Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதித் தேர்தல்.. தமிழர் கடமை என்ன?
#21
Thala Wrote:
Quote:ஏன் முன்பு புலிகள் ஏதும் சொன்னதில்லையா? எத்தனை தேர்தல் புறக்கணிப்புக்களைச் செய்தார்கள்?
இன்று முழுக்க முழுக்க புலிகளின் தலைமையை நம்பியுள்ள தமிழர்க்கு ஒரு முடிவுமில்லாமல் இப்படி விடுவது சரியன்று.

தேர்தல் புறக்கணிப்புச் செய்த காலங்கள் போர் உக்கிரமாக நடந்த காலங்கள் அப்போது போராட்டம் தமிழீழத்தை நோக்கியதாய் இருந்தது..... இப்போ சுயநிர்ணயம் வேண்டி பேச்சில் ஈடுபடும் காலம்........ இப்போ முக்கியமாய் மக்களுக்கு புலிகளால் விரும்பிச் சொல்லக்கூடியது தேர்தல் புறக்கணிப்புத்தான்... தமிழ்மக்களுக்கு சிங்களத்தலைமையில் நம்பிக்கை இல்லை எண்ட செய்தியை... ஆனால் விரும்பியோ விரும்பாமலோ.. தமிழர் சர்வதேசத்தின் அனுசரனை வேண்டி நிக்கின்றோம்... எமது போராட்டத்தின் நியாயத்தன்மை... வெளியுலகுக்கு காட்ட வேண்டிய தேவை உள்ளது..... அவர்களின்(சர்வதேச) விருப்பு கடந்த தடவை நோர்வே ஊடாக புலிகளிடம் சொல்லப்பட்டது.... அது சுயாதீனமான தேர்தல் வர வேண்டும் என்பதுதான்.... (எதிர்ப்புக்கள் அற்ற) அதற்காகத்தான் தமிழ்ச்செல்வன் அவர்கள் பதிலாக தமிழ்மக்கள் சுயமாக முடிவு எடுப்பார்கள்..! எண்று தனது செவ்வியில் சொல்லி இருந்தார்..

அந்தச் செய்திக்கு தமிழ் ஊடகங்கள் பெரிதாய் முன்னிலைப் படுத்தி வெளியிடவில்லை.... அதற்கு அவர்கள் கொடுக்காத முக்கியத்துவம் தான் காரணம் தமிழ்க்கூட்டமைப்பு முதலின் தங்களின் ஆதரவு யாருக்கும் இல்லை எண்டு அறிவித்திருந்ததுதான்.......... ஆனால் BBc ஆங்கில, தமிழ்ச் சேவைகள் இந்தச் செய்திக்கு மிகமுக்கியத்துவம் கொடுத்திருந்தன....... காரணம் அவர்களின் எதிர்பார்ப்பு அப்படி (BBC,CNN, என்பது செய்தி ஊடகம் மட்டும் இல்லை.. நாட்டின் கருத்துக்களை விதைக்கும் சாதனமாகப் பயன் படுவது)...

இப்போ புலிகளால் நம்பிக்கை அற்ற ஒருவருக்கு வாக்களிக்கச் சொல்ல முடியாத நிலை..! அவர்களுக்காக தமிழ்க்கூட்டமைப்பு தான் தன் கருத்துக்களை சொல்ல வேண்டும்.... இது அவர்களுக்கான வேலை...

அரைச்ச மாவை இனியும் எத்தனை தரம் அரைக்கிறது. புலிகளுக்கு மட்டும் அல்ல தமிழ் மக்களுக்கும் நன்கு தெரியும் சிங்கள தலைமை எதுவும் எமக்கு விடிவு தராது என்பது.

ஆகவே சிங்கள தேச தேர்தல் என்னது தமிழர் தரப்பு விடுதலைப் போராட்டத்திற்கான இன்னுமொரு காய் நகர்த்தல் அன்றி இதில் வேடிக்கை பார்க்க ஒன்றும் இல்லை. எமது விடுதலை யுத்தத்தில் சிங்கள தேச தேர்தல் என்பது யுத்தத்தில் நாம் வகிக்கும் தந்திரோபாய நடவடிக்கையின் ஒரு அம்சம் அன்றி வெறும் பார்வை பொருள் அல்ல.
Reply
#22
Mind-Reader Wrote:அரைச்ச மாவை இனியும் எத்தனை தரம் அரைக்கிறது. புலிகளுக்கு மட்டும் அல்ல தமிழ் மக்களுக்கும் நன்கு தெரியும் சிங்கள தலைமை எதுவும் எமக்கு விடிவு தராது என்பது.

ஆகவே சிங்கள தேச தேர்தல் என்னது தமிழர் தரப்பு விடுதலைப் போராட்டத்திற்கான இன்னுமொரு காய் நகர்த்தல் அன்றி இதில் வேடிக்கை பார்க்க ஒன்றும் இல்லை. எமது விடுதலை யுத்தத்தில் சிங்கள தேச தேர்தல் என்பது யுத்தத்தில் நாம் வகிக்கும் தந்திரோபாய நடவடிக்கையின் ஒரு அம்சம் அன்றி வெறும் பார்வை பொருள் அல்ல.

உண்மையா நீங்க என்ன சொல்ல வாறீங்க எண்டு விளங்கவே இல்லை.. தயவு செய்து விபரமாச் சொன்னால் விளங்கிக்கொள்ள உதவியாய் இருக்கும்....
::
Reply
#23
தல, நீங்கள் சொல்ல வந்ததும் எனக்குக் குழப்பமாகிவிட்டது.
நான் சொன்னதுக்கு மறுப்பது போல் சொல்லத் தொடங்கி, பிறகு நீங்களும் தேர்தல் புறக்கணிப்புத்தான் இப்போது புலிகளால் சொல்லக்கூடியது என்று மீண்டும் நான் சொன்தையே திருப்பிச் சொல்லியுள்ளீர்கள்.
--------------------------------------------------------
நான் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பை மட்டும் சொல்லவில்லை. இன்னாருக்குப் போடுங்கள் என்று தமிழர்களுக்கு அறிவுறுத்திய கடந்த காலத்தையும்தான் சொல்கிறேன். சிங்களத் தலைமையில் யாரை வெல்ல வைக்க வேணுமென்று புலிகள் அறிவித்ததையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
Reply
#24
இவோன் Wrote:தல, நீங்கள் சொல்ல வந்ததும் எனக்குக் குழப்பமாகிவிட்டது.
நான் சொன்னதுக்கு மறுப்பது போல் சொல்லத் தொடங்கி, பிறகு நீங்களும் தேர்தல் புறக்கணிப்புத்தான் இப்போது புலிகளால் சொல்லக்கூடியது என்று மீண்டும் நான் சொன்தையே திருப்பிச் சொல்லியுள்ளீர்கள்.
--------------------------------------------------------
நான் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பை மட்டும் சொல்லவில்லை. இன்னாருக்குப் போடுங்கள் என்று தமிழர்களுக்கு அறிவுறுத்திய கடந்த காலத்தையும்தான் சொல்கிறேன். சிங்களத் தலைமையில் யாரை வெல்ல வைக்க வேணுமென்று புலிகள் அறிவித்ததையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

இல்லை நான் மறுக்க இல்லை... புலிகள் நிலைப்பாடு சொல்லாத்துக்கு காரணமாய் என்ன இருக்கும்...??? எண்று தான் முதலில் சொல்லிப் பின் அடுத்ததாய் எனது கருத்தயும் சொல்லி இருந்தேன் அவ்வளவுதான்....

ஆனால் புலிகள் சொல்வது போல் தமிழ் மக்கள் சுயமாய் முடிவு எடுக்க வேண்டி வரலாம்..
::
Reply
#25
Thala Wrote:[quote=Mind-Reader]
அரைச்ச மாவை இனியும் எத்தனை தரம் அரைக்கிறது. புலிகளுக்கு மட்டும் அல்ல தமிழ் மக்களுக்கும் நன்கு தெரியும் சிங்கள தலைமை எதுவும் எமக்கு விடிவு தராது என்பது.

ஆகவே சிங்கள தேச தேர்தல் என்னது தமிழர் தரப்பு விடுதலைப் போராட்டத்திற்கான இன்னுமொரு காய் நகர்த்தல் அன்றி இதில் வேடிக்கை பார்க்க ஒன்றும் இல்லை. எமது விடுதலை யுத்தத்தில் சிங்கள தேச தேர்தல் என்பது யுத்தத்தில் நாம் வகிக்கும் தந்திரோபாய நடவடிக்கையின் ஒரு அம்சம் அன்றி வெறும் பார்வை பொருள் அல்ல.

உண்மையா நீங்க என்ன சொல்ல வாறீங்க எண்டு விளங்கவே இல்லை.. தயவு செய்து விபரமாச் சொன்னால் விளங்கிக்கொள்ள உதவியாய் இருக்கும்

Thala Wrote:[quote=இவோன்]தல, நீங்கள் சொல்ல வந்ததும் எனக்குக் குழப்பமாகிவிட்டது.
நான் சொன்னதுக்கு மறுப்பது போல் சொல்லத் தொடங்கி, பிறகு நீங்களும் தேர்தல் புறக்கணிப்புத்தான் இப்போது புலிகளால் சொல்லக்கூடியது என்று மீண்டும் நான் சொன்தையே திருப்பிச் சொல்லியுள்ளீர்கள்.
--------------------------------------------------------
நான் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பை மட்டும் சொல்லவில்லை. இன்னாருக்குப் போடுங்கள் என்று தமிழர்களுக்கு அறிவுறுத்திய கடந்த காலத்தையும்தான் சொல்கிறேன். சிங்களத் தலைமையில் யாரை வெல்ல வைக்க வேணுமென்று புலிகள் அறிவித்ததையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

இல்லை நான் மறுக்க இல்லை... புலிகள் நிலைப்பாடு சொல்லாத்துக்கு காரணமாய் என்ன இருக்கும்...??? எண்று தான் முதலில் சொல்லிப் பின் அடுத்ததாய் எனது கருத்தயும் சொல்லி இருந்தேன் அவ்வளவுதான்....

ஆனால் புலிகள் சொல்வது போல் தமிழ் மக்கள் சுயமாய் முடிவு எடுக்க வேண்டி வரலாம்
தமிழ் மக்களின் தேச விடுதலைக்காக தலைமை தாங்கி நிற்கும் புலிகள் யுத்தத்தில் மட்டும் அல்ல தேர்தல் களத்திலும் மக்களை வழிநடத்தி விடுதலைப் போராட்டத்தை மேலும் முன்நோக்கி நகர்த்த வேண்டிய தருணத்தில் நீங்கள் குறிப்பிடுவது போல் ''தமிழ் மக்கள் சுயமாய் முடிவு எடுக்க வேண்டி வரலாம்'' என்பது தேச விடுதலை போரை மட்டும் அல்ல தமிழ் மக்களையும் ஆபத்தில் தள்ளிவிடும்.
Reply
#26
[quote=Mind-Reader]தமிழ் மக்களின் தேச விடுதலைக்காக தலைமை தாங்கி நிற்கும் புலிகள் யுத்தத்தில் மட்டும் அல்ல தேர்தல் களத்திலும் மக்களை வழிநடத்தி விடுதலைப் போராட்டத்தை மேலும் முன்நோக்கி நகர்த்த வேண்டிய தருணத்தில் நீங்கள் குறிப்பிடுவது போல் ''தமிழ் மக்கள் சுயமாய் முடிவு எடுக்க வேண்டி வரலாம்'' என்பது தேச விடுதலை போரை மட்டும் அல்ல தமிழ் மக்களையும் ஆபத்தில் தள்ளிவிடும்


நீங்க சொல்வது சரியாகக் கூட இருக்கலாம்...... ஆனால் யாருக்கு வாக்கு வளங்குங்கள் எண்டு தமிழ் மக்களை வளிகாட்டும் அளவு... தேர்தலில நிற்கும் தலைவர்கள் ஓண்டும் நல்லதாய் தமிழ் மக்களுக்குச் செய்யப் போவதில்லை... <b>புலிகள் ஒருவரைக் கை காட்டினால் அவருக்கு வாக்குக்களை வளங்க மக்கள் என்றும் தயாராய் இருபர்....</b> ஆனால் அதன் பின்பு அவர்களால் ஏற்படுத்தப் படும் <b>அட்டூளியங்களுக்குப்</b> புலிகளால் மக்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது.......... புலிகள் தியாகத்தால் வந்த நற்பேயரை மக்களிடம் கெடுத்துக் கொள்ள மாட்டார்கள்..

தமிழ்க்கூட்டமப்பிற்கு புலிகள் ஆதரவு வளங்கியதுக்கு காரணம் அவர்களின் மேல் புலிகள் வைத்த நம்பிக்கை ஆதலால்தான் மாற்று கருதாளர்கள்கூட தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கிரார்கள்...... காரணம் அவர்களால் தமிழருக்கு எந்த கெடுதலும் வராது என்ற நம்பிக்கைதான்... ஆனால் இண்றைய ஜனாதிபதிப் போட்டியாளர் அப்படியா???...

தேசியக் கூட்டமைப்புக்குத்தான் இண்றைய கால கட்ட அவசியத்தை வலியுறுத்தி மக்களுக்குச் சொல்ல வேண்டும்... காரணம் அவர்கள் தான் தமிழரைப் இலங்கை அரசியலில் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள்..... (அவர்களுக்குப் புலிகளின் அங்கீகாரமும் இருக்கு)
::
Reply
#27
மக்கள் சுயமாக தீர்மானம் எடுக்க வேண்டியது நல்ல விடயம் தான். இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களும் நம்பிக்கையானவர்கள் இல்லை. ஆனால் இருவரில் அதிகளவு பாதகமில்லத அதாவது இரண்டு பேயில் எது கொஞ்சம் பார்வைக்கு பறுவயில்லமல் இருக்கிறதோ அதை தெரிவு செய்யலாம்.
Reply
#28
சாதாரண தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்காது வாக்குகளை போட நினைத்தால் அது ரணிலுக்காகத்தான் இருக்கும்.

கார்த்திகை 2003 நினைவுபடுத்திப்பார்த்தால், சந்திரிக்கா ரணிலின் அமைச்சுப்பதவிகளை பறித்ததால் தான் சமாதானம் பின்னடைவை சந்தித்தது என நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் எம்மக்கள். புலிகளின் இடைக்கால தன்னாட்ச்சி அதிகாரத்திற்கான வரைபைப் பற்றிய ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக வெளிவர முதல் அந்த ஆட்சிப்பறிப்பு நடந்தது உண்மையில் ரணிலின் சமாதான வேடத்திற்கு 2வது சந்தர்பமாக போய்விட்டது. அதன் அடிப்படையில் இப்பொழுது அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிறுபான்மையிரனது செல்வாக்கு benefit of the doubt. கருணாவின் துரோகத்திற்கு அத்திவாரமிடப்பட்டதும் ரணிலின் ஆட்சிக்காலத்தில் தான் ஆனால் அது மேடையேற்றப்பட்ட போது அவர் ஆட்சியில் இல்லாததால் அந்தக்களங்கத்திலிருந்தும் தப்பித்துவிட்டார். சந்திரிக்கா நாடாளமன்ற தேர்தலின் பின்னர் இனவாதிகளை வைத்து உருவாக்கிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிகரித்த கெடுபிடிகள், அப்பட்டமான இனவாத கோசங்கள் என்பன ரணிலின் மாசுபடாத சமாதான வேடத்திற்கு தமிழ் மக்கள் மத்தியில் உளவியல்ரீதில் மேலும் மெருகூட்டப்படுகிறது.

இதனை புலிகள் மக்களுக்கு கூறமுடியாது என்றதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக இங்கே மாமனிதர் சிவராமின் தேவையை உணரக்கூடியதாக இருக்கிறது.
Reply
#29
<b>அரசியல் பேரப் பேச்சுக்கு போகாமல் தமிழர் தரப்பு ஒதுங்கியிருப்பதேன்.</b>
இலங்கையில் அடுத்த அரசுத் தலைவரைத் தீர்மானிக்கும் சக்தி யாக ("கிங் மேக்கர்'களாக) விடுதலைப் புலிகளே இருக்கின்றார்கள். முக்கிய அரசியல் நோக்கர்கள் மற்றும் பிரபல விமர்சகர்களை மேற் கோள்காட்டிச் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று இவ்வாறு சுட்டிக்காட்டி யிருக்கின்றது. இராணுவ ரீதியாகவும் போரியல் சக்தி என்ற வகையிலும் வலுப் பெற்றுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு, தென்னிலங்கையின் அடுத்த தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அரசியல் சக்தியாகவும் வலிமை கொண்டு விளங்குகின்றது என்பதே இதன் அர்த்தம். ஜனாதிபதித் தேர்தலை ஒட்டித் தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளுக்கும் பின்னால் ஏனைய கட்சிகள் எல்லாம் திரண்டு விட்டன. ஈழத் தமிழர்கள் தாம் அவர்களின் ஏக, அதிகாரபுூர்வ பிரதிநிதிகளாக விளங்குகின்ற புலிகள்தான் இந்தத் தேர்தலில் தாங்கள் யாரை ஆதரிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் தமிழர் தரப்பின் தீர்மானம்தான் இலங்கைத்தீவின் அடுத்த அரசுத்தலைவரை முடிவுசெய்யப்போகின்றது என்பது தென்னிலங்கை அரசியல் அவதானிகளின் கருத்து. ""நடக்கும் விடயங்களைப் பார்த்தால் யார் அரசுத் தலைவராவது என்பதைக் கடைசியில் தமிழர்களே நிர்ணயிப்பார்கள் என்பதை அவை எடுத்துக் காட்டுகின்றன. தமது மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்துக் கூறுவார்கள்'' என்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முன்னாள் ஆலோசகரும் அரசியல் நோக்கருமான ஹரி குணதிலக கூறுகின்றார். ஆனால், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் கருத்தோ வேறுவிதமாக இருக்கின்றது."" மஹிந்த ராஜபக்ஷ சிங்கள இனவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு தமிழர்களின் நியாயமான நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்துக் கொண்டுவருகின்றார். ""ரணில் கூட இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிங்கள இனவாதக் கட்சிகளின் இணக்கப்பாடு இல்லாமல் அமைதி முயற்சிகளைத் தொடங்குவது சாத்தியமில்லை; அவற்றின் இணக்கப்பாட்டைப் பெற்றுத்தான் அமைதி முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்று கூறுகின்றார். ""எனவே, இரு தரப்பிலிருந்தும் வருகின்ற கருத்துகள் தமிழர்களுக்கு நியாயம் செய்கின்ற அல்லது திருப்தி தருகின்ற அணுகு முறையுடையனவாகத் தெரியவில்லை'' என்கின்றார் தமிழ்ச்செல்வன். இந்தக் காரணங்களினால் இவரைத்தான் ஆதரியுங்கள் என்றோ அல்லது இவரை எதிருங்கள் என்றோ கூறாமல் தங்களின் கருத்தை தமது மக்கள் மீது திணிக்காமல் அவர்களைச் சுதந்திரமாக, சுயாதீனமாக முடிவெடுக்க விடுவது என்ற தீர்மானத்துக்குப் புலிகள் வந்திருக்கிறார்கள்.

கடந்த காலங்களிலும் நமது மக்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகளை மிகத் தெளிவாக ஆணித்தரமாக சர்வதேசத்துக்கும் தெற்குக்கும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலிலும் எமது மக்கள் தெளிவான வெளிப்பாட்டைக் காட்டுவார்கள் என நினைக்கிறேன்'' என்று உறுதியாகக் கூறியிருக்கிறார் அரசியல் பொறுப்பாளர். இதற்கு முந்திய பொதுத் தேர்தல் 2001 டிசெம்பர் 5ஆம் திகதி நடைபெற்றபோது அதற்குச் சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர் இடம் பெற்ற வருடாந்த மாவீரர்தின உரையின்போது, அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் வாக்களிப்புக் குறித்துத் தலைவர் பிரபாகரன் சில விடயங்களைக் கோடிட்டுக் காட்டத் தவறவில்லை. ""தமக்கு வேண்டியது போரா, சமாதானமா என்பதைத் தென்னிலங்கை மக்கள் தீர்மானித்து வாக்களிக்க வேண்டும்'' என்ற சாரப்பட அப்போது கருத்துக் கூறியதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தென்னிலங்கை மக்களுக்கும் அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வழிப்படுத்திக் காட்டியிருந்தார் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்.

அதே புலிகள்தான், போரையும் சமாதானத்தையும் தென்னிலங்கையில் தீர்மானிக்கப் போகின்ற அதிகாரப் பதவிக்கு வருபவர் யார் என்பதை முடிவுசெய்யும் தேர்தலில் தமது மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதற்குத் திட்டவட்டமான வழிப்படுத்தலைக் காட்டாமல், தமிழ் மக்களின் சுதந்திரமான முடிவுக்கு அனுமதிக்கின்றார்கள். அதற்குக் காரணம் என்ன? ஜனாதிபதித் தேர்தல் இப்போது நடக்கும் என்பது உறுதியானதுமே இரண்டு பெரும்பான்மைக் கட்சி வேட்பாளர்களின் சார்பிலும் புலிகளுக்குத் து}துகள் பறக்கத் தொடங்கிவிட்டன.

ரணிலிடமிருந்து மட்டுமல்ல, தேர்தல் வெற்றிக்காகப் பௌத்த சிங்களப் பேரினவாதிகளை அரவணைத்துக் கொண்டுள்ள மஹிந்த விடமிருந்தும் கூட கிளிநொச்சிக்கு உத்தியோகப்பற்றற்ற து}துவர்கள் பறந்தார்கள். ஆனால், பேரப்பேச்சு எதற்கும் புலிகளின் தலைமை இடமே கொடுக்கவில்லை, அது ஏன்? நாட்டின் அதியுயர் பதவிக்கான தேர்தலை ஒட்டி இரு பிரதான கட்சிகளுடனும் விலாசமில்லாத உதிரிக்கட்சிகள் கூட பேரம்பேசி, ஒப்பந்தம் செய்து சுயலாபம் அரசியல் ஆதாயம் தேடும் போது, தமிழர் தரப்பு மட்டும் அதைப் பயன்படுத்தாமல் கோட்டைவிட்டு நிற்பது ஏன்? தேர்தலை ஒட்டிய அரசியல் பேரப்பேச்சுக்குப் போகாமல் புலிகள் தமிழர் தரப்பின் பிரதிநிதிகள் ஒதுங்கியிருப்பதற்கு காரணங்கள் இரண்டு.

ஒன்று கொள்கை ரீதியானது.

மற்றது பட்டறிவின் பாற்பட்டது.

சிங்கள தேசம் தனக்குரிய தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அதற் கான தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான கட்சிகளினதும் வேட் பாளர்களுமே சிறுபான்மையினரான தமிழர்களுக்கு நியாயமானதைச் செய்வது குறித்துத் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஒருவருக்கொருவர் போட்டியாக ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாக பேரினவாதப் பிடியில் சிக்கியிருக்கும் போது ஒருவரை விட மற்றவர் மேல் என்ற முடிவுக்கு வந்து, அதில் ஒருவரை ஆதரிப்பதற்குத் தீர்மானிப்பதில் அர்த்தமில்லை. அப்படி முடிவெடுப்பது அபத்தமானதும் கூட. அடுத்தது கடந்த ஐந்து தசாப்த காலமாகத் தேர்தல்களுக்கு முன்னும் பின்னும் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காக மிதவாதத் தமிழ்த் தலைமைகள் நடத்திய அரசியல் பேரப்பேச்சுகள் என்னவாயின, அந்தந்த வேளைகளில் தென்னிலங்கைத் தலைமைகள் அளித்த வாக்குறுதிகள் எவ்வாறு காற்றில் பறக்கவிடப்பட்டன அல்லது காகித ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன என்பவையெல்லாம் புலிகளின் தலைமைக்கு நன்குதெரிந்த விடயங்கள்.

ஜனநாயகத் தேர்தல் முறையின் கீழ் பெரும்பான்மை இனத்தவர் என்ற முறையில் தமக்கிருக்கும் அதிக வலுவோடு பலத்தோடு அரசியல் பேரம் பேசுவதற்கு வரும் தென்னிலங்கைத் தலைமையுடன், சிறுபான்மை இனத்தவர்கள் என்ற வலுக்குறைந்த நிலையில் இருந்து தமிழர்கள் பேசுவதை விட போரியல் சக்தியிலும் இராணுவ வலிமையிலும் விஞ்சி நின்று, சமதரப்பு என்ற சமநிலை அந்தஸ்தோடு பேசுவதில்தான் பயனும் பலனும் உண்டு என்பதை அனுபவப்பாடமாக நன்கு அறிந்தவர்கள் இப் போதைய தமிழ்த் தலைவர்கள். அதனால்தான் தேர்தலை ஒட்டிய அரசியல் பேரப்பேச்சுகளைப் பயனற்றவை என்று ஒதுக்கி, போரியல் வலுவோடு சமதரப்பு என்ற அந்தஸ்துடன் பேரம் பேசும் அமைதிப் பேச்சுக்கு இடமளித்துக் காத் திருக்கிறார்கள் தமிழர்கள்.

நன்றி: உதயன் (09-10-2005)
http://www.uthayan.com/editor.html
Reply
#30
முழு தமிழனும் ஓட்டுமொத்தமா எவனுக்குமே ஒட்டுபோடாமெ இருந்து பாருங்களேன்....அப்ப தெரியும் விளைவு...அதற்கு எல்லா தமிழங்களும் தயாரா??????
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
Vaanampaadi Wrote:முழு தமிழனும் ஓட்டுமொத்தமா எவனுக்குமே ஒட்டுபோடாமெ இருந்து பாருங்களேன்....அப்ப தெரியும் விளைவு...அதற்கு எல்லா தமிழங்களும் தயாரா??????

அது இந்தியால சாத்தியமா???...

அப்பிடி தமிழர்கள் செய்தால் யாருக்கு நன்மை எண்டு எங்கள் எல்லாருக்கும்.. நண்றாகத்தெரியும் வானம்பாடி.... அதால எங்கட நிலமை உயராது....... வாக்கை வழங்குவோம்... ஆனால் அது எங்கட முதுகில குத்தியவருக்கு ஆதரவாய் இருக்காது....
::
Reply
#32
சர்வதேச வலைப்பின்னலினதும் இந்தியாவின் பொலிடிக்கல் அஜன்டாவும் வெளிப்படையாக தெரிய வந்தமையால் ...புலிகள் தங்களுடைய பொலிடிகல் அஜண்டாவை நோக்கி தீவிரமாக முன்னெடுக்க போகிறார்கள் போல் தெரிகிறது...அதனால் யார் ஜனாதிபதி வந்தாலும் அவர்களுக்கு ஒன்றென்ற நிலையில் இருக்கிறார்களென்று நினைக்கிறன்
Reply
#33
[quote=kurukaalapoovan]சாதாரண தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்காது வாக்குகளை போட நினைத்தால் அது ரணிலுக்காகத்தான் இருக்கும்.

<b>கார்த்திகை 2003 நினைவுபடுத்திப்பார்த்தால், சந்திரிக்கா ரணிலின் அமைச்சுப்பதவிகளை பறித்ததால் தான் சமாதானம் பின்னடைவை சந்தித்தது என நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் எம்மக்கள்.</b>சந்திரிக்கா நாடாளமன்ற தேர்தலின் பின்னர் இனவாதிகளை வைத்து உருவாக்கிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிகரித்த கெடுபிடிகள், அப்பட்டமான இனவாத கோசங்கள் என்பன ரணிலின் மாசுபடாத சமாதான வேடத்திற்கு தமிழ் மக்கள் மத்தியில் உளவியல்ரீதில் மேலும் மெருகூட்டப்படுகிறது.

<b>இதனை புலிகள் மக்களுக்கு கூறமுடியாது என்றதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக இங்கே மாமனிதர் சிவராமின் தேவையை உணரக்கூடியதாக இருக்கிறது</b>

உங்களை எதிர்க்கிற முடிவோடதான் எழுதுறன்.... நீங்க சொல்லுறது அவ்வளவு நல்லால்ல... !

ரணில் காலத்துக் கருணாபிரச்சினை என்பது புலிகள் ரணுவம் பிரச்சினை....... எங்களிடம் இருந்த ஒரு துரோகி அடயாளம் காட்டப்பட்ட காலம்... அதுல புலிகளுக்கு வெற்றிதான்..... ஆனால் இப்போ கருணாகுழு எண்ட பேரில ராணுவத் துணைக் குழுக்களால் சந்திரிக்கா அரசு நடாத்துவது.... தொடர வேண்டுமா???... சமாதானம் எண்டபேரில ரணில் காலத்தில எந்த தமிழ் புத்தி ஜீவியும் கொல்லப் பட்டிருக்கவில்லை.......எங்களுடைய கருத்துக்கள் வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட உதவிய காலம்... புலிகளுக்கு நேரிடையாக இல்லா விட்டாலும்..... சர்வதேச அங்கீகாரம் கிட்டிய காலம்... சுதந்திரமான போக்கு வரத்துக்கள் நடாத்தினார்கள் புலிகள்.. ஆனால் இந்திய ஆதரவேடும்.(ENDLF ஐச் சொன்னன்).... சமாதானமும் போருக்கும் நடுவில் நிப்பாட்டி வைத்திருக்கிறார் சந்திரிக்கா... ரணில் காலத்தில்தான் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை கை எழுத்திடப்பட்டது....

ரணில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவாளர்தான் தமிழருக்கு ஓண்டும் தரப்போவதில்லை உண்மைதான்.... ஆனால் சந்திரிக்கா ராஜபக்ஸ்ச இந்திய ஏகாதிபத்திய ஆதரவாளர் போரையும் இனப்படுகொலையையும் நிகழ்த்துவார்... விரைவில் இந்தியாவோடு இராணுவ ஒத்துளைப்பு ஒப்பந்தம் செய்து <b>கொல்லுவார்கள்</b>...... இதைப் பயத்தினால சொல்ல இல்லை போர் எப்பவும் வரும்.. ஆனால் அருகில் இன்னும் ஒரு எதிரியின் கூட்டோடு வரக்கூடாது....... அமெரிக்க ஆதரவோடு இலங்கை இருந்தால் போரின்போது இந்திய ஆதரவு கிட்டாது.... அது போதாதா...???

அமெரிக்கா இலங்கையில் தனது நலனை நிலைநாட்ட அங்கு போர் நடப்பதை விரும்ப மாட்டாது... இலங்கை சுபீட்சமாய் இருக்கோ இல்லையோ தன் வியாபாரம் கெடாமல்ப் பாத்துக் கொள்ளும்... புலிகளை எதிரிகளாய் நடாத்த விரும்பாது......(எனது ஊகம்) ஆனால் இந்தியா அப்படியா???...

ம்ம்ம்....... நீங்கள் சொன்னது போல மாமனிதர் சிவராமின் இளப்பின் தாக்கம் இப்போ அதி உச்சமாக உணரமுடியுது.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இதுக்காக நான் ரணில் ஆதரவாளன் எண்டாதேங்கோ.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#34
ஓம் ஓம் காசு வேண்டிப்போட்டு ரணிலுக்கு நல்லா வக்காழத்து வாங்கிறீர் எண்டு தெரியுது. உம்மடை குடும்பத்தில எத்தினபோர் பரம்பரை பரம்பரைய UNP ஆதரவளித்து தமிழருக்க துரோகம் செய்தவை எண்டதை எல்லாம் செல்ல வெளிக்கிட்டால் களத்தில இடங்காணாது. நான் எதுக்கும் மோகனுக்கு மொட்டைகடிதம் ஒண்டு போட்டு உமக்கு வைக்கிறன் ஆப்பு. :mrgreen:
Reply
#35
kurukaalapoovan Wrote:ஓம் ஓம் காசு வேண்டிப்போட்டு ரணிலுக்கு நல்லா வக்காழத்து வாங்கிறீர் எண்டு தெரியுது. உம்மடை குடும்பத்தில எத்தினபோர் பரம்பரை பரம்பரைய UNP ஆதரவளித்து தமிழருக்க துரோகம் செய்தவை எண்டதை எல்லாம் செல்ல வெளிக்கிட்டால் களத்தில இடங்காணாது. நான் எதுக்கும் மோகனுக்கு மொட்டைகடிதம் ஒண்டு போட்டு உமக்கு வைக்கிறன் ஆப்பு. :mrgreen:


எப்பிடிக் கண்டு பிடிச்சீங் :mrgreen:
::
Reply
#36
<b>ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படுவது வரலாறு 4ம் கட்ட ஈழப்போர் உறுதி</b> <i>நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்</i>

இலங்கையின் இனப் பிரச்சினையானது நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஓர் அரசியல் பிரச்சினையாகும். அதாவது 1921ம் ஆண்டிலிருந்து 80 வருடங்களுக்கு மேலாக நிலவி வருகின்றது. ஆனால்இ இப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வு சிறிலங்காவின் சிங்கள அரசியல்வாதிகளால் இன்றுவரை வழங்கப்படவில்லை.

ஆனால்இ தமிழரின் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாகப் பல ஒப்பந்தங்கள்இ வட்டமேசை மாநாடுகள் நடைபெற்றன. இந்த ஒப்பந்தங்களும்இ வட்ட மேசை மாநாடுகளும் சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பால் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டது. மாநாடுகள் கலைக்கப்பட்டன.

இது சிறிலங்காவைப் பொறுத்தவரையில் வரலாறாகி விட்ட விடயம். அடுத்தடுத்து வந்த சிங்களத் தலைவர்கள் அனைவரும் அதே தவறை மீண்டும்இ மீண்டும் தமிழர்களுக்கு எதிராகச் செய்து வருகின்றனர்.

அதாவதுஇ கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியானவர்களில் எவருமே தமிழர் பிரச்சினைக்கு உருப்படியான முடிவு காணவில்லை. மாறாகத் தமிழர்களின் உரிமைகளைப் பறித்தனர். திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றம் மூலம் தமிழர் தாயகத்தைத் துண்டாடினர். பொதுவாகக் குறிப்பிடுவதாயின் தமிழ்த் தேசிய இனத்திற்கான பண்புகள் அனைத்தையும் அழிப்பதற்கான முயற்சிகளையே சிங்கள அரசாங்கம் மேற்கொண்டு வந்தது. சிறிலங்காவின் 01வது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆவார். இவர் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைச் சிதைப்பதற்கானஇ தன்னாலான அனைத்து வழி முறைகளையும் கையாண்டார். இவரையடுத்து 1989ல் ஜனாதிபதியான ஆர்.பிரேமதாஸா ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை விடத் தீவிரமாக விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார்.



1993ல் பிரேமதாஸா மனித தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகினார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியாகிய டி.பி.விஜயதுங்க தன்னால் முடிந்தளவு இனவாதத்தைக் கக்கினார். ஒரு வருடத்திற்குப் பின் 1994ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும்இ சிங்கள தேசத்தின் முக்கிய இனவாதியுமான காமினி திஸாநாயக்க மனிதக் குண்டுக்குப் பலியாகஇ போலிச் சமாதானப் புறாவான சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியானார்.

இவர் இன்று வரை சிறில ங்காவின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்து வருகின்றார். தற்போது 5வது நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதிக்கான தேர்தலும் நடைபெறவுள் ளது.
மேற்குறிப்பிட்ட சிறிலங்காவின் அடுத்தடுத்து வந்த சிங்களத் தலைவர்கள் எவருமே தமிழ் மக்களின் உரிமை என்ற பெயரில் ஒரு எள்ளைக் கூடத் தமிழர்களுக்குக் கொடுக்கவில்லை. எனவேஇ சிங்கள அரசியல் தலைவர்கள் எவரையுமே தமிழ் மக்கள் நம்புதவற்குத் தயார் இல்லை.

அதேபோல்இ சிங்களத் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நம்புவதற்கும் தயாராக இல்லை எனலாம். அதாவதுஇ 1920ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ்த் தலைவர்களுக்கும்இ சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுக் கிழித்தெறியப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் சட்ட சபையில் தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக 1920ம் ஆண்டு சிங்களத் தலைவர் ஒருவரான சேர். ஜேம்ஸ் பீரிசுக்கும்இ தமிழ்த் தலைவர் ஒருவரான சேர்.பொன். அருணாசலத்திற்குமிடையில் மேல் மாகாணப் பிரதிநிதித்துவம் பற்றிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால்இ இந்த ஒப்பந்தம் சிங்களப் பேரினவாதிகளின் எதிர்ப்பால் கிழித்தெறியப்பட்டது.


இதன் பின்னர் 1924ம் ஆண்டு அதே சட்ட சபைப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக அன்றைய சட்டசபை உறுப்பினரான வைத்தியலிங்கம் துரைசாமிக்கும்இ அன்றைய சிங்களத் தலைவரான பாரன் ஜெயத்திலக்காவுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இது "மகேந்திரா ஒப்பந்தம்" எனப்பட்டது. இவ் ஒப்பந்தம் சிங்களப் பயங்கரவாத எதிர்ப்பால் கிழித்தெறியப்பட்டது. இதன் பின்னர் அப்போதைய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா 1956 யூன் 5ம் திகதி "சிங்களம் மட்டும்" சட்டத்தை நிறைவேற்றினார்.

இதற்கு எதிராக அப்போது எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றதை அடுத்து 1957ம் ஆண்டு யூலை மாதம் 26ம் திகதி தமிழ்த் தலைமையுடன் பண்டாரநாயக்கா ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். இது "பண்டா - செல்வா" ஒப்பந்தம் எனப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பேரினவாதிகள் கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள். இதற்குப் பண்டாரநாயக்கா அஞ்சி அவ் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார்.

அடுத்துஇ 1965ம் ஆண்டு ஐ.தே.கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. அதன் தலைவர் டட்லி சேனாநாயக்காவும்இ தந்தை செல்வாவும். தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக 1965ம் ஆண்டு பங்குனி 24ம் திகதி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இது "டட்லி - செல்வா" ஒப்பந்தம் எனப்பட்டது. ஆனால் இந்த உடன்படிக்கையும் கிழித் தெறியப்பட்டது.
அடுத்த முயற்சியாக 1985ம் ஆண்டு இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு பூட்டான் தலைநகரான திம்புவில் மாநாடு கூட்டப்பட்டது.

இதன் போது தமிழ் அமைப்புக்களால் நான்கு அம்சக் கோரிக்கைகளை (திம்புக் கோரிக்கைகள்) முன்வைத்தனர்.

ஆனால்இ இக்கோரிக்கைகள் ஒரு தனி நாட்டிற்கான கோரிக்கைகளாக இருக்கின்றமையினால் அதனை ஏற்க முடியாது என ஜெயவர்த்தனாவின் குழு கூறியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் நிர்ப்பந்தத்தினால் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜூவ் காந்திக்கும்இ இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் "இலங்கை - இந்திய ஒப்பந்தம்" கைச்சாத்திடப்பட்டது.



இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இம்மாகாண சபைகள் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கவில்லை. இதனால் தமிழர்களின் 2ம் கட்ட ஈழப்போரை நடாத்த வேண்டி ஏற்பட்டது.

மேலும்இ அமைதிப் பேச்சுக்களின் போது அமைக்கப்பட்ட அவசர மனிதாபிமானஇ மற்றும் புனர்வாழ்வுத் தேவைகளுக்கான உப குழுக்களைக் கூட இனவாதப் பௌத்த மதங்களும்இ சிங்களப் பயங்கரவாதிகளும் தடுத்து நிறுத்தினர். உதாரணமாக அன்று "சிரான்" இன்று "பொதுக்கட்டமைப்பு" போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

எனவேஇ மேற்குறிப்பிடப்பட்ட பந்திகளில் உள்ள வரலாற்று விடயங்களைப் படிப்பினையாகக் கொள்வோமானால்இ தமிழ் மக்கள் சிங்களத் தலைவர்கள் மீதோஇ சிங்களத் தலைவர்களின் ஒப்பந்தங்கள் மீதோ நம்பிக்கைவைக்க முடியாது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இதன்படி தேசியத் தலைவர் மேதகு வே.தலைவர் பிரபாகரன் - ரணில் ஒப்பந்தம் குறுகிய காலத்தில் கிழித்தெறியப்படும் என்பதும்இ தெளிவாகின்றது. அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் வெற்றி பெற்றாலும் சரிஇ பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றாலும் சரி தமிழர்களைப் பொறுத்தவரையில் இருவரும் முன்னைய இனவாதத் தலைவர்களைப் போன்றே இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனவேஇ தமிழர்கள் தங்கள் தமிழர் தாயகத்தைப் பெறுவதற்கும்இ சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கும் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. அதாவது 4ம் கட்ட ஈழப்போரை நடத்த வேண்டியுள்ளது எனலாம்.
ஆனால்இ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்து 4ம் கட்ட ஈழப் போரைத் தொடங்குவதற்கான கால மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதாவதுஇ மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவாரானால் 4ம் கட்ட ஈழப்போர் மிக விரைவில் தொடங்கப்படும். காரணம் ஜே.வி.பிஇ ஹெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகளின் இனவாதக் குப்பைகளைச் சுமந்து கொண்டு களமிறங்குகின்றார். வெற்றி பெற்றவுடன் இந்த இனவாதக் குப்பைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பார்.

இதைப் பார்த்துக் கொண்டு தமிழ் மக்கள்இ புலிப்படை பொறுமை காக்க முடியாது. அத்துடன் சர்வதேச சமூகம் மறைமுகமாகச் சண்டையைத் தொடங்குவதற்காக ஒத்துழைப்பைத் தரக்கூடும். எனவேஇ தமிழ் மக்கள் தமது தாயக விடுதலைக்கான 4ம் கட்ட ஈழப் போரை உடனே தொடங்குவர்.

ஆனால்இ ரணில் வெற்றி பெறுவாரானால் பேச்சு என்று காலத்தை இழுத்தடிப்புச் செய்வார். இதன் போது சர்வதேச சமூகம் சண்டையைத் தொடங்குவதற்கு சொற்பமேனும் ஒத்துழைப்புத் தரமாட்டாது. சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காமல் சண்டையைத் தொடங்கவும் முடியாது.

எனவே 4ம் கட்ட ஈழப் போருக்கான காலம் நீண்டு செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது. எதிர்கொள்ள வேண்டிய 4ம் கட்ட ஈழப் போரானது தமிழீழம் வென்றெடுப்பதற்கான இறுதிப் போராகவே அமையக் கூடும்.

எனவேஇ இப்போரை வெற்றி கொள்வதற்கு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை விரிவாக்கப்பட்ட பெறுமதி வாய்ந்த வெற்றிகளைக் குவிப்பதற்கான தாக்குதல்; திட்டங்களைத் தீட்டியுள்ளனர். அத்துடன் புலிப்படையின் சகல துறைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழர் தாயகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இச்சண்டையை எதிர் கொள்வதற்குத் தங்களைப் பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அதாவதுஇ ஒன்றுபட்ட தற்காப்புப் பயிற்சியில் தங்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளது. மேலும் புலனாய்வு ரீதியிலான விழிப்புணர்வைப் பெறவேண்டும்.

ஒவ்வொருவரும் தமிழீழப் பற்று தங்களிடமிருந்து குறைந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேற்படி தமிழ் மக்களின் ஒன்றுபட்ட இச்செயற்பாடுகள் தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வலுச் சேர்க்கும்.

இதனால்இ 4ம் கட்ட ஈழப் போரில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து தமிழ் மக்களாகிய நாம் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகப் போரிட்டுத் தமிழீழத்தைத் துரித கதியில் பெற்றெடுக்கலாம் என்பது உறுதி.

http://www.battieezhanatham.com/weeklymatt...1410/pawan.html
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)