Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாற்று
#41
AJeevan Wrote:அன்பு சண்,
1.மாற்று திரைப்படம் கூட்டு முயற்சி என்கிறீர்கள்.எனக்கு அதன் (கூட்டு முயற்சி) பிரச்சனைகள் மற்றும் தாக்கங்களைப் பற்றித் தெரியும்.இருந்தாலும் உங்கள் திரைப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன் இது பற்றி ஏதாவது டாக்யுமன்றில் கையெழுத்திட்டுள்ளீர்களா?

<b>2.அப்படியும் இல்லாது போனால் இந்த 3 இசைக் கலைஞர்களும் இசையமைப்பாளர்களாக இணைந்து வேலை செய்தார்களா?

3.அல்லது (தனிப்பட) குறிப்பிட்ட சில பகுதிகளை வெவ்வேறு இசையமைப்பாளர்கள் வெவ்வேறாக இசையமைத்தார்களா?

4.அல்லது வேறு எந்த விதத்தில் அவர்களது இசை சேர்க்கப் பட்டுள்ளது?

5.இது பற்றிய விபரங்களை அவர்களுக்கு தெரிவித்து அவர்களது ஒப்புதலோடு இதைச் செய்தீர்களா? அல்லது உங்கள் விருப்பப்படி அவர்களது இசையை படத்தில் சேர்த்துக் கொண்டீர்களா?</b>

எனக்கே குழப்பமாக விளங்க மறுக்கிறது.பதில் எழுதுங்கள்?

இவற்றுக்கு சண் அவர்கள் பதிலளிப்பார் என எதிர்பார்க்கிறேன்.

நன்றி : திருவாளர் அஜீவன்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#42
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> புலம் பெயர்ந்த நாடுகளில் ஒரு படைப்பைக் கொண்டு வருவதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.அவைக்கான காரணங்களை பல தருணங்களில் எழுதியிருக்கிறேன்.சில சமயங்களில் இப்படியான கருத்து மோதல்களை சந்தித்திருக்கிறேன்,வேதனைப் பட்டிருக்கிறேன். எனவே உங்கள் பிரச்சனைகளை என்னால் உணர முடியும்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எனவே இவற்றை ஒரு மோதலாக்காமல்,இளங்கோ அவர்கள் சொல்வது போல எவரது மனதையும் புண்படுத்தாமல் பிரச்சனைகளை பேசும் போது ,புதிய படைப்பாளிகளுக்கும், இதுவரை தவறுகளை விட்டவர்களுக்கும் தமது பாதையை செப்பனிட்டுக் கொள்ள வழி பிறக்கும்.

:oops: எமக்கான திரைப்படங்கள் உருவாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் பல முயற்சிகளில் ஈடுபடும் நாம் , ஆரம்பத்திலேயே அதை பாழ்படுத்தி விடக் கூடாது. அது வீரா அவர்களுக்கும் தெரியும்.

:roll: அது போலவே ஏனைய நண்பர்களும் பொறுப்புடன் கருத்துகளை முன் வைப்பதோ தொடர்வதோ தணிக்கையாளர்களிடம் கத்தரியைக் கொடுக்காது,நாமே நம்மை தணிக்கை செய்து கொண்டு,நமது கருத்துகளை முன் வைக்கும் தன்மைக்கு நம்மை உருவாக்குவதாக நினைக்கிறேன்.

Idea <span style='font-size:25pt;line-height:100%'>நாம் படைப்பாளிகள்</span>.ஒரு சமூகத்துக்கு அல்லது உலகத்துக்கு முன் வைக்கப்படும் எந்த ஒரு சொல்-வசனம்-காட்சி அல்லது படைப்பும் எவரையும் பாதிக்கக் கூடாது அல்லது தவறான ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கி விடக் கூடாது. இதில் கவனமாக இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.அதை இப் பகுதியிலும் கடைப்பிடிப்பார்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு.

:?: பிரச்சனைகளை அலசுவோம்.இங்கே முன் வைக்க முடியாத தனிப் பட்ட பிரச்சனைகளாக இருப்பின் அவற்றை வெளியில் பேசித் தீர்ப்பதே நலம்.

:!: பேசித் தீர்க்க முடியாத எதுவும் உலகில் இல்லை. புரிந்துணர்வு - விட்டுக் கொடுப்பு கூட்டு முயற்சிகளுக்கு தேவை.ஆனால் ஒத்துவராத போது விலகிச் செல்வதும் ஆக்கமானதே...................

:oops: சாதாரணமாக பணம் சம்பாதிப்பதற்காக புலத்தில் படைப்புகளை உருவாக்க முடியாது. ஒரு திருப்தி அல்லது ஆதங்கத்தை நிறைவு செய்து கொள்ள தம்மை உரமாக்கிக் கொண்ட கலைஞர்களே இங்கும் இலங்கையிலும் உலகில் பல்வேறு நாடுகளிலும் அதிகம்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இங்கு படைப்புகளை உருவாக்க தலைமை தாங்குவோர் ஓரு போதும் தாம் போட்ட பணத்தை மீட்டெடுக்க முடியாது. இது கோயிலுக்கு எழுதிய சொத்துதான்.............. அப்படியான ஒரு காலம் வந்தால் அதுவே மகிழ்சியான காலம்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வசந்த காலம் ஒன்றை வரவேற்க விழையும் நம் பாதையில் , அதையே வேண்டுவோம்.................
<img src='http://www.wavemag.com.np/2003/may/images/sanu_ma.jpg' border='0' alt='user posted image'>
என்றும் உங்கள்
அஜீவன்


[scroll:0c7c58b9a1][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply
#43
நன்றி அஜீவன். முதலில் திரு வீரா அவர்கள் தனிப்பட்ட முறையில் பெயரை பாவிப்பதை தவிர்த்தால் நல்லது. நான் நிச்சயமாக நீங்கள் நினைக்கும் நபர் அல்ல. அவர் மூலமே நான் இந்த இணையத் தளத்தில் இணைந்துள்ளேன். ஆனால் அவர் பெயரை தயவு செய்து பாவிப்பதை நிறுத்தவும். நானும் தனிப்பட்ட முறையில் பெயர்களை பாவிப்பதன் மூலம் இந்த விவாதத்தை நான் வேறு திசைக்கு கொண்டு செல்ல முனையவி;ல்லை. இந்த திரைப்படம் பற்றிய சில தகவல்களை இங்கே தருகிறேன் இதன் பின் நீங்களே தீர்மானியுங்கள். வீரா பெயர் கூறிய நபர் இந்த திரைப்படத்தின் நடிகரும் உதவி இயக்குனர்களில் ஒருவரும். தயாரிப்பாளர் அல்ல!
நாம் இசைக்கு உண்மையில் இருவரையே அணுகி இருந்தோம்.அதில் ஒருவர் இந்த படத்தின் இன்னுமொரு தயாரிப்பாளர். மற்றவர் பல இசைப்பேழைகளை ஐரோப்பாலில் வெளியிட்டவர். இந்த படம் முடிவடைந்ததும் ஒருவர் தான் பாடலுக்கு மட்டும் இசையமைக்க முடியும் போக்குவரத்து தடைகளால் தன்னல் முழுமையாக செய்ய முடியாது என்பதை அடுத்த அதை செய்ய வில்லை. மற்றையவர் தனது நடிபபு திறைமையை தென்னிந்திய சினிமாவல் பரீட்சிக்க இந்தியா சென்று விட்டார். ஆனால் அவர் அங்கு தனது வேலையில் ஈடுபட்ட போதும் தனது படத்திற்கு இசையமைப்பதில் கவனம் செலுத்த தவறவில்லை. ஆனால்படத்தொகுப்பு முடிந்த தறுவாயில் நமது குழுவில் நடித்த ஒருவர் வீரா கூறும் இசையமைப்பாளரை அணுகி நமது படத்திற்கு வேலை செய்ய முடியுமா என கோரியதை அடுத்தே அவரும் இசையமைப்பு வேலையை தொடர்ந்தார். இந்த திரைப்படத்தை எப்படியாவது வெகுவிரைவில் கொண்டுவரவேண்டும் என்ற் அவரது நல்ல நோக்கம் இவ்வளவு சிக்கல்களை கொண்டுவரும் என நான் நினைக்கவில்லை. இந்த நேரத்தில் நான் இந்தியாவில் இருந்தேன். சில தடங்கல் காரணமாக நான் இந்த இசையமைப்பாளரை சந்திக்க முடியாமல் பேய்விட்டது. ஆனால் யாரும் எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திட வில்லை. மாறாக இது முதல் முயற்சி என்பதாலும் இசையமைத்த இருவரும் இந்த துறைக்கு புதியவர்கள் என்பதாலும் இருவரினது இசையையும் நாம் சேர்ப்பதாகவே இருந்தோம். நமது எதிர்பார்ப்புக்கேற்ற இருக்கும் இசையை சேர்ப்பது. நாம் ஆனைவரும் வேறு வேறு தொழில் பார்ப்பவர்கள். திரைப்படம் எடுப்பது நம் தொழல் அல்ல மாறாக நமது ஈழ கலைஞர்களை ஊக்குவிப்பதுடன் நமது கலையை முன்னெடுப்பதே நமது நோக்கம். இசையமைத்தவர்கள் யாராவது ஒருவர் முதலில் ஒரு திரைப்படத்திற்கு இசையமைத்த அனுபவம் இருந்திருந்தால் தனியே அவரின் பெயரை பாவித்திருப்போம். எம்மைப் பொறுத்தவரை முடிந்தளவு நம்மவர்களை பாவித்து ஒரு சிறந்த படைப்பை கொண்டுவருவதே நமது நோக்கம். நமக்கு இந்தியவால் ஒரு பிரபலமற்ற இசையமைப்பாளர் இலவசமாக இந்த படத்திற்கு இசையமைக்க சம்மதித்திருந்தும் நமது கலைஞர்களை ஊக்குவிக் வேண்டும் என்ற எனது நண்பரின் கருத்துக்கு மதிப்பளித்ததே நான் செய்த பெரிய தவறு.
இந்த திரைப்படத்தில் இந்த சிக்கல் வர காரணமாயிருந்த பல விடயங்களை நாம் தற்போது இனம் கண்டுள்ளோம். இனிவரும் காலங்களில் அது நடைபெறாது தவிர்க்க அனைத்தையும் ஆவணப்படுத்த உறுதிபூண்டுள்ளோம்.

இந்த திரைப்படத்தை நாம் எடுத்ததன் முக்கிய காரணம்


1. தென் இந்திய சினிமாவிற்கு மாற்றாக நாமும் ஒரு படைப்பை தர முடியும்
2. இலைமறை காயாக இருக்கும் நம் கலைஞர்களை ஊக்குவிப்பது.
3. புலம் பெயர் மண்ணில் நமது வாழ்வை படம்பிடிப்பது
4. புலம்பெயர் ஈழ மக்களின் சந்தையை நம்பி தென்னிந.தியா திரைப்படம் எடுக்கலாம் என்றால், நாமே ஏன் ஒரு சந்தையை நமக்கு உருவாக்க கூடாது என்று சிந்தித்தது.
5. ஈழ நண்பர்கள் என்ற பெயருடன் நாம் ஒரு கூட்டு முயற்சியாக இதை ஆரம்பித்து ஈழ கலைஞர்களை முழுநேர கலைஞரகள் ஆக மாற்றுவது.

இதற்கு நான் தனிப்பட்ட முறையில் செலவு செய்த தொகை பத்தாயிரம் பவுண்கள். எனது பெயர் வரவேண்டும், புகழ் வரவேண்டும் என நினைத்திருந்தால் தென் இந்தியாவ் இலைமறை காயாக திறைமையுடன் எந்த வித வாய்பும் இல்லாத இசைகலைஞர்களுக்கு ஒரு சிறு தொகை பணத்தை கொடுத்து விட்டு என்பெயரை இசைக்கும் சேர்த்திருக்க முடியும். அது இதைவிட நன்றாகவும் வந்திருக்கும்.

மீண்டும் நாம் வலியுறுத்தும் மாற்று ஒரு கூட் முயற்சி, ஈழம் நண்பர்களின் இருவருட உழைப்பு. பலர் எத்தனையோ இரவுகள் கண்விழித்து உழைத்தும் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஈழம் நண்பர்கள் என்ற அமைப்பினுள் அடக்கம்.! இந்த கூட்டு முயற்சியை நீங்கள் வெற்றிகரமாக்க விரும்பினால் ஆதரவு தாருங்கள், அல்லது தொடரந்தும் தென் இந்திய குப்பபைகளை உள்வாங்க வேணும் என்றால் சேற்றை நன்கே வாரி அடியுங்கள், ஆனால் தமது அனுபவத்தை ஒரு நல்ல பாடமாக எடுத்தபடி ஈழ நண்பர்கள் உறுதியாக முன்னே செல்ல உறுதிபூண்டுள்ளார்கள். காலம் நிச்சயம் பதில் சொல்லும்.
Reply
#44
ஓம் தணிக்கை.. திறமையான ஒருவனை மட்டம் தட்ட இந்தியாவை நன்றாகவே கொண்டு வாருங்கள்.. ஏன்.. கமரா நடிகர் என்று எல்லோரையும் இந்தியாவிலிருந்தே பயன்படுத்தி.. ஈழ முத்திரை குத்தவேண்டியதுதானே? ஒரு கலைஞனின் திறமையை ஏமாற்றிவிட்டு.. ஏனையா கலைஞர்.. அது இது என்று மெழுகுகிறீர்கள்? உண்மை விரைவில் மறையாது.. திறமைகள் என்றோ ஒருநாள் வெளிச்சத்துக்க வரத்தானே செய்யும்? அதுவரை காத்திருக்கிறேன்..
.
Reply
#45
திருவாளர் சண் அவர்களுக்கு நன்றிகள்.
மிகவும் சிந்தனையோடு ஒவ்வொரு வரிகளாக எழுதியிருக்கிறீர்கள்.பல விடயங்களைப் புரிந்துகொள்ள உதவியாயிருந்தது.

நீங்களும் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் அதாவது நீங்கள் நான் குறிப்பிடும் இசையமைப்பாளருக்கு <b>இன்றைய நாள் வரை,ஒரு ஹலோ கூட இதுவரை சொன்னதில்லை என்பது எனக்குத் தெரியும்</b>.நீங்கள் அவரா இல்லையா என்பது என்னைப்பொறுத்த வரை முக்கியமல்ல.உண்மைகள் உறங்கக்கூடாது.சமூகத்தில் எந்தவொரு கலைஞனது திறமைகளும் மழுங்கடிக்கப்படக்கூடாது.இதை இத்தோடு நிறுத்துவோம்.

<b>இந்த வேளையில் உங்களை ஒன்றே ஒன்று கேட்க வேண்டும் போலிருக்கிறது.அதாவது எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் கடைசியாக எழுதிய விடயங்களிலிருந்து பின்வாங்க மாட்டீர்கள் தானே?</b>

இதற்கான பதிலை நீங்கள் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.தவறோ சரியோ நிதானமாக விடயங்களை அலசிக்கொள்வோமே?
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#46
ம் வாசிக்க நல்ல முசுப்பாத்தியா வேறை இருக்கு. என்றை காதிலையும் இந்த படம் பற்றி ஒரு கதை விழுந்துது சொல்லுறன். மியுசிக் போட இவை ஒருதரிட்டை வீடியோ சகட்டை குடுத்தினம். அவர் அதை தனக்கு தெரிஞ்ச ஆளிட்டை காட்டினார். பார்த்தவர் முக்கிய தயாரிப்பாளருக்கு தெரிஞ்சவை. அவை இவையிட்டை விசியத்தை பறைய, தயாரிப்பாளர் மியூசிக் காறரை து}க்கசொல்லி போட்டடாராம். இடை நடுவிலை அம்பிட்டவர் ஒரு நடிகர். என்ன இருந்தாலும் குத்த முந்தி சோறாக்கினது பிழை தானே?
Reply
#47
எனவே தயவு செய்து இது போன்ற வதந்திகளை நம்பாது, பொறுத்திருந்து பார்ப்போம்.
Reply
#48
குறும்படம் சம்பந்மற்றதும் ஒருவரை இழிவுபடுத்துவதுமான கருத்தாகையால் நீக்கப்பட்டுள்ளது
Reply
#49
ஆக கேள்விகள் என்று வந்துவிட்டால் நீங்கள் எழுதும் மற்ற பெயர் பாணியில் பதில் வருகிறது.

நடக்கட்டும் நடக்கட்டும் இப்போதாவது மற்றவர்களுக்குப்புரியட்டும்.இது வரை சண் என்ற பெயரில் நீங்கள் இந்த வகை மொழி நடையைப் பாவித்தது இல்லை.ஆனால் இதே தலைப்பிற்குள் இன்னுமொரு பெயரிலும் அந்தப் பெயர் எழுதிய இடங்களிலும் (உங்கள் நாடகங்களிலும்,நீங்கள் யதார்த்தமாகவே மக்களோடு வாதிடும் போதும் - வானொலியில் கேட்டிருக்கிறேன்) அது வந்திருக்கிறது.

அதுதான் நீங்களா இல்லை இதுதான் அவரா என்பது பற்றிக் கவலையில்லை.<b>திடீரென நியாயம்,கெளரவம் எல்லாம் தொலைந்து உங்கள் உண்மையான வன்மை வெளிவருகிறது</b>.இதைத்தான் நானும் எதிர்பாத்தேன்.

திசை மாற்றுவதற்குப் பல வேடங்கள் அணிந்தாலும் <b>உள்ளே இருப்பதை எங்கு கொண்டு போய் தேய்ப்பதாம்?</b>

ஆக களத்தில் பல விடயங்களை வெளியிடுவதற்கு சந்தர்ப்பத்தினை நீங்கள் உருவாக்கித் தருவதாகவே நான் கருதுகிறேன்.இதைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள்?

<span style='color:#0000ff'>உங்களிடம் முன்வைத்த ஒரேயொரு கேள்வி அதுவும் உங்கள் கருத்து சம்பந்தப்பட்ட கேள்வியிலிருந்து நீங்கள் பின்வாங்குவீர்களா இல்லையா என்ற மிகவும் நியாயமான ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முடியாத பத்தாயிரம் பவுண்கள்? செலவழித்த கூட்டு நண்பரை இனி எந்த ரகத்தில் சேர்ப்பது என்று எனக்குப் புரியவில்லை.

விடயங்கள் இனி அம்பலத்திற்கு வரும் என்றால் பலரின் உண்மையான பெயர்களையும் வெளியிட வேண்டிவரும்.

இளங்கோ அவர்களே (அல்லது பொறுப்பாளர்களே) இதற்கு அனுமதியுண்டா?

-களத்தின் விதியை நான் மீறியதாக இருக்கக்கூடாது.தவிரவும் அனாவசியமாக சம்பந்தமில்லாதவர்களின் பெயர்களை நான் இழுக்கமாட்டேன்.நான் தீர விசாரித்து அறிந்து கொண்டவற்றையும் சம்பந்தப்பட்டவர்களையும் இந்த சமூகம் கடடாயம் அடையாளம் காணவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

தயவு செய்து பதில் தாருங்கள்.

இதில் ஒன்றை மட்டும் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்தக் குறும்படத்தினைத் தயாரித்த சண் அவர்கள் உண்மையில் கலைத்துறையில் நல்ல ஆர்வலர்.நல்ல முயற்சியுள்ள நல்ல மனிதர்.இது எனக்குத் தெரியும்.

அவர் பெயரைப் பாவிப்பவர்கள் யார்?ஏன்? இது ஒரு நகைப்புக்குரிய விடயம்.பழைய களத்தில் சண்முகம் எப்போதெல்லாம் உருவெடுத்தார்?எந்த வகைக் கருத்துக்களுக்குப் பதிலளித்தார்?எவ்வாறு கருத்துக்களை எடுத்துரைத்தார் என்பதை மறந்திருந்தால் சற்று மீட்டுப் பாருங்கள்.இதற்குத் தான் கூறினேன் நல்லவாயன் சம்பாதிக்க நாறின வாயன் திண்ணும் கதையென்று.

பாவம் அந்த அப்பாவி மனிதன்.அவமானப்படப்போவது அவர் (பெயர்) தானே?

எதை வேண்டுமானாலும் இவர் செய்வார்.ஆனால் ஒன்று மட்டும் உண்மை கடைசிவரை அந்த மனிதர் இந்த விடயத்தில் சம்பந்தப்படப்போவதில்லை.விசயங்களெல்லாம் எங்கள் பத்தாயிரம் பவுண் சண்ணுக்குத்தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இல்லை நான் தான் சண் அதே சண் என்று நீங்கள் சொல்லப் போகிறீர்கள் என்றால் அதிலும் எனக்கு ஆட்சேபனையில்லை.காரணம் எனக்குத் தேவை [size=24]நியாயம்.</span>

<b>முன்வைக்கப்பட்ட மிகச் சாதாரண கேள்விக்கு சண் எனும் பெயரில் எழுதும் ............ அவர்கள் பதிலளிப்பாரேயானால் எந்தவித காரசாரமுமற்ற நிதானமான கலந்துரையாடலாக அமையும் என்பது எனது நம்பிக்கை.சண் என்ன நினைக்கின்றார்? மற்றவர்கள் என்ன நினைக்கின்றீர்கள்?</b>
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#50
படத்திற்கு நல்லா தான் விளம்பரம் நடக்குது.
Reply
#51
வாருங்கள் அன்பு நண்பரே.எப்படி சுகம் தானே?
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#52
நல்ல சுகம், நல்லாதான் வெழுத்து வாங்கிறீங்கள். என்ன வரவேற்பு நல்ல அன்பாக இருக்கு, ஒளிச்சு நிண்டு அடிக்கிற பிளானோ?
Reply
#53
நான் முதல் எழுதியது ஒருவர் எனக்கு அனுப்பிய தகவல்.அவ்வளவுதான். அவர் இவர் எண்று நான் விளக்கம் அளிக்க தேவையில்லை. வணக்கம்!
Reply
#54
mohamed Wrote:நல்ல சுகம், நல்லாதான் வெழுத்து வாங்கிறீங்கள். என்ன வரவேற்பு நல்ல அன்பாக இருக்கு, ஒளிச்சு நிண்டு அடிக்கிற பிளானோ?


என்ன நண்பரே அப்படிக் கேட்டுவிட்டீர்கள்
ஒளிச்சு நின்று.....அதுவும் உங்களையா? :?: :?:



Shan Wrote:நான் முதல் எழுதியது ஒருவர் எனக்கு அனுப்பிய தகவல்.அவ்வளவுதான். அவர் இவர் எண்று நான் விளக்கம் அளிக்க தேவையில்லை. வணக்கம்!
[b]

இருந்தாலும் எனது கணிப்பில் எந்தத் தவறும் இல்லையென்று நிரூபித்தமைக்கு நன்றிகள்

சண் அவர்கள் நல்ல முயற்சியொன்று செய்திருக்கிறார்கள்.செய்யுங்கள் செய்யுங்கள் இதையும் சமுதாயம் நன்றாகவே புரிந்துகொள்ளட்டும்
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#55
Quote:ம் வாசிக்க நல்ல முசுப்பாத்தியா வேறை இருக்கு. என்றை காதிலையும் இந்த படம் பற்றி ஒரு கதை விழுந்துது சொல்லுறன். மியுசிக் போட இவை ஒருதரிட்டை வீடியோ சகட்டை குடுத்தினம். அவர் அதை தனக்கு தெரிஞ்ச ஆளிட்டை காட்டினார். பார்த்தவர் முக்கிய தயாரிப்பாளருக்கு தெரிஞ்சவை. அவை இவையிட்டை விசியத்தை பறைய, தயாரிப்பாளர் மியூசிக் காறரை து}க்கசொல்லி போட்டடாராம். இடை நடுவிலை அம்பிட்டவர் ஒரு நடிகர். என்ன இருந்தாலும் குத்த முந்தி சோறாக்கினது பிழை தானே?
என்னுடைய காதிலும் ஒரு கதை விழுந்தது... ஸ்கிறிப்ரை குடுத்து இசை அமைக்கச் சொல்லி.. தயாரிப்பாளர் வருகினம் போட்ட இசையை கொண்டு வாருங்கோ எனச் சொல்லி.. தயாரிப்பாளர்களை கண்ணில் காட்டாமல் இசையை அபகரித்துவிட்டு.. கைகழுவிவிட்ட கதைதான் அது... அனுமதித்தால் அந்த ஸ்கிரிப்டை யாழில் பிரசுரிக்கலாம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#56
முதலில் படத்தை பார்க்கவும், பின்னர் விமர்சிக்கவும். தென் இந்திய குப்பைகளை வளர்க்க நீங்களும் உங்கள் நண்பர்களும் செய்யும் பணி தொடரவும். ஆனால் உண்மையை சொல்வதாயின் ஒரு விடயத்தை பார்த்த பின்னே கூற வேண்டும். ஒரு விடயத்தில் ஆர்வம் இருந்தால் அதை முழுமையாக படியுங்கள். பின்னர் விமர்சியுங்கள். இனியும் காலத்தை வீணாக்க விரும்பவில்லை. ஆனால் மாற்றை பற்றி விமர்சிப்பவர்கள் அதை பார்த்த பின் விமர்சிப்பதே நம் கலையை வளர்க்க உதவும் இல்லை அன்பர் ஒருவர் கூறியது போல் நம்மை அழிக்கவே உதவும்.
Reply
#57
இங்கே விமர்சனத்துக்குள்ளானது மாற்று படமல்ல.. அதன் பின்னணியில் உழைத்து.. மறைக்கப்பட்ட கலைஞன்... இதுகூட தெரியாமல் ஒரு கலைச்சேவையா?!
.
Reply
#58
இங்கும் சண்டைதானா?
Reply
#59
என்னவோ உங்கள் கருத்துமோதலில் ஒருதலை ராகம் படத்திறகு இப்ராகிம் டைரக்டர் என தனது பெயர் போட்டது ஞாபகம வருகிறது.பட வெற்றிக்கு பின்னர் ராஜேந்தர் உரிமை கோரியதும் பின்னர் ராஜேந்தர் நிலைத்துநின்றதும் மறைக்கமுடியா செயலாகிவிட்டது.

எனககு ஒருவரையும் தெரியாது.எனவே நான் கருத்தை இயல்பாக கூறுகிறேன்.
திறமை உள்ளவன் எப்படி அமுக்கினாலும் வெளியே வருவான உலகம் புரிந்துகொள்ளும்.
முன்னர் எழுதியதை திரும்ப எழுதுகிறேன் ஒரு பராசக்தி இல்லாவிட்டால் சிவாஜி
என்ற சக்தி காணாமல்போயிருக்கும் என்பதை நம்புவது எவ்வளவு முட்டாள்தனமோ அதே போலத்தான் ஒரு திறமைசாலியை
மறைப்பதாகும்.
Reply
#60
<img src='http://www.ekkcom.com/bushfuehrer.jpg' border='0' alt='user posted image'>
[size=15]<b>எமக்கொரு சினிமா வேண்டுமென்பவர்கள், இவர் போல் மாறி வருவதுதான் கவலையாக இருக்கிறது</b>.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்கின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் குப்பைக்குள் நின்று கொண்டே, இந்திய குப்பைகள் என்று கோசம் போடுகின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் எமது கலைஞர்களை வளர விடாமல் தடுப்பதே நோக்கமாக இருக்கின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் தமது பையை நிரப்புவதை மட்டுமே குறிக்கோளாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் தேவையானதை பெற்ற பின் பாவித்த கறிவேப்பலை போல் ஆக்கி விட்டு வேதாந்தம் பேசுகின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் பிரச்சனைகளை துாண்டிவிட்டு இறுதியாக வந்து
நல்ல பேரெடுக்க சமரச சாமரம் வீசுவதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிலர் நொந்து நுாலறுந்த பட்டம் போல் நம்பிக்கையே இல்லாமிருக்கின்றனர்................
:?: இப்படி ஏகப்பட்ட ரகங்கள்.........................

நம் வீட்டு பானையில் உணவு இல்லாத வரை,
கடைச் சோறு சாப்பிடுவதைத் தடுக்க யாராலும் முடியாது.

கலைஞர்கள் அடுத்த கலைஞர்களை மலினப்படுத்துவதை விட்டு விட்டு
தமது படைப்புகளை உருப்படியாக கொண்டு வர முடிந்தால் அதுவே ஒரு பெரிய வெற்றி.
எம்மால் முடியாத ஒன்றை நினைத்து வெட்கப்பட வேண்டுமே தவிர ,
அடுத்தவனை நிந்தித்து , அடுத்தவன் பெயர் பாடி நம் வயிறை வளர்ப்பது போன்ற கேவலம் அளவுக்கு படு கேவலமான செயல் வேறொன்றுமில்லை.
.........

கலைஞர்கள் என்பவர்கள் தேவர்கள் அல்ல,
ஆகையால் கலைஞர்கள் உத்தமர்களாக இருக்க வேண்டியதில்லை.
எல்லோரும் சாதாரண மனிதர்கள்தான்.
ஆனால் செய்யும் கலையை உண்மையுடன்,நேர்மையாக செய்தால்
அதுவே அடுத்த நிலைக்கு ஒவ்வொருவரையும் கொண்டு செல்லும்.
எத்தனை படைப்புகள் செய்தோமென்பதல்ல முக்கியம்,
ஒன்றையாகிலும் தரமாக செய்தால்
அதுவே உங்கள் பேர் சொல்லும்.

எது எப்படியோ, உலக சினிமா உச்சத்தை அடைந்தாலும்,
நாம் முற்றத்திலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டு ,
நிலவைப் பார்த்து குரைக்கும் நாய் போல் ஆகாமலிருக்க
யாரை வேண்டுவது என்றுதான் தெரியவில்லை?.........
<img src='http://www.ekkcom.com/handcros.gif' border='0' alt='user posted image'>

-அஜீவன்

[scroll:6df6abd14e][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)