<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> புலம் பெயர்ந்த நாடுகளில் ஒரு படைப்பைக் கொண்டு வருவதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.அவைக்கான காரணங்களை பல தருணங்களில் எழுதியிருக்கிறேன்.சில சமயங்களில் இப்படியான கருத்து மோதல்களை சந்தித்திருக்கிறேன்,வேதனைப் பட்டிருக்கிறேன். எனவே உங்கள் பிரச்சனைகளை என்னால் உணர முடியும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எனவே இவற்றை ஒரு மோதலாக்காமல்,இளங்கோ அவர்கள் சொல்வது போல எவரது மனதையும் புண்படுத்தாமல் பிரச்சனைகளை பேசும் போது ,புதிய படைப்பாளிகளுக்கும், இதுவரை தவறுகளை விட்டவர்களுக்கும் தமது பாதையை செப்பனிட்டுக் கொள்ள வழி பிறக்கும்.
:oops: எமக்கான திரைப்படங்கள் உருவாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் பல முயற்சிகளில் ஈடுபடும் நாம் , ஆரம்பத்திலேயே அதை பாழ்படுத்தி விடக் கூடாது. அது வீரா அவர்களுக்கும் தெரியும்.
:roll: அது போலவே ஏனைய நண்பர்களும் பொறுப்புடன் கருத்துகளை முன் வைப்பதோ தொடர்வதோ தணிக்கையாளர்களிடம் கத்தரியைக் கொடுக்காது,நாமே நம்மை தணிக்கை செய்து கொண்டு,நமது கருத்துகளை முன் வைக்கும் தன்மைக்கு நம்மை உருவாக்குவதாக நினைக்கிறேன்.

<span style='font-size:25pt;line-height:100%'>நாம் படைப்பாளிகள்</span>.ஒரு சமூகத்துக்கு அல்லது உலகத்துக்கு முன் வைக்கப்படும் எந்த ஒரு சொல்-வசனம்-காட்சி அல்லது படைப்பும் எவரையும் பாதிக்கக் கூடாது அல்லது தவறான ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கி விடக் கூடாது. இதில் கவனமாக இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.அதை இப் பகுதியிலும் கடைப்பிடிப்பார்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு.
:?: பிரச்சனைகளை அலசுவோம்.இங்கே முன் வைக்க முடியாத தனிப் பட்ட பிரச்சனைகளாக இருப்பின் அவற்றை வெளியில் பேசித் தீர்ப்பதே நலம்.
:!: பேசித் தீர்க்க முடியாத எதுவும் உலகில் இல்லை. புரிந்துணர்வு - விட்டுக் கொடுப்பு கூட்டு முயற்சிகளுக்கு தேவை.ஆனால் ஒத்துவராத போது விலகிச் செல்வதும் ஆக்கமானதே...................
:oops: சாதாரணமாக பணம் சம்பாதிப்பதற்காக புலத்தில் படைப்புகளை உருவாக்க முடியாது. ஒரு திருப்தி அல்லது ஆதங்கத்தை நிறைவு செய்து கொள்ள தம்மை உரமாக்கிக் கொண்ட கலைஞர்களே இங்கும் இலங்கையிலும் உலகில் பல்வேறு நாடுகளிலும் அதிகம்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இங்கு படைப்புகளை உருவாக்க தலைமை தாங்குவோர் ஓரு போதும் தாம் போட்ட பணத்தை மீட்டெடுக்க முடியாது. இது கோயிலுக்கு எழுதிய சொத்துதான்.............. அப்படியான ஒரு காலம் வந்தால் அதுவே மகிழ்சியான காலம்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வசந்த காலம் ஒன்றை வரவேற்க விழையும் நம் பாதையில் , அதையே வேண்டுவோம்.................
<img src='http://www.wavemag.com.np/2003/may/images/sanu_ma.jpg' border='0' alt='user posted image'>
என்றும் உங்கள்
அஜீவன்
[scroll:0c7c58b9a1][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்