08-29-2003, 03:15 AM
கோவில்களில் ஆடு, மாடு, கோழிகளை பலியிட தடை
தமிழகத்தில் உள்ள கோவில்களிலும், கோவில்களுக்கு அருகாமையிலும் தெய்வத்திற்குப் பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள், மாடுகள், கோழிகளை கொல்லக் கூடாது என்றும், மீறி செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், டிஐஜிக்கள் ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கோவில்கள் மற்றும் கோவில்களைச் சுற்றிலும் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றை பலியிடக் கூடாது என்று தமிழ்நாடு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1950 மற்றும் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த செயல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.
இனிமேல் கோவில்களில் தெய்வத்திற்கு பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள் மற்றும் பறவைகளை படுகொலை செய்யக் கூடாது.
அதுபோன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
சமீபத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதை திமுக எதிர்த்தது. அதே போல பசுவதைத் தடுப்புச் சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என மதிமுகவும் இன்று அறிவித்துவிட்டது.
எந்த விலங்கையும் கொல்லக் கூடாது என்ற சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே ஆதரிப்போம், பசுவை மட்டும் வதை செய்வதைத் தடுக்கும் சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட சட்டம் கொண்டு வந்தால், உண்மையிலேயே திமுக ஆதரிக்குமா என்று பா.ஜ.கவும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு பக்கம் இந்த மோதல் நடந்து கொண்டுள்ள நிலையில் தான் கோவில்களில் பலியிடும் செயல்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளார்.
வழக்கமாக பெரிய கோவில்கள் தவிர்த்துஇதற்கு இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
http://www.thatstamil.com/news/2003/08/28/temple.html

Truth 'll prevail

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->