04-02-2005, 02:18 AM
நான்
நான்
இன்னமும்
உயிரோடு தானிருக்கிறேன்
உந்தன்
உயிரான நட்பை
இழந்து விட்ட
இற்றை நாட் பொழுதுகளிலும்.
-------------------------------------------
உன்னைக் கண்டறிந்து
மகிழ்வதற்கு
காரணங்கள் ஏதுமில்லைத்தான்
ஆனாலும்
உனக்கான..
உனக்கான எந்தன் கவிதைகளில்
ஒன்றையேனும்
ஒன்றாக அமர்ந்து
படித்துப் பார்க்க வேண்டும்.
-------------------------------------------
கவிதைகளை
வரைய வைத்தாய் - நட்பு
கவிதைககளை
எழுத வைத்தாய் - காதல்
கவிதைகளை
கிறுக்குகின்றேன் - குடும்பம்
-------------------------------------------
காத்திருக்க வைத்து
வருவது காதலென்றால் ...
காத்திருந்து காத்திருந்து
களைத்துப் போனதை
என்ன சொல்ல????
-------------------------------------------
சிநேகிதியே
உன்னை பிரிந்ததை விட
அதிகம்
அதிகமாய் வலிக்கின்றது....
நீ
சொல்லாமல் பிரிந்தது.
-------------------------------------------
நீ
நீ நினைத்துக் கொண்டுதான்
இருப்பாயா?
ஆனாலும்
நான்
தும்மிக் கொள்ளும் போதெல்லாம்
உந்தன்
உந்தன் நினைவுவந்து
சிக்கிக் கொள்கிறது
மழைப் பொழுதின்
மண்வாசம் போல.
-------------------------------------------
ஒரு
நல்ல கவிதை எழுதி
பகிர்வதற்கு கூட
எங்கள்
நட்பின் பொழுதுகள்
அவகாசமின்றி
முடிந்து போயின.
-------------------------------------------
நம் நட்பை பறைசாற்றும்
அந்த
மழைப் பொழுதுகளை
மறக்கடிக்க...
பாவமிந்த
சின்னஞ்சிறு துளிகளுக்கு
ஏது வலிமை.??
-------------------------------------------
விளம்பரங்கள்
என்று
வானொலிகளை அலட்சியம் செய்யாதே!
எந்த வேளையிலும்
ஒலிபரப்பாகலாம்
உனக்கான
எந்தன் கவிதை.
-------------------------------------------
எத்தனை பனித்துளிகளை
வானம்
எனக்குத் தந்தது
அத்தனையையும்
நீயே
அள்ளிக் கொண்டாய்
கதிரவனே.
-------------------------------------------
உன் பெயரை
உரத்து
கத்திப் பார்க்கவேனும்
எனக்கொரு
சுதந்திரப் பொழுது
வேணும்.
-------------------------------------------
நேசிப்பில் குறைவில்லாமல்
எந்த
யாசிப்புகளும் இல்லாமல்
சேர்திருக்கவும்
பிரிந்து போகவும்
நம்
நட்புக்கு மட்டுமே முடிந்ததடி.!
-------------------------------------------
இந்த
பௌதீகத்தை உணர்ந்து கொள்
நீ
மலையுச்சியிலும்
நானோ
மலையடிவாரத்திலுமாய்
அதனால்தான்
நம் நிழல்கள்
நாள் தோறும்
சந்தித்துக் கொள்கின்றன.
நிஜங்கள்
நெருங்க நெருங்க
நிழல்களின் சங்கீதம்
செத்துவிடுகின்றது.
-------------------------------------------
- தயா ஜிப்ரான்-

.
.!!
.!!