Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படத்தின் முதல் நாள் வசூல் ரூ.49 கோடி
#1
அமெரிக்காவில் `கிங்காங்' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.49 கோடி

லாஸ் ஏஞ்சல்ஸ், டிச. 18-

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மிகவும் பிரமாண்ட ஆங்கில படம் கிங்காங். பீட்டர் ஜேக்சன். இந்த படத்தை டைரக்டு செய்து உள்ளார். ïனிவர்சல் இந்த படத்தை உலகம் முழுவதும் வினியோகித்து உள்ளது.

கடந்த 14-ந்தேதி இந்த படம் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது. இந்த படம் தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

மற்ற ஆங்கில படங்களை போல இந்த படமும் வசூலை குவித்து வருகிறது. அமெரிக் காவில் `கிங்காங்' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.49 கோடி ஆகும். அமெரிக்கா தவிர்த்து 38 நாடுகளிலும் இந்த படத்தின் வசூல் ரூ.40 கோடியை தொட்டது.

அமெரிக்காவில் முதல் நாள் வசூலில் `கிங்காங்' படம் 21-வது இடத்தை பிடித்துள் ளது. ஸ்பைடர் மேன் படம் ரூ.200 கோடி வசூலை தொட்டு சாதனை படைத்தது. ரிட்டர்ன் ஆப்தி சிங் ரூ.170 கோடியும், தி டூ டவர்ஸ் ரூ.130 கோடி யும் வசூலை அள்ளி குவித்தது.

Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)