09-05-2005, 08:35 PM
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/20050902100123singaporelion203.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>'சிங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்ப் பயன்பாடு குறைகிறது'</b>
சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழ் மொழியின் பயன்பாடு மிகவும் குறைந்து வருவதாக சிங்கப்பூரின் கல்வியமைச்சர் தர்மன் சண்முகரட்ணம் கவலை வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர் தமிழ் மாணவர்களுக்கு தமிழை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அருகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த தமிழ் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பேசுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்தக் கூற்றை ஆமோதிக்கும் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் கருத்தரங்கின் ஏற்பாட்டாளரான வீ.ஆர்.பி. மாணிக்கம் அவர்கள், இலங்கை மற்றும் தமிழ்நாடு தவிர தமிழர் வாழும் ஏனைய நாடுகளில் தமிழின் புழக்கம் மிகவும் குறைந்து வருவதாகக் கூறுகிறார்.
சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்கின்ற போதிலும், அங்கே ஆங்கில மொழியின் மோகம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் தமிழின் பயன்பாடு குறைந்து வருவதாகவும் மாணிக்கம் கூறுகிறார்</span>
-BBC tamil