Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திரு பாலசிங்கம் 'விடுதலை'
#21
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/11/balaBook_1.jpg' border='0' alt='user posted image'>
<b>ra........</b>
004 1677366
Reply
#22
இரண்டு தசாப்த காலமாக நடைபெற்றுவரும் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் அறியப்படாத சில அத்தியாயங்களை வெளிப்படுத்தும் மற்றுமொரு நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான கலாநிதி அன்டன் பாலசிங்கம் எழுதியுள்ள ~விடுதலை| என்ற இந்த நூல் மாவீரர் தினம் கொண்டாடப்படும் நிலையில் ஐரோப்பிய நாடுகளிலும், வட கிழக்குப் பகுதிகளிலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. போராட்டத்தை உள்ளேயிருந்து பார்த்த அனுபவத்துடன், அறியப்படாத பல விடயங்களை உள்ளடக்கியதாகவும் இந்த நூல் அமைந்திருக்கின்றது. இதனைவிட மாநுட விடுதலைக்கான தத்துவக் கருத்துக்களையும் தனது இலகுவான அதே சமயம் ஆழமான எழுத்துக்கள் மூலம் இந்நுலில் முன்வைக்கின்றார் பாலசிங்கம்.

மிகவும் எழிய தமிழில் சுலபமாகப் புரியக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நு}ல் 256 பக்கங்களுடன் பதினொரு அத்தியாயங்களாக வெளிவந்திருக்கின்றது. உண்மையில் இது பதினொரு அத்தியாயங்களாக இருந்தாலும் இதனை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது, விடுதலைப் போரில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளவர் என்ற முறையில் அதனுடன் தொடர்புபட்ட பல விடயங்களையும் ஒரு பகுதியில் தரும் கலாநிதி பாலசிங்கம், தன்னுடைய தத்துவ ஆராய்ச்சிகளின் பலனாகப் பெற்றுக்கொண்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான தகவல்களையும் மற்றொரு பகுதியாக இதில் தருகின்றார். இந்தத் தத்தவ ஆராய்ச்சிகளும் புரட்சிகரமான சிந்தனைகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்ற.து.



முதலாவது இரண்டு அத்தியாயங்களிலும், விடுதலைப் போராட்டத்துடன் நேரடியாகத் தொடர்புபட்ட தகவல்களைக் கொண்டவையாகவுள்ளன. ~எம்.ஜி.ஆரும், புலிகளும்| என்ற முதலாவது அத்தியாயத்தில், போராட்டத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் வழங்கியுள்ள பங்களிப்புக்கள் தொடர்பாக விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. விடுதலைப் போராட்டம் எழுச்சிகொண்ட 1980 களில் எம். ஜி. ஆர். எந்தவித பிரதிபலன்களையும், அல்லது விளைவுகளையும் எதிர்பார்க்காது விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய உதவிகள், ஆதரவு தொடர்பான பல்வேறு தகவல்களையும் நேரில் பார்த்தறிந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலில் விபரித்திருக்கின்றார் கலாநிதி பாலசிங்கம்.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல தகவல்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் எம். ஜி. ஆர். எந்தளவுக்குப் பற்றுறுதி கொண்டிருந்தார் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. அத்துடன் தலைவர் பிரபாகரனுடன் தமிழக முன்னாள் முதல்வருக்கிருந்த உறவுகளையும், அந்த உறவில் காணப்பட்ட இறுக்கத்தையும் கூட கலாநிதி பாலசிங்கம் விபரிக்கின்றார். தலைவர் பிரபாகரனுடன் சென்று தமிழக முன்னாள் முதல்வரை பல தடவைகள் நேரில் சந்தித்தவர் என்ற முறையில் நேரடி அனுபவத்தின் மூலமாக அவர் தெரிவித்துள்ள பல தகவல்கள் இதுவரையில் நாம் அறியாதவை.

இரண்டாவது அத்தியாயம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் தலைவர் பிரபாகரனுக்கு இடம்பெற்ற சந்திப்பு தொடர்பானது. இந்த அத்தியாயத்தில் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் பிரபாகரனுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை கலாநிதி பாலசிங்கம் பதிவு செய்திருக்கின்றார். தமிழகத்தில் தங்கியிருந்த பிரபாகரன் 1987 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் திரும்பிவிட்டார். இலங்கை - இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்த நிலையில் விஷேட ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பி பிரபாகரனை அழைத்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, டில்லியிலுள்ள அசோகா ஹோட்டலில் வைத்து பிரபாகரனுடன் பேச்சு நடத்தினார். அது தொடர்பான பல தகவல்களை உள்ளடக்கியதாக இந்த அத்தியாயம் அமைந்திருக்கின்றது. இந்தப் பேச்சுக்களின் போது தலைவருடன் பாலசிங்கமும் கலந்துகொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

ஏனைய ஒன்பது அத்தியாயங்களும் அரசியல், சமூகவியல், உளவியல், பொருளியல், மெய்யியல் வரலாற்றியல், மானுடவியல் போன்ற பல்வேறு அறிவியல் பரப்புக்களையும் ஆராய்கின்றது. மனித விடுதலை உட்பட மனிதத்துடன் சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்களையும் விரிவாக ஆராய்கின்றார் கலாநிதி பாலசிங்கம். இந்த அத்தியாயங்களில் பல சிந்தனைகளையும் அறிமுகம் செய்துவைக்கும் பாலசிங்கம் இதற்காக உலகப் புகழ்பெற்ற தத்துவாசிரியர்களின் கருத்துக்களையும் ஆராய்கின்றார். உலகப் புகழ்பெற்ற தத்துவாசிரியர்கள் பலரையும் இதற்காக எம்மைத் தரிசிக்க வைக்கின்றார் கலாநிதி பாலசிங்கம். குறிப்பாக ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள் மூலமாக மாநுட விடுதலைக்கான தத்துவங்கள் பலவற்றையும் அவர் போதிக்கின்றார்.

~பிரமஞானி| என்ற பெயரில் கலாநிதி பாலசிங்கம் பல வருட காலமாக ~வெளிச்சம்| சஞ்சிகையில் எழுதிவந்த தத்துவக் கட்டுரைகள் மிகவும் பிரபலமானவை. சர்வதேச அரசியல், தேசியவாதக் கருத்துக்கள் உட்பட அரசியல் தத்துவார்த்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்தக் கட்டுரைகளை அவர் எழுதிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டுரைகள் மூலமாக தன்னுடைய எழுத்துத் திறமையையும் பாலசிங்கம் வெளிப்படுத்தியிருந்தார். இந்தக் கட்டுரைகளில் சிலவும் நூலில் இடம்பெற்றுள்ளது.


நன்றி: தினக்குரல் வார மலர் (23.11.03)
<b>ra........</b>
004 1677366
Reply
#23
அட்டைப்படம் கூட அட்டகாசமாக வந்திருக்கிறது.
Reply
#24
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மைதான்.
Reply
#25
புத்தகம் வெளியிட முன் தணிக்கைக்கு கிடைத்தது எப்படியோ? இதுவும் உளவு செய்யும் வேலையோ. வெகு ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#26
தமிழ் நெற் பார்க்கவில்லையோ?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#27
இல்லை நேரம் கிட்டவில்லை உங்கள் தகவலுக்கு நன்றி. இன்று பார்க்கிறேன்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#28
இல்லை நேரம் கிட்டவில்லை உங்கள் தகவலுக்கு நன்றி. இன்று போய்ப் பார்க்கிறேன்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#29
புத்தகம் கையில் கிடைத்துள்ளது.
முதல் அத்தியாயம் தாண்டிவிட்டேன்..

பல செய்திகளின் பின்னனி இப்போதுதான் தெரியவந்துள்ளது.முழுமையாக படித்துவிட்டு எழுதுகிறென்.
விலை 15 யுூரோ
Reply
#30
முழுமையாக வாசித்துவிட்டு இங்கே பதிந்துகொள்ளுங்கள்.


[size=9]புதுவை அவர்கள் எழுதிய உலைக்களம் புத்தகம் தாயகத்திலிருந்து நண்பன் ஓருவன் அனுப்பியிருந்தான். எனது கஸ்டகாலம்அந்த புத்தகம் இங்குள்ள சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு தற்போது விசாரணையில் இருக்கின்றது. நல்லதொரு காலம் அவன் அதில் தனது விலாசம் இடவில்லை. அதனால் நான் எனக்கு எதிரிகள் அனுப்பியதாக கூறி சமாளித்து உள்ளேன். இனி தாயகம் போய்த்தான் படிக்கவேண்டும்.
அதனால் தற்போதைக்கு விடுதலை படிக்கும் ஆர்வம் இல்லை. நீங்கள் ஏழுதிக்கொள்ளுங்கள். நான் அதை படித்துக்கொள்கின்றேன்
[b] ?
Reply
#31
ஒரு படத்தில் சத்தியராஜ் திரைப்பட விமர்சனம் என்று முழுப்படமும் தொலைக்காட்சிகளில் காட்டப்படுவதாக ஒரு நிருபரைப் பிடித்து வாங்கு வாங்கு என வாங்குவார்.

விமர்சனம் என எழுதப்போனால் புத்தகத்திலுள்ள சில பகுதிகளை கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.அது போல எழுதப்:போனால் எல்லாவற்றையும் வெளிவிட்டாலும் பிரச்சனையாகிவிடும்.

பார்ப்போம..; காப்புரிமை பிரச்சனை வராதவரையில் பிரச்சனையில்லை.
Reply
#32
எதுவாகினும் தரவேண்டியதை முழுமையாகவும் அதேவேளை மறைக்கவேண்டியதை மறைத்தும் தாருங்கள். நாம் புரியும் அளவில் புரிந்து கொள்வோம்.

நன்றி
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)