11-05-2005, 12:09 AM
தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம், சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய மற்றுமொரு சூழல் உருவாக்கம் பெற்றுள்ளது.
பயங்கரவாதத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் சரியான வரைவிலக்கணத்தை வகுக்காத சர்வதேச சமூகம், சூழலுக்கு ஏற்ப எது தனக்கு சாதகமாக அமைகிறதோ அதற்க்கேற்றவாறு தனது நகர்வினை மேற்கொள்கிறது.
பல சுதந்திர விடுதலைப் போராட்ட வீரர்கள் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டிருந்தனர்.
சர்வதேசத்தின் செல்லப் பிள்ளைகளாக இருந்தவர்கள் சர்வதேச சமூகத்தின் சொல்லுக்கு இணங்கி போக மறுத்ததினால் பயங்கரவாதிகளாக வெளிப்படுத்தப்பட்டார்கள். இது தொடர்பாக உலக வரலாறு எமக்கு சிறப்பான சில உதாரணங்களை எடுத்துக் காட்டியுள்ளது.
இன்று உலகின் முதன்மையாக மதிக்கப்படும் மனிதரான முன்னாள் தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்கள் முன்னர் பயங்கரவாதியென முத்திரை குத்தப்பட்டமையும் இன்றைய உலகின் முதற்பயங்கரவாதி ஒசாமா பில்லேடன் முன்னர் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக வர்ணிக்கப்பட்டமையும் இதற்கு சிறந்த உதாராணங்கள் ஆகும். சர்வதேச சமூகம் என்பது கூட முழு உலகத்தையும் குறிக்கின்ற பொருளாக இருந்த போதும் இதன் செயற்பாட்டாளர்கள்களாக வல்லமை பொருந்திய குறிப்பாக அபிவிருத்தி அடைந்த நாடுகளே திகழ்ந்து வருகின்றன. இதில் சிந்திக்க வைக்கின்ற விடயம் யாதெனில், விடுதலை போராட்டம், புரட்சி மூலம் விடிவுபெற்ற நாடுகளே தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்க கங்கணம் கட்டி நிற்கின்றன.
மிக வலிமை பொருந்திய சர்வதேச சமூகம், மற்றுமொரு சவாலான சூழல், நசுக்க முனைகிறது என்ற வார்த்தைப் பதங்கள் ஆழமாக சிந்திக்க தூண்டும். சிலருக்கு கேலிக்குரியதாக இருக்கலாம். உண்மை என்னவெனில் எமது போராட்டத்திற்கான சதிவலையே சர்வதேச சமூகத்தினால் பின்னப்பட்டுள்ளது.
ஒரு தேசத்தின் விடுதலைப் போரில் தனித்து ஆயுதப் போர் மட்டும் என்றில்லை. அதையும் தாண்டி பல பரிமாண போர் வியூகங்கள் உண்டு. இவ்வகையான பரிமாணங்களை உலகுக்கு தமிழர்படை உணர்த்தியுள்ளது. அதேவேளை தமிழர்படையும் அந்த வகையான உலகின் போர்முறையை உணர்ந்து வருகிறது. இதற்கேற்றபோல் சில ஆரம்ப மாற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், இது போதாது, இன்னும் மேற்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகள் உண்டு. அனுபவமே சிறந்த ஆசான். இந்த அனுபவம் தமிழர்களின் வெற்றிக்கு மிகப் பலம் பொருந்திய தூணாக விளங்கி வருகிறது. ஆனால், சர்வதேச சமூகம் மிகநேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கோட்பாடுகளை உருவாக்கி காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச சமூகம் என்றும் எதிலும் நடுநிலையோடு அல்லது நேர்மையோடு செயல்படும் என எதிர்பார்ப்பது மடைமைத்தனம். நோர்வே எமக்காக நிற்கும் என கனவு காணவும் கூடாது. அமெரிக்கா சிறிலங்காவோடு இணைந்து எமக்கு அடிக்க வருவான் என கற்பனையும் பண்ணக்கூடாது. தமிழ் தேசியத் தலைவர் குறிப்பிடுவது போலு ‘பலம்தான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது.” உலக ஒழுங்கு என்பதே பலத்தில்தான் சுழல்கிறது.
இதனை மறுத்தால், இன்னொரு வடிவத்தில் பார்ப்போம்....
...
http://sooriyan.com/index.php?option=conte...id=2477&Itemid=