Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நேரம் கிடைத்தால் சிந்திக்க ...
#41
நாங்கள் ஆங்கிலச் செய்திகளை மொழி பெயர்த்துக் கொண்டு வந்து போட்டோம்...சில முக்கிய செய்திகளை அல்லது அபூர்வ நிகழ்வுகளை கொண்டு வந்து போட்டோம்...சுய கருத்துக்களைப் பகிர்ந்தோம் கருத்தால் சண்டை பிடித்தோம் ஆனால் எல்லாப் பகுதியிலும் வெட்டுதலும் ஒட்டுதலுமென்று செய்யவில்லை அப்படிச் செய்வதால் இக்களத்தின் தனித்துவம் எனபதன் பொருள் என்னாவது.....???! இது உங்களில் குறை சொல்ல எழுதவில்லை...நீங்கள் சோர்வுற்றிருந்த களத்துக்கு ஒரு தெம்பு கொடுத்தவர் என்ற வகையில் எமது கருத்து...வெளியில் இருந்து பார்க்கும் ஒருவர் இங்க என்ன கிடக்கு அங்க கிடக்கிறதைத்தான் இங்க போட்டிருகிறாங்கள் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது....அதுவும் இன்றைய அரசியல் செய்திகள் இல்லை என்றால்.....!

இன்று தமிழரும் தமிழும் சரி வாழ்வதென்றால் புலிகளாலும் அவர்களின் அரசியலாலும் தான்....அது இல்லையோ ஒன்றும் இல்லை என்பதுதான் இன்றைய தமிழரின் நிலை....! அதுதான் இக்களத்தின் நிலையும் கூட...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->நாங்கள் ஆங்கிலச் செய்திகளை மொழி பெயர்த்துக் கொண்டு வந்து போட்டோம்...சில முக்கிய செய்திகளை அல்லது அபூர்வ நிகழ்வுகளை கொண்டு வந்து போட்டோம்...சுய கருத்துக்களைப் பகிர்ந்தோம் கருத்தால் சண்டை பிடித்தோம் ஆனால் எல்லாப் பகுதியிலும் வெட்டுதலும் ஒட்டுதலுமென்று செய்யவில்லை அப்படிச் செய்வதால் இக்களத்தின் தனித்துவம் எனபதன் பொருள் என்னாவது.....???! இது உங்களில் குறை சொல்ல எழுதவில்லை...நீங்கள் சோர்வுற்றிருந்த களத்துக்கு ஒரு தெம்பு கொடுத்தவர் என்ற வகையில் எமது கருத்து...வெளியில் இருந்து பார்க்கும் ஒருவர் இங்க என்ன கிடக்கு அங்க கிடக்கிறதைத்தான் இங்க போட்டிருகிறாங்கள் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது....அதுவும் இன்றைய அரசியல் செய்திகள் இல்லை என்றால்.....!

இன்று தமிழரும் தமிழும் சரி வாழ்வதென்றால் புலிகளாலும் அவர்களின் அரசியலாலும் தான்....அது இல்லையோ ஒன்றும் இல்லை என்பதுதான் இன்றைய தமிழரின் நிலை....! அதுதான் இக்களத்தின் நிலையும் கூட...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :twisted:  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் ஒரு படைப்பாளி இல்லை. ஏதோ என்னால் முடிந்த அள்வு பகிர்ந்து கொள்கின்றேன். யார் எழுதினாலும் சரி படிக்க சிந்திக்க நல்ல ஆக்கம் கிடைத்தால் போதும் அதுதான் எனது கொள்கை. எத்தனையோ எழுத்தாளர்கள் ஏற்கனவே களத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். நீங்கள் சரி எழுதுங்கள் அவற்றை விவாதிக்கலாம். நான் பல கட்டுரைகளை போட்டு உங்கள் கருத்து என்ன என்று எதற்கு கேட்கின்றேன் விவாதிப்பதற்காகதான். நீங்கள் ஒரு கட்டுரையை விவாதததை ஆரம்பியுங்கள். எனது க்ருத்துக்களை எழுத நான் தயார். என்னை கேள்விகள் கேட்டாலும் தெரிந்த்வரையில் பதில் எழுத நான் தயார். இதுதான் எனது நிலைப்பாடு. பெரும்பாலும் ஈழவன் (மற்றும் சிலர்) போன்றவர்கள்தான் குழப்பாமல் அரசியல் கருத்துகளுக்கு பதில் எழுதுகின்றார். அவருடன் விவாதிக்க கூடியதாக இருக்கின்றது. ஆனால் ...
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#43
நான் தயார் என்பதும் கட்டுரையைப் போட்டு கேள்வி கேட்பதும் அதற்கு பதில் கேள்வி கேட்டால் பிறகு நழுவல் கேள்வி என்பதும் பிறகு எங்களிடமே நீங்கள் போட்டதற்கு விளக்கம் கேட்கவும் கொஞ்சம் இறுகுதாம் எண்டவுடன மேதாவித்தனம் சொல்லி வெளியேறுவதும் இது தான் தங்கள் கருத்தாடல்....ஈழவனை உதாரணத்துக்கு அழைக்கும் முன் உங்கள் நிலையையும் கொஞ்சம் சிந்தியுங்கள்....!

இங்கு படைப்பாளிகள் வெளியேறவில்லை...அவர்களின் படைப்புக்கள் முகப்பில் இருக்கு...ஆனால் கருத்தாடுவதில் இருந்து போயினர் சிலர்.... காரணம் யாம் அறியோம்....! அவர்களுக்கு கருத்துக்களத்தின் தார்ப்பரியம் தெரிந்திருக்குமோ என்னவோ....???! படைப்பாளிகள் என்றாலோ இல்லை பட்டதாரிகள் என்றாலோ எல்லாம் தெரிந்த செல்வாக்கினன் என்பதில் அர்த்தமில்லை...!அப்படி காட்டிக் கொள்ள நினைப்பவரும் கருத்துக்களத்தில் நிலைக்க முடியாது...!

இவ்வளவும் ஏன் நீங்கள் பார்த்துவிட்டு ஓடும் பல தலைப்புக்கள் இங்கு உண்டு...ஆனால் நீங்கள் அடிக்கடி உச்சரிக்கும் சம உரிமைகளில் முக்கியமான ஒன்று மனித உரிமை அது சம்பந்தமான கட்டுரையை கணணி இங்கேயே போட்டுள்ளார் அதில் உங்களின் கருத்தைப் பகருங்கள் பார்க்கலாம்...உந்தப் பெண்ணியத்தையும் சினிமாவையும் புலி எதிர்ப்புச் செய்தி காவுவதையும் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
kuruvikal Wrote:நான் தயார் என்பதும் கட்டுரையைப் போட்டு கேள்வி கேட்பதும் அதற்கு பதில் கேள்வி கேட்டால் பிறகு நழுவல் கேள்வி என்பதும் பிறகு எங்களிடமே நீங்கள் போட்டதற்கு விளக்கம் கேட்கவும் கொஞ்சம் இறுகுதாம் எண்டவுடன மேதாவித்தனம் சொல்லி வெளியேறுவதும் இது தான் தங்கள் கருத்தாடல்....ஈழவனை உதாரணத்துக்கு அழைக்கும் முன் உங்கள் நிலையையும் கொஞ்சம் சிந்தியுங்கள்....!

நான் நழுவுவது குழப்புவது மற்றவர்களை மேதாவி என்று சொல்லுவது இல்லை. நான் எனது நிலையை சிந்திக்கின்றேன், நான் அப்படி எழுதுகின்றேனா எனபதை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ஈழவனை உதாரணத்து அழைக்க நீங்கள் ஏன் பாய்கின்றீர்கள். அதுபோல் இல்லையே என்று நீங்கள் மட்டும் யோக்கியமா என்று கேட்கின்றீர்களா?

kuruvikal Wrote:இங்கு படைப்பாளிகள் வெளியேறவில்லை...அவர்களின் படைப்புக்கள் முகப்பில் இருக்கு...ஆனால் கருத்தாடுவதில் இருந்து போயினர் சிலர்.... காரணம் யாம் அறியோம்....! அவர்களுக்கு கருத்துக்களத்தின் தார்ப்பரியம் தெரிந்திருக்குமோ என்னவோ....???! படைப்பாளிகள் என்றாலோ இல்லை பட்டதாரிகள் என்றாலோ எல்லாம் தெரிந்த செல்வாக்கினன் என்பதில் அர்த்தமில்லை...!அப்படி காட்டிக் கொள்ள நினைப்பவரும் கருத்துக்களத்தில் நிலைக்க முடியாது...!

படைப்பாளிகள் கருத்துகளத்தில் இருந்து வெளியேறியதும். அவர்கள் விவாதங்களின் தரக்குறைவினால் வெளியேறியதும் உண்மை. நான் பழைய களத்தை படித்து பார்த்தேன். ஒவ்வொருவராக வெளியேறியதையும் கவனித்தேன்.


kuruvikal Wrote:இவ்வளவும் ஏன் நீங்கள் பார்த்துவிட்டு ஓடும் பல தலைப்புக்கள் இங்கு உண்டு...ஆனால் நீங்கள் அடிக்கடி உச்சரிக்கும் சம உரிமைகளில் முக்கியமான ஒன்று மனித உரிமை அது சம்பந்தமான கட்டுரையை கணணி இங்கேயே போட்டுள்ளார் அதில் உங்களின் கருத்தைப் பகருங்கள் பார்க்கலாம்...உந்தப் பெண்ணியத்தையும் சினிமாவையும் புலி எதிர்ப்புச் செய்தி காவுவதையும் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் ஓடவில்லை. கணனி போட்டதை படித்தேன். அதில் எனக்கு கருத்து வேறுபாடு ஏதும் இல்லை ஏற்றுக் கொள்கின்றேன். உங்களுக்கு அதில் ஏதும் இருந்தால் சொல்லுங்கள். பேசலாம். எனது செய்திகளுக்கு புலி எதிர்ப்பு சாயம் பூசாதீர்கள். அந்த அவசியம் எனக்கு இல்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#45
சிலர் மற்றவர்களையும் தம் நிலையில் வைத்துத்தான் பார்ப்பது வழக்கம்...அவர்களுக்கு ஒன்று தெரிய வேண்டும் தான் வேறு மற்றவன் வேறு என்பது....! பிபிசி...எங்கள் பார்வையில் நீங்கள் ஒரு சுய சிந்தனை உள்ள கருத்தாளன் அல்ல....! கருத்தை கடனெடுக்கும் ஒரு வகை கடனாளி....அதையும் உங்கள் கருத்தாக கொண்டு அதற்குள் உள்ளதெல்லாம் உங்கள் பார்வையின் பால் எழுவதற்கு ஒப்ப எழுவதாக நியாயம் காட்டவிளையும் மேதாவித் தனம் விரும்பும் ஒரு வகை பிறவி....????!

முரண்பாட்டுக்குள் இரண்டு முக்கிய பார்வைகள் உண்டு....ஒன்று முரண்பாட்டுக்கால் நியாயம் தேடுவது...மற்றையது முரண்பாட்டுக்கால் முட்டிமோதி கருத்தைச் சிதைப்பது....நீங்கள் நடுநிலை என்ற போர்வையில் பதுங்கி இருந்து பக்கம் சார்ந்து முரண்பாட்டுக்கால் சிந்தனைகளை சிதறடிக்கும் குழப்பகாரன்...!

உங்களிடம் ஒரு வேண்டுகோள்... குருவிகளின் கருத்துத் தொடர்பில் உங்களுக்கு மாற்றுக் கருத்து என்று ஒன்றிருந்தால் அதை தெளிவாக முன்வையுங்கள் அதைவிடுத்து எங்கள் முரண்பாட்டுக்குள் உங்கள் சமரச வித்தைகளைக் காட்ட முனைய வேண்டாம்....! உங்கள் வித்தைகளை நாம் ஆரம்பம் முதலே தெளிவாகக் கண்டுதான் வருகின்றோம்....!
எமக்குத் தெரியும் எந்த இடத்தில் எமது கருத்துக்குக் கடிவாளம் போட வேண்டும் என்பது....அதை உங்கள் சிந்தனைக்கேற்ப நாம் செய்ய முடியாது.....அதைச் சொல்லவும் உங்களுக்கு அவசியம் இல்லை...!

உங்களுக்கு மாற்றுக் கருத்திருந்தால் அதை முன்வையுங்கள்....! மற்றவர்கள் மீது உங்கள் சிந்தனைக்கு நியாயம் என்று படுவதை செயற்படுத்த முனையாதீர்கள்....அது சுய சிந்தனையாளர் முன் எடுபடாது....!

உங்களுக்கு இங்கு வைக்கப்படும் பிரதான கருத்துக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அதை வையுங்கள் அதைவிடுத்து நீங்கள் எல்லோரையும் ஆழ அறிந்தவர் போல் தனிப்பட்ட அறிவுரைகள் களமாடும் முறைகள் எமக்குச் சொல்லித்தரத் தேவையில்லை...அவை எங்கு தரமாக உள்ளதென்று கண்டு கொண்டு உள்வாங்கும் பக்குவம் எமக்கு நிறைந்தே இருக்கிறது....உங்கள் பார்வையில் சிறந்த கருத்தாளன் எனப்படுபவர் எங்கள் பார்வைக்கு இல்லாமல் இருக்கலாம்....!
உங்கள் பார்வைக்கு ஏற்பதான் எல்லோரும் எங்கள் பார்வையிலும் இருப்பர் என்று நீங்கள் எப்படி நினைக்க முடியும்...அதை எப்படி நீங்கள் எங்களுக்குள் வலிந்து வரவழைக்க முயலமுடியும்....அப்படி என்றால் நீங்கள் தான் எமது கருத்தின் தோற்றுவாய் என்று நினைப்போ....???!அப்படி ஒரு எண்ணம் இருப்பின் அதை இங்கேயே விட்டுவிடுங்கள் எவர்மீதும் செய்ய முனையாதீர்கள்...எல்லாம் வீண் முயற்சியாகும்....!

நீங்கள் உங்கள் வழியில் போங்கள் நாம் எம் வழியில் போகிறோம் மீண்டும் குறுக்கிட்டால் அது நீங்கள் உண்மையாக இங்கு கருத்தாடத்தான் வந்தீர்களா அல்லது வேறு ஏதாவது தேவைக்காக வந்தீர்களா என்றுதான் எண்ண வைக்கும்...???!அது உங்கள் கருத்துக்களை நாம் உதாசீணம் செய்யவே வழிவகுக்கும்....!

:twisted: :evil: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்

கிறீஸ்தவர்களுக்கு இது புனித வாரம். எனவே ஈஸ்ரரின் வரலாறு பற்றியும் கிறீஸ்தவர்கள் மத்தியில் அது எவ்வாறு அனுஷ்டிக்கப்படுகிறது, இன்று வேறு வேறு நாடுகளில் எவ்வாறு அது கொண்டாடப்படுகிறது என்பது பற்றியும் சிறிது பார்ப்போம். ஈஸ்ரர் வசந்த விழாக்கள் நடைபெறும் காலத்தில் வருகிறது. கிறீஸ்தவ நாடுகளில் தேவ மகனான யேசுநாதர் உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில் ஈஸ்ரர் சமய விடுமுறையாகும். ஆனால் ஈஸ்ரர் காலத்தில் பின்பற்றப்படும் சில வழக்கங்கள் கிறீஸ்தவத்திற்கு முந்திய சமயத்தைச் சார்ந்தவையாகும். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில அறிஞரான St. Bede என்பவர் ஈஸ்ரர் என்ற சொல் ஸ்கந்திநேவிய ஓஸ்றா (Ostra) என்ற சொல்லில் இருந்தோ, அல்லது இளவேனில் கால சூரியன் நில நடுக்கோட்டுக்கு எதிராக வரும் காலத்தில், வஸந்தத்தையும் வளத்தையும் குறிக்கும் வகையில் விழா எடுக்கப்பட்ட பெண் தெய்வங்கள் இருவரைக் குறிக்கும் Teutonic சொற்களான Ostern அல்லது Eostre ஆகிய சொற்களிலிருந்தோ வந்திருக்கலாம் என்று கூறுவதை பொதுவாக அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.


கிபி 325 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏறத்தாழச் சரியாகிருக்கக்கூடிய பௌர்ணமி தினங்களை வானவியலாளர்கள் கிறீஸ்தவ தேவாலயத்திற்காக அமைத்துக் கொடுத்தனர். அவற்றை தேவாலயம் தொடர்பான பௌர்ணமி (Ecclesiastical Full Moon) என்று அழைத்தனர். மார்ச் 21ம் தேதி அதாவது சூரியன் நிலக்கோட்டுக்கு எதிராக வரும் நாளில், அல்லது அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் வரும் பௌர்ணமியின் அதாவது பாஸ்கல் (paschal) பௌர்ணமியின் பின் வரும் ஞாயிறில் ஈஸ்ரர் கொண்டாடப்படுகிறது. அதனால் மார்ச் 22ம் தேதிக்கும் ஏப்பிரில் 25ம் தேதிக்கும் இடையில் ஈஸ்ரர் வரலாம். இஸ்ரேலுக்கு அருகில் மரபுகள் ஆழமாக வேரூன்றிய இடங்களில் உள்ள கிறீஸ்தவ தேவாலயங்கள் ஈஸ்ரரை யூதர்களின் Passover க்கு அமைவாகவே கொண்டாடுகின்றன.


ஈஸ்ரர் 46 நாட்கள் கொண்ட நோன்பு (Lent) காலத்தின் முடிவில் வருகிறது. அக்காலத்தினுள் வரும் 6 ஞாயிற்றுக்கிழமைகளை இந்த நோன்பு காலத்தில் சேர்ப்பது வழக்கமல்ல. இந்த ஞாயிறு தினங்கள் ஈஸ்ரர் ஞாயிறை நினைவு கூரும் விதமாகவும் அதனைக் கௌரவிக்கும் முகமாகவும் நோன்பு காலத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இக்காலம் உய்தி தேடுகிற காலமாகும். அத்துடன் ஈஸ்ரருக்கு தயாராகிற காலமுமாகும். எனவே நோன்பு காலம் 40 நாட்கள் மட்டுமே. ஜேசுநாதர் அனுபவித்த துன்பத்தையும் வதைகளையும் நினைவுகூரும் விதமாக இந்தக் காலத்தில் கிறீஸ்தவர்களால் நோன்பு அனுசரிக்கப்படுகிறது. ஜேசுநாதரின் 40 நாள் நோன்பை நினைவு கூரும் விதமாக ஆரம்ப காலத்தில் கடும் நோன்பு நோற்கப்பட்டது. ஈஸ்ரருக்கு முந்திய தினம் ஞானஸ்நானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் sacrament ஐ பெறுவதற்கு அவர்கள் தம்மைத் தயார்ப்படுத்தும் காலமாக ஆரம்பகால தேவாலயங்கள் இந்த 40 நாள் நோன்பைக் கருதின. காலப் போக்கில் இந்தக் காலத்துக்குரிய முக்கியத்துவம் ஞானஸ்நானத்திற்கு தயார்ப்படுத்துவதைக் குறிப்பதிலிருந்து குற்றங்களுக்கு கழுவாய் தேடும் அம்சங்களைக் குறிப்பதாக மாற்றப்பட்டது. பெரும் பாபங்கள் செய்த குற்றவுணர்வு உள்ளவர்கள் அவற்றிலிருந்து கழுவாய் தேடும் முயற்சியாக வெளiப்படையாக கடும் நோன்பினை அனுஷ்டித்தனர். நோன்பின் முடிவில் அவர்கள் பெரிய சடங்கின் மூலம்f மீண்டும் தேவாலயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.


யேசு கிறீஸ்த்து ஜெருசலசத்துக்குச் சென்றபோது மக்கள் கூட்டம் குருத்தோலைகளை ஏந்திச் சென்று அவரது பாதங்களில் வைத்து வரவேற்றதை நினைவுகூரும் விதமாக நோன்பு காலத்தின் கடைசி வாரம் குருத்தோலை ஞாயிறுடன் ஆரம்பமாகிறது. ஸ்பானியாவின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த கிறீஸ்தவ பெண் துறவியான Etheria வின் பிரயாண ஏட்டில் முதலாவது குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. அவர் அந்த நாள் பஸ்கல் கிழமையின் ஆரம்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கிபி நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அவர் ஜெருசலேத்திற்குச் சென்றார். மேற்குலக தேவாலயங்களில் ஸ்பானியாவிலேயே முதலில் இந்த குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அது ஏறக்குறைய கிபி ஐந்தாம் நூற்றாண்டிலே நடைபெற்றிருக்கலாம். ரோமாபுரியில் கிபி 12ம் நூற்றாண்டிற்கு முன்னர் இந்த ஊர்வலம் நடைபெறவில்லை. அமெரிக்காவில் Philadelphia வில் உள்ள Messiah Lutheran தேவாலயம் இந்த பண்டைய நடைமுறையை மீள ஆரம்பித்தது. Episcopal தேவாலயங்களில் ஆராதனையின் முடிவில் அனைவருக்கும் குருத்தோலைகள் வழங்கப்பட்டன. இன்று இந்த வழக்கம் மேற்குலகில் பெருமளவில் மறைந்து விட்டது. தேவாலயத்தில் அனைவரும் கூடுவதே இன்றைய நடைமுறையாக உள்ளது.


இந்த புனித வாரத்தில் திங்கட்கிழமை அன்று அதிக முக்கிய விஷயங்கள் நடைபெறுவதில்லை. ஜெருசலத்தில் உள்ள புனித தேவாலயம் இந்த நாளிலேயே தூய்மை செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. அது செலாவணிகரின் (moneychangers) மேசைகளை ஜேசுநாதர் கவிழ்த்து இது எனது பிரார்த்தனைகுரிய இடம் என்று எழுதப்பட்டுள்ளது. நீங்கள் இதனைக் கள்வர்களின் குகை ஆக்குகிறீர்கள் (Matthew- 21:13) என்று கூறியபோது நடைபெற்றது. யேசுநாதருக்கும் Pharisees க்கும் இடையில் இடம் பெற்றதாகக் கருதப்படும் சம்பவம் நடைபெற்றது புனித வாரத்தின் செய்வாய்க்கிழமையன்று. தேவாலயத்தில் உள்ளவர்கள் நாஸ்திக குறிப்பு ஒன்றைச் செய்வதற்கு ஜேசுநாதரை ஆளாக்க முயன்ற வேளையில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நாள் இன்னொரு வகையிலும் முக்கியமானது. ஜெருசலத்தின் அழிவு பற்றியும் இறுதி நாள் பற்றிய சமிக்ஞைகள் தெரிவது பற்றியும் ஒலிவ்ஸ் குன்றில் ஜேசுநாதர் தனது சீடர்களுக்கு இந்த நாளிலேயே கூறினார்.


விபூதிப் புதன்கிழமையன்று புனித வாரத்தின் உணர்ச்சி வேகம் மேலும் அதிகரிக்கிறது. இதனை ஒற்றர் புதன் என்றும் அழைப்பதுண்டு. அன்றே ஜேசுநாதரை எங்கே இலகுவாகப் பிடிக்கலாம் என்று பிரதம குருமாருக்கு ஜூதாஸ் காட்ட ஒப்புக்கொண்ட துரோகம் நடைபெற்ற நாள். புனித வாரத்தின் வியாழக்கிழமை இறுதி இராப்போசனத்துடன் தொடர்பான நாள். இது புனித வியாழன் என்றும் கூறப்படுகிறது. இது ஜேசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்திய நாள். அன்று அவர் தனது சீடர்களுடன் இறுதி உணவை அருந்தினார்.


இந்த புனித வாரத்தின் வெள்ளிக்கிழமை நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. இந்நாளிலேயே ஜேசுநாதர் ஜெருசலேம் சுவர்களுக்கு வெளியே கல்வாரிக் குன்றின் உச்சியில் சிலுவையில் அறையப்பட்டார். கிறீஸ்தவ நம்பிக்கையின் படி ஜேசுநாதர் மனிதர்களின் பாபத்திற்காக தன்னை தியாகம் செய்து சிலுவையில் மரித்தார். ஜேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் விதமாக இந்த நாள் துக்க நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. மரித்ததன் மூலம் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் ஒரு தொடர்பை, ஒரு புரிந்துணர்வை ஜேசுகிறீஸ்து ஏற்படுத்தினார் என்று கிறீஸ்தவர்கள் நம்புகின்றனர். சிலுவையில் அறையப்பட்ட கிறீஸ்துவின் உருவம் அல்லது சிலுவை கிறீஸ்தவர்களின் நம்பிக்கைக்குரிய முக்கிய சின்னமாக கருதப்படுகிறது. ரோமன் கத்தோலிக்கர்கள் கிறீஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அனுபவித்த நோவையும் துன்பத்தையும் நினைவு கூரும் வகையில் இந்த நாளை விரதமிருந்து சுய காட்டுப்பாட்டுடன் கழிப்பார்கள். 4ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த வெள்ளி தனியான நாளாக அனுஸ்டிக்கப்படுகிறது. அதற்கு முன்னர் சிலுவையில் மரித்தமையும் திருமீட்டெழுச்சியும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது.


புனித வெள்ளியைத் தொடர்வது புனித சனிக்கிழமை. இது Anglican தேவாலயங்களால் ஈஸ்ரருக்கு முந்திய தினம் என அழைக்கப்பட்டு ஞானஸ்நானம் செய்வதற்குரிய மரபார்ந்த காலமாகக் கருதப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆசிர்வாதம், மிக நீண்ட பாஸ்கல் மெழுகுவர்த்தியைக் கொழுத்துதல் ஆகியவற்றுடன் அனுஷ்டிக்கிறார்கள். Altar இன் gospel பக்கத்தில் நீண்ட மெழுகுவர்த்தி நிறுத்தப்பட்டு ஆசிர்வாதம் நடைபெறும் வேளையில், கிறீஸ்துவின் உடலில் ஏற்பட்ட ஐந்து காயங்களைக் குறிக்கும் வகையிலும் பின் அவரது உடலில் பூசப்பட்ட தைலங்களைக் குறிக்கும் வகையிலும் அதில் ஐந்து வகை வாசனைத் திரவியங்கள் செருகப்படும். அந்த மெழுகுவர்த்தி கொழுத்தப்பட்டு 40 நாட்களின் இறுதி நாளான அன்று கிறீஸ்து பின்னர் மீட்டெழுந்தமையைக் குறிக்கும் காலம் வரை எரிக்கப்படும். ஈஸ்ரர் நாளான ஞாயிற்றுக்கிழமை கிறீஸ்து திருமீட்டெழுச்சியடைந்து விண் புகுந்ததைக் குறிக்கிறது. இது புனித வாரத்தின் இறுதி நாள். இந்த புனித வாரம் கிறீஸ்து திருமீட்டெழுச்சி அடையும் வரையுள்ள அவரது வாழ்வுடன் தொடர்புபட்டது. ஈஸ்ரர் அன்று கிறீஸ்து நாதர் தனது கல்லறையிலிருந்து மீட்டெழுச்சி பெற்று விண் புகுவதன் முன் தனது சீடர்களைச் சந்தித்து தான் தொடங்கியதை முடிக்கும் பணியில் ஈடுபடுத்த அவர்களை தயார்ப்படுத்திதாகக் கூறப்படுகிறது. சுருக்கமாகக் கூறுவதாயின் புனித வாரம் விபூதி புதன்கிழமையுடன் (Ash Wednesday) ஆரம்பமாகி ஈஸ்ரர் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. புனித வியாழன் யேசுபிரானின் கடைசி இராப்போசனத்தையும் பெரிய வெள்ளி அவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்ததையும் குறிக்கிறது. அந்த புனித வாரம் அவரது திருமீட்டெழுச்சியை குறிப்பதுடன் நிறைவெய்துகிறது.


ஈஸ்ரருடன் பல மரபார்ந்த அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாக ஈஸ்ரர் பெருநாளுடன் முட்டையை இணைக்கும் வழக்கம் காணப்படுகிறது. முட்டைக்கு ஏன் எவ்வாறு இத்தனை முக்கியத்துவம் இப் பெருநாளுடன் தொடர்பாக ஏற்பட்டது? மரபார்ந்த வசந்த கால கிரியைகளுடன் முட்டைக்கு இருந்த தொடர்பே ஈஸ்ரருடன் முட்டை இணைவதற்கான அடிப்படைக் காரணமாகும். மிக ஆதிகாலம் தொடக்கம் மனிதனுக்கு முட்டைகளுடன் தொடர்பு இருந்து வந்தது. இது பண்டைய லற்றீன் பழமொழியில் பிரதிபலித்துள்ளது. Omne vivum ex ovo என்பதன் கருத்து சகல உயிர்ப்பும் முட்டையில் இருந்தே வருகிறது என்பதாகும். லற்றின் பழமொழி மட்டுமல்ல இந்த உலகம் முட்டையில் இருந்தே உருவானது என்ற கருத்து பண்டைய இந்தியா முதல் பொலிநீசியா வரை, ஈரான், கிறீஸிலிருந்து லற்வியா எஸ்ரோனியா, பின்லாந்து வரை, மத்திய அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவின் மேற்கு கரை வரை காணப்பட்டது. எனவே பெரும்பாலும் அனைத்துப் பண்பாடுகளிலும் முட்டை வாழ்வின் சின்னம் என்ற கருத்து காணப்பட்டமை அசாதாரணமான விஷயமல்ல. ஐரோப்பாவில் புதுவருட மரங்களிலும், Maypoles இலும் St.John's மரங்களில் நடுக் கோடை காலத்திலும் முட்டைகள் தொங்கவிடப்பட்டன. பின்னர் கிறிஸ்தவம் பரவிய காலத்தில் பெரிய வெள்ளிக்கிழமையன்று இடப்பட்ட முட்டையை 100 வருடங்கள் வைத்திருந்தால் அதன் மஞ்சட் கரு வைரமாக மாறும் என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்பட்டது. அத்துடன் பெரிய வெள்ளியன்று இடப்பட்ட முட்டையை ஈஸ்ரர் அன்று சமைத்தால் அது மரங்கள், பயிர்கள் ஆகியவற்றின் வளத்தைப் பெருக்குவதுடன் சடுதியான மரணம் நேராது பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. ஈஸ்ரர் முட்டைக்குள் இரண்டு மஞ்சட் கரு காணப்பட்டால் அதனை வைத்திருந்தவர் மிக விரைவில் செல்வந்தராவார் என்ற நம்பிக்கையும் கூடவே காணப்பட்டது. பண்டைய எகிப்து, பேர்ஷியா, Greece, ரோம் ஆகிய நாடுகளில் வசந்த விழாக்களின் போது முட்டைகள் நிறமூட்டப்பட்டு உண்ணப்பட்டன. பண்டைய பேஷியர் இளவேனிற் காலத்தில் கதிரவன் நிலை பூ நடுவரைக்கு எதிராக வரும் நாளில் முட்டைகளை ஒருவருக்கொருவர் பரிசளித்தனர். இந்த நம்பிக்கைகள் பிற்காலத்தில் ஈஸ்ரருடன் நன்கு இணைக்கப்பட்டன. முட்டைகளுக்கு நிறமூட்டுதல் என்பது 15ம் நூற்றாண்டளவில் மேற்கு ஐரோப்பாவில் மிஷனறிகளால் பரப்பப்பட்டது என்று ஊகிக்கப்படுகிறது. நாற்பது நாட்கள் கடும் நோன்பின் போது முட்டைகள் உண்ணப்படுவதில்லை.


முட்டை வளத்தையும் புது வாழ்வையும் குறிக்கிறது. ஆரம்பத்தில் முட்டைகள் கடும் வண்ணமூட்டப்பட்டு வசந்த கால சூரியனைப் பிரதிநிதித்துவப்படுத்தின. அத்துடன் அவை முட்டை உருட்டும் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டதுடன் பரிசாகவும் கொடுத்து வாங்கப்பட்டன. பின்னர் காலப் போக்கில் முட்டைகள் வண்ணமூட்டப்பட்டு அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு காதலர்களிடையே பரிசாகப் பரிமாறப்பட்டது. மத்திய காலத்தில் மரபுரீதியாக ஈஸ்ரர் அன்று முட்டைகள் வேலையாட்களுக்கு வழங்கப்பட்டன. ஜேர்மனியில் ஈஸ்ரரின் போது முட்டைகள் ஏனைய பரிசுகளுடன் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் வழக்கம் காணப்பட்டது. வேறுபட்ட பண்பாடுகள் முட்டைகளை வேறுபட்ட முறைகளில் வர்ணமூட்டும் முறைகளை வளர்த்துக் கொண்டன. கிறீஸில் யேசுநாதரின் ரத்தத்தைக் குறிக்கும் வகையில் சிவப்பு நிற முட்டைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஜேர்மனியிலும் ஒஸ்றியாவிலும் புனித வியாழனைக் குறிக்கும் வகையில் பச்சை நிறமூட்டப்பட்டன. ஸ்லாவிக் மக்கள் பொன் வெள்ளி நிறங்களில் பல்வேறு வேலைப்பாடுகள் கொண்டதாக முட்டைகளை அழகுபடுத்தினர். ஒஸ்றியர்கள் மிகச் சிறிய இலைக் கொப்புகளையும் தாவரங்களையும் முட்டையில் இணைத்து அவித்த பின்னர் அந்த இலைகளை நீக்க முட்டையில் அழகிய வேலைப்பாடுகள் இணைந்து அழகாகக் காட்சியளிக்கும். உருக்கிய தேன்மெழுகை முட்டையில் பூசி பின் பல்வேறு சாயங்களில் அமுக்கி எடுப்பார்கள். ஒவ்வொரு முறை எடுக்கும் போதும் தேன் மெமுழுகால் மேலும் சித்திரங்கள் தீட்டப்படும். இம்முட்டைகள் அவற்றில் வேலைப்பாடு செய்பவர்களின் கலைத்திறமையைக் காட்டி நிற்கும். ஜேர்மனியில் சிறிய ஊசிகளால் முட்டையில் துவாரமிட்டு உள்ளிருக்கும் வெள்ளை சிவப்புக் கருக்களை அகற்றிய பின்னர் கோதுகளுக்கு வர்ணமூட்டி மரங்களில் ஈஸ்ரரின் போது தொங்கவிடுவார்கள். ஆமேனியர்கள் கோதுகளில் யேசுபிரான் கன்னி மரியாள் ஆகியோரின் படங்களை வரைவார்கள்.


ஈஸ்ரர் முயல் அதாவது Easter Hare வளத்தின் சின்னமாகும். முயலைப்போல இனப்பெருக்கம் செய்யும் மிருகங்கள் கிடையாது. அதனால் அது புது வாழ்வையும் வசந்த காலத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஈஸ்ரர் சின்னங்களில் மிக விருப்பத்துக்குரியது முயல் சின்னமே. இது சர்வதேச ரீதியானது மட்டுமல்ல லௌகிகமானதும் கூட. பண்டைக் காலத்தில் இருந்து முயல் சந்திரனுடன் இணைத்துக் கூறப்பட்டு வந்துள்ளது. முயல் அதாவது Rabbit அல்ல Hare, கண்களை இமைப்பதற்காகக் கூட ஒரு கணமும் முடுவதில்லை என்று கூறப்படுகிறது. Rabbits கண்களை மூடியபடியே பிறக்கின்றன. ஆனால் Hares கண்களைத் திறந்தபடியே பிறப்பதாக கூறப்படுகிறது. பண்டைய எகிப்தியர் முயலை சந்திரனுடன் தொடர்புபடுத்தினர். Hare என்பது எகிப்திய மொழியில் un எனப்படும். அதன் கருத்து திற என்பதாகும். அவை இரவு முழுவதும் திறந்த கண்களுடன் பௌர்ணமி நிலவைப் பார்ப்பதற்கு விருப்பம் கொண்டவை. அத்துடன் முயலும் முட்டைகளும் Anglo-Saxon வசந்த தெய்வமான Eostre உடனும் தொடர்புபட்டுள்ளன. ஏனெனில் இந்த இரண்டும் வளத்துடன் தொடர்புபட்டவை. இந்த வளமே மரபு ரீதியான Hare ஐ விடுத்து rabbit ஐ அமெரிக்கா ஈஸ்ரரின் சின்னமாக தேர்ந்தெடுத்தமைக்குக் காரணமாகும். Hares ஐ விட rabbits அதிகம் இனப்பெருக்கம் செய்பவை. ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலான Teutonic ஈஸ்ரர் மரபுகளை அங்கு கொண்டு சென்றனர். முயல்கள் ஜேர்மன் அல்லாத பிள்ளைகள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றன. ஜேர்மனீய பிள்ளைகள் முயலுடைய கூடுகள் நிறைய அலங்கரிக்கப்பட்ட முட்டைகளால் நிரப்புவார்கள். அவர்கள் இதற்கான கூடுகளையும் செய்வார்கள். அவை மிக கவர்ச்சிகரமாக இருப்பதால் மற்றப் பிள்ளைகளும் ஈஸ்ரருக்கு அவ்வாறான பரிசுகளைத் தரும் படி வற்புறுத்துவார்கள். ஈஸ்ரர் அடையாளமாக முயலைப் பயன்படுத்தும் வழக்கம் ஜேர்மனியில் ஆரம்பித்தது. 1500 களின் எழுத்தாக்கங்களில் இது முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1800களில் அங்கு மாவும் சீனியும் கலந்த உண்ணக்கூடிய முயலுருவங்கள் செய்யப்பட்டன. 1700களில் அமெரிக்காவில் குடியேறிய ஜேர்மானியர் இந்த வழக்கத்தை அங்கு அறிமுகம் செய்தனர். Oschter Haws என ஜேர்மனியில் அழைக்கப்படும் இந்த ஈஸ்ரர் முயல் பிள்ளைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கிறிஸ்மஸ் பப்பாவுக்கு அடுத்ததாக அவர்களைக் கவர்ந்தது இந்த முயலே. தாங்கள் நல்ல பிள்ளைகளாக நடந்து கொண்டால் இந்த முயல் பல நிறங்களில் முட்டைகளை இடும் என்று அவர்கள் நம்பினார்கள். இதற்காக ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுவர்கள் தமது தொப்பியையும் சிறுமிகள் தமது bonnet ஐயும் உபயோகித்துக் கூடுகள் அமைத்தனர். ஈஸ்ரர் முயல் சின்னம் எங்கும் பரவியதும் பின் அவற்றையும் முட்டைகளையும் வைப்பதற்காக கூடையை பயன்படுத்தும் முறை உருவாகியது.


ஈஸ்ரர் பரிசாக மிக அழகிய லில்லி மலர்களைப் பெற யார்தான் விரும்பமாட்டார்கள். பல காலமாக தேவாலயத்தை அலங்கரிக்க அழகிய வெள்ளை trumpet lily மலர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஏறக்குறைய 1800 களில் லில்லி மலர் அமெரிக்காவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அங்கிருந்த புரட்டஸ்ரன்ற் கிறீஸ்தவர்கள் ஈஸ்ரர் அனுசரிப்புடன் லில்லியை தொடர்புபடுத்தினர். அது பிரபலியமாக சில காலம் பிடித்தது. அமெரிக்காவில் காணப்படும் மடோனா லில்லி மலர்கள் ஆரம்ப கோடை காலத்திலேயே மலர்வன. எனவே லில்லி மலர் செடிகள் இறக்குமதி செய்யும் வரை அவை ஈஸ்ரருடன் தொடர்பாகப் பிரபலியமாகவில்லை. 1880களில் Bermuda என்ற இடத்தில் இருந்த போது Thomas P Sargent என்பவர் இயல்பாக வசந்த காலத்தில் மலரும் அழகிய லில்லி மலர்களைக் கண்டார். அவர் அதில் மிக விருப்புக் கொண்டு தனது இருப்பிடமான Philadelphia திரும்பும் போது அதன் கிழங்குகளை கொண்டு வந்தார். William Harris என்ற பூந்தோட்டக்காரர் அதனை பூக்கடைக்காரர் மத்தியில் பரப்பினார். அதன் பின்னர் அம்மலர் பல்லாயிரக்கணக்கானவரைக் கவரவே அது ஈஸ்ரர் அலங்காரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.


ஈஸ்ரர் நாடுகளுக்கு நாடு வேறுபட்ட விதங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியாவில் பல்லின மக்கள் வாழ்வதால் ஈஸ்ரர் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. Anglo-Irish பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கு ஈஸ்ரர் ஞாயிரே முக்கியமான தினமாகும். அன்றே அவர்களது கொண்டாட்டங்கள் இடம் பெறுகின்றன. சிலர் தேவாலயத்தில் இடம்பெறும் ஆராதனைகளில் கலந்து கொள்வார்கள். அத்துடன் காலை உணவாக இனிப்பு நிறைந்த பழங்கள் சேர்க்கப்பட்ட Hot cross buns ஐ உண்பார்கள். பிள்ளைகள் ஈஸ்ரர் சொக்கலேற்றால் ஆன முட்டைகளை பரிமாறிக் கொள்வார்கள். அவற்றில் சில உள்ளே சிறிய விளையாட்டுப் பொருள்களைக் கொண்டிருக்கும். சிறிய முட்டைகளிலிருந்து மிகப் பிரமாண்டமான முட்டை வரை பல அளவுகளில் சொக்கலேற் முட்டைகள் காணப்படுகின்றன. பல குடும்பங்கள் ஈஸ்ரர் ஞாயிறன்று காலையில் தமது வீடுகளில் அல்லது தோட்டங்களில் Easter Hunt எனப்படும் முட்டை தேடியெடுத்தல் போட்டியை நடத்துகிறார்கள். அதிக எண்ணிக்கையில் முட்டைகளைத் தேடிக் கண்டு பிடிப்பவர்களே வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். அப்போது தமது உறவினருடன் கூடி காலை உணவை அருந்துகிறார்கள். மரபார்ந்த முறையில் இந்த உணவு வாட்டப்பட்ட ஆடு அல்லது மாடு அல்லது கோழி இறைச்சியுடன் வாட்டப்பட்ட உருளைக்கிழங்கு, கரட், பூசனிக்காய் போன்ற மரக்கறிகளையும் கொண்டிருக்கும்.


ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஈஸ்ரருக்கு முதல்நாள் குன்றுகளின் உச்சிகளிலும் தேவாலய வளவுகளிலும் பிரமாண்டமான முறையில் தீ வளர்க்கப்படும். அது சிலவேளைகளில் ஜூதாஸின் (Judas) தீ என்று அழைக்கப்படும். ஏனெனில் அதில் ஜூதாஸின் உருவம் செய்யப்பட்டு அந்த தீயில் கொடும்பாவியாகக் கொழுத்தப்படும். இந்த தீ வளர்த்தல் என்பது கிறீஸ்தவத்திற்கு முந்தியது. வசந்தத்தின் வரவைக் குறிக்க அப்போது தீ வளர்க்கப்பட்டது. அப்போது குளிர் காலத்தை உருவகப்படுத்தும் ஒரு உருவத்தைச் செய்து அதனைத் தீயில் எரித்தனர்.


இங்கிலாந்தில் ஈஸ்ரரின் போது முட்டைகள் மற்றும் பணம், ஆடைகள், சொக்கலேற்றுகள் போன்ற பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வார்கள். அல்லது ஒன்றாக விடுமுறையில் செல்வார்கள். சிலர் ஈஸ்ரர் கூடைகளைச் செய்து அதனுள் daffodils மலர்கள் அல்லது சிறிய சொக்கலேற் முட்டைகளை வைப்பர்கள். உள்ளுர் சமூக நிலையங்களiல் வைக்கப்படும் ஈஸ்ரர் bonnet போட்டிகளில் பிள்ளைகள் கலந்து சிறந்ததைச் செய்தவர்கள் ஈஸ்ரர் முட்டையைப் பரிசாகப் பெறுவார்கள். ஈஸ்ரர் முயல் இங்கிலாந்தின் ஈஸ்ரர் மரபுடன் இணைந்ததொன்று. கடைகளில் ஆயிரக்கணக்கில் நிறைந்திருக்கும் இவற்றை வாங்கி ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்வார்கள். இந்த சொக்கலேற் முயல்களை வீடுகளில் ஒளித்து வைத்து தேடி எடுக்கும் பிள்ளைகள் பரிசுகள் பெறுவதும் இங்குள்ள மரபுகளில் ஒன்று. பெரிய வெள்ளியன்று காலை hot cross buns உண்ணப்படும். ஈஸ்ரரின் முன் இவை கடைகளில் விற்பனைக்கு வந்துவிடும்.


பிரான்சிய மொழியில் ஈஸ்ரர் Paques என்று அழைக்கப்படுகிறது. பெரிய வெள்ளி தொடக்கம் கொண்டாட்டம் துக்கத்துடன் ஆரம்பமாகும். அன்றிலிருந்து ஈஸ்ரர் ஞாயிறு வரை தேவாலய மணிகள் ஒலிக்காது. ஜேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்ச்சிக்கு துக்கம் அனுஷ்டிப்பதைக் குறிக்கும் அடையாளமாக இந்த மணி ஒலிப்பது நிறுத்தப்படுகிறது. ஈஸ்ரர் அன்று காலையில் மணி ரோமிலிருந்து திரும்பிப் பறந்து வருவதாக உள்ள ஐதீகத்தின் படி அதைப் பார்ப்பதற்காக பிள்ளைகள் தோட்டத்திற்கு விரைந்து சென்று மணியைப் பார்க்க வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க பெரியவர்கள் சொக்கலேற் முட்டைகளை ஒளித்து வைப்பதில் ஈடுபடுவார்கள்.


இத்தாலிய மொழியில் ஈஸ்ரர் La Pasqua எனப்படுகிறது. பெரிய விருந்துடன் இங்கு ஈஸ்ரர் கொண்டாடப்படுகிறது. வாட்டப்பட்ட குட்டி ஆட்டு இறைச்சியிலாலான Angellino எனப்படும் ஈஸ்ரர் சிறப்பு உணவு இதில் பரிமாறப்படும். பல வண்ண இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்டு மகுட வடிவில் ஈஸ்ரருக்காகச் சிறப்பாகத் தயாரிக்கப்படும் பாணை பிள்ளைகள் உண்பார்கள்.


ஜேர்மன் மொழியில் ஈஸ்ரர் ஓஸதரெந எனப்படுகிறது. இந்தப் பெயர் வசந்த தெய்வமான Eostre என்ற பெயரிலிருந்து உருவாகியிருக்கலாம். ஈஸ்ரருக்கு மூன்று வார பாடசாலை விடுமுறை அளிக்கப்படுகிறது. பெரிய வெள்ளியன்று பலர் மீன் உணவை உண்பார்கள். ஈஸ்ரர் சனியன்று மாலையில் பெரிய தீ வளர்க்கப்படும். அதனைக் காணப் பலர் கூடுவார்கள். குளிர் கால முடிவினையும் கெட்ட உணர்வுகளையும் குறிக்கும் வகையில் இந்த தீ வளர்க்கப்படுகிறது. ஈஸ்ரர் ஞாயிறன்று குடும்பங்கள் ஒன்றாக இணைந்து சிறந்த காலை உணவை உண்பார்கள். பின்னர் பெற்றோர் இனிப்புகள், முட்டைகள், சிறிய பரிசுப் பொருட்களைக் கொண்ட கூடைகளை பிள்ளைகள் தேடிக் கண்டு பிடிப்பதற்காக ஒளித்து வைப்பார்கள். கைகளால் வர்ணமூட்டப்பட்ட முட்டைகளை நண்பர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். முன்னர் கிராமப் பெண்கள் தமது காதலருக்கு சிவப்பு நிறமூட்டப்பட்ட முட்டையைப் பரிசளிப்பது வழக்கமாக இருந்தது. இது இப்போது அருகி மறைந்து விட்டது.


நெதர்லாந்து மொழியில் ஈஸ்ரர் Pasen அல்லது Pasen Zontag என்று கூறப்படுகிறது. முழு நாட்டிலும் ஈஸ்ரர் ஒரு வசந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மலர்களாலும் நிறமூட்டப்பட்ட முட்டைகளாலும் ஈஸ்ரர் இராப்போசன விருந்து மேசைகள் அலங்கரிக்கப்படுகின்றன. ஈஸ்ரர் விருந்தில் முந்திரியவற்றல்களால் நிறைக்கப்பட்ட இனிப்புப் பாண் சிறப்பிடம் பெறுகிறது. சுவீடிஸ் மொழியில் ஈஸ்ரர் நாள் Pரூskdagen எனப்படுகிறது. ஈஸ்ரர் விருந்துகளிலும் விளையாட்டுகளிலும் வாழ்வினதும் புதுப்பித்தலினதும் சின்னமாக விளங்கும் முட்டை இடம்பெறுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் முட்டைக்கு நிறமூட்டும் விழாக்கள் நடைபெறுகின்றன. முட்டை உருட்டும் போட்டி இளம் பிள்ளைகளது விருப்பத்துக்குரிய ஈஸ்ரர் விளையாட்டு. ஈஸ்ரருக்கு முந்திய தினம் தீ மூட்டுதல் வாணவேடிக்கை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.


காலப்போக்கில் முட்டை, முயல் ஆகியன சொக்கலேற்றில் தயாரிக்கப்பட்டு வியாபாரமாக்கப்பட்டது. இன்று ஈஸ்ரர் வருகிறது என்பதைக் கடைகளில் வண்ண வண்ணமாக அடுக்கப்பட்ட முட்டைகளும் முயல்களும் கட்டியம் கூறுகின்றன. பல்லின மக்கள் வேறு வேறு வகைகளில் ஈஸ்ரரைக் கொண்டாடி வருகின்ற போதும், சிலுவையில் மரித்த யேசுநாதர் மீண்டும் உயிர் பெற்றெழுந்ததன் மூலம் மனித வாழ்வுக்கு நம்பிக்கை, செயலின்மையிலிருந்து புதுச் செயலூக்குவிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றைக் கொண்ட நற்செய்தியை தெரிவித்தமையை அனைவரும் அடிப்படையில் ஏற்றுக் கொள்கின்றனர்.
நன்றி - சந்திரலேகா வாமதேவா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#47
<img src='http://img.123greetings.com/events/eapr_easter_flowers/8869-009-01-1049.gif' border='0' alt='user posted image'>
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#48
சந்திரவதனா தான் எழுதிய பயணம் என்ற கதையை திசைகள் பெண்கள் சிறப்பிதழில் மறுபிரசுரம் செய்திருந்தார். அந்த கதையையும் பிரதேசவாதத்தையும் இணைத்து வாசகர் ஒருவர் எழுதிய கடிதத்தையும் அதற்கு சந்திரவதனா எழுதிய பதிலையும் கீழே படியுங்கள். - BBC

<b>திசைகளில் வெளியான கதையில் பிரதேசவாதம்?</b>

தோழமையுடன் சந்திரவதனாவிற்கு

ஒரு ஆப்பிரிக்க ஆண்தனத்திற்கும், வெள்ளைக்கார ஆண்தனத்திற்கும் வித்தியாசங்கள், அல்லது ஆசிய மதிப்ணபீடுகளின் பெறுபேறுகள் என்னவென்றால் எங்களின் வெள்ளைத்தோல் அடிமை மனநிலைதான்.

ஒரு ஆணின் புத்தி என்ற வகையில் உங்களின் மதிப்பீட்டுடன் உடன்படுகிறேன்.;ஒரு ஆபிரிக்கன் என்ற உங்களின் இனவாத உணர்வுப்புத்தியின் கீழ் வெளிப்படுவனவெல்லாம் யாழ்ப்பாண கிடுகு வேலி விசயங்களே.

இனவாதமும் சாதிவெறியும் எந்த இலக்கியவாதியையும் விட்டுவைப்பதில்லை

அன்புடன்

ஜீவமுரளி

*

வணக்கம் ஜீவமுரளி!

உங்கள் தோழமை நிறைந்த கருத்துக்கு மிகவும் நன்றி.

இனம், மதம், தேசியம், நாடு என்ற பேதமின்றி எங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்தம் குணங்களும் இந்நாட்டவர் நல்லவர் என்றோ அல்லது இந்நாட்டவர் கெட்டவர் என்றோ சொல்ல முடியாதபடிக்கு எல்லோரும் மனிதர்கள் என்பதற்கமைய பல்வேறு இயல்புகளைக் கொண்டுள்ளது.

ஆனால் பழக்கவழக்கங்களும், பண்புகளும் அந்தந்த நாட்டுக்கேற்ப, நகருக்கேற்ப, கிராமத்துக்கேற்ப, மதத்துக்கேற்ப......... என்று மாறுபடுகிறது.

<span style='color:#0900ff'><i>திடீரென்று புரியாத பாசையில் கதைக்கும் பெரிய சத்தம் கேட்டது. ம்...... புகையிரதம் நின்றது கூடத் தெரியாமல்........நான். அதற்கிடையில் அடுத்த தரிப்பு நிலையம் வந்து விட்டது. ஏறுவோரும் இறங்கியோரும் தத்தமது திசைகளில் வெளியில் விரைய.. ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சில பெண்களும் ஒரு ஆடவனும் தமது உயர்ந்த குரல்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்யுமே என்ற எந்தவிதப் பிரக்ஞையுமின்றி அடிக்குரலில் உரத்துப் பேசியபடி நானிருந்த பெட்டியினுள் ஏறினார்கள்.

இவன் ஆப்பிரிக்க நாட்டவன் என்பதாலோ என்னவோ எனக்கு விருப்பமில்லையென்று சொன்ன பின்னும் - தொலைபேசி இலக்கத்தைத் தருகிறாயா..? முகவரியைத் தருகிறாயா..? - என்று கரைச்சல் படுத்திக் கொண்டே இருந்தான்.</i>

எனது கதையில் வந்த இந்த வரிகளில் ஆபிரிக்க நாட்டவரின் பண்போ அன்றிப் பழக்கவழக்கமோதான் சுட்டப் படுகிறது. ஆபிரிக்க நாட்டவன் கூடாதவன் என்ற தொனி எந்தக் கட்டத்திலும் இல்லை.

இதற்குள் பிரதேசவாதத்தையோ அல்லது இனவாதத்தையோ பார்க்க முனைந்த உங்கள் மனதுள்தான் இனவாதம் தொனிக்கிறது. யாழ்ப்பாணக் கிடுகுவேலி என்ற உங்கள் வார்த்தையில் தொனிக்கும் கடுப்பில் உங்கள் பிரதேசவாதமும், வெள்ளைத்தோல் அடிமைநிலை என்ற உங்கள் வார்த்தையில் தொனிக்கும் எரிச்சலில், வெள்ளைத்தோலின் மேல் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பும் கறுப்புத்தோலின் மேல் நீங்கள் கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையும் அதனால் ஏற்பட்ட அடிமை மனப்பான்மை உணர்வுகளும் தெரிகின்றன.

ஐரோப்பியர்களை இனத்துவேசம் பிடித்தவர்கள் என்றும் கலாச்சார சீரழிவாளர்கள் என்றும் சொல்லித் திட்டும் பல ஆசியரை நான் சந்தித்துள்ளேன். உண்மையில் இந்த இனத்துவேசம் என்பது இப்படித் திட்டும் ஆசியர்களிடம்தான் குறிப்பாக எமது இனத்திடம்தான் அதிகமாக உள்ளது என்பதை நான் அடித்து வைத்துச் சொல்லுவேன்.

ஓரு ஐரோப்பியனின் நல்ல பண்புகளை நல்ல கண் கொண்டு பார்க்கத் தெரியாதவர்கள்தான் இப்படி வெள்ளைத்தோல், கறுப்புத்தோல் என்று பேச முற்படுவார்கள்.

ஒரு ஐரோப்பியனுக்கு உள்ள பண்புக்கும் ஆப்பிரிக்கனுக்கு உள்ள பண்புக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு. அதை நீங்களோ நானோ மறுக்க முடியாது. ஐரோப்பியன், ஆபிரிக்கன் என்று மட்டுமல்ல நான் மேலே குறிப்பிட்டது போல பழக்கவழக்கங்களும், பண்புகளும் அந்தந்த நாட்டுக்கேற்ப, நகருக்கேற்ப, கிராமத்துக்கேற்ப, மதத்துக்கேற்ப......... வளர்ந்த சூழ்நிலை, வளர்க்கப் பட்ட விதம், பிறந்ததிலிருந்தே அவர்களோடு ஊறிய சில நடைமுறைகள் என்பவற்றைப் பொறுத்து மாறுபடும்.

ஐரோப்பியரிடம் ஒரு பொது இடத்தில் பேசும் போது மற்றவர்களைத் தொந்தரவு பண்ணாத விதமாக மெதுவாகப் பேசும் தன்மை உண்டு. ஆப்பிரிக்கரிடமும், துருக்கியரிடமும் மற்றவர்கள் பற்றிய பிரக்ஞை இன்றி பொது இடங்களில் தமது பாசைகளில் உரத்துப் பேசும் தன்மை உண்டு. விதிவிலக்காக இவர்களில் ஒரு சிலர் இருந்தாலும் பெரும்பான்மை சமூகத்திடம் திருத்திக் கொள்ளப்பட வேண்டிய இந்தக் குறைபாடுகள் நிறைந்த தன்மைகள் நிறையவே உள்ளன. இதே போல ஆசியர்களிடமோ அன்றி, ஆப்பிரிக்கர்களிடமோ உள்ள நல்ல பண்புகளில் சில ஐரோப்பியர்களிடம் இல்லாமல் இருக்கிறது. இங்கு இனவாதமோ நிறபேதமோ கருத்தில் கொள்ளப் படத் தேவையில்லை. பிறப்பிலிருந்தே அவரவர்களோடு கூட ஒட்டி வந்த சில பழக்க வழக்கங்கள் அவர்களைப் பண்புகளால் பிரிக்கிறது.

உதாரணத்துக்கு எங்களுக்கு முந்தைய தலைமுறை எமது தலைமுறையை அடித்துத்தான் படிக்க வைத்தார்கள். - அடியாத மாடு படியாது - என்று சொல்லி கண்டிப்பாக அடித்துத்தான் வளர்க்க வேண்டும் என்பது போன்றதொரு மாயையை எம்முள் கூட ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். இதன் காரணமாக இன்றும் கூட ஐரோப்பியாவில் கூட எம்மவர் தமது பிள்ளைகளின் பிரச்சனைகளின் போது முதல் ஆயுதமாக - அடி - யைத் தான் கையாள்கிறார்கள். இதுவே ஒரு ஐரோப்பியனாக இருந்தால் பிரச்சனை என்றதும் பிள்ளை பாடசாலையால் வந்ததும் முதலில் அவனைச் சாப்பிட வைத்து அதன் பின் இன்று உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்லி அதற்கொரு நேரத்தைக் குறித்து அதன் பின் வீட்டிலோ, அல்லது வெளியில் நடந்தோ, அல்லது ஒரு பூங்காவிலோ மிகவும் அமைதியாகவும், ஆறுதலாகவும் பேச்சைத் தொடங்கி... பிரச்சனையைப் பற்றிப் பேசி, பிள்ளையின் மனநிலையை அறிந்து.... பிரச்சனை தீர்க்கப் படுகிறது. (100வீதமான ஐரோப்பியப் பெற்றோர்களும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்றோ இது விடயத்தில் பிழை விடமாட்டார்கள் என்றோ சொல்வதற்கில்லை. விதிவிலக்குகள் எங்கும் உண்டு.) இதுவே ஒரு தமிழன் வீட்டில் என்றால் இது ஒரு பிரளயமாகி விடும். இந்தப் பண்பு அதாவது பிள்ளைகளின் பிரச்சனைகளைக் கையாளும் பண்பு கூட நாட்டுக்கு நாடு வேறு படுகிறது.

இதே நேரம் ஒரு ஆப்பிரிக்கனோ அன்றி ஒரு ஆசியனோ சிறு வயதிலிருந்தே ஐரோப்பியாவில் வாழும் நிலை ஏற்படும் போது அவனது பண்பு இன்னும் வேறு விதமாக இருக்கும். தந்தையைப் போல பொது இடத்தில் சத்தம் போட்டுப் பேச மாட்டான். ஏனெனில் அவன் ஐரோப்பியரின் பண்பையும் பார்த்துக் கொண்டே வளர்கிறான். அவனது பண்புகள் அவன் வீட்டுக்குள் நடைமுறையில் இருக்கும் சில பண்புகளும், ஐரோப்பியப் பண்புகளும் கலந்து தனது வசதிக்கேற்ப தெரிவு செய்யப் பட்டு நல்லதோ கெட்டதோ வேறுபட்டதாகவே இருக்கும்.

இதே போலத்தான் பெண்களை அணுகும் முறையிலான பண்புகளும் ஆணின் குணம், அல்லது பெண்ணின் குணம் என்பதோடு மட்டும் நின்று விடாது இனம் மதம் இடத்துக்கேற்பவும் வேறுபடுகிறது.

உதாரணத்துகுக்கு ஒன்று சொல்கிறேன்.

இது சில மாதங்களின் முன் லண்டனில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம். கணவனை இழந்த அந்தத் தமிழ்ப்பெண் 12 வருடங்களாக அந்த அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். அங்கு அதுவரை கடமையில் இருந்த அனைத்து ஆங்கிலேயர்களும் அப்பெண்ணின் நிலையையும், நல்ல குணத்தையும் கவனத்தில் கொண்டு அவரோடு மிகவும் கண்ணியமாகவும், நட்பாகவும் பழகி வந்தார்கள். கணவன் இல்லை என்ற காரணமோ அல்லது பெண் என்ற காரணமோ அப் பெண்ணுக்கு அதுவரை அங்கு ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தவே இல்லை. 12 வருடங்களின் பின் முதன் முதலாக அங்கு ஒரு திருமணமான தமிழன் வேலைக்கு வந்து சேர்ந்தான். அந்தப் பெண் நட்பாகத்தான் அவனைப் பார்த்துச் சிரித்து வைத்தாள். அடுத்த நாளே அந்தத் தமிழன் இடைவேளையின் போது அவள் மேசைக்கு வந்து கதை கொடுத்து கணவன் இல்லாமல்தானே இருக்கிறாய் இரவுகளுக்கு நான் துணையாகிறேன் என்ற கருத்துப் படப் பேசினான். அந்தப் பெண் எவ்வளவோ சொல்லியும் அவன் அவளைத் தொந்தரவு செய்வதை நிறுத்தவேயில்லை................ இப்படி நடந்து கொண்டவன் ஆயிரத்தில் ஒரு தமிழன் அல்லது லட்சத்தில் ஒரு தமிழன் என்று நீங்கள் கூறலாம். ஆனால் ஐரோப்பியர்களை விட, கலாச்சாரம் பற்றி வாய்கிழியப் பேசும் எமது தமிழர்களிடம்தான் இந்தப் பண்பு அதிகமாய் உள்ளது.

இது போலத்தான் எனது கதையில் நான் குறிப்பிட்ட பண்பும். ஆண் பெண் மனிதன் என்பதற்கு மேலால் இடத்தோடும் வளத்தோடும் ஒட்டிய பண்பும் நிட்சயமாக ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது.

கறுப்புத்தோல் வெள்ளைத்தோல் என்ற பாகுபாடு வெள்ளையர்களை விட கறுப்பர்களிடம்தான் நிறைய உண்டு. கறுப்புத்தோலுக்கு அவர்கள் தரும் மதிப்பை வெள்ளைத்தோலுக்கு உங்கள் போன்ற எம்மவர்கள் கொடுப்பதில்லை.

இதற்குள் அவர்களுக்குத் துவேசம் என்ற கூற்று வேறு. வெள்ளையர்களின் நல்ல பண்புகளைப் பற்றிப் பேசினாலே மனசு பொறுக்காத எம்மவர்கள்தான் உண்மையில் சரியான துவேசம் பிடித்தவர்கள்.

நட்புடன்

சந்திரவதனா செல்வகுமாரன்</span>


நன்றி - சந்திரவதனா & திசைகள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#49
கட்டுரையின் விடயம் சந்திரவதனா அக்காவிற்கும் வாசகருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடாக இருப்பினும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கருத்து ஒன்றுள்ளது

இந்தக் கிடுகுவேலி என்ற பதம் இந்தக் களத்தில் கூட சிலரால் உபயோகிக்கப்பட்டுள்ளது கள நிர்வாகத்தினரை யாழ்ப்பாணத்துக் கிடுகுவேலிக் கலாச்சாரத்தின் எச்சங்கள் என்று கேலிபண்ணியதால் அக்கருத்தினை விவாதத்திற்கு எடுக்க விரும்பவில்லை ஆயினும் இப்போது நல்லதொரு சந்தர்ப்பம் வந்துள்ளது

சில பெரிய மனிதர்களுக்கு ஒரு நல்ல பண்புள்ளது யாரவது தங்களை விடப் பெரியவர்கள் எனத் தாங்கள் நினைப்பவர்கள் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதனை மேற்கோளிட்டு காலத்துக்குக் காலம் சொல்லித்திரிவது

இந்தக் கிடுகுவேலி என்ற பதம் முதலில் உபயோகிக்கப்பட்டது யாரால் என்று தெரியவில்லையாயினும் அதனைப் பிரபலப் படுத்தியது யாழ் எழுத்தாளர் செங்கை ஆழியான் தனது கிடுகுவேலி என்ற நாவலின் மூலம் யாழ் மண்ணில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தின் கதையைச் சொல்லி அதன் மூலம் வெறும் வாயை மெண்டவர்கள் மெல்லுவதற்கு அவலையும் விட்டுச்சென்றுள்ளார்

கந்தபுராணக்கலாச்சாரம் என்றழைக்கப்பட்ட யாழ்ப்பானத்துக் கலாச்சாரம் கிடுகுவேலிக் கலாச்சாரம் எண்றாகிப்போனதில் செங்கை ஆழியான் நிச்சயம் மகிழவில்லை அதனை தனது கதையின் மூலமும் அதனது முகவுரை மூலமும் தெளிவு படுத்தியுள்ளார்

அதனைத் தமக்குச் சார்பாக்கி அதன் மூலம் யாழ் மக்களை மட்டந்தட்டி மகிழ்பவர் யார் எனப் பார்த்தால் அது கிடுகுவேலிக் கலாச்சாரம் என்ற இப்பதத்தின் தொனிப்பொருளை முழுதாக விளங்கிக் கொள்ளாதவர்களே

யாழ் மக்கள் மட்டுமல்ல எந்தவொரு சமூகத்தைச் சார்ந்தவர்களும் தான் தனது குடும்பம் என்று வாழ்வதையே விரும்புவர் இது வரவேற்கத்தக்கதொரு அம்சமே ஒவ்வொருத்தரும் தனது குடும்பத்தில் கவனம் செலுத்தினால் அது வெறுமனே அக்குடும்பத்தின் வளர்ச்சிக்கன்றி அவரது சமுதாயத்தின் வளர்ச்சிக்கே வழிகோலும்

இவ்வாறு தான் தனது என்பதில் மட்டும் கவனம் செலுத்தத் தலைப்பட்ட சமுதாயத்தின் மக்களது போக்கில் தலைதூக்கிய சுயநலத்தைச் சாடும் முகமாகவே செங்கை ஆழியான் இக்குறியீட்டுப் பெயரை உபயோகித்தார்

ஒவ்வொருத்தரும் தமது குடும்பவிடயங்கள் வெளியே தெரியாதவாறு மறைப்பதற்காக அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த கிடுகுவேலிகள் உதவின என்ற கருத்துப்பட அவர் இதனைக் கூறினாலும் வெறுமனே கிடுகுவேலிகளால் சமுதாயத்திலுள்ள ஓட்டைகள் மறைக்கப்பட முடியாது என்பதே அதன் தொனிப்பொருள்

அவ்வாறு ஓட்டைகள் உள்ள சமுதாயம் தான் இன்று எங்கும் நிறைந்துள்ளது அது யாழ் மண் என்றால் என்ன மட்டக்களப்பு என்றால் என்ன கொழும்பு என்றால் என்ன புகலிட நாடுகள் என்றால் என்ன எவ்வளவுதான் சமூகத்தோடு ஒட்ட ஒழுகினாலும் எமது நிர்வாணம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதில்தான் எல்லோரும் முனைப்புக் காட்டுகின்றார்கள்

இதுதான் மனித நியதியும் கூட நிர்வாணம் தான் உண்மை என்றாலும் உள்ளே இருப்பது என்னவெண்று எல்லோருக்கும் தெரியும் தான் என்றாலும் அதனை மறைப்பதற்கு எல்லோருக்கும் ஒரு துண்டுத்துணி தேவைப்படுகின்றது அல்லவா?

அதுதான் யாழ்ப்பானத்தவர்களுக்கு கிடுகுவேலி தீவுப்பகுதி மக்களுக்கு பகிறு வேலி கொழும்பிலும் புகலிட நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தொடர்மாடிக்கட்டங்களின் சுவர்கள்

நான் எனது என்று கிடுகுவேலிகட்டி வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட யாழ் மண்ணில் சமூகக் கட்டமைப்புகள் எவ்வாறு இறுக்கமாக இருந்தன அந்தக் கிடுகுவேலிகளைக் கூட ஊர் கூடிச் சேர்ந்துதான் அடைத்தனர் ஓவொரு குடும்பத்தவர்களுடைய வேலைகளும் ஊர்மக்கள் கூடிச் செய்தனர் அப்படியிருக்க கிடுகுவேலி அடைத்ததற்கு சொல்லப்பட்ட காரணம் எட்டப்பட்டதா?

ஒரு வகையில் பார்த்தால் கிடுகுவேலிகள் கூட நியாயமானதுதான் எனது வீட்டு அசிங்கம் வெளியில் போகவேண்டாம் உனது வீட்டு அசிங்கம் எனது வீட்டுக்குள் வரவேண்டாம் என அடைப்புக்கட்டிய வாழ்க்கைக்கு கிடுகுவேலி வாழ்க்கை முழுமையான வெற்றியை அழிக்காவிட்டாலும் நிறைந்த பங்களித்ததை மறுக்க முடியாது

அப்படியிருக்க தன் வீட்டு வளவு எல்லைக் கோடு எதுவுமின்றி ஊரவன் யாராவது வந்து மேய்ந்துவிட்டுப் போகும் தரத்தில் இருக்க இவ்வசிங்கம் தன் வீட்டுக்குத் தொற்றிவிடக் கூடாது என்று உயரமாகக் கிடுகுவேலி அடைத்த எதிர்வீட்டுக்காரனைப் பார்த்தால் பொருமல் வரத்தான் செய்யும் அதுதான் தம்மை நியாயப்படுத்தும் யாழ்ப்பாணத்து கிடுகுவேலிக் கலாச்சாரம் என்ற நகையாடல்
\" \"
Reply
#50
உங்கை கிடந்த வேலியளெல்லாம் உக்கிப் போகுதெண்டு அவனவன் மதில் கட்டீட்டான் இனி உவை என்ன செய்வினம் யாழ்ப்பாணத்து மதில் கலாச்சாரம் எண்டு சொல்லுவினமே

உவங்கள் உப்பிடித் தான் உதுக்கெல்லாம் மினக்கெட்டுப் பதில் சொல்லிக் கொண்டு...
Reply
#51
உங்கள் கருத்துக்களுக்காக ............

மழலைகளும் மன்மதராசாவும்

"..... மக்களுக்கு பிடித்திருக்க வேண்டுமென்பதற்காகஇ மக்களுக்குப் பிடித்தமானவையென்று வர்ணிக்கப்படுகின்ற கீழ்த்தரமான காரியங்களை மனங் கூசாமல் நாம் செய்ய முடியுமா? எல்லோரும் அணிகிறார்கள் என்று எல்லோருக்குமே தெரியும் என்பதற்காக கோவணத்துண்டுகளை 'கோலிங் பெல்லுக்கு' அருகே யாரும் கொழுவுவதில்லையே!..... "
தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில் அண்மையில் சின்னஞ் சிறுசுகளுக்கான வாராந்த நிகழ்ச்சியொன்றை தற்செயலாகப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.

நிகழ்ச்சியை நடத்தும் சிறுமியுடன் தொலைபேசி மூலமாக சின்னஞ் சிறுசுகள் தொடர்பு கொண்டு உரையாடி தங்கள்; கல்வி மற்றும் பொழுது போக்குகள் எனப் பலவாறான விடயங்களையெல்லாம் பற்றி சுவாராஸ்யமாகப் பேசியதைக் கேட்கவும் பார்க்கவும் மனதுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறுவர்கள் எழுதியனுப்பிய கடிதங்களையெல்லாம் வாசித்துக் காட்டிய அச் சிறுமி அவர்கள் வரைந்து அனுப்பிய ஓவியங்களையெல்லாம் காண்பித்தார்.

இடையில் இரு மழலைகள் மிகவும் விரசமான தென்னிந்திய சினிமாப் பாடல் ஒன்று பின்னணியில் ஒலிக்க நடனமாடிய நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. அந்தப் பாடல் 'காதல்..." என்று தான் ஆரம்பிக்கிறது. ஆனால்இ அப்பாடலுக்கு ஆடிய சிறுவனுக்கும் சிறுமிக்கும் 5 வயது கூட ஆகாது என்று நினைக்கிறேன்.

சினிமாவில் காதலன்இ காதலி டூயட் பாடுவது போன்றே அந்த நிகழ்ச்சி.

இதுமட்டுமல்ல. வேறு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலே 'மன்மதராசா...மன்மதராசா...'இ சின்னவீடு பிடிக்குமா.....பெரியவீடு..பிடிக்குமா' போன்ற மிகவும் விரசம் ததும்பும் பாடல்களுக்கும் கூட மழலைகளை ஆட வைத்து ரசிக்கின்றார்கள். அந்த மழலைகளுக்கு மன்மதராசாவையும் யாரென்று தெரியாது.

சின்ன வீடு பெரிய வீடு என்றால் என்ன சமாச்சாரம் என்றும் புரியாது. என்ன விளங்குதோ இல்லையோ ஆடிக் குதிக்கின்றார்கள். பெற்றோர்களும் அதைப் பார்த்து குதூகலித்துப் போகிறார்கள்.

அன்றொருநாள்இ இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் காலை 7 மணிக்கும் நண்பகல் 12.45 மணிக்கும் இடையில் 'மன்மதராசா...' பாடல் ஜந்து தடவைகள் வேறுவேறு நிகழ்ச்சிகளில் ஒலிப்பரப்பானதாக நண்பர் ஒருவர் கூறி வேதனைப்பட்டார். அவரும் ஜந்து தடவைகளும் அந்த மன்மதராசாவைக் கேட்டுத்தான் இருக்க வேண்டும். அல்லது சரியாக எப்படி ஜந்து தடவைகள் என்று கணக்குச் சொல்ல முடியும்.?

இந்தப் பாடல்கள் எல்லாம் போதாதென்றுஇ மன்மதராசாவின் மெட்டிலேயே 'போடு போடு....' பாடலும் தாய்த் தமிழகத்தில் இருந்து எம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. 'பொத்து....பொத்து...' என்றும் ஒரு பாடல். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இந்த அநியாயத்தை.

மன்மதராசா பாடல் ஜனரஞ்சகமாகி விட்டதால் அடிக்கடி போட வேண்டியிருக்கிறது என்று தனியார் ஒலிபரப்புச் சேவையொன்றின் அதிகாரியொருவர் சொன்னார். இத்தகைய விரசமான பாடல்கள் என்றால் ஜனரஞ்சகமானவையாகி விட்டனவா? அல்லது ஜனரஞ்சகமானவையாக்கப்பட்டு விட்டனவா?

மக்களுக்கு பிடித்திருக்க வேண்டுமென்பதற்காகஇ மக்களுக்குப் பிடித்தமானவையென்று வர்ணிக்கப்படுகின்ற கீழ்த்தரமான காரியங்களை மனங் கூசாமல் நாம் செய்ய முடியுமா? எல்லோரும் அணிகிறார்கள் என்று எல்லோருக்குமே தெரியும் என்பதற்காக கோவணத்துண்டுகளை 'கோலிங் பெல்லுக்கு' அருகே யாரும் கொழுவுவதில்லையே!

புதிய மனிதனை உருவாக்க புதிய ரசனையையும் உருவாக்க வேண்டும். இது எடுத்த எடுப்பில் செய்யப்படக்கூடியதுமல்ல: படிப்படியாகச் செய்யப்பட வேண்டும்.

ஆனால் நமது தொலைக்காட்சி சேவைகளும் வானொலிகளும் ஊடகங்களும் என்ன செய்கின்றன. மழலைகளையெல்லாம் மன்மதராசாக்களாக்குகின்றன.

ஏற்கனவே சமுதாயத்தில் பல பண்புச் சீரழிவுகள். இதற்கிடையே மழலைகளும் மன்மதராசாக்களாகி விட்டால் நாம் எங்கே போய் முடியப் போகின்றோம்.

நன்றி - அண்ணாவியார் / சூரியன் வெப்தளம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#52
முந்தநாள் வெக்ரோன் ரீவியில்
ஸ்மிதாவின் உள்பாடி அளவு கேட்டார் ஒரு தமிழன்.
Reply
#53
உண்மையான ஒரு விடையம். BBC சில பெற்றோர்கள் கூட என் பிள்ளை இந்த பாடலைக்கேட்டு துள்ளுறான், குதிக்கிறாள் என்று தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பெருமை பேசுவதையும் அவர்களிற்காக இப்படியான பாடல்களை விரும்பி கேட்பதையும் நான் கண்டு கவலைப்பட்படிருக்கிறேன். இப்படியான பாடல்கள் எமது கலாச்சாரத்தை எங்கு கெண்டுசென்று விடப்போகிறது என்பதை எப்பொழுது தான் புரிந்து கொள்ளப்போகிறோமோ தெரியாது. வேதனையான விடயம்தான்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#54
மன்மதராசா... பாடலின் தரம் கெட்ட வார்த்தைகளுக்காகவே ஒரு வானொலி அந்த பாடலை ஒலிபரப்புவது இல்லை.
Reply
#55
சீதாக்கா - வ.ந.கிரிதரன்

புலம் பெயர்ந்தாலும் புலன் பெயரவில்லை

1.
இன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது. மான்ரியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான போதுதான் "மன்னிக்கவும். நீ சிறீலங்கா நாட்டவனா?" என்று ஆங்கிலத்தில் ஆண் குரல் கேட்கவே திரும்பினேன். எதிரே வெள்ளையினத்தைச் சேர்ந்த பஸ் டிரைவரொருவன் நின்றிருந்தான்.

"ஆம். நண்பனே. என்ன விடயம்" என்றேன்.

"நல்லதாகப் போய் விட்டது. நான் மான்ரியாலிருந்து வந்த பஸ் டிரைவர். என்னுடைய பஸ்ஸில் ஒரு சிறீலங்காத் தமிழ்ப் பெண்ணொருத்தி வந்திருக்கிறாள். அகதியாக வந்தவள். இங்கு அவளுக்கு யாரையுமே தெரியாது. உன்னால் முடிந்தால் உதவ முடியுமா?"

"தாராளாமாக "வென்றேன்.

"மிகவும் நன்றி நண்பனே!" என்றவன் பயணிகள் தங்கியிருக்கும் கூடத்திற்குச் சென்று சிறிது நேரத்தில் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.

"நண்பனே! இந்தப் பெண்ணுக்குத் தான் உன் உதவி தேவை" என்றவாறு அழைத்து வந்த பெண்ணைப் பார்த்த எனக்கு வியப்புத் தாளவில்லை.

"சீதாக்கா" என்று கத்தியே விட்டேன்.

சீதா அக்காவுக்கும் என்னைக் கண்டதில் அளவிடமுடியாத வியப்புத் தான். எதிர்பாராத சந்திப்பல்லவா. மான்ரியால் பஸ் டிரைவருக்கு நன்றி கூறினேன். அவனும் " உனக்கு முன்பே இவளைத் தெரியுமா? நல்லதாகப் போய் விட்டது. எல்லாம் கடவுள் அருள்" என்று கூறி விட்டுச் சென்றான்.

"சீதாக்கா நம்பவே முடியவில்லையே! "யென்றேன்.

"எனக்கும் தான் மாது. பார்த்து எவ்வளவு நாளாச்சு " என்றாள் சீதாக்கா.

சீதாக்கா உண்மையிலேயே நல்ல வடிவு தான். அதிகாலையில் எழுந்து, கோலம் போட்டு. அருகிலிருக்கும் பிள்ளையார் கோயில் சென்று கோயில் ஐயருக்கு வேண்டிய உதவிகளெல்லாம் செய்து வருவதையெல்லாம் வியப்புத் ததும்ப பார்த்துக் கொண்டிருப்பேன். ஊரில் யாருக்கு என்ன உதவியென்றாலும் உதவி செய்யத்
தயங்காத உள்ளம் சீதாக்காவினுடையது. ஆண்பிள்ளையில்லாத குடும்பம். வயதான தாயையும் பார்த்துக் கொண்டு, ஊரிலிருந்த நெசவு சாலையில் வேலை பார்த்துக் கொண்டு, எந்தவிதமான சூழல்களையும் துணிவாக ஏற்றுக் கொண்டு வளையவரும் சீதாக்காவைப் பார்க்கும் போதெல்லாம் பெருமையாகவிருக்கும். சீதாக்காவுக்கு எப்பொழுதுமே துணை நான் தான். நூல் நிலையம் போகும்போது என்னைத் தான் எப்பொழுதும் கூட்டிச் செல்வாள். சீதாக்காவும் என் மூத்த அக்காவும் நல்ல சிநேகிதிகள். இருவருக்குமிடையில் நாவல்களைப் பரிமாறுவது நான் தான். கல்கி, விகடனில் வந்த தொடர்கதைகளை அழகாகக் கட்டி வைத்திருப்பாள். ஜெயகாந்தன், உமாசந்திரன், நா.பார்த்தசாரதி, அகிலன், கல்கி, ஜெகசிற்பியன் நாவல்களென்றால் சீதாக்காவுக்கு உயிர். ஆனால் ..சீதாக்கா பாவம். இவ்வளவு அழகிருந்தும், குணமிருந்தும் அவளுக்குக் கல்யாணம் மட்டும் ஆகவேயில்லை. இந்த ராஜகுமாரியைக் கூட்டிக் கொண்டு போக எந்த ராஜகுமாரன் வரப் போகின்றானோவென்றிருக்கும். நான் ஊரில் இருந்த வரையில் ஒரு ராஜ குமாரனுக்கும் அந்த அதிருஷ்ட்டம் வாய்த்திருக்கவில்லை. எண்பத்து மூன்று கலவரத்தைத் தொடர்ந்து நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன். அதன் பிறகு இப்பொழுதுதான் பத்து வருடங்கள் கழித்து சீதாக்காவைக் காண்கின்றேன்.

"சீதாக்கா நம்பவே முடியவில்லையே" என்றேன்.

"எனக்கும்தான் மாது. நம்பவே முடியவில்லை. நான் நம்புகிற கதிர்காமக் கந்தன் என்னைக் கை விடவில்லை" என்றாள் சீதாக்கா.

"சீதாக்கா எப்ப ஊரிலையிருந்து வந்தனீங்கள்"

"அது பெரியதொரு கதை. ஆறுதலாகச் சொல்லுகிறன். அது சரி நீ எப்ப கனடா வந்தனீ. ஜேர்மனியிலை நிற்கிறதாகவல்லவா கேள்விப்பட்டனான்"

"ஜேர்மனியிலைதான் இருந்தனான். போன வருஷம் தான் இங்காலை வந்திட்டேன். அங்கும் பிரச்சினைகள் தானே. நாங்களிருந்த இடத்திலை நாசிகளின்ற கரைச்சல் வேறு. மற்றது அங்கிருந்தால் 'பேப்பரும்' இலேசாகக் கிடைக்காது "

குடியுரிமைக்கான பத்திரங்களை 'பேப்பர்' என்றுதான் பொதுவாகக் கூறுவது வழக்கம்.

"இங்கே யாரோடை இருக்கிறாய் மாது"

"நானும் ஒரு நண்பனுமாக அபார்ட்மெண்ட் எடுத்து இருக்கிறம். கோப்பி ஏதாவது குடிக்கப் போறீங்களா சீதாக்கா"

இருவருமாக அருகிலிருந்த டோனட் கடையன்றுக்குச் சென்று காப்பி அருந்தி விட்டு எனது இருப்பிடம் நோக்கிப் பயணித்தோம். பாவம் சீதாக்கா. ஊரில் இருந்த போதெல்லாம அவளுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டெமென்று நினைப்பேன். ஆனால் அதற்கான வசதிகள் என்னிடமிருக்கவில்லை. ஆனால் இம்முறை எனக்கு அதற்கான வசதிகள் நிறையவேயிருக்கின்றன. சீதாக்காவுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுமென மனதினுள் முடிவு செய்து கொண்டேன்.

'டொன்வலிப் பார்க்வே'யில் அதிகாலையென்ற படியால் வாகன நெரிச்சல் அவ்வளவாகவிருக்கவில்லை. மெல்லிய குளிர்காற்றில் விரைவதே சுகமாகவிருந்தது.

"சீதாக்கா நேராக ஊரிலிருந்தா வாறீங்கள்.."

"அது ஒரு பெரிய கதை. நானும் அவருமாக ஊரிலையிருந்து போன மாசம் ஒரு ஏஜெண்ட்டோடை வெளிக்கிட்டனாங்கள். அவரை சிங்கப்பூரிலை விமான நிலையத்திலை நிற்பாட்டிப் போட்டாங்கள். இனி இங்கையிருந்து கொண்டு தான் அவரைக் கூப்பிட முயற்சி செய்ய வேண்டும்"

என்ன! சீதாக்காவுக்குக் கல்யாணம் ஆகி விட்டதா? நிம்மதியாகவிருந்தது.

"சீதாக்கா எப்ப உங்களுக்குக் கல்யாணம் நடந்தது? எனக்குத் தெரியாதே."

"போன வருஷம் தான். அவர் எங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத்திலை வாத்தியாராகவிருந்தவர். வெளியூர்க்காரர். எங்களுடைய வீட்டிலைதான் சாப்பாடு. அப்ப ஏற்பட்ட பழக்கம் தான். நல்ல மனுஷண்டா மாது"

சீதாக்காவின் முகத்தில் வெட்கத்தின் சாயை படிந்தது.

"ஒன்றுக்கும் கவலைப் படாதையக்கா. எப்படியாவது அவரை இங்கே கூட்டி வந்து விடலாம்"

என்று சீதாக்காவுக்கு ஆறுதல் கூறியபொழுது மனதினுள் எப்படியாவது இம்முறை சீதாக்காவுக்கு உதவி செய்ய வேண்டுமென முடிவு செய்து கொண்டேன். அவளுக்குத் திருமணம் செய்து வைக்க உதவ வேண்டுமென எண்ணியதுண்டு. அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ அவளை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கட்டாயம் என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.

2.
"சீதாக்கா, இவன் தான் என் 'ரூம்மேட்' சபாபதி. உன்னை மாதிரித்தான் சரியான சாமி பைத்தியம். சபா! சீதாக்கா எங்களுடைய ஊர் தான். பஸ் டேர்மினலிலை தான் சந்தித்தனான். கொஞ்ச காலத்திற்கு எங்களுடன் தான் தங்கப் போகின்றா"

"ஹலோ. உங்களைப் பற்றி இவன் அடிக்கடி கதைப்பான் "

சபாபதிக்கும் சீதாக்காவுக்கும் உடனடியாகவே ஒத்துப் போய் விட்டது.

"மாது! உனக்கு நல்லதொரு நண்பன் வாய்த்திருக்கிறான்" என்று மனம் நிறைந்து பாராட்டினாள்.

சீதாக்கா வந்ததிலிருந்து எங்களுடைய அபார்ட்மெண்ட்டின் கோலமே மாறி விட்டது. அதுவரையில் பிரம்மச்சாரிகளுக்குரிய வகையில் அலங்கோலமாகக் கிடந்த அப்பார்ட்மெண்ட் தலைகீழாக மாறி விட்டது. அபார்ட்மென்டிற்கே ஒருவித வடிவும் ஒழுங்கும் வந்து விட்டது. அதிகாலையிலேயே எழுந்து விடும் சீதாக்கா டேப்பில் எம்.எஸ்.சின் சுப்ரபாதத்தினைப் போட்டு விடுவாள். குளித்து விட்டு எந்த வித விகல்பமுமில்லாமல் குறுக்குக் கட்டுடனேயே உலராத கூந்தல் தோள்களில் புரண்டபடியிருக்க அபார்ட்மெண்ட் முழுக்க சாம்பிராணி புகையை பரப்பி விடுவாள். அதுவரை அழுது வடிந்து கொண்டிருந்த அபார்ட்மெண்ட்டிற்கே ஒருவித லக்சுமிகரக் களை வந்து விட்டது. என்னைவிடச் சபாபதிக்குத் தான் சரியான சந்தோசம். தன்னைப் போலொரு சரியான சாமிப் பைத்தியம் வந்து விட்ட மகிழ்ச்சி அவனுக்கு.

நான் சீதாக்காவை இங்கு அனுப்பிய முகவருடன் தொடர்பு கொண்டு அவளுடைய கணவர் பற்றிய தகவல்களைப் பெறு முயன்றேன். அதில் வெற்றியும் கண்டேன். அவளது கணவன் இன்னும் தன்னுடைய பராமரிப்பில் தான் இருப்பதாகவும், அவனை எப்படியும் கனடா அனுப்புவது தனது கடமையென்றும் அவன் உறுதி தந்தான். சீதாக்காவையும் அவளது கணவனுடன் கதைப்பதற்கு ஒழுங்குகள் செய்தான்.

"இஞ்சேருங்க! நீங்க ஒன்றுக்கும் கவலைப் படாதையுங்கோ. நான் சொல்லுவேனே மாது. அவனும் இங்கு தான் இருக்கிறான். அவனுடன் தான் தங்கியிருக்கிறன். நான் நம்பியிருக்கிற கதிர்காமக் கந்தன் என்னைக் கை விடேல்லை. உங்களையும் கெதியிலை கொண்டு வந்து சேர்த்து விடுவான். மாது. அவர் உன்னோடையும் கொஞ்சம் பேச வேண்டுமாம்"

என்று தொலைபேசியைத் தந்தாள் சீதாக்கா.

"மாது! மெத்தப் பெரிய நன்றி. நீங்க செய்த உதவியை மறக்க மாட்டோம்" என்று அவளது கணவன் மன நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தான்.

"நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் படாதீங்கோ அங்கிள். எப்படியும் கெதியிலை இங்கை வந்து விடுவீங்கள். சீதாக்காவைப் பற்றிக் கவலையே பட வேண்டாம்" என்று அவருக்கு உறுதியளித்தேன்.

3.
நாட்கள் சில விரைவாக சென்று மறைந்தன. மாதங்கள் சிலவும் கடந்து சென்றன. சீதாக்காவின் கணவர் விடயத்தில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இரண்டாம் முறையும் ஏதோ தடங்கல். சீதாக்கா முகத்திலும் சில வேளைகளில் கவலை படரத் தொடங்கியது.
"சீதாக்கா! ஒன்றுக்கும் கவலைப் படாதீங்கோ. எப்படியும் அவர் கெதியிலை வந்து விடுவார்" என்று ஆறுதல் கூறினேன்.

ஏன் தான் கடவுள் சீதாக்காவை இப்படிப் போட்டுச் சோதிக்கின்றாரோ என்றிருக்கும். இதற்கிடையில் எனக்கும் ஊரில் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து முடிந்திருந்தன. பெண்ணைப் பார்ப்பதற்காக என்னைக் கொழும்பு விரைவில் வரும்படி அக்கா கடிதம் போட்டிருந்தா. கனடா மாப்பிள்ளையென்றபடியால் கொழுத்த சீதனாமாம். பெட்டையும் நல்ல வடிவாம். சிவப்பாய் தக்காளிப்பழம் மாதிரி. தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்கள் மாதிரி கனவுகளில் மிதக்க ஆரம்பித்தேன். இவ்விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில் தான் நான் சபாபதியிலேற்பட்டிருந்த மாற்றத்தினை அவதானிக்கத் தொடங்கினேன். அடிக்கடி ஊற் சுற்றிக் கொண்டிருந்தவன் இப்பொழுதெல்லாம் அநேகமாக அப்பார்ட்மென்டே கதியாகக் கிடக்கத் தொடங்கினான். அதிகாலையே சீதாக்காவுடன் சேர்ந்து எழுந்து விடத் தொடங்கினான். குறுக்குக் கட்டுடன் சாம்பிராணித் தட்டுடன் வரும் சீதாக்காவின் மேல் அவனது கண்கள் இரகசியமாக மேயத் தொடங்கியதைத் தற்செயலாக அவதானித்தேன். ஓரிரவு வீடு அபார்ட்மெண்ட் திரும்பிய பொழுது வீடியோவில் தமிழ்த் திரைப்படமொன்று ஓடிக் கொண்டிருந்தது. சீதாக்கா சோபாவில் சாய்ந்து நித்திரையாகிக் கிடந்தாள். படம் பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கிப் போயிருக்க வேண்டும். அவளது சேலை கூட இலேசாகி மார்பிலிருந்து விலகிக் கிடந்தது. இதனை உணராமல் தூங்கிக் கிடந்தவளை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த் சபாபதி என்னை கண்டதும் சிறிது திகைத்தவனாகத் தனது பார்வையினை மாற்றினான். எனக்கு முதல் முறையாகக் கவலையேற் பட்டது. சீதாக்காவுக்கு இவனாலேதாவது மனக் கஷ்ட்டங்களேற்பட்டு விடக் கூடாதேயென்று மனம் தவித்தது. சபாபதி நல்லவன்.ஆனாலும் பருவக் கோளாறு. தவறிழைக்க மாட்டானென்று பட்டது. ஆனால் ..எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? சீதாக்காவை அவளது கணவருடன் சேர்த்து வைக்கும் மட்டும் அவளைப் பாதுகாத்து வைக்க வேண்டுமேயென்று மனது கிடந்து அடித்துக் கொண்டது.
இதற்கெல்லாம் முடிவு....சபாபதியை வெளியே அனுப்புவது தான். இவன் என் நீண்ட கால நண்பனல்லவே, கனடாவிற்கு வந்த இடத்தில் அறிமுகமானவன் தானே. ஒரு நாள் அவனைத் தனியாக அழைத்துக் கொண்டு அருகிலிருந்த டோனட் கடைக்குச் சென்றேன்.

"இங்கை பார் சபா. உன்னோடைத் தனியாக ஒரு விசயம் பேச வேண்டும்"

'என்ன? ' என்பது போல் அவன் என்னை நோக்கினான்.
"இஞ்சை பார் சபா. நான் சுத்தி வளைக்க விரும்பவில்லை. இனியும் நீ என்னுடன் இருப்பதை நான் விரும்பவில்லை. சீதாக்கா போகும் மட்டுமாவது நீ என்னுடனிருப்பதை நான் விரும்பவில்லை. உனக்கு விளங்குமென்று நினைக்கிறேன். இந்த அபார்ட்மெண்டுக்கு நீ வரும் போதே ஒரு மாதம் நிற்கிறனென்று தான் நீ வந்தனீ. நானும் விரைவிலை கல்யாணம் செய்யவிருக்கிறன். அதன் பிறகு என்னுடைய மனுசியும் வந்து விடுவாள். நீ வேறை அபார்ட்மெண்ட் பார்க்கிறது நல்லது..."

சபாபதி இதற்கேதும் மறுப்புத் தெரிவிக்காதது எனக்கு ஆச்சர்யமாகவிருந்தது. அடுத்த வாரமே அவன் இடம் மாறி விட்டான். சீதாக்காவுக்குக் கூட வியப்பாகவிருந்தது. "ஏன் கெதியிலை மாறிவிட்டான். உங்களுக்கிடையிலை ஏதாவது பிரச்சினையோ?' என்று கேட்டாள்.

4.
சபாபதியின் அமைதிக்கான காரணம் விரைவிலேயே விளங்கி விட்டது. அபார்ட்மெண்ட் மாறிய வேகத்திலேயே அவன் எனக்கும் சீதாக்காவுக்குமிடையில் தொடர்பு இருப்பதாக கதையினைப் பரப்பி விட்டான். நான் இதனைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இவன் இவ்வளவு நஞ்சு மனம் கொண்டவனாக இருப்பானென்று நான் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. எனக்கு என்னைப் பற்றிக் கவலையேதுமில்லை.ஆனால் இவற்றால் சீதாக்காவுக்கு ஏதாவது பிரச்சினைகளேதாவது வந்து விடக் கூடாதேயென்று மனம் கிடந்து தவித்துக் கொண்டது. இதற்கு என்ன செய்யலாமென்று மூளையைப் போட்டுக் குடைந்தது தான் மிச்சம். இதற்கிடையில் இதன் முதலாவது விளைவாக அக்காவின் கடிதம் வந்திருந்தது.

" தம்பி, உனக்குப் பேசிய கல்யாணம் முறிந்து விட்டது. உனக்கும் எங்களுடைய சீதாக்காவுக்கும் தொடர்பாமென்று யாரோ கதை கட்டி விட்டிருக்கிறாங்கள் போலை. அவங்களுடைய காதுகளுக்கும் அந்தக் கதை போய் விட்டது. இந்தச் சம்மந்தம் வேண்டாமென்றிட்டாங்கள். நான் சொல்லுறனென்று குறை நினைக்கதையடா. பனை மரத்தினடியில் நின்று பால் குடிச்சாலும் கள்ளு குடிக்கிறதாத் தானிந்த உலகம் சொல்லும். உன்னை எனக்குத் தெரியும். சீதாவை எனக்குத் தெரியும். ஆன இந்த உலகத்துக்கு இதெல்லாம் விளங்கவாப் போகுது. நீ சீதாவுக்குத் தனியாக அபார்ட்மெண்ட் பார்த்து வைக்கிறதுதான் உனக்கும் நல்லது. அவவுக்கும் நல்லது. அவளின்ற புருசனுக்கும் இந்தக் கதை போய் ஏதாவது பிரச்சினை வரக் கூடாது பார்"

இவ்விதம் எழுதியிருந்தாள். எனக்குக் கவலை கவலையாகவிருந்தது. சீதாக்காவை நினைத்தால் தான் பாவமாயிருக்கு. பாழாய்ப்போன் சீதனப் பிரச்சினையால் தள்ளிப் போய்க்கொண்டிருந்த அவளுடைய நல்ல காலம் அவளைப் புரிந்து கொண்ட ஒரு இராமன் அவளுக்குக் கிடைத்திருக்கிறான். சீதாப் பிராட்டியையே இந்தப் பாழாய்ப் போன் ஊர் விட்டு வைக்கவில்லையே. அக்கினி குளிக்கவல்லவா வைத்து விட்டது. பாவம் சீதாக்கா. இவளை மட்டும் சும்மா வைத்து விடுமா?

5.
அன்று வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ஒரு முடிவுடன் வந்து கொண்டிருந்தேன். என்னுடன் வங்கியில் வேலை பார்க்கும் சக நண்பியான யோகமாலா அவளும் தாயுமாகத் தான் அண்மையில் வாங்கிய 'கொண்டோ'விலையிருக்கிறாள். அவளுடன் இப்பிரச்சினை பற்றிக் கதைத்ததில் அவள் சீதாக்காவை அவள் கணவர் வரும் மட்டும் தன்னுடன் வந்து தங்கியிருக்க உதவுதாக உறுதியளித்தாள். அதற்குப் பதிலாக என்னால் முடிந்த அளவுக்கு அவளுக்கு வாடகை தருவதாக நானும் உறுதியளித்தேன். இது பற்றி சீதாக்காவுடன் கதைக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். எப்படித் தொடங்குவது என்பது தான் தெரியவில்லை. ஒரு களங்கமில்லாத நட்புக்குக் கூடக் களங்கம் கற்பித்து விடுகின்றதே இந்த உலகம். ஊரில் தான் பிரச்சினை என்று வந்தால் இங்கும் நாட்டு நிலைமகளால் ஓடி வந்த சீதாக்காவுக்கு உதவக் கூட முடியாமலிருக்கிறதே.

அபார்ட்மெண்ட் வந்த எனக்கு முதலில் அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக வந்து கதவைத் திறக்கும் சீதாக்காவைக் காணவில்லை. அபார்ட்மெண்ட் இருளில் மூழ்கிக் கிடந்தது.

லைற்றைப் போட்டேன். சீதாக்காவைக் ஓரிடத்திலும் காணவில்லை. அப்பொழுதுதான் மேசையில் விரித்து வைக்கப் பட்டிருந்த கடிதத்தினை அவதானித்தேன். அவசரமாக எடுத்துப் பிரித்தேன்.
சீதாக்கா தான் எழுதியிருந்தாள்.

"மாதவா! நான் இப்படி சொல்லிக் கொள்ளாமல் போவதற்காகக் கோபிக்க மாட்டாயென்று நினைக்கிறேன். இன்று என்னுடைய கணவர் சிங்கப்பூரிலிருந்து போன் பண்ணியிருந்தார். அப்பொழுதுதான் உன்னையும் என்னையும் சேர்த்துக் கதை கட்டியிருந்த விசயம் பற்றிக் கூறினார். அவரது கவலையெல்லாம் உன்னைப் பற்றித் தான். அவருக்கு என்னைப் பற்றி நல்லாத் தெரியும். இந்தக் கதைகளைப் பற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார். எனக்கு இப்பிடியரு நல்ல புருசன் கிடைத்தது கதிர்காமக் கந்தனின்ர அருளால் தான். உன்னுடைய அக்காவும் இன்று பகல் போன் பண்ணியிருந்தா. அப்பத் தான் எனக்கு உன் கல்யாணம் நின்ற விசயமே தெரியும். நான் இங்குள்ள சுப்பர்மார்க்கட்டிலை அடிக்கடி சந்திக்கிற மட்டக்களப்புப் பெட்டையன்று தனியாத் தான் அபார்ட்மெண்ட் எடுத்துத் தங்கியிருக்கிறா. அவ ஒவ்வொரு முறை சந்திக்கிற போதும் தன்னுடன் வந்து விடும்படி கேட்கிறவ. அவவுடன் போவதாக முடிவு செய்து விட்டேன். என்னாலை உனக்கு வீணாகப் பிரச்சினைகளேதாவது வந்து விடக் கூடாது பார். உன்னுடன் நேரிலை இதை கூற எனக்குத் துணிவில்லை. அதுதான் கூறாமலே போகின்றேன். நான் உனக்குப் பிறகு ஆறுதலாகப் போன் எடுக்கிறேன்...இப்படிக்கு... சீதாக்கா" என்றிருந்தது.

தொப்பென்று சோபாவில் போய்ச் சாய்ந்தேன். ஊரில் இருந்த மட்டும் ஒரு ராஜகுமாரி போல் வளைய வந்து கொண்டிருந்த சீதாக்காவுக்கு உதவ முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கும். அன்னிய நாட்டிலாவாது ஒரு சந்தர்ப்பம் வந்ததேயென்று சந்தோசப் பட்டால் அதற்கும் கொடுத்து வைக்கவில்லையேயென்று கவலையாகவிருந்தது. நாட்டு நிலைமைகளால் உறவுகள் பிரிபட்ட நிலையில் வந்திருந்த சீதாக்காவுக்கு உதவுதற்குக் கூட இந்தப் பாழாய்ப்போன சமுதாயம் விட்டு வைக்க மாட்டெனென்கிறதே. எத்தனை நாட்டுக்குத் தான் புலம் பெயர்ந்து போயென்ன? புலன் பெயர்ந்தோமா?

நன்றி - வ.ந.கிரிதரன் மற்றும் சந்திரவதனா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)