Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை இந்தியா கேட்டிருக்கின்றது என்றும், இந்திய உள்துறை அமைச்சு தயாரித்த அறிக்கை ஒன்றில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்றும் கொழும்பு ஊடகச்செய்தி ஒன்று நேற்று தெரிவித்துள்ளது.
54 நாடுகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பிரச்சார உதவிகளும் மற்றும் நிதியுதவிகளும் கிடைப்பதாக இந்த அறிக்கை கோடிட்டுக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு காஸ்மீர் தீவிரவாத இயக்கங்களான ஹர்கத் உல் ஐ இஸ்லாமி, ஜமியாத் அல் முஜாகிதீன், சீக்கிய தீவிரவாத இயக்கமான காலிஸ்தான் விடுதலை முன்னணி என்பவற்றை பயங்கரவாத பட்டியலில் சேர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை இந்தியா கேட்டிருப்பதாகவும் அத்துடன் சேர்த்து விடுதலைப் புலிகளையும் தடை செய்ய கேட்டிருப்பதாகவும் இச்செய்தி தெரிவிக்கின்றது.
நன்றி: சங்கதி
[size=14] ' '
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
மேற்குறித்த செய்தி உண்மையானால், அது தனது வஞ்சக எண்ணத்தை மாற்றவில்லை என்பது தெளிவு. அப்படியிருக்க அவர்களாவது மத்தியஸ்துக்கு வருவராவது? புலிகள் அவர்களை ஏற்றுக் கொள்வதாவது?
இருந்தாலும் மறைமுக தலையீடு என்பது இருக்கும். வாய் நிறைய ஜனநாயகம் பேசிக்கொண்டு, துரோகக் கும்பல்களை வளர்த்து விடுவது முதல் தமிழர் சார்பான கல்விமான்களை கொலை செய்யும் வஞ்சக வேலைகளில் அவர்கள் ஈடுபடும் சாத்தியம் உண்டு. ஏனென்றால் அவர்களுக்கு முதுகில் குத்தி தானே பழக்கம்
[size=14] ' '
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
கடற்புலிகளால் ஆபத்து இல்ல எண்டு சொல்லிப்போட்டு இப்ப வான்புலிகளால் ஆபத்து எண்டு எதிர்பார்த்த மாதிரி வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில ஏறுது. அடடா இதுவெல்லோ இராஜதந்திரம், நினைத்தாலே புல்லரிக்குதுப்பா
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
இந்திய கொள்வகைப்பாளர்களும் அரசயந்திர நிர்வாகிகளும் ஒருபுறமும் மறுபுறத்தில் அரசில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளும் இலங்கை தலையீடு பற்றிய கடைசிகட்ட கயிறு இழுத்தல் நடைபெறுகிறது வடிவாய் தெரியது....வெளிவிவகார விசயத்தில் இந்தியாவை பொறுத்தவரையில் உந்த பீரோகிராட்டியின் தீர்மானம் தான் அரசியல் கட்சிகளிலும் பார்க்க கை ஓங்கி இருந்தது வரலாறு கண்ட உண்மை
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
இந்தியா தான் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்தை தடுத்ததாம் இலங்கை அரசு இந்தியாவிடம் சென்னார்களாம் யாழ்ப்பாணத்தை இன்னும் ஒரிரு நாட்களில் (அந்த நோரத்தில்) கைப்பற்றி விடுவார்கள் அங்குள்ள 40000 இராணுவத்தை எப்படியாவது மீட்டுத்தரும்படி அதற்கு இந்தியா சில உத்திகளை மேற்கொண்டு முன்ணேற்றத்தை நிறுத்திறதாம் இராணுவத்தை காப்பாற்ற அதற்குள் பாகிஸ்தானும் செக்குடியரசும் பலகுமுல் பீரங்கிகளை (40 குமுல் பீரங்கி) கொடுத்தார்களாம் அதற்குள் இராணுவம் தமது படையை மீள் ஒமுங்கு செய்து விட்டது இதனால் தான் அத்திட்டம் பிழைத்தது இல்லாவிட்டால் இன்று யாழ்
எங்கள் கையில்