Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வில்லிசை - கலை
#21
பலருடைய மனங்களை தம்மைத்தாமே ஆய்வு செய்யுமாறு சொல்லாமல் சொல்லும் பாங்குடன் வில்லிசைக்கும் இராஐன் குழுவினரது கைங்கரியம் பாராட்டுதலுக்குரியதே.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#22
இளைஞனின் விமர்சனத்தைப் பார்க்கும் போது
இதற்காகவாவது TTN தொலைக்காட்சி பார்ப்பதற்கு வழி தேட வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.

மணிதாசன் பாராட்டுக்கள்.
தொடருங்கள்.
Nadpudan
Chandravathanaa
Reply
#23
[quote=Chandravathanaa]இளைஞனின் விமர்சனத்தைப் பார்க்கும் போது
இதற்காகவாவது TTN தொலைக்காட்சி பார்ப்பதற்கு வழி தேட வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.

மணிதாசன் பாராட்டுக்கள்.
தொடருங்கள்.


என்னிடம் இருந்தும் பார்க்கமுடியாமலுள்ளது.
Reply
#24
என்னிடம் இல்லை.........இலவசம் வந்தால் பார்க்கலாம்

சுரதா/suratha Wrote:[quote=Chandravathanaa]இளைஞனின் விமர்சனத்தைப் பார்க்கும் போது
இதற்காகவாவது TTN தொலைக்காட்சி பார்ப்பதற்கு வழி தேட வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.

மணிதாசன் பாராட்டுக்கள்.
தொடருங்கள்.


என்னிடம் இருந்தும் பார்க்கமுடியாமலுள்ளது.
[b] ?
Reply
#25
நாச்சிமார்கோயிலடி இராஜன் வில்லிசைக் குழுவினரின் வில்லுப்பாட்டுகளை ரி.ரி.என் ஊடாக கண்டு மகிழும் நெகிழும் குழம்பும் கோபிக்கும் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
முகமறிந்தவனென்றோஇ முகமறியாதவனென்றோ நம்மூர் கலைஞனென்றோ ஆதரவு தரவேண்டும் என்ற எந்த நிர்ப்பதமுமில்லை. எனது வில்லிசை பற்றிய உங்கள் விமர்சனங்களை முன் வையுங்கள்.அவை..வில்லிசைக்லையையும் என்னையும் செழுமைப் படுத்தும்.
இந்தக் களத்தில் நான் படித்த இராஜன் முருகவேல் சாந்திஇ சந்திரவதனாஇ நளாயினி ஆகியோருடன் கவிஞர் சரீஷ் சுதன்ராஜ் பிறேமன் யோகநாதன் ;ஆகியோரின் கதைகளுடன் எனது கதைகளுமாக இதுவரை 19 கதைகள் வில்லிசையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு நானும் எனது தமிழாசான் குமரனும் கவிஞர்கள் சரீஷ் மட்டுவில் ஞானகுமாரன் சுதன்ராஜ் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளோம்.இதுவரை 7 கதைகள் ஒளிபரப்பாகியுள்ளன. வில்லிசையாக தொடர்ந்து வரும நிகழ்வுகளை ஞாயிறு மாலை 5மணிக்கும் மறு ஒளிபரப்பை வியாழன் காலை 10.30 க்கும் காணலாம்.t

-
Reply
#26
நன்றி.. இதுவரை வந்தன யாவும் கொப்பியில் பதிந்துவிட்டேன்.. பார்த்துவிடு்டு வருகிறேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#27
[quote]சுரதா/suratha[/color]

[b]<span style='font-size:30pt;line-height:100%'>???</span>
Nadpudan
Chandravathanaa
Reply
#28
சோழியான் அண்ணா கொப்பியில் பதிந்து வையுங்கள்...அத்தோடு பிறகு சந்தர்ப்பம் கிடைத்தால் DVD யாவும் மாத்தி தாங்கோவன்.... நாங்கள் கண்ணியில் போட்டுப் பாக்கலாம்....எங்களுக்கு உங்கள் வில்லுப்பாட்டை காணத்தான் கிடக்கவில்லையே....!
Cry Confusedhock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
வீசிடி வசதிதான் இருக்க.. உடனேயே மாத்தலாம்.. தேவையெனில் தொடர்புகொள்ளுங்கள்
.
Reply
#30
இன்று ஞாயிறு மாலை 5மணிக்கு எழுத்தாளர் இராஜன் முருகவேல் அவர்கள் எழுதிய யாழ்களத்திலுள்ள பெயர் ஒன்று வேண்டும் சிறுகதை விட்டில்புூச்சியாகி வில்லுப்பாட்டாக ரி.ரி.என்னில் ஒளிபரப்பாகவுள்ளது..பாருங்கள் , கேளுங்கள் உங்கள் விமர்சனங்களை இந்தப்பக்கத்திலும்... ரி.ரி.என் நிலையத்திற்கும் அனுப்புங்கள்..

-
Reply
#31
இன்று மாலை 5 மணிக்கும் வியாழன் காலை 10.30க்கும் சந்திர வதனா செல்வகுமாரன் யாழ்களத்தில் எழுதிய சிறுகதை வில்லுப்பாட்டாக ஒளிபரப்பாகிறது..

-
Reply
#32
மணிதாசன்

தகவலுக்கு நன்றி.
என்னிடம் இன்னும் TTN வசதி இல்லை.
அதனால் அதைப் பார்க்க முடியவில்லை.
Nadpudan
Chandravathanaa
Reply
#33
கடந்தவாரம் வில்லிசை பார்த்தேன்(பிறந்தநாள் புூப்புனித விழாக்களில்லாமையால் பார்க்ககூடியதாகவிருந்தது)
சந்திரவதனாவின் சிறுகதை.சந்திரவதனாவின் சிறுகதையில் ஒரு யதார்த்த பேச்சோட்டம் இருக்கும்.அது இதிலுமிருந்தது.எனவே வில்லுப்பாட்டுக்கு அதை நன்றாகவே பொருத்தி செய்துள்ளீர்கள்.

முக்கியமாக விலஇலுப்பாட்டில் நான் கவனித்த இதுவரை சொல்ல நினைத்து
மறந்த விடயம்
இசையும் இசைக்கோர்ப்பும் பாடல் வரிகளும் அற்புதமாகவே கதையை மெருகூட்டுகின்றது.யாரது????

நேற்று ஒரு கட்டுரை படித்தேன்
பண்டைய யாழ் கருவியிலிருந்து வந்ததுதான் வில்லிசையென எழுதியிருந்தார்கள்
புலத்தில் அந்த கலாச்சாரத்தை தொடர்கிறீர்கள் பாராட்டுக்கள்.

ஆமா போடுபவர்கள் பேசும்போது இருவரும் ஒ-ரே வசனத்தை ஒரே நேரம் பேச முற்படுகிறார்கள்.அதை சற்று கவனித்தால் நல்லது.
Reply
#34
யாழ்.. முடிவுவரை பார்த்து இறுதியில் வரும் டைட்டிலை பார்த்தால் விபரம் தெரியுமே? பொறுமை.. பொறுமை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#35
அது இருந்திருந்தால் ஐயா இண்டைக்கு சிலோனிலை ராசா...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#36
[quote]yarl[/color]
நல்லவேளை
Reply
#37
நீண்ட இடைவெளிகளின் பின் மீண்டும் ஒருதரம் வில்லிசை ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சின்ன வயதில் எங்கே சின்னமணி அவர்களின் வில்லிசை நடை பெற்றாலும் அங்கெல்லாம் எனது அப்பாவுடன் சென்று அவைகளைப் பார்த்து, கேட்டு ரசிப்பேன்.
புலம்பெயர்ந்த பின்னான பல இழப்புகளில் இப்படியான பாரம்பரிய கலை நிகழ்வுகளை கண்டு ரசிக்க முடியாத இழப்பும் பெரிய இழப்புத்தான்.

சில வருடங்களின் முன் (10, 12 வருடங்கள் இருக்கும்) யேர்மனியில் நடை பெற்ற ஒரு கலை நிகழ்வில் நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்களின் வில்லிசையைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அது மனதுக்குச் சந்தோசத்தைத் தந்திருந்தாலும், அதை முழுமையாக ரசிக்க முடியாத படி அன்றைய கலை நிகழ்ச்சி தொடங்கிய நேரத்திலிருந்து, மண்டபத்தின் உள்ளேயான ஒலிபெருக்கியின் அதிஉச்ச ஒலி, ரசனைக்கும் அப்பாலான தலையிடியைத்தான் தந்திருந்தது. இது இன்னும் எமது கலை நிகழ்வுகளில் சீர் செய்யப் படாத ஒரு பாரிய குறைபாடு.

இப்படியான எந்தத் தலையிடியும் இல்லாமல் பார்க்கக் கூடிய வகையில் கடந்தவாரம் TTN இல் ஒளிபரப்பான நாச்சிமார் கோவிலடி இராஜன் அவர்களின் வில்லிசையை ஒரு அன்பர் ஒளிப்பதிவு செய்து எனக்கு அனுப்பி வைத்தார். பார்க்கும் போது சந்தோசமாகத்தான் இருந்தது.

கதையின் மூலம் எனது என்பதால் கதை பற்றிய கருத்துக்கள் எதையும் என்னால் தர முடியவில்லை. ஆனால் அதை வில்லிசை ஆக்கித் தந்த நாச்சிமார் கோவிலடி இராஜன் அவர்களைப் பாராட்டாதிருக்க முடியவில்லை.
கதைக்குப் பொருத்தமாக பாடல்களை எழுதி அவற்றிற்குச் சரியான முறையில் மெட்டமைத்து, கதையில் எந்தவிதமான தொய்வும் ஏற்படாமல் மிகவும் அருமையாகச் செய்திருந்தார்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்ன வென்றால் ஒரு மேடையில் நாம் பார்க்கும் வில்லிசையைப் போலவே அவரது முழு பாவமும் அமைந்திருந்தது. முக அசைவுகள், கை பாசைகள், குரல் வளம், எல்லாவற்றிற்கும் மேலாக அதனோடு மிக இயல்பாக ஒன்றி நின்று கதையைப் பாட்டுடன் நகர்த்திய விதம்.. எல்லாமே மிகவும் நன்றாக இருந்தன. நிறைந்த அனுபவமும், சீரான பயிற்சியும், இயல்பாக அவரோடு ஒன்றிய வில்லிசைக்கான திறனையும் அவரிடம் தாராளமாகக் காண முடிந்தது. [/color]

உண்மையைச் சொல்லப் போனால் அவரோடு மேடையில் பக்கப் பாட்டுப் பாடியவர்களுக்கும் அவருக்கும் இடையே இத்துறையில் பெரிய இடைவெளி இருந்தது போலவே எனக்குத் தோன்றியது.
[b]புலம்பெயர்மண்ணில் இத்துறையில் இவ்வளவு அனுபவம் உள்ள ஒருவர் இருப்பது பெரு மகிழ்ச்சியே.

நாச்சிமார் கோவிலடி இராஜன் அவர்களுக்கு மனதார்ந்த பாராட்டுக்கள்.

சந்திரவதனா
யேர்மனி
7.9.03
Nadpudan
Chandravathanaa
Reply
#38
அதுசரி வில்லுப்பாட்டைத்தான் பாக்கமுடியல்ல விமர்சனத்தைப்பாத்தாவது வில்லுப்பாட்டைப்பற்றி அறிவம் எண்டு வந்தா விமர்சனங்கள் வில்லுப்பாட்டின் தலைப்பை சொல்லாமலெல்லே போகுது......?! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
இந்த விமர்சனத்துக்கு உரிய கதை எங்கே தவறு..சென்ற வாரம் ஒளிபரப்பாகியது இராஜன் முருகவேல் அவர்கள் எழுதிய சாகாவரம்.இது வரும் வியாழன் காலை 10.30க்கு மறு ஒளிபரப்பாகுமாம்...இம்மாதம் 14ம்திகதி ஞாயிறு மாலை 5 மணிக்கு வருவது சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் பாதைஎங்கே?

-
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)