Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்க லவ் எங்க லவ்வில்ல
#41
என்னண விண்ணாணமாக் கிடக்குது,விஜேயப் பாத்தா கொக்காக் கோல குடிகிற மாதிரியே?அந்தக் காலத்தில நானும் விஜேய மாதிரித்தான் ஆனா என்னப் பாத்து ஒரு பெடுச்சி சொன்னதில்ல சோடா குடிச்சமாதிரி எண்டு.அந்தக் காலத்தில இந்தக் கொகாக்கோலா ஒண்டும் இல்லைக் கண்டியளோ,எல்லாம் எங்கட லிங்கம் சோடா தான் கண்டியளோ.
தமிழ் படம் பாத்து நாங்கள் ஒண்டும் கெடேல்ல எண்டுறாங்கள் ஆனா கோவில் கட்டுறாங்கள் ,புலத்தில கோஸ்டியளுக்கு தமிழ்ப்படதில வாற மாதிரி பெயர் வக்கிறாங்கள்.தலைவா எண்டுறாங்கள்.தலை எண்டுறாங்கள்.
இது குஸ்பு சாரி எண்டுறாங்கள்,பிறகு இது அசின் ஒட்டியாணம் எண்டுறாங்கள்.பிள்ளயளுக்கு நடிகர், நடிகையின்ட பேரை வைக்கிறாங்கள்.இங்க இருந்து மினக்கெட்டு இந்தியாவுக்கு டிக்கட் போட்டுப் போறாங்கள்,அங்க ஊரில கொப்பரும் கொம்மாவும் தனிய இருக்க.

பிறகு நாங்க சும்மா தான் பாக்கிறம் எண்டு விண்ணாணக் கதை வேற.குடு அடிக்கிறவனும் கஞ்சா பத்திறவனும் சொல்லுறது இதே தான், அது எங்கள ஒண்டும் செய்யாது,சும்ம ஒரு கொஞ்ச நேரம் கவலை மறக்கப் பாக்கிறம் எண்டு.ஆனா அவனுக்குத் தெரியாது அது கொஞ்சம் கொஞ்சமா தன்னை ஆட்கொல்லுது எண்டு.அது மாரித் தான் இந்தப் படங்களும் நாங்க நினைப்பம் சும்மா ஒரு கொஞ்ச நேரம் பாக்கிறது எண்டு ஆனாப் பாருங்கோ ஆள் மனதில இந்தப் படங்கள் உருவாக்கிற கருதுக்கள் ,படிமங்கள் ஆளப் பதிஞ்சுடுது.
இப்ப காதல்,காமம்,கற்பு,பாசம் என்றதெல்லாத்தையும் தமிழ் சினிமாத் தானே வரயறை செய்யிது.தமிழ் நாட்டின் அரசியலை நிர்ணயிக்கிது.இந்தியா எண்ட ஒரு இல்லாத படிமத்தை உருவாக்குது.தமிழ்,தமிழர் என்கின்ற அடயாளத்தை இல்லாமச் செய்யுது.இலங்கையில இருக்கிற தீவரவாதீங்க அவங்களுக்கு விசர் ,அவங்களால தான் எல்லாப் பிரச்சினையும் எண்டு சொல்லுது.சமூகத்தில இருக்கிற பிரச்சினயளுக்கு சில கெட்ட வில்லன்கள் தான் காரணம் இல்லாட்டி எல்லாரும் நல்லா இருப்பம் எண்டு சொல்லுது.இப்படி தமிழ் சினிமா உருவாக்கிற மாயமான உலகத்தில தானே நீங்கள் எல்லாம் வாழுறியள்.
பிறகென்ன அது ஒண்டும் செய்யாது எண்டு ,சொல்லுவியள் ஆ இல்லக் கேக்கிறன்.
சரி கனக்கக் கதச்சுப் போட்டன் போல,இவர் சோழியன் வந்து சிண்டு முடின்சிடுவார் நான் போட்டு வாறன்,இவன் சின்னபுவக் கண்டா ஒருக்காத் தவறணப் பக்கம் வரச் சொல்லி விடுங்கோ என்ன.
.
Reply
#42
புழுகர் பொன்னையா சின்னப்பு தவறணைப்பக்கம் வந்தவரோ??
நீங்கள் சொல்றது சரிதான் ஆனால் உந்த தல கோயில் கட்டுறது குஸ்பு சாறி இதெல்லாம் நமக்மு அப்பாற்பட்ட விசயம்.கஞ்சா அடிக்கிறது புல்லு சாப்பிடுறதும் சினிமா மாதிரி என்று சொல்றீங்களோ??சினிமா மாயைதான் ஆனால் மாயை என்று தெரிஞ்சு கொண்டு பொழுது போக்காகப் படம் பார்க்கலாம் தானே?? உதாரணமா 2 மாசத்துக்கொரு படம் அல்லது ஸ்கூல் லீவு விடுற நேரம் மட்டும் அப்பிடியாவது படம் பார்க்கலாம் தானே.அதுக்கும் இல்லையா??
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)