Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
முகத்தார் சொன்ன கதைபோல எங்கள் பெரியப்பாவிற்கு ஒரு சம்பவம் நடந்தது. இதை அவரே அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் அவரின் வீடு பெருமாள்கோவிலடி. ரயில்ப்பாதையால் வந்து ஒரு ஒழுங்கையில் திரும்பினால் வீடு.
ஒரு நாள் இரவு ஒரு மணிபோல் ரெயிலில் வந்து இறங்கி ரெயில்ரோட் ஓரமாக நடந்து வந்திருக்கிறார். ஒரிடத்தில் கோவிந்த சாமி என்பவர் விளக்கு வைத்து கிடுகு பின்னுவதைப்பார்த்தாராம். அது அவரது வீட்டின் முன்புறம். அட இந்த நேரத்தில் ஏன் கோவிந்த சாமி கிடுகு பின்னுகிறார் என்ன கஸ்டமோ? நாளைக்கு விசாரிப்பபம் என நினைத்துக்கொண்டு வந்துவிட்டாராம். வீட்ற்கு வந்து முகம் கழுவி சாப்பிட இருக்கும் போது பாட்டியிடம் கேட்டாராம் என்ன இந்தச்சாமத்தில் கோவிந்தசாமி கிடுகுபின்னுகிறார் என்ன சங்கதி என. அதிர்ந்து போனாராம் பாட்டி. ஐயோடா சத்தியம் பண்ணு நீ கோவிந்த சாமியைப்பாத்தினி என சத்தியம் பண்ணக் கேட்டிருக்கிறார். ஓமணை பாத்துட்டுத்தான் வாறன் பசி அதாலை நான் கதைக்க வில்லை நாளைக்கு கதைப்பம் என யோசிச்சன் அவர் வேற என்னைப்hhக்கவில்லை என்றாராம் பெரியப்பா. பாட்டி சொன்னாவாம் சிவசிவா 2 நாள் முதல்தான்; ரெயில் றோட்டைக் கடக்கேக்கை ரெயில் அடிச்சுச் செத்துப்போனார் கோவிந்தசாமி. இன்டைக்குத்தான் பிரேதம் எடுத்தது என. பெரியப்பா 2 நாள் காச்சலில் படுத்து தேறி திரும்பி கொழும்பு போக ஓருகிழமை எடுத்துதாம்.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
சை...... களத்திலை நல்லாத்தான் எல்லாரும் பயப்பிடுகினம் போல கிடக்கு.... தம்பி வசி சொல்லுவதைப் போல பேய்க்கு பயமில்லை எண்டு ஆக்களுக்கை லெவலடிக்க ஏலும் ஆன இரவில் தனிய சுடலையடியாலை போகச் சொன்னாத்தான் தெரியும் எல்லாற்றை வண்டவாளங்களும் சரி இந்த கதையை கேளுங்கோ......................
ஓருநாள் ஊரிலை அம்மன் கோயில் புூங்காவனத்திருவிழா இரவு நிகழ்ச்சி பார்ப்பதற்கு நானும் அம்மாவும் அக்காவுமாய் போனாம் 1மணியிருக்கு நித்திரை வருகுது வீட்டுக்கு போவமென அம்மா சொல்ல மூவருமாக திரும்பி வந்தம் நல்ல நிலவு ஒழுங்கையால் வந்து கொண்டிருக்கேக்கை எங்கடை வீட்டு சந்தியில் வெள்ளை சீலை உடுத்த ஒரு மனுசி குந்தியிருப்பது தெரிந்தது நான் பாத்திட்டு சொல்லேலை அக்கா பயந்தே செத்துப் போம் அவர்களுக்கு வேறை கதையைக் குடுத்துக் கொண்டு வந்தேன் நாங்கள் கிட்ட வர அந்த உருவம் எழும்பி மெல்ல மெல்ல அங்காலை போயிட்டுது வீட்டுக்கை வந்தவுடனை அம்மாட்டை சொன்னன் அம்மா சந்திலை ஒரு மனுசி வெள்ளைச் சீலையோடு இருந்ததைத் பாத்தீங்களோ எண்டு அம்மா சொன்னா ஓமோம் நானும் கண்டனான் அது ஜயர்வீட்டு வயசான அம்மா இரவிலை நித்திரை வராட்டிக்கு இப்பிடித்தான் திரியும் எண்டு அப்பாடி நான் பயந்த மாதிரி எதுவுமில்லை என்று நிம்மதியாய் படுத்திட்டன் அடுத்த நாள் காலேலை ஒரு செய்தி திடுக்கிட வைத்தது அம்மா சொன்ன அந்த ஜயர்அம்மா நேற்றிரவு 10மணிக்கு இறந்து விட்டாவாம் அப்ப அந்த 1 மணிக்கு நாங்கள் கண்ட உருவம் . .??????????????????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
ஆ 1 மணிக்கு கண்ட உருவம் வேற யாருமில்லை நம்மட சின்னாதான் உம்மை வெருட்டிறதுக்காக சின்னாச்சீண்ட வெள்ளைச்சீலையை கட்டிக்கொண்டு வந்து அந்த சந்தீல இருந்தது... இதைக்கவனிக்கவில்லையா அந்த உருவம் அங்கால விலகிப்போகக்கை தள்ளாடி தள்ளாடி போனதை?? பின்ன ம..பெண்டால் அப்படித்தான.. :wink: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
முன்னம் அப்பர் சொன்னது அவங்கடை காலத்திலை ஊருக்கை லைட் இல்லையாம் இவைக்கு சைக்கிள் ஓட ஆசை ஆனா வீட்டில் அது இல்லாதபடியால் வேலைக்கு போட்டு வாற பக்கத்திவீட்டு அண்ணனின் சைக்கிளை எடுத்துத்தான் பழகுவதாம் இரவில் ஒழுங்கைகளுக்குள் ஓட ஏலாது எண்டு கிட்ட இருக்கிற சுடலைக்குள் போய்தான் ஓடிப் பழகுவார்களாம் இப்பிடித்தான் ஒருநாள் நல்ல நிலவு சைக்கிலை இரவல் வாங்கிக் கொண்டு 2பேராக சுடலைக்குப் போயிருக்கினம் 9மணியிருக்கும் அன்று பாத்து 7மணிபோலத்தான் ஒரு சவத்தைக் கொண்டு வந்து எரித்திருக்கிறார்கள் வெட்டியான் இரவெண்டபடியால் நிண்டு எரிக்காமல் போய்விட்டான் அது நெஞ்சான் கட்டை விலகி சவம் எலும்புக்கூடாக எழும்பி இருந்திருக்கு அப்பர் கொஞ்சம் பயமில்லாத ஆள் கிட்டப் போய் அதை தட்டி விழுத்தி அருகிலிருந்த விறகைப் போட்டு எரித்துவிட்டு இவை சைக்கிள் ஓடிப் பழகியிருக்கினம் 1மணித்தியாலத்தின் பின் வீடு திரும்பி இருக்கிறார்கள் வந்து பேசாமல் படுத்துவிட்டார்கள் விடிந்ததும் வீட்டிலை ஆச்சியை(அப்பாவின் அம்மா) படுக்கேலை தேடினால் காணவில்லையாம் வீடு முழுக்கத் தேடி வளவுக்குள் தேடியபோது வளவின் மூலையில் அடுக்கியிருந்த மரவள்ளிக் கட்டைக்கு மேல் ஆள் விழுந்து கிடந்திருக்கிறா. . தண்ணி தெளிச்சு ஆளை எழுப்பி ஏப்பிடி இஞ்சை வந்தனீங்கள் எண்டு கேட்டிச்சினமாம் நான் இரவு பாத்துறூம் போவமெண்டு வெளியிலை வந்தனான் அப்போ ஒரு காத்துமாதிரி ஒண்டு தள்ளிகொண்டு போச்சு வாயைதிறந்து கத்தினால் சத்தம் வெளியிலை வருகுதில்லை இஞ்சை கொண்டுவந்து போட்டதுதான் தெரியும் பிறகு என்ன நடந்ததெண்டு தெரியலை எண்டாவாம் அப்போ யாரோ சொன்னார்களாம் கெட்ட காத்து ஒண்டு வந்திருக்கு யாரைவது சுடலைக்குப் போட்டு கை கால் கழுவாமல் வந்திருக்க வேண்டும் என்று அப்பர் தான் தான் போய் வந்தது எண்டு மூச்சுகூட விடேலையாம் . . . . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
எங்கடை சின்னப்புவின்ரையும் முகத்தாற்றை கதையும் சொன்னால் அது -- கதைதானே?
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
எந்த சுடலைகு முகதார் உங்கட அப்பர் போனவர். சுண்ணாகம் கொத்தியாலடிகோ? அல்லது மல்லாகம் கும்பலை சுடலைக்கோ? மனிசன் முகத்தார் மாதிரி துணிஞ்ச கட்டைதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
தம்பி கந்தரோடைக்கை தம்மளை எண்டு ஒரு ஊர் இருக்கெல்லோ அந்தத் சுடலைத்தான் அப்பு நீரே சுன்னாகத்து ஆள் தெரியாமல் இருக்காது. . . ..
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஐயோ உந்த பேய் கதையை நிப்பாட்டுங்கோ மனுசர் இங்க சாமம் எல்லாம் தனிய ரோட்டில போறது இதை வேற வாசிச்சுட்டு போய் heart attack வராத குறைதான் :evil:
<b> .. .. !!</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
[quote=Rasikai]ஐயோ உந்த பேய் கதையை நிப்பாட்டுங்கோ மனுசர் இங்க சாமம் எல்லாம் தனிய ரோட்டில போறது
:roll: :roll:
----------
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
[quote=vennila][quote=Rasikai]ஐயோ உந்த பேய் கதையை நிப்பாட்டுங்கோ மனுசர் இங்க சாமம் எல்லாம் தனிய ரோட்டில போறது
என்ன வெண்ணிலா முளிக்கிறீங்கள் சில வேளைகளில் இரவில் பல்கலைக்கழகத்தில் இருந்து படித்துவிட்டு 12 மணிக்கு போறது. சில வேளைகளில் இரவு வேலை வரும் அதை சொன்னன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
அப்படியா செய்தி.. நானும் வெண்ணிலா குளம்பின மாதிரி குளம்பிட்டன்... எங்க ரசிகைக்கு உண்மையில பேய் அடிச்சுட்டுதோ என்று... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
உதொன் பேய்கதை... எவ்வளவுக்குத்தான் உது உங்கடை வயித்த கலக்க போகுது... இதை கொஞ்சம் யோசிச்சுப்பாருங்கோ... கதையில்லை நிஜம்!
எங்கடை செல்வி ஜெயலலிதாவோ திருமதி சந்திரிக்காவோ கும்மிட்ட இருட்டுக்கை வெள்ளைச்சீலை கட்டிக் கொண்டு சுருட்டுப்பத்திக் கொண்டுவாறதை நீங்கள் கண்டா heart attack இல இருந்து தப்பி உயிரோடை வருவீங்களே பிறகு மிச்சப்பேருக்கு கதை சொல்ல?
கொஞ்ச நாளில பெரியல் அஸ்ரப்பும் இணைஞ்சுடுவா உந்த கூட்டத்தோடை...
Posts: 34
Threads: 1
Joined: Aug 2005
Reputation:
0
என்கட அப்பு சொன்ன கதைய சொல்லுரன்.
தான் படுத்திருக்கெக்க கந்தப்பு வந்து டே நாகலிங்கம் விடின்ச்ச்ப்டுது வா தோட்டத்துக்கு இரைப்பம் என்டு கூப்பிடவராம். தானும் பொனவராம் கந்தப்பு தண்ணி அள்ளிஊத்திகொன்டு நிக்க தான் தண்ணிய பாத்தி மாத்தி மாத்தி ககட்டினவராம். தண்ணிவாரத பார்த்தா வெள்ளம் வாற்மாதிரி அடிச்சல்லிகொண்டு வந்ததாம் தான் என்ன என்டு கினத்தடிய பார்த்தால் ஒரு கருத்த உருவம் மனிசரவிட நாலைந்து மடன்கு பெரிய உருவம் நின்டு கினதில இருந்து தன்னிய அள்ளி அள்ளி ஊத்திகொன்டு நின்ண்டதாம். தான் பயந்துபோய் வேட்டிட மண்வெட்டியில தலைபாய் மாதிரி கட்ட் இவிட்ட்டு அதுக்கு தெரியாமல் மெதுவாய் போய் அய்யனார் கோயிலுக்குள்ள படுதவராம் கொன்ச நேரத்தால யாரோவந்து டேய் நாகலிங்கம் வாடாவெலியில என்டு கத்தி கத்தி கூகிட்டதாம் தான் போகெலையாம் விடிய தான் வெலிய வந்து பார்க்க வெலில உல்ல மரம் எல்லதையுய்ம் முறிச்செரின்சு கிடந்ததாம்.
Posts: 31
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
என்ன களத்திலை பேய்கதை போகுது
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
அது எமது போராளிகள் எல்லோரும் ஒற்றுமையாக கோட்டையைச்சுத்திக்காவல் காத்த நேரம். கோட்டையை விட்டு வெளியே வரமுடியாத ஆமி செல் அடித்து நிறைப்பேரை அழித்து இறுதியில் அவர்களிடம் அடங்கி முடங்கியிருந்த காலம்;;.
ஒருநாள் சாமம் ஒரு போராளி(டேலோ இயக்கத்தவர்) வெள்ளைச்சேலை கட்டிய ஒரு உருவத்தைக்கண்டிருக்கிறார். யாரது இந்தநேரத்தில் என்று அதைப்பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். வெகுநேரம ஆகியும் அவர் திரும்பாததால் அவருடன் அன்று காவலிருந்த சகபோராளி புலிகள் இயக்கப்போராளிகளிடம் உதவி கோரியிருக்கிறார்கள். அதன்பின் இரண்டு புலிகள் இயக்கப்போராளிகள் அவரைத்தேடிச்சென்றிருக்கிறார்கள். ஒரிடத்தில் அந்தப்போராளி மயங்கிக்கிடப்பதைப்பார்த்து தூக்கி வந்தனராம். வெள்ளைச்சேலை அணிந்த அந்த உருவத்தை பின்னால்சென்று நிறுத்த முற்பகையில் திடீரென அந்த ஒருவம் மறைந்துவிட்டதாகவும் அதனால்பயந்து மூர்ச்சையாகிவிட்டதாக பின் அந்தப்போராளி கூறியுள்ளார்.
இது அப்போது யாழ் மத்தியகல்லூரியில் மாணவர்களிடையே உலாவிய பேய்க்கதை.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
அதென்ன பேய் எல்லாம் வெள்ளைச் சேலையோடு
மட்டும் தான் வருது. கலர் சாறி கிடைக்கிறது இல்லையா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->