Posts: 5
Threads: 4
Joined: Nov 2003
Reputation:
0
<b>என் காதல்</b>
<b>படைப்பு: தாமரை (பிரான்ஸ்)
----------------------------------</b>
<img src='http://www.yarl.com/forum/files/love.jpg' border='0' alt='user posted image'>
அன்பே!
நீ என்னை சோதிக்கும் போதுதான்
என் காதலின் ஆழம் புரிந்தது
பெண் மனது ஆழம் என்பார்கள்
ஆழமான காதலை
பெண்கள் அடக்கி வைத்திருப்பதாலோ?
உனது மூச்சுக் காற்றை
நான் உணர வேண்டும்
அதற்கு அனுமதி அளிப்பாயா?
உன்னை அடைய முதலே
உன் உறவுகளை
நேசிக்கத் தொடங்கி விட்டேன்!
உன் வீட்டு முற்றத்து ரோஜாக்களைக் கூட
சூடிப் பார்த்து விட்டேன்!
என் கனவில்!
உன்னோடு சேர்ந்தால்
நிஜத்தில் வாழ்வேன்
இல்லையேல்,
உன் நினைவில் வாழ்வேன்!
Posts: 219
Threads: 0
Joined: May 2003
Reputation:
0
கவிதை பாடிய கவிக்குயிலுக்கு நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்
றஜி சுவிற்சலாந்து
[scroll:a876f185ec] <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/scroll:a876f185ec]
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
பாராட்டுக்கள் தாமரை.. யதார்த்தமான உணர்வின் வெளிப்பாடு. தேடல்கள் தொடரட்டும்.
.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
நினைவில் வாழாமல் நிஜத்தில் வாழ வாழ்த்திக்கொண்டு
அன்பின் கவிக்கு எனது வாழ்த்துக்கள்
தருக இன்னும் புதிய புதிய கவிதைகளை
காதலோடு தருக
தேசத்தின் காதல்
உறவின் காதல்
உரிமைக்காதல்
உண்மைக்காதல்
எல்லாமே காதல்தான்
இன்னமும் நிறைய எதிர்பார்ப்புடன்
[b] ?
Posts: 9
Threads: 1
Joined: Oct 2003
Reputation:
0
காதல் என்றாலே கனிமொழி தான். தாமரையின் வரவு காதல் கவிதைகளிற்கு மகுடம் சு10ட்டட்டும்.
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
காதல் கவிதைகள் எல்லாருக்கும் வந்து அமைந்து விடுவதில்லை. அது ஒரு வரப்பிரசாத ரசனை. பாராட்டுக்கள். காதல் உணர்வை உள்வாங்கி கவிதை ஆக்குவது ஒரு கலைத்தோற்றம்.அந்த கலைத்தோற்றத்துள் தாமரையின் கவிதைகள் நிச்சயம் தடம் பதிக்கும்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
ஆதித்யன்.. அந்த தாமரையின் ஆக்கங்களையும் முடிந்தால் இணையுங்கள்.
.
Posts: 5
Threads: 4
Joined: Nov 2003
Reputation:
0
எனது கவிதைக்கு இவ்வளவு கருத்துகள் வருமென்று நான் நினைக்கவேயில்லை. இத்தனைபேர் வந்து என்னைப் பாராட்டி எனது கவிதைகளுக்கு விமர்சனம் எழுதியிருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது.
எனது மனமார்ந்த நன்றிகளை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். என்னை மென்மேலும் ஊக்குவித்து வளப்படுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்
..........................................................................................................................................
பிகு: கணணியில் தமிழில் எழுதுவது எனக்கு கடினமான விடயம். அதனால் எனது பதில்கள் தாமதமாக வரலாம். அதற்காய்ப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம். எழுத எழுத தமிழ் கணனியில் இலகுவாகும்.
.