03-09-2004, 11:16 AM
hock: :oops: அடபாவிகளே இதைகூட சீரியசாக எடுத்திற்றேன்களா அட தமிழா.....
மன்னிக்கவும் நன்றி நண்பர்களே.....
|
தமிழருக்கு ஏற்ற வெளிநாடு ?
|
|
03-09-2004, 11:16 AM
hock: :oops: அடபாவிகளே இதைகூட சீரியசாக எடுத்திற்றேன்களா அட தமிழா..... மன்னிக்கவும் நன்றி நண்பர்களே.....
03-09-2004, 11:35 AM
ஐயா அடிபட்ட தமிழன் நாங்கள் சம்பாந்துறை அரிசியும் மட்டக்களப்பு வாவி மீனும் மூதூர் நண்டும் வன்னிப்பயறும் ஆனைக்கொய்யாவும் யாழ்ப்பாணத்து நொங்கும் பனங்காய்பணியாரமும் கொழும்புப் பாணும் பருப்பும் நுவரெலியா சிலோன் அப்பிளும் தேனீரும் உண்டு குடித்து வளர்ந்தவர்கள்...எமக்குள் உறிய இரத்தம் அவை தந்த உணவில் வர உணர்வுகள் மட்டும் எப்படித் தனித்திருக்கும் நண்பரே.....!நாம் எல்லாம் ஒருவர்...தமிழர்கள் நண்பரே....!எமக்குள் உணர்வுகளும் உறவுகளும் ஒன்றாய் இருக்க ஏன் இந்தப்பாகுபாடு...சுயநலத்துப் பிசாசுகளே கொஞ்சம் சிந்திப்பீரா...வன்னியில் நீர் உண்ட சாப்பாடும் மக்கள் ஊட்டிய அன்பும்....மட்டக்களப்பு அன்னையவள் தன் செல்வன் என்று சொல்லி தலைவனுக்காயும் தமிழருக்காயும் உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட கதையும் தலைநகராம் திருமலையில் சிங்கக் கொடி எரித்து உயிர்விட்ட மானத்தமிழனும்...தமிழீழதேசத்தவன் என்று.....!
எனவே சகோதரனே யார் எழுத்தும் உங்களை மட்டும் காயப்படுத்தி இருக்கமுடியாது அது உம் சகோதரங்கள் எம்மையும் தான் காயப்படுத்திவிட்டிருக்கும்....என்பதையும் மறவாதீர்...! உமக்காய் வருந்திய படி கண்ணீரில் எழுதும் உன் அன்பு நண்பர்களின் ஆறுதல் வரிகள்...! நீர் இங்கு வேண்டும் இன்றேல் நாமும் இங்கு இல்லை எனும் நிலை சொல்வோம்....! இவை வெறும் வார்த்தைகள் அல்ல...யதார்த்த வரிகள்....! யாழ் நகர் முதல் கல்முனைவரை காற்றுண்டு சீவித்தவர்கள் நாம் என்ற வகையில் எமது உணர்வுகள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
03-09-2004, 11:52 AM
அன்பின் நண்பன் அன்பகமே...உணர்சிகளோடு சிலர் விளையாடி சுயலாபம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்....அவர்கள் உண்மைகளைத் தரிசிக்க விரும்பாத பொய்யர்கள்...மனித இன விதிவிலக்குகள்...அவர்களுக்காய் ஏன் எம் உற்ற சகோதரங்களை நாம் காயப்படுத்த வேண்டும்...அவர்கள் துன்புறுவதால் நமகென்ன பயன்....அது நமக்கும் துன்பமே....!
எமது சகோதரத்துவம் கண்டு சுயநலவாதிகள் ஓட வேண்டும்.....எம்முள் துன்பம் கண்டு வாழ முனைபவன் எமக்குள் வேண்டாம்.....அவனை மன்னித்தாகினும் எம்மில் இருந்து விலக்கி வைப்போம்....! உண்மை உணராத பொய்யர்கள் அவர்கள்....! நேற்று நின்று உண்ட சுவாசித்த மண்ணின் மக்களின் குணமறியா விலங்கிலும் கேடுகள் அவர்கள்...அவர்களுக்காய் நாம் சகோதர்கள் ஏன் ஒருவரை ஒருவர் வருத்த வேண்டும்...ஒரு சிறிய சொல்லும் இவ்வேளையில் பலத்த தாக்கத்தையும் வேதனையையும் உண்டு பண்ணும் நண்பரே....! அவதானமாய் பக்குவமாய் கருத்துரையுங்கள்....நாமும் அப்படியே செய்கிறோம்....! இதை உணர்ந்து உங்கள் சகோதரத்துவத்தை இன்னும் பலப்படுத்தி நிற்க அன்போடும் வினையத்தோடும் கேட்டுக்கொள்ளும் உங்கள் நண்பர்கள் குருவிகள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
03-09-2004, 12:03 PM
நாமறியாததா....நன்றிகள் குருவிகள்
03-09-2004, 12:16 PM
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்னமாதிரி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் பொங்குங்கடல் வளம் நமது என்போமே தவிர மீன்பாடும் தேனாடு உனக்கு மீதியுள்ள நிலமெல்லாம் எனக்கு எனப் பிரிக்கமாட்டோம்
\" \"
03-10-2004, 12:59 AM
kuruvikal Wrote:ஐயா அடிபட்ட தமிழன் நாங்கள் சம்பாந்துறை அரிசியும் மட்டக்களப்பு வாவி மீனும் மூதூர் நண்டும் வன்னிப்பயறும் ஆனைக்கொய்யாவும் யாழ்ப்பாணத்து நொங்கும் பனங்காய்பணியாரமும் கொழும்புப் பாணும் பருப்பும் நுவரெலியா சிலோன் அப்பிளும் தேனீரும் உண்டு குடித்து வளர்ந்தவர்கள்...எமக்குள் உறிய இரத்தம் அவை தந்த உணவில் வர உணர்வுகள் மட்டும் எப்படித் தனித்திருக்கும் நண்பரே.....!நாம் எல்லாம் ஒருவர்...தமிழர்கள் நண்பரே....!எமக்குள் உணர்வுகளும் உறவுகளும் ஒன்றாய் இருக்க ஏன் இந்தப்பாகுபாடு...சுயநலத்துப் பிசாசுகளே கொஞ்சம் சிந்திப்பீரா...வன்னியில் நீர் உண்ட சாப்பாடும் மக்கள் ஊட்டிய அன்பும்....மட்டக்களப்பு அன்னையவள் தன் செல்வன் என்று சொல்லி தலைவனுக்காயும் தமிழருக்காயும் உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட கதையும் தலைநகராம் திருமலையில் சிங்கக் கொடி எரித்து உயிர்விட்ட மானத்தமிழனும்...தமிழீழதேசத்தவன் என்று.....! ====================================================== நன்றி குருவிகளே. உன்மையில் உமது கருத்து என்னை புல்லரிக்க வைத்துவிட்டது. ஆகா இதுவல்லவோ சகோதரத்துவம். நன்றி நண்பா. தமிழே எமது மூச்சு அங்கு, வட கிழக்கு எனும் பேதமேயில்லை என்பதை உலகுக்கு காட்டுவோம்.
...... 8)
03-10-2004, 01:27 AM
குருவி சொன்ன உணவுப் பெயர்களையெல்லாம் கேட்டவுடன் இலங்கைக்கு ஓட வேணும் போல இருக்கு.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
03-10-2004, 01:41 AM
adipadda_tamilan, was Ihr realer Name ist? :?:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
03-10-2004, 04:16 AM
நம்மகிட்ட கேட்டிங்கன்னா சுவிஸ் தான் பெட்டருன்னு சொல்லுவேன்.
03-10-2004, 10:17 AM
உங்கள் வரவுக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றிகள் அடிபட்ட தமிழன்...!
எங்கள் கரங்கள் என்றும் இணைந்திருக்கட்டும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
03-10-2004, 11:14 AM
காசுக்கு மட்டும்தானே அதாவது உழைக்கமட்டும்தானே சுவிஸ் மற்றும்படி நாம் மேலேசொன்னவைகள் எல்லாம் பொருந்துகிறதா அங்கு... பிப்சி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> & உலகின் அழகானநாடு சுவிஸ்.ஆரும் கனடா,பிரான்ஸ், டென்மார்கை பற்றி சொல்லுங்களேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> தெரிந்தவர்கள்......
03-10-2004, 11:05 PM
<b>சிங்கப்பூர் - (1) - சந்திரசேகரன் </b>
சிங்கப்பூர் என்று யார் கூறக் கேட்டாலும் அழகிய கட்டிடங்களும், சுத்தபத்தமும், எலக்ட்ரானிக்ஸ் கருவிகளும் வாசனைத் திரவியங்களும் உடனே மனதிற்குள் தோன்றும். சென்னை நகர் பரப்பளவை விட ஒரு சுற்று அதிகம் கொண்ட நாடு சிங்கப்பூர். உலக வரைபடத்தை நூறு மடங்கு பெரிது படுத்திப் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய அத்தனை சிறிய தீவு. அதன் கடற்பரப்பில் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலைக் கொட்டி கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பரப்பளவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் விளை நிலங்கள் இல்லை. குடிநீர் இல்லை. விவசாயம் இல்லை. இயற்கை வளங்கள் இல்லை. ஆனாலும் கடந்த 35 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. கிழக்காசிய நாடுகளுக்கு சிங்கப்பூர் மைய வியாபார கேந்திரம். எளிதான வியாபாரக் கொள்கைகள், ஆசிய, மற்றும் உலக நாடுகளுக்கு, சந்தைப் பொருட்களை பரிமாற்றம் செய்ய சிறப்பான துறைமுகங்களும், சுலப வரித் திட்டங்களும் இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம். சீனர்கள் பெரும்பான்மையினராகவும், மலாய் மக்கள், இந்தியர்கள் அடுத்தடுத்ததாகவும் கொண்ட இவ்வூரில் நான்கு தேசிய மொழிகள், சீனம் (மான்டரின் வழக்கு), மலே, தமிழ் மற்றும் ஆங்கிலம். இந்தியர்கள் மொத்த மக்கள் தொகையில் ஒரு 7 சதவீதம். அதிலும் தமிழர்கள் அதிகம். சென்னையிலிருந்து மூன்றரை மணி நேர விமானப் பயணத்தில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியவுடன், பிரமிப்பு ஏற்படுவது நிச்சயம். விமான நிலையத்தின் பளபளப்பும், பஞ்சு மாதிரி சீனப் பெண்களும், ஒளிரும் கடைகளும், நகரும் படிக்கட்டுகளும், க்ரீச் ஒலி எழுப்பாத ட்ராலி வண்டிகளும் புதிதாய் வருபவர்களை அசத்திவிடும். நான்கு தேசிய மொழிகளிலும் முக்கிய அறிவுப்புகள் கண்ணைப் பறிக்கும். வெளியில் வந்தவுடன், ஊருக்குள் செல்ல டாக்ஸி, இரயில் (MRT), பஸ் சேவைகள். கான்கிரிட் காடுகள் என்று செல்லமாக அழைப்பதற்குத் தோதாக, வானுயர்ந்த கட்டிடங்கள் சாலைகளின் இரு பக்கமும் அமைந்திருக்கும். சிங்கப்பூரின் இடப் பற்றாக்குறையே இத்தகைய உயர்ந்த கட்டிடங்களுக்கு காரணம். முக்கால்வாசிப்பேர், HDB என்றழைக்கப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் வசித்து வருவர். கார் ரேஸ் வீடியோ விளையாட்டுகளில் வரும் தெருக்கள் போல் சாலைகள் அலம்பிவிட்ட மாதிரி சுத்தமாக இருக்கும். தெருவில் குப்பை போட்டால் அபராதம் 500டாலர் (13000 ரூபாய்). இந்தியாவிலிருந்து செல்லும் இந்தியர்கள் இரண்டு வகைப்படுவர், தொழிலாளிகள் (labors) மற்றும் மேதாவிகள் (professionals). இதில் மேதாவிகள் பல்கலைக்கழக ஆசிரியர்கள், கணினி விற்பன்னர்கள், போன்றோர். கட்டிடவேலை செய்வதற்குத் தொழிலாளிகள். இவர்கள் இந்தியாவில் ஏஜென்டுக்கு அநியாயக் காசு கொடுத்துவிட்டு ஒரு நாளைக்கு 18 வெள்ளிக்கு 18 மணி நேரம் உழைக்கும் கூலித்தொழிலாளிகள். சிராங்கூன் ரோட் - இந்தியர்கள் (தமிழர்கள்) இடம். குட்டி இந்தியா என்று அழைக்கப்படும். இது ஒரு நீண்ட சாலை. இரு புறமும் கடைகள், கடைகள், கடைகள். பல தரப்பட்ட நகைக் கடைகள் மற்றும் உணவு விடுதிகள். காய்கறி, மளிகை சாமான்கள், பாத்திரம், உடை, அலங்காரம் விற்பனை செய்யும் கடைகள், கிளி ஜோசியம், மல்லிப்பொடி வாசத்துடன் ரைஸ்மில், சீர்காழியின் வெண்கலக்குரல் வழியும் ஒலி நாடாக் கடைகள், நடுவே மணி ஓசையுடன் காளியம்மன் ஆலயம், பிளாட்பாரங்களில் குவிந்திருக்கும் மலிவு விலை சாமான்கள். "ரெண்டு நாப்பது, மூணு, ம்.. ம்... அஞ்சு நாப்பது, மூணு முப்பது... மொத்தம் எட்டு எழுபது" என்று தமிழில் கணக்குப் போடும் சீன காய்கறி வியாபாரிகள், பிளாட்பாரத் தூண்களில் வெற்றிலைக் கரைகள், டாக்சி, பஸ், கார் என்று விரையும் வாகனங்கள். தி.நகர் உஸ்மான் சாலையை ஞாபகப்படுத்துகிறதா? இந்த இடத்தில் மட்டும், இஷ்டம் போல் சாலைகளில் குறுக்கும் நெடுக்கும் போகலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் சிராங்கூன் தெரு தேக்கா மார்க்கெட்டில் தமிழகத்திலிருந்து வந்த கூலித்தொழிலாளிகளின் ஜனத்தொகை மாம்பலம் ரங்கநாதன் தெரு ஜனத்தை விட ஜே ஜே என இருக்கும். தங்களுக்கு கிடைக்கும் அந்த ஒரு நாள் ஓய்வில் தங்கள் "கூட்டாளி களை" சந்திக்கவும், புதிதாகத் தமிழகத்திலிருந்து வந்திருப்பவர்களிடம் குடும்பத்தினர் செய்தி மற்றும் ஏதேனும் கொடுத்துவிட்டுள்ளனரா என்று அறியவும், தங்கள் ஊருக்குச் செல்பவர்களை ஏக்கத்துடன் பார்த்து "மறக்காம" செய்தி சொல்லச் சொல்லியும், கும்பல் கும்பலாக நின்று கொண்டிருப்பர். பிறகு தங்கள் அடுத்த வாரத் தேவைக்கான காய், மளிகை சாமான்களை பெரிய பெரிய பிளாஸ்டிக் பைகளில் நிரப்பிக் கொண்டு அடுத்த பதினெட்டு மணி நேர தின உழைப்புக்குத் திரும்புவர். வீட்டு வேலைக்காக சில செல்வந்தர்களால் பணியில் அமர்த்தப்பட்ட பெண்களும் இவர்களில் உண்டு. இலங்கையிலிருந்து வரும் பணிப் பெண்களே அதிகம். இவர்களுக்கு மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஓய்வு உண்டு. இவர்கள் அப்பகுதியில் உள்ள புத்தர் கோயிலுக்குச் சென்றுவிட்டு தேக்கா மார்க்கெட் வந்துவிடுவர். இவர்களுக்கிடையே பல காதல் சம்பவங்களும், அதன் தொடர்பான சண்டை சச்சரவுகளும், உராய்வுகளும் நடப்பதுண்டு. சிராங்கூன் ரோடில் மிக முக்கியமான கடை "முஸ்தபா". வருடா வருடம் சிங்கப்பூர் போல் தன் பரப்பளவையும் நிகர வருமானத்தையும் விஸ்தரிக்கும் முஸ்தபா கடையில், சிங்கப்பூர் விசா தவிர எல்லாம் கிடைக்கும். பர்மாபஜார் குருவிகள் காலை விமானத்தில் வந்துவிட்டு, இந்தக் கடையில் எல்லாவற்றையும் வாங்கி பெரிய பெரிய பெட்டிகளில் அடைத்துக் கட்டி, சாயாங்கால விமானத்தில் சென்னைக்கு ஏறி விடுவர். (தொடரும்...)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-10-2004, 11:08 PM
<b>சிங்கப்பூர் - (2) - சந்திரசேகரன் </b>
சரி, சிங்கப்பூர் முஸ்தபா கடையைவிட்டுச் சற்று வெளியே வருவோம். இரண்டு நாட்களுக்கு முன் சீனப் புத்தாண்டு. அதைப் பற்றி அருமையாக இணையப் பெரியவர் திரு ஜே.பி. அகத்திய மடற்குழுவில் எழுதியுள்ளார். சீனர்களுக்குப் பிடித்த நிறம் சிவப்பு. பிடித்த நம்பர் 8. பிடித்த பழம் ஆரஞ்சு. சீனர்கள் நல்ல உழைப்பாளிகள். ஆனாலும் சூதாட்ட விரும்பிகள். நாலு நம்பர் (4D) லாட்டரி ஆட்டத்துக்கு டாலர் டாலராக செலவு செய்வர். ஏதேனும் கார் விபத்துக்குள்ளானதா ? உடனே அந்தக் காரின் நம்பரில் நாலு நம்பர் லாட்டரி வாங்குவர். அதாவது, ஒரு துரதிருஷ்டத்திற்குப்பின் வரக்கூடியது அதிர்ஷ்டம்தான் என்ற ஏராள நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் நாம், "பட்ட காலிலே படும்" என்று புலம்பிக்கொண்டிருப்போம். வீட்டில் இருக்கும் சீன மாதுக்கள், சகாக்களை சேர்த்துக் கொண்டு காசு வைத்து மாஜோங் ஆட்டம் நாள் முழுதும் ஆடுவர். தங்கள் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அந்த துக்க நிகழ்ச்சியைத் தெரு முழுதும் ஷாமியானா அடைப்பு போட்டு, ரவுண்டு ரவுண்டாக டேபிள் சேர் போட்டு துக்கம் விசாரிக்க வரும் நபர்களுக்கு, வறுத்த வேர்க் கடலை, பூசணி விதை, தேநீர் கொடுத்து உபசரிப்பர். பின்பு இரவு முழுதும் மாஜோங் போன்ற சூதாட்டங்கள் விளையாடுவர். அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு, தினுசு தினுசான சீன உணவுகள் சிங்கப்பூரில் பிரசித்தம். முதலை மாமிசம் கூட கிடைத்தது. இப்பொழுது தடை செய்துவிட்டார்கள் என நினைக்கிறேன். சூரியனுக்கு முதுகைக் காட்டும் எல்லா உயிரினங்களையும் சீனர்கள் உண்பர் என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு. சீனர்களுக்குப் பன்றி முக்கிய உணவு. மலாய்க்காரர்களுக்கு பன்றி முதன்மை எதிரி. ஒருமுறை ஆர்ச்சர்ட் ரோட் சென்ட்ரல்பாயிண்ட் ஷாப்பிங் அருகில் ஒரு கடையில் அதிரசம் என்று என் நண்பர் ஏமாற்றி ஒரு பண்டத்தைக் காட்டினார். அருகில் சென்று பார்த்தால் அசைவ உணவை அறியாத என் மூக்கில் அதிரடித் தாக்குதல். பன்றி மாமிசத்தை உள்ளங்கை அகலத்துக்கு சதுரமாகவோ, வட்டமாகவோ சீவி வெல்லச் சீனி போட்டு நெய்யில் பொரித்தெடுத்து அதிரசம் போல் அடுக்கி வைத்து சுடச் சுட வியாபாரம். அசைவம் அறியாததால் பார்த்துவிட்டு நொந்துபோனேன். நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாம்பா - என்று நூடுல்சை நோகுதலுக்கு ஒப்பிட்டு சினிமா வசனங்கள் கேட்டுள்ளோம். ஆனால் நூடுல்சில் பல வகை உண்டு. சேமியா (மீ) வகை, நாடா (கேத்தியாவ்) வகை, தேன்குழல் வகை, முள்ளு முறுக்கு வகை என்று தினுசு தினுசாகக் கிடைக்கும். கொதிக்கும் நீரில் பச்சை பன்றி மாமிசத்துண்டுகள் போட்டு, நூடுல்சுடன் கலந்து "ச்ருட், ச்ருட்" என்று உறிஞ்சி சாப்பிடுவார்கள். சீனர்கள் மரக்கறி (வெஜிடேரியன்) சாப்பிட மாட்டார்களா? சாப்பிடுவார்கள். அதற்கென்றே தனிப்பட்ட உணவகங்கள் உண்டு. எல்லாம் சோயா மாவில் செய்யப்பட்ட மாமிசம் இல்லாத பண்டங்கள். ஆனால் அந்தப் பண்டங்களை மாமிச உணவு போல் வடிவமைத்திருப்பதுதான் சோகமே! ஹாக்கர் சென்டர் சிங்கையில் பிரசித்தம். ஒரு பெரிய கட்டிடத்தின் ஒரு தளத்தில் சிறிய ஸ்டால்களாக பல உணவுக்கடைகள் ஒன்று கூடியிருக்கும். தோல் உரிக்கப்பட்ட வாத்துகள் தொங்கிக் கொண்டிருக்கும். கண்ணாடிப் பெட்டிகளில் உயிருடன் கடல் வாழ் உயிரினங்கள் விதி வலி தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கும். சீன, மலாய், இந்திய, கிழக்காசிய நாட்டு உணவுக் கடைகளின் சங்கமம் தான் இந்த ஹாக்கர் சென்டர். பழக்கம் இல்லாதவர்களுக்கு, அதன் "நறுமணம்" வயிற்றைக் குமட்டும். ஏதேனும் ஒரு டேபிள் பிடித்து உட்கார்ந்தவுடன், எல்லா விரல்களிலும் பெரிய மோதிரங்கள் அணிந்து, இடுப்பில் ஒட்டியாணப் பணப்பை அணிந்த நடுத்தர வயது மாது, "குடிக்க என்ன வேண்டும்" என்று சீன மலாய் உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் விசாரிப்பார். ஐஸ் கட்டிகள் போட்ட ஒரு கிளாஸ் சுடுதண்ணீருக்கு முப்பது காசு. பிரசித்தி பெற்ற டைகர் பியர் முழு பாட்டிலுக்கு சுமார் 6 வெள்ளி. மற்ற காபி (கோப்பி), ஹார்லிக்ஸ் போன்றவையும் ஓரிரண்டு டாலருக்குள் கிடைக்கும். உணவு வேண்டுமானால், உங்களுக்குப் பிடித்த உணவு ஸ்டாலுக்குச் சென்று, காசு கொடுத்துவிட்டு வேண்டிய உணவை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு பக்கத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள், பெரிய நண்டுகளும் சிறிய ஆமைகளும், பெரிய குழாய் மீன்களும் (லாப்ஸ்டர் / ஷெல்?பிஷ்) உயிருடன் நீந்திக் கொண்டிருக்கும். வேண்டியதைச் சொன்னால், அதைப்பிடித்து, வருத்தோ, அவித்தோ, பொரித்தோ கொடுப்பார்கள். இவ்வகை உணவுகளுக்கு விலை அதிகம் வசூலிப்பார்கள். ஆனால் பெரிய ரெஸ்ட்டாரெண்ட்களைவிட விலை கம்மி. மதிய உணவு நேரச் சமயங்களில் சென்றால் இவ்வகை ஹாக்கர் சென்டர்களில் இடம் கிடைப்பது அரிது. நெருக்கி அடித்து உட்கார்ந்து கொண்டு, அடுத்தவர் தட்டில் "சாப்" ஸ்டிக்கோ, முள் கரண்டியோ படாமல் சாப்பிட வேண்டியிருக்கும். சாப் ஸ்டிக் என்பது இரண்டு ஒல்லியான குச்சிகள் கொண்டு, உணவுப் பண்டங்களை தட்டிலிருந்து பிடித்துச் சாப்பிடுப் பயன்படுவது. பட்டன் மஷ்ரூம் இக்குச்சிகளில் சிக்காமல் வழுக்கி வழுக்கி ஓடும். பொரித்த கடலையும் இக்குச்சிகளில் பிடிபடாது. அலுவலக கேளிக்கை விளையாட்டுகளில் ஸ்பூன்-எலுமிச்சம்பழம் ரேஸ் போல் இக்குச்சிகளில் கோலிக்குண்டுகளைப் பிடித்து இன்னொரு டப்பாவில் போடும் சவால் விளையாட்டுகளும் உண்டு. நியூட்டன் சர்க்கிள் என்ற இடத்தில் மிகப் பெரிய ஹாக்கர் சென்டர் உள்ளது. மாலை நேரத்தில் இங்கு எக்கச்சக்க கூட்டம் கூடும். அமெரிக்க, ஐரோப்பியர் நிறையப் பேர் இங்கு வருவர். நள்ளிரவு வரை குடியும், வித வித உணவுமாக ஆண்களும் பெண்களும் பொழுதைக் கழிப்பர். வெள்ளிக் கிழமை இரவு இந்த இடம் மிகப் பிரசித்தம். அவ்வப் பொழுது குடியில் மூழ்கி, குடி முழுகிப் போன மாதிரி நடக்கும் அடிதடி சண்டையும் காணக் கிடைக்கும். (தொடரும்...)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-10-2004, 11:10 PM
<b>சிங்கப்பூர் - (3/இறுதிப் பகுதி) - சந்திரசேகரன் </b>
மலாய் (மலே) மக்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். ஆண்களும், பெண்களும் பூப் போட்ட கலர் சட்டை போட்டுக் கொண்டு காணப்படுவர். இஸ்லாமியக் கடமைகளும், தொழுகைகளும் கடைப்பிடித்தாலும் மதுக் கடைகளிலும், இரவு விடுதிகளிலும் எல்லாச் சமூகத்தாரைப் போலும் பங்கு பெறுவர். கடின வேலைகளில், அமெரிக்காவில் கருப்பினத்தவர் போல், அதிகம் ஈடுபடுவர். டாக்சி (டெக்ஸி) ஓட்டிகளாகவும், மதுக் கடைகளில் குண்டர்களாகவும் (பவுன்சர்), ராணுவத்திலும் அதிகம் காணப்படுவர். பெரும்பாலானவர்கள் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொண்டு பொருளாதாரத்துக்கு அல்லாடுவர். மலேசியாவிலிருந்து மலாய் மக்கள் சிங்கப்பூர் தொழிற்சாலை வேலைகளுக்கு அதிகம் வருவர். சிங்கப்பூர் அரசின் தொடர் ஊக்குவிப்பாலும் மலேசியத் தலைவர் மகாதிரின் 20/20 அம்சக் கொள்கைகளாலும், மலாய் மக்கள் உயர் கல்வியின் முக்கியத்துவம் புரிந்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டு வருகின்றனர். இவர்கள் நாஸி லெமாக் என்ற பெயரில் செய்யும் தேங்காய் சாதம் புகழ் பெற்றது. தேங்காய்ப்பாலில் சமைக்கப்பட்ட சாதமும், ஒரு வறுத்த சிறிய மீனும் கொண்ட இந்த நாசி லெமாக்கை காலை உணவாக ஹாக்கர் சென்டர்களில் விற்பனை செய்வார்கள். மலாய் கடைகளில் ஜிகினாத் துணிகளும், பத்திக் வகை உடைகளும், ஓலைப் பாய்களும், விசிறிகளும் கிடைக்கும். தமிழர்கள் இருவகைப் படுவர். தமிழகத்திலிருந்து வந்தவர்கள் மற்றும் சிங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவகையினரும் இருப்புப்பாதை மாதிரி இணையாமல் இணைந்து காணப்படும் ஒரு தோற்றம் உண்டாக்குவர். கோவிந்தசாமி பிள்ளை என்பவர்தான் முதன் முதலில் தமிழர்களுக்கான மளிகைக் கடை ஆரம்பித்தவர் என்ற கருத்து உண்டு. ஒரு காலத்தில் மிகவும் அந்தக் கடை பிரபல்யமாய் இருந்தது. இப்பொழுது அது இடிக்கப் பட்டு, சிறிய பெட்டிக் கடையாக அவரது சந்ததியரால் நடத்தப்பட்டு வருகிறது. முன்பைவிட சிங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத்தரம் கடந்த இருபது வருடங்களுக்குள் மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. தர்காக்களும், கிறித்தவ, இந்து, சீக்கியர் கோயில்களும் நிறைய உண்டு. சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலும், செட்டியார் கோவில் என்றழைக்கப்படும் முருகன் கோயிலும் பிரபலம். தோபாயோ என்ற இடத்திற்கருகில் இருக்கும் சிவன் ஆலயத்தில் பக்தர்களே அபிஷேகம் செய்யும் வகையில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தமிழ் உணவகங்களுக்கும் குறைவில்லை. தமிழர் கடைகளில் மற்ற இனத்தவர் சுலபமாகத் தோசைகளை சட்னி சாம்பாரில் முக்கி சாப்பிடும் காட்சி சர்வ சாதாரணம். கோமளவிலாஸ் உணவகம் சைவ உணவுக்குப் புகழ் பெற்றது. வாழையிலையில் பொரியல், கூட்டுடன், கமகம சாம்பாருடன் நம் தென்னிந்திய சாப்பாடு இங்கு பிரபலம். மாடர்னாக சாப்பிட விரும்புவோர் அவர்களின் இன்னொரு கிளையான கோமளாஸ் செல்லலாம். இங்கு அதே உணவுகளை அட்டைப்பெட்டியில் கிடைக்கும். அசைவ உணவு வேண்டுவோருக்கும் ஹாக்கர் சென்டர்களில் இந்தியரின் உணவுக் கடைகளும், கோமளாஸ் போல் நாகரிக ரெஸ்ட்டாரண்ட்களும் உண்டு. முத்துக்கறி உணவகம், மீன் தலைக்கறி உணவுக்குப் பெயர் பெற்றது. பிரியாணி, பரோட்டா போன்ற சமாச்சாரங்களும் உண்டு. முர்தபா என்று பெரிய பரோட்டாவில் வருத்த இறைச்சித்துகள்களை வைத்து, ஸ்ட?ப்டு பரோட்டா ரேஞ்சுக்கு 5 வெள்ளிக்கு குறையாமல் விற்பார்கள். தமிழர் பண்டிகை, திருவிழா போன்ற சமயங்களில் சிராங்கூன் சாலையில் திடீர்க் கடைகள் தோன்றும். அப்பண்டிகைக்கானப் பொருட்களை சந்தை ஏற்றுவர். வாழை மரம், மாவிலை, தோரணம், கரும்பு, மஞ்சள் கொத்து எல்லாம் கிடைக்கும். தமிழ்ப் பத்திரிகைகள், அமுதசுரபியிலிருந்து, ஷகிலா அட்டைப்படம் போட்ட திரைவிருந்து, திரைச்சுவை வரை எல்லாம் உடனே உடனே கிடைக்கும். குமுதம் இதழ் ஒன்று 2 டாலருக்கு விற்றனர். தமிழ் சினிமா இரண்டுமூன்று திரையரங்குகளில் வெளியிடுவர். சூப்பர் ஸ்டார் படத்துக்கு மட்டும் சூப்பர் கூடுதல் காசு வசூலிப்பர். சிடி இசைத் தட்டுகள், ஒலி நாடாக்கள் நிறைய உண்டு. மலேசியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்கும் இவை ரோடு கடைகளில் எல்லாம் கிடைக்கும். முஸ்தபா போன்ற அங்காடிகளிலும் அடுக்கு வைத்திருப்பர். தமிழகத்தில் கிடைக்காத விசிடி, டிவிடி எல்லாம் கிடைக்கும். விலையும் அதிகம் இல்லை. இரண்டாண்டுக்கு முன் உன்னிகிருஷ்ணனின் கர்நாடக கச்சேரி விசிடி ஒன்றை நான்கு (சி)டாலருக்கு வாங்கியிருக்கிறேன். தமிழ் ஒலி 96.8 தமிழர்களிடையே பிரசித்தி பெற்ற வானொலி நிலையம். இருபத்து நான்கு (அல்லது 22 ?) மணி நேரமும் நல்ல தமிழ் நிகழ்ச்சிகள் கேட்கலாம். இப்பொழுது இணையம் மூலமும் சேவை வழங்குகிறார்கள். "எளிய இலக்கணம்" என்று பெயர் வைத்து, கடின இலக்கிய விளக்கங்கள் அளிப்பார்கள். இந்தி பேசும் வட இந்தியர்களுக்கான இடம் ஹைஸ்ட்ரீட் எனப்படும். இங்குள்ள துணிக்கடைகள் நிறைய பஞ்சாபிகளால் நடத்தப் படுகின்றன. இப்பகுதியில் உள்ள உணவுக் கடைகளில் ரொட்டி, சப்பாத்தி, பஞ்சாபி தாபா வகை உணவுகள் கிடைக்கும். சிங்கப்பூர் தமிழர்கள், டர்பன் கட்டிய சீக்கியர்களை "வங்காளி" என்றே அழைப்பது வினோதம். சிங்கப்பூரர்கள் தாங்கள் பேசும் இறுதி வார்த்தையுடன் அடிக்கடி "லா" என்று சேர்த்துச் சொல்வார்கள். ஒருவேளை சிங்கப்பூரில் லா (Law) கடுமையாகக் கடைப்பிடிப்பதை உணர்த்த அவ்விதம் பேசுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றும். சூயிங்கம் மென்று துப்பி இடத்தை அசிங்கமாக்குவதாலும், யாரோ ஒரு துஷ்டன் வேக இரயில் கதவுகளுக்கிடையே கம்மை ஒட்டி, கதவுகள் சரியாக வேலை செய்யாததாலும், சிங்கப்பூரில் சூயிங்கம் விற்பதற்குத் தடை செய்துள்ளனர். ஆனால் மக்கள் பக்கத்து ஊரான ஜொஹ?ர்பாரு (மலேசியா) சென்று ரகசியாமாய் வாங்கி வருவர். அடிக்கடி கோடம்பாக்கத்திலிருந்து நடிகர்களும், நடிகைகளும், சிங்கப்பூர் வந்து தையத்தக்கா டான்ஸ் ஆடிவிட்டு, சில பல பெரும் பணக்காரர்களுக்கு கம்பெனி கொடுத்துவிட்டு, முஸ்தபாவில் மேக்கப் சாமான்கள், பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு சென்னை சென்றுவிடுவர். ஆர்ச்சர்ட் ரோட் முக்கியமான இடம். பல பெரிய அங்காடிகளும் செல்வந்தர்கள் மட்டுமே செல்லக்கூடிய பெரிய ஹோட்டல்களும் இங்கு அதிகம். CK TANG எனப்படும் அங்காடி சரித்திரப் புகழ் பெற்றது. இவரும் கிட்டத்தட (கோவிந்தசாமி பிள்ளை மாதிரி) சீனாவிலிருந்து சிறு பெட்டியுடன் வந்து (பெட்டிக்குள் பணம் எல்லாம் இல்லை !) சிறு கடை ஆரம்பித்து, பெரிய வளர்ச்சி கண்டவர். ஆர்ச்சர்ட் சாலையின் மையத்தில் சீனப் பாரம்பரியத்துடன் இந்தக் கடை அமைந்துள்ளது. தக்காசிமாயா என்ற ஜப்பானிய பல அடுக்கு, பள பள அங்காடியில் எல்லாவித சாமான்களும் கிடைக்கும். செந்தோசா தீவு என்ற சுற்றுலா மையத்துக்கு கேபிள் கார் அல்லது படகில் சென்று வரலாம். சிங்கப்பூரின் சரித்திரத் தகவல் நிலையமும் இசைக்கு ஏற்ப ஆடும் நடன நீரூற்றுகளும் இங்கு ரம்மியமானவை. ஜுரோங் பறவைப் பூங்காவில் கக்கட்டு எனப்படும் ராட்சதக் கிளிகள் சைக்கிள் ஓட்டும். மிருகக்காட்சிசாலையில் குரங்குகள் செய்யும் மாஜிக் நிகழ்ச்சி, யானைகளின் கூட்டணி, கடல் சிங்கங்களின் விளையாட்டு, மலைப்பாம்பைக் கழுத்தில் அணிவித்து போட்டோ, என்று நிறைய பொழுதுபோக்குகள் உண்டு. சிங்கப்பூர் அரசு, மக்களுக்கான அரசாங்க சேவைகளில் முதலிடம் வகிக்கிறது. எல்லாவற்றிலும் ஒழுங்கு கட்டுப்பாடு என்று சற்று மிகையாகத் தோன்றினாலும், இடம், இனம், மக்கள் என்று பார்க்கும் பொழுது, இவ்வகைக் கட்டுப்பாடுகள் அவர்களின் வசதியான வாழ்வுக்குத் தேவை எனத் தெரிகிறது. இவ்வகைக் கட்டுப்பாடுகள் தற்போதைய தலைமுறைகளுக்கு இரத்தத்தில் ஊறி விட்டதால் வரும் ஆண்டுகளில் இது பெரிதாகத் தோன்றாது. நிறைய சுற்றுலா இடங்களும், அழகான கட்டிடங்களும், பல இன மக்கள் சேர்ந்து அமைதியாக வாழும் இடமாகவும் உள்ள சிங்கப்பூர் உண்மையிலேயே "ஜாய்?புல் சிங்கப்பூர்" தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-12-2004, 01:52 AM
அருமையான வர்னனை.....
அழகான விபரிப்பு.... அங்கு பயணம் நாம் போய்வந்தமாதிரி.... அழகாக வர்ணித்துள்ளார் கட்டுரையாழர் நன்றி இந்த உதாரணம்போல் நாமும் முயற்சிக்கலாம்.... நீங்களும் விரும்பினால் நான் கடைசியாக முடிக்கிறேன் நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :mrgreen: நன்றி: bbc 8) & சந்திரசேகரன்
03-13-2004, 02:02 AM
ஏன் முடிக்கிறீங்கள் அன்பகம். நாம வேற நாடுகளை பத்தி பேசலாமே.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-16-2004, 02:06 PM
BBC Wrote:BBC Wrote:sOliyAn Wrote:ஆம்.. அதேநேரத்தில் புகலிடத்தில் தமிழர்கள் சந்தோசமாக உள்ளார்கள் என்கிறீர்களா?! பக்கத்தில் எங்கோ கதைத்திருந்து இங்கும் தேவைப்படலாமே என்பதற்காக... :wink: 8) நன்றி : BBC & Soliyan |
|
« Next Oldest | Next Newest »
|