10-26-2003, 09:54 AM
Ampalathar Wrote:மதித்தாத்தாஅம்பலத்தார்.. நீங்கள் சொல்லுவியள்தானே.. முடிவுவரைக்கும் சொல்லுவியள் தெரியும்.. உது உங்களின்ரையில்லையெண்டதும் தெரியும்.. அதுதான் அனுபவிக்கிறம்.. இன்னும் அனுபவிக்கப்போறம்.. இருந்து பாருங்கோ.. கோயிலுக்கை பூந்ததிலையிருந்து தொடங்கினது.. கடைசியிலை அங்கைதான் முடியும்போலை..
இன்றைய தேதிக்குக் குட்டக் குட்டக் குனியுறவன் முட்டாள்.
ஒருகன்னத்திலை அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டினால் அசடு.
பாவபுண்ணியமெல்லாம் செத்துப் பலகாலமாச்சு.
வல்லவன் வாழ்வான் என்றதுதான் இன்றைய உலகநீதி.
பழைய கதையளைச் சொல்லிச்சொல்லி பிள்ளைகளைப் பத்தாம் பசலிகளா வளர்காமல் உலகின் நெழிவுசுழிவுகளையும் தெரியப்படுத்தி பாலைவனத்திலை கிள்ளிப்போட்டாலும் துளிர்க்கும் கள்ளிச்செடிபோல எந்த இடத்திலும் நாம் நாமாக விசுவரூபம் எடுக்க அவர்களுக்கு பாடம் சொல்லுங்கோ.
பரம்பரை பரம்பரையா பணிந்து அவன் பெரியவன் இவன் பெரியவன் வம்பெதுக்கு என்று எவனைக் கண்டாலும் தலையிலை கிடக்கிற துண்டைக் கழட்டி கமக்கட்டிலை வைக்கிற தாழ்வு மனப்பான்மையைத் து}க்கி மூட்டைகட்டி ஆத்திலை குளத்திலை போடுங்கோ. தமிழன் தலை நிமிர்வான். உலகம் எங்களைப் பார்த்து வியக்கும். பணமும் பலமும் சேர்ந்தால் மிகுதி எல்லாம் தானே வரும். பழசுகள் பாரம்பரியங்கள் என்று சொல்லிக் கொள்ளுறதுகளைத் து}க்கிப்போட்டிட்டுவரக் கொஞ்சம் யோசிக்கும் அது தெரிஞ்சவிசயம்தானே.
ஏற்கெனவே அடுத்தவன் பெட்டையைத் தூக்கினவன்தான் பெண்விடுதலை பற்றி பிரசங்கம் செய்யிறான்.. மில்லியன்கணக்கிலை துரத்தினவன்தான்.. இனம் வளர்க்கிறதா சொல்லுறான்.. இருந்ததை புடுங்கியெடுத்தவன்தான் கட்டியெழுப்பிறதா சொல்லுறான்.. உள்ளதை இல்லாமலாக்கினவன்தான் சுதந்திரம் வாங்கிட்டதா கதைக்கிறான்.. நீங்கள் விதிவிலக்காகேலுமே.. சொல்லுங்கோ தேவையான அளவு சொல்லுங்கோ உங்கடை பிள்ளையளுக்கு.. வாசிக்கிற பிள்ளையள்.. பள்ளிக்கூடத்திலை படிப்பிச்சபடி கடைப்பிடிக்கட்டும்.. இல்லை நீங்கள் சொல்லுறதுதான் அங்கை படிப்பிக்கிறதெண்டால்.. ஆளை விடுங்கோ.. நீங்களாச்சு உங்கடை பள்ளிக்கூடமாச்சு..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

