Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஐயோ ப்ரியாசகி மதனா என்பதைத்தை தான் நான் முதலில் எழுதிவந்தேன். ஆனால் மதன் என்று இங்கு இருப்பதால் இருவரின் கருத்துக்களும் மாறுபாடுவதால் ரமா என்று மாற்றி விட்டேன். இனி உங்களுடன் ரமா என்று தான் வரப்போகின்றேன்
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
6) மக்கள் நிலை
(சிட்டு)
தென்னை மரதத்தில் சிட்டுப்
பின்னும் அழைக்கும் - ஒரு
புன்னை மரத்தினில் ஒடிய காதலி
போ போ என்றுரைக்கும்
வண்ண இறக்கை - தன்னை
அங்கு விரித்தே - தன்
சென்னியை உள்ளுக்கு வாங்கி அச் சேவலும்
செப்பும் மணிவாயால்
என்னடி பெண்ணே உயிர்
ஏகிடும் முன்னே நீ
என்னிடம் வா எனையாகிலும் கூப்பிடு
தாமதம் நீக்கி விடு
என்றிது சொல்லப் - பெட்டை
எண்ணம் உயர்ந்ததே - அத்
தென்னையிற் கூடிப்பின் புன்னையில் பாய்ந்தது
பின்னும் அழைக்கும் சிட்டு
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
அணில்
கீச்சென்று கத்தி அணில்
கிளையொன்றில் ஒடிப் பின்
வீச்சென்று பாய்ந்து தன் காதலன் வாலை
வெடுக்கென்று தான் கடிக்கும்
ஆச்சென்று சொல்லி - ஆண்
அணைக்க நெருங்கும் எடன்
பாய்ச்சிய அம்பென கீழ்த்தரை நோக்கிப்
பாய்ந்திடும் பெட்டை அணில்
மூச்சுடன் ஆணோ - அதன்
முதுகிற் குதிக்கும் கொல்லர்
காய்ச்சும் இருப்பிடை நீர்த்துளி ஆகக்
கலந்திடும் இன்பத்திலே
ஏச்சுகள் அச்சம் - தம்மில்
எளிமை வளப்பம் - சதிக்
கூச்சல் குழப்பங்கள் கொத்தடி மைத்தனம்
கொஞ்சமும் இல்லை அங்கே!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வானும் முல்லையும்
எண்ணங்கள் போலே - வரி
வெத்தனை கண்டாய் - இரு
கண்ணைக்கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்ள்
கூடிச் சுடர்தரும் வான்!
வண்ணங்களைப் போய்க் - கரு
மாமுகில் உண்டு - பின்பு
பண்ணும் முழக்கத்தை மின்னலை அம்முகில்
பாய்ச்சிய வானவில்லை
வண்ணக் கலாப - மயில்
பண்ணிய கூத்தை - அங்கு
வெண்முத்து மல்லிகை கண்டு சிரித்தாள்
மேல் முத்தை வான் சொரிந்தான் !
விண்முத் தணிந்தாள் - அவள்
மேனி சிலிர்த்தாள் - இதைக்
கண்ணுண்ண உண்ணக் கருத்pன் லின்பக்
கடல்வந்து பாய்ந்திடுதே!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
மிக்க நன்றி நீங்கள் தந்து உதவிய இனையதளத்திற்கு. மிகவும் பயனுள்ளதாய் இருக்கின்றது
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
மனிதர்
மஞ்சம் திருத்தி உடை
மாற்றி யணிந்தே கொஞ்சம்
கொஞ்சிக் குலாவிட நாதன் வரும்படி
கோதை அழைக்கையிலே
மிஞ்சிய சோகம் - மித
மிஞ்சிய அச்சம் என்
வஞ்சியும் பிள்ளையும் நானிறந்தால் என்ன
வாதனை கொள்வாரோ
நெஞ்சிலிவ் வாறு நினைந்
தங்குரைக் கின்றான் -அடி
பஞ்சைப் பரம்பரை நாமடிக் பிள்ளைகள்
பற்பலர் ஏதுக் கென்பான்
கஞ்சி பறித்தார் - உழுங்
காதல் பறித்தார் - கெட்ட
வஞ்சகம் சேர்சின்ன மானிடச்சாதிக்கு
வாய்த்த நிலை இதுவோ!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
காட்சி இன்பம்
குன்றின் மீது நன்று கண்டேன்
கோலம் என்ன கோலம்
போன் ததும்பும் அந்திவானம்
போதந் தந்த தேடி தோழி
முன்பு கண்ட காட்சி தன்னை
முருகன் என்றும் வேலன் என்றும்
கொன் பயின்றார் சொல்வார் அத
குறுகும் கொள்கை அன்றோ தோழி
கண்ணும் நெஞ்சும் கவருகின்ற
கடலை வானைக் கவிஞர் அந்நாள்
வண்ண மயில்வே லோன் என்றார்கள்
வந்ததே போர் இந்-நாள் தோழி!
எண்ண எண்ண இனிக்கும் காட்சிக்
கேது கோயில்? தீபம் ஏனோ!
வண்ணம் வேண்டில் எங்கும் உண்டாம்
மயில் வெற்பும் நன்-றே-தோ-ழி
பண்ணவேண்டும் புசை என்பார்
பாலும் தேனும் வேண்டும் என்பார்
உண்ணவேண்டும சாமி என்பார்
உளத்தில் அன்பு வேண்-டார்- தோ-ழி
அன்பு வேண்டும் அது யார்க்கும்
ஆக்கம் கூட்டும் ஏக்கம் நீங்கும்
வன்பு கொண்டோர் வடிவு காட்டி
வணங்க என்று சொல்-வார்-தோ-ழி
என்பும் தோலும் வாடு கின்றார்
ஏழை என்ப தெண்ணார் அன்றே!
துன்பம் நீக்கும் மக்கள் தொண்டு
சூழ்க வையம் தோ-ழி-வா-ழி!
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நன்றி ரமா. பாரதியார் கவிதைகளை தட்டச்சு செய்தா போடுறீங்க? நிறைய நேரம் செலவிடுறீங்க என்று நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
ராமா.. சீ. சீ. ரமா உங்கள் பாரதி கவிகளுக்கு நன்றி ரமா...
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ஆகா..இபப்டி எல்லாம் கவிதை எழுதலாம் என்ன..நல்ல கவிதைகள்..நன்றி ரமா..
..
....
..!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி ரமா. பாரதியார் கவிதைகளை தட்டச்சு செய்தா போடுறீங்க? நிறைய நேரம் செலவிடுறீங்க என்று நினைக்கின்றேன்.
_________________
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
ஆமாம் மதன் தட்டஞ்சு பண்ணித்தான் போடுகின்றேன். ஆனால் அதை செய்யும் போது தான் கவிதைகளின் கருத்துக்கள் மிகவும் விளக்கமாக தெரிகின்றது
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி எல்லோருக்கும். உங்களின் ஒத்துழைப்பால் தான் உற்சாகத்துடன் தொடர்ந்து தட்டச்சு செய்து போடுகின்றறேன்
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ம்மம்ம் இனி எல்லோருக்கும் பிடித்த தலைப்புக்கள்
காதற் கடிதங்கள்
என் அன்பே
இங்குளார் எல்லோரும்
சேமமாய் இருக்கின்றார்கள்.
என் தோழியார் சேமம்!
வேலைக்காரர் சேமம்
உன் தயவால் எனக்காக உன் வீட்டுக்
களஞ்சியநெல் மிகவுமுண்டே
உயர் அணிகள் ஆடைவகை ஒவ்வொன்றில்
பத்துவிதம் உண்டு. மற்றும்
கன்னலைப்போற் பழவகை பதார்த்த வகை
பட்சணங்கள் மிகவுமுண்டு
கடிமலர்ப் புஞ்சோலையுண்டு மான் சேமம்
மயில சேமம் பசுக்கள் சேமம்
இன்னபடி இவ்விடம்யா வரும் எவையும்
சேமமென்றன் நிலையோ என்றால்
இருக்கின்றேன் சாகவில்லை என்றறிக
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
காதலன் பதில்
செங்கரும்பே
உன் கடிதம் வரப் பெற்றேன்
நிலைமைதனைத் தெரிந்து கொண்டேன்.
தேமலர் மெய் வாடாதே! சேமமில்லை
என்று நீ தெரிவித்துக் கின்றாய்.
இங்கென்ன வாழ்கின்றதோ? இதயத்தில்
உனைக் காண எழும் ஏக் கத்தால்
இன்பாலும் சர்க்கைரையும் நன்மணத்தல்
பனிக்கட்டி இட்டு றைத்த
திங்கள் நிகர் குளிர்உணவைத் தின்றாலும்
அதுவும் தீ! தீ! தீ! செந்தீ!
திரவியஞ்சம் பாதிக்க இங்குவந்தேன்.
உனை அங்கே விட்டுவந்தேன்!
இங்குனைநான் எட்டிக்காய்
என நினைத்ததா யுரைத்தாய்; இதுவும் மெய்தான்
இவ்வுலக இன்பமெல்லாம் கூட்டிஎடுத்
துததெளிவித் திறுத்துக்காய்ச்சி
எங்கும்போல் எடுத்துருட்டும் உருட்சியினை
எட்டிக்காய் என்பா யாயின்
எனக்குநீ எட்டிக்காய் என்றுதான்
சொல்லிடுவேன்.
இங்குன்
அன்பன்