05-24-2005, 04:30 PM
காதலித்து உன்னால்
கைவிடப்பட்ட
பேதைப் பெண் எனது
புலம்பலை எழுதுகிறேன்
பெற்றோரை பிரிந்து - உன்
பின்னாலே வந்து நான்
பட்ட துயரங்களில் - ஒரு
பகுதியை எழுதுகிறேன்
உன்னுறவால் நான் பட்ட
உவத்திரமும் கொஞ்சமல்ல
விலைகொடுத்து நீ எனக்கு
வாங்கித்தந்த வேதனைகள்.
விளைவுகளை விபரிக்க
தமிழிலே வார்த்தையில்லை
தமிழளை விட வேற்றுமொழி
தான் தெரிந்தால் அதில் சரி
நான் எமுதி தந்திருப்பேன்
வேற்றுமொழி படிப்பதற்கு
விரைந்தபோதுதானே
சிவபூசைக் கரடி போலே
சேர்ந்தாயே நீ வந்து
எரிகின்ற தேங்காய் நெய்
விளக்கதனின் திரியதனை
எலியிளுத்துச் சென்றதனால்
கருகிவிட்ட வீடதனில்
கவலையிலே என்வீட்டில்
நானிருந்த வேளையிலே - எனக்கு
துன்பங்கள் தீர்க்க
துணைவந்த தெய்வமென்றாய் - நானும்
துன்பமெனுங்கடலில் படகின்
துடுப்பு என நினைத்தேன் - நீயோ
இன்பமெனும் சொல்லுக்கு எனவாழ்வில்
எதிரியாய் மாறிவிட்டாய்
புழு நிறைந்த ஆலம் பழம் போன்ற உன்னுடலின்
பழு சுமக்க வந்த என்னை
கழு மரத்தில் ஏற்ற விட்டு
கை கழுவி விட்டாயே
வெறிபிடித்த வேங்கைக்கு - மானை
கறிசமைத்தா கொடுக்க வேண்டும்
அன்று நீ என்னை
கொன்று தின்றிருந்தால் - உன்
தேவை ஒன்று தீர்ந்திருக்கம் - அன்றி
கெடுத்து என்னை
குட்டிச்சுவராக்கி - நீ
கண்டபலன் என்னதானோ - நான்
கொண்டதுயர் உன்னுறவால் - அதனை எழுதி
கூடையிலே நிரப்பிடலாம்.
சீதையவள் இராமர் பின் சென்றதனால்
காடேறினாலும் காதலினிலே ஒன்றானார்கள்
சேதனைகள் வந்த போதும் சேர்ந்தே பகிர்ந்தார்கள்
இராமன் என நினைத்தே நான் உன் பின்தொடர்ந்தேன் - நீயோ கொடும்
இராவணனாய் மாறி கூடேற வைத்தாய் - பல
கொடுமைகள்தான் செய்தாய்
நாதியின்றி நாயாக
நடுத்தெருவில் அலைய விட்டாய் - அன்ற நான்
மெய்யறிந்த வள்ளுவனாய் - இல்லை
வீரமாமுனிவனாய் இருந்திருந்தால்
விதி என்ற வேடன் - விரித்த
வலை என்று உணர்ந்திருப்பேன்.
வலை என்று உணராமல் - அழகுச்
சிலை என்று நினைத்தே - உன்
தலைமீது கால்வைத்தேன்
சிறகடித்துப் பறந்த என்னை
சிறைப்பிடித்தாய் வலைவிரித்து - பின்னர்
சென்றிடுவேன் ஊர்ந்து என்றா
கறள் பிடித்த கம்பிவலைக் கூட்டில் விட்டு
கட்டி வைத்தாய் கயிற்றாலும்
இன்னும் நிறையவுண்டு
எதைத்தான் விடுவது
எதைத்தான் எழுதுவது
சட்டியிலே சோறுமில்லை
சத்திரத்தில் இடமுமில்லை
குட்டிபோட்ட பூனை போலே
குழுந்தையையும் காவிக்கொண்டு
பட்டினியால் வாடி - தினம்
பலர் படலை திறக்கின்றேன்
கட்டியவனைக்கேட்டதற்கு
காலமாகி விட்டாரெனெ
பட்டினியின் கொடுமையினால்
பதிலுரைத்தேன் பொய்யதனை
போதுமா என் புலம்பல் - இல்லை
தேவையெனில் கூறிவிடு விரைவில் - ஏனெனில்
மீதி ஒரு செய்தி நீயறிவாய் - விரைவில்
பாதி உயிர் பிரிந்த என்னுடல் வீதியிலே கிடக்குதென்று.
அன்புடன்
விக்ரர். பீ
கைவிடப்பட்ட
பேதைப் பெண் எனது
புலம்பலை எழுதுகிறேன்
பெற்றோரை பிரிந்து - உன்
பின்னாலே வந்து நான்
பட்ட துயரங்களில் - ஒரு
பகுதியை எழுதுகிறேன்
உன்னுறவால் நான் பட்ட
உவத்திரமும் கொஞ்சமல்ல
விலைகொடுத்து நீ எனக்கு
வாங்கித்தந்த வேதனைகள்.
விளைவுகளை விபரிக்க
தமிழிலே வார்த்தையில்லை
தமிழளை விட வேற்றுமொழி
தான் தெரிந்தால் அதில் சரி
நான் எமுதி தந்திருப்பேன்
வேற்றுமொழி படிப்பதற்கு
விரைந்தபோதுதானே
சிவபூசைக் கரடி போலே
சேர்ந்தாயே நீ வந்து
எரிகின்ற தேங்காய் நெய்
விளக்கதனின் திரியதனை
எலியிளுத்துச் சென்றதனால்
கருகிவிட்ட வீடதனில்
கவலையிலே என்வீட்டில்
நானிருந்த வேளையிலே - எனக்கு
துன்பங்கள் தீர்க்க
துணைவந்த தெய்வமென்றாய் - நானும்
துன்பமெனுங்கடலில் படகின்
துடுப்பு என நினைத்தேன் - நீயோ
இன்பமெனும் சொல்லுக்கு எனவாழ்வில்
எதிரியாய் மாறிவிட்டாய்
புழு நிறைந்த ஆலம் பழம் போன்ற உன்னுடலின்
பழு சுமக்க வந்த என்னை
கழு மரத்தில் ஏற்ற விட்டு
கை கழுவி விட்டாயே
வெறிபிடித்த வேங்கைக்கு - மானை
கறிசமைத்தா கொடுக்க வேண்டும்
அன்று நீ என்னை
கொன்று தின்றிருந்தால் - உன்
தேவை ஒன்று தீர்ந்திருக்கம் - அன்றி
கெடுத்து என்னை
குட்டிச்சுவராக்கி - நீ
கண்டபலன் என்னதானோ - நான்
கொண்டதுயர் உன்னுறவால் - அதனை எழுதி
கூடையிலே நிரப்பிடலாம்.
சீதையவள் இராமர் பின் சென்றதனால்
காடேறினாலும் காதலினிலே ஒன்றானார்கள்
சேதனைகள் வந்த போதும் சேர்ந்தே பகிர்ந்தார்கள்
இராமன் என நினைத்தே நான் உன் பின்தொடர்ந்தேன் - நீயோ கொடும்
இராவணனாய் மாறி கூடேற வைத்தாய் - பல
கொடுமைகள்தான் செய்தாய்
நாதியின்றி நாயாக
நடுத்தெருவில் அலைய விட்டாய் - அன்ற நான்
மெய்யறிந்த வள்ளுவனாய் - இல்லை
வீரமாமுனிவனாய் இருந்திருந்தால்
விதி என்ற வேடன் - விரித்த
வலை என்று உணர்ந்திருப்பேன்.
வலை என்று உணராமல் - அழகுச்
சிலை என்று நினைத்தே - உன்
தலைமீது கால்வைத்தேன்
சிறகடித்துப் பறந்த என்னை
சிறைப்பிடித்தாய் வலைவிரித்து - பின்னர்
சென்றிடுவேன் ஊர்ந்து என்றா
கறள் பிடித்த கம்பிவலைக் கூட்டில் விட்டு
கட்டி வைத்தாய் கயிற்றாலும்
இன்னும் நிறையவுண்டு
எதைத்தான் விடுவது
எதைத்தான் எழுதுவது
சட்டியிலே சோறுமில்லை
சத்திரத்தில் இடமுமில்லை
குட்டிபோட்ட பூனை போலே
குழுந்தையையும் காவிக்கொண்டு
பட்டினியால் வாடி - தினம்
பலர் படலை திறக்கின்றேன்
கட்டியவனைக்கேட்டதற்கு
காலமாகி விட்டாரெனெ
பட்டினியின் கொடுமையினால்
பதிலுரைத்தேன் பொய்யதனை
போதுமா என் புலம்பல் - இல்லை
தேவையெனில் கூறிவிடு விரைவில் - ஏனெனில்
மீதி ஒரு செய்தி நீயறிவாய் - விரைவில்
பாதி உயிர் பிரிந்த என்னுடல் வீதியிலே கிடக்குதென்று.
அன்புடன்
விக்ரர். பீ
I love you more than yesterday less than tomorrow for all souls.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இராவணன் தமிழணெண்டுறதால தான்அவர கூடாதவர் மாதிரி சொன்னவையாம். இண்டைக்கு தமிழீழத்தில நடக்கிற சண்டையால பிரபாகரன் மாமாவையும் பயங்கரவாதியெண்டுதானே வெளில சொல்லுகினம் அதமாதிரி நாளைக்கு கதையள் திரிபட்டு கவிதையெழுதுறவை எல்லாம் பிரபாகரன் மாமாவையும் பிழையான உதாரணத்துக்கு எடுப்பினம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->