09-02-2005, 08:29 PM
நன்றி மதன்,
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
|
உராய்வு
|
|
09-02-2005, 08:29 PM
நன்றி மதன்,
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
09-02-2005, 09:14 PM
kirubans Wrote:ப்ரியசகி Wrote:கவிதைகளை எங்க வாசிக்கலாம்? ஒரு சில கவிதைகளை களத்தில் போடலாமே.. :roll:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
09-03-2005, 06:54 AM
<b> . .</b>
09-03-2005, 08:23 AM
<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin-->ஒரு கவிதைhttp://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=45&Itemid=60<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றிகள்...
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
09-03-2005, 11:54 AM
அனைவருக்கும் எனது நன்றிகள் முதலில்.
நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய விபரங்களை நான் இங்கு விபரமாக எழுத நினைத்தேன். அப்பால் தமிழில் இருந்து விரிவான விளக்கமான கட்டுரையை இங்கிணைத்து எனது வேலையை மதன் சுலபமாக்கவிட்டார். நன்றி. இருப்பினும் மேலதிகமாக அக்கட்டுரையில் குறிப்பிடப்படாத சில விடயங்களை மட்டும் இங்கு நான் எழுதுகிறேன். * நிகழ்வு ஏற்கனவே குறிப்பிட்டது போல் சரியாக மாலை 3:30 மணிக்கு தொடங்கியது. * ஆவணக்கண்காட்சி பலரையும் வியப்புக்குள்ளாக்கிய ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. இடப் பற்றாக்குறை காரணமாகவும், விமானத்தில் அனைத்தையும் கொண்டு செல்லமுடியாத காரணத்தினாலும் அன்ரன் அண்ணாவின் சேகரிப்பில் 50 இல் 1 பகுதியே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. * எதிர்வரும் காலங்களில் இலண்டனில் இந்த ஆவணக்கண்காட்சியை முழுமையாக வைப்பதற்கு சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. சிலர் அதற்கான செயற்பாடுகளில் இறங்க முன்வந்துள்ளார்கள். * திரு ஏ.சி.தாசீசியஸ் ஐயாவும் அவரது மனைவியும் அரங்குள் வந்தவுடன் மாலை 4:30 மணியளவில் நூல் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது. * கிருபன் எற்கனவே குறிப்பிட்டது போல் நாடகபாணியிலான முறையில் தனது தலைமையுரை ஏ.சி.தாசீசியஸ் ஐயா நிகழ்த்தினார். அங்கு உரையாற்ற வந்தவர்களையும், அவர்களது தனித்துவங்களையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். * லண்டனில் இருந்தபோதும் பல கவிஞர்கள் நிகழ்விற்கு வராததை உரிமையோடு கண்டித்தார். வெத்திலை பாக்கு வைத்து அழைத்தால் தான் இப்படியான இலக்கிய நிகழ்வுகளிற்கு இவர்கள் வருவார்களா என்று கோபித்தார். * இரவி அருணாச்சலம் அவர்களை நிகழ்விற்கு உரையாற்ற அழைத்திருந்தபோதும், சில பல காரணங்களால் அவரால் சமூகமளிக்க முடியவில்லை. * நிகழ்விற்கு அழைக்கப்பட்டோரில் ஒரு சிலர் வராதது மனதுக்கு சிறு கவலையை அழித்தபோதும், எதிர்பார்க்காமல் பலர் நிகழ்விற்கு வருகை தந்தது உற்சாகத்தையும் பெருமையையும் தந்தது. * 50 - 60 வரையிலான ஆர்வலர்கள் நிகழ்வில் சமூகமளித்திருந்தார்கள். * திருமண, பிறந்தநாள் வைபவங்கள் போன்று உற்றார், உறவினர்கள், நண்பர்கள் வந்து அரங்கை நிறைக்காமல் படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், வாசகர்கள் என்று பலரும் வந்து நிகழ்வை முழுமையாக்கியமை மகிழ்ச்சியளித்தது. * பொன். சத்தியசீலன் (தமிழ் மாணவர் பேரவை), அரசியல் ஆய்வாளர் பற்றிமாகரன், கவிஞர் கந்தையா இராஜமனோகரன், கவிஞர் கி.பி.அரவிந்தன், கவிஞர் வேணுகோபால், மருத்துவர் சசிகலா இராஜமனோகரன், திரு. ஏ.சி.தாசீசியஸ் ஐயா, ரி.ஜி.சிங்கம் (ஆரம்பகாலத்தில் ஐபிசி இல்), அங்கயற்கண்ணி (தமிழரசு கட்சி), கவிஞர் புதுவை இரத்தினதுரையின் தம்பி மற்றும் பலர் (பெயர்கள் ஞர்பகத்தில் இல்லை) நிகழ்விற்கு வந்திருந்தார்கள். * யாழ் இணைய நண்பர்கள் மதன், வசி சுதா, ஸ்ராலின், கிருபன் ஆகியோர் வந்திருந்தார்கள். கிருபன் நூல் வெளியீடு முடிந்ததும் அவசரமாய் பொகவேண்டும் என்று சொல்லிவிட்டு மின்னல் போல் மறைந்துவிட்டார். நிகழ்விற்கு முதலில் வருகை தந்தவர் வசி. பின்பு ஸ்ராலின். மதன் வாகன நெரிசலில் சிக்கி சிறிது தாமதமாக வந்து சேர்ந்தார். மதனை இலகுவாக அடையாளம் கண்டுகொண்டேன். ஸ்ராலின் தன்னை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டார். கிருபன் நிகழ்வு மேடையில் நூலை பெறும்போது தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். * கோவில் மண்டபத்தில் இவ் இலக்கிய நிகழ்வு நடந்ததால் விழா ஒழுங்கமைப்பாளர்கள் கோவில் குருக்களை வாழ்த்துரைக்காக அழைத்திருந்தார்கள். அவரும் கோவில் பற்றியோ, கடவுள் . மதம் பற்றியோ எதுவும் கதைக்காமல், உராய்வு என்றால் என்ன என்பதை விஞ்ஞான ரீதியாகவும், மொழி ரீதியாகவும் விளக்கி உரையாற்றியது குறிப்பிட வேண்டிய ஒன்று. * மேடையேறிவிட்டோம் - கவிஞனைப் புகழவேண்டும் என்பதற்காக பொய்யாக யாரும் புகழ்ந்து தள்ளவில்லை என்பது மன நிறைவைத் தந்தது. கவிதைகள் பற்றியும், என்னுடனான தமது அறிமுகங்கள், அனுபவங்கள் பற்றியும் பகிரப்பட்டது. உரைகளின் இடையே சில விடயங்கள் நகைச்சுவையாக பேசப்பட்டன. திருமணமாகாத ஆண்கள் - விசாவுக்கான திருமணம் பற்றிய கவிதை, சீதனம் பற்றிய கவிதை போன்றவற்றை நகைச்சுவையாக கையாண்டார்கள். * மகாகவியின் கவிதையினை சொல்லிவிட்டு மிச்சம் என்னவென்று ஏ.சி.தாசீசியஸ் ஐயா கேட்க அரங்கில் அமர்ந்திருந்த கவிஞர் கி.பி.அரவிந்தனின் மனைவி அதை அழகாகச் சொன்னார். * காந்தி, திலீபன், தந்தை பெரியார் பற்றிய குட்டிக் கவிதைகள் ஏ.சி.தாசீசியஸ் ஐயாவிற்கு மிகவும் பிடித்து போயின. * அறிவியல் சார்ந்த கவிதைகள் அனைவருமே தங்களது உரையில் முக்கியமாக தொட்டுச் சென்ற ஒரு விடயமாக இருந்தது. * எனது மூன்று கவிதைகளை செல்வி அபிராமி இராஜமனோகரன் அழகாக பாடினார். பாடலாக்குவதற்கு இலகுவாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். அதில் ஒரு கவிதை ஏற்கனவே பாடலாக்கப்பட்டு இராகம் 2001 இறுவட்டில் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது. * இரண்டு நடன நிகழ்வுகள் நடைபெற்றன. அவர்களும் இளைஞர்கள் தான். * எதிர்பாராத விதமாக நிகழ்விற்கு தீபம் தொலைக்காட்சியிலிருந்து தினேஷ் (செய்தி வாசிப்பவர்) வந்திருந்தார். அவருடன் K.T.குருசாமி(மலையக மக்கள் முன்னணி) வந்திருந்தார். ஏ.சி.தாசீசிய் ஐயாவின் கையால் கவிதை நூலை பெற்றுச் சென்றார். * மொத்தத்தில் இது இளைஞர்களின் நிகழ்வாகவே அமைந்திருந்தது. எல்லோருக்கும் நிறைவைத் தந்த நிகழ்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமது நேரத்தை பயனுள்ளதாகக் கழித்த மனநிறைவை எல்லோரிடமும் காணக்கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது. * ஒரு இளைஞனாக எனது எழுத்துக்களை எல்லாம் தொகுத்து அரங்கேற்றிய இந்த நிகழ்வு எனக்குள் பல பொறுப்புக்களை தந்துள்ளது. பல விமர்சனங்களை எதிர்நோக்குவதற்கான தொடக்கப்புள்ளியை இட்டுள்ளது. உராய்வு தொகுப்பின் பல உராய்வுகளை சந்திப்பதற்கான அடித்தளத்தை நிறுவியுள்ளது. * உரையாற்றிய அனைவருமே என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதையும் காணக்கிடைத்தது. நன்றி * நூல் வெளியீட்டு நிகழ்வு நடக்கப்போகிறது என்கிற அறிவிப்பை செய்த ஊடக நண்பர்களிற்கு எனது நன்றி. - தினக்குரலில் செய்தியை இணைத்த சாந்தி அக்காவிற்கும், தினக்குரல் பத்திரிகையினர்க்கும் நன்றி. - இலண்டனில் வெளியாகும் ஒருபேப்பர் நாளிதழுக்கும் நன்றி. நிகழ்வு பற்றிய செய்தியை இணைத்திருந்தார்கள். - தீபம் தொலைக்காட்சியினர் முதல்நாள் செய்தியின் முடிவில் நூல் வெளியீட்டு நிகழ்வையும் ஒரு செய்தியாகச் சொன்னார்கள். நன்றி. - ஐ.பி.சி. வானொலி 22.08.2005 (ஞாயிற்றுக்கிழமை) காலையில் என்னுடனான நேர்காணலின் மூலம் நிகழ்வு பற்றிய தகவலையும் சொல்லியிருந்தார்கள். நன்றி. - ரி.ரி.என் தொலைக்காட்சியினர் நிகழ்வைப் பதிவு செய்வதற்கு வருவதாக இருந்தார்கள் - தவிர்க்கமுடியாத காரணத்தினால் அவர்களால் வருகைதரமுடியவில்லை. அவர்களுக்கும் நன்றி. - இலண்டன் வானொலி என்கிற வானொலியும் நிகழ்வு பற்றிய விரிவான அறிவிப்பை செய்திருந்தது அவர்களுக்கும் எனது நன்றி. - மற்றும் இணையத்தளங்கள் அப்பால் தமிழ், தமிழமுதம், வன்னித்தென்றல் போன்றனவிற்கும் நன்றி. * நூல் வெளியீட்டு நிகழ்வை ஒழுங்கமைத்து தந்த உலகத் தமிழ்க் கலையகம், அப்பால் தமிழ் ஆகியவற்றிற்கும் எனது மனமார்ந்த நன்றி. - நிகழ்வை ஒருங்கமைத்த எஸ்.கே.இராஜன் (ஐ.பி.சி) அண்ணாவிற்கு முதலில் எனது நன்றிகள். - நிகழ்வை ஒழுங்கமைத்த திரு கந்தையா இராஜமனோகரன், கி.பி.அரவிந்தன் அண்ணா ஆகியோர்க்கும் மனம்நிறைந்த நன்றி. - நிகழ்வன்று உதவிகளை செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->*** இந்த நிகழ்வில் முக்கியமான ஒரு விடயம் உள்ளது. - நூலை படைத்த இளைஞன் நான் யேர்மனி நாட்டில் உள்ளேன். - நூல் அச்சானது இலங்கையில். - நூல் வெளியீட்டு நிகழ்வை ஒழுங்கமைத்தவர் கி.பி. அரவிந்தன் அண்ணா பிரான்சில் உள்ளார். - நூல் வெளியீட்டு நிகழ்வு நடந்த இடம் இலண்டன். இப்படி நான்கு நாடுகள் சங்கமம் ஆன நிகழ்வு இது. பல்துறை இளைஞர்கள் இணைந்த அரங்கு இது. ஒரு வித்தியாசமான நிகழ்வாகவே இது நடந்தது. எனவே இந்நிகழ்வில் நேரடியாகவும், புறம்நின்றும் பங்காற்றிய அனைவர்க்கும் மறுபடியும் நன்றி.
09-03-2005, 12:01 PM
தகவலுக்கு நன்றிகள் இளைஞன். உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>
09-03-2005, 03:59 PM
மேலும் சில படங்கள் .........
<img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool26.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool69.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool73.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool18.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool53.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool54.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool55.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool56.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool43.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool45.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool47.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool35.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool33.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool30.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool23.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool24.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool25.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
09-03-2005, 04:21 PM
படங்களுக்கு நன்றி மதன் ஆமா எங்க உங்கள் படத்தை காணவில்லை நீங்கள் இளைஞனுடன் சேர்ந்து எடுக்கவில்லையா?
<b> .. .. !!</b>
09-03-2005, 05:03 PM
நன்றி மதன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உராய்வு தளத்தில் அனைத்து படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. http://uraayvu.appaal-tamil.com/ <b>இதோ அனைவரும் எதிர்பார்க்கும் அந்த 1000$ படம்:</b> <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool78.jpg' border='0' alt='user posted image'> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
09-03-2005, 06:08 PM
நல்லாயிருக்கு படங்கள்
வாழ்த்துகள்....................... <img src='http://www.uraayvu.appaal-tamil.com/wp-content/images/veliyeedu/nool78.jpg' border='0' alt='user posted image'> யாழ்கள நண்பர்களின் படம் தெளிவாயிருக்கு.................. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
09-03-2005, 06:12 PM
வணக்கம் யாழ்கள நண்பர்களே...
உராய்வு கவிதை நூலினை பெற்றுக்கொள்ள விரும்பும் உறவுகள் இங்கே எழுதுங்கள். நீங்கள் எந்த நாடு என்று குறிப்பிட்டால் எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்கிற விபரத்தை நான் குறிப்பிடுவேன். நேரடியாக என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்பினும் பெற்றுக் கொளள்ளலாம். <b>நூலின் விலை: 5 யூரோ + தபால் செலவு</b> ஐக்கிய இராச்சியத்தில் உள்ளவர்கள் மதனிடம் நூலைப் பெற்றுக் கொள்ளலாம். அதை எப்படி பெற்றுக்கொள்வது என்கிற விபரத்தை அவரே உங்களுக்கு அறியத் தருவார். மதனுடன் தனிமடல் மூலமோ, அல்லது அவரது மின்னஞ்சல் முகவரியூடாகவோ தொடர்பு கொண்டு மேலதிக விபரத்தை பெற்றுக் கொள்ளுங்கள். மின்னஞ்சல்: yarlmathan@hotmail.com யேர்மனியில் உள்ளவர்கள் என்னுடன் தொடர்புகொள்ளுங்கள். தனிமடலிலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொண்டு உங்கள் விபரங்களை அறியத் தாருங்கள். மின்னஞ்சல்: ilaignan@appaal-tamil.com ஏனைய நாடுகளில் உள்ளோரும் நீங்கள் நூலை பெற்றுக் கொள்ள விரும்பின் இங்கே எழுதுங்கள். யூரோ அல்லாத நாடுகளில் நூலின் விலை பற்றி பின்னர் அறியத் தருகிறேன். நன்றி <span style='font-size:16pt;line-height:100%'>----திருத்தம் செய்யப்பட்டுள்ளது.</span>
09-03-2005, 06:13 PM
படங்கள் வடிவா இருக்கு யாழ்கள நண்பர்களின் படம் என் கண்ணுக்கு தெரியவில்லை ஏதும் கண்ணாடி போட்டு பார்க்க வேணுமோ :roll:
<b> .. .. !!</b>
09-03-2005, 08:16 PM
Rasikai Wrote:படங்கள் வடிவா இருக்கு யாழ்கள நண்பர்களின் படம் என் கண்ணுக்கு தெரியவில்லை ஏதும் கண்ணாடி போட்டு பார்க்க வேணுமோ :roll: கண்ணாடி இப்ப தான் செய்து கொண்டு இருக்கினமாம்..அப்பொ இப்போதைக்கு பார்க்க ஏலாதுக்கா :roll:
..
.... ..!
09-03-2005, 08:26 PM
ப்ரியசகி Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Rasikai Wrote:படங்கள் வடிவா இருக்கு யாழ்கள நண்பர்களின் படம் என் கண்ணுக்கு தெரியவில்லை ஏதும் கண்ணாடி போட்டு பார்க்க வேணுமோ :roll: --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
09-03-2005, 11:06 PM
Rasikai Wrote:படங்கள் வடிவா இருக்கு யாழ்கள நண்பர்களின் படம் என் கண்ணுக்கு தெரியவில்லை ஏதும் கண்ணாடி போட்டு பார்க்க வேணுமோ :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எனக்கும் தெரியவில்லை.. ஆனால் இவர்களை நேரில் கண்டால் பிடித்து விடுவேன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 02:59 AM
இளைஞன் Wrote:வணக்கம் யாழ்கள நண்பர்களே... [size=18]<b>அப்ப கனடாவில???????!!!!!!!!</b> :!: :!: :!: :!:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b> </b> .
09-04-2005, 06:18 AM
<img src='http://img296.imageshack.us/img296/4175/nool783qo.jpg' border='0' alt='user posted image'>
புலனாய்வு தகவலிபடி மேற்குறிபிட்ட படத்துக்குரியவர்கள் இவர்களாக இருக்கவேண்டும்.. ? அடையாளத்துக்கு உரியவரை தெரிஞ்சும் அதை வெளியே சொல்லி வாங்கி கட்டிக்க புலனாய் தயாராக இல்லையாம்.. எஸ்கேப்.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 07:15 AM
[quote=Aruvi]
[size=18]<b>அப்ப கனடாவில???????!!!!!!!!</b> கனடாவில் வேண்டுமானால் சொல்லுங்கள் அனுப்பி வைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
09-04-2005, 08:26 AM
<img src='http://img204.imageshack.us/img204/7171/head9we.png' border='0' alt='user posted image'>
என்ன இது? Tin Tin மாதிரி ஆக்கீட்டாங்களே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
09-04-2005, 08:31 AM
vasisutha Wrote:<img src='http://img204.imageshack.us/img204/7171/head9we.png' border='0' alt='user posted image'> [size=18]ஸ்ரைலும்மா... 8)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|