சோழியான் அண்ணா சொல்லுறதும் உண்மைதான் கதை வாசிக்க எங்க நேரம் இருக்கு... கவிதை வாசிக்கவே நேரம் கிடைக்காது..கிடைத்தாலும் சும்மா மேலோட்டமா மேஞ்சதோட சரி....எங்கையன் ஒன்றிரண்டைத்தான் ஆழ்ந்து வாசிப்பது.... நாங்க அப்பப்ப காணும் காட்சிகள் நிகழும் நிகழ்வுகள் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப கிறுக்குவம் உந்த நயம் கியம் எல்லாம் பாக்கிறதில்லை....அது உந்த நளவெண்பா படிக்கேக்க படிச்சதோட சரி....!
எங்கட கிறுக்கலின் முக்கிய நோக்கம் புதிய வரவுகளை கொஞ்சம் தூண்டிவிட்டு வேடிக்கை பாக்கிறதுதானே ஒழிய வேறில்லை....அப்பதான் அவங்க தாங்களும் எழுத முனைவாங்க... எழுத எழுதத்தான் திறமைகளை வெளிப்படுத்தும் திறனும் அதிகரிக்கும்....! சும்மா எழுதுவன் என்று நினைச்சுக் கொண்டிருந்தா திறமை வெளிவராது மழுங்கடிக்கப்படவே வழிசெய்யும்...!
யாழ் களத்தில் பரணி, சாந்தியக்கா, சண்முகி அக்கா, நளாயினி அக்கா, சந்திரவதனா அக்கா, சோழியான் அண்ணா, மணிதாசன் அங்கிள், சரீஸ், ஈழவன், இளைஞன், மயூரன் போன்ற மூத்த கவியாக்குனர்களும் சமீபகாலமாக களத்தில் கவிதைப் பகுதிக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் ஆதீபன், கவிதன், தமிழினி, வெண்ணிலா ,அஜீவன் அண்ணா, செந்தமிழ் கவி பொழிலர், செல்லத்தமிழ்க் கவி சுவிற்மிச் போன்றோரும் ஆர்வத்துடன் வந்து சில கவிதைகளுடன் காணாமல் போன தாமரை அக்கா ,சிவாஜினி, சிவதேவ், சோபனா மற்றும் ஈழத்தில் போராட்டக்களத்தில் களமாடியபடி தம் சிந்தனைக்கு வரிவடிவம் தந்த போராளிகளின் கவிதைகளை தந்த சேது போன்ற கவி ஆர்வலர்களும்...அப்பப்ப பம்பல் கவிதை எழுதும் தாத்தா,முல்லைப்பாட்டி, அம்பலத்தார், வல்லையார், கணணி போன்ற கவிக் குட்டிகளும்.... சுட்டுச்சுட்டே கவிதைப் பகுதியை அலங்கரித்த பிபிசி போன்ற கவிப் பித்தர்களும் கவிதையே மேல் என்று கருத்துரைத்த வசிசுதா போன்ற கவிக் குடிகளும்.... வாழ்ந்தது.... வாழ்வது மறக்கலாமோ....!
இப்ப சொல்லுங்கோ உங்க களத்தில எதற்கு உயிர்ப்பு அதிகம் என்று....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
(இதில் யாரின் பெயரும் தவறவிடப்பட்டிருந்தால் குருவிகளை மன்னிச்சிடுங்கப்பா..இவ்வளவும் தான் இப்ப மெமறியில இருந்திச்சு....வந்திச்சு...)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>