Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எவன் சொன்னவன் ?...தொ. சூசைமிக்கேல்
#1
<span style='color:red'>எவன் சொன்னவன் ?...</span>

-- தொ. சூசைமிக்கேல்( tsmina2000@yahoo.com )
<img src='http://img107.exs.cx/img107/3215/hari1.gif' border='0' alt='user posted image'>
[size=14]
மாபெரும் வீரர்தின மண்டபத்தைக் கண்டபின்னர்,
மண்ணைத் தழுவியந்த மாலைகள் மணந்தபின்னர்,
யாவரும் நாநடுங்கி அஞ்சலி புனைந்தபின்னர்,
யான்மட்டும் என்ன செய்வது? - எழுச்சிக் கவி
யாப்பதை யார் தடுப்பது?...


போர்ப்படை நாயகனும் போற்றலுறு சேனைகளும்
பொன்னிகர் தென்னவர்தம் புத்திரரும் சோதரரும்
தீர்க்க விழிகளுடன் தீபச்சுடர் ஏற்றுவது
சிலிர்த்திடும் காட்சி அல்லவா? - அருந்தமிழா,
தியாகத்தின் மாட்சி அல்லவா?


தீயின்செந் நாக்குகளே! தீண்டுமட்டும் தீண்டிடுங்கள்!
தீயவன் சூதுதன்னைச் சுட்டுக் கரி ஆக்கிடுங்கள்!
தாயினைக் கேவியழச் செய்த தறுதலைகட்குத்
தண்டனை வேண்டுமல்லவோ? - அதைத் தமிழன்
தந்திட வேண்டுமல்லவோ?


வீரத் தழும்புகொண்டு வெஞ்சினக் கவசம்கொண்டு
வெற்றிக் கனிபறிக்கும் வேட்கைமிகு ஏக்கம்தன்னை
ஆரத் தழுவிக்கொண்டு அண்ணனொடு தம்பியெலாம்
அறிதுயில் கொள்கின்றாரடா! - அதோ, பார்! பார்!
அவர் நம்மைக் காண்கின்றாரடா!


வெல்லும் படைநடத்தத் தம்மைத்தந்த வேங்கைகளும்
வீரத் தளபதியின் கூடநின்ற சிங்கங்களும்
அல்பகல் ஈழமண்ணை எண்ணியெண்ணிக் கண்ணுறங்கும்
அஞ்சலி மஞ்சம்இது பார்! - தமிழனுக்கோர்
ஆலய முற்றம்இது பார்!


ஆகாயம் பார்த்தவண்ணம் அண்ணாந்து கிடக்கின்றார்,பார்!
ஆகா!எம் அண்ணன்தம்பி தங்கைகளின் அழகுபார்!
சாகா வரம்படைத்த சாதனையின் நாயகர்கள்
சாட்சியம் தீட்டுவதைப் பார்! - தமிழ் இனத்தின்
தனித்துவம் காட்டுவதைப் பார்!


கண்ணில் குளங்களோடும் கைக்குழந்தை யோடும்வந்து
கல்லறைத் தோட்டங்களில் காத்திருக்கும் தங்கைகளே!
உம்மைச் சதிபுரிந்த ஊறுமதி கூறுபட
ஒருதினம் குறித்திடுங்கள்! - உறங்குவோரை
உடன்வர அழைத்திடுங்கள்!



காலக் கணக்கனுக்கு நான்விடுக்கும் கேள்வியிது:
கையில்நீ வைத்திருக்கும் புத்தகத்தின் பக்கமொன்றில்
ஈழத் தமிழனுக்கும் ஏன்ஒதுக்க வில்லை,இடம்?
எத்தனை நாள்இத் தண்டனை? - தர்மத்தின் முன்னே
ஏன் இந்த ஓர வஞ்சனை?


எட்டுத் திசைமருங்கும் ஏறுநடை போட்ட குலம்:
ஏழு கடல்வெளியும் வீரமுடன் ஆண்ட குலம்:
கெட்டவர் புன்மதியின் கீழடங்கிப் போவதுண்டோ?
கேட்கட்டும் போர்முழக்கம்தான்! - எதிரிகட்குக்
கிட்டட்டும் ஓர் விளக்கம்தான்!


புத்தனைப் போற்றுபவன் பூமியெங்கும் ரத்தமடா!
புண்ணியப் போர்வையில் புறப்பட்டதோ மூர்க்கமடா!
எத்தனை காலம்இந்த எத்தரைச் சகிப்பதடா!
எண்ணிடு நாட்களை இன்று! - எவன் சொன்னவன்
ஈழம் ஓர் சொப்பனம் என்று?...

முந்தைய கவிதைகள்
என்ன செய்யும் ?...
உரிந்துபோன உரிமைகள் !!
Reply
#2
யதார்த்தக் கவி... கவிக்கு வாழ்த்துக்கள்... இணைத்த நண்பருக்கு நன்றிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
கவி அருமை.. எழுதியவருக்கு வாழ்த்துக்களும் இணைத்த ஹரி அண்ணாவுக்கு நன்றிகளும் ..
[b][size=18]
Reply
#4
நன்றி
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#5
கவிதை அற்புதம் . . .
வாழ்த்துக்கள் . .

தொடரட்டும் உங்கள் பணி . . .
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)