04-12-2006, 08:26 AM
[b][size=18]பேச்சுக்கு இடவசதி கனடிய அரசு தயார்
[12 - April - 2006] [Font Size - A - A - A]
சமாதான நடவடிக்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே விருப்பமென அறிவிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் கனடா இணைத்திருக்கின்றபோதும் சமாதான நடவடிக்கை
களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற பெருவிருப்பின் பேரிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அர சாங்கம் தெரிவித்திருக்கும் அதேசமயம், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடவசதியை அளிப்பதற்கு தயாரெனவும் அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளதாக திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கனடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரொக்வெல் டே தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை பட்டியலில் இணைக்கும் முடிவு நீண்டகாலமாக இருந்துவந்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக கனடியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதில் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அத்துடன், இதன்மூலம் தமிழ்ச் சமூகம் உட்பட நாடு முழுவதற்கும் அரசாங்கம் பயங்கரவாதத்தையோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளையோ சகித்துக் கொள்ளாது என்ற சமிக்ஞையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
பயங்கரவாதப் பட்டியலின் அர்த்தம் என்னவென்றால், கனடாவில் எவராவது புலிகளின் நடவடிக்கைகளில் பங்குகொள்வதோ அல்லது ஆதரவளிப்பதோ சட்டவிரோதம் என்பதாகும். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வங்கி முறைகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் தனது சர்வதேச ரீதியிலான கடப்பாடுகளையும் கனடா திருப்திப்படுத்துவதாக இது அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நோர்வே அனுசரணையுடனான சமாதானப் பேச்சுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தீர்மானமானது. கனடாவில் ரொரொன்ரோவை சூழ புவியியல் ரீதியில் செறிவாக உள்ள தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் கடுமையான விவாதத்தைத் தோற்றுவிக்கும் சாத்தியமுள்ளது. இது நாங்கள் ஒரு பக்கச்சார்பாக நடந்து கொள்வதென்பதல்ல. சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒன்றாகவே இது உள்ளது என்று கனடிய வெளிவிவகார அமைச்சர் பீற்றர் மக்கே தெரிவித்தார்.
திங்களன்று நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் தான் பேசியதாகவும் விரும்பினால் கனடாவில் சமாதானப் பேச்சுகளை நடத்த இடமளிப்பது உட்பட முழுமையான கனடாவின் உதவியை வழங்குவதற்கு உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்
www.thinakkural.com

[b]

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&