Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
ஜனாதிபதித் தேர்தலினால் தமிழர் பெறப்போவது ஒன்றும் இல்லை... ஆனால் சிங்கள தேசத்துக்கு தமிழர் தங்கள் உணர்வைப் பிரதிபலிக்கும் கடமை உள்ளது... என்ன செய்ய வேண்டும்...???
இரண்டு பிசாசுகள் ஜனாதிபதியாக வரப் போட்டி போடுகிண்றன அதில் நல்ல பிசாசு எது...???..
<b>TELO முதல்வர் சிறீகாந்தாவின் உணர்வு..செவ்வியில்</b>
(தமிழ்நாதம்)
::
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
தமிழர் எல்லோரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். ஆனால் எல்லோரும் தமது வாக்கை செல்லுபடியற்ற வாக்காக அளிக்க வேண்டும். (அதாவது எல்லோருக்கும் புள்ளடி இடவேண்டும்)
அதன் மூலம் தமிழர்கள் அளிக்கப்பட்ட வாக்கில் எவ்வளவு வாக்குகள் செல்லுபடியற்றதோ அவ்வளவுக்கு தமிழர்கள் சிங்களதேசத்தை நிராகரிக்கின்றார்கள் என்பதை உலகுக்கு வெளிக்காட்டலாம்.
இது எனது கருத்து. உங்களின் கருத்தையும் தெரிவியுங்கள்
" "
Posts: 56
Threads: 6
Joined: Oct 2005
Reputation:
0
என்கருத்து என்னவெனில் தமிழர் தரப்பில் ஒருவரைப் பொதுவேட்பாளராக அறிவித்துப் போட்டியிடுவது. வெல்லப்போவதில்லையென்பது உறுதி. ஆனால் இப்படி மதில்மேல் பூனையாக இருப்பதிலும் பார்க்க மக்களுக்குத் தெளிவான ஒரு முடிவு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டமென. அத்தோடு தமிழ்மக்கள் சிங்களத் தலைமையை நிராகரிக்கிறார்கள் என்பதும்புலனாகும்.
ஆனால் யாரைப் போட்டியாளராக நியமிப்பது என்பதில் எங்கட ஆக்களுக்க வெட்டுக்குத்து நடக்கலாம்.
எனக்கு என்ன ஆச்சரியமும் வேதனையுமென்றால், இன்னும் புலிகளோ, தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ இத்தேர்தலில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை. அதைச் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்குண்டு. சும்மா நீங்களே தீர்மானியுங்கள் என்று சொல்லிவிட முடியாது. குறைந்தபட்சம் வாக்களி;ப்பிலிருந்து ஒதுங்கியிருங்கள் என்றாவது சொல்லப்பட வேண்டும்.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
எல்லாத்தையும் புலிகள் தான் சொல்ல வேணும் செய்ய வேணும் எண்டு ஏன் அடம் பிடிக்கிறியள்.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
இலங்கைத்தீவின் குடிமக்களை தவிர மற்றயவர்கள் ஜனாதிபதியாக யார் வருவதை விரும்புவார்கள் என்ற உங்கள் கருத்துக்களை கொஞ்சம் சொல்லுங்கோவன் கள உறவுகளே.
உதாரணத்திற்கு சமாதானத்திற்கான இணைத்தலமை, ஏனய "ஆர்வமுள்ள" சர்வதேசச் சக்திகள், இந்தியா, சீனா போன்றவை...
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
இனவாதிகளுடன் கூட்டு வைத்திருக்கும் பிரதமரை<b>(ராஜபக்ஷ்ச)</b> விட <b>ரணில்</b> வெல்வது நல்லது.... இரண்டுமே பிசாசுகள்... அதில் நல்ல பிசாசுக்கு வாக்களிக்கலாம்....
புலிகள் தமிழ்மக்கள் சுயமாக முடிவு எடுக்கட்டும் என்கின்றனர்... அதாவது அரசியல் பேரத்தில் தாங்கள் சிக்காமல் தமிழ்மக்களைச் சுயமாக முடிவு எடுக்கச் சொல்கிறார்கள்... தமிழ்மக்களுக்கு அவர்களால் (போட்டியிடு பவர்களால்) எந்தவிதமான நல்லதும் நடக்கப் போவதில்லை அதை அறிந்தவர்கள் புலிகள். அவர்களால் ஒரு வேட்பாளரைக் காட்டி அவர்மீது நம்பிக்கை அற்ற நிலையில் இவருக்கு வாக்கை வளங்குங்கள் எண்டு சொல்வது முடியாதவிடயம்....
<b>ஆனால் பேரினவாதம்(போர் இனவாதம்) எல்லாம் ஒண்றாக இணைந்திருக்கும் இந்த வேளையில் அந்த பேரினவாதத்தை வெல்ல விடுவது நல்லதல்ல... பேரினவாதத்தின் வெற்றி மேற்கொண்ட இன அடக்கு முறைக்கு வளிசெய்யும்... ஆதலால் இப்போதைக்கு ரணிலுக்கு வாக்கை வழங்கி வெல்ல வைத்து இனவாதிகளை அடக்க வேண்டிய கட்டத்தில் தமிழ்மக்கள் இருக்கிறார்கள் என்பது எனது கருத்து....</b>
::
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
sri Wrote:தமிழர் எல்லோரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். ஆனால் எல்லோரும் தமது வாக்கை செல்லுபடியற்ற வாக்காக அளிக்க வேண்டும். (அதாவது எல்லோருக்கும் புள்ளடி இடவேண்டும்)
அதன் மூலம் தமிழர்கள் அளிக்கப்பட்ட வாக்கில் எவ்வளவு வாக்குகள் செல்லுபடியற்றதோ அவ்வளவுக்கு தமிழர்கள் சிங்களதேசத்தை நிராகரிக்கின்றார்கள் என்பதை உலகுக்கு வெளிக்காட்டலாம்.
கடந்த பொது தேர்தலில் தமிழர் கூட்டமைப்பிற்கு வாக்களிப்ப்பதன் மூலம் தமிழர்களில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துமாறு கோரப்பட்டது அதனால் மீண்டும் ஒரு முறை வாக்குகளை செல்லுபடியானதாக்கி அதனை நிரூபிக்க தேவையில்லை என்று நினைக்கின்றேன். தவிர தமிழர் தமது வாக்குகளை செல்லுபடியற்றதாக்கும் போது அது தமிழர்கள் விரும்பாத ஒருவர் ஜனாதிபதியாகவும் உதவி செய்யும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கோமதி Wrote:என்கருத்து என்னவெனில் தமிழர் தரப்பில் ஒருவரைப் பொதுவேட்பாளராக அறிவித்துப் போட்டியிடுவது. வெல்லப்போவதில்லையென்பது உறுதி. ஆனால் இப்படி மதில்மேல் பூனையாக இருப்பதிலும் பார்க்க மக்களுக்குத் தெளிவான ஒரு முடிவு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டமென. அத்தோடு தமிழ்மக்கள் சிங்களத் தலைமையை நிராகரிக்கிறார்கள் என்பதும்புலனாகும்.
ஆனால் யாரைப் போட்டியாளராக நியமிப்பது என்பதில் எங்கட ஆக்களுக்க வெட்டுக்குத்து நடக்கலாம்.
தமிழர் ஒரு வேட்பாளரை அறிவித்து அவர் வெல்வது நடைமுறை சாத்தியம் இல்லாத நிலையில் அப்படி ஒரு முயற்சி அவசியமற்றது, தவிர அப்படி வெற்றிபெற சாத்தியமில்லாத நிலையில் போட்டியிடுவது வாக்குகளை பிரித்து நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழர்களுக்கு பிடிக்காத ஒருவர் ஜனாதிபதிகாக உதவி செய்யும், நீங்கள் குறிப்பிட்டது போல பொது தமிழ் வேட்பாளருக்க்காக வெட்டுகுத்து கூட நடக்கலாம். வெல்லமுடியாவிட்டால் என்ன தேர்தலில் நின்று பிரபலமாகலாம் சரித்திரத்தில் இடம்பிடிக்கலாம் என்று நினைப்பார்கள்.
கோமதி Wrote:எனக்கு என்ன ஆச்சரியமும் வேதனையுமென்றால், இன்னும் புலிகளோ, தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ இத்தேர்தலில் தமிழர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை. அதைச் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்குண்டு. சும்மா நீங்களே தீர்மானியுங்கள் என்று சொல்லிவிட முடியாது. குறைந்தபட்சம் வாக்களி;ப்பிலிருந்து ஒதுங்கியிருங்கள் என்றாவது சொல்லப்பட வேண்டும்.
புலிகள் வெளிப்படையாக இந்த தேர்தலில் யாரையும் ஆதரிக்கும்படி சொல்ல மாட்டார்கள் என்றே நான் நினைக்கின்றேன். அப்படி ஒரு நியாயமான நம்பிக்கையான தலைவர் தெற்கில் போட்டியிடவில்லை என்று நினைக்கின்றேன், அதுதவிர அப்படி வெளிப்படையாக ஒருவரை ஆதரிக்கும் போது இரண்டு சிக்கல்கள் எழலாம். ஒன்று புலிகள் ரணிலை ஆதரிக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி மகிந்தவும் ஜேவிபியும் பிரச்சாரம் செய்து சிங்கள மக்களின் இன உணர்வை தூண்டி இலகுவாக மகிந்தவை வெற்றி பெற செய்ய முயலலாம், இது எதிர்மறையான விளைவை ஏற்ப்படுத்துவது, இரண்டாவது புலிகள் ஆதரித்து வெற்றி பெறும் ஜனாட்திபதியுடன் நாளை பிரைச்சனை தீர்வில் கருத்து முரண்பாடு ஏற்படும் போது அல்லது தமிழர்களுக்கு எதிராக அந்த ஜனாதிபதி நடக்கும் போது அது புலிகளுக்கு ஒரு தர்ம சங்கடமான நிலையை உருவாக்கலாம்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kurukaalapoovan Wrote:இலங்கைத்தீவின் குடிமக்களை தவிர மற்றயவர்கள் ஜனாதிபதியாக யார் வருவதை விரும்புவார்கள் என்ற உங்கள் கருத்துக்களை கொஞ்சம் சொல்லுங்கோவன் கள உறவுகளே.
உதாரணத்திற்கு சமாதானத்திற்கான இணைத்தலமை, ஏனய "ஆர்வமுள்ள" சர்வதேசச் சக்திகள், இந்தியா, சீனா போன்றவை...
இலங்கையில் சீனாவின் அரசியல் அபிலாசைகள் குறித்து எனக்கு சரியா தெரியலை, வேண்டுமானால் அமெரிக்க சார்பு குறைந்த ஒருவர் ஜனாதிபதியாக வருபதை விரும்புவார்கள் என நினைப்பேன்,
செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது இந்திய அரசு மகிந்த ஜனாதிபதியாக வருவதையே விரும்பும் என்று நினைக்கின்றேன், ஏற்கனவே ரணில் புலிகளுடன் செய்த ஒப்பந்தம் இந்திய அரசிற்கு பிடித்திருக்கவில்லை, தவிர ஜேவிபியுடனான இந்திய அரசின் உறவு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மூலமான அவர்களின் நகர்வுகள், இலங்கையில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கை உபயோகித்து மகிந்த அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவு என்பவை மகிந்தவுக்கு தான் அவர்கள் ஆதரவு எனும் எண்ணத்தை வலுப்படுத்துகின்றது.
நோர்வே எப்படி? அவர்கள் பலமுறை சந்திரிகா, மகிந்த, ஜேவிபி உள்ளிட்டோரால் அவமானப்படுத்தப்பட்டவர்கள், இந்த அணி நோர்வே இலங்கை சமாதானத்திற்கு அவசியமில்லை என்று நினைப்பவர்கள், இந்த நிலையில் மகிந்த வருவதை நோர்வே விரும்புமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Thala Wrote:இனவாதிகளுடன் கூட்டு வைத்திருக்கும் பிரதமரை<b>(ராஜபக்ஷ்ச)</b> விட <b>ரணில்</b> வெல்வது நல்லது.... இரண்டுமே பிசாசுகள்... அதில் நல்ல பிசாசுக்கு வாக்களிக்கலாம்....
தற்போதைய சூழ்நிலையில் ரணிலுக்கு வாக்களிப்பது நல்லது என்பதே எனது கருத்தும், இரண்டு பிசாசுகளில் எது நல்ல பிசாசு என்பதைவிட ராஜபக்ஷ அதிகம் கெட்ட பிசாசு எனலாம், அதனால் நமக்கு அதிகமாக பிடிகாத வேண்டப்படாத ஒருவரை தோற்கடிக்க ரணிலுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இனவாதம் மற்றும் கடும்போக்கு ஜேவிபியுடன் நல்லுறவு என்று மகிந்த தமிழருக்கு எதிரான போக்குடன் இருக்கின்றார், இவரின் கட்சி ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் நிலையில் ஜனாதிபதி பதவியும் அந்த பக்கம் போய் சேர்ந்தால் அது அவர்கள் முழுபலத்துடன் ஆட்சி செய்து இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளவே வாய்ப்பாக அமையும்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
"இராமானா? அல்லது இராவணனா??" யார் ஆண்டாலென்ன! எல்லாம் ஒன்றாக எமக்குத் தெரிந்தாலும், ....
...... இலங்கை அரச தேர்தலைப் பொறுத்தவரை ரணில் ஜனாதிபதியாக வரும் பட்சத்தில், இனப்பிரட்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு எமக்கெதிராக சர்வதேச வியூகங்களை அமைத்து, எமது போராட்டத்திற்கு பல இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும்.
..... மாறாக ராஜபக்ச, அதே சந்திரிக்காவின் பழைய போர்முரசுகளுடன், போதாக்குறைக்கு யுத்தவல்லுனர்கள்?? ஜே.வி.பி/உறுமைய கூட்டு வேறு!!! மொத்தத்தில் ராஜபக்ஸதான் எம் இனத்தின் விடிவெள்ளி!!!! இந்த தெருச்சண்டியர்கள்தான் எமது விடுதலையை விரைவாக்க உதவப் போகிறவர்கள்!!!!
" "
Posts: 118
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
மகிந்தவை விட ரணில் சர்வதேச அழுத்தங்களை எமக்கு எதிராக இலகுவில் திருப்பக்கூடியவர்.
ஆனால் ரணில் காலத்தில்தான் புலிகள் அமைப்புக்குள் கருணா பிரச்சினை எழுந்தது.
ரணிலை விட மகிந்த உள்நாட்டில் பலமான கூட்டணியை வைத்திருக்கிறார்.
எனவே தமிழர்கள் தமது பலம் உள்நாட்டிலா அல்லது சர்வதேசத்திலா பலம் பொருந்தியது என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டால் தமக்குரிய சரியான எதிரியை இந்த தேர்தலில் வெல்ல வைக்க மறைமுகமாக உதவ முடியும்.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
உண்மை தான் சமாதான தேவனின் சர்வதேசவலைப்பின்னலை எங்கட சனம் ஒருபோதும் முழுமையாக விளங்கியது இல்லை.
சமாதானத்திற்கான இணைத் தலமை, இந்திய போன்றோர் ரணில் வருவதைத்தான் விரும்புவார்கள்.
ஜரேப்பியப் பயணத் தடை மூலம் என்வென்று அதை அடை முனையீனம் என்று விளங்கவில்லை :roll: :?
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
தமிழர்கள் இத்தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டுமென்று சொல்ல வேண்டிய தேவை புலிகளுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் உண்டா இல்லையா?
நிச்சயமாக அவர்களின் கடமை அது. அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். குறைந்தபட்சம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாவது ஒரு முடிவு சொல்ல வேண்டும்.
ஏன் முன்பு புலிகள் ஏதும் சொன்னதில்லையா? எத்தனை தேர்தல் புறக்கணிப்புக்களைச் செய்தார்கள்?
இன்று முழுக்க முழுக்க புலிகளின் தலைமையை நம்பியுள்ள தமிழர்க்கு ஒரு முடிவுமில்லாமல் இப்படி விடுவது சரியன்று.
இங்கே கருத்தெழுதுபவர்கள் யாருக்கும்கூட சரியாகத் தெரியவில்லை யாருக்கு வாக்குப்போட வேண்டுமென. இப்படித்தான் எல்லாத் தமிழர்களும் குழம்பப் போகின்றனர். சிலர் தேர்தலைப் புறக்கணிப்பர். சிலர் ரணிலுக்கு சிலர் மகிந்தவுக்கு மற்றவர்கள் வேறு யாருக்காவது என்று தான் போடப்போகிறார்கள். எந்தத் தெளிவுமற்ற ஒரு நிலையில் மக்கள் நிற்கிறார்கள். இது எமது போராட்டத்துக்குச் சரியா? அதைவிட ஒட்டுமொத்தமாக தேர்தலைப் புறக்கணிப்பது சிறந்ததே.
------------------------------------------------------
ரணில் வந்தால் பழையபடி முதலிலிருந்து பேச்சுக்கள். கடந்த 4 வருடங்களாக என்ன நடந்ததோ அவையே திருப்பவும் நடக்கும். உலக மட்டத்தில் ரணிலுக்கிருக்கும் மதிப்பையும் நம்பிக்கையையும் வெல்வது கடினம். (ஏன் இங்கே கருத்தெழுதும் சிலர்கூட ரணில் மகிந்தவைவிடப் பரவாயில்லையென்றே சொல்கின்றனர்) உண்மையில் ரணில்தான் மிக ஆபத்தான எதிரி. ரணில் வந்தால் நாம் திரும்பவும் பேச்சுவார்த்தைச் சேற்றுக்குள் கால் வைக்க வேண்டியதுதான்.
மாறாக மகிந்தவுடன் கூட்டுச்சேர்ந்த பேரினவாதிகளின் உதவிமூலம் உலகிற்கு சிங்களப்பேரினவாதத்தின் முகமூடி கிழிக்கப்படக்கூடும். எமதுதரப்புச் சிக்கல்கள் இன்னும் தெளிவாக வெளித்தெரியக்கூடும். சிலவேளை யுத்தம் தொடங்கப்பட்டால்கூட அது எமக்குச் சாதகமாக முடியலாம். ஆனால் ரணில் வந்தால் யுத்தமும் தொடங்க முடியாது. பேசிப்பேசியே ஓய்ந்துபோக வேண்டியதுதான். இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் இப்படியே பேசி இழுபட்டுக்கொண்டால் பிறகு போராட ஆக்களும் இருக்காது. போராட்டத்துக்கு ஆக்களும் எடுக்கேலாது. அதைத்தான் எல்லாரும் விரும்புகிறார்கள்.
----------------------------------------------------------------
ரணிலோ மகிந்தவோ தான் வரப்போகிறார்கள். யார் வந்தால் நல்லதென்று தீர்மானிக்கவேண்டிது தலைமை. அதைச் சரிவரக் கணிக்கக்கூடியவர்களும் அவர்கள்தான். ஆகவே யார்வருவது தமக்கு நல்லதென்று புலிகள் கருதுகிறார்களோ அதைத் தமிழர்கள் மூலம் நிறைவேற்ற முயல வேண்டும். நேரடியாக தாம் சம்பந்தப்பட விரும்பாவிட்டால் வேறு ஏதாவது ஒரு முறைமூலம் அதைச் செய்யலாம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மூலம் செய்யலாம்.
ஏனைய கட்சிகள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு ஒரு முடிவைச் சொன்னதுபோல தமிழர்க்கான முடிவைச் சொல்ல வேண்டியது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கடமை.
Posts: 157
Threads: 9
Joined: Aug 2005
Reputation:
0
அழுதாலும் குளறிணாலும் அந்த தாயே தன்பிள்ளையை பெறவேண்டும்.
யாரும் உதவினாலும் உபத்திரம்தந்தாலும் கூட... :|
.
Posts: 118
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
பேச்சு வார்த்தை மூலம் தீர்வை எட்டக்கூடிய சர்வதேச அபிப்பிராயத்தை எம்மால் ஏற்படுத்தக் கூடிய அதிவல்லமை தமிழர் தரப்புக்கு இருக்குமென்றால் ரணில் வருவதே நல்லது.
யுத்தமூலம் எமது இலக்கை எட்டக்கூடிய கள நிலவரம் எமக்கு சாதகமாக இருப்பின் மகிந்த வருவதே சிறப்பு.
இங்கு புலிகளின் முன்கூட்டிய முடிவு தமிழ் மக்களுக்கு இந்த ஜனாதிபதி தேர்தலில் முக்கியமானது. இவோன் குறிப்பிட்டது போல் த.தே.கூட்டமைப்பு மூலம் வெளிப்படுத்தலாம்.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
Quote:ஏன் முன்பு புலிகள் ஏதும் சொன்னதில்லையா? எத்தனை தேர்தல் புறக்கணிப்புக்களைச் செய்தார்கள்?
இன்று முழுக்க முழுக்க புலிகளின் தலைமையை நம்பியுள்ள தமிழர்க்கு ஒரு முடிவுமில்லாமல் இப்படி விடுவது சரியன்று.
தேர்தல் புறக்கணிப்புச் செய்த காலங்கள் போர் உக்கிரமாக நடந்த காலங்கள் அப்போது போராட்டம் தமிழீழத்தை நோக்கியதாய் இருந்தது..... இப்போ சுயநிர்ணயம் வேண்டி பேச்சில் ஈடுபடும் காலம்........ இப்போ முக்கியமாய் மக்களுக்கு புலிகளால் விரும்பிச் சொல்லக்கூடியது தேர்தல் புறக்கணிப்புத்தான்... தமிழ்மக்களுக்கு சிங்களத்தலைமையில் நம்பிக்கை இல்லை எண்ட செய்தியை... ஆனால் விரும்பியோ விரும்பாமலோ.. தமிழர் சர்வதேசத்தின் அனுசரனை வேண்டி நிக்கின்றோம்... எமது போராட்டத்தின் நியாயத்தன்மை... வெளியுலகுக்கு காட்ட வேண்டிய தேவை உள்ளது..... அவர்களின்(சர்வதேச) விருப்பு கடந்த தடவை நோர்வே ஊடாக புலிகளிடம் சொல்லப்பட்டது.... அது சுயாதீனமான தேர்தல் வர வேண்டும் என்பதுதான்.... (எதிர்ப்புக்கள் அற்ற) அதற்காகத்தான் தமிழ்ச்செல்வன் அவர்கள் பதிலாக தமிழ்மக்கள் சுயமாக முடிவு எடுப்பார்கள்..! எண்று தனது செவ்வியில் சொல்லி இருந்தார்..
அந்தச் செய்திக்கு தமிழ் ஊடகங்கள் பெரிதாய் முன்னிலைப் படுத்தி வெளியிடவில்லை.... அதற்கு அவர்கள் கொடுக்காத முக்கியத்துவம் தான் காரணம் தமிழ்க்கூட்டமைப்பு முதலின் தங்களின் ஆதரவு யாருக்கும் இல்லை எண்டு அறிவித்திருந்ததுதான்.......... ஆனால் BBc ஆங்கில, தமிழ்ச் சேவைகள் இந்தச் செய்திக்கு மிகமுக்கியத்துவம் கொடுத்திருந்தன....... காரணம் அவர்களின் எதிர்பார்ப்பு அப்படி (BBC,CNN, என்பது செய்தி ஊடகம் மட்டும் இல்லை.. நாட்டின் கருத்துக்களை விதைக்கும் சாதனமாகப் பயன் படுவது)...
இப்போ புலிகளால் நம்பிக்கை அற்ற ஒருவருக்கு வாக்களிக்கச் சொல்ல முடியாத நிலை..! அவர்களுக்காக தமிழ்க்கூட்டமைப்பு தான் தன் கருத்துக்களை சொல்ல வேண்டும்.... இது அவர்களுக்கான வேலை...
::
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
சர்வதேசத்தின் ஈடுபாட்டை தொடர அதன் பயன் பாட்டை அறுவடை செய்யக்கூடிய தந்திரமும் ரணிலுக்கு தான் உண்டு.
ஆனால் மகிந்த வெல்லப்போறார் எண்ட ஒரு நிலை உருவாகும் போது சந்திரிக்காவின் executive presedential powers invoke பண்ணி தேர்தலையே நிப்பாட்டிப்போடுவங்கள். மகிந்த தென்பகுதி பெரும்பான்மை மக்கள் மத்தியில் மறைந்த பிரேமதாசா மாதிரி hands-on common man's leader என்று கேள்வி.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
kurukaalapoovan Wrote:ஜரேப்பியப் பயணத் தடை மூலம் என்வென்று அதை அடை முனையீனம் என்று விளங்கவில்லை :roll: :?
இதற்கு இராஜதந்திரம் காரணமாய் இருக்கலாம்...!
அதற்குமுன் ஒரு கேள்வி சர்வதேச நிலையில் பொருளாதாரத்தில் தன்னிறைவுகண்டு இருக்கும் ஜேர்மனி...,வல்லரசுகளாய் இருக்கும் இங்கிலாந்து, பிரான்ஸ், என்பன உள்ளடங்கிய ஐரோப்பிய ஓண்றியம்...... வெறும் சிறிய தீவான இலங்கையின் பரப்புரையை நம்பி தடை போட்டிருப்பார்கள் எண்டு எண்ணுகிறீர்களா???....
அதுவும் உதவிவளங்கும் நாடுகள் அறிக்கை வெளியாகி ஒரு வாரத்துக்குள் அதற்கு எதிர் மறையான ஒரு அறிக்கையுடன்... வந்த தடை அது என்பதைக் கவனத்தில் கொள்க...
இலங்கையில் நடப்பவை எதுவும் இந்த ஐரோப்பிய தலைமை நாடுகளின் புலனாய் வாளர்கள் கொள்கை வகுப்பாளர்களுக்குத் தெரியாதா???... இலங்கை வருட வருவாயைவிட அதிகமாக புலனாய்வு நடவடிக்கைக்காய் செலவளிப்பவர்கள் அவர்கள்...... உண்மை நிலை தெரியாது அவர்களுக்கு எண்டுறீர்களா......???
<b>அவர்களுக்கு வேண்டிய மாங்காய்க்காக எறியப் பட்ட கல்லு அது........</b>
::
|