Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வற்றுமோ தமிழ்மொழி வாழி!
#1


 வற்றுமோ தமிழ்மொழி வாழி!

ஈழத்தை சூழ்ந்ததுவோ ஆழி -அதை
இயக்குவதோ ஒரு நீலி
பாரதத்தில் சகுனி ஒரு மூளி- இதை
படியாதவர் மூளை காலி!

மணாளனை மதிக்காத மங்கைக்கு ஏன் தாலி?-அதை
மாற்றப் போதாதோ சில நாழி
காதலர் வாழ்விலென்ன கேலி-அவர்
கண்ணீரை அள்ளுமோ பல வாளி !

எனக்குப் புரியாத சங்கீதம் ராகமாலி
என்றும் புரிகின்ற இங்கிதம் மாதாவின் தூளி-மச்சு
வீட்டு வாழ்வு வெறும்போலி -என்றும்
குச்சு வீடே வாழும் பல ஊழி!

வழக்கிலுண்டோ மொழி பாளி?.எனறும்
வற்றுமோ தமிழ்மொழி வாழி!
வீசுங் காற்றுக்கென்ன வேலி-நான்
வியம்பும் கவிதைக்கு உண்டோ கூலி?

-சுதந்திரன்-




<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#2
எழுதுக எழுதுக தொடர்ந்து ஐயா
எழுதியது உங்கள் கையா
எல்லாம் அனுபவம் மெய்யா
அல்லது சிலது பொய்யா?
.
Reply
#3
மிச்சத்துக்கு T. ராஜேந்தரைக் கூட்டிக்கொண்டு வாறன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#4
மிச்சத்துக்கு T. ராஜேந்தரைக் கூட்டிக்கொண்டு வாறன்..

_________________
பழையன அறிந்து புதியன புகுவோம்.
Reply
#5
மிச்சத்துக்கு ஜி. ராஜேந்தரைக் கூட்டிக்கொண்டு வாறன்..

_________________
பழையன அறிந்து புதியன புகுவோம்.
சீர்,தளை சேர்த்து,எதுகை ,மோனை கலந்து,சிறிது சிரமப்பட்டால் ஒரு மரபுக்கவிதை எழுதலாம்..இதுக்கெல்லாம் ராஜேந்தரை கூப்பிடாதேங்கோ!
Reply
#6
நன்றி ஐயா!
.
Reply
#7
பழயன களைந்து என்று சொல்லாமல் "அறிந்து" என்று சொல்லுறியள்..நல்ல விசயம்
Reply
#8
வணக்கம் ஐயா...

உங்கள் கவிதை வாசிக்க நன்றாக இருக்கிறது.
தொடர்க. களத்தில் நிறைய எழுதுக.


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)