Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
போராட்டம் மீது பற்றுக் கொண்டும் அதனால் ஈர்க்கப்பட்டும் தாயக விடுதலைக்காகப் போராளிகளானவர்கள் ஆயிராயிரம் இளைஞர் யுவதிகள். அதேவேளை தம் சொந்த வாழ்க்கை, குடும்பம் பின்னணிகளால் முழு நேரப் போராளியாக மாற முடியாமல், தீவிர ஆதரவாளர்களாகப் பயிற்சி பெறாத பகுதிநேரப் போராளிகளாக இருந்தவர்கள் இந்த மண்ணில் அநேகம்பேர். அத்தகையவர்களில் ஒருவராக முப்பத்தொன்பது வயது சின்னையா முத்துராசா அவர்களைக் குறிப்பிடலாம். காலஒட்டம் 'சப்போட்டர்ஸ்' என்ற நிலையிலிருந்தவர்களையும் ஆயுதப் பயிற்சி பெற்ற வீரர்களாக மாற்ற முனைந்த போது சின்னையா முத்துராசா எல்லைப் படை வீரரானார்.
இளைஞர் யுவதிகள் மட்டும் களமுனைக்கு என்றான நிலைமாறி தமிழர்கள் அனைவருமே களம் நோக்கிச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள அரசால் திணிக்கப்பட்டபோது ஆறு குழந்தைகளாலோ, அன்புக்குரிய மனைவியாலோ தடுக்கப்பட முடியாததாயிருந்தது, அந்த வீரனின் போராட்டப் பயணம்.
சிறந்த விவசாயியாக, வாகனச்சாரதியாக, கட்டிட மரவேலைத் தொழிலாளியாக, வியாபாரியாகப் பல திறமைகளைத் தன்னகத்தே கொண்டிருந்த முத்துராசாவுக்குப் போர்த் தொழிலும் விரைவாகப் பழகிப்போயிற்று. விடுதலை என்ற உயரிய பெறுமானத்தைப் பெற அந்த வீரன் தேர்ந்தெடுத்த அந்தப் போர்த் தொழில் முழுமையாகவே அவனை ஈர்த்துக் கொண்டது. ஏழு தடவைகளுக்கு மேல் எல்லைக்குப் போய் வந்தாலும் குடும்பத்துக்கான தேவைகளை அவ வப்போது கவனித்துக் கொண்ட அவனது பெரும்பாலான நேரம் போராளிகளுடனேயே கழிந்தது.
அடுத்தடுத்து ஆறு குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பார்வதிக்கு, சொந்த அத்தை மகனையே விரும்பித் திருமணம் செய்து கொண்ட பார்வதிக்கு, கணவனின் எல்லைகாக்கும் பணி விருப்பத்திற்குரியதாக இல்லாத போதும் அவனின் செயற்பாடுகளுக்குத் தடை விதித்தல் என்பது முடியாத ஒன்றாகவே இருந்தது. விடுதலைக்கான தேவையை, சேவையை மறுக்காத அந்த இளம் தாய்க்கு, குடும்பமும் குழந்தைகளின் எதிர்காலமும் எப்போதும் முதன்மையாகத் தோன்றினாலும் கணவனின் போராட்டப் பங்களிப்பை மட்டுப்படுத்த அவளால் முடிவதில்லை. அவனது பதில்கள் அவளை மௌனமாக்கி விடுகின்ற போதுகளில் சலித்துக் கொண்டாலும் கணவனது ஒவ வொரு செயலும் சொல்லும் அவளைப் பெருமை கொள்ளவே வைக்கும்.
தான் வசிக்கும் பகுதியைத் தவிர வேறெந்த இடமும் தெரியாத பார்வதிக்கு அயலில் உள்ள சிறு நகரமோ, கிராமமோ எப்படி இருக்குமென்றும் தெரியாது. "இப்படியே இருங்கோ, தற்செயலா எனக்கேதும் நடந்திட்டால் அதுக்குப்பிறகு ஒன்றும் தெரியாமல் முழுசேக்க தெரியும்" என அடிக்கடி சொல்லும் கணவனுக்கு, "ஆறு பிள்ளைகளின் தேவைகளையும் கவனிச்சு முடிச்சு வெளியில போய் இடங்கள் பார்க்கிறதுக்கு எனக்கெப்படி நேரம் வரும்" என்றோ "உங்கட வெளி வேலைகளோட மட்டும் நிற்காமல் என்னையும் அங்க இஞ்சை என்று கூட்டிக் கொண்டுபோய்க் காட்டுங்கோ" என்றோ பதில் சொல்லத் தெரியாத அல்லது பதில் சொல்ல முடியாத அவளுக்கு இப்போதெல்லாம் தனக்கான, தன் குடும்பத்திற்கான தேவைகளைத் தானே போய்க் கவனிக்க வேண்டிய கட்டாயம். நிலைமைகளை ஓரளவு வளர்ந்த பிள்ளைகளின் உதவியோடு சமாளித்தாலும் கூட அவள் கடக்க வேண்டிய து}ரம் அதிகம்தான்.
அவர்கள் வசிக்கும் பகுதியில் இவர்களின் கிணற்றில் மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். ஆனால், இவர்களும் தோட்டம் செய்வதால் தண்ணீர் வேகமாக வற்றத் தொடங்கியது அந்த வேளையில் "உனக்கு வருமானம் வேண்டாம். அதுகள் தாகத்துக்கு தவிக்காமல் இருக்கட்டும். நீ தோட்டம் செய்யாமல் விடு" என்ற கணவனின் உயர் குணத்தை விழிகளில் வழியும் நீரோடு மீட்டுப் பார்க்கும் பார்வதிக்கு , இப்போதும் ஓர் கைக்குழந்தை. அந்த ஆண் குழந்தை பிறந்த போது அந்த வீரன் எம்மோடு இல்லை. து}ளியில் உறங்கும் அந்த மழலைக்குத் தந்தையின் வீரப்பாடல்தான் தாலாட்டோ?



சர்மதி யசோதரனுக்குத் துணைப்படை பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாமில் என்ன வேலை? திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விட்ட பின்னும் கூட பயிற்சித்தள நினைவில் வேகமாக இயங்கிக் கொண்டிருப்பவளினுள் கனல்வது எந்த உணர்வாக இருக்கக்கூடும்? தாயாக, மனைவியாகத் தனது காலங்களைக் கழித்தவள். துணைப்படை வீராங்கனையாகத் தயாராகி கள முனைக்கனவோடு சுழல்வது இந்த மண்ணிற்கேயுரிய பெருமையான நிகழ்வு எனக் கூறலாமா?
"தேசத்திற்காக நீ என்ன செய்தாய்"? என்ற கேள்விக்குச் சிறிதளவு பங்கையேனும் செய்தேன் நான் என்ற திருப்தியோடுகூடப் பதில் சொல்ல முடியாத நிலையில் ஏராளம் இளைஞர், யுவதிகள் இந்த மண்ணில் வாழ்ந்து (?) கொண்டிருக்க, சர்மதி தன் வாழ்வையே தந்துவிட்ட பின்னும்கூட சிரித்தபடி களப்பயிற்சிக் கனவில்லு}..
யசோதரனும் சர்மதியும் காதலர்கள். பதினைந்து வயதில் காதலித்தவள். யசோதரனைக் கைப்பிடித்தபோது பதினாறு வயதுதான்.
கடற்றொழிலே வாழ்வுக்கு ஆதாரமான அந்தச் சிறிய குடும்பத்தில் இன்னும் இரண்டு சிறிய புூக்கள்.
லக்ஸிகா - லக்ஸனா.
தாயைவிடவும் தந்தையையே ஆழமாக நேசித்த பிஞ்சுப் புூக்கள், போராட்ட காலத்துள் பிறந்துவிட்ட அந்தப் பிஞ்சுகளுக்கும் சோதனைகள் தான். உணவில், உடையில் வாழ்விற்குத் தேவையான வளத்தில் பற்றாக்குறையேதும் இல்லைதான். ஏனெனில் அவர்களின் தந்தை சிறந்த உழைப்பாளி. அவன் வெறும் உழைப்பாளியாக மட்டும் இருந்துவிடாமல் தேசப் பற்றாளனாகவும் தன்னை வரித்துக் கொண்டாவனாதலால் அந்தப் பிஞ்சுகளுக்கும் சோதனை.
தந்தையை ஐந்தாறு நாட்கள் தொடர்ந்து பார்க்காதுவிட்டால் அந்தப் புூக்கள் காய்ச்சலில் சுருண்டுபோகும். தந்தையையே தேடி வாய்கள் அரற்றும். கடந்த ஒரு வருடமாக மாதத்திற்கொருமுறை பத்து நாட்களேனும் எல்லைக் காவலுக்கெனச் செல்லும் ஒவ வொரு தடவையும் இதுவேதான் நிலைமை. என்றோ ஒரு நாள் பத்துமாதமேயான மழலை ஒன்று விமானக்குண்டுவீச்சில் சிதறிக் கிடந்ததைப் பார்த்ததன் விளைவோ என்னவோ அவனுக்கும் தன் போராட்டப் பணியே முதன்மையாகத் தெரிந்திருக்க வேண்டும்.
தன் உதிரிப் புூக்களின் உயிர்கள் அவன் நினைவில் நிழலாடியபடியே இருந்திருக்க வேண்டும். அதுதான் அவனை ஓயாது களமுனை நோக்கி இழுத்திருக்க வேண்டும். விருப்பத்திற்குரிய களமுனையிலேயே நிரந்தரமாகக் கண்மூடி அவன் மாவீரனாகச் சட்டமிடப்பட்டு வீடு வந்தபோது அந்த மழலைகள் மகிழ்ந்துகொண்டன. தந்தை தம்முடனே நிரந்தரமாகத் தங்கிவிட்ட மகிழ்வில் திளைத்துப் போயின. கேட்பவர்கள் அனைவருக்கும் தந்தையின் படத்தைக் காட்டி தந்தையை அறிமுகப்படுத்திக் கொண்டன.
துணைப்படையின் உருவாக்கம் கணவனின் இழப்பின் வேதனையில் இருந்து தன்னை மீட்கவும் கணவனின் பணியைத் தொடர்ந்து செய்யவும் சர்மதிக்குப் பேருதவியாக அமைந்திருக்குமோ என்னவோ? ஆனால், தவிர்க்கமுடியாத புறச் சூழல்களால் துணைப்படை அணியுடன் இணைவதை இடைநிறுத்தி மீண்டும் வீடுவந்து குழந்தைகளோட வாழும் சர்மதிக்கு வருங்காலம் வசந்தம் துளிர்க்கும் காலமாகும் என்ற நம்பிக்கைகளே இன்றுவரைக்கும் துணை.



"தகப்பனில்லாமல் ஆண்குழந்தைகளை எப்படி வளர்க்கிறது? வளர வளர எங்கட சொல்லுக்குள் அடங்குங்களா அதுகள்"
பெண்ணிடம், அதுவும் ஒரு தாயிடம் உள்ள ஆளுமையைப் பற்றிய கேள்வியை, ஆண் - பெண் குழந்தைகளின் இருவேறு வளர்ப்புமுறையை எனப்பலவாறான விரிவான தேடல்களை இந்தக் கூற்று உருவாக்கிவிடினும் அவற்றை அப்பால் விடுத்து நாம் இன்றைய நடப்புக்குள் வருவோம். 4 வயது விதர்சனும் 2 வயது சிகரனும் முற்றத்து மர நிழலில் விளையாடிக் கொண்டிருக்க, ராதாலு}.. 22 வயது நிரம்பிய மெலிந்த அந்த உருவம் தனது வீட்டுக்குப் புதிதாய் ஒரு மண்குந்து வைப்பதில் ஈடுபட்டிருந்தது.
அந்த வீட்டுக்குள் குழந்தைகள் விளையாடத்தான் அந்த மண் குந்தோ என நினைத்தபடி எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். யோகேஸ்வரனும், வசந்தகுமாரியும் ஒருவரை ஒருவர் விரும்பி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள். விதர்சனின் மழலை சத்தம் கேட்ட மகிழ்வில் இருந்து விடுபட எண்ணியதுபோல 3 நாள் காய்ச்சலில் வசந்தகுமாரி மரணத்தைத் தழுவிக் கொள்ள, குழந்தையோடு தனித்து நின்ற யோகேஸ்வரனுக்கு வசந்தகுமாரியின் பெற்றோரே அவரின் தங்கையான ஜெயக்குமாரி (ராதா)யை மறு திருமணம் செய்து வைத்தனர். அதிக வசதியுமில்லாத, வறுமையுமில்லாத வாழ்வோட்டம் சீராகவே போய்கொண்டிருந்தது. 2 ஆண் குழந்தைகளோடு ராதாவின் வாழ்வு.
தினை விதைக்க பனை உயரப் போர் வீரர்கள் தோன்றி தமக்கு வெற்றியீட்டித் தந்ததாக கிரேக்க நாட்டுப் பழங்கதைகள் கூறுகின்றனவாம்.
அப்படி ஏதும் தோன்றி வெற்றி பெற்றுத்தர, மண்ணை மீட்டுத்தர, பாதுகாக்க முடியாத காரணத்தால் போராடும் இளைஞர், யுவதிகளின் பாரச்சிலுவைகளுக்கு குடும்பத்த வர்களும் தோள் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை. ஊரெங்கும் தாயக விடுதலைக்கான அறைகூவல் ஓங்கி ஒலித்தபோது துரை என்றழைக்கப்படும் யோகேஸ்வரனும் சிலுவை சுமக்கத் தயாரானவர்களில் ஒருவராகலு}..
அந்த வீரன் எல்லைக்குப் போய் பணி முடித்துத் திரும்புவது வழமையாய் இருந்தபடியாலோ என்னவோ அடுத்ததடவை எல்லைக்கென போராளிகள் அழைத்தபோதும் அந்த வீரன் தயாரானான்.
மகனின் பிறந்தநாள் படங்களைப் பார்க்கும் ஆவல் மனதில் கொப்பளிக்க, அது வந்துசேர நாட்கள் பிடிக்கும் என்ற உண்மை அந்தஆசையை அடக்க , ஆறுதலாக வந்து பார்ப்போம், என நினைத்தபடி எல்லைக்குப் புறப்பட்டவன், "நான் போயிட்டுக் கெதியில வந்திடுவன். நீங்கள் என்னைக் கேட்டு ஒரு இடமும் போக வேண்டாம்" என மனைவியிடம் கூறிவிட்டே சென்றான். இரண்டாயிரமாம் ஆண்டு செப்ரெம்பர் பதினேழாம் திகதி அந்த வீரன் இந்த மண்ணுக்காக வீழ்ந்த அச் செய்தி ராதாவின் காதடைந்தபின், துயிலுமில்லம் தேடிச் சென்றவளின் இரு கரங்களிலும் இரண்டு எதிர்காலங்கள். கணவன் இன்றி அவனது காதல் இன்றி கண்ணிரண்டில் நீரும், கையிரண்டில் புூக்களுமாய் நிற்கும் ராதாவின் வாழ்வு விடியலுக்காய் காத்திருக்கின்றது
Reply
பெயரளவில் மட்டும்!
வடக்கு-கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு உள்ள தடையை நீக்கும் நோக்கம் புதிய அரசாங்கத்திற்கு இல்லைப்போல் தெரிகின்றது. ஏனெனில் தற்பொழுது மீன்பிடித்தடையில் அரசாங்கம் செய்துள்ள தளர்ச்சியானது மிகவும் சொற்பமானதும் அர்த்தமற்றதொன்றுமாகும். பெயரளவிலானது என்று மட்டுமே கொள்ளத்தக்கது.
தற்போதைய அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, மீன்பிடி பகல் நேரம் இரண்டு மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டள்ளது. அதாவது அதிகாலை 4.00 மணியில் இருந்து மாலை ஆறரைமணி வரையில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னர் மாலை 4.30 வரையில் இவ அனுமதி இருந்தது. இதேசமயம் மீன்பிடிக்கும் நேரம் யாழ். குடாநாட்டில் ஏற்கனவே குறைவாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அடுத்ததாக, மீன்பிடிக்கும் தூரமானது ஏற்கனவே 500 மீற்றர் இருந்த இடங்களுக்கு 750 வரையிலும் 1000 மீற்றர் வரையில் இருந்து இடங்களுக்கு 1500 மீற்றர் வரையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இரவுநேர மீன்பிடியும், ஆழ்கடல் மீன்பிடியும் இன்றி, அரசாங்கம் செய்துள்ள இத்தளர்ச்சியானது எந்த வகையிலும் முன்னேற்றகரமானதொன்றல்ல. ஏனெனில் இத்தளர்ச்சியானது மீனவர்களின் இன்றைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவப்போவதில்லை.
வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில் பல்லாயிரக் கணக்கான மீனவக் குடும்பங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையோர் ஆழ்கடல் மீன்பிடியையே நம்பியிருந்தனர். இம் மீனவர்கள் இலங்கையின் கடற்பிராந்திய எல்லைவரை சென்று மீன் பிடித்தவர்கள். சிலவேளைகளில், இவர்கள் இலங்கையின் கடற்பிராந்தியத்திற்கு வெளியில் மீன்பிடிப்பதும்கூட நிகழ்வதுண்டு.
இவ வாறான நீண்ட தூரத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு மீன்பெருமளவில் வாழும் இடங்களை நாடிச் செல்வதே காரணமாகும். இவ வாறான நீண்ட கடல் பயணங்களை வெளிநாட்டு மீன்பிடித்தொழிலாளர்களும் கூடச் செய்வதுண்டு. அதாவது, மீன் அதிக மாகப் பிடிக்கப்படும் இடங்களை நோக்கி எல்லைகளை மீறிச் செல்வதுண்டு.
இவ வாறு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சில நூறு மீற்றர் நீளத்திற்கான தடைகளை நீக்குவதால் தளர்த்துவதினால் பயன் ஏதும் ஏற்பட்டு விடமாட்டாது. ஒருபுறம் இவர்களினால் இலாபகரமாக மீன்பிடித்தொழிலைச் செய்யமுடியாது இருக்கும் என்பது, மட்டுமல்ல, இவர்களிடம் உள்ள மீன்பிடி உபகரணங்களும் கரையோர மீன்பிடிக்கு ஏற்றவையாக இருக்கமாட்டாது.
இது ஒருபுறம் இருக்க கரையோரத்தில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் சகல தொழிலாளர்களுக்கும் கூடப்போதிய வருமானம் கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்பும், அற்றதாகி விடுகின்றது. இதன் காரணமாக மீனவர்கள் தொழில் இன்றியே பெரும் வருமானப் பற்றாக்குறையுடன் வாழ்க்கை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே உள்ளனர்.
இந்தவகையில், அரசாங்கம் அறிவிப்புச் செய்துள்ள மீன்பிடித்தடையிலான தளர்ச்சி பொருட்படுத்தக்கூடிய தொன்றல்ல. மீன்பிடித்தடை நீக்கம் பற்றி வலியுறுத்தப்பட்டதினால் ஒப்புக்குச் செய்யப்பட்ட தளர்ச்சியாகவே கொள்ளத்தக்கதாகும். மீன் பிடியைப்பொறுத்து இரவில் மீன் பிடிக்கவுள்ள தடை நீக்கப்படாமலும், ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதி அளிக்கப்படாமலும் மேற்கொள்ளப்படும் தளர்ச்சி எந்தவித பலனையும் அளிக்கக்கூடியதாக இருக் கமாட்டாது.
இந்த வகையில் மீன்பிடித் தடை குறித்து புதிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவானது தமிழ் மக்களுக்கு பெரிதும் ஏமாற் றம் அளிப்பதொன்றாகவே உள்ளது. இது அரசாங்கத்தின் சமாதான முயற்சிகள் குறித்தும் சந்தேகங்களை ஏற்படுத்தும் அளவிற்கு அவநம்பிக்கையைத் தோற்றுவிக்கத்தக்கதாகும். அதாவது, முன்னைய பொ.ஐ.முன்னணி அரசாங்கமும் சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் மீன் பிடித்தடை குறித்து இவ வாறான நிலைப்பாடுகளை அதாவது இராணுவ அனுகூலங்களை முதன்மைப்படுத்தும் நிலைப்பாடுகளை முதன்மைப்படுத்த முற்பட்டமையே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையுூறாக அமைந்ததென்பது ஞாபகப்படுத்தக் கூடியதாகும்.

கல்விக்கு இடையுூறு!
'வடக்கு கிழக்கில் இருநூறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய ஒரு இலட்சம் சிறுவர்கள் வீதிகளில் அலைந்து திரிகின்றனர். இந்த நிலையைத் தீர்ப்பதற்கு உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்' என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, அகதிகள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனாவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
கடந்தகால சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட இன அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகளில் மாணவர்களின் கல்விசார்ந்த நெருக்கடியும் ஒன்றாகும். இதற்குத் தனியாக பாடசாலைகள் மீது சிறீலங்கா இராணுவம் குறிவைத்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மட்டுமல்ல, அதன்வேறுபல நடவடிக்கைகளும் கல்வியைப் பெருமளவு பாதித்தன என்பதே நியாயமானதாகும்.
தமிழர் தாயகத்தில் படையெடுப்புக்களை நடாத்திய சிங்கள இராணுவம் பெருமளவிலான பாடசாலைகளை அழித்தது மட்டுமல்ல, ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட இடங்களில் உள்ளபல பாடசாலைகளை தனது தேவைக்கு எடுத்துக்கொண்டது. சிறீலங்கா படைகள் ஆக்கிரமிப்புச் செய்த இடங்களில் அது தேவைக்கென எடுத்துக்கொண்ட கட்டடங்களில் அநேகமானவை பாடசாலைகளாகவே இருந்தன.
இந்நிலையில் பாடசாலைக்குள் பெருமளவு செயலிழந்து போயின. இது பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கான வசதியை நேரடியாகப் பாதிப்பவையாக இருந்தது. ஆனால் இராணுவம் நிலைகொள்வதற்காகப் பாடசாலைகளை ஆக்கிரமித்ததினால் மட்டும் தான் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதல்ல சிறீலங்கா அரசின் பொருளாதாரத் தடையில் இருந்து ஏனைய ஒடுக்குமுறை, நடவடிக்கைகள் அனைத்துமே கல்வியைப் பெரியளவில் பாதித்தன.
சிறீலங்கா அரசின் பாரிய இராணுவ நடவடிக்கைகள் ஒவ வொன்றும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. பல குடும்பங்கள் பொருளாதார வாழ்வையும் அடியோடு சிதைத்தது. பல குடும்பங்களின் உழைப்பாளர்களைக் காவுகொண்டது.
இதனால் கல்வி கற்கவேண்டிய சிறார்கள் பலர் தமது குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டியவர்களாயினர். பலர் ஆதரவற்றவர்களாக மாறவும் வேண்டிவந்தது. இதனால் கல்வியைத்துறந்து சிறு வேலைதானும் தேடியலைய வேண்டியவர்கள் ஆனார்கள். இவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகளை மட்டுமல்ல, கல்விகற்பதற்கான வாழ்வு நிலையையும் கொண்டிருக்கவில்லை என்பதே யதார்த்தமானதாய் இருந்தது. ஒருபுறம் வாழ்விடமின்மை, மறுபுறம் வறுமை அன்றாட உணவுக்கே அல்லாடும் நிலை என்ற நிலையில் கல்வி கற்பதென்பது எத்தனை தூரம் சாத்தியமான தொன்றாக இருக்கமுடியும்!
வறுமை காரணமாகப் பாடசாலை செல்லும் மாணவர்களில் பலர் காலை ஆகாரத்தை காணாதே செல்கின்றனர். இதன் காரணமாகப் பாடசாலைகளில் பல மாணவ மாணவிகள் மயக்கநிலைமை அடைகின்றனர் எனப் பல தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அந்தளவுக்குச் சிறார்களின் கல்வியை ஏழ்மை வாட்டுகின்றது.
இவற்றைத்தவிர, இயங்கும் பாடசாலைகள் கூட அடிப்படை வசதிகள் பல இல்லாமலே செயற்படுகின்றன. அதாவது பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் தளபாடங்களில் இருந்து ஆசிரியர் வரையிலான அசையாத, அசைவன யாவும் பற்றாக்குறையானவையாகவே இருந்தன. அதாவது கடந்த ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே வடக்கு-கிழக்கில் கல்வி காணப்பட்டது. இலவசமாக விநியோகிக்கப்படும் பாட நூல்களைக்கூட ஆண்டின் இறுதியில் விநியோகிக்கும் நிலையே இருந்தது.
இந்த hPதியில் தமிழ் சிறுவர்களின் இன்றைய கல்வியானது ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு காரணிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆகையினால் வடக்கு-கிழக்கில் மூடப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட பாடசாலைகளைத் திறப்பது மட்டுமல்ல, தமிழ்சிறுவர்களின் கல்விக்கு இடையுூறாகவுள்ள ஏனைய காரணிகளையும் உடன் போக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அதாவது பசிபோக்க உணவும், கல்வி கற்பதற்கு வசதிகளும் உடன் அளிக்கப்படுதல் வேண்டும். இதில் தாமதம் செய்வது பயிர் செய்யப்பருவ காலத்தைத் தவறவிடுதல் போன்றதாகும். இதில் உடன் கரிசனைகாட்டாது போதல் இன ஒடுக்குதலின் ஒரு வடிவமாகவே பார்க்கப்படக்கூடியது.
Reply
வில்லுக்குளத்துப் பறவைகள் -சம்பவம்-12
என்ன படிக்கின்றாய்?' கேள்வி தெறித்தது.
'இளநிலை வர்த்தகப் பட்டப்படிப்பு'
'உனது பாடத்திட்டத்தைச் சொல்?'
நான் துணுக்குற, 'நான் எனது வர்த்தக
முதுநிலைப் பட்டப்படிப்பை பம்பாய்ப் பல்கலைக்கழகத்தில் முடித்தவன், ஆகையால் நீ சொல்' என்றார்.
சொல்லி நான் முடிக்க, அவன் ஒரு சிறு இராஜநடைபோட்டான். திரும்பி மீண்டும், 'நான் நீ படிப்பதனை ஏற்றுக்கொள்கிறேன்.
உனது பட்டப்படிப்புக்கு முன்னால் புலியின்
ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டதனை
ஏன் மறைக்கின்றாய்?'

ஊர் ஊராக இருக்காதோ என்ற பயம், சைக்கிளை வேகம் வேகம் எனச் செலுத்த எதிர்ப்பட்ட புன்னகை மனிதர்களின் விசாரிப்புகளால் வெல்லப்பட்டது. பஸ்சிலிருந்து இறங்கி இரவல் சைக்கிளில் வீடு போனதும் எதிர்கொண்ட அம்மா, ஆச்சரியத்தின் விளிம்பில் ஆழ்ந்தார்.
'எப்படியும் நீ வருவாலு}. எத்தனை பேர் எத்தனை கதைகளைச் சொன்னாலும்' கண்கள் கலங்க அம்மா.
சற்றே நிலைகலங்க, எனக்கு 'சரிலு} சரி.. தேத்தண்ணி எங்கே?' என்ற அதிகாரக் கட்டளையாலேயே உணர்வுகளை வெல்லமுடிந்தது. பட்டுக்குஞ்சம் போல மினுமினுப்பும், பளபளப்பும் கொண்டிருந்த சின்னத்தம்பிக்கு, வானத்தில் செல்லுகின்ற ஏதோவோர் விமானம் அண்ணனைச் சுமந்து வரும் என்ற நம்பிக்கை உறுதியான சந்தோஸம். தூர நின்றான். பின் நெருங்கி, இவ வளவு நாளும் வீட்டாரின் உரையாடல்களில் ஒரு குழப்பமான உருவாய் இருந்த அண்ணனை நோக்கிப் பின் கட்டிக் கொண்டான்.
எனக்கு அழலாம் போலிருந்தது. இத்தனை நெகிழ்வை இவ வரிய சொத்தை எங்களிலொருவன் என்ற hPதியில் மீண்டும் ஆதரவாக உயரும் கரங்களை, அள்ளியணைப்பதையே பாரம்பரியமாய்க் கொண்டிருக்கும் இவர்களை எப்படி நான்கு வருடங்கள் சந்திக்காதிருக்க என்னால் முடிந்தது?
'இது என் பகைவனுக்குக்கூட நேரக்கூடாது'

அம்மா இந்த நான்கு வருடத்தினுள்ளே தனக்கு நேர்ந்தவற்றை, மேற்கண்ட முத்தாய்ப்புடன் ஆரம்பித்தார். 'நீ காட்டின வழியிலை தம்பியவை இரண்டும் புலியெண்டு போயிட்டுது. அவன் வள்ளல் அப்பள வியாபாரி. உனக்கடுத்த சனியன் சென்டரியாம். நான் எவ வளவு அழுதிருப்பன்லு}. எவ வளவு கெஞ்சியிருப்பன்லு}. அண்டைக்கு இந்தியன் ஆமி ஸெல்லடி தொடங்கிவிட்டான். அவன் என்ன சிலோன் ஆமிமாதிரியேலு}. மழை பொழிஞ்ச மாதிரி.. என்ரை ஐயோ! குமரன் கடைசித் தம்பியையும் கூட்டிக்கொண்டு மல்லாகத்துக்கு கொண்டு போட்டான். கொப்பரும் அங்கைதானேலு}. எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. சிலோன் ஆமி வீடுகளைத் தரைமட்டமாக்கி அழிவு பண்ணினாலும்லு}. அப்பா அவங்கள் பரவாயில்லை ஸெல் பட்டு என்னோடை படிச்ச செல்லம்மாவின்ர கடைசிப் பிள்ளை ஏழு வயது தான்ரா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக ஒரு வழியுமில்லைலு}லு}. என்ன மந்திரமோ மாயமோ மூண்டு இடத்திலை கொஞ்சம் கொஞ்சமா வெடிச்சது. இண்டைக்கும் தாய் செல்லத்துக்கு விசர் மாதிரித்தான். பெத்த பிள்ளை இரத்தம் பெருக்கிச் சாகிறதைலு}லு} ஐயோலு}. நல்ல காலம் என்னை அதுக்குள்ளை தாசன் வந்து கூட்டிக்கொண்டு போட்டான்'
எனக்குப் பெரிய நிம்மதி உண்டானது. ஐந்து ஆண் பிள்ளைகளிருந்தும் துணைக்கு யாருமில்லாது அம்மா தவித்த நேரத்தில இந்த அவலமும் நேர்ந்திருப்பின்லு}. அம்மாவுக்காக நீண்ட வராந்தா வெளிகளில், தலை நிலம் நோக்க நடந்து, றயசன எண்களை வெறித்து, கட்டில்களை ஆராய்ந்து நெருங்கினாலும் அம்மாலு}. எனது அம்மாவின் புன்னகைக்கு என்ன நிச்சயம்லு}.. கண்ணிலே மழலையொன்று குருதி சொட்ட கொஞ்சம் கொஞ்சமாய்ச் செயலிழப்பது நிறைந்து பயமுறுத்தியது.
'தாசண்ணையை இப்ப எங்கை வைச்சிருக்கிறாங்கள்?' எனக்கு அண்ணரைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.
நீங்கள் என் அண்ணரைப் பார்த்திருப்பீர்கள், என்னைப் போலவேதான் உருவம். அசல் தோட்டக்காரன் என்பது முகத்தில், உடம்பில், செயல்களில் பொறிக்கப்பட்டிருக்கும். என்னைவிட இரண்டு வயது பெரியவன். அப்பாவின் சொந்தத் தமையனின் கடைசி மகன். பள்ளிக்கூடம் சென்று வருவதைவிட சந்தைக்குப் போய்வருவது இலாபகரமானது என்பது அவனது தத்துவம். திருவிழாக் காலங்களில் அவனது சேமிப்பு வெளிவரும், நான் ஒரு காசாளர் போலப் பின்வருவேன். ஒன்றுக்கு நாலு எனும் ஒருவகைச் சூதாட்டம் ஆடி அண்ணன், பெரும்பாலும் கைக்காசில் கால் பங்கை இழப்பார், வெற்றியோ தோல்வியோ கையிலிருக்கும். மிகுதிப் பணத்தை அண்ணர் செலவளிக்கையில் ஊரிலுள்ள ஊதாரிகளெல்லாம் தோல்வியை ஏற்றுக்கொள்வர்.
அப்படியான என் அண்ணரைச் சந்திக்க நான் 'கியுூவரிசையில்' காத்திருந்தேன். கூட எனது பாதுகாப்பிற்காக நடுத்தர வயதைத் தாண்டிவிட்ட என் தந்தையார். எழுத்து மூலமான விண்ணப்பம் தாண்டி, எனது முகம் மீது கொண்ட காதலால் அமைதிப்படை அதிகாரி நேரடி விசாரணையைத் தொடங்கினான். அப்பாவின் அரச சேவகமும் எனது சென்னைக் கல்லூரியின் அடையாள அட்டையும் காப்பாற்றியது. அண்ணரைப் பார்ப்பதற்குள் ஆயிரம் தடைகள். ஒரு கொட்டகையில் இறுதியில் உட்காரவைக்கப்பட்டு, 'ஐந்து நிமிடங்கள் தான்' என்பதை கொச்சைத் தமிழில் 'நானும் தமிழறிவேன்' என்று வெற்றிப் புன்னகை இழைய ஒரு 'அமைதி காப்பவர்' அறிவுறுத்தினார்.
'தம்பியை எப்படியாவது வெளியில கொண்டாந்திடு'
தாசனின் அண்ணர் பிரான்சிலிருந்து ரெலிபோனில் அடிக்கடி உச்சரித்த வாசகங்கள் அண்ணரைப் பார்க்கப்பார்க்க அந்நினைவே முட்டி மோதியது. சம்பாஸனையில் நான் சலித்துப்போனேன். தனது அடையாள அட்டையைக்கூட அண்ணர் தொலைத்துவிட்டார். அதுபற்றிய பெரிய கவலையில்லாது 'வெளிநாட்டுக்குப் போக என்னாலை ஏலாது. அடுத்தமுறை என்ரை அம்மாவோட வா, முடிஞ்சா வடைசுட்டு எடுத்துவரச் சொல்லு. போன முறையைவிடக் கொஞ்சம் அதிகமாய், அப்பதான் எல்லாருக்கும் கொடுத்துச் சாப்பிடலாம்'
சற்று இடைவெளிக்குப் பின். 'நீ முயற்சித்துப் பார்லு}.. வெளியிலை வந்தும்லு}.. இந்த அடி வேண்டின பிறகுலு}. வெளிநாட்டுக்குலு}'
திரும்பிக்கொட்டகை நோக்கி நடந்தான். கைவிடப்பட்ட முன்னாள் அரச மருத்துவமனைக் கட்டடமே இவர்களின் சிறைமுகாமாக மாறியிருந்தது. சீமெந்துத் தொழிற்சாலையின் புகையாலும், கடற்கரையோரமாக செயற்கைத் துறைமுகம் நிர்மாணிக்கப்படுவதாலும் புகை சூழ்ந்த, செம்மண் முகங்கிளறும் வனமாகி, 'அசுத்தப்பகுதி' என்ற கிhPடத்தைச் சுற்றுவட்டாரம் சூடியிருந்தது.
ஒரு கிழமை ஆனது. உறவினர், நண்பர்களென்று உறவுகளை மீண்டும் புனரமைக்கும் காலம். அண்ணருடைய விடுதலையும், மீண்டும் இந்தியா திரும்புகையில் அவரையும் உடனழைத்துச் செல்ல வேண்டுமென்பதுவும் ஓயாத அலைச்சலுக்குத் தூண்டுகோலாகின. ஒரு வழியாக ஆங்கிலத்தில் தட்டெழுத்துச் செய்யப்பட்ட அண்ணரின் நிலவரம், அவரில்லாது குடும்ப ஜீவனப்பாட்டை உறுதி செய்யும் விவசாயம் கைவிடப்பட்டிருப்பது, தாயார் நோய் வாய்ப்பட்டிருப்பது, அவரை விடுதலை செய்யும் பட்சத்தில் எமது குடும்பமே எத்தனை 'கிலோகிராம் நன்றிக் கடன்' உடையவராய் மாறுகின்றது போன்ற விபரங்களை உள்ளடக்கி, கீழே பிரசைகள் குழுவினர் மற்றும் விதானையார் ஒப்பமிட்டிருந்தார்கள். கூனிக்குறுகி விடுதலை வேண்டும் இக்கடிதத்தில் ஒப்பமிட்ட இன்னொருவரான என்பெரிய தந்தையார் கூடவர இராணுவ மேலதிகாரியுடனான சந்திப்பு நிகழ்ந்தது. முகத்தில் மாபெரிய கடமைக் கனல் சூழ்ந்திருக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த அவர் சற்று நேரத்தின் பின்னால் எம்மை உட்காரவைத்துப் பேச ஆரம்பித்தார். அவர் ஒரு வட இந்தியராக இருக்கலாமென்பதைத் தோற்றம் உறுதி செய்தது. கூடவே இருந்த மலபார் ரெஜிமென்ட் அதிகாரி, அவரின் பேச்சின் சாராம்சத்தைத் தமிழிலும் நீட்டி முழங்கினார். இவ வாறான வெத்து வெட்டுக்கள் நிறையப் பெற்ற அவரின் பேச்சின் சாராம்சமென்னவோ கொஞ்சம்தான். 'புலிகளின் தொல்லை மிகவும் மோசமாயுள்ளது. ஆனாலும் இவரை விடுதலை செய்துவிடலாம், முதற்படியாக ஏதாவதொரு ஆயுதத்தை ஒப்படைக்க வேண்டும், விடுதலைக்கு விலையாக தானாகவே தேசப் பிரஸ்டத்தை கைதி மேற்கொள்ள வேண்டும்.
வெளியில் வந்தபோது பெரியப்பா நிறையவே சோர்ந்துபோயிருந்தார். கொஞ்சம் சதைப்பற்றான தொந்தி விழுந்த உடலமைப்பு, தலையில் வழுக்கை விழுந்திருப்பினும் வெண்முடிகள் எண்ணக்கூடக் கிடைக்காது. இவரது இளமையின் ரகசியம் 'தேசிய பானம்' என வீட்டார் சொல்லிக்கொள்வர். ஓய்வு பெற்ற விமானப்படைச் சிற்றூழியர் அவர். விமானப்படை தந்த மிடுக்கில் அந்நாளில் செய்த சண்டித்தனத்தின் சான்றாக, அரைக்காற்சட்டைப் போலீசிடமிருந்து பிடுங்கியெடுத்த சிறு குண்டாந்தடி அவரது வாசஸ்தலத்தின் அலங்காரச் சின்னங்களில் முதன்மையானது இவ வகைப்பட்ட எனது பெரிய தந்தையார் இன்றைய நாளில் புயலிலடிபட்ட பஞ்சாகியிருந்தார். இவரது ஈடாட்டத்தின் மையமானது, வயோதிபத்தைவிடவும் இயக்கம் சார் சண்டியர் முன் இவர்களது வீரம் தோற்றோடியதே ஆகும். இவரது உலகறிவு இவரை ஒதுங்குவதே மாரியாதையெனப் போதித்தது போலும்! முன்பெல்லாம் இலங்கையின் நாடாளுமன்ற நாற்காலிகளிலும் புரட்சிப் புூக்கள், புூத்துக்குலுங்குமெனப் பறையறிவித்த இடதோ வலதோ, ஏதோவொரு கொம்யுூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராயிருந்தவர். முதலில் ஈழப்போராட்டம் என வருகையில், பழைய பாரம்பரியம் காக்க செஞ்சூரியனுக்காய் வக்காலத்து வாங்கி அலுத்ததாலோ அல்லது புத்திர பாசம் உச்சம் பெற்றதாலோ செயல்வீரர்களை வாரியணைத்துக்கொண்டார்.
வீட்டு வாசலை நாம் நெருங்கியபோது, எமதூர்ப் பிரமுகர்களிலொருவரான மகாதேவன் மாஸ்ரர் 'என்னாச்சு?' என்றபடி வரவேற்க, சால்வைத் துண்டால் முகத்தைத் துடைத்தபடி, பெரியப்பர் சலிப்புடன் செருமிக்கொண்டார்.
'அப்பவே இந்த விடுபேயன்களுக்குச் சொன்னனான், இந்தியாவை இவை ஏமாத்தலாமெண்டு நினைப்பதுலு}. தந்திரோபாயமும் மண்ணாங்கட்டியும்லு} அவன் ஆயுதம் கொடுத்தால் வாங்கின உங்கடை மதி எங்கை? புலிகளாவது இடைக்கிடை இந்தியா பற்றி ஏதோ சொன்னாங்கள்லு}. ஹ{ம்லு}.'
நான் தலைகுனிந்து நிலம் நோக்கத் தொடங்கினேன். மாஸ்ரர் ஒரு அந்தநாளைய இந்தியப் பட்டதாரியாகையால், இந்தியாவின் பெருமை அவரின் பெருமையென ஆகி வெகுகாலம். மேலும் இன்றைய சூழலில் அவரது வாதத்தின் நியாயம்லு}லு}
தலை நிமிர்ந்ததோர் வாழ்வு சமைத்திட
நிமிர்ந்த தலை மட்டும் கொண்டுல வினோர்
குனிந்திடல்லு} குனிந்திடல் மேலும்
குன்றுதல்.. கடனேலு}.
மகாதேவரானவர் சுருட்டிற்கு உயிர்கொடுக்க பெரியப்பா ஆரம்பித்தார். 'என்ரை குரங்குக்கு எத்தனை நாள் சொல்லியிருப்பன் ஓடடா இனிமேலாவதுலு} எங்காவது தொலையெண்ணக் கேட்டானேலு} அம்மா! அண்டைக்கவங்கள் அடிச்ச அடிலு}'
இவ வாறாக அண்ணர் கைதானது, அமைதிப்படையினரின் புலிவேட்டை இவை குறித்து ஒரு விவரணச் சித்திரத்தை உருவாக்கினார் பெரியப்பா. பெரும்பாலும் அவரது தொனி முடியுமோலு}.. முடியாதோலு} சண்டையிடல் ஒன்றே தீர்வென்பதை உட்கிடையாக்கியது. ஆனால் மகாதேவருக்கோ அவரது அறிவு, மலையைச் சாய்க்க முயல்வதைப் போன்றதொரு செயலே இந்தியாவை எதிர்ப்பது என வக்காலத்து வாங்க வைத்தது. மற்றோரின் துரோகத்தையும் எள்ளிநகையாடிய பின் அரசியல் தீர்வுக்காய் அங்கலாய்த்தார். இன்னமும் கொஞ்சம் கூடுதல் உரிமைகள் வேண்டும், அதிகாரம் யாவும் அநியாயத்தை எதிர்த்து உயிர் தந்தவர்க்கே எனப் பிரலாபித்தார். பெரியப்பா, திலீபன் அணுஅணுவாய் உயிர்விட ஆக்கிரமிப்பாளர் அநுட்டித்த அலட்சியத்தை நினைவுகூர்ந்தார். எல்லோருமாக இரட்சிப்பாளரென வரவேற்ற பயல்கள், ஆரம்பத்தில் எல்லாம் இராணுவம்தான் என்ற உருவெடுத்து, இல்லையில்லை தாம் கொஞ்சம் மாபெரிய சாத்தான்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் மேற்கொண்ட நரவேட்டையின் வடுக்களை நினைத்துக் கோபமும் பதற்றமும் கொண்டு, 'இனியும் பேச்சுவார்த்தைலு} ! விடும் மாஸ்ரர் உந்தக் கதையை' என முற்றுப்புள்ளியிட்டார்.
இவ வாறான இருவேறு கருத்துக்களின் ஆதிக்கம் எங்குமிருந்தது. என் பழைய நண்பனும் பல்கலைக்கழக மாணவனுமான ரவியும் இதனை அடிக்கடி சொல்லிக் கொண்டான். அவனோடு பேசுகையில், 'எல்லாம் நிகழ்ந்து முடிந்தாலும் என்னதான் மாற்றம் நிகழ்ந்து விட்டது?' என்று சலித்துக்கொண்டதற்கு நிதானமாக அவன் சொன்னான். 'எதிரியைப்பற்றி இப்போது சனங்கள் அறிய ஆவலோடுள்ளனர். hசிப்பு என்பது வெறும் பொழுது போக்காக இப்போதில்லை' என்றான்.
உண்மைதான்! மிகக்குறுகிய காலங்களிலேயே அந்நியர் அதற்கும் மேலாக ஆக்கிரமிப்பாளன் எனத் தன்னைத்தானே எதிரி தோலுரித்துக்கொண்டான். நண்பனும் நானும் பனைமரங்கள் அணிவகுத்த அச்சாலை விளிம்பிலுள்ள கோவிலின் தேர்முட்டி மறைவிலிருந்து கீழிறங்கினோம். இன்னமும் ஏழு நாட்களில் பயணம் என்பதை நான் நினைவுகூர, அவன், தனது பல்கலைக்கழகம் திறக்கும் வரைக்கும் படிப்பதற்காக ஏதாவது புத்தகங்கள் வாங்கியனுப்பிவிடுலு} அது என்று திறக்குமோ? யார் யாரெல்லாம் அதை மூடுவரோ? எனப் பண்ணிசைத்து தான் செல்லும் வழி குறித்து எச்சரித்து விடை தந்தான்.
வயல்வெளியில் காற்று ஊஞ்சலிட, புல்லுக் கடகமும் கலப்பைகளும் தலையிலும் தோளிலுமாக மாடுகளை வழிநடத்தி வருபவர்கள் பாடல் இசைக்க, இன்னுமொரு மாலை எனதூரில் முடிவடையும் நேரம் வயல்வெளியைத் தாண்டுகையில் சிறுபெண்ணொருத்தி, 'ஆமிக்காரன் செக்கிங்' என எச்சரித்தாள். 'எங்க?' என, நகர்ந்தபடி பதில் சொன்னாள். முன்பெல்லாம் இலங்கை இராணுவத்தை ஏமாற்ற நாம் நடமாடிய ஒழுங்கைகளினூடாக வீடு திரும்ப எத்தனித்தேன் அம்மா கண்ணுள் வந்தார்.
'தம்பி முன்னைமாதிரி ஒழுங்கைகளை நம்பாதை, கூர்க்காக்காரன் நாயோட நாயாய்ப் பத்தை வழிய படுத்துக் கிடக்கிறான்'
வருவது வரட்டுமென நேராகவே வந்து 'செக்போஸ்ட்' தாண்டி பெரிய ரோட்டில ஏறியபோது கைதட்டல், அதட்டும் கூச்சல் கேட்டது. திரும்பி அழைத்தவரிடமே போனேன். அமைதிகாப்போர் வரிசைக் கிரமத்தை வலியுறுத்த, முகம் மறைக்கப்பட்ட 'தலையாட்டிகள்' ஏற இறங்க எல்லோரையும் அளந்து பார்த்து, அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஒரு பெரியவர், வயல் வேலையை முடித்து வருபவர் போலும்! அடையாள அட்டை கேட்கப்பட்டது. அடையாள அட்டையை எடுத்துக்கொடுத்தார். அடுத்தாக அவர் கேட்ட கேள்வி படையினரின் பெயரை 'அறியாமை காப்பவர்கள்' என மாற்றப்போதுமானது. வேறொன்றுமல்ல, 12 எண்கள் கொண்ட அடையாள அட்டையின் இலக்கங்களைச் சொல்லுமாறு பணிக்கப்பட்டார். வேலைக் களைப்போடு திரும்பிய மனிதனுக்கு எப்படி இருக்கும்? சரமாரியாகத் திட்டல் மழை பொழிந்தார். அமைதியின் காவலருக்கோ ஆவேசம் வந்துவிட்டது. "வுசயளெடயவந வாளை" என்று ஒரு இளைஞனுக்குக் கட்டளையிட்டார். அவ விளைஞன் "ஐ ன'ழவெ மழெற நுபெடiளா" என்றான். 'அப்போ நீ பேசியதுலு}.? அதுதான் ஆங்கிலம்லு}.' படுகொச்சையான ஆங்கிலப் பதப்பிரயோகத்துடன், இளைஞனின் வயிற்றில் சப்பாத்துக் காலால் மிகக் கடுமையாக அமைதி நிலைநிறுத்தப்பட்டது. காந்தியின் சீடரின் அரசல்லவோ! முதியோர் வதை வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளனர் போலும்! நினைக்க எனக்குச் சிரிப்பு வந்தது. இந்தக் கூத்தை தூர இருந்து அவதானித்த அமைதிப் படைத் தலைவர் நெருங்கி வந்து, எல்லோர் முகத்தையும் ஆராயத் தொடங்கினார்.
எனது முறை வருமுன்னாலே அத்தர்மதேவன் சிலருக்கு விடுதலை வழங்கினார். சிலரை ஓரமாகச் சென்று உட்காரும்படி கட்டளையிட்டார். என்னை ஏற இறங்கக் கண்களால் அளவிட்டார். ஆங்கிலத்தில் 'நீயொரு புலியைப்போல உடையணிந்திருக்கிறாய்' என முணுமுணுத்தார். உள்ளே வரும்படி கட்டளையிட்டுவிட்டு முன் நடக்க, பலியாடாகத் தொடர்ந்தேன். சக மண்ணின்மைந்தர்கள் அநுதாபமாக என்னை ஏறிடவும், நெஞ்சு முழுவதும் அச்சம் வியாபிக்க, கால்கள் ஏனோதானோவென அசைந்தன. நான் தயாராக வைத்திருந்த எனது தேசிய மற்றும் சென்னைக் கல்லூரியின் அடையாள அட்டைகளை நீட்டினேன். வாங்கி ஆராய்ந்தவர் தேசிய அடையாள அட்டையைத் தூக்கிப் பிடித்து, 'இது போலி' என உறுமினார். பின் இரண்டையுமே அருகில் நின்ற ஜீப்பொன்றின் 'போனட்டில்' போட்டுவிட்டு, சாவதானமாகத் தேநீரைச் சுவைக்க ஆரம்பித்தார்.
சிறிய இடைவெளியின் பின்னால் நானும் ஆங்கிலத்தில் 'நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் கல்வி பயிலுமொரு மாணவன்' எனக் கூறினேன்.
'என்ன படிக்கின்றாய்?' கேள்வி தெறித்தது.
'இளநிலை வர்த்தகப் பட்டப்படிப்பு'
'உனது பாடத்திட்டத்தைச் சொல்?'
நான் துணுக்குற, 'நான் எனது வர்த்தக முதுநிலைப் பட்டப்படிப்பை பம்பாய்ப் பல்கலைக்கழகத்தில் முடித்தவன், ஆகையால் நீ சொல்' என்றார்.
சொல்லி நான் முடிக்க, அவன் ஒரு சிறு இராஜநடைபோட்டான். திரும்பி மீண்டும், 'நான் நீ படிப்பதனை ஏற்றுக்கொள்கிறேன். உனது பட்டப்படிப்புக்கு முன்னால் புலியின் ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டதனை ஏன் மறைக்கின்றாய்?'
நான் திகைத்துப்போனேன். ஒருவாறாக நான் 10 ஆவது வரை அருகிலுள்ள மகா வித்தியாலயத்தில் ஒப்பேற்றியதை, பின் 1983 இறுதியிலேயே இந்தியா சென்று உயர் நிலைப்பள்ளிப் படிப்பை முடித்ததை அவனுக்கு விளக்கினேன்.
'நான் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுகின்றேன். உனது ஊரிலே புலி நடமாட்டம் எப்படி?'
நான் துணுக்குற்று, ஊருக்கு வந்து இரண்டு கிழமைகளே ஆனமையால் நானறியேன் ஏதும் பராபரமே எனத் தாள் பணிந்தேன்.
'ஆகா! அவ வாறாயின் நீ புலி'
என்னை மீறி எனது கால் கைகள் படபடக்க ஆரம்பித்தன. படிப்பறிவும் சரளமான உளவறிவும் வாய்க்கப்பெற்ற இந்த அதிகாரி, மறுபுறத்தில் ஒரு தரங்கெட்ட மூன்றாந்தர அணுகுமுறைகளையும் கையாளக்கூடிய இராணுவத்தினனே என்பதை உணர்ந்துகொண்டேன். மீண்டும் 'நீ புலியேதான்லு} உனதூரிலே இன்னமும் புலிகளுண்டுலு} நீ மனம் வைத்தால் மார்க்கமுண்டு'
நான் பணிவாக 'இல்லை ஐயா, நான் ஒரு இலங்கை அரச சேவகரின் பிள்ளை, கல்வியொன்றுதான் எனது நோக்கம்' என வலியுறுத்த, அவன் தடாலெனச் சிநேகபுூர்வமானான்.
'சரி என்னோடு வந்து ஒரு கம்பெனி கொடுலு}.'
'இல்லை ஐயா, எனது குடும்பத்தினர் மத நம்பிக்கை மிகுந்தோர்'
'அவ வாறாயின் நீ புலிலு} புலிதான் மதுபானம் அருந்தாது' என அமைதிப்படைத் தளபதி கத்தினார்.
இவ வாறாக நாடகம் நீண்டது. இறுதியில், 'தொலைபயலேலு}லு} இந்தியா செல்ல முன் வந்து உனது கல்லூரி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள், நான் கொஞ்சம் சென்னையைத் தொடர்புகொண்டு விசாரிக்க வேண்டும்'
நான் வீடு திரும்புகையில் உடைகள் யாவும் வேர்வையில் நனைந்திருந்தன. வீட்டுக்குப் போய் அம்மாவிடம் மெல்ல விசயத்தைச் சொன்னேன்.
'நல்லகாலம் கடவுள் காப்பாற்றியது. நாளைக்கே கொழும்புக்குப் போயிடு'
சொன்ன அம்மாவை முறைத்தேன். அம்மா குரல்தள தளக்க, நாலுவருசத்துக்குப் பிறகு வந்து நீ அடிவாங்கலு}லு} நீ எந்த முகாமிலையெண்டு நாங்கள் தேடியலையலு}. ' அம்மா இப்போது அழவே தொடங்கிவிட்டார்.
தூங்கலாமெனச் சரிந்தேன், பட்டகாயமொன்றின் ரணம் கிளறப்பட மேலும் மேலும் யாரோ கிண்டுவதைப் போலத் தலைவலித்தது. சிறைக்கொட்டடியில் அண்ணர் சொன்னது நினைவில் உறுத்தியது. 'இந்த அடி வாங்கிய பின் இனியென்ன வெளிநாடு' ஏதோவொரு திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் வருவதுபோல, பச்சைநிற வண்டிகள் படையெடுத்து, வீட்டைச் சூழ்ந்ததாகப் பிரமை தோன்றியது. அம்மாவின் நிம்மதிக்காகவேனும் நாளை கொழும்பு போவதே உசிதமென்று தோன்றியது. தொலைவில் சில வேட்டொலிகள் கேட்டது.
'கிழக்குப் பக்கமாகத்தான் கேட்குது. நாளைக்கு அந்த இடம் அவ வளவுதான்'
எழுந்து யன்னல் பக்கம் போய் அம்மா பார்த்தார். அமைதி காக்கும் சிறு கும்பலொன்று ஒழுங்கையில் அலங்க மலங்க விழித்தபடி நடை போட்டுக்கொண்டிருந்தது!
Reply
வாசல் திறந்தபோது
-செந்தணல்
"அம்மா, பசிக்குது" அமுதன் சமயலறைக்குள் வந்து அங்கு கிடந்த பலகைக்கட்டையில் அமர்ந்தபடியே வழமையான பல்லவியைத் தொடங்கினான். அவனருகே ஈரமண் தரையில் தவழ்ந்து விளையாடிய வதுசனும் கையைச் சூப்பியும், சப்புக் கொட்டியும் தனது பசியுணர்வை வெளிப்படுத்தினான்.
"செல்லம் கொஞ்சம் பொறுங்கோ, அம்மா பிள்ளைகளுக்கு கஞ்சி காச்சித் தாறன்" என்றவாறே அங்கிருந்த மூடிய பழைய பானையைத் திறந்து பார்த்தாள் பவளம். ஒரு சிறங்கை பச்சையரிசி மட்டுமே அங்கு எஞ்சியிருந்தது. பக்குவமாய் அதைக் கழுவி உலையிலிட்ட பவளம், மதியத்திற்கு என்ன செய்வம் எனச் சிந்தித்தாள்.
ஒருகிழமை தொடர்ச்சியாகப் பெய்த மழையினாலும் உடல்நலக்குறைவினாலும் வேலைக்குப் போகமுடியவில்லை. நீண்ட நாட்களக மெழுகாதிருந்த குடிசையில் ஆங்காங்கே கறையான் புற்றுக்கள் தென்பட்டன. பொத்தல் பொத்தலாக தெரிந்த கூரையை மூடியிருந்த பழைய தறுப்பாள்கள், பொலித்தீன் பைகள், உரப்பைகள் எல்லாவற்றையும் மீறி சிந்திய ஒழுக்கு நீரால் தரை சேறும், சகதியுமாயிருந்தது.
இந்தச் சேற்றுக்குள்ள, இந்தப் பிஞ்சுகளையும் வைத்துக் கொண்டு என்னதான் செய்வது, ஏலாததால விறகு பொறுக்கக்கூடக் காட்டுக்குப் போகேலாமப் போச்சுது. என்ன செய்யிறது. தொடராய் அவளுள் எழுந்த கேள்விகள் அவளது மன ஆழத்திலுள்ள வேதனையைக் கிளறிவிட்டன.

எப்படி ராசாத்தி மாதிரி வீட்டில இருந்தனான். பாழும் விதி இவ வளவு கொடியதா? சொந்தங்களில் இருந்து பிரிந்து தனியே பிள்ளையளோட இப்படியெல்லாம் கஸ்டப்பட வேண்டுமென்று தலையில் எழுத்துப்போல.
அவளது நெஞ்சிலிருந்து எழுந்த ஆழமான பெருமூச்சுடன் கூடவே தகதகவென கோபக்கினியும் சுவாலை விட்டெழுந்தது.
"எங்கள இப்படிக் கஸ்டப்பட விட்டுவிட்டு அவரால மட்டும் எப்படி இவ வாறு இருக்க முடியுது? கடமைகளை மறந்து விட்டேற்றியாக வாழ அவரால மட்டுந்தான் ஏலும்"
நான்கு வீடுகள் தள்ளி மறுமணம் புரிந்து வாழ்ந்து வரும் அவளது கணவனைப் பற்றி நினைக்கையில் அவளது தேகம், கோபத்தினால் ஏற்பட்ட வேதனை தாங்காமல் நடுங்கியது.
அவளும் சராசரிப் பெண்களைப் போலத்தான் நெஞ்சம் நிறையக் கனவுகளோடு ராஜகுமாரன் வரவுக்காகக் காத்திருக்கும் தேவதைப் பெண்போன்று வாழ்ந்திருந்தாள். உண்ண, உடுக்க குறைவில்லாத குடும்பத்தில் பெண்ணாக வளர்ந்த அவள் விழிகளுக்கு, அவள் வீட்டின் முன்னேயிருந்த தேநீர்க்கடையில் நின்றிருந்த வாட்டசாட்மான சிவராசா ராஜகுமாரன் போன்று தென்பட்டது வியப்பில்லைத்தான். பெற்றோரது பலத்த எதிர்ப்பையும் மீறி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
வலிகாம இடப்பெயர்வின் போது, ஏழுமாதக் கருவை மட்டும் சுமந்து உடுத்த உடைகளோடு கணவன் கரம் பற்றி வன்னிமண் வந்தேறினாள் பவளம். ஆரம்பத்தில் வசந்தகாலமாகத் தென்பட்ட வாழ்வு யதார்த்தத்தின் அராஜகத்தினால் சோபையிழந்து போனது.
கூலி வேலையிலும் ஈடுபட்ட சிவராசா நாளடைவில் குடிப்பழக்கத்திற்கும் அடிமையனான். வறுமை, பற்றாக்குறை, நோய்களோடு, அவனது அடி உதையும் பழகிப்போயிற்று பளத்திற்கு.
மழை மற்றும் பனிக்காலங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட மலேரியா, சளித் தொல்லைகளினால் பவளத்தின் பிள்ளைகள் துயருற்றனர். மருந்தற்ற மருத்துவமனைகளில் து}ங்கி வழிந்த மக்களோடு மக்களாகப் பவளமும் பிள்ளைகளின் உயிரைத் தக்கவைக்கப் பேராடினாள். ஒருவாறு உயிர்தப்பிய போதிலும் தக்க போசாக்கான உணவின்மையால் எலும்பும் தோலுமானர்கள் அவர்கள்.
நிவாரணம் ஓரளவில் அவர்களது கால்வேளைப் பசியைப் போக்க உதவிடினும் கிராமசேவகர்களது மீளாய்வு நடவடிக்கைகள் பல சமயங்களில் பல மைல்கள் வெறுவயிற்றோடு செல்லுவித்து வெறுங்கையுடனே திரும்பி வரச் செய்தும் விடும்.
குழந்தைகளின் பசி போக்குவதற்காக நாலைந்து வீடுகளில் மாவிடித்துக் கொடுத்துக் கூலி பெற்றாள் பவளம். சிறிது நாளில் வீட்டுக்கு வருவதையே குறைத்துக் கொண்ட சிவராசா எப்படியோ நான்கு வீடுகள் தள்ளி வசித்து வந்த கனகத்தை மறுமணம்.
தன்னந்தனியே வறுமையோடும், தீராத நோய்களோடும் போராடி வாழ்க்கையை ஓட்டி வந்த பவளமும், குழந்தைகளும் அடிக்கடி தன்னிலையை சுயமதிபபீடு செய்து கொள்வாள் பவளம்.
ஐயா அம்மாவிடமே யாழ்ப்பாணத்திற்குச் செல்வோமா என நினைப்பாள் அவள். இல்லையில்லை என் வழியில் வந்துவிட்டு சிலுவை சுமக்கையில் மட்டும் சுயமரியாதையைக் கைவிட்டு அவர்களிடம் போகக்கூடாது எனவும் எண்ணுவாள் பவளம்.
கசப்பையும் வேதனையையும் மாற்றவல்ல, ஒளியை நோக்கிச் செல்லவல்ல காலம் வராமற் போகாது என்பது அவளது ஆழந்த நம்பிக்கை.
அன்று வழமைபோன்று விறகு பொறுக்கிவர கால்நடையாகக் கட்டுக்குச் சென்று கொண்டிருந்தாள் பவளம். அவளுக்கு முன்னே சென்ற இரு பெண்களினது உரையாடல் அவளது கவனத்தை ஈர்த்தது.
"விசாலி உனக்குத் தெரியுமே, துணைப்படைக்கு பெண்களையும் சேர்த்துக் கொள்வினமாம். குடும்பப் பெண்கள்கூடப் போகினமாம்" என்றாள் ஒருத்தி.
"உண்மையிலே அப்ப தேசத்திற்கான பெண்களின் கடமைகள் இன்னமும் இருக்கத்தான் செய்யுது என்ன" என்றாள் விசாலி.
"பின்ன எங்கட மண்ணில இருக்கிற ஒவ வொருவருக்குமே தேசத்திற்காகப் போராடும் உரிமையிருக்குது. அதுக்குக் குடும்பப் பெண்கள், வீட்டுப் பெண்கள் மட்டும் விலக்கே" என்றாள் முதலாமவள்.
அப்ப உதவியில்லாததுகளின்ரை பிள்ளையள யார் பார்க்கிறது. அதுவும் பெரிய விசயம்தானே என்று வினாவினாள் மற்றவள்.
"அதுக்கு வசதி குறைந்த, படிக்க வாய்ப்பில்லாத பிள்ளையளைப் பராமரிக்க, படிப்பிக்க தமிழர் புனர்வாழ்வு நிலையங்கள் நடாத்துகிற குருகுலங்கள் ஒவ வொரு பிரதேசத்திலும் இருக்குத்தானே"
பவளத்திற்கு அவர்களது உரையாடல்கள் வயிற்றில் பாலை வார்த்தது போலிருந்தது. அப்படியானால் அவளது வாழ்விற்கும் அர்தத்மிருக்குத்தானே. ஒளி பொருந்திய நம்பிக்கை அவளுள் முகை கொண்டது.
'தேசத்தின்ர விலையோடு, சமூகச் சிக்கல்களிற்கும் எனது பங்களிப்பு உதவுமானால், அது எல்லோருக்கும் பயனுடையதாய் இருக்கும். என்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ வொருவரும் இதை உணர்ந்து தேசத்தின் விடுதலைக்காக உதவ முன்வரவேண்டும்'
அவளது சிந்தனையில் ஏற்பட்ட தெளிவுடன், நடையிலும் புது நிமிர்வுடன் கலந்த வேகம் தென்பட்டது. இனி அவளது திசை நோக்கிய புதிய பவளங்கள் வரத்தான் போகிறார்கள்.
Reply
பிரதீபகுமரன்
நினைவில் திரைகள் இழுபடும் போதெல்லாம் துயரின் மொழியாக விழி நீரால் நிறையும்.


கோபம் அலையாக நெஞ்சினுள் சுழன்று எழ சினத்தின் உச்சமாக, விண் தொடும் பெரு உருவாகி கைகளை அகலவிரித்து கால்களின் கீழ் எதிரி நசிபட எமது பலத்தை அவனுக்கு உணர்த்தும் ஆவேச உணர்வின் தகிப்பில் விழிநீர் ஆவியாகி உறையும்.


வெற்றியின் நிச்சயம் பற்றிய அவர்களின் பேச்சுக்களும் எமது நிலம் மீதான ஆக்கிரமிப்பும் நெஞ்சினில் தீ மூட்டும்.
இதழ்களை அசைத்தபடி ஒவ வொரு புூவிலும் மாறிமாறிப் புூக்கிறதே, அது என்னபுூ?
சிவப்பில் கறுப்பு புள்ளிகள் மஞ்சளில் சிவப்பும் கறுப்பும் கலந்த புள்ளிகள். தனி மஞ்சளில் சிவப்பில் என, இத்தனை வண்ணங்களின் கலப்பில் அவள் புூக்கள் பார்த்ததில்லை.
மரங்கள்தானே புூக்கும், புூக்களும் புூக்குமா? தம்மைச் சூழ உள்ள ஒவ வொன்றிற்கும் விடைதேடும் பெரும் வினாவாகி அவளைச் சூழ்ந்தது. அவள் தேடலின் விடையாக அம்மா அதன் பெயர் சொன்னா.
'வண்ணத்துப்புூச்சி' ஈர்க்கும் வண்ணங்களைக் கொண்ட அவை அவள் எண்ணங்களை நிறைத்தன.
ஒவ வொரு இரவிலும் அவற்றின் நினைவுடனேயே படுக்கப்போகும் அவளது கனவிலும் வண்ணத்துப் புூச்சிகளே பறந்தன.
அம்மாலு}. பொம்மைகள்லு}. சொக்கிளேற்லு} என எல்லைப் பட்ட அவளது மகிழ்வு விரிந்துலு} உயிர்ப்பான இதனோடும் பிணைந்துகொண்டது.
அதன் சுறுசுறுப்பும் அசைவுகளின் வசீகரமும் அவளை குஸி கொள்ளவைக்கும், கை கொட்டித் துள்ளுவாள்.
அவற்றை முழுவதுமாக புரிந்துகொள்ளும் ஆசையில் பிடிப்பதற்காக கை நீட்ட, பறந்துவிடும். மறுபடியும் புூவில் வந்து அமர்ந்ததும் மெல்ல அருகே சென்று கைகளை உயர்த்த மறுகணம்லு}
சலிப்புூட்டாத இந்த விளையாட்டு முதலில் சந்தோசம் தந்தாலும் கடைசிவரை ஒன்றைக்கூடப் பிடிக்கமுடியாதபோது மனம் சோம்பி அழுகைவந்தது.
அம்மாவைப் பிடித்துத்தரும்படி அடம்பிடித்தாள். எத்தனை சொல்லியும் கேட்க மறுக்கும் தன் சின்னமகளின் கண்களை உற்றுப் பார்த்த அம்மா சொன்னா.
'கடவுள்தான் வண்ணத்துப்புூச்சியாகி வானத்திலே இருந்து இங்க பறந்துவாறார்.
நாங்கள் எல்லாரும் சந்தோசமாக இருக்கிறமோ என்று பாக்கிறத்திற்காக. சுஜிக்குட்டி மாதிரி சின்னப்பிள்ளைகள் துக்கமாக இருந்தா அவருக்கு பிடிக்காது.
அவையளை சந்தோசப் படுத்தத்தான் தன்ரை சிறகுகளில் வடிவு வடிவான வண்ணங்களை உண்டாக்கி இருக்கிறார். விதம் விதமாக பறந்து காட்டுறார்.
நீங்கள் அவரால் பறந்து உங்களை சந்தோசப்படுத்தவும் ஏலாது. வானத்திற்குத் திரும்பிப் போகவும் ஏலாது'
அம்மாவின் வார்த்தைகளை அக்குழந்தை மனம் முழுவதுமாக நம்பியது.
தூர இருந்தே தன் சந்தோசத்தை அவருக்கு சொல்லிக்கொள்ளவும் பழகினாள்.
-
நாவரண்டு தண்ணீருக்காக அவளுள் ஏதோ ஒன்று அவளைக் கெஞ்சியது.
தண்ணீர்க்கான் வெறுமையாகி அப்பொழுதிற்கான தன் முக்கியத்துவம் இழந்து ஓரத்தில் கிடந்தது.
காட்டின் வெம்மை உடலைப் பற்றி எரியச் செய்ய மரங்களில் இலைகள் அசைவற்று தவமியற்றின.
வியர்வையில் நனைந்த சீருடை வேண்டாத ஒன்றாக வருத்தியது.
கடைசியாகக் குளித்த நாளை எண்ண ஒரு கையின் விரல்கள் போதவில்லை.
உச்சந்தலை, நெற்றி, கன்னங்கள், உடலெங்கும் என அனலினில் 'வேகக்' கண்கள் மட்டும் இடைவெளியின்றி இலக்கில் ஆழ்ந்திருந்தன.
சிறிய அசைவிற்கே பதில் தரும் தூரத்தில் எதிரி.
முதல் நாள் சண்டையில் ஓய்ந்து போய்விட்டானோ என்னவோ அசுமாத்த மில்லாமல் இருந்தான். அதுதான் இன்னும் சலிப்புூட்டியது.
அவளுடைய நிலையில் அவள் மட்டுந்தான். குறிப்பிட்ட தூர இடைவெளியின் பின்பே ஏனைய போராளிகளின் நிலைகள்.
காடெங்கும் சூழ்ந்திருந்த வெறுமை அவளை சோர்வடையச் செய்தது.
இதற்கு முன்னும் அவள் காடுகளுள் வாழ்ந்திருக்கிறாள். இத்தனை கொடூரமானதாகக் காடு தன் முகத்தை எப்போதும் காட்டியதில்லை.
பசுமை, அமைதி, பட்சிகள் என காட்டின் மீது நகரத்தைவிட அவள் நேசிப்பு அதிகமாகவே இருந்தது.
அமைதி போர்த்திய அக்காடுகள் ஓசைகளடங்கிய மெல் உணர்வை நெஞ்சினுள் நிறைக்கும்.
சிந்தனையின் தெளிவாக மகிழ்வின் புதிய முகமாக அப்பொழுதுகள் அமைதியால் நிரம்பி வழியும்.
உயிர்ப்பின் சலனமற்ற முடிவற்ற சூனியம் போன்று இருள் சூழ்ந்த காட்டின் இந்தத் தோற்றம் புதியது.
இடைவெளியற்ற வெடியோசைகளின் அதிர்வினால் காட்டு விலங்குகள் முற்றாக இடம்பெயர்ந்துவிட புவியின் ஆரம்ப நாட்களின் கோலம் காட்டியது அச்சூழல்.
சூரியக்கதிர்கள் சாட்டைகளாகி ஆவேசமாகப் புதிய நிசப்தமே மொழியாக காட்டின் கதறல் காதுகளில் எதிரொலித்தது.
எறிகணைச் சிதறல்களால் இடைவெளியின்றி காயப்பட்ட மரங்களின் பசிய இலைகள் கூட அனல் வீசும் தீயின் நாக்காக கோபத்தை அள்ளிச் சொரிந்தன.
பல நாட்களாக தூக்கமில்லாத விழியின் ஓரங்களை தூக்கம் பசையாக இழுக்க, முதல் நாள் சமரில் எங்கோ அடிபட்ட கால் இடையிடையே வலித்தது.
முகம், கழுத்து என பொங்கிய வியர்வையை துடைக்க மறந்தவளின் பார்வை அருகே கிடந்த கொப்பி மட்டையில் மோதித் திரும்பியது.
'வெக்கை கூடி விட்டா விசர் நாய் போல உறுமிக்கொண்டிருப்பாய் உனக்குக் கிட்ட இருக்க எனக்குப் பயம்' என்று கூறியபடி இவளுக்கே அதிக நேரம் விசிறிவிடும் வைதேகியின் முகமே இலக்கின் திசை முழுவதும் நிறைந்திருந்தது.
வைதேகிதான் அவளுடன் நேற்றுவரை அங்கே இருந்தவள், நேற்றைய சண்டையின் வெற்றிக்கான விழுதுகளாக அவளும் சில தோழர்களும்.
இந்த நேரம் விதைத்திருப்பார்களா? ஒரு கணம் உள்ளம் மௌனிக்க ஊற்றென விழியினுள் நீர் நிறைந்தது.
அவளது இந்தப் போராளி வாழ்வு நெருங்கிப் பழகியவர்களின் சாவுகளை தாண்டியே நீண்டுவந்துள்ளது.
ஒவ வொன்றாக எத்தனை பேரின் நினைவுகள் இந்த மண்ணைப் போலவே அவள் மனதிலும் படிந்து கிடக்கிறது.
நினைவில் திரைகள் இழுபடும் போதெல்லாம் துயரின் மொழியாக விழி நீரால் நிறையும்.
கோபம் அலையாக நெஞ்சினுள் சுழன்று எழ சினத்தின் உச்சமாக, விண் தொடும் பெரு உருவாகி கைகளை அகலவிரித்து கால்களின் கீழ் எதிரி நசிபட எமது பலத்தை அவனுக்கு உணர்த்தும் ஆவேச உணர்வின் தகிப்பில் விழிநீர் ஆவியாகி உறையும்.
வெற்றியின் நிச்சயம் பற்றிய அவர்களின் பேச்சுக்களும் எமது நிலம் மீதான ஆக்கிரமிப்பும் நெஞ்சினில் தீ மூட்டும்.
-
எண்ணங்களின் நீட்சியை நிறுத்தி அவை பார்வையில் பதிந்தன.
இத்தனை நேரம் எப்படி அவள் பார்வையிலிருந்து ஒதுங்கின எனப் புரியவில்லை. ஒன்றிரண்டாக, ஐந்தாக, பத்தாக அவற்றை பார்த்திருக்கிறாள்.
ஆனால் ஆயிரக்கணக்கில் காடெங்கும் மிதந்து வரும் அவைகளின் அணிவகுப்பு உற்சாக உலுப்பலாக இதயத்தை அசைத்தது.
எகிறி பட்டென்று விழிகளில் அறைகின்ற வண்ணங்களாக இல்லாமல் வெண்மை, வெளிர்மஞ்சள், லேசான சாம்பல் என மென்மையாக விழிநுழையும் நிறங்களில் எம்மை சூழ்ந்து நிறைந்திருந்தன.
உயிர்ப்பின் சுவடழிந்திருந்த அப்பகுதியில் ஓராயிரம் உயிர்களின் ஆனந்தநடனம்.
லேசான சிறகின் விரிப்பில் அங்கும் இங்கும் அசையும் அவைகள் பறக்கும் மலர்களாகவே விழிகளை நிறைத்தன.
இத்தனை நேரம் அவளை அழுத்திய துயரின் கனமெல்லாம் மெல்ல மெல்லக் கரைய மிக மிக இலேசாக தன்னை உணர்ந்தாள்.
கொடிய அந்தத் தனிமை உணர்வை துடைத்தெறிய, அவளை அமைதிப்படுத்தி இலக்கினில் ஆழ்ந்திருக்கச் செய்யவே அவை அங்கே நிறைந்தன போலத் தோன்றியது.
சின்ன வயதும் அம்மாவும் கண்களில் வந்து போயின, புதியவள் ஒருத்தி தன் நிலையை நோக்கி நீர் நிறைத்த 'கானு' டன் வருவது தெரிந்தது.
வேர்த்துக் களைத்த அவள் இவளைவிட சின்னவளாகத் தெரிந்தாள். விளையாட்டுத் தனமாக அவைகளைப் பிடிக்கக் கை நீட்டிய அவளை நோக்கி இங்கிருந்து தன்னை மறந்து 'பிடிக்கக் கூடாதம்மா வைதேகி அக்காவின்ர சிறகு முறிஞ்சிடும்' எனக் கத்தினாள்.
அவை அக்காடெங்கும் இருளை விரட்டியபடி பறந்துகொண்டிருந்தன.
Reply
வன்னியில் நடைபெற்றுவரும் வனவள
பாதுகாப்பு செயற்பாடுகளும், மீள்வன
மாக்கல் திட்டமும் பற்றிய ஓர் ஆய்வு.

வனம்:
இது வன்னியின் வளம், வன்னியின் பிரதான இயற்கை வளமான காடுகள் வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும்பகுதியை நிறைத்திருக்கின்றன. வன்னியின் பிரதான வருமானம் தரும் மூலதனமாகவும், அழகும் வனப்பும் தரும் இயற்கையின் கொடையாகவும் அமைந்து, தமிழீழத்திற்கு தனிச் சிறப்பையும் கவர்ச்சியையும் வழங்கி வருவதும், இந்தப் பசுங்காடுகளே.

ஆனால், இவ இயற்கையின் கொடை மீதான திட்டமிட்ட ஆக்கிரமிப்பு இன்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னமே சிங்களப் பெரும்பான்மையினரால் முடுக்கிவிடப்பட்டது. வடக்கு கிழக்கை தன்னுடைய பிரதேசம் என்று கூறிவந்தாலும் கூட, சிங்கள அரசு தனது பெரும்பான்மை இனத்தின் நுகர்வுத் தேவைக்காக தனது பிரதேச வனவளத்தைப் பயன்படுத்தாமல் அந்நிய தேசமெனக் கருதி, தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள வனத்தையே அழித்து தனது நுகர்வுத் தேவையைப் புூர்த்தி செய்து வந்தது. இது மட்டுமல்லாமல் 70 களில் மேற்கொள்ளப்பட்ட மீள் காடாக்கலின்போது வன்னிப் பிரதேசத்திற்கு ஒத்துவராத நிலக்கீழ் நீரையும் மண்வளத்தையும் அதிகம் உறிஞ்சுவதன் மூலம் சுற்றுச்சூழலை பெரும் வரட்சிநிலையிற்கு இட்டுச்செல்லக்கூடிய யுூக்கலிப்டஸ் அதாவது சஞ்சீவி இன மரங்களை கபட நோக்கில் பெரும் தொகையில் வன்னியில் நடுகைசெய்தது.
தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரமித்து ஆளவேண்டும் என்று அவாப்படும் அதிகாரவர்க்கத்தினர், அவ வாசை கைகூடாத பட்சத்தில் அப்பிரதேசங்களை அழித்துச்சிதைத்துச் சுடுகாடாக்கிவிடும் அசிங்கமான நடவடிக்கைகளில் கைதேர்ந்தவர்களாகவே திகழ்கின்றனர். யுத்தத்தை காரணம் காட்டி, தமிழர் செறிந்த குடியிருப்புக்களையும் நகர்ப்புறங்களையும் கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களால் தரைமட்டமாக்கியதும் தொடர்ந்தும் அதே நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதும் வெளிஉலகிற்கு தெரியவராத விடயங்களல்ல. குடியிருப்புக்கள் மீது குண்டுகளைக்கொட்டி, அவற்றை பெற்றுவிடாமல் இருப்பதைத் தடுக்கும் நெடுங்கால நயவஞ்சக நோக்கோடு, தமிழர் பிரதேசங்களின் அடிப்படை இயற்கை வளங்களையும், அழித்தொழிக்கத் தொடங்கியிருக்கின்றது. தமிழீழ மக்கள் தங்கள் சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், சுயதேவைகளைப் புூர்த்தி செய்து சொந்தக் காலில் நிற்பதற்கும் ஆதாரமாக அமைகின்ற இயற்கை வளங்களை இனங்கண்டு அவற்றினை சூறையாடுவதோடு நின்றுவிடாமல், தமக்கு கிட்டாதவை தமிழருக்கு கிடைத்துவிடக் கூடாது என்ற கெட்ட நோக்கோடு செற்பட்டு வருகின்றது. இந்த வகையில்தான் வன்னியின் பிரதான வளமான இயற்கைக் காடுகள் சிங்கள ஆட்சியாளர்களால் சூறையாடப்பட்டன. நாட்டின் பெரும்பகுதி மக்களின்தேவைக்கான மொத்த காட்டு மரங்களும் வடபகுதிக் காடுகளில் இருந்தே கொண்டுசெல்லப்பட்டன. குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் மணலாறு ஆகிய பிரதேச எல்லைக்குள் அமைந்திருக்கும் பாரிய வனங்களிலிருந்தே தேக்கு, முதிரை, சமண்டலை போன்ற பெறுமதிமிக்க மரங்கள் இயற்கையின் சமநிலையைப் பாதிக்கக்கூடிய விதத்தில் வகைதொகையின்றிச் சாய்க்கப்பட்டன. இவற்றில் இருந்து பெறப்படும் பாரிய மரக்குற்றிகள் மற்றும் பலகைகள் தென்பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

அழகான, வளமான தமிழீழ வனங்கள்





தமிழர் தாயக நிலப்பரப்புகளில் உள்ள வனங்களை அழித்துவிட்டு இவ விடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காலத்துக்குக் காலம் நிறுவப்பட்டு வந்தன. மணலாறு மாவட்டத்தில் வெலிஓயா, ஜனகபுர மற்றும் பதவியா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
இவைதவிர, வன்னிப் பெருநிலப்பரப்பினை ஊடறுத்து காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வன்னியின் வனவளம் அழிக்கப்பட்டது. இரண்டாம் ஈழப்போரின் ஆரம்பநாட்களில் மணலாற்றில் மேற்கொள்ளப்பட்ட 'ஏழு சக்திகள்' மற்றும் 'மின்னல்' வன்னியில் மேற்கொள்ளப்பட்ட 'வன்னிவிக்கிரம' போன்ற நடவடிக்கைகளின்போது முதன்முறையாக, வன்னிக்காடுகள் பெருமளவில் சரியத் தொடங்கின. தொடர்ந்து மூன்றாம் ஈழப்போர் ஆரம்பமானதன் பின்னர் என்றுமில்லாதவாறு மூர்க்கமான போர் வன்னியில் மையங்கொண்டது. வன்னிப்பெருநிலத்தை ஊடறுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட 'எடிபல' மற்றும் 'ஜெயசிக்குறு' ஆகிய நடவடிக்கைகளின் போதே ஈழ வரலாற்றில் முன்னெப்போதுமில்லாதவாறு வன்னியின் வனவளம் அழியத் தொடங்கியது. மழையெனப் பொழிந்த இராணுவத்தின் எறிகணை வீச்சில் சரிந்தன மரங்கள். இராணுவப் பாதுகாப்பு என்ற பெயரில் காப்பரண்களுக்கும் பதுங்குகுழிகளுக்கும் இராணுவ வேலிகளுக்குமென எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டன. மணலாறு, ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, புளியங்குளம், மாங்குளம், மன்னார் என பல்லாயிரம் சதுர கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்ட காட்டுப்பகுதியைக் கைப்பற்றிய படையினர் இயற்கையின் சமநிலையில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தத்தக்க வகையில் வனவளத்தை அழித்தனர். வன்னியின் பல்வேறு பிரதேசங்களிலும் நடுகை செய்யப்பட்டிருந்த தேக்கு மரங்கள் அவற்றின் இளவயதிலேயே இராணுவத்தினரால் வெட்டிச் சாய்க்கப்பட்டன. வளம் செறிந்த வன்னிமண்ணை வரட்சியும் வெறுமையும் நிறைந்த பாலைநிலமாக மாற்றிவிடும் நீண்ட கால சதித்திட்டத்தின் ஆரம்பமாகவே இந்த நடவடிக்கைகள் திட்டமிட்டு நகர்த்தப்பட்டன.
இவை மட்டுமன்றி, தமிழீழ தாயக நிலப்பரப்பின் வனவளம் திருட்டுத்தனமாக ஆக்கிரமிப்பு இராணுவத்தால் சுரண்டப்பட்டது. வன்னிப் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத் தளபதிகள் நாம் ஆக்கிரமித்த பெருநிலப்பரப்பிலுள்ள பெறுதற்கரிய பெறுமதிமிக்க மரங்களை வகைதொகையின்றி அரிந்து தென்னிலங்கைக்குக் கடத்தினர். இத்திருட்டுத்தனமான சுரண்டல் நடவடிக்கைகள் அனைத்தும் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் உதவியுடனேயே மேற்கொள்ளப்பட்டன. ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை மூலம் வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி மீட்கப்பட்டபின்னர், மரங்கள் அரியப் பயன்படும் அரிதளங்கள் பல பெருங்காடுகளின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டன. வன்னிமண்ணின் வனவளம் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் பெருமளவில் சுரண்டப்பட்டமையை இவ அரிதளங்கள் உறுதிப்படுத்துகின்றன.
தவிர, நகரங்களில் வாழ்ந்த மக்கள் காட்டுப்பகுதிகளை நோக்கி இடம்பெயர்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டமையாலும் இடப்பெயர்வுகள் அதிகரித்துக் காணப்பட்டமையாலும், அவர்களுக்கான வாழ்விடங்களை அமைப்பதற்காக தமிழீழ மக்கள் விரும்பியோ விரும்பாமலோ மரங்களை வெட்டவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதுகூட, இயற்கை வன அழிப்புக்கு தமிழீழ மக்களையே கருவியாக பயன்படுத்தி, தமிழீழ மண்ணை பாலைவனமாக்கும் சிறீலங்கா இராணுவத்தின் மறைமுகமான நடவடிக்கையின் பரிமாணங்களே.
பசுமைப் போர்வையில்லாத புூமி உயிரினங்கள் வாழ எவ வகையிலும் உகந்ததல்ல. வனவளத்தை அழிப்பதானது நாட்டின் வளநிலையையும் காலநிலையையும் பாதிப்பதோடு மண் வளம் குன்றிப்போகவும் வழிசமைக்கிறது என்பதை நன்கறிந்திருந்த போதும், போர் மூர்க்கமாக நடைபெற்றுக்கொண்டிருந்தமையால் தமிழீழ தாயகத்தின் வனவளம் அத்துமீறி அழிக்கப்படுவதையோ அல்லது சுரண்டப்படுவதையோ தமிழ் மக்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. ஆனால், தொண்ணுhறுகளின் பின்னான காலப்பகுதியில் தாயக நிலப்பரப்பில் அத்துமீறிய காடழிப்பு மற்றும் சுரண்டல்களைத் தடுப்பதற்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கான சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த சுதந்திர தேசமொன்றைச் சமைப்பதற்காக, அர்ப்பணிப்புக்களினதும் தியாகங்களினதும் அடித்தளத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தனித்துவமான தலைமை இது பற்றிச் சிந்திக்கத் தவறவில்லை. இதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஏனெனில் தமிழீழ விடுதலைப் போரின் உன்னத குறிக்கோள் தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலம் ஒன்றாகவே இருக்கும்போது, தாயகத்தை கட்டியெழுப்பும் தூர நோக்கிலான சிந்தனைகளை கொண்டிருப்பது யதார்த்தமான விடயமாகின்றது. எனினும் யுத்த புூமியில் இராணுவ நகர்வுகளை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு மக்கள் தலைவன், தனது மக்களின் எதிர்கலத்தையும் அவர்கள் வாழப்போகின்ற தேசம் பல்துறையிலும் தன்னிறைவுடன் திகழ்வதற்கான தூரநோக்கான திட்டமிடலையும் சமநேரத்தில் முன்னெடுத்து வருவது வியப்படையவைக்கும் விடயம்தான்.
தாயக நிலப்பரப்பில் அத்துமீறிய காடழிப்பைத் தடுப்பதற்கும் ஏற்கனவே காடழிப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் மீள்வனமாக்கல் நடவடிக்கைகளை செவ வனே மேற்கொள்ளும் நோக்கில் 1994ஆம் ஆண்டு தமிழீழ வனவள பாதுகாப்புப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. காடுகள் அழிக்கப்படுவதை இயன்றவரை தடைசெய்தல், மீள்வனமாக்கல் திட்டங்கள் மூலம் இயற்கைச் சமநிலையைப் பாதுகாத்தல் ஆகிய இரு நடவடிக்கைகளையும் வனவள பாதுகாப்புப் பிரிவு செயற்படுத்தி வருகிறது. இலங்கை வனத்திணைக்களம் 1982இல் மேற்கொண்ட புள்ளிவிபர ஆய்வுகளின்படி வன்னிப் பெருநிலப்பரப்பில் மட்டும் 375854 ஹெக்ரெயர் காடுகள் பேணப்பட்டு வந்தன. இது இலங்கையின் ஒட்டுமொத்த காடுகளில் 36.6 வீதமாக இருந்தது. ஆனால், இராணுவ ஆக்கிரமிப்பின்போது காடழிப்பு மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து 36.6 வீதமாக இருந்த வன்னிக் காடு 18.2 வீதமான வீழ்ச்சியடைந்துள்ளமையை வனவளப் பாதுகாப்புப் பிரிவின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ வீழ்ச்சி வீதம் தொடருமானால் இயற்கைச் சமநிலை பாதிக்கப்பட்டு எழில்கொஞ்சும் வன்னிவள நாடு பாலை நிலமாக மாறும் நிலைகூடத் தோன்றலாம். இதனைக் கருத்திலெடுத்த வனவளப்பாதுகாப்புப் பிரிவு மரங்களைப் பாதுகாக்கும் மகத்தான பணியுடன் கூடிய மீள்வனமாக்கல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. வன்னிப் பகுதியில் எந்த மூலை முடுக்கிலாவது காட்டுமரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுவது வனவள பாதுகாப புப் ப}h}வினரால் தடுக்கப் படுகிறது. வன்னியில் அனைத்துக் காகளும் பயிற்றுவிக்கப்ப பயிற்றுவிக்கப்பட்ட காடு பேணல் அலுவலர்களால் பராமரிக்கப்படு கிறது. அக்காடுபேணும் அலுவலர்களின் அனுமதியுடனும் நிபுணத்துவம் சார் வழி காட்டலுடனும் காட்டில் காணப்படும் மரங் கள், அவற்றின் பரம்பலிற்கும் முதிர்ச்சிக்குமேற்ப இயற்கைச் சூழலின் சமநிலையைப் பாதிக்காவண்ணம் வெட்டப்பட்டு வன் னியின் பலபகுதிகளிலுமுள்ள வனவளப் பாதுகாப்புப் பிரிவின் மரமடுவங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. பிரதேச hPதியாக அமைக்கப்பட்டுள்ள மரமடுவங்களால் மக்களின் மரத்தளபாட மற்றும் மரத் தேவைகள் புூர்த்திசெய்யப்படுகின்றன.
இவை தவிர, வனவளப் பாதுகாப்புப் பிரிவினரின் ஆழுகைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்விடங்களில் அல்லது மக்களுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளில் உள்ள பயன்தரு மரங்களை பிரதேச வனவளப் பாதுகாப்புப் பிரிவினரது அனுமதியின்றி வெட்டுவதும், முற்றாகத்தடை செய்யப்படுகின்றது. காடுகள் அழிக்கப்படுவதை முற்றாகத் தடுக்கவேண்டியதன் அவசியம், மனிதனின் வாழ்க்கை வட்டத்தில் காடுகளின் பங்கு, மீள்வனமாக்கலின் இன்றியமையாத தேவை இயற்கைச் சமநிலையைப் பாது காப்பதில் காடுகளின் பங்கு என்பவை தொடர்பான புூரண கருத்துக்களை மக்களுக்கு வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ வாறாக மேற்கொள்ளப்படும் அத்துமீறிய காடழிப்பைத் தடுப்பதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவரும் தமிழீழ வனவளப் பாதுகாப்புப்பிரிவு 1994ஆம் ஆண்டு தொடக்கம் மீள் வனமாக்கல் திட்டங்களை அதிசிரத்தையோடு முன்னெடுத்து வருகின்றது. 1994 ஆம் ஆண்டு வன்னியின் வெள்ளமலைப் பகுதியில் 340 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பில் 120,100 தேக்கு, சமண்டலை, மலைவேம்பு ஆகிய நாற்றுக்களை நடுகைசெய்ததைத் தொடர்ந்து, ஈழத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் தமிழீழ வனவளப்பாதுகாப்புப் பிரிவின் மகத்தானபணி ஆரம்பமானது.
இராணுவ நடவடிக்கைகளாலும் திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகளாலும் தமிழீழ வனவளம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு மீள்வனமாக்கல் நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. 1994ஆம் ஆண்டிலிருந்து வருடாவருடம் மழை காலத்தை அண்டிய பிரதேசங்கள் மற்றும் பரட்டைக்காடுகள் உள்ள பிரதேசங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து தேக்கு, வேம்பு, மலைவேம்பு, சவுக்கு, சமண்டலை, எக்கேசியா போன்ற பயன்தரு மரக்கன்றுகளை நடுகைசெய்து வருகின்றது. மீள்வனமாக்கல் திட்டம் செயற்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து வருடமொன்றுக்கு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் என்ற விகிதத்தில் வன்னியின் பல பாகங்களிலும் மீள்வனமாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
1994 தொடக்கம் இன்றைவரை நடுகை செய்யப்பட்ட சுமார் 1,550,200 பல்வகைப்பட்ட மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளதுடன் தொடர் பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ வாறாக, 2010 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பில் நடுகை டிசெய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளில் 75 வீதமானவை மட்டுமே வெற்றியளித்துள்ளன. 1994இன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளாலும் காட்டு விலங்குகளாலும் சில சந்தர்ப்பங்களில் நடுகை செய்யப்படும் மரக்கன்று குறிப்பிட்ட பிரதேச மண் பாங்கிற்கு ஏற்புடையதாக அமையாததாலுமே நடுகைத்திட்டங்கள் அனைத்தும் புூரண வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீதியோர நடுகைத் திட்டங்களாக, வன்னியின் முக்கிய வீதிகளின் இருமருங்குகளிலும் பயன்தரு மரங்கள் நடுகை செய்யப்பட்டு தொடர் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை மருங்கு நடுகைத் திட்டங்களாக, அம்பலப்பெருமாள்-துணுக்காய் சாலை, ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்புச் சாலை, வவுனியா-மாங்குளம் சாலை, மாங்குளம்-மல்லாவிச் சாலை ஆகிய சாலையோரங்களில் நடுகை செய்யப்பட்டுள்ளது.
இவ வாறான மீள்நடுகைகளுக்கான நாற் றுக்கள், உள்@ரில் கிடைக்கப்பெறும் பல் வகை இனங்களையும் சேர்ந்த நல்லின விதைகள் சேகரிக்கப்பட்டு அவ விதைகள் வன வளபாதுகாப்புப் பிரிவின் நாற்றுப் பண்ணைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு தகுந்த முறையில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பற்றைக்காடுகள், வெட்டவெளிகள் மற்றும் காடழிப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களை இனங்காணும் வனவளபாதுகாப்புப் பிரிவினர் அப்பகுதியில் உள்ள மண்ணை ஆய்வுக்குட்படுத்தியபின் குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் மண்பாங்கிற்கு ஏற்ப அப்பகுதிகளில் நடுகை செய்வதற்கெனத் தெரிவுசெய்யப்பட்ட நாற்றுக்களை நடுகை செய்து வருகின்றார்கள்.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சனத்தொகை, அபரிமிதமான அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழிற்புரட்சி காரணமாக உலகம் இன்று தனது பசுமைப் போர்வையை இழந்துகொண்டிருக்கிறது. இன்று, வல்லரசு நாடுகள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் நாடுகள் உட்பட பல வளர்ச்சியடைந்துவரும் நாடுகள் திடீரென ஞானம் பிறந்தவர்கள் போல காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்தல் மற்றும் மீள்வனமாக்கல் போன்ற நடவடிக்கைகளுக்கு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கிச் செயற்பட்டு வருகின்றார்கள்.
ஆனால், வன்னியில் வாழும் மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் மத்தியில் பல்வேறுபட்ட தடைகளுக்கும், நெருக்குவாரங்களுக்கும் முகங்கொடுக்கும் அதேநேரம், வருமுன் காக்கும் நடவடிக்கையாக வன்னி மக்களின் புூரண ஆதரவோடு தமிழீழ வனவள பாதுகாப்புப் பிரிவு தன்னாலான மீள் காடாக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தாயகத்தின் வளங்களைச் சுரண்டிச் சென்று, தமது தேவைகளுக்கு பயன்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், தமிழீழ தாயகத்தின் வளங்களை அழிப்பதன் மூலம், குறிப்பாக வன்னியின் வனவளத்தை அழிப்பதன் மூலம் நீண்டகால hPதியில் தமிழீழ தேசத்தின் இயற்கைச் சமநிலையைக் குழப்பத்திற்குள்ளாக்கி, தமிழர் புூமியை வரண்ட பாலைவன நிலைக்கு தள்ளிவிடும் நோக்கில் தொடர்ந்தும், செயற்பட்டுவரும் சிங்களத்திற்கு தமிழீழ மக்கள் கொடுத்த தீர்க்கமான பதில்தான் தமிழீழ வனவள பாதுகாப்புப் பிரிவின் மீள்வனமாக்கல் திட்டங்கள். பாரம்பரியமான தமிழர் தாயகப் பிரதேசத்தை வளங்களற்ற, மக்கள் வாழத் தகுதியற்ற சுடுகாடாக மாற்றிவிடத் துடிக்கும் சிங்கள அரசின் நாசகாரத் திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமான வியுூகங்களாக, மீள்நடுகைத் திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்தும் அதேநேரம் வனவளத்தை திட்டமிட்டு ஆக்கபுூர்வமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் வரும் தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவின் செயற்பாடுகள் அனைவரது கவனத்தையும் பாராட்டையும் பெறவேண்டியவை.
தமிழீழ தாயகத்தில் பலதசாப்தங்களாக நடைபெற்றுவரும் தேசத்தை மீட்கும் புனித விடுதலைப் போரானது, பல்வேறுபட்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கெதிரான புரட்சிகளையும் தன்னுள் அடக்கியிருப்பதை பல ஆய்வாளர்கள் உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கின்ற போதிலும், செல்வந்த நாடுகளில் ஜெனீவா மாநாடு போன்ற பெருமெடுப்பில் ஆராயப்படுகின்ற சூழல் மாசடைதலுக்கெதிரான யுத்தத்தையும் பசுமைப் புரட்சியையும் தன்னகத்தே கொண்டிருப்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
Reply
இரண்டு ரவைகள்

-அ. காந்தா
"அங்க அந்தத் தென்னையில இருந்து தான் அவன் சுட்டிருக்க வேணும்"
இளவரி காட்டிய மரத்தை உற்றுப் பார்த்தாள் பிரபா. தொலைநோக்கியால் ஊடுருவிப் பார்த்துவிட்டு இளவரசியிடம் கொடுத்தாள்.
"இல்ல அதற்குப் பக்கத்தில இருக்கிற பெரிய மரத்தில இருந்துதான் சுட்டிருக்க வேணும்"
"இப்ப என்ன செய்யிறது. முதலில் அந்தச் சினைப்பர்காரனைச் சுட்டு வீழ்த்தவேணும். அல்லாட்டி அந்தப் பாதையையும் கடக்க முடியாது. அத்தோட. . .
நாளுக்கு நாள் அவன் ஒவ வொருத்தரா மண்டையில போட்டுக் கொண்டிருப்பான்" கோபமும் உணர்ச்சியும் பொங்க அவள் குசுகுசுத்தாள்.
"எப்படியெண்டாலும் அவனை முதலில் போட வேணும். இவன். . . "
மற்றவளுக்கு வார்த்தை வராமல் உதடு துடித்தது.
அவர்களின் ஆத்திரத்திற்கும் சினத்திற்கும் காரணம் இருந்தது. போனவாரம் இந்தப் பகுதிக்க ஒரு போராளியை எதிரி பதுங்கிச் சுடும் துவக்கால், சுட்டுக் காயப்படுத்தியிருந்தான்.

அது போன்றே இன்றும் ஒரு போராளி அத்தாக்குதலில் வீரச்சாவடைந்திருந்தாள். இது சகஜமாக இருந்தது. அந்தப் பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தைத் துரத்திக் குறிப்பிட்ட து}ரத்தைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.
நடமாட்டம் தெரியும் போதெல்லாம் அவனின் சூடு கிடைத்தது. இவர்கள் வேகமாகவும் விவேகமாகவும் இடங்களைக் கடக்கவும், செயற்படவும் இருந்தமையினால் பல வேளைகளில் அவனின் தாக்குதல்களுக்குரிய ரவைகள் இலக்கைத் தாக்காது கடந்து சென்று மரங்களையும் கட்டடங்களையும் தாக்கியது.
அப்போதெல்லாம் தாக்குதல்களுக்குள்ளாகாது தப்பி விடுபவர்கள் மரங்களுக்காகக் கவலைப்பட்டுக் கொள்வார்கள். இப்போது இளவரசியின் சிந்தனை வேகமாகச் செயற்பட்டது.
"பிரபா ஒன்று செய்வம் வா"
"என்னெண்டு சொல்லுங்கோவன்"
"இப்ப நீ உடனே பின்னுக்குப் போய் ஒரு மண்வெட்டி கானுக்குள் தண்ணியும் கொண்டு வாறியே"
"ஓம்" என்றவள் தன் துவக்கையும் பற்றியபடி சிறிது து}ரம் தவளத் தொடங்கி, பின் எழும்பி வேகமாக இடத்தைக் கடந்து பின் நிலைக்கு வந்து சேர்ந்தாள்.
அதே நேரம் இளவரசியின் தொலைநோக்கி எதிரி பக்கம் துலாவுவதும், பின் அதை தை;துவிட்டு சுற்றும் முற்றும் பார்ப்பது,
பதுங்கிச்சுடும் துவக்கால் குறிபார்ப்பது என வேகமாக பலவாறு ஒத்திகை பார்த்து முடித்திருந்தாள்.
அரவமின்றி பிரபா பின்னால் வந்து சேர்ந்திருந்தாள்.
"வந்திட்டியே" "ஓ. . ."
"இந்தாங்கோ போPச்சம்பழம்"
"எங்காலை"
"அக்கா வந்தவவாம். அவன் சுட்ட இடத்தைப் பார்த்திட்டுப் போறா. கோபமா நிண்டவவாம்"
"பின்ன அவனிட்ட சினைப்பரால அடிவாங்கிறது எண்டா சும்மாவே" என்றவள் "வேற ஒன்றும் சொல்லேல்லையோ" என்று வினாவினாள்.
"எங்க சினைப்பர்காரர் என்று கேட்டவவாம். அந்தச்சினைப்பர்காரனை விழுத்துவது நல்லது. . . என்று சொன்னவவாம்"
முதலில அதைச் செய்ய வேணும் என்ற ஆக்கிரோசத்தில், சிலிர்த்துக் கொண்ட உள்ளத்தோடு, அவர்கள் செய்யத் தொடங்கினார்கள்.
சத்தம் கேக்காதவாறு மண்வெட்டி, பதுங்கு அகழி அமைக்க முயன்றர்கள் தண்ணீரை விட்டு நிலம் ஊற வெட்ட என கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நிலை அமைத்து முடித்தார்கள்.
உருமறைப்புச் செய்த பின் சிறிது து}ரம் தள்ளி இன்னோர் நிலையை அமைத்தார்கள். அதுவும் உருமறைக்கப்பட்டது.
இப்போது அவர்கள் இருவருக்கும் நெஞ்சு கனத்தது. ஒருவர் அறியாத ஒருவர் நினைவுக்குள் மூழ்கினார்கள். சத்தமின்றி பின் நிலைக்கு வந்து சேர்ந்தார்கள்.
இளவரசியின் எண்ணம் ஒத்திகை பார்க்கத் தொடங்கியது. பலவாறு சிந்தித்து நாளை செய்யப்போகும் செயலின் நினைவோடு காவல் கடமையில் நின்றாள்.
பிரபாவும் நாளை எப்படி பதுங்கிச் சுடுபவனைத் தாக்குவது என்ற திட்டத்திலேயே இரவைக் கரைத்தாள்.
விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதே அவர்கள் இருவரும் தம் துப்பாக்கிகளோடு மேலதிகமாக ஒரு சாக்குத் தொப்பியையும் வெற்றுத் தண்ணீர் கான் ஒன்றையும் எடுத்துக் கொண்டார்கள்.
இப்போது இலக்கு நோக்கி அமைதியாக நகர்வு, தேடல் கண்கள் எதிரியை மேப்பம் பிடித்தது. எதிரி வந்ததற்கோ அல்லது வந்து பதுங்கி இருப்பதற்கானதோ தடயம் எதுவும் இருக்கவில்லை. பதுங்கு அகழியை அடைத்தபோது அதுவும் அப்படியே உருமறைக்கப்பட்டபடி இருந்தது.
வேகமாகச் செயலில் இறங்கினார்கள். தொலைநோக்கி சுழன்று பார்த்தது. காலைக்கதிரவன் வரும் நேரமாகியது. "சினைப்பர்காரன் மரத்தில் ஏறுகிறனா"என்று அந்தப் பிரதேசத்தை ஊடுருவி துலாவியபடி இருந்தார்கள். மரத்தின் அசைவுகளில் கண்டு கொண்டனர். ஓரிரு நிமிடம்
இளவரசி ஒரு சிறு மரத்தடியில் நின்று அவனை நோக்கி ஒரு ரவையைச் சுட்டுவிட்டு வீச்சாக ஓடி அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் வீழ்ந்தாள். பின் ஏற்கனவே திட்டமிட்டபடி, உருண்டைக்கானின் வாயிற் பகுதியை மூடி சாக்குத் தொப்பி போடப்பட்டிருந்த கானை மெல்லத் து}க்கி வெளியில் வைத்துவிட்டு, அவள் பதுங்க, அடுத்த கணமே சாக்குத் தொப்பியை நோக்கி ரவை கூவியபடி வந்தது. அதைத்தாக்கிய அடுத்தகணமே சிறிது தொலைவில் அமைக்கப்பட்டிருந்த காப்பு நிலைக்குள் இருந்து, அந்தச் சினைப்பர்காரன் எங்கிருந்து சுடுகிறான் என்ற இலக்கை வந்த ரவையிலிருந்து மேலும் துல்லியமாகக் கண்டு கொண்டாள். அதே கணம் பிரபாவின் ரவை பதுங்கிச் சுடுபவனைப் பதம் பார்த்தது.
இருவருமாக ஒரே நேரத்தில் எட்டிப் பார்த்தபோது மரத்தில் இருந்து பொத்தென சினைப்பர்காரன் வீழ்வது தெரிந்தது. பின் இருவரது கண்களும் சந்தித்துக் கொண்டன. இப்போ இரண்டு ரவைகள் மட்டுமே முடிந்திருந்தது.
Reply
தமிழ் மக்களின் நெஞ்சங்களின் வடுவான

சிங்களப் பேரினவாத சக்திகளின் இனவெறி தமிழ் மக்கள் மீதான குரோதமாக வெளிப்பட்ட குருதிக்கறை படிந்த வரலாற்றுச் சம்பவங்களுள், என்றும் அழிந்து போக முடியாத ஒன்றுதான் 1974ஆம் ஆண்டு தை மாதம் 10 திகதிப் படுகொலைகள். தமிழ் மொழியின் தன்னிகரற்ற தன்மை கண்டு பொருமிப் புகைந்த சிங்கள ஆட்சியாளரின் துவேசம் காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட இக் குரூர நிகழ்வு வீரத்தமிழரின் விடுதலையுணர்வு வெஞ்சினமாக வெளிப்படுவதற்கு வித்திட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று. அமிழ்திலுமினிய தமிழ்தனில் செம்மை காணச் சிறப்புடன் குவிந்த செந்தமிழர்கள் மத்தியில் வெறியின் வடிவமான வன்முறைப் பிரயோகம், ஒன்றல்ல ஒன்பது உயிர்களைக் குடித்து, ஏப்பம் விட்டது. தாய்மொழிப்பற்றில் திரளெனக் குவிந்த ஒரே குற்றம் தாங்கி, குதறப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த உத்தமர்கள் சிலைகளாகக் கூட நிலைத்து விடக்கூடாது என்று சிங்களம் செய்த சிதறடிப்புக்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவை. இன்றுடன் இருபத்தியேழு வருடங்கள் கடந்தாலும் ஈழத்தமிழ் மக்கள் மனங்களில் இரத்தம் கசிகின்ற ரணமாகிப் போய்விட்ட இக்கோரம் ஈழத்தமிழர் விடுதலைப் போரின் ஆழப்பதிந்த அத்திவாரக் கற்களில் ஒன்றாகி நின்று நிலைத்திருப்பது வரலாறு சொல்லும் உண்மை.
பரந்துபட்ட உலகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தம் வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத நாட்களில் ஒன்றுதான் 10.01.1974 ஆகும். இந்த நாள் தமிழ் மக்களைவிட்டுக் கடந்து சென்ற 10ஆம் திகதி வியாழக்கிழமையோடு 27 வருடங்களாகின்றன. ஆயினும் அந்த நாளின் கொடிய நினைவானது இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத நெருப்பென எரியும் நினைவாக இருப்பதோடு இன்றைய விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்துவிட்டது.
1974 தை 10ஆம் நாள் அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வு கள் சிறீலங்கா ஆட்சியாளராலும் அதன் காவல்துறையினராலும் நன்கு திட்டமிட்டுக் குழப்பப்பட்டபோது, அப்பாவிப் பொதுமக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டமையும் தமிழ் மக்களின் மனங்களிலிருந்து நீக்கமுடியாததொரு நிகழ்வாகவே இருக்கின்றது. உலகத் தமிழாராட்சி மன்றமானது 1960களின் நடுப்பகுதியில் அருட் தந்தை தனிநாயகம் அடிகளின் பெருமுயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டு பின் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு முதலாவதாக 1966ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கத்தின் ஆதரவுடன் அதன் தலைநகரான கோலாலம்புூரில் நடாத்தப்பட்டது. அதன்பின் இரண்டாவது மாநாடு இந்திய தமிழக அரசாங்கத்தின் ஆதரவுடன் 1968இல் நடாத்தப்பட்டது. மூன்றாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடானது பிரான்சின் தலைநகரான பாரிசில் பல்வேறு தமிழ் அமைப்புக்களினதும் அந்த நாட்டு அரசாங்கத்தினரதும் ஆதரவோடு 1971ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது.
3வது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு பாரிசில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அடுத்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு இலங்கையில் அதுவும் தமிழ் மொழிபேசும் மக்கள் பரந்தளவில் வாழ்ந்துவரும் யாழ்ப்பாணத்திலேயே நடாத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் அனைத்துலக தமிழாராட்சி மன்றத்தினால் எடுக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் பொறுப்பையும் மேற்படி மன்றத்தின் இலங்கைக்கான கிளையிடம் ஒப்படைக்கப்பட்டது.


இலங்கைக்கான கிளை தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை இங்கு செயற்படுத்தமுனைந்தபோது யாழ்ப்பாணத்தில், அன்றைய யாழ். நகர மேயரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமாக இருந்த அல்பிரட் துரையப்பா என்பவரூடாக அது பல எதிர்ப்புக்களையும் இடையுூறுகளையும் எதிர்நோக்கவேண்டியிருந்தது. அத்தோடு அக்காலகட்டத்தில் அதாவது 27 வருடத்திற்கு முன்பு நாட்டு பிரதமர் என்ற hPதியில் திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்கவே நடைபெறவிருந்த தமிழாராய்ச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கவேண்டும் என தமிழாராய்ச்சி மாநாட்டின் இலங்கைக்கான கிளைக்குள் இருந்த அரச சார்புள்ள சிலர் அழுத்தமாகக் குரல்கொடுத்தனர். அத்தோடு இந்தத் தமிழாராய்ச்சி மாநாட்டை சிறீலங்காவின் தலைநகரான கொழும்பிலேயே நடாத்தவேண்டுமென்றும் தீர்மானித்தனர்.
இவர்கள் இப்படித் தீர்மானிப்பதற்கு அன்று பல காரணங்கள் இருந்தன. திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்க தமிழ் மக்கள் மீது இன மொழி hPதியாகப் பாகுபாடுகள் காட்டி வந்ததோடு, பல்கலைக்கழக அனுமதிக்கு தரப்படுத்தல் போன்ற விடயங்களை மேற்கொண்டதும், வேறுபல அரசியல் பிரச்சினைகளை முன்னிட்டும், அவர் யாழ்ப்பாணம் வருவதில் பல சிக்கல்கள் இருந்தன. இதனால் தான், ஒருசாரார் திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்காவிற்காக கொழும்பிலேயே தமிழாராய்ச்சி மாநாட்டை நடாத்தவேண்டுமென முடிவெடுத்தபோது அதற்கு எதிர்மாறாக எழுந்த தமிழ் இளைஞர்கள் பலர் 'பாரிஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படியே அனைத்துலக தமிழாராட்சி மாநாடானது யாழ்ப்பாண மண்ணிலே நடாத்தப்படவேண்டும்' என ஒருமித்துக் குரல் கொடுத்தனர்.
இந்த விவகாரம் இரு பகுதியினருக்கும் இடையில் இழுபறி நிலையாய் இருந்தபோது, திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா என தமிழ் மக்கள் தமக்குள்ளே ஐயுறவு கொள்ளத்தொடங்கினர். மக்கள் மத்தியில் எழுந்த நம்பிக்கையீனத்தைக் கண்ணுற்ற மாநாட்டுப் பணியகத்தின் செயலாளர் அப்போது ஓர் அறிவித்தல் கொடுத்தார்.
'03.01.1974 தொடக்கம் தொடர்ந்த ஏழு நாட்களுக்கு அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு திட்டமிட்டபடியே யாழ்ப்பாணத்தில் நடைபெறும்'
செய்தியைக் கேள்விப்பட்டதும், மக்கள் பதற்றம் நீங்கி பரவசத்துக்குள்ளானார்கள். செய்தியை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டார்கள். மாநாட்டுக்கு வருகை தரவிருக்கும் கல்விமான்கள், அறிஞர்கள், அயல்நாட்டு மக்களை வரவேற்பதற்காக மாநகர ஆணையாளரின் அறிவித்தலுக்கமைய யாழ்ப்பாண நகரைத் துப்பரவு செய்யத்தொடங்கினர். வீதிகள் தோறும் வாழைகள் நட்டு, தோரணங்கள் கட்டி மகிழ்ந்தனர். சப்பறங்கள், சிகரங்கள் எனச் சந்திக்குச் சந்தி அலங்கரித்துக்கொண்டார்கள். மின் கம்பங்களில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகளில் இருந்து நாதஸ்வர மேள தாள வாத்தியங்களும், தமிழ் மணக்கும் நல்லிசைப்பாடல்களும் ஒலித்துக்கொண்டிருந்தன. ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழி வாழ்வதற்காக தமது உழைப்பின் பெரும் பொழுதை மாநாட்டுக்காக செலவழித்திருந்தார்கள். நாட்கள் நகர நகர நகரமே களைகட்டத்தொடங்கியது. அயல் கிராமங்களிலிருந்து அலையலையாக மக்கள் வந்து குவிந்துகொண்டிருந்தார்கள். அனைவரது முகங்களிலும் மகிழ்வின் புூரிப்புப் பொலிந்திருக்க தமிழாராட்சி மாநாடு நடந்துகொண்டிருந்தது.
இதேவேளை மாநாட்டின் இறுதி நாள் தமிழ் மக்களின் பண்பாட்டை, வலியுறுத்தும் வகையில் பல கிராமங்களிலிருந்து அலங்கார ஊர்திப் பவனிகள் யாழ் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. இவ வாறான ஓர் அணி பருத்தித்துறை வீதியுூடாக யாழ். நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, முத்திரைச் சந்தியில் வைத்து சிறீலங்கா காவல்துறையினரால் காரணமின்றி வழிமறிக்கப்பட்டு, மேற்கொண்டு செல்லவிடாது தடுக்கப்பட்டது. ஊர்வலத்தில் வந்த இளைஞர்களும் யுவதிகளும் ஆத்திரம் கொண்டு நடுவீதியில் சில மணித்தியாலங்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த, அதற்குப் பணிந்துபோன சிங்கள காவல்துறையினர் மேற்கொண்டு ஊர்வலம் செல்வதற்கு அனுமதித்தனர். தங்களைப் பெரும்பான்மை இனமெனக் கருதிக்கொண்டிருந்தவர்களால் ஒரு சிறுபான்மையினத்திற்கு முன்னால் தாம் தலைகுனிந்து போனதைத் தாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது.
அத்தோடு, திட்டமிட்டபடி மாநாட்டைக் கொழும்பில் நடாத்தமுடியாதுபோன மனக் கொந்தளிப்பும், தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதான தோற்றப்பாடும் சிங்களக் காவல்துறையினரின் இதயங்களில் இனவாத வன்ம வெறியை தோற்றுவித்துவிட்டது. நடைபெறும் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டை அல்லோலகல்லோலப் படுத்துவதற்கான வழியை வகுத்தபின், அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமாகி நின்றார்கள் சிறீலங்கா காவல்துறையினர் இந்நிலையில் ஜனவரி 10ஆம் நாளில் ஊரே திரண்டுவந்து யாழ். நகரில் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி குழுமியிருந்து விழாவை ரசித்துக்கொண்டிருந்தது.
அப்போது நேரம் இரவு எட்டுமணி, போக்குவரத்திற்குப் பொறுப்பான சிங்கள காவல்துறை அதிகாரி ஒருவர் காங்கேசந்துறை வீதி வழியாக யாழ். காவல் நிலையம் செல்வதற்கு, தனது மோட்டார் வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். இச்சமயம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகாமையில் வீதிகளில் மக்கள் நிறைந்திருந்ததினால் அவரால் மேற்கொண்டு செல்லமுடியவில்லை. மக்களுக்கும் வழியை விட்டுக்கொடுப்பதற்கு போதுமான இடைவெளி இருக்கவில்லை. திரும்பி வேறு பாதையால் செல்வதற்கு அவருடைய 'காக்கி உடுப்பின் கௌரவம்' இடங்கொடுக்கவில்லை. அவருள் எழுந்த ஆத்திரமும் காக்கிச் சட்டையின் அதிகாரமும் மக்களை நோக்கி வசைமாரி பொழிய வைத்தன. பதிலுக்கு மக்களும் எதிர்த்துக் கதைக்கத் தொடங்கவே, நிலமை கட்டுமீறிச் செல்வதை உணர்ந்த அவர், ஒருவாறாக தனது மோட்டார் வண்டியை மக்களிடையில் வலிந்துசெலுத்தியவாறு காவல் நிலையம் போய்ச் சேர்ந்தார். ஆனால் அடுத்து நிகழப்போகும் கொடிய விபாPதத்தை அறியாத நிலையில், ஆனந்த மனோநிலையில் அமர்ந்திருந்தார்கள் தமிழ் மக்கள். வேக்காளத்தோடும், வெஞ்சினத்தோடும் காவல் நிலையம் சென்றடைந்த அந்த சிங்கள காவல்துறை அதிகாரி, தனக்கு நேர்ந்த அவமானத்தை அங்கு நின்ற ஏனைய காவல்துறையினருக்கு எடுத்துரைத்தார். மறுவினாடி, பெருந்தொகையிலான சிங்கள காவல்துறையினர், யாழ். காவல்துறை அதிபர் சந்திரசேகர தலைமையில் கண்ணீர் புகைக்குண்டுகளோடும், துப்பாக்கிகளோடும், யாராவது எதிர்த்துத் தாக்கினால் அவர்களைச் சமாளிப்பதற்கென உலோகத் தடுப்புகளோடும் கூச்சலிட்டபடி ஆவேசத்துடன் மக்களி னுள் புகுந்தனர். கண்ணீர் புகைகள் எங்கும் வெடிக்கத் தொடங்கின. மக்கள் கூட்டம் சிதறியோடத் தொடங்கியது. பெற்றோரைத் தவறவிட்ட குழந்தைகளின் கதறல் எங்கும் எதிரொலித்தன. வீதிகளில் நிறுவப்பட்ட சிகரங்கள் தீப்பிடித்து எரிந்தன. சப்பறங்கள் யாவும் மண்ணில் சரிந்து வீழ்ந்தன.
இவ வேளையில் சில சிங்கள காவல்துறையினர் மின்சாரக் கம்பங்களில் உள்ள கம்பிகளை குறிபார்த்துச் சுட்டனர். இப்படிச் சுட்டதில் மின்கம்பி ஒன்று அறுந்து வீழ்ந்ததில் அதன்மீது எதிர்பாராத விதமாக தங்கள் கால்களை வைத்த ஒன்பது அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழந்தார்கள். திட்டமிட்டபடியே சிங்களக் காவல்துறையினரால் அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு அன்றைய தினத்தில் குழப்பியடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் உயிர் தீத்த ஒன்பது தமிழ் மக்களின் நினைவாக முற்றவெளியில் ஓர் தூபி நிறுவப்பட்டபோதும் பின்னர் இது சிங்கள பொலிசாரால் அடித்து நொருக்கப்பட்டது. மீண்டும் அதேயிடத்தில் சிறிய அளவிலான ஒன்பது தூபிகள் நிறுவப்பட்டன. அப்படியே இத்தூபிகள் உடைப்பதும் பின் நிறுவுவதுமாக வரலாற்றில் பதியப்பட்டன. அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள காவல்துறையினர் நடாத்திய இனவாத காட்டுமிராண்டித் தனமான செயல் குறித்தும், உயிர் நீத்த ஒன்பது குடும்பங்களுக்கு நீதி வழங்கக் கோரியும் தமிழ் மக்கள் அன்றைய ஆட்சிப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவிற்கு அடிக்கடி பல கோரிக்கைகள் விடுத்தபோதும் கடைசிவரை தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு சிறீமாவோ செவிசாய்க்காது மௌனம் காத்துக்கொண்டார்.
இச்சம்பவம் நிகழ்ந்ததில் இருந்து, இம்மாதம் 10ஆம் திகதியுடன் 27 வருடங்கள் கழிகின்றன. ஆயினும் அன்று சிறீலங்கா சிங்கள காவல் துறையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை மற்றும் குண்டாந்தடிப் பிரயோகங்களையும் முற்றவெளியில் கொல்லப்பட்ட அந்த ஒன்பது தமிழர்களையும் இன்றுவரை எந்தவொரு தமிழனும் மறந்திருக்கமாட்டான். ஏனெனில் இலகுவில் எவராலுமே மறக்கக்கூடிய சம்பவமல்ல அது.
அலெக்ஸ்
பரந்தாமன்
Reply
'சண்டை தொடங்கிட்டுதாம்'
அக்குரல் ஓயுமுன்னே அந்த முகாமில் உள்ள அனைவரது இதயங்களும் ஒரு முறை உயர்ந்து பதிந்தன. வானவிளிம்பு தாண்டி குறிக்கப்பட்ட எல்லையில் பலம் பொருந்திய பகைக் கலங்களோடு மனோவுறுதியின் ஆற்றலோடுதான் வலிமையற்ற எமது படகுகள் மோதிக்ககொண்டிருந்தன.
மோதும் காற்றிற்கு ஏற்பட உருவாகும் அலை வடிவங்கள் சீற்றத்தோடு கரையில் அடிக்கும் ஓசையைத் தவிர அங்கு வேறு சத்தங்கள் ஏற்படவில்லை அனைத்து விழிகளும் கூர்ந்து பார்த்தன.
'ஆரிற்கு என்னவோ?' இதுதான் அவர்களிற்குள் ஒலிக்கும் குரலாக இருந்தது. பாதைச் சுட்டி ரவைகளின் ஒளிர்வுகள் எம்மை நோக்கி வருவதைத் தெளிவாகத் தெரிந்த பின்னும், எதிரியின் ரவைப் பின்னல் வலையினூடே நடைபெறும் சண்டையில் எம்மவர்கள் என்னமாதிரி வியுூகம் அமைத்து சண்டை பிடிக்கினமோ?
'காத்தும் கூடவாயிருக்கு அப்ப கடலும் நிக்கும் தானே' கடல் மீது அனுபவப்பட்ட போராளியின் கூற்றை மௌனமாக ஆமோதித்துக்கொண்டனர்.
ஒலி அலைகள் வானொலி அலையின் துணையுடன் வான்வெளி கடந்து அந்தக் கரையோர முகாமிலுள்ள அன்ரனாவினால் கவரப்பட்டு மீளவும் உயர் அலைவரிசைச் சாதனத்தில் படகிலுள்ள நிலமைகளை ஒலியாகி எடுத்துரைத்தபோது அனைவரும் இறுகிப்போனார்கள்.
பாகம் பாகமாய் நீரால் நிறையப்பட்ட கடலில், காப்பெடுக்க நிலைகளே அற்ற பெருவெளியில்தான் சண்டை விரிந்திருந்ததை அங்கிருந்தவர்களிற்கு எடுத்துரைக்க வேண்டிய தேவையே இல்லை. படகில் சென்ற ஒவ வொரு போராளிகளினதும் முகங்களையும், செயல்களையும் மனதிற்குள் நினைத்து நினைத்து தவித்துக்கொண்டார்கள்.
'சாதனம் தன்னிருப்பை உணர்த்தியவாறிருந்தது. 'இரண்டு படகிற்கு சரியான வெடி, வீரச்சாவும் காயங்களும் நிறைய இருக்குது' இமைதுடிப்பில் மீளவும்.
'சின்னவன் வெடிச்சிட்டான், டோறா ஒண்டு தாண்டிட்டுது'
கைதட்டிக் கூவெனக் கத்தி டோறா தாண்ட மகிழ்வைத் தெரிவித்த போராளிகளின் மனக்கண் முன்னே சின்னவன் நின்றான்.
ஒவ வொரு முறையும் படகு இறக்கும்போது சின்னவன் 'இண்டைக்குத் தான் கடைசி மச்சான் இனிவரமாட்டன்' என்று அவன் கை அசைத்துச் செல்லும் போதெல்லாம், அவன் பிரிவை ஏற்காத மனதினரால் அந்த வேதனைகளை மறைப்பதற்காய் சின்னவனை ஏளனம் செய்வார்கள்.


இலக்குக் கிடைக்காமல் போய் திரும்பவும் கரையேற வரும் ஒவ வொரு தடவையும் சின்னவனின் முகத்தைப் பார்க்கவேதனையாக இருக்கும்.

தான் வெடிக்கவில்லையே என்ற கவலையில் கடலை ஏக்கத்தோடு பார்ப்பான். அடுத்தமுறை கடலில் இறங்கும்போது புன்னகை தவழும் முகத்துடன் கையசைப்பான்.
அதே சின்னவன்தான் இனிமேல், எம்மோடு கதை பேசி பம்பலடித்து ஒன்றாக உணவருந்தி, தன் உணர்வுகளை எங்களோடு பகிர்ந்துகொண்ட சின்னவன் இனிவரவே மாட்டான். நினைத்த கணத்தில் அனைவரது இமைகளும் நனைத்துக்கொண்டன.
'படகுகள் கரைக்கு வருகுதாம்' சொன்ன போராளியின் முகம் அமைதியோடும், விழிகளில் சோகம் படர்ந்திருந்ததும், குரல் அடைத்தும் இருந்தது. வரும் படகுகளின் தூரங்கள் கரைக்கு குறைவதாகவே இல்லாமலிருப்பது போன்ற உணர்வே அப்போராளிகளிற்கு ஏற்பட்டது.
வேகம் குறைந்ததிற்கு எஞ்சின்கள் பிழையாகி இருக்குமோ? உமாவின் மூளையின் மையத்துள் பொறியாய் அக்கேள்வி எழுந்தது.
கண்களில் வலி எடுத்து இமைகள் சோர முற்பட்டாலும், 'கடலில் நிற்பவர்களிற்கு என்ன நடந்திருக்குமோ?' எனச் சந்திக்கும் கணங்களில் விழிகள் புத்துயிர்ப்பாகி கடலை ஏக்கத்தோடு பார்த்தன.
'படகுகள் வருகுது படகுகள் வருகுது' குரல் நாண்கள் காற்றுடன் அதிர உரத்த ஒலிகள் அக்கரையோரப் பிரதேசத்தை சூழ்ந்து தென்னை மரங்களுடன் சிதறிக்கொண்டது. அணியங்கள் நீரைக் கிழித்து வெண்நுரைகளை எழுப்பியவாறு கரையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தன.
உமாவிற்கு மயிர்க்கால்கள் சிலிர்த்து மண்டையும் விறைக்குமாப்போலிருந்தது. அதியுயர் அலைவரிசைச் சாதனங்கள் இமைப்பொழுதுகள் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தன.
'முன்னுக்கு வாற படகிலதானாம் காயக்காரரும் வீரச்சாவடைந்தவர்களும் வருகினமாம்'
கரையைச் சூழ்ந்து நின்ற போராளிகளின் மனங்கள் துயரால் தமக்குள் ஓலமிட்டுக்கொண்டிருந்தன. மடக்குத்தாண்டி கரையைத் தொட்ட படகின் அணியத்துள் போராளிகள் முந்தியடித்தவாறு பாய்ந்து ஏறிக்கொண்டிருந்தார்கள்.
இரத்தவாடை நாசிகளில் உரசியது. காயங்களில் கட்டப்பட்ட துணிகளின் மேலால் குருதி கசிந்துகொண்டிருந்தது. படகினுள் கசிந்த இரத்தங்களால் உள் இறங்கிய போராளிகளின் கால்களிலும் ஒட்டிப்பிடித்தன.
வலிகளைப் பொறுத்துக் கொண்டவர்களும் மயங்கிப் போனவர்களும், கத்துபவர்களுமென அந்தப் படகின் இயல்பு நிலை தொலைந்திருந்தது. காயங்களின் தன்மைகளிற்கேற்றவாறு, போராளிகளை இறக்கும்போது அங்குள்ள போராளிகள் ஒவ வொருவரையும் இனங்கண்டு துடித்துக்கொண்டிருந்தனர்.
அவர்களின் இயல்புகளைச் சொல்லி 'அவன் தாங்க மாட்டான். அவருக்கு வயித்துக் காயம், அதை விடக் காலும் முறிவு செல்வி சின்னப்பிள்ளை மாதிரி ஒன்றையும் தாங்க மாட்டாள் இப்ப தலைக்காயத்தையும் கை காயத்தையும் பொறுத்துக்கொண்டு என்ன மாதிரிச் சிரிக்கிறாள்.
'அங்கபார் வெண்ணிலாக்காவை எல்லோரும் மௌனமாகிப் போனார்கள் வெண்ணிலாக்காவை கிடத்திய பாயைச் சுற்றி அழுத விழிகளோடும், துயருள் உறைந்த உள்ளங்களோடும் வெறுமை கவ விய விழிகளோடும் நின்றார்கள்.
தொடராக இறங்கிய கடல் மறவர்களிற்கருகே குவிந்து நின்ற போராளிகளின் இமைகள் சிவப்பேறி இருந்தது. என்றுமே காணா முகங்களாகிப் போய்விடப் போகின்ற அவ வுறவுகளின் பிரிவுகள் அவர்களின் மனங்களை ரணமாக்கியிருந்தது.
'ஆரும் 0- காரர்கள் இருக்கிறார்களோ?' அவசரத்துடன் ஒலித்த மருத்துவப் போராளியின் குரலிற்கு அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். 'அவசரமாக அக்காவிற்கு இரத்தம் ஏற்ற வேணும்' அங்கு நின்ற எல்லாப் போராளிகளும் 'நான் தாறன் 0, நான் தாறன் யுடீ ' எனச் சொல்லிக் கொண்டார்கள்.
'0- பொது வழங்கி அந்த இரத்தக் காரரிற்கு 0- மட்டும்தான் ஏத்தலாம்' என மருத்துவப் போராளி சொல்ல, படகைத் தள்ளிவிட்டு வந்து கொண்டிருந்த உமாவின் செவிப்பறையிலும் இந்த வேண்டுதல் வந்தடைந்தது.
கால் புதையும் கரையோர மணலில் வேகமாக ஓடிவந்தாள். ஓடிவந்த வேகத்தால் மூச்சைப் பெரிதாக உள்ளெடுத்து வெளியே விட்டுக்கொண்டு, 'நான் தாறன் என்னில எடுங்கோ' உமா இறைஞ்சும் குரலில் கேட்டுக்கொண்டாள்.
அந்த மருத்துவப் போராளி திரும்பவும் உமாவின் இரத்தப் பிரிவைக் கேட்டவாறு அவளது நாடித்துடிப்பையும், சுவாச வீதத்தையும், குருதி அமுக்கத்தையும் பரிசோதித்தாள். 'தலையைச் சுத்துறதா? வேறேதும் வருத்தம் இருக்கா?' எனக் கேள்விகளைக் கேட்டவாறு உமாவின் வெயினை கைகளால் தடவிப் பிடித்தவாறு 5 மில்லிலீற்றர் ஊசியை ஏற்றிய பின், ஊசி அசையாதிருக்க பிளாஸ்ரர் இட்டாள்.
ஊசியை ஏற்றியபோது ஏற்பட்ட வலியை உமா கண்களை மூடி சகித்துக்கொண்டாள். குழாயினூடே செல்லும் இரத்தம் பக்கத்தில் மயங்கி இருந்த ஈழமதியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உதவப்போகின்றது என்ற உணர்வே அவருள் சிலிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
360 மணித்தியாலங்களின் பின் அன்று காலையில்தான் ஈழமதிக்கு வயிற்றில் போட்ட தையல் பிரிக்கப்பட்டிருந்தது. தலை, கை, கால் என ஒவ வொரு காயங்களும் சுத்தம் செய்யப்பட்டிருந்தது.
இவ வளவு நேரம்வரை அந்தக் காயங்களைச் சுத்தம் செய்தபோது ஏற்பட்ட வலிகளால் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தவளிற்கு வேதனைகள் குறையத் தொடங்கியிருந்தது.
அருகே நின்ற மருத்துவப் போராளியின் கையிலிருந்த ஈழநாதம் பேப்பரை வேண்டிப் பின் பக்கத்தைப் பார்த்தவாறு பக்கங்களைப் புரட்டினாள்.
முன்பக்கத்தில் சிரிக்கும் விழிகளோடு கரிய சீருடையில் தேசத்தின் இதயத்தினருகே உமா, கடற்கரும்புலி கப்டன் உமாவாகியிருந்தாள்.
ஈழமதிக்கு குளறி அழ வேண்டும் போலிருந்தது. உதட்டைப் பற்களால் அழுத்திப் பிடித்தாள். ஈழமதியின் மனதில் பெரிய உவட்டுகள் உருவாகி, விழி நீராகி கரையேறிக் கொண்டிருந்தன.
போன சண்டையில் காயப்பட்டு வந்த சக போராளியின் உயிரைக் காப்பாற்றி, அவளை தேசத்தின் கடமைகளைப் புரிய வைக்கவேண்டும் என்ற உந்துதலோடு தன் குருதியை ஈழமதிக்கு ஈகமாய் கொடுத்த உமா, காலமெல்லாம் கண்முன்னே கடல்மடியில் உப்பி உருவின்றி போய், குருதி ஓழுக கரையேறிய மக்களை நேசித்த அதே உமா, வெறிகொண்ட பகைக்கலப் பவனிகளை சிதைத்திட எண்ணிய உமா தான் இன்று தாயக விடியலை ஒளிரச் செய்வதற்காக தன்னையே சிதறடித்துள்ளாள்.
உமாலு} ஈழமதி மௌனமாய் தன்னுள் அப்பெயரை உரத்துக் கூப்பிட்டாள், உமா சிரித்தவாறு துள்ளியபடி நடந்துவரும் தோற்றமே மனதுள் தெரிந்தது.
உவர்க்கும் உப்பு மடியில், நாளும் நனைந்து தாயகக் கடமைகளை ஓயாது செய்த உமாவின் எண்ணங்களும் செயலும் வித்தியாசமானவை.
தேசத்தின் தேவையுணர்ந்து, தாயகத்தின் தலைமை மீதும், போராளிகளின் மீதும் அளவற்ற நேசம் வைத்து, போருள்ளே வாழ்வதால் எதிரியின் ஆளுகைக்குள் உள்ள அப்பாவை என்றுமே பார்க்க முடியாமற் போனதும் எண்ணற்ற உணர்வின் தாகங்கள் கானல் நீராய் ஆன பின்னும் பற்றுவைத்த இலட்சியத்திலேயே குறியாய் சுழன்றாய்.
அதே உமாவின் குருதி ஈழமதியின் நாளங்களினூடே ஓடி அவளினுடைய மூளையின் மையத்தை இயக்கி அவளின் உணர்வுகளை உயிர்ப்பாக்கிக்கொண்டிருந்தது. நாளை ஈழமதி நிமிர்வாள், உமாவின் தாகங்கள் அவளிற்குள் ஒளியாகியிருக்கும்.
ஈழமதியின் சுவாசம் சுருங்கிவிரியும் ஒவ வொரு நொடிப்பொழுதிலும் அவளது சிந்தனைகளோடு உமாவின் கனவுகளும் ஒன்றாகிச் சிறகசைக்கும்.
-
அலையிசை.
Reply
உலகின் கண்களைக் கவராமல் வன்னியில்

இ ன்று உலகிலே ஒருபுறம் கொடிய ஆட்கொல்லி நோய்களாலும் மறுபுறம் யுத்தங்களின்போது விதைக்கப்பட்ட மிதிவெடிகளினாலும் மக்கள் பாதிப்புற்று அழிவதும், அங்கவீனராவதும் தவிர்க்கமுடியாததொன்றாகி விட்டது. செவ வாய் வரையும் சென்று ஆராயுமளவிற்கு வளர்ந்துவிட்ட விஞ்ஞான தொழில்நுட்ப யுகத்திலும் இந்த ஆட்கொல்லி நோய்களை வெல்லமுடியாமல் இருப்பது விந்தைதான். ஆனால், இரண்டாவதாகக் குறிப்பிட்ட 'வெடிபொருள்' அபாயத்தினின்றும் மக்களைக் காப்போம் என்ற சர்வதேச அமைதிபேணும் நிறுவனங்களின் ஒருமித்த வாக்கியம் வன்னியில் வெறும் வாக்கியமாகத் தொக்கி நிற்பது அதனைவிட விந்தைதான்.

இத்தருணத்திலும் தாரை, தப்பட்டைகளின் ஓசையின்றி, ஆரவாரமின்றி வன்னிமக்களின் சுபீட்சமான எதிர்கால வாழ்வுக்காக மிதிவெடிகளை அகற்றும் மனிதநேயப்பணியொன்று 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டு செவ வனே தொடர்ந்தும் செயலாற்றி வருகின்றது. எவ வித இராணுவ நோக்கங்களுமின்றி மக்களை வெடிபொருள் அபாயத்தினின்றும் நீக்கி, அவர்களின் சுபீட்சமான வாழ்வுக்கு வழிசமைப்பது என்ற ஒன்றையே தமது தாரக மந்திரமாகக் கொண்டு கண்ணிவெடியகற்றும் பிரிவினர் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளின் பிரத்தியேக இராணுவத் தயாரிப்புக்களின் முதல் கொள்வனவாளனான சிறீலங்காவினால் பலதரப்பட்ட மிதிவெடிகளும் கொள்முதல் செய்யப்பட்டு வன்னி மண்ணின் எல்லையெங்கும், குறித்த வரையறைகளை மீறி, இனங்காண முடியாத மர்ம ஒழுங்கமைப்பில் பல இலட்சம் மிதிவெடிகளும், கண்ணிவெடிகளும் வகைதொகையின்றி விதைக்கப்பட்டுள்ளன. இன்று ஒப்பீட்டளவில் தென்னாசியாவின் 'மிதிவெடிக் களஞ்சியம்' வன்னி மண்ணென்றால் அதில் மிகையேதுமில்லை எனக் கூறுமளவிற்கு இங்கு மிதிவெடிகள் மலிந்து பரந்து காணப்படுகின்றன. என்ன நோக்கத்திற்காக இதனை விதைத்தார்களோ அதன் பயனின்றி, இது நாள்வரை அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்புக்களுக்கும், அங்க இழப்புகளுக்கும் காரணமாகி அதன் பணியை செவ வனே நிறைவேற்றி வந்துள்ளது. விதைக்கப்பட்ட மிதிவெடிகளால் பாதிப்படைவதற்கு தமிழன் என்ற தகுதி மட்டும் போதும் என்ற சிறீலங்கா இனவாத அரசின் கபடநோக்கம் இதிலிருந்து புலப்படுகிறதல்லவா?

தமிழீழப் பிரதேசங்களான மணலாறு தொடக்கம் நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடு, மாங்குளம், கனகராயன்குளம், இரணைஇலுப்பைக்குளம், முள்ளிக்குளம், கீரிசுட்டான், பெரியமடு, பள்ளமடு, ஆகிய மக்களின் வாழ்விடங்களை ஊடறுத்து ஒரு தொகுதியாகவும் ஆனையிறவைச் சூழவும் சுட்டதீவு, பரந்தன், திருவையாறு, பன் னங்கண்டி, ஊரியான், தட்டுவன்கொட்டி ஆகிய மக்கள் வாழ்விடங்களை ஊடறுத்து, இன்னோர் தொகுதியாகவும் இம்மிதிவெடிகள் காணப்படுகின்றன. இதுநாள்வரை வன்னி மக்கள் தமது நாளாந்தப் பணி எதனைச் செய்வதாக இருந்தாலும் அதனை நிறைவேற்றிவிட்டு தாம் உயிருடன் திரும்புவோமா என்ற அச்ச உணர்வுடன்தான் தமது நாளாந்த வாழ்வினை ஓட்டிவந்தார்கள். எங்கு திரும்பினாலும் மிதிவெடி அச்சுறுத்தல்.
மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவு தனது பணியைத் தொடங்கியது. வன்னி மண்ணில் உள்ள அனைத்து மிதிவெடிகளையும் உடன் அகற்றுதல் சாத்தியமற்று இருப்பினும் மக்கள் வாழ்விடங்களை சூழவுள்ள மிதிவெடிகளை உடன் அகற்ற முடிவு செய்தது. அதன்படி, இரண்டாவது தொகுதியாகக் கூறப்பட்ட கிளிநகரைச் சூழ்ந்த, மிகுதியாக மக்கள் வாழ்விடமாக இருந்த பகுதிகள் மிதிவெடியகற்றும் பணிக்கு முன்னுரிமைப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாங்குளம், ஒலுமடு, நெடுங்கேணி பகுதிகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன.
இன்றைவரை 82,000ற்கும் மேற்பட்ட மிதிவெடிகளும் பல்லாயிரக்கணக்கான அபாயகரமான வெடிபொருட்களும் மீட்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 37,600,000 சதுர மீற்றர் மிதிவெடி வயல்களாக இருந்த நிலப்பரப்பு மக்கள் வாழ்விடமாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இப்பகுதிகளில் மேலும் உறுதிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2000ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதிக்கு முன்னர் ஏற்பட்ட மிதிவெடி விபத்துக்கள், உயிரிழப்புகள், அங்கவீனர்களின் தொகையுடன் ஒப்பிடும்போது, தற்போது பாதிப்புற்றோர் தொகை இல்லை என்று கூறுமளவிற்கு முன்னேற்றம் காணப்படுகிறது. அலட்சியப் போக்கில் இடம்பெறும் ஒருசில விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ வொரு வன்னிவாழ் தமிழ் மகனும் தனது சொந்தப் பாதங்களுடன் இன்று நடமாடுவதைக் கண்ணுற்று 'மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவின் ஒவ வொரு அங்கத்தவனும் தனக்குள் புளகாங் கிதம் அடைகின்றான்'
இருப்பினும் இவ அங்கத்தவன் ஒவ வொருவனும் இம்மக்களுக்காக நாளாந்தம் சேற்றிலும், தண்ணீரிலும், முட்புதர்களிலும், பற்
றைகளிலும், கல்போன்ற கரடான நிலத்திலும், சுடுமணலிலும், வெய்யில், மழை எனப்பாராது கயிற்றின் மேல் நடப்பது போன்றும் கரணம் தப்பினால் நிச்சயம் மரணம் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் வார்த்தைகளில் விபரிக்க முடியாத மனிதாபிமானப் பணியை ஆற்றி வருகின்றான். இம்மனிதாபிமானப் பணியில் தன்னலம் கருதாது செயற்பட்ட லிங்கம் என்ற தொண்டன் தனது உயிரையே அர்ப்பணித்ததையும் இன்னொருவர் தனது காலினை இழந்ததையும் நாம் மறக்கக்கூடாது. அந்த அனுபவத்துடன் மேலதிக அனாவசிய இழப்புக்களைத் தவிர்த்து இன்னமும் உரத்துடனும் உத்வேகத்துடனும் தனது பணியைச் செய்துவந்தாலும் அவர்கள் உள்ளங்களில் உள்ள ஏக்கங்களும், மனக்கு முறல்களும் ஏராளம் ஏராளம்.
மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவின் ஒவ வொரு அங்கத்தவனதும் குடும்பச்சுமையும் ஏழ்மையும் சொல்லிலடங்காது. இந்நிலையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தம்மாலியன்ற அளவில், தமது நிர்வாகச் செலவுகளை மட்டுப்படுத்தி இப்பணியிலீடுபடும் 150 தொண்டர்களுக்குமான மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கிவருவதை இவ விடத்தில் சுட்டிக்காட்டுவது நன்றாகும். உலகில் ஏனைய உள்நாட்டு யுத்தங்கள் நடைபெறும் இடங்களில் சர்வதேச நிறுவனங்களின் மிதிவெடியகற்றும் தொண்டர்களுக்கு பணியின்போது, நவீன தொழில்நுட்ப மிதிவெடி கண்டறி சாதனங்கள் (ஆநுவுயுடு னுநுவுநுஊவுநுசுளு), பாதுகாப்பு அங்கிகள், முகமூடிகள், காலணிகள் என்பனவும் அதியுயர் மாதாந்தக் கொடுப்பனவும் இதர காப்புறுதி வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில், இவ வசதிகளை நினைத்துப்பார்க்க முடியாத நிலையில் தற்போது வன்னி மண்ணில் கண்ணிவெடியகற்றும் பிரிவினர் மக்களுக்காற்றும் பணி எந்தவகையிலும் குறைந்ததோ சளைத்ததோ அல்ல. இம்மாபெரும் மனிதநேயப்பணி சர்வதேச நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படாமல் இருப்பினும் மக்கள் மனங்களால் மறக்கப்படமுடியாததாகவுள்ளது.
இவர்களின் மனிதாபிமானப்பணியை பலமுறை பார்த்து, மெச்சி, வியந்ததுடன், தமிழீழத்தில் மிதிவெடியகற்றும் தொண்டர்களை, அவர்களால் அகற்றப்பட்ட 65,000 மிதிவெடிகளுடன் சேர்த்து புகைப்படம் எடுத்துச்சென்ற சர்வதேச நிறுவன அங்கத்தவர்கள் வெறும் வார்த்தைகளுடன் நின்றுவிட்டமை வேதனை தரும் விடயமாகும். இவர்களின் பாராமுகத் தன்மை மிதிவெடியகற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. உள்நாட்டு யுத்தம் நடைபெறும் பலநாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒரு மிதிவெடியை அகற்றுவதற்கான நிர்வாகச் செலவாகப் பயன்படுத்தும் உலக நிறுவனங்கள், வசதிகள் ஏதுமின்றி பொதுநல நோக்கு ஒன்றுக்காக செயற்பட்டு வரும் இத்தொண்டர்களின் சேவையை பொறுத்துக்கொள்ள முடியாம லும் இருக்கலாம். ஏன் சிறீலங்காவின் ஆட்சியின் கீழுள்ள யாழ். மண்ணில்கூட 'சிம்பாவே' கண்ணிவெடியகற்றும் பிரிவினர் எதை விதைத்துச் சென்றனர் என்பதை உலகே அறியும்.
வன்னி மண் அங்கீகரிக்கப்படாத அரசின் கீழ் இயங்குவதாகக் காரணம் காட்டி உதவமறுக்கும் சர்வதேச நிறுவனங்களால் இம் மனித நேயப்பணியை அங்கீகரிக்க முடியவில்லை. யாழ். மண்ணில் அதிநவீன மிதிவெடியகற்றும் கருவிகளுடன் சகலவசதிகளுடனும் செய்துமுடிக்கப்பட்ட பணியையும், மரபுவழி 'முள்' உபகரணங்களுடன் எதுவித நிர்வாகச் செலவுமின்றி இங்கு நிகழும் பணியையும் ஒப்பிட்டாவது முடிவெடுப்பார்களா? மனிதாபிமானப்பணி எங்கு நடைபெறுவது என்பது முக்கியமல்ல. எப்படி நடக்கிறது என்பதே முக்கியம். இதனை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் புரிந்துகொண்டு செயற்பட்டால் 'மனிதநேயம்' என்பதற்கான சரியான வரைவிலக்கணம் பாதுகாக்கப்படும்.
தமிழீழ மண்ணில் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்த கண்ணிவெடியகற்றும் பிரிவினர் இன்றுவரை 82,000 மிதிவெடிகளையும், 47,144 பீரங்கி எறிகணைகளையும் 86 டாங்கி எறிகணைகளையும் 34 சு.ஊ.டு எறிகணைகளையும் 2119 சு.P.பு எறிகணைகளையும் 1633 துப்பாக்கி எறிகணைகளையும் 8,388 கைக்குண்டுகளையும் 86 வாகன மிதிவெடிகளையும் 360 யம்மிங் மிதிவெடிகளையும் 929 கிளைமோர் கண்ணிவெடிகளையும் 211 இடறு கண்ணிவெடிகளையும் 118 டோப்பிடோக்களையும் 781 அலேட் கண்ணிவெடிகளையும் 11 விமானக் குண்டுகளையும் 43 உயர்சக்தி வெடிமருந்து அடைக்கப்பட்ட கொள்கலன்களையும் 27 துப்பாக்கிகளையும் அகற்றியுள்ளனர் என்பதும் அவற்றை எந்தவொரு தரப்பினரும் மீளப்பயன்படுத்த முடியாதவாறு பொதுமக்கள் முன்னிலையில் அழித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வன்னியில் செயற்பட்டுவரும் இந்த மனித நேயத் தொண்டர்கள் 37,600,000 சதுர மீற்றர்கள் பிரதேசத்தை, எந்த நவீன கருவிகளும் இல்லாமலே கண்ணிவெடியகற்றி மக்கள் வாழிடங்களாக்கியுள்ளனர். இதேவேளை சகல நவீன தொழில்நுட்பங்களுடனும் செயற்பட்டுவரும் யாழ். மண்ணில் 230,000 சதுர மீற்றர்கள் பிரதேசம் மட்டுமே இதுவரை கண்ணிவெடியகற்றப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் 998 மிதிவெடிகளையும் 384 வெடிபொருட்களையுமே அவர்கள் கண்டுபிடித்து செயலிழக்க வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1999இல், உலக மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணிக்காக, ஐ.நா.வின் கண்ணிவெடி செயற்பாட்டுப்பிரிவால் 16 உலக நாடுகளுக்கென 568 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டது. ஆயினும் வன்னிமண்ணுக்காக ஒரு சதம் கூட எந்த அமைப்புக்களும் ஒதுக்காத நிலையில் ஒரு மிதிவெடி அகற்றுவதற்காக 185 இலங்கை ரூபாக்கள் செலவில் இப்பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழக முன்னெடுத்து வருவது ஆச்சரியப்படத்தக்க விடயமாகும்.
வன்னி மண்ணில் நடைபெறும் இம்மனிதநேயப்பணி உலகின் கவனத்தை ஈர்க்காவிட்டாலும் அதனால் அப்பாவித் தமிழ் மக்கள் அடையும் நன்மைகள் மிக உச்சமானவை. மிதிவெடி அகற்றும் பணி ஆரம்பமாவதற்கு முன்னர் ஏற்பட்ட இழப்புக்கள் பலமடங்காக தற்போது குறைந்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டிநிற்கின்றன. 1999 காலப்பகுதியில் வருடத்திற்கு 14 ஆக இருந்த இறப்புக்கள் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் 05 ஆகவும், மிதிவெடியால் ஏற்படும் காலிழப்புக்கள் 77 இலிருந்து 20 ஆகவும், கண் இழப்புக்கள் 13 இலிருந்து 04 ஆகவும், கை அல்லது கால்களில் விரல்களை இழந்தவர்கள் தொகை 17 இலிருந்து 05 ஆகவும் கடுமையான உடற்காயத்திற்கு உள்ளானோர் எண்ணிக்கை 77 இலிருந்து 32 ஆகவும் குறைவடைந்துள்ளது. இவ வாறாக ஒரு வருடத்தில் மொத்த விபத்துக்கள் 198 ஆக இருந்த நிலை மாறி தற்போது வெறும் 66ஆக வீழ்ச்சி அடைந்துள்ள தென்றால் அந்த வெற்றிக்கான பாராட்டுக்கள் இந்தத் தொண்டர்களையே சாரவேண்டும்.
இவ வாறாக, களமுனையில் படுதோல்வியைச் சந்திக்கும் சிறீலங்கா அரசபடைகள் தங்கள் பலவீனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அப்பாவித் தமிழ் மக்களை குறிவைத்து வேண்டுமென்றே வெடிக்கக்கூடிய நிலையில் விட்டுச் செல்லும் இந்த வெடிபொருட்களின் அபாயத்தில் இருந்து தமிழ்மண் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருப்பதற்கு முற்றுமுழுதாக துணைநிற்கும் இந்தத் தொண்டர்களின் செயற்பாடு என்றும் நினைவு கொள்ளப்பட வேண்டியது. எதிரியின் நிழல் ஆக்கிரமிப்பாக தொடர்ந்தும் தமிழ் மண்ணில் அச்சமூட்டிக் கொண்டிருக்கும் இந்த வெடிபொருட்கள் இனிமேலும் தமிழீழ மக்களைப் பலியெடுப்பதை இந்த மனித நேயப்பணியாளர்கள் அனுமதிக்கப் போவதில்லை. உலகம் கண்டும் காணாத நிலையில் முகம் திருப்பிக் கொண்டாலும் தமது மக்களுக்காக இவர்கள் தங்கள் உயிர்களையும் அங்கங்களையும் அர்ப்பணித்து தம்பணியைத் தொடரவே போகின்றார்கள்.
Reply
ஞானரதன்
கப்டன் வாணன்ஃமைக்கலின் தந்தையால் எழுதப்பட்ட படைப்பு இது
மயிற் பறவை பற்றிய நினைவுகள் திடீரென அவனது மனவான்பரப்பில் தூசுப்படலம் விலகி வழிவிட, மீண்டும் தோற்றம்கொண்டது. ஏழெட்டு வயதிலோ அல்லது அதற்கும் முன்னரோ என அவனுக்கு ஞாபகம் வரவில்லை. மனவெளியெங்கும் நிரம்பி நீல நிறமாக அதிலிருந்து வெடித்துச் சிதறும் பல வர்ண ஒளிச்சிதறல்கள் வளைந்து நெளிந்து நர்த்தனங்கள் போலவும், ஓவியங்கள் போலவும், மாறி மாறி, புதுப்புது உருவெடுத்து, அவனது மன இருக்கையில் கொலுவீற்றிருந்தன. அது ஒரு காலம்.
அதன் பின்பு இந்த மயில் பறவை பற்றிய ஒளி அதிர்வுகள் காலத்துக்குக் காலம் இடைவெளி கூடுதலாகவும் குறைவாகவும் மனத்தின் ஞாபக மேடையில் தோன்றி மறைந்தன.
பின்னர் பல காலமாக மயில் பற்றிய நினைவுகள் அறுந்து போயின. மீண்டும் அவனது ஐம்பத்தைந்தாவது வயதில் அந்தப் பதிவுகள் உயிர்ப்பெய்தின. நீண்ட கால இடைவெளி ஒருசில நொடிப் பொழுதுகளாக மட்டுமே குறுகிவிட்டது போலிருந்தது. அப்பொழுது அவனுக்கு அளவெட்டிக் கிராமத்தின் வாசனை மணத்தது.
-
கருப்புலம் சிறுவர் பாடசாலையில் அவன் அப்பொழுது மூன்றாம் வகுப்பு. கதிரவேலுச் சட்டம்பியார் பாடி, நடித்துக் கதை சொல்வார். ஒருநாள் ஏறுமயிலேறி விளையாடும் முருகனைப் பற்றியும் சொன்னார்.
அப்போதுதான் மயிலைப் பற்றியும் சொல்லியிருக்க வேண்டும்.
நல்லூர்த் தீர்த்தத் திருவிழாவில் அவனுக்குப் பாட்டி காட்டியது வெள்ளி மயில். அந்த மயிலை உயிராகவும் பார்க்கமுடியும் எனப்பாட்டி சொல்லியிருந்தார்.
அந்த மயிலைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை அன்றிலிருந்தே துளிர்விடத்தொடங்கியது.
அவனின் தந்தை காலை தவறாமல் கை நிறைந்த செவ வரத்தம் புூக்களோடு வந்து சூரியனைப் பார்த்துக் கும்பிட்ட பின் மாடக்குழியில் வைத்திருக்கும் முருகன் படத்துக்கும் புூக்கள் சாத்துவார். தந்தையைத் தொடர்ந்து அவனும் விபுூதி புூசிவிட்டு முருகன் படத்தைப் பார்த்தவாறு நிற்பான்.
முருகனின் கையொன்று மயிலின் கழுத்தை அணைத்தவாறு அவனுக்கு அழகின் சூட்சுமத்தைத் தொற்ற வைக்கும்.
நீல நிறம் பளிச்சிடும் அந்த நீள் வளைவுக் கழுத்தும், தோகையில் வரிசையாய் பரவி விட்ட கண்பொட்டுக்களும் அவனைப் பிரபஞ்ச வெளிக்கு அழைப்பது போலிருக்கும்.
மனமே முருகனின் மயில் வாகனம் என்பதெல்லாம் அவன் பிற்காலத்தில் உணர்ந்துகொண்டவை.
அவனின் நண்பன் விக்கி ஒரு நாள் மயிலிறகு ஒன்றை வகுப்புக்குக் கொண்டுவந்தான். பாடப் புத்தகத்தின் நடுவே வைத்துவிட்டால் 'படிப்பு வரும்' என்றும் மயிலிறகு குட்டி போடும் என்றெல்லாம் கூறினான். மயிலிறகு கண்களில் பட்டால் 'குருடனாய்ப் போய்விடுவாய்' என்றும் எச்சரிக்கை செய்தான். இவற்றையெல்லாம் அவனின் மனம் காவ முற்படவில்லை. ஆனால், மயிலிறகுக் கண்ணில் அவன் கண்ட நிறங்கள் புூமிக்குரியதாகப் படவில்லை அவனுக்கு. நீண்ட நேரமாக அதையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் விருப்பைக் கண்ட விக்கி மயிலிறகை அவனிடம் நீட்டினான். மயிலிறகின் கண்பொட்டில் தெரிந்த நிறங்கள் தனித்தும் ஒன்று சேர்ந்தும், யுகம் யுகமாகப் பரிச்சயமுள்ளதாக விரிந்தன. அவன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்தது விக்கிக்குப் புரியவில்லை. அதைத் தனதாக்கிக் கொள்ள ஆசைப்படும் சிறுபிள்ளைத்தனம் அவனைவிட்டு விலகியே இருந்தது.
அவனின் தந்தை நகைத்தொழிலில் நகாசு வேலைக்காரர். வேலையில் மூழ்கிவிட்டால் உலகை மறந்துவிடுவார். பற்றவைத்த சிகரட் மேசையில் வெறுமனே புகைந்து கொண்டிருந்தது. தங்கப் பதக்கத்தில் கற்கள் பதித்துக்கொண்டிருந்தார். அந்த பதக்கத்தின் இரு பக்கவாட்டிலும் மயில்கள்தான். தோகையில் கற்கள் ஒளித்தெறிப்படைந்து நீலமாகவும் நெருப்பாகவும் மின்னல் வெட்டுகின்றன. மேசையில் இருந்த மெழுகுக்கட்டையை எடுத்துப் புரட்டிப் பார்க்கிறார். அப்போதுதான் மீண்டும் சிகரட்டை எடுத்து வாயில் வைத்து இழுத்துவிட்டு சிகரட் கட்டையைத் தூர வீசிவிட்டு மீண்டும் பார்த்து ரசிக்கிறார். அவனும் முகத்தை உள்ளே செலுத்தப்பார்க் கிறான். மயிலின் மிடுக்கான தோற்றம் அவனைத் தங்கரதத்தில பயணிக்க வைத்தது. தன்னைப்போலவே தந்தைக்கும் மயிலின் பாதிப்பு இருப்பதாகவே அவன் எண்ணினான். இவ வாறு மயில் பற்றிய பதிவுகள் அவனில் இருந்து தோற்றம் பெற்ற, உன்னத அவனின் மூன்று காலங்களுக்கும் நிரவின. அகஉலகின் பெரும் பகுதியின் விரிவுக்கு மயிலே மூலப்பொருளாயிற்று.
-
சரோஜினி மாமியின் கல்யாணம் அவனுக்கு நினைவிருந்தது. ஆனால் மனதில் இருப்புக்கொண்டது வெளிக்கூடத்தில் விரித்திருந்த மயில் படங்கள் போட்டிருந்த கம்பளங்களில் படுத்திருந்தவாறு அந்த மயில்களைக் கம்பளங்களின் மென்மையோடு தடவிப்பார்த்ததுமட்டுமே. அந்த ஞாபகம் முதுமை பெறாமல் இருந்தது.
-
செல்வச்சந்நிதி தீர்த்தத்திருவிழாவுக்குப் புறப்படக் காவடிகள் தயாராகிக் கொண்டிருந்தன. செடில் குத்தி, உருஆடியபோது காவடிகள் தோள்களில் ஏறின. ஆட்டமும், களையும், வியர்வையும் உடுக்கு, பறை, தவில் வாத்தியங்களுடன் கலந்தன. அவனும் சில நண்பர்களுடன் காவடி பார்க்க வந்திருந்தான். மயில் இறகுகள் ஈவிரக்கமற்று மிகக் கொடுமையாகக் காவடிகளுக்குள் செருகிவிடப் பட்டிருந்ததைக் கண்டபோது மயிலின் துன்பம் அவனை வாட்டியது. மயில்களின் அழகு எவ வாறு திடீரெனச் சூனியமாகிப் போயிருக்கும். அவனுக்கு அன்றைய காவடி ஆட்டம் சலனமற்ற நீரில் தோன்றிய அழகான நிழற் காட்சியொன்று குழம்பிப் போய்விட்டது போலிருந்தது.
என்றாலும் மனம் என்னும் வெண்திரையில் மயிலின் நிறங்கள் கொண்டு வரையப்பட்டிருந்த பல்லாயிரம் ஓவியங்கள், உயிரணுக்கள் போல, ஒன்று சேர்ந்து பிரிந்து, பெருகி, அழிந்து மீண்டும் பலவாக உயிர்த்து நிரந்தரமான ஓவியப் பின்னல்களாகவே குடிகொண்டிருந்தன அவனின் ஆழ்மன விரிப்பில்.
-
அவனும் நண்பன் விக்கியும் கும்பழாவழைப் பிள்ளையார் கோவிலின் வடக்கு வீதியோரம் உள்ள மகிழமரத்தில் ஏறிப் பழங்கள் தேடிக்கொண்டிருந்தபோது மயிலின் குரல்கேட்டது. 'கோயில் மயில் வந்திட்டுதடா விக்கி, இறங்கிவா பாப்பம்' என அவன் நண்பனைத் துரிதப்படுத்தினான். மயிலின் வடிவத்தைபை; பற்றி அவனின் மனதில் பதித்திருந்த பெறுமானத்தைவிட, நேரில் பார்த்தபோது கூடுதலாக இருப்பது போலவும் மாறாகக் குறைவாக இருப்பது போலவும் மனப்பதிவோடு முரண்பட்டுக்கொண்டன. மயிலின் கழுத்து அசைந்தபோது கண்ட துடிப்பு, கருநீல முத்துக்கள் வரிசையிட்ட கொண்டை, வெள்ளைச் சாயமிட்ட இமைகள், நெஞ்சுப் பகுதியின் நீலத்திரட்சி, நீல வரிகள், கபில நிற இறக்கைகள் இடைக்கிடை சில்லிட்டு உதறும் போது எழும் வண்டோசை, கூடுதலான சுமையோடு சமநிலை தழும்பும் தோகை, அவதானமாகக் கால்கள் அடியெடுத்து வைக்கும் நடையின் பவ வியம், அவனுக்குத் தரிசனமாயின அன்று. சிறிது நேரத்தில் மயில் பறந்து கோவிலின் மணிக்கோபுரத்தில் சற்றுத் தரித்துவிட்டு வானில் பறந்து மறைந்தது. இது மயிலின் தரிசனம்.
-
மயிலின் அசுர வடிவத்தின் தரிசனம் அவனுக்கு எத்தனையோ வருடங்களின் பின் கிடைத்தது. நீண்ட தோகையுடன் வானில் பறந்து சென்ற மயிலின் தோற்றம் அப்போது அழிந்து போயிற்று.
வடமராட்சியெங்கும் பறந்து, கொலை வெறிக்குரலில் வானம் அதிர்ந்திட நெருப்புச் சன்னங்களைப் பொழிந்து தள்ளிய அந்த உலங்குவானூர்தியைக் கண்டபோது அழகும், மென்மையும், இனிமையும் பொருந்திய மயில் வாழ்ந்த இடத்தை எவ வாறு மனிதனின் கொலை மயில் ஆக்கிரமித்தது! இனிய நினைவுகளோடு அவனும் அவனுடைய உறவுகளும் அவனுக்குரிய அடையாளங்களோடு வாழக்கூடாது என்பதில் குறிவைத்தது அது. பச்சை, ஊதா நிற உருமறைப்புத் தீந்தை தீட்டப்பட்டு, மயிலின் சாயலில், அவனின் வானத்தை வெடிமருந்துப்புகை கொண்டு நிறைத்தது அது. இரத்த நாளங்கள் வெடி அதிர்வுகளில் துடிதுடித்தன. செவிப்பறையில் சாவுக்கு அழைக்கின்ற மிகையொலி அது. வானில் தோன்றாத நேரங்களிலும் கேட்டது. வானூர்திகள், குண்டு வீச்சு விமானங்களின் ஒலிகளை நுண்ணியதாகக் கேட்பதில் காதுகள் தேர்ச்சிபெற்றன. வானத்திலிருந்து குண்டுகளாய் அவலம் தொடர்ந்தது. ஊர்கள், மனிதர்கள், உடமைகள் எல்லாமே சிதறிப்போயின. எத்தனை நூற்றாண்டு காலம் பொத்திப் பொத்திப் பாதுகாத்துவந்த அவனின் ஆத்ம நிலப்பரப்பில் இரத்தம் கசிந்தது.
மயில் எண்ணெய், மயில் இறைச்சி, மயில் இறகுகள் விற்பனைக்காக வந்தன.
மந்திகை வைத்தியசாலைக்கு இறந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் ஏற்றிச்சென்ற வாகனத்தையும் துரத்தியது. நெல்லியடி புனித இருதய கல்லூரியில், அதற்கருகே அமைந்துள்ள தேவாலயத்தில், கூட்டைச் சுற்றிய தேனீக்களாக மக்கள் வாழ்விடங்களை விட்டுத் தஞ்சம் புகுந்திருந்தனர். தேவாலய வளவில் கஞ்சிக் கிடாரத்தைச் சுற்றி புூவரசம் இலைகளைக் கோலிவைத்தவாறு நீளும் கரங்கள். சின்னஞ்சிறிய கரங்களும்தான். கஞ்சியின் சூட்டைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பதறும் பிஞ்சு விரல்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு நேரக் கஞ்சி. அப்பொழுதும் அந்த மக்கள் கூட்டத்தின் மீது குண்டுமாரி பொழிந்தது. பஞ்சசீலத்திலிருந்து உருவமைக்கப்பட்ட அந்த உலங்குவானூர்தி கஞ்சிக் கிடாரத்திலும் இரத்தம் தெறித்தது, அவலக்குரல்கள் தேவாலயமெங்கும் நிறைந்து கர்த்தரின் சிலுவையில் ஓய்ந்தன.
கிளாலிக் கடற்கரையில் வன்னிக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று குவிந்த உரப்பை மனிதர்களில் அவனும் ஒருவன். அம்மனிதர்களின் வாழ்வின் விழுமியங்கள் யாவும் அந்த உரப்பைகளில் அடக்கமாகி, ஒரு நாகரிகமடைந்த மனித இனத்தின் வழித்தோன்றல்கள் அவமான முத்திரை குத்தப்பட்டுப் புற்றரைகளிலும், பாதைநெடுகிலும், சேறும் சகதியோடும் கிளாலிக் கடற்கரையில் காத்திருப்பதைக் கண்ட உலங்குவானூர்திகள் திருப்தியடைவதற்குப் பதிலாக மேலும் கோபம் கொண்டன. சிங்கத்தின் வாய் அப்பிரதேசமெங்கும் அனல் தெறிக்கும் சன்னங்களை வீசின.
படகுப் பாதையெங்கும் மக்கள் பதுங்கிடம் தெரியாமல் நீரிலும் நிலத்திலும் புரண்டு கதறி அழுத குரலில் கிளாலி நீரேரி அதிர்ந்து கலங்கியது. உலங்குவானூர்திகள் சுற்றிச் சுற்றித் தமது மேலாதிக்கத்தைத் தமிழனின் வான் பரப்பில் நிலை நிறுத்திக் கொண்டிருந்தன. நீரில் கரும்புகைகள் ஆங்காங்கே அடையாளமிட்டன 'இது உனக்குரிய இடமல்ல' என்று.
அவன் கிளாலிக் கடல் தாண்டி வன்னி மண்ணில் கால்பதித்தபோது, அக உலகச் சிறையிருப்புக்கே விரும்பாத அவனுக்கு இந்தப் புறச்சிறையின் பாதிப்பு, எதை முதலில் உடைக்கவேண்டுமென நன்கு உணர்த்தியது. அப்பொழுதுதான் அவனின் மயில் உயிர்க்கும்.
-
திருமலைக் கடல் அன்று நீல மயிலாக மாறியிருந்தது. ஏனிப்படி உருமாற்றம் செய்துகொண்டது? அந்தக் கடல் மயிலாகப் பறந்து செல்லப்போகிறதா?
அவன் மகனும் இன்னும் சில போராளிகளும், அலைகள் நீல வரிகள் இட்டுச்செல்ல, இரைந்து கிழித்தோடும் படகினில் பணியொன்று முடித்துத் திரும்புகையில் அந்தக் கொலை மயில் காத்திருந்தது. அவனின் மகனுடையதும், இன்னொரு போராளியினுடையதும் உயிர்களை குடித்து எக்காளமிட்டது.
அதன் பின்பு ஒரு நாள் 'நீல வரிபோட்ட' மகனுடைய படம் வீட்டுக்கு வந்தபோது நீலக்கடலும், மயிலின் நிறங்களும் மறைந்து போயின.
ஒருநாள் மட்டும் கனவாய் வந்துபோயின.
விடுபட முடியா வேதனைகள் இதயத்தின் குருதிக்குழாய்களில் குண்டூசிகள் பாய்ச்சின. அவனின் நேசிப்புக்குரிய மயில் நீல நிறம், இரத்தச் சிவப்பாக மாறி மனவெளிப் பாலைவனமொன்றின் கங்கையின் நடுவே நிறுத்தியது.
கால நகர்வின் சுடுமணலில் அவன் கால்கள் பதித்துச் சென்றுகொண்டிருந்தபோது தான் அந்தச் செய்தி அவனை வந்தடைந்தது. தமிழனின் கடற்பரப்பில் போராளிகளின் தாக்குதலில் உலங்குவானூர்தி வெடித்துச் சிதறியது என்று. அப்பொழுதுதான் அவனின் மனவெளி நீலம் பாரிக்கத் தொடங்கியது. இனி நீலமாக மாற்றம் கண்டு, மயிலின் நினைவாகவோ, அன்றி மகனின் நீல வரியின் நினைவாகவோ, அவனின் ஆத்மாவின் வேண்டுகைக்குரிய நீலமயில், அவனைச் சுற்றி விரியும் பிரபஞ்சத்தில், தோற்றம் கொள்ளும்.
Reply
மாற்றமின்றித் தொடரும்
இராணுவக் கெடுபிடிகள்

தமிழர் மத்தியில் சந்தேகத்தை விதைக்கின்றன

புதிய அரசும், அதன் படைகளும் தமிழ்மக்களின் விடயத்தில் கடைப்பிடித்து வரும் கொள்கைகளில் எந்தவிதமான மாற்றங்களையும் இதுவரை அவதானிக்க முடியவில்லை. முன்பு சந்திரிகா அரசு தமிழ் மக்கள் மீது கடைப்பிடித்து வந்த அதே நடைமுறைகளும் கொள்கைகளும், கெடுபிடிகளும் மாற்றம் இன்றித் தொடர்கின்றன.
-அனிக்கிலஸ்
சிறீலங்காவில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ள போதிலும் தமிழ்ப் பிரதேசங்கள் மீதான கெடுபிடிகளோ தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகளோ இன்னமும் குறைந்தபாடில்லை. முன்னர் இருந்து வந்த அதே நடைமுறைகள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. இது தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது.
சிறீலங்காவில் ஐக்கிய தேசிய முன்னணி புதிதாக அரசு அமைத்து ஒரு மாத காலத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர தமிழ் மக்கள் தொடர்பாக ஆட்சியாளர்கள் மனங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரியவில்லை. புதிய அரசும், அதன் படைகளும் தமிழ் மக்களின் விடயத்தில் கடைப்பிடித்துவரும் கொள்கைகளில் எந்தவிதமான மாற்றங்களையும் இதுவரை அவதானிக்க முடியவில்லை. முன்பு சந்திரிகா அரசு தமிழ் மக்கள் மீது கடைப்பிடித்து வந்த அதே நடைமுறைகளும் கொள்கைகளும், கெடுபிடிகளும் மாற்றம் இன்றித் தொடர்கின்ற. தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமான வடக்குக் - கிழக்கில் சிறீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் சிறீலங்காப் படையினரும் அவர்களுக்குத் துணை நிற்கும் தமிழ்க் குழுக்களும் தமது வழமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்கின்றனர். அதேபோன்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீதான கெடுபிடிகளும் தடைகளும் முன்னர் இருந்தன போன்றே உள்ளன.
குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் என்று பார்க்கும் இடத்து யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் படையினரின் சோதனைக் கெடுபிடிகள் முன்பு காணப்பட்டது போன்றே உள்ளது. என்பதைவிட மேலும் இறுக்கம் பெற்றுள்ளன. சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக பொலிசார் நிறுத்தப்பட்டிருந்த சோதனை நிலையங்களில் இன்று நவீன ஆயுதங்கள் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவற்றைவிட சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் விசாரணை என்ற பெயரில் கைதுகளும் மற்றும் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு படையினர் நேரடியாகப் படுகொலைச் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர தடைகளும் இறுக்கமடைந்துள்ளன. இரவில் நடமாடுவதற்கு தடைகள் உள்ளன. சில பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இவ வாறு தடுக்கப்பட்டுள்ளனர். அத்தோடு தொழில் hPதியான தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான தடைகள் அப்படியே உள்ளன. இவற்றை தளர்த்துவதற்கு படைத்தரப்புக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகமொத்தத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எந்தவிதமான வழிவகைகளும் ஏற்படுத்தப்படவில்லை. அதாவது இப்பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் முன்பு அனுபவித்த அதே இன்னல்களையும் துன்பங்களையும் தொடர்ந்து அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்குமான நிலைமைகள் உள்ளன. பொருளாதாரத் தடை மற்றும் கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்து வரும் மக்கள் மீதான அனுமதிக் கெடுபிடிகள், விசாரணைகள், கைதுகள், தடுத்து வைப்புக்கள் என்பன தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றன.
நல்லெண்ண அடிப்பைடயில் சமாதானச் சூழலொன்றை தோற்றுவித்துப் பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றைக் காணும் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு முதலாக ஒருதலைப்பட்சமான முறையில் ஒரு மாதகால யுத்தநிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது. இதற்கு சிறீலங்கா அரசும் தனது நல்லெண்ணத்தைக் காட்டும் வகையில் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவிக்கவில்லை. இருந்தபோதிலும் ஒரு மாதகால மோதல் தவிர்ப்பு நிலையொன்றை கடைப்பிடிப்பதாக மாத்திரம் அறிவிப்பு விடுத்திருந்தது. சமாதானத்தை உருவாக்கும் ஒரு நல்லெண்ண சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில் சிறீலங்கா அரசாங்கத் தரப்பு எடுத்த முதல் நடவடிக்கையான இந்த அறிவிப்பு கூட பெரிதளவான முன்னேற்றகரமானதாக இருக்கவில்லை. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த யுத்த நிறுத்தத்துக்கும் சிறீலங்கா அரசாங்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்த மோதல் தவிர்ப்பு நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒருதரப்பு முற்றாக மோதல்களை நிறுத்தி அமைதி பேணுவதாக அறிவித்து அதனை நல்ல முறையில் கடைப்பிடித்துவரும் நிலையில் மறுதரப்போ அதற்கு இசைவாக செயற்படாது மோதல்களைத் தவிர்ப்பதாக மாத்திரம் அறிவித்துள்ளது.
மேலும், சிறீலங்காப் படையினர் மோதல் தவிர்ப்புக் காலத்தில் தமது வழமையான செயற்பாடுகளில் ஈடுபடுவர் என்றும் அவர்கள் முகாம்களில் முடங்கி இருக்கமாட்டார்கள் தேடுதல்கள், சோதனைகள் நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறும் என்றும் சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சனத் கருணாரட்ன மோதல் தவிர்ப்பு நிலை அறிவிப்பின் பின்னான பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியிருந்தார். புலிகள் தமது நடவடிக்கைகளை முற்றுமுழுதாக நிறுத்தி சமாதானம் பேணும் நிலையில் சிறீலங்கா அரசும் அதன் படைகளினதும் இத்தகைய செயற்பாடுகள் ஏன்? இத்தகைய மோதல் தவிர்ப்புக் காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டமாதிரியாக படையினர் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். நாளாந்தம் படையினர் புரியும் கெடுபிடிகள் வெளிவந்த வண்ணமேயுள்ளன. இது படையினர் அதிகாரத்தை தமது கையில் எடுத்து செயற்படுகின்றனர் எனக் கூறமுடியாது. அதற்கான அங்கீகாரத்தை சிறீலங்கா அரசே வழங்கியுள்ளது என்றே கூறலாம்.
கொழும்பு போன்ற சிங்களப் பகுதிகளில் இன்று சோதனைக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. வீதித்தடைகளும் நீக்கப்பட்டு போக்குவரத்துக்களும் இலகுபடுத்தப்பட்டுள்ளன. இது ரணில் விக்கிரமசிங்க அரசு பதவியேற்ற கையோடு அவசர அவசரமாக செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். சிங்களப் பிரதேசங்களில் இவ வாறு உடனடியாக செயற்பட முடியுமென்றால் ஏன் தமிழ்ப் பிரதேசங்களில் செயற்படுத்த முடியாது? இத்தகைய செயற்பாடுகளை பார்க்கும்போது சிங்கள மக்களின் மத்தியில்தான் இயல்பு நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்று அரசு எண்ணுகின்றதுபோல் உள்ளது. உண்மையில் இரு தேசிய இனங்களுக்கு இடையில் பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதுவும் தமிழ் மக்கள் சிறீலங்கா ஆட்சியாளர்களால் மிகப் பெரியளவில் இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ வேளையில் இவற்றுக்கான தீர்வைக்காண முக்கியத்துவம் தருவதற்கு முற்படாது, சிங்களப் பிரதேசங்களில் இயல்புநிலை தோன்ற முக்கியத்துவம் அளிக்க முனைந்தமையும் இந்த விவகாரங்களை இனிவரும் நாட்களில் அரசு எவ வாறு கையாளப்போகின்றது என்ற சந்தேகத்தை பலமாக எழுப்புவதாகவும் உள்ளது.
இது அதாவது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு உண்மையில் நல்லெண்ண சூழலை ஏற்படுத்தவோ அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் முக்கியமான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்படுமா என்பது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. இந்தவகையில் முன்னைய ஆட்சியாளர்கள் போன்று தற்போதைய அரசும் செயற்பட முனைந்தால் சிறீலங்கா தேசமும் அரசும் அரசியல் பொருளாதார மற்றும் போரியல் hPதியில் மிகப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்பதே உண்மையாகும்
Reply
சனாதிபதி பாதுகாப்புப் பிரிவு

'சட்டபுூர்வமான' ஒரு வன்முறைக் கும்பல்

சிறீலங்காவின் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு பாதுகாப்பு வழங்கும் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப் போவதாக புதிய அரசாங்ம் அறிவித்திருக்கிறது. ஊடகவியலாளர் கொலை, அவர்கள் மீதான கொலை மிரட்டல்கள், அரசியல்வாதிகள் மீதான தாககுதல்கள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அப்பிரிவினர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டு வந்துள்ள போதும் சனாதிபதி சந்திரிகாவின் ஏவலுக்கு ஏற்ப அவர்கள் நடந்து வந்தமையால் அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ள எவரும் துணியவில்லை.
சனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு சிறீலங்கா பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் 1700க்கு மேற்பட்ட ஆளணியைக் கொண்டதாக இப்பொழுது இருக்கிறது. சனாதிபதி முன்னாள் சனாதிபதிகள் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோருக்கு பதுகாப்பு வழங்குவது இவர்களது பணியாகும். பொலிஸ் திணைக்களத்தினால் இவர்கள் பொலிசாரிலிருந்து தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்குத் தனியான இடத்தில் விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் தெரிந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட தொகையினருக்கு அமெரிக்காவிலும், பிரான்சிலும் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது.
பொலிஸ் திணைக்களத்தால் இவர்கள் நியமிக்கப்பட வேண்டியவர்களாயிருந்த போதும் உண்மையில் இவர்கள் பொலிஸ் திணைக்களத்தின் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டு இணைக்கப்பட்டவர்கள் அல்ல என்றும் முக்கிய நபர்களின் சிபாரிசின் அடிப்படையில் இணைக்கப்பட்டவர்கள் என்றும் பாதுகாப்புத் தொடர்பான போதிய விளக்கமோ அனுபவமோ இல்லாத இவர்கள் இந்தப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டது 'ஒரு விபத்து' என்றும் அப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக, பொறுப்பதிகாரியாக பதவி வகிக்கும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால் கருணாரட்ண, முன்னாள் சனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரேமதாச உடுகம்பொலவின் தலைமையில் இயங்கிய விசேட நடவடிக்கைப் பிரிவில் கடமையாற்றியவர் (பிரேமதாச உடுகம்பொல பல சிங்கள இளைஞர்களின் படுகொலைகளுக்குக் காரணமானவர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது) பின்னர் டி. பி. விஜயதுங்கவின் பதிவிக்காலத்தில் பதவி உயர்வு பெற்றவர்.
சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மேல்மாகாணசபை முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டபோது, அவருக்கு பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக நிகால் கருணரட்ண செயலாற்றி வந்தார். இவர் இவ வாறு பதிவுகளைப் பெற்றதற்கு கசினோ எனப்படும் சூதாட்ட விடுதிகள் மூலம் பெயர் பெற்ற ஜோசப் பொன்சேகா என்பவரின் சிபாரிசே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவரது உதவியாளரான பத்தேகான சஞ்சீவ என்பவருக்கு பாதாள உலகத்துடன் தொடர்பு உண்டு எனக் கூறப்படுகிறது. சஞ்சீவவின் வீட்டில் பதுங்கியிருந்த நான்கு பாதாள உலகத்தவரைக் கைது செய்ய பொலிசார் முயன்றபோது அதனை சஞ்சீவவும், நிகால் கருணாரட்ணவும் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு உண்டு.
1999இல் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைத் தேர்தல் நடைபெற்றபோது முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் சகோதரரான கிளிபோட் ரத்வத்தவுக்கு ஆதரவாக சனாதிபதி பதுகாப்புப் பிரிவினர் சென்று எதிரணியினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்த வேளை, சனாதிபதிக்கு வேண்டியவரான கிளிபோட் ரத்வத்தவின் பாதுகாப்புக்காகவே தாம் அங்கு சென்றதாகவும் சனாதிபதியை மாத்திரமல்ல, சனாதிபதிக்கு வேண்டியவர்களின் பாதுகாப்புக்கும் தாமே பொறுப்பு என்றும் நிகால் கருணாரட்ண தெரிவித்திருந்தார்.
சனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் மீது கொலைக்குற்றச்சாட்டுகள், கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள், தேர்தல் வன்முறைகள் என பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் 2000ம் ஆண்டு சனவரி மாதம் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் மீதும் சந்தேகம் உள்ளது. அவர் உட்பட பலரின் பெயர்கள் அடங்கிய கொலைப்பட்டியல் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரிடம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சனாதிபதியின் தொடர்புச் சாதனத்துறைச் செயலாளராகப் பதவி வகித்த நடிகர் சனத் குணத்திலக தொடர்பாகவும் அவரின் சனல்-9 எனப்படும் தொலைக்காட்சி அலைவரிசை விற்பனை ஊழல் தொடர்பகாவும், சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் தொடர்பாகவும் கட்டுரைகளை எழுதி வந்தவர் 'சட்டண' எனும் சிங்கள வாரப்பத்திரிகை ஆசிரியர் ரோகண குமார. இவர் 1999ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் கொலை செய்யப்பட்ட போது சனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தோர்களாலேயே இது நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் 'சண்டே லீடர்' ஆசிரியர் வசந்த விக்கிரமதுங்க, 'ராவய' ஆசிரியர் விக்டர் ஐவன் ஆகியோரைக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தவிடயம் குறித்து அப்போது மறுக்கப்பட்ட போதிலும்கூட அண்மையில் பொ. ஐ. மு. விலிருந்து வெளியேறி ஐ. தே. க.வில் இணைந்துள்ள அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க பத்திரிகை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், கலைஞர்கள் மீதான தாக்குதல்கள் என்பன சந்திரிகாவின் அனுசரணையுடனேயே நடத்தப்பட்டதாகவும் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பத்தேகான சஞ்சீவவினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், குற்றச் செயல்கள் போன்றவற்றை சனாதிபதி அறிந்திருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இவற்றைவிட 1999 ஜூலையில் ஐ. தே. க. நடத்திய அரசுக்கு எதிரான ஊர்வலத்தில் கரு ஜெயசூரிய, காமினி அத்துக்கொறள, அஸ்வர் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு சனாதிபதி பாதுகாப்புப் பிரிவே காரணமாக இருந்தது. இத்தாக்குதலின் போது தாக்குதல் நடத்தியவர்களால் ஊடகவியலாளர் ஒருவரிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட கைத்தொலைபேசி (செலு}லர்) பின்னர் சனாதிபதி பதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவரின் நண்பர் ஒருவரிடமிருந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.
கடந்த வருடம் நடைபெற்ற ஐ. தே. க.வின் பாதயாத்திரை மீதான தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல்களில் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரே சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 1999 நவம்பரில் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் காரியாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இருவாரங்களின் பின்னர் ஐ. தே. க. தலைமைக்காரியாலயமாகிய சிறீகோத்தாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல்களில் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரே ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனைவிட சனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தேர்தல்களின் போது வேட்பாளரை மிரட்டுவது முதல் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள வாக்குகளை இடுவது வரையான தேர்தல் மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதனைவிட கட்சிக்குள் ஏற்படும் உட்புூசல்களுக்கும் கூட சனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். விளையாட்டு வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கவை வரவேற்பது தொடர்பாக எழுந்த புூசலில் எஸ். பி. திசாநாயக்கவின் செயலாளர் இவர்களால் தாக்கப்பட்டிருப்பதை இதற்கு உதாரணமாக கொள்ளலாம்.
இவ வாறு சனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட பல்வேறு வன்முறைகளும் சனாதிபதியின் பாதுகாப்பு எனும் பெயரில் அவர்கள் நடத்திய கெடுபிடிகளும் சிறீலங்காவின் 'சட்டபுூர்வமான' ஒரு வன்முறைக் கும்பல் அது என்பதை வெளிப்படுத்தியதுடன் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஏவல் படையாக அவர்கள் செயற்பட்டுவந்தனர் என்பதையும் சிறீலங்கா ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் வெளிப்படுத்தியே வந்துள்ளனர்.
ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சியினர் என்போர் மீது இவர்கள் நடத்திய வன்முறைகள் தொடர்பாக புதிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டால் சிறீலங்காவில் நடைபெற்ற பெருமளவு வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் யார்? என்பது வெளிவரலாம். ஆனால், இந்த வன்முறைகளில் பெருமளவில் சம்பந்தப்பட்டவர் எனக் குற்றம் சாட்டப்பட்டவரும் பாதாள உலகத்தவருடன் தொடர்புடையவரும் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நிகால் கருணாரட்ணவின் உதவியாளருமான பத்தேகான சஞ்சீவ அண்மையில் நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் பலியாகிவிட்டமை இங்கு குறிப்பிடத் தக்கதோர் விடயமாகும். இந்தக் கொலைத் தாக்குதலுக்குக் காரணம் யார்? என்பதும் ஒரு கேள்வியாகும்.
கடந்த தேர்தலின்போது எஸ். பி. திசாநாயக்கவை கொல்ல முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயுதங்களுடன் கைதான சனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்கள் மீதான விசாரணை, இவர்கள் மீதான புதிய அரசின் நடவடிக்கைக்கு வித்திடலாம் எனத் தென்னிலங்கை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Reply
25வருடஆயுதப்போர்
தடங்கலும் தடையுடைப்பும்
-கு.கவியழகன்
இக்காலத்தில் தோன்றிய புதிய உலக ஒழுங்கு மாற்றத்தால் உலகில் அநேகமான தேசிய விடுதலைப் போராட்டங்கள் முடிவிற்கு வந்தன. அநேகம் முறியடிக்கப்பட்டோ, விலைபேசப்பட்டோ, கைவிடப்பட்டோ முடிவுற்றது. இதே பார்வையில் ஈழப்போராட்டமும் அதன் முடிவை எய்தும் நிலைக்கு வந்துவிட்டதாக உலகின் அரசியல் இராணுவ ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டனர். ஜே.வி.பி. கிளர்ச்சியை முறியடித்த வீராப்பிலிருந்த பிறேமதாசா அரசு, இத்தகைய சூழலில் புலிகளையும் வென்றுவிடப்போவதான மமதையில் இருந்தது. யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவதற்கான ஒரு நடவடிக்கை லெப். ஜெனரல் கொப்பேகடுவ தலைமையில் உருவானது.
ஈழப்போராட்டம் அமைதியான கடலில் ஓட்டிவரப்பட்ட படகல்ல. அது பல புயல்களையும், சூறாவளிகளையும், கொந்தளிப்புக்களையும் கடந்து, பிரபாகரனால் ஓட்டிவரப்பட்ட படகு. இப்போதெழுந்த பெரும் சவால்களைச் சந்திக்க குனியாத குணம்கொண்ட தலைவர் பிரபாகரன் வியுூகங்களை வகுத்தார்.
கிளாலி நீரேரிப்பாதையைத் திறந்து, யாழ்ப்பாணம், வன்னிக்கான போக்குவரத்துப் பாதை ஏற்படுத்தப்பட்டது. அரசபடை, நாகதேவன்துறையில் கடற்படைத் தளமமைத்து அதைத்தடுத்தது. எதிர்காலத்தைக் கணிப்பிடும் பார்வையுடன், 1991 இன் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட கடற்புலிகளை களத்திலிறக்கி கடற்படையை எதிர்கொள்ள வைத்தார் தலைவர் பிரபாகரன். கிளாலி நீரேரி கடற்புலிகளால் காவலிடப்பட்டது. யாழ்ப்பாண முற்றுகை தகர்ந்து பொடிப்பொடியானது. புதிய பயிற்சி, புதிய போர்த் தந்திரோபாயத்தைப் புகட்டி, பல அணிகளாக களத்தில் இறக்கி துல்லியமான வேவின் மூலம் நேர்த்தியான பயிற்சி மூலம், வேகத்தாக்குதல் மூலம், சிறு இலக்கைத் தெரிந்து பேரடியைக்கொடுத்து வெற்றிகொள்வது என்ற 'மின்னல் வேகத்தாக்குதல்' முறையை தலைவர் களத்தில் செயற்படுத்தினார். இப்போர்முறை பெற வேண்டிய அறுவடை, மிகச் சொற்பமான இழப்போடு குறைந்த வெடிபொருள் பயன்பாட்டோடு தேர்ந்தெடுத்த இலக்கின் முழு இராணுவத்தைக் கொல்வதும், ஆயுத வெடிபொருட்களைக் கைப்பற்றுவதும், இத்தகைய பல தாக்குதல்களின் திரட்சி மூலம் பேரிழப்பை இராணுவத்திற்கு ஏற்படுத்திவிடுவதுமாகும்.
இத்தகைய வெற்றிகரப் போர்த்திட்டத்தின் தாக்குதல் ஒன்றில், யாழ். குடாநாட்டு நடவடிக்கையை திட்டமிட்ட லெப். ஜெனரல் கொப்பேகடுவ உட்பட்ட ஒன்பது மேலதிகாரிகள் ஒரே தாக்குதலில் கொல்லப்பட்டனர். மேலும் இப்போர் நடவடிக்கையால் 1992 இல் 1400 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 1500 இராணுவத்தினர் ஏறத்தாழ ஊனமுற்றனர். பெருந்தொகையானோர் படையைவிட்டுத் தப்பியோடினர். அத்துடன் இராணுவத்தினரை பீதிக்குள் வைத்திருக்கவம் முடிந்தது. விடுதலைப் புலிகளின் வெடிபொருள் ஆயுதக் களஞ்சியங்கள் நிரப்பப்பட்டன. உறுதி தளராத மக்களின் மனோதிடம் பேணப்பட்டது. மக்கள் புதிய உற்பத்தி சக்திகளைத் தோற்றுவித்தனர். இத்தகைய உழைப்பினதும், வளர்ச்சியினதும் முடிவாக 1993 இல் 'தவளை' நடவடிக்கை மூலம் 2000 ம் வரையான இராணுவத்தினரைக் கொண்ட புூநகரித் தளத்தை புலிகள் வெற்றிகொண்டனர். இவை எல்லாமாக இணைந்து, நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்த போராட்டம் புதிய உத்வேகத்தோடு, புதிய பரிமாணத்தில் பாய்ச்சலாக முன்னேறியது. தவறான அரசியல், இராணுவ கணிப்புக்கள் தவிடுபொடியாகின. மக்கள் 'தவளை' நடவடிக்கைக்காக தலைவர் பிரபாகரனுக்கு வெற்றிக்கேடயங்கள் அனுப்பிவைத்தனர்.


அரசின் மூலோபாய மாற்றமும்,
யாழில் இருந்து புலிகளின் பின்வாங்கலும்
1994இல் பதவிக்குவந்த பொ.ஐ.மு அரசிற்கு தான் கைப்பற்றிய ஆட்சிப் பீடத்தை தக்கவைப்பதற்காக முப்படைகளிலும், ஏனைய நிர்வாகத்துறைகளிலும் 17 வருடமாக ஊறிப்போன ஐ.தே.க. விசுவாசிகளை மாற்றியமைப்பதற்கான அவசியம் ஏற்பட்டது. இதற்கு ஒரு யுத்தநிறுத்தத்திற்கான தேவை அவசியப்பட்டது. இதற்காக பேச்சு முயற்சியைப் பயன்படுத்தியதோடு, போரில் வெற்றியீட்டிக்காட்டுவதற்கான போர்முனைப்புக்கு ஆயத்தப்படுத்தும் அவகாசத்தையும் பெற்றுக்கொண்டது. இத்தகைய அரசின் உள்நோக்கத்தால் பேச்சு முயற்சி தொடர்ந்து முன்னேற முடியாமல் போயிற்று.
மூன்றாம்கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில் திருமலைத் துறைமுகத்துள் பாய்ந்த கடற்புலிகள் இரண்டு கப்பல்களை மூழ்கடித்தனர். அவ ரோ விமானங்களை சுட்டு வீழ்த்தினர். குறைந்த இழப்போடு மண்டைதீவு இராணுவ முகாமை வெற்றிகொண்டனர். இந்தப் போர்விஸ்வரூபம் சிங்களதேசத்தை வெருட்டியது. சந்திரிகா பிடித்த ஆட்சி தளம்பும் நிலைக்குள்ளானது. அதை நிலைப்படுத்த சந்திரிக்காவிற்கு ஒரு இராணுவ வெற்றி இன்றியமையாததாயிற்று.
யாழ். நகரைக் கைப்பற்ற 'லீப்போவேட்' (முன்னேறிப்பாய்தல்) நடவடிக்கையை அது மேற்கொண்டது. புலிகளின் 'புலிப்பாய்ச்சல்' எதிர்நடவடிக்கையால் படுதோல்வி அடைந்ததுடன், காங்கேசன்துறை துறைமுகத்தில் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுடன் புக்காரா தாக்குதல் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இது தென்னிலங்கை அரசியலில் சந்திரிகாவிற்கு மோசமான சூழலைத் தோற்றுவித்தது. நிச்சயப்படுத்தப்பட்ட இராணுவ வெற்றியே சந்திரிகாவின் ஆட்சியை தக்கவைக்கும் எனும் நிலை எழுந்தது. இதனால், கிழக்கில் புலிகளை முறியடித்து அதை பல்லினவாழ் பிரதேசமாக்குவதன் மூலம் கெரில்லாப் போரியலுக்கான சாகதங்களை சிதைத்து பின் வடக்கை நோக்கி பிரதான நகர்வைச் செய்வதெனும் ஐ.தே.க. வின் மூலோபாயத்திற்கு மாறாக முதலில் யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவது எனும் நிலைப்பாட்டை சந்திரிகா அரசு எடுக்கவேண்டியதாயிற்று. கிழக்கிலிருந்து இராணுவம் யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டது. மோட்டார், பீரங்கிச்சூட்டு வலுவை உயர்நிலையில் பிரயோகிப்பதற்கான ஆயுதக்கொள்வனவு நடந்தது. வெளிநாட்டு இராணுவ உதவிகளுடனும், ஆலோசனைகளுடனும் பெரும் ஆளணி, ஆயுத சக்திகளுடனும் 'ரிவிரச' தொடங்கப்பட்டது. புலிகள் யாழ். குடாநாட்டைவிட்டு வன்னி நோக்கி ஒரு தந்திரோபாயப் பின்வாங்கலைச் செய்யவேண்டியதாயிற்று, 5 இலட்சம் மக்கள் வன்னிக்குத் தப்பிவர, 3 இலட்சம் மக்கள் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி சிங்கள தேசத்தை பெரும் மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தன்னை நிலைப்படுத்திக்கொண்ட சந்திரிகா அரசு, புலிகளின் இத்தற்காலிகப் பின்னடைவை போராட்டத்தின் வீழ்ச்சியாகவும், புலிகள் மீதான தோற்கடிப்பாகவும் தீவிரமாகப் பிரச்சாரப்படுத்தியது. இதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்திவிட தீவிரமாக முனைந்தது. வெளியுலகமும் இதனை நம்பத்தலைப்பட்டது. இதனால் புலிகளிற்கு அரசியல், பொருளாதார, இராணுவ hPதியான பெரும் நெருக்கடிகள் எழுந்தன.
தலைவர் பிரபாகரன் தனது நேரடி நெறிப்படுத்தலில் 'ஓயாத அலைகள்-1' ஐ நிகழ்த்தி அரசின் திட்டத்தையும், எழுந்த நெருக்கடியையும் தவிடுபொடியாக்கினார். பெருங்கடலோடு அமைந்த முல்லைத்தீவுத் தளத்தை வெற்றிகொண்டு, 1200 இராணுவத்தைக் கொன்று, ஆட்லறிகள் உட்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றிய புலிகள் தமது குன்றாத போர்ப்பரிமாணத்தை வெளிக்காட்டினர். தமிழீழத்தின் ஒரு நகரம் விடுவிக்கப்பட்டது. எல்லையற்ற ஒரு கடற்பரப்பைத் திறந்து புலிகள் தம்வசப்படுத்தினர். இது புலிகள் பற்றிய புதிய மதிப்பீட்டைத் தந்ததுடன், சந்திரிகாவின் யாழ்ப்பாண வெற்றியை கேள்விக்குட்படுத்தியது. நம்பிக்கையுடனான புதிய வேகம் தளத்திலும், புலத்திலும் பிறந்தது.


வன்னி மீதான இறுதிவெற்றிக்கு
இராணுவ, பொருளாதார, அரசியல் வியுூகம்
'ஓயாத அலைகள் -1' இன்பின் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதையை திறப்பது, அரசிற்கு யாழ்ப்பாணம் மீதான வெற்றியை தக்கவைப்பதற்கான நிர்ப்பந்தமாகியது. இதனால் சத்ஜெய நடவடிக்கையும், பின் 'ஜயசிக்குறு' வும் சிங்களப் படைகளால் தொடக்கப்பட்டன. வன்னியின் மார்பைப்பிளந்து முன்னேறுவதால் விடுதலைப் புலிகளின் தளப்பிரதேசத்தைக் கூறுபோடவும், அதை மேலும்பல கூறுகளாக்கவும் இராணுவம் திட்டமிட்டது. இதன் மூலம் புலிகளின் இராணுவ பலத்தை நம்பகரமாகச் சிதைக்க முடியுமென அது எண்ணியது.








புலிகள் வன்னியின் அடர்ந்த காட்டினுள் எதிரியின் உண்மை வலுவை வரவழைத்து தமது பிரதேசத்தில் போரை மையங்கொள்ள வைத்து, எதிரியின் போர்வலுமீது தீர்மானகரமான சிதைவை ஏற்படுத்தத்தொடங்கினர். வெற்றிக்கான முடிவுத்தேதி அறிவித்துத் தொடங்கப்பட்ட அந்த 'ஜயசிக்குறு' வெற்றி உறுதி, பின்வாங்கமுடியாத அரசியல் சிக்கலை அரசிற்கு உருவாக்கியது. இலங்கையின் போர்வலு புலிகளின் காலடியில் பரப்பப்பட்டது. தலைவர் பிரபாகரன் வகுத்த போர்வியுூகத்தால் ஒரு வருடத்திற்கு மேலாய் அது தன் படைகளை இழந்து, இறுதியில் 'ஓயாத அலைகள்-2' என்ற கிளிநொச்சி நகர் விடுவிப்புச் சமர் மூலம் அர்த்தமற்ற படையெடுப்பாக ஆகிப்போனது. ஜயசிக்குறு கைவிடப்பட்டது.
ஜீரணிக்கமுடியாத இத்தோல்வியின் பின், இராணுவ வல்லுநர்களின் ஆலோசனையுடன் புதிய மூலோபாயத்தை வகுத்தது சிங்களப் படைத்தலைமை. இதன்படி, எழுபத்தைந்து வீதம் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களைக்கொண்ட வன்னியில், நிவாரணவெட்டை அரசு அமுல்ப்படுத்தியது. பொருளாதார, மருத்துவ தடைகளை அது மேலும் இறுக்கியது. வான், எறிகணைத் தாக்குதலை பரவலாக மக்கள் மீது நடத்தியது. மக்களை வாழ்வியல் நெருக்கடிக்குள் தள்ளியது. அதேநேரம், தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள்வரும் மக்களுக்கு அது நன்கொடைத் தொகைகளை வழங்கியது. நிவாரணத்தை வழங்கியது, இழப்பீட்டுத் தொகைகளை அள்ளி விசுக்கியது. மக்களை வன்னியிலிருந்து வெளியேற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் இழுப்பது என்ற தந்திரோபாயத்தை மக்கள் மீது சுமத்திய அவலத்தால் வெற்றிகொள்ளத் தொடங்கியது. போருக்கான, புலிகளின் ஆளணி நிரப்பீட்டை உடைப்பதே முக்கிய குறிக்கோளாகவிருந்த இந்தச் சதியிலிருந்து மக்களால் தப்பிக்க முடியவில்லை. சுமத்தப்பட்ட அவலம் அவர்களை நிர்ப்பந்தித்தது.
அதேநேரம், வன்னியைப் பிளந்து முன்னேறுவதற்குப் பதிலாக வன்னியின் நாலாபுறமும் படை நடவடிக்கையில் இராணுவம் குதித்தது. இதனால் வன்னியைச் சுற்றி காவலரண் அமைத்து தற்காப்புச் சமரில் ஈடுபடுவதற்கான ஆளணியை புலிகளால் பெற்றுக்கொள்ளவியலாது என்ற அதன் கணிப்பு பல பிரதேசங்களை அதன் கைகளில் வீழ்த்தியுமிருந்தது. இந்தப் புதிய சிக்கல் புலிகளை தற்காப்புச் சமரில் சிக்கவைப்பதுடன், வலிந்த தாக்குதலொன்றைச் செய்வதற்கான வாய்ப்பையும் அறவே ஒழித்தது. இறுதி வெற்றிபற்றி இராணுவம் நம்பிக்கைகொள்ளத் தொடங்கியது. இயற்கைக் குழப்பத்தினால் வன்னியின் நெல் உற்பத்தி இந்த ஆண்டு (1999) மோசமான பாதிப்பை உருவாக்கியது. மோசமான வாழ்வியல் நெருக்கடிக்குள் மக்கள் தள்ளப்பட்டனர். புலிகளோ இராணுவ, அரசியல், பொருளாதார hPதியாக பாரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டியதாயிற்று.
போராட்டம் சந்தித்த இந்தப் புதிய சவாலுக்கு, தனது தலைமைத்துவ வல்லமையின் மூலம் புதிய வியுூகம் வகுத்தார் தலைவர் பிரபாகரன். மக்களுக்கு ஆயுதப் பயிற்சியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்க உத்தரவிட்டார். மக்கள்படைக் கட்டுமானங்களை புலிகள் உருவாக்கினர். எல்லைப்படை வீரர்கள் வன்னியைச் சுற்றி எல்லையிட்டு தற்காத்தனர். புலிகள்சேனை பிரபாகரனின் பெரும் சமருக்கான தாக்குதல் பயிற்சியை பெறத்தொடங்கியது. தாக்குதல் எல்லைப்படை உதவிப் படையாகப் பயிற்சி பெற்றது. வன்னியின் எதிர்பாராத எழுச்சி, ஆளணி நிரப்பீட்டை அதிகரித்தது. தலைவர் பிரபாகரன்

'ஓயாத அலைகள்-3' என்ற பெரும் போர்வியுூகத்திற்குள் எதிரிப்படைகளை அடக்கினார்.
பரந்த பிரதேசத்தில் பலமுனைகளால் பல அணிகளை நகர்த்தி ஒருங்கிணைந்த ஒரு தாக்குதல் செயற்திட்டத்தில் தீர்மானகரமான ஒரு சமரைத் தொடக்கி எதிரிப்படைகளை 'டிவிசன்' களாக தோற்கடித்தனர் புலிகள். எதிரியின் முன்னணிப் படை சிதைவுற்றது. உலகின் புருவங்களை உயர்த்திய பெரும் போர் நடவடிக்கையை பிரபாகரன் நேரடியாக நெறிப்படுத்தினார். வன்னியில் நிலைகொண்ட எதிரி தோற்கடிக்கப்பட்டதுடன் ஆனையிறவு என்ற பலப்பாPட்சையைத் தீர்மானிக்கும் தளத்தின் மீது போரைத் தொடக்கி வெற்றி கொண்டனர் புலிகள். யாழ்ப்பாணத்தின் நுழைவாயில்கள் புலிகளின் கைகளில் வீழ்ந்தன. இராணுவ சமநிலையை புலிகளுக்கு சாதகமாக திசைதிருப்பியது 'ஓயாத அலைகள்-3' அது, புலிகளுக்கான நிர்ணயகரமான அரசியல் பலத்தைக் கொடுத்தது. விடுதலைப் போராட்டத்தின் இந்தப் புதிய பரிணாமம், இறுதி வெற்றிநோக்கிய புலிகளின் பயணத்தையும், அதற்கான புலிகளின் பலத்தையும் தாக்கமாகப் பறைசாற்றியது.
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடங்கப்பட்டு தொடரப்பட்ட இந்தக் கால்நூற்றாண்டில் தமிழரின் விடுதலைக்கெதிராக எழுந்த அனைத்து பலங்களையும் அது வெற்றி கொண்டிருக்கிறது. அனைத்து மூலோபாயங்களையும் தோற்கடித்திருக்கிறது. அனைத்து சதிமுயற்சிகளையும் அது முறியடித்திருக்கிறது. அரசியல் இராஜதந்திர வியுூகங்களை அது உடைத்தெறிந்திருக்கிறது. உள்@ர் ஆயுதத் தயாரிப்புக்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று அடைந்துள்ள வளர்ச்சிவரை தோற்கடிக்கப்பட வியலாத சக்தியாக தன்னை நிலைநாட்டியிருக்கிறது.
எமது சொந்தப் பலத்தின் மூலம் அடையப்பெற்ற இந்தப் போர்வலிமை சிங்கள அரசிற்கு தாங்கவியலாத அரசியல் பொருளாதார இராணுவ நெருக்கடியை இன்று ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் அலட்சியம் செய்யவியலாத அரசியற் பலத்தை சர்வதேச அரசியல் அரங்கில் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழருக் கிழைத்த மானுட அநீதிக்கெதிராக எழுந்த இப்போராட்டம் மனித ஆற்றலாலும், மனித தியாகத்தாலும் வளர்த்தெடுக்கப்பட்டது போல் இறுதி வெற்றியையும் அவ்வாறே நிகழ்த்தியாகும்.
(முற்றும்) ளு
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)