள் சிதைக்கப்பட்ட போது சிந்திக்காதவர்கள் இன்று ஈழத்தையே பார்த்துக் கொண்டிர்கிறார்கள்.ஐ.நா செயலாளர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.அமெரிக்கத்தலைவர் புருவங்களுயர்த்துகின்றார்.ஐரோப்பிய ஒன்றியம் அஙகலாய்க்கின்றது.இந்தியா ஆச்சரியம் தெரிவிக்கின்றது. ஏன் இந்த உலகமே ஈழத்தைப் பார்த்துக் கொணடிருக்கின்றது.
ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இது எல்லாமே பழகிப் போனவை.மாவட்டம் மகாவட்டமாய்ப் போய்விட்டது.மாகாணம் புஸ்வாணமானது திம்பு பெரிய வம்பாய்ப் போனது "விடாக்கொண்டன் கொடாக்கண்டன்"என்ற தெற்கிலங்கை அரசியல் மாறும் வரை பேச்சுவார்த்தைகள் எல்லாம் பேசாமடந்தைகளே! .அரசியல் தீர்வென்பநு ஆகாயத்தாமரையே.இருந்தாலும் இன்றும், இபோதும் தமிழ் மக்கள் மட்டுமல்ல; தமிழீழ விடுதலைப்புலிகளும் சமாதானத்தையே விரும்புகிறார்கள்.ஊடகங்களின் தணிக்கை இனி ஏற்பட்டாலும் வன்னி ஊடகவியலாளர் மகாநாடு,மேற்குலக அக்கறை என்பன பெரிய வெற்றிகளே!
குழப்புவது யார்?கோடரிக்காம்பாக மாறுவது யார்?என்று தீர்க்கதரிசனத்துடன் செல்வன் சுதந்திரராஜா இளவரசன் சுவீடனில் நவ2002 இல் நடந்த மாவீரர் தின விழாவிலே ஒரு கவிதை மூலம் கூறியுள்ளார்.அதன் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.
பகைவரை சேர்த்திடும் பக்குவம்
பாதகரை விரட்டிடும் தத்தவம்
சாணக்கியன் அறியாத சாணக்கியம்
சரித்திரம் போற்றிடும் சாமர்த்தியம்
ஆம்! தமீழவிடுதலைப் புலிகள்
மறைந்தடிக்கும் போராளிகள் மட்டுமல்ல
மரபு வழிப் போர் வீரர் மாத்திரமல்ல
அரசியல் சாணக்கியம், தீர்க்கதரிசனம் உள்ளவர்கள்.
உண்மை அறியாத ஊடகங்கள்
ஊடகஙகள் அறியாத பூடகங்கள்
வேடங்கள் மாறாத நாடகங்கள்
பாடங்கள் படிக்காத அரசுகள்
இவற்றை மாற்றி
ஏடுகள் அறிந்த செய்தி
நாடுகள் புரிந்த உண்மை
கிழக்கும் மேற்கும் சேர்ந்து
வழக்குப் பார்க்கும் விந்தை
இப்போ
நடுநிலை நாடு சேர்ந்து
அரசியல் தீர்வு வேண்டி
பேச்சு வார்தத்தை என்று
பேரம் பேசுவது வெற்றி
இனி
குழப்புவது யார்?குழமபுவது யார்?
கூடாதவர் யார்?கோடாரிக்காம்பாக மாறுவது யார்?
என நாளை உலகறிந்தால் நமக்கு அதுவும் ஒரு வெற்றியே
- சுதந்திரன்-
:?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அன்று தேவாலையம், கோவில்கள் குண்டு வீசித் தகர்ப்பதற்கு குண்டு பணத்திற்காவது கடனுக்காவது விற்கலாம் என்ற நப்பாசை அவர்களுக்கு. என்ன கொடுத்தாலும் இரும்பு மனிதர்கள் அசையார் என்ற செய்தி ஆனையிறவிற்குப் பின் சர்வ தேசத்திற்கும் புரிந்து விட்ட விடப்பட்ட செய்தி. இதற்கு மேலும் அவர்களிடம் விற்க வழியில்லை. தமது முகங்களில் புூசப்பட்ட கரியையாவது துடைப்போம் என்று ஒரு சில வல்லரசுகள் நினைக்கின்றன. அது தான் அந்தப் பார்வை. எம் மீது அனுதாபம் கொண்டல்ல. நேற்றைய செய்தியில் ஆர்மிடேஜ் சொன்ன கதை கேட்டீர்கள் தானே. வி.புலிகள் தமது வன்முறையினாலும் போரினாலும் களைப்படைந்து விட்டார்களாம். அதனால் தான் அவர்களின் போர் நிறுத்தம் ஒப்பந்தம் எல்லாம் என்பது போல கதை விட்டுள்ளார். புரிந்து கொள்ளுங்கள். ஒரு சில சர்வதேசத்தின் அனுதாபங்களை. அனைத்தையும் அறியத் தந்த அந்த ஒப்பற்ற தலைவனின் சாணக்கியத்தை எண்ணி வியர்க்கின்றேன். நகர்த்த வேண்டிய நேரம் நகர்த்த வேண்டிய காய்களை வெகு லாவகமாக நகர்ததிக் கொண்டிருக்கின்றான் எம் தேசத்தின் தலைவன். வெற்றிக் கனிகளைப் பெற்றுத் தருவான் என்ற நம்பிக்கை நிறைய உண்டு.
அன்புடன்
சீலன்.
seelan
Posts: 30
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
தம்பி சீலன்! சரியாகச் சொன்னீங்கள்.ஊராக்கில போய் பாராக்கு பார்த்து விட்டு ஆப்பிழுத்த குரங்கு போல அவதிப்படுறது.ஆ-யு வா,பே.யு வா என்று கத்துறது.அண்டைக்குச் சொல்லிச்சினம்-"டோக்கியோவில கதைச்சதை விட ஒஸ்லோவில கதைச்சதை விட கூடக் கேக்கிறாங்கள்" எணடு;இப்ப பொடியள் களைச்சுப் போட்டினம் எண்டுகினமோ?
எல்லா நாடுகளும் கரிசனையாய் இலங்கைப் பிரச்சினையை தீர்க்க வேணும் எணடுறாங்கள்.யாராவது தமிழற்றை பிரச்சனைச்சினை எணடு சொல்லுறாங்களா?சுதநதிரவர்த்தக வலயம், வேற பிஸ்னஸ்சுகள் இன்னும்.....அது சரி. ஆடுகள் நனையுது எணடு ஓநாய்கள் அழுதாலும் உண்மையாய் யார் கவலைப்படுறது?புலிகள்தானே!ஏன் இந்த சனங்களும் கஸ்டடப்படுதுகளென்று தானே புலிகளும் போர்நிறுத்தங்கள் செய்தது.ஒண்டு மட்டும் சொல்லுறன்.அடிச்சு அப்பம் தீத்த ஏலாது
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
தாத்தா உங்களுக்கு இந்த வல்லரசுக்கள் சொல்வதெல்லாம் தாரக மந்திரம். இரண்டு நாட்களுக்கு முந்தய பத்திரிகை;களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள். வேலை அதிகமெனில். பாட்டியிடம் கொடுங்கள் பார்த்து வைப்பார்கள். பார்வையும் சரியில்லை. அவர்கள் உதவி செய்வார்கள்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அட செய்தி புதிதாகத் தான் உள்ளது. அப்படியாவது கிடைக்கட்டும். பிறகு பார்ப்போம் யார் சட்டங்கள் அங்கே செல்லுபடியாகுமேன்று. அட ஆச்சரியமாயிருக்கின்றதே உங்களுக்கும் கணக்கக் கொடுப்பவர் சினேகிதம் உள்ளதா? கேட்டுப் பார்க்க வில்லையா ஏன் கணக்கக் கொடுக்கின்றீர்கள் என்று?
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பட்டங்கள் கொடுப்பது நீங்கள் செய்யும் தொழிலைக் எழுதும் எழுத்தையும் கருத்திற் கொண்டு தான். மண் பற்றுடன் எழுதுங்கள் உங்களையும் தலை மேல் தூக்கி வைத்து போற்றலாம். நீஙகளும் நாகரீகமாய் எழுதுங்கள்.அதை விட்டு விட்டு கண்டதையும் கழியதையும் எழுதினால் பட்டங்கள் அப்படித் தான் கிடைக்கும். அப்படி பச்சோந்தித் தனமாக வாழ்ந்தால் தான் முன்னேறலாம் என்று ஒரு சிலருடைய கணிப்பு.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 30
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
எல்லாருக்கம் தெரியும் தானே உம்முடைய நண்பர்களும் உம்முடைய தொழில் தானே செய்வினம் சிங்கப்புூர் ஷ்ரவேல் என்று சொன்னியளே அப்ப விளங்குது எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டையள்தான் என்ன கதைக்க முடியாம ஐயா போடுறியள் பெடியளோடை. எதுக்கு ஒன்றும் புரியேலை இதுகும் அவ்வழியோ?
:twisted: :twisted: :twisted:
. . . . .
Posts: 30
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
.ஒரு காலத்தில் நசுக்கப்பட்ட யூதர் சமுதாயதிற்காக அமெரிக்கா குரல் கொடுத்து இஸ்ரேல் உருவானது உண்மை.ஆனால் இன்று ஈழத்தமிழருக்காக மனத்தூய்மையுடன் குரல் கொடுக்க எந்த அரசாவது முன் வருமா ?நாடுகளோ வல்லரசுகளோ பூகோள நலன் அல்லது பொருளாதாரநலன் என்பதைத் தான் முதலில் சிந்திக்கின்றன..கிழக்கு தீமோரின் சுதந்திரத்திலே அவுஸ்திரேலியாவுக்கு ஆர்வம் இருந்தது.யூகோஸ்லவியா ஐரோப்பாவிலே இருக்கினறது.ஆனால் நாமோ?
சில செய்திகள் யதார்த்தத்திற்கு எதிராக இருக்கலாம்..அவற்றை வேடிக்கையாகவும் எடுக்கலாம்.கருத்துக்கள் முரணபடலாம்.ஆனால் கருத்தை எழுதுபவர்கள் முரணபடக்கூடாது.ஆகவே அன்பான சீலன்,மதிவதனன் அவர்களே!உங்கள் கருத்துக்களை மட்டும் மோதவிடுங்கள்.இது என வினயமான வேண்டுகோள். சமாதானப் பேச்சு வார்த்தைகள் காலவரையின்றி இடைநிறுத்தம்-ஜ.எல்.பீரிஸ் .என்று, புதினம்(101103 )கூறுகின்றது.பேச்சு வார்த்தைகள் செய்யவே அரசியல் ஸ்திரம் போதவில்லை..இநத அரசு வேறு ஒருஅரசுடன் சேர்ந்து எமக்கு... :?: :roll: