Posts: 123
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
கடந்த சில வருடங்களாக நானும் எனது நண்பர்கள் சிலரும் எந்தவொரு சீதனம் சம்பந்தப்பட்டு நடைபெறும் திருமணம் எதிலும் கலந்து கொள்வதில்லை, வாழ்த்துக்கள் அனுப்புவதில்லை. ஏன் வரவில்லை என்று வினவுபவர்களுக்கு எங்கள் காரணத்தை தெளிவாக சொல்லியும் வருகின்றோம். எங்கள் அணியில் மேலும் சிலரை சேர்த்தும் வருகின்றோம். சிலவேளைகளில் இது ஒருவகையான முரட்டுத்தனமான கொள்கையாக இருந்தபோதும் எம்மளவில் சில செயல்முறையில் அமைந்த ஆரோக்கியமான மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றோம். எமது அணியில் சேர யாழ் கள நண்பர்கள், நண்பிகள் முன்வருவார்களா?????????
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
manimaran Wrote:கடந்த சில வருடங்களாக நானும் எனது நண்பர்கள் சிலரும் எந்தவொரு சீதனம் சம்பந்தப்பட்டு நடைபெறும் திருமணம் எதிலும் கலந்து கொள்வதில்லை, வாழ்த்துக்கள் அனுப்புவதில்லை. ஏன் வரவில்லை என்று வினவுபவர்களுக்கு எங்கள் காரணத்தை தெளிவாக சொல்லியும் வருகின்றோம். எங்கள் அணியில் மேலும் சிலரை சேர்த்தும் வருகின்றோம். சிலவேளைகளில் இது ஒருவகையான முரட்டுத்தனமான கொள்கையாக இருந்தபோதும் எம்மளவில் சில செயல்முறையில் அமைந்த ஆரோக்கியமான மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றோம். எமது அணியில் சேர யாழ் கள நண்பர்கள், நண்பிகள் முன்வருவார்களா?????????
நிச்சயமா..! ஆனால் பொதுவாக திருமண நிகழ்வுகளை பகிஸ்கரிப்பது அல்லது கலந்து கொள்ள அக்கறை காட்டாதது எமது வழமை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
சரி. சீதனம் வாங்குவதால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையில் ஆண்கள் தான்;. இதை கஸ்டப்பட்டு உழைத்துக் கொடுக்கவேண்டிய தேவை அவனைத் தானே சேருகின்;றது. உண்மையில் நாம் தான் அதிகம் வருத்தப்படவேண்டும்;.
[size=14] ' '
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
manimaran Wrote:கடந்த சில வருடங்களாக நானும் எனது நண்பர்கள் சிலரும் எந்தவொரு சீதனம் சம்பந்தப்பட்டு நடைபெறும் திருமணம் எதிலும் கலந்து கொள்வதில்லை, வாழ்த்துக்கள் அனுப்புவதில்லை. ஏன் வரவில்லை என்று வினவுபவர்களுக்கு எங்கள் காரணத்தை தெளிவாக சொல்லியும் வருகின்றோம். எங்கள் அணியில் மேலும் சிலரை சேர்த்தும் வருகின்றோம். சிலவேளைகளில் இது ஒருவகையான முரட்டுத்தனமான கொள்கையாக இருந்தபோதும் எம்மளவில் சில செயல்முறையில் அமைந்த ஆரோக்கியமான மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றோம். எமது அணியில் சேர யாழ் கள நண்பர்கள், நண்பிகள் முன்வருவார்களா?????????
நல்ல கொள்கை மணிமாறன் எல்லாரும் இப்படி செய்யவெளிக்கிட்டா நல்லம். (நம்மட ஆக்களுக்கு ஒருவர் புதிசாய் செய்தா அதை தாங்களும் செய்யிற குணம் இருக்கு இதுகளையும் கடைப்பிடிப்பினம்.) :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தூயவன் Wrote:tamilini Wrote:இயலாமை உள்ளவர்கள் தான் சீதனம் கேப்பினம். அவரால் பொருளீட்ட முடியாமல் தானே வாங்கிறார் அப்ப இயலாமை தானே..?? தன்னோடு வாழப்போகும் துணையை வாழ்வதற்கு பணம் கட்டி வாழவைப்பது கீழ்த்தரம். தனது வாழ்க்கைக்கு அடுத்தவையிட்ட கேட்பது போன்றது சீதனம். (பிச்சை எடுப்பதற்கு சமம்).
அக்கா ரெம்ப பாதிக்கப்பட்டிருக்கின்றா போல கிடக்குது:wink:
அப்படி ஒரு நிலையில திருமணம் வேணுமா என்ன. ஆணுக்கும் பெண்ணிற்கும் திருமணம் என்டால் நடக்கும். சீதனத்திற்கும் ஆணுக்கும் திருமணம் என்டா நடவாது. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
புலத்தில் இளைஞர்களிடம் சீதன விடயத்தில் உண்மையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கு என்பதை பராட்டத்தான் வேணும் எனக்கு தெரிய அனேகமானவர்கள் தங்கள் பணத்தை செலவழித்துதான் தங்கள் துணைகளை கூப்பிட்டு திருமணம் செய்திருக்கிறார்கள் இங்கும் நடக்கும் திருமணங்களில் பெரிதாய் யாரும் சீதனம் வாங்கியதாக் தெரியவில்லை
அது சரி சின்னா அது என்ன நக்கமா எனக்கு ஒரு திரிசா நயன்தாரா எண்டு எழுதினா குறைஞ்சா போவீர் உதுகளை கலியாணம் செய்யிறதெண்டா கோடி கணக்கிலை சீதனம் வாங்கதான் வேணும் ஏணெண்டா அதுகளை வைச்சு பராமரிக்க என்ரை சம்பளம் காணாது :twisted: :twisted:
Posts: 415
Threads: 5
Joined: Jul 2005
Reputation:
0
Anumanthan எழுதியது:
நான் சீதனம் வாங்கப்போவதேயில்லை!
குறிப்பு:- எனக்கு இருமகன்கள் வயசு 1இ2
டன்புலநாய்வு எழுதியது
ஓய்ய் எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிறியள்.. ஏற்கனவே 2 மகன் அதுவும் 1இ2 வயசிலஇஇ இதுக்கப்புறமும் சீதனத்தோட ஒரு பொண்ணு வேனுமோ??
:evil: யோவ் டன்! ஏன் குழப்புறீர்? நான் சொன்னது என் பிள்ளைகளுக்கு காணும்! என் பிள்ளைகள் தமிழீழத்தில் வாழும்போது வாங்கதேவையில்லை காணும்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
!:lol::lol::lol:
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
saththiri Wrote:புலத்தில் இளைஞர்களிடம் சீதன விடயத்தில் உண்மையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கு என்பதை பராட்டத்தான் வேணும் எனக்கு தெரிய அனேகமானவர்கள் தங்கள் பணத்தை செலவழித்துதான் தங்கள் துணைகளை கூப்பிட்டு திருமணம் செய்திருக்கிறார்கள்
சாத்திரி நீ சொல்லுற மாதிரி 100திலை ஒரு 10தான் இப்பிடி பி;ள்ளையை காசில்லாமல் எடுக்கினம் சீதனத்தை வாங்கிறதிலை முன்னுக்கு நிக்கிற ஆட்கள் பெடியளை பெத்தவைதான் இது சில இடங்களிலை பெடியங்களுக்குத் தெரியாமலே நடக்குது சீதனம் குடுக்கிறதுக்கு முன்னுக்கு நிக்கிற ஆட்களும் இல்லாமல் இல்லை இப்ப ஊரிலை வெளிநாட்டு மாப்பிளையளை விட படிச்ச கவர்மெண்ட் உத்தியோக காரருக்கு டிமான் கூடியிட்டுது நாட்டிலை பேச்சுவார்த்தை நடக்குது ஒரு முடிவுகிடைச்சா வெளிநாட்டுக்காரரை பிடிச்சு அனுப்பிப் போடுவினம் எண்டு சனம் ஊரிலை அள்ளிக் குடுத்து கட்டுறதுக்கு அடிபடுகுதுகள் இனி வெளிநாட்டுக்கு போன எல்லாரும் படிச்ச ஆட்களும் இல்லைத்தானே கையிலை காசுவந்த வுடனை தங்கடை குடும்பத்துக்கை ஒரு படிச்ச டாக்குத்தர் அல்லது இன்ஜீனியர் மாப்பிளை வரவேணும் எண்டு ஆசைப்படுவது இயல்பு இதுக்கு எவ்வளவு குடுக்கவும் அவை ரெடியா இருக்கினம் இதுக்கு அவை சொல்லுற காரணம் சீதனம் எண்டு குடுக்கிறது மகளின் பிற்கால வாழ்க்கைக்கு இரண்டுபேற்றை பேரிலையும் தானே போடுறம் அப்ப அதை எங்கடை மகளுக்குத்தானே குடுக்கினம் பிறகென்ன. . . .சில இடத்திலை டொனேஷன் மாதிரி வாங்கிறது தான் வருத்தம் உங்களுக்குத் தெரியுமே சில இடத்திலை சீதணத்தை டிமான் பண்ணிக் கேக்கிறது இந்த கலியாணம் கட்டுற பெட்டையள் தான் அக்காக்கு இவ்வளவு குடுத்தனீங்கள் எனக்கும் தாங்கோ எண்டு அப்ப எங்கடை பெடியள் திருந்தினாலும் யார் விடமாட்டினம் எண்டு தெரியுதுதானே ஒரு ரகசியம்
இப்ப புரொக்கர்மாரின் ரேட் எப்பிடித்தெரியுமே வாங்கிற சீதணத்திலை 10 வீதம் அப்பிடி எண்டா 50 லட்சத்துக்கு ஒண்டை முடிச்சன் எண்டால் பாருங்கோ என்ரை கொமிஷன் எவ்வளவு எண்டு ஏனப்பா எங்கடை பிழைப்பிலை மண்ணைப் போடுறீயள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
நீங்கள் சீதனம் வாங்க வில்லை என்று யாரும் உங்களுக்கு பொன்னாடைபோர்க்கப்போவதில்லை.
நீங்கள் சீதனம் வாங்கிட்டியள் என பெண்வீட்டாரோ உறவினர்களோ மரியாதைக்குறைவா நடத்தப்போவதும் இல்லை. மாப்பிள்ளை எப்பவும் மாப்பிள்ளைதான்.
மனசாட்சி ஒன்று இருக்கிறது தானே.. அதன்படி நடவுங்கள். எத்தனை பெண் சகோதரங்கள் என்று பாருங்கள். ஒரே ஒரு பெண் என்றால் குடுப்பதை வேண்டாம் என்று சொல்லாது வாங்குங்கள். கூட வேறு பெண் சகோதரங்கள் இருந்தால் வேண்டாம் என்று மறுத்துவிடுங்கள். அப்படியும் கொடுத்தால் வாங்கி அவர்களிடமே வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கொடுத்துவிடுங்கள்.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
மணிமாறன் உங்கள் கொள்கை சரி ஆனால் எல்லாத் திருமணத்திலும்; சீதனம் வாங்கினார்களா இல்லையா என்று அறிய முடியுமா??? ஆனால் என்னைப் பொறுத்தவரை பெண்கள் எல்லோரும் சீதனம் கொடுத்துத் திருமணம் செய்வதில்லை என்று உறுதியான முடிவெடுத்தால் நிச்சயம் இவ்விடயம் விரைவில் நீங்கிவிடும். ஆனால் அதற்கு எத்தனைபேர் முன் வருவார்கள். இப்போது கூட திருமணப் பேச்சின்போது மாப்பிள்ளையின் விபரங்களைக் கேட்கும் பெண்களை விட மாப்பிள்ளைக்கு அந்த நாட்டு வதிவிட உரிமை உண்டோ என்ன கார் வைத்திருக்கின்றார் சொந்த வீடோ போன்ற கேள்விகள்தான் அதிகம்.
Posts: 124
Threads: 15
Joined: Mar 2005
Reputation:
0
சீதனம் வாங்காவிட்டால், இளிச்சவாயன் என்றும் சொல்வார்கள். சீதனம் எமது சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளில் இதுவும் ஒன்று. இவ் உலகை அனுப்விக்காமல் சிறுக சிறுக சேர்த்து, தமது முழு செல்வத்தையும் சீதனம் என்ற பெயரில் தாரைவார்த்து விடுகின்றனர். பின்பு பிள்ளைகளின் வீட்டில் basementல் சிறைக் கைதிகளாக இருக்கிறார்கள். இது தேவையா?
Posts: 123
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
வசம்பு அண்ணா சொல்வதுபோல எல்லா திருமணத்திலும் சீதனம் வாங்குகின்றார்களா என்பது அறிவது சிலவேளைகளில் கடினம்தான். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நான் அறிந்த மட்டில் வெளிவருவதுண்டு.
ஆண் வாங்குவதால்தான் பெண் குடுக்கிறாள் அல்லது பெண் கொடுப்பதால்தான் ஆண் வாங்குகிறான் என்று மாறி மாறி பழியைபோட்டு ஒன்றுமே செய்யாது இருப்பதை விட இந்த திருமண நிகழ்வு புறக்கணிப்பு இருபாலாரும் சேர்ந்து எடுக்ககூடிய ஒரு ஆக்கபுூர்வமான நடவடிக்கை என்பது எனது உறுதியான எண்ணம்.
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
வாங்கினால் கெட்டவன்! வாங்காட்டில் மாப்பிள்ளைக்கு ஏதோ பிரச்சனை இருக்கு!
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
சீதனம் வாங்க தானே வேணும். பெட்டையளோட கதைக்கிற ரெலிபோன் காசு எல்லாம் என்ன சும்மாவே? அவளுவள சந்திக்க போற பெற்றோல் காசு. அவளுவள பாக்க போறதுக்கு புது உடுப்பு வாங்கனும். அவையள காரில தான் வந்து சந்திக்கனுமாம். கடசீல சீதணம் வாங்கியும் ஆம்பிளையள் தான் பிச்சசை எடுக்கிறது. கல்யாணத்துக்கு பிறகும் அவளுவள் சும்மா இருப்பாளுவளே? எங்க எல்லாம் மலிவு விற்பனை நடக்குதோ அங்க எல்லாம் வா என்டு நிப்பாளுவள். சீதணமா வாங்கின காசு அதிலயே போய்டும். என்னமோ சீதணம் வாங்கி நாங்க தான் சிலவளிக்கிற மாதிரி அல்லோ உங்கட கதை இருக்கு!