01-12-2006, 06:15 PM
தகனமேடையில் `கேக்' வெட்டினார்
சுடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்
போபால், ஜன.12-
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரசிங் தாக்குர். இவருக்கு நேற்று 51-வது பிறந்தநாள். அதை நூதனமாக கொண்டாட விரும்பிய அவர், அதற்கு தேர்ந்தெடுத்த இடம், சுடுகாடு.
சுடுகாட்டுக்கு தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் கூட்டிச்சென்றார். பிணங்களை தகனம் செய்யும் மேடையில் பிறந்தநாள் 'கேக்'-ஐ வைத்தார். அங்கேயே 'கேக்' வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடினார். அங்கு இருந்த அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினர்.
முன்னதாக, சுடுகாட்டில் உள்ள சிவன் கோவிலில் அவர் சாமி கும்பிட்டார்.
Dailythanthi

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>