05-28-2004, 02:36 PM
ஒன்று அரிசிசாதம் மற்றது பிட்சா ஐயோ..... உவமை பிரமாதம் கவிஞரே,எப்போதிருந்து நீங்கள் கவிஞரானீர்கள்
\" \"
|
ஆய்த எழுத்து
|
|
05-28-2004, 02:36 PM
ஒன்று அரிசிசாதம் மற்றது பிட்சா ஐயோ..... உவமை பிரமாதம் கவிஞரே,எப்போதிருந்து நீங்கள் கவிஞரானீர்கள்
\" \"
05-28-2004, 09:27 PM
ஈழவன் இது என்ன வஞ்சகப் புகழ்ச்சியா அல்லது பப்பாவில் ஏத்துகின்றீர்களா. ஆளை விடுங்க சாமி. பிழைத்து போய்விடுகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
05-28-2004, 09:32 PM
வஞ்சப் புகழ்ச்சியில்லை
வாய் நிறையப் பொய்சொல்லி பற்றி ஏற்றிவிடும் பப்பா மரமுமில்லை உவமை சிறப்பினாலே உம்மை வாழ்த்தினேன் பழமைக் கவிதைக்கு பாங்கு அவ்வளவே
\" \"
05-28-2004, 10:34 PM
அட கடவுளே கவிதையிலேயே பதிலா? சரி கவிஞரே.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
05-29-2004, 12:47 PM
நல்லதொரு உவமை சொன்னீர்
நானுமுமை கவியென்றேன் பொல்லாப்பு ஒன்றுமில்லை போனவரை பிழைத்துப் போம் சொல்லியே விட்டிடலாம் சொல்லவில்லை நீர் உள்ளதில் பெரியதொரு உருகு குளிர்க் கட்டியொன்றை சின்னஞ்சிறுதலையில் சீராய் வைத்தது போல் ஐயோ கவிஞரென்றீர் ஐந்தோடு அறிவும் கெட்டது போம்
\" \"
06-15-2004, 03:57 PM
'ஆய்த எழுத்து" அந்த மோசமான அரசியல்வாதி யார்?
தமிழ் சினிமாவின் மகாக்களில் ஒருவராகக் கூறப்படும் மணிரத்னம் 'ஆய்த எழுத்து" என்ற தனது உற்பத்தியை இப்போது சந்தைக்கு விட்டிருக்கிறார். அதில்தான் இந்த செல்வநாயகம் என்கிற ஒரு அரசியல்வாதி வருகிறார். ஆய்த எழுத்தின் மோசமான அரசியல்வாதி செல்வநாயகம் யார்? என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்துள்ளது. மணிரத்னம் நல்ல சினிமா இயக்குனர் என்பதற்கும் மேலாக, ஒரு சிறந்த தமிழ்த் தேசிய எதிர்ப்பு கருத்தாளர் என்பதை இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். இதனை இவர் வெளியிட்ட 'இருவர்" உள்ளிட்ட அனைத்துப் படங்களும் இதையே பறைசாற்றி நிற்கின்றன. குறிப்பாக தமிழக தமிழர்களின் தமிழுணர்வை சிதைப்பதற்கே, நையாண்டி செய்வதற்கே மணிரத்னம் தனது படங்களைப் பயன்படுத்தி வந்தார். மறுபக்கம் ஈழத்தமிழரைக் காட்டி ஈழத்தமிழரிடம் வணிகம் செய்ய மணிரத்னம் உற்பத்தி செய்த "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் ஈழத்தமிழரின் போராட்டத்தைக் கூறுவதாக வெளிக்கிட்டு அவரின் ஈழத்தமிழர் எதிர்க்கருத்தே அதில் வெளிப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக 'ஆய்த எழுத்து" மணிரத்னத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கதை இதுதான் ஒரு அடிதடிக்காரன் (ரவுடி) அது நடிகர் மாதவன். அவர் அரசியல்வாதி செல்வநாயகத்துக்காக (இயக்குனர் பாரதிராசா) அடிதடி செய்கிறார். செல்வநாயகத்திற்கு எதிராக கிளம்பும் பல்கலைக்கழக மாணவன் மைக்கேல் (சூர்யா) மற்றும் அவரின் கூட்டணியை ஒழிக்க முயலுகிறார். இதில் விபத்தாக மூன்றாவது நபர் (சித்தார்த்) நுழைகிறார். கடைசியில் செல்வநாயகத்துக்கு எதிராக தேர்தலில் மைக்கல் தலைமையிலான இளைஞர்கள் புரட்சிகர சிந்தனையுடன் வெற்றிபெற்று சட்;டசபை செல்கின்றனர்;. புது தலைமுறை நேர்மையுடன் அரசியலில் நுழைவதுதான் படம். படத்தில் ஒரு முக்கிய காட்சி மைக்கல் மாதவனால் சுடப்படும் காட்சி. அதில் சித்தார்த்; மைக்கலைக் காப்பாற்றுவது படத்தின் முக்கால்பங்கு காட்சி இது. ஒரே காட்சி மாதவன் பார்வையில் (POINT OF VIEW) FLASH BACK சூர்யா பார்வையில் FLASH BACK சித்தார்த் பார்வையில் ஒரு FLASH BACKஎன ஆய்த எழுத்தில் மூவரிடம் ஒரு காட்சியை மணிரத்னம் FLASH BACK க்குகளாகக் காட்டியுள்ளார். ஆனால் ஆய்த எழுத்தின் வில்லனாக வருகிற பாத்திரத்திற்குச் சூட்டப்பட்டுள்ள பெயர் செல்வநாயகம். தமிழக பாரம்பரியத்தில் செல்வநாயகம் என்ற பெயர் யாருக்கும் சூட்டப்படுவதாக நாம் அறிந்ததில்லை. எனவே தங்கள் மத்தியில் வழக்கிலில்லாத ஆனால், ஈழத்தமிழர்களின் புகழ்பூத்த அரசியற் தலைவரின் பெயரை மணிரத்னம் திட்டமிட்டே பயன்படுத்தியுள்ளாரா என்ற கேள்வி ஈழத்தமிழரிடையே எழுவது தவிர்க்க முடியாதது. ஈழத்தமிழர்களின் சாத்வீக போராட்டத்தின் தந்தையாக இருந்தவர் SJV செல்வநாயகம். தமிழகத்தில் ஈ.வெ.ரா. பெரியார் தமிழக மக்களால் உரிமையுடன் 'தந்தை பெரியார்" என அழைக்கப்பட்டது போன்றே, ஈழத்தில் SJV. செல்வநாயகம் ஈழத்தமிழர்களால் உரிமையுடன் 'தந்தை செல்வா" என அழைக்கப்பட்டார். 'இருவர்" என்ற திரைப்படத்தில் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்திய மணிரத்னம், ஆய்த எழுத்தில் ஈழத்தின் அறவழிப் போராட்ட நாயகனான தந்தை செல்வாவை கொச்சைப்படுத்துகிறாரா என்ற கேள்வியை ஈழத்தமிழன் கேட்கத் தோன்றுகின்றான். தமிழக சினிமா ஈழத்தமிழனை வைத்து பிழைத்து வருகின்ற இன்றைய நிலையில், ஈழத்தமிழனையே தொடர்ந்து கொச்சைப்படுத்தும் இவ்வாறான பாங்கு அனுமதிக்கப்படலாமா என்பதே இப்போது ஈழத்தமிழன் ஒவ்வொருவனின் கேள்வியாகவுமுள்ளது. ஒரு சில நல்ல திரைப்படங்களான நந்தா, காற்றுக்கென்ன வேலி போன்றவற்றைத் தவிர, மிகுதியானவற்றில் ஈழத்தமிழர்களை எள்ளி நகையாடும் பாத்திரங்களே படைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, புன்னகை மன்னன், தெனாலி, நளதமயந்தி, கன்னதில் முத்தமிட்டால் போன்றவற்றை ஈழத்தமிழர்களை எள்ளி நகையாடும் திரைப்படங்களாகச் சுட்டிக்காட்டலாம். இன்று தங்களது படத்தின் பொருளாதார ரீதியான வெற்றிக்கு புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் வாழும் மேற்குலக நாடுகளின் திரையரங்குகளையே நம்பியிருக்கிற தமிழக சினிமாவின் முக்கியமானவர்கள் அதே ஈழத்தமிழர்களை எள்ளி நகையாடுவதையும் தமது வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். இதிலும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடுகளிலேயே, ஈழத்தமிழர்களின் துணையோடு வெளிநாட்டுப் படப்பிடிப்புக்களைச் செலவுச் சிக்கனத்தோடு மேற்கொள்ளும் தமிழக சினிமாவின் தமிழ்த்தேசிய எதிர்ப்பு முதலாளிகள், நடிகர்கள் மறுபுறத்தே ஈழத்தமிழர்களையே பதம்பார்த்து வருகிறார்கள். 'ஆய்த எழுத்து" செல்வநாயகம் மூலம் ஈழத்தமிழரால் அதிகம் உச்சரிக்கப்பட்ட அறவழிப் போராட்ட அரசியற்தலைவரான தந்தை செல்வா என்ற SJV செல்வநாயகம் பற்றிய விம்பத்தை சிதைப்பதாக சூட்டப்பட்ட பெயர் இல்லையென்பதை மணிரத்னம் மறுத்துரைப்பாரா? ஈழத்தமிழர்களின் மன உணர்வுகளை, போராடும் குணத்தை அறிந்த மணிரத்னத்துக்கு, ஏன் ஒரு தமிழக அரசியல்வாதியின் பெயரை சூட்ட முடியாமல் அல்லது மனமில்லாமல் போனது? இதற்கான பதிலை மணிரத்னம் தரப்போவதில்லை, இவ்வாறானவற்றிற்கான பழியை வசனகர்த்தா சுஐhதா (ரங்கராஜன்) மீது போட்டுத் தப்பிக்க முயற்சிக்கலாம். ஆனால் மணிரத்னத்திற்கான பதிலை, தமிழக சினிமாக்காரர்களிற்கான பதிலைத் தருவதற்கு ஈழத்தமிழர்கள் தயாராகவே உள்ளனர். இனிமேலும் இவ்வாறான நிகழ்வுகள் தமிழக சினிமாக்களிலே இடம்பெற்றால் அத் திரைப்படங்களை மேற்குலகில் பகிஷ்கரிப்பதற்கும், திரைப்பட நட்சத்திரங்கள் 'காசு பார்க்கும்" நட்சத்திர இரவுகளைப் புறக்கணிப்பதற்கும் ஈழத்தமிழர்களை மணிரத்னம் தயாராக்கி விட்டுள்ளார். எனவே மணிரத்னம் ஈழத்தமிழனிற்கு தீமை செய்யப் போய், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடையே தமிழக சினிமா குறித்த வெறுப்பை மேலும் தீவிரப்படுத்தி ஒட்டுமொத்த தமிழக சினிமாவையும் வெறுப்புடன் ஈழத்தமிழன் நோக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார். தமிழக சினிமா உலகம் இதுபற்றிச் சிந்திக்குமா? - தாயகத்திலிருந்து உணர்வுள்ள தமிழன் / நன்றி: TamilNaatham நன்றி படங்கள்: தற்ஸ் தமிழ் இணையத்தளம் சினி சௌத் இணையத்தளம் நன்றி sooriyan.com
06-23-2004, 03:40 PM
கையை சுட்ட 'ஆய்த எழுத்து'
மணி ரத்னத்தின் 'ஆய்த எழுத்தை' வாங்கிய வினியோகஸ்தர்களின் கைகளைக் குத்திக் கிழித்துவிட்டதாம். சுமார் ரூ. 12 கோடிக்கும் மேல் செலவு செய்து இந்தப் படத்தை இந்தியிலும் தமிழிலும் உருவாக்கினார் மணி. 'ஆய்த எழுத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா, திர்ஷா, இஷா என நடிகை நடிகையர் பட்டாளமும், இந்தியில் உருவான 'யுவா'வில் அபிஷேக், விவேக் ஓபராய், அஜய் தேவ்கன், ராணி முகர்ஜி, கரீனா என பெரும் பட்டாளமும் நடித்தன. ஏ.ஆர். ரஹ்மானின் இசையுடன் பெரும் பரபரப்பாக வெளிவந்த இந்தப் படத்தை தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு டப்பிங் என மும்மொழிகளில் ரூ. 30 கோடிக்கு மணி ரத்னம் விற்றதாக சொல்கிறார்கள். தமிழில் படம் தோல்வியடைந்தது. இந்தியிலோ படுதோல்வியடைந்துள்ளது. மும்பை உள்பட எங்கும் போட்ட காசை திருப்பித் தரவில்லை 'யுவா'. இதனால் மணியையும் யுவாவையும் கிழி கிழி என கிழித்து வருகின்றன வட இந்திய பத்திரிக்கைகள். 'ஆய்த எழுத்தை'ப் பொறுத்தவரை வெளிநாடுகளில் ஹவுஸ் புல்லாக ஓடியிருக்கிறது. ஆனால், அவ்வளவு கூட்டம் தமிழகத்தில் எந்தத் தியேட்டருக்கும் வரவில்லை என்பது தான் சோகம். இதனால் படத்தை வாங்கிய எல்லா வினியோகஸ்தர்களும் கையை சுட்டுக் கொண்டு 'பர்னால்' போட்டுக் கொண்டுள்ளனர். நஷ்டம் பெருமளவில் என்பதால் மணியை சந்தித்து தமிழக வினியோகஸ்தர்கள் பேச, வாங்கிய காசில் 20 சதவீதப் பணத்தை திருப்பித் தந்துவிடுவிதாகச் சொல்லிவிட்டாராம். மணியை ஜென்டில் மேன் என புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வினியோகஸ்தர்கள். இது 'ஆய்த எழுத்து'க்கு மட்டும் தான். இந்தி வினியோகஸ்தர்கள் விஷயம் என்ன என்று தெரியவில்லை. இதற்கிடையே சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், நான் தமிழ்ப் படங்களே பாக்குறதில்ல என்று மணி சொல்லி வைக்க, தமிழத் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் அது குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டதாம். டென்சன் பார்ட்டிகளான சில இளம் இயக்குனர்கள், வாய்ப்பு கிடைக்கட்டும், மணியை ஒரு பிடி பிடிக்கிறோம் என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள். கொசுறு: 'ஆய்த எழுத்தில்' நடித்த சூர்யா ஈஷா தியோல் ஜோடி தொடரப் போகிறது. அடுத்து பாலாவே தயாரித்து, இயக்கப் போகும் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். Source: http://www.thatstamil.com
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|
|
« Next Oldest | Next Newest »
|