Posts: 218
Threads: 13
Joined: Oct 2005
Reputation:
0
அதீபன் நீங்கள் வுடோ(vodoo)சடங்கைப்பற்றிக் கேள்விப் பட்டதுண்டா ?
என் நண்பர் ஒருவர் இச்சடங்கை எதிர்பாரதவிதமாய் காண நேரிட்ட போது புகைப்படம் எடுத்தார். அச்சடங்கை செய்து கொண்டிருந்த கறுப்பினப் பெண்மணி நண்பரை ஏதோ ஒரு மொழியில் திட்டிக்கொண்டே இவரை துரத்தினார். நண்பர் ஓடித்தப்பினார். புகைப்படத்தைப் பார்த்த இவருக்கு அதிர்ச்சி, ஏனெனில் அவர் படமெடுக்கும் போது அந்தப் பெண்மணி ஒரு பிணத்தை கிடத்தி வைத்து ஏதோ செய்து கொண்டிருக்கும் போதுதான் இவர் படமெடுத்தார், ஆனால் அந்த படத்தில் பிணம் இருந்த இடம் வெற்றிடமாக இருந்தது. அன்றிலிருந்து மூன்று நாட்களாய் காய்ச்சல். நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன், அதை இங்கே பலமுறை தரவேற்ற முயற்சித்திதும் முடியவில்லை. இச்சடங்கு குறித்து நான் பலரிடம் விசாரித்தேன், அதில் ஒருவர் இது வுடோ சடங்கு எனவும்; இது குறித்தும் மேலும் விசாரிக்காதீர்கள் அது உங்களுக்கு நல்லதல்ல என எச்சரித்தார். இந்தக்கூற்றுதான் என்னை மேலும் விசாரிக்கத் தூண்டியது...........
----- -----
Posts: 208
Threads: 12
Joined: Apr 2005
Reputation:
0
கரிகாலன் Wrote:அதீபன் நீங்கள் வுடோ(vodoo)சடங்கைப்பற்றிக் கேள்விப் பட்டதுண்டா ?
[size=18]þó¾ þ¨½ôÀ¢ø À¢û¨Ç ¸Ã¢½¢ ×§¼¡ ÀüÈ¢ ±Ø¾¢ÂÐ ¯ûÇÐ.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ighlight=#72054
[size=18]"±í¸Ç¢¼õ ÁðÎÁøÄ¡Áø §ÅÚ ¿¡Î¸Ç¢ø ܼ ¦ºöÅ¢¨É ¦ºöÀÅ÷¸û ¯ñÎ. ¬í¸¢Äò¾¢ø ç§¼¡ (VOODOO) ±ýÚ «¨Æì¸ôÀÎõ þó¾ À¼ò¾¢ÖûÇ ¦À¡õ¨Á¸ÙìÌ "¦ºöÅ¢¨É ⨃" ¦ºöÐ °º¢¸Ç¡ø Ìò¾¢, Áì¸û ¿¼Á¡Îõ À¡¨¾Â¢ø Ò¨¾òРŢÎÅ¡÷¸û. ¬ð¸Ç¢ý ¸¡ø Á¢¾¢ì¸ Á¢¾¢ì¸ °º¢ ¦À¡õ¨Á¢ø ¬ÆôÒ¨¾Ôõ. «Ð ¦ºöÅ¢¨É ¦ºöÂôÀð¼ ¿ÀÕìÌ ¯À¡¨¾ ¾Õõ ±ýÚ ¿õÀ¢ì¨¸ ¯ñÎ. þó¾ Ó¨È ÍÁ¡÷ 10000ÅÕ¼í¸ÙìÌ Óý ÀƨÁÂ¡É ´Õ ¬À¢Ã¢ì¸ Á¾ò¾¢Ä¢ÕóÐ ¯ÕÅ¡¸¢ÂÐ.
¸£ú¸ñ¼ þ¨½Â¾¢ø VOODOOâ¨ƒì¸¡É Áó¾¢Ãí¸û À¢ÃÍâì¸ôÀðÎûÇÉ. н¢×õ ¿õÀ¢ì¨¸Ôõ ¯ûÇÅ÷¸û ÓÂüº¢ ¦ºöÂÄ¡õ." - †Ã¢½¢
http://www.calastrology.com/voodoo.html
<img src='http://yoyo.cc.monash.edu.au/groups/eas/voodoo.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஐயஐயோ ரொம்ப பயங்கரமா இருக்கே இது. இதப்பத்தி எல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்க. அந்தப்புத்தகம் ஆவிகள் பத்தியதுதான். அதைத்தான் படிச்சு எழுதுறன்.
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
:roll: ஜயா சாமி... இந்த பக்கத்துக்கு வரவே என்ட கணனி ஏதோ மக்கர் பண்ணுது... ஆளைவிடுங்க... பாய்
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
எனக்குத்தெரிந்த இன்னுமொரு நபருக்கு நடந்த உண்மைக்கதை அவர் புலத்திற்கு வந்து நண்பர்களுடன் தங்கியிருந்தார். எதற்கும் அஞ்சாதவர். ஆனால் அவர் வீட்டில் இரவில் கட்டிலில் படுத்திருந்தால் பேய் காலைப்பிடித்து இழுத்து கீழே விழுத்திவிடுமாம். முதலில் இதை பெரிதாக அவர் எடுக்கிவில்லை. கனவில் திடுக்கிட்டு விழுந்ததாகவே நினைத்திருக்கிறார். நண்பர்களும் இதே கதையைச்சொல்லத்தான் அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. இவை மட்டுமன்றி சமைத்து மூடிவைத்த உணவுப்பாத்திரங்களை யாரோ உருட்டிவிடுவதாக உணர்ந்துள்ளார்கள். அப்படி உருட்டிவிடாத பாத்திரங்களில் உள்ள உணவுகள் மண் கடிபட்டதாம். இதன்பிறகு விNடியோ கமராவை இரவில் இயக்கிய போது ஒரு உருவம் ஒன்று பதிவாகியிருந்தது. இங்கு வந்த மலையாள மந்திரிகரை வீட்டுக்கு வரவைத்து கேட்டபோது அவர் வீட்டில் ஏதோ பொல்லாத ஆவியிருப்பதாக கூறியுள்ளார். அதை வெளியேற்ற பெரும் செலவாகும் ஆதலால் வீட்டைமாற்றிவிடுவதே நல்லது என அறிவுரை கூறியுள்ளார். இப்போத அவர்கள் வேறு வீட்டில் எந்தக்கஸ்டமும் இன்றி உள்ளார்கள். வீடு வாங்குபவர்களோ அல்லது வாடகைக்கு குடிபோகின்றவர்ளோ யாராணாலும் இந்த விடயத்தில் கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
சமீபத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த உண்மைச்சம்பவத்தை இங்கே எழுதுகின்றேன். விளையாட்டாக இதுவரை இருந்த நான் இதைக்கேட்டு மிகவும் பயந்துவிட்டேன்.
இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு முன் புலத்தில் ஒரு இலங்கைப்பெண் கழுத்துநெரித்து கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் எனக்கு தூரத்து உறவினர். அதைச்செய்தது அவர் கணவனே.
இப்போது அவரது குழந்தைகள் ஒரு சகோதரத்தின் வீட்டில்தான் உள்ளார்கள். அங்கு இறந்த பெண் அடிக்கடி வருகிறாராம். இரவு வீட்டின் பின் இருந்து கூப்பிடுகிறராம். கதவுகளை தட்டுகிறாராம். அடித்து சாத்துகிறாராம். குழந்தைகளின் பெயர் சொல்லி அழைக்கிறாராம். வாறான் வாறான் ஐயோ ஐயோ என சத்தம் கேட்கிறதாம். இரவு என்றாலே இப்போது அவர்கள் மிகவும் பயந்து பயந்து வாழ்கிறார்களாம். இன்னும் அவருக்கு ஈமைச்சடங்குகள் முழுவதுமாகச்செய்யாததால்தான் இந்த கஸ்டம் என ஐயர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மேல் அவர் வாழும் போது மிகவும் அன்பாக இருந்தவர். இறந்தும் அவரால் அந்த பாசத்தை விடமுடியவில்லை. அவர்கள் வாழும் வீட்டை சுத்தி சுத்தி வருகிறார். அவர் கொலைசெய்யப்பட்டது வேறு வீடு ஆகும். அவர்கள் இப்போது இரவு 7 மணியானாலே மிகவும் பய்ந்து போகின்றனர். வீட்டில் உள்ள எல்லோரும் ஒன்றாகவே ஒரே இடத்திலே படுக்கின்றனர். ஒருவர் ஒன்றுக்கு செல்லவது என்றாலும் அனைவரும் துணைக்கு செல்லவேண்டியுள்ளதாம்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
பேய்கள் அசுரகணம் உள்ளவர்களையே தாக்குமாம். மற்றவர்களின்(மனித கணம் , தேவகணம்) கண்களில் பட்டாலும் ஒன்றும் செய்யமுடியாதாம்.
அமனிச தோசம் உள்ளவர்களே பேய்களால் தாக்கப்படுகிறார்கள். இதை எல்லாம் ஜாதகத்தை வைத்து சொல்ல முடியும் என ஒரு சோதிடர் கூறினார்.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
அடடா.....இது உண்மைதான்போல ஏனெண்டால் நான் அசுரகணம் அதுதான் எந்தநாளும் வீட்டிலை தாக்குதல் நடக்குது சா....தம்பி இனி மனிதகணம் தேவகணமா மாறேலாதோ மண்டையைப் போட்டா மாறலாம் எண்டு சொல்லிப்போடாதையும் ...............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
எனது பெரியம்மா சொன்ன கதை இது .அப்போது அவருக்கு 12 வயது இருக்குமாம். வருடா வருடம் தில்லையம்பலப்பிள்ளையார் கோவிலுக்கு எனது அம்மம்மா பொங்குவார். தில்லையம்பலப்பிள்ளையார் காட்டுக்குள்தான் உள்ளது. இன்றும் அதைச்சுற்றி பத்து பதினைந்து கிலோமீட்டருக்கு வீடுகள் எதுவும் இல்லை. அங்கு ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்களையும் வயதானவர்களையும் தவிர யாரையும் பார்க்க முடியாது.
அப்படி ஒருவருடம் கோவிலுக்குப் போய் பொங்கிவிட்டு திரும்பிவரும் போது இருட்டிவிட்டதாம். வழியில் யாருமே இல்லை. இருட்டு வேறு. மாட்டுவண்டி ஆடி ஆடி மெதுவாக போய்க்கொண்டிருந்ததாம். காட்டில் நரிகள் வேறு ஊளையிட தொடங்கிவிட்டதாம்.
ஓரிடத்தில் யாரோ அம்மா அம்மா என்று வேதனையுடன் கத்துவது கேட்டதாம். அது சாதாரணமாக இல்லாது வெகுதூரத்திற்கு முன்பே கேட்க ஆரம்பித்துவிட்டதாம். அம்மம்மா இரக்கப்பட்டு யாருக்கோ வருத்தம் போல கத்திக்கேட்கிறது. போய்ப்பார்ப்போம் என மாட்டுவண்டிகாரனிடம் கேட்டாராம். அதற்கு மாட்டுவண்டிக்காரன் வாயை மூடும் படி கோபமாக பேசிவிட்டானாம். எப்போதும் மரியாதையாகப்பேசும் அவன் கோபமாக பேசியது ஆச்சரியமா இருந்ததாம். அதும ட்டுமன்னிற மாட்டுவண்டிக்காரன் வாயுக்குள் கந்தசஸ்டி கவசத்தை முணுமுணுத்துக்கொண்டு இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்ததாம்.
சிறிது தூரம் கடந்துசென்றதும். அந்து முனகல் சத்தம் நின்று போனதாம். அம்மம்மாவிற்கு மனதிற்குள் கோபமாம். வண்டி வீடு வரும் வரை அவனுடன் பேசவே இல்லையாம். மறுநாள் வீடு வந்த வண்டிக்காரன் சொன்னது அனைவரையும் ஆச்சரியப்படவைத்ததாம். அந்த குரல் கேட்ட இடத்தில் ஒரு இடையன் மாட்டைக்காணாததால் மாட்டுக்காரன் என்ன செய்வானோ எனப்பயந்து அரளிவிதையை உண்டு இறந்துவிட்டானாம். அவன் வேதனையிலும் தண்ணித்தாகத்திலும் நெடுநேரம் துடித்து அதன்பின்தான் இறந்திருக்கிறாhன். சில நாட்களாக இரவில் இப்படிச்சத்தம் கேட்பதாக வேறு வண்டிக்காரர்கள் இந்த வண்டிக்காரனுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறாhகள். இதனால் வண்டிக்காரன் யாரையும் வண்டியில் இருந்து இறங்கி என்ன ஏது என்று பார்க்க விடவில்லையாம். அது மட்டுமன்றி கந்தசஸ்டி கவசத்தை அவன் முணுமுணுத்ததால் பெரிதாக ஒன்றும் ஆகவில்லையாம்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
இது நடந்தது எனது மாமாவிற்கு. அப்போது அவருக்கு 27 வயது இருக்கலாம். முதல்முதல் வேலைகிடைத்து அநுரதபுரத்திற்குச் சென்றிருந்தார்;. அது ஒரு சிங்களக்கிராமம். மின்சார வசதிகள் எதுவும் இல்லையாம். மாமா தங்க அரசாங்க குவாட்டஸ் கொடுக்கப்பட்டு இருந்ததாம். மற்றவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து போய்விட்டதால் மாமா மட்டும் தனது பகுதியில் தங்கியுள்ளார். இரண்டு நாட்கள் எந்தவித கஸ்டமும் இருக்க வில்லையாம். மூன்றாம் நாள் இரவு கதவைத்தட்டும் சத்தம் கேட்டதாம். மாமா விளக்கைக்கொழுத்தி கதவைத்திறந்து யாரென பார்த்திருக்கிறார். யாரும் இல்லையாம். சரி என்று படுத்துவிட்டார். சிறிது நேரத்தின் பின் கால்மாட்டுக்கட்டிலை யாரோ தூக்குவது போல உணர்ந்திருக்கிறார். கண்ணைத்திறந்து பார்த்த போது ஒரு உருவம் தெரிந்திருக்கிறது. விளக்கை ஏற்றிப்பார்த்த போது யாரும் அங்கு இல்லையாம். அடுத்த நாள் அவரின் சக சிங்கள அதிகாரிகளிடம் விபரம் சொன்ன போது அவர்கள் அந்த குவாட்டசை மாற்றிவிடும்படி சொல்லியிருக்கிறார்கள். காரணம் கேட்டபோது முன்பு வேலைசெய்த ஒரு ஊழியரின் கர்ப்பிணி மனைவி அதில் பிரசவத்தின்போது இறந்தாராம். அதன்பின் அந்த குவாட்டஸில் தங்குபவர்களை அவர் தொந்தரவு செய்து வருகிறாhராம். அதன் பின் மாமா வேலை வேண்டாம் என யாழ்ப்பாணம் வந்துவிட்டார்.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
தம்பி இந்த கதை சண்ரிவி நியுசிலையும் பாத்தனான் ஆனா இது ஒரு சுற்றுலா இடமாகவும் அங்கு இருக்கும் ஹோட்டல்களுக்கிடையிலான போட்டியில் சுற்றுலா பயணிகளை வராமல் தடுப்பதற்காக இப்பிடி யொரு கதையை கட்டி விட்டதாக வும் எங்கையோ வாசிச்சனான் ஆனால் கிராபிக்ஸ் மாதிரித்தான் தெரிகிறது...............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
எனக்கும் உண்மைதெரியாது. யாரோ மின்னஞ்சலில் அனுப்பியது இது. பார்த்தால் கிராபிக்ஸ் வேலைபோல இல்லை.