10-16-2003, 08:43 AM
<b>வேண்டாம் தொலையட்டும்.</b>
நரகல்களை மடியில்
அள்ளி வைத்து - அது
நாகரீமெனப் பெயர் சூட்டி
கறுப்பாயிருந்த தலை சிவப்பாகி
பச்சையாகி....
நாய் சூப்பிய பனங்கொட்டை
நல்ல வடிவு.
காக்கா அன்னநடை நடந்த கதை
காதுகளை , மூக்குகளை
முகங்களையெல்லாம் நாறவைத்து
பேயோ எனப்பயந்து பேதலிக்க.....
வணக்கம் சொல்ல வாய் நோவில்
கலோ சொல்லும் உதடுகளின்
இடைக்குக் கீழாயும் தொடைக்கு மேலாயும்
கம்பிகள்....கம்பிகள்.....
தம்பிகளின் , தங்கைகளின்
காற்சட்டைகளில் ஓட்டைகள்
கடகமளவில் கால் அகலம் றோட்டுக்கூட்ட
கலர் கலராய் நடைநடக்கும்
காளையரே , கன்னியரே
வாந்தி வருகிறது உந்த வடிவுகளைப் பார்க்க....
வடிவாய்க் கிடந்த தலைமயிரை
வழித்து மொட்டையாக்கி வானரமாய் உருமாறி
டிஸ்கோவுக்குச் சினேகிதியோடு மகன் அலைய
'என்ர பிள்ளை நாகரீகம் தெரிஞ்ச பிள்ளை"
அம்மாக்கள் சிலபேரின் அறியாமை
சும்மாயிருந்த பொன்னம்மாக்களுக்கும் ,
பொன்னையாக்களுக்கும் யுவாலேத்த
சத்தமின்றியிருக்கும் பிள்ளைக்கும்
சனிக்குணங்களைச் சொல்லிக்குடுக்கும்.
இங்கு அப்பாக்கள் பலருக்கு
அமோகக்கொண்டாட்டம்
துணையாய் பியரடிக்க ஒருதுணையாய்
மகனின் நண்பனின்....
இன்னொருவீட்டுப் பிள்ளையை
இரவுக்குடிகாரனாக்கித் தன்பிள்ளையை
அரிச்சந்திரனாகக் கதையளந்து
எவளோ ஒரு தாயின் மகன்
தறுதலையாவதில் துளியும்
கவலையில்லை இவர்க்கெல்லாம்.
தன்பிள்ளை முகம் ஒருநாள்
கிளிந்து விட மாற்றான் தாய் பிள்ளை
கெடுத்ததாய் குறைசொல்லும்
குடிகாரத் தகப்பன்கள் துணையான அம்மாக்கள்
துலையாரோ இப்புவிவிட்டு.....?
பெண்ணின் உடைகுறைத்து - அவள்
அங்கங்களை அங்குமிங்கும் அசைத்துக்காட்டி
தானுறிஞ்சிப் பால்குடித்த முலைகளையே
விலையாக்கிப் பிழைக்கும் வித்தகர்கள்
காந்தம் இருப்பதாய்ப் பெண்ணில்
காமக்கனிரசம் சுரப்பதாய்க் கதையளந்து
காலம் பயன்பெறவேண்டிய
கண்ணுணரும் சாதனத்தை விபச்சாரமாக்கி....
இலக்கியம் படைப்பதாய் ஏமாற்றும்
வித்தைகளை 'இதுவெல்லோ நல்லபடம்"
அறியாததையா காட்டுகிறார் - உமக்கு
அதில் ஆர்வமில்லையா....?
அறிவார்ந்து சினிமாக்கலைபடித்த
சீமான்களும் சேர்ந்து வக்காளத்து.
குப்பைகளையெல்லாம் குடிநடுவில் குடியிருத்த
கொடிபிடிக்கும் கொள்ளையர்கள்
கல்லெறிபட்டுச் சாகவேணும்
கடவுளே கண்திறவாய்....!
அது தமிழ் வளர்க்கும் ஒளித்தலமாயினும்
தொலைந்தொழியட்டும் வேண்டாம்.
16.10.03.
நரகல்களை மடியில்
அள்ளி வைத்து - அது
நாகரீமெனப் பெயர் சூட்டி
கறுப்பாயிருந்த தலை சிவப்பாகி
பச்சையாகி....
நாய் சூப்பிய பனங்கொட்டை
நல்ல வடிவு.
காக்கா அன்னநடை நடந்த கதை
காதுகளை , மூக்குகளை
முகங்களையெல்லாம் நாறவைத்து
பேயோ எனப்பயந்து பேதலிக்க.....
வணக்கம் சொல்ல வாய் நோவில்
கலோ சொல்லும் உதடுகளின்
இடைக்குக் கீழாயும் தொடைக்கு மேலாயும்
கம்பிகள்....கம்பிகள்.....
தம்பிகளின் , தங்கைகளின்
காற்சட்டைகளில் ஓட்டைகள்
கடகமளவில் கால் அகலம் றோட்டுக்கூட்ட
கலர் கலராய் நடைநடக்கும்
காளையரே , கன்னியரே
வாந்தி வருகிறது உந்த வடிவுகளைப் பார்க்க....
வடிவாய்க் கிடந்த தலைமயிரை
வழித்து மொட்டையாக்கி வானரமாய் உருமாறி
டிஸ்கோவுக்குச் சினேகிதியோடு மகன் அலைய
'என்ர பிள்ளை நாகரீகம் தெரிஞ்ச பிள்ளை"
அம்மாக்கள் சிலபேரின் அறியாமை
சும்மாயிருந்த பொன்னம்மாக்களுக்கும் ,
பொன்னையாக்களுக்கும் யுவாலேத்த
சத்தமின்றியிருக்கும் பிள்ளைக்கும்
சனிக்குணங்களைச் சொல்லிக்குடுக்கும்.
இங்கு அப்பாக்கள் பலருக்கு
அமோகக்கொண்டாட்டம்
துணையாய் பியரடிக்க ஒருதுணையாய்
மகனின் நண்பனின்....
இன்னொருவீட்டுப் பிள்ளையை
இரவுக்குடிகாரனாக்கித் தன்பிள்ளையை
அரிச்சந்திரனாகக் கதையளந்து
எவளோ ஒரு தாயின் மகன்
தறுதலையாவதில் துளியும்
கவலையில்லை இவர்க்கெல்லாம்.
தன்பிள்ளை முகம் ஒருநாள்
கிளிந்து விட மாற்றான் தாய் பிள்ளை
கெடுத்ததாய் குறைசொல்லும்
குடிகாரத் தகப்பன்கள் துணையான அம்மாக்கள்
துலையாரோ இப்புவிவிட்டு.....?
பெண்ணின் உடைகுறைத்து - அவள்
அங்கங்களை அங்குமிங்கும் அசைத்துக்காட்டி
தானுறிஞ்சிப் பால்குடித்த முலைகளையே
விலையாக்கிப் பிழைக்கும் வித்தகர்கள்
காந்தம் இருப்பதாய்ப் பெண்ணில்
காமக்கனிரசம் சுரப்பதாய்க் கதையளந்து
காலம் பயன்பெறவேண்டிய
கண்ணுணரும் சாதனத்தை விபச்சாரமாக்கி....
இலக்கியம் படைப்பதாய் ஏமாற்றும்
வித்தைகளை 'இதுவெல்லோ நல்லபடம்"
அறியாததையா காட்டுகிறார் - உமக்கு
அதில் ஆர்வமில்லையா....?
அறிவார்ந்து சினிமாக்கலைபடித்த
சீமான்களும் சேர்ந்து வக்காளத்து.
குப்பைகளையெல்லாம் குடிநடுவில் குடியிருத்த
கொடிபிடிக்கும் கொள்ளையர்கள்
கல்லெறிபட்டுச் சாகவேணும்
கடவுளே கண்திறவாய்....!
அது தமிழ் வளர்க்கும் ஒளித்தலமாயினும்
தொலைந்தொழியட்டும் வேண்டாம்.
16.10.03.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->