Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவும் யாழ் களமும்
#21
மோகன் இதுக்கு புhட்டு பொடமறந்தாச்சோ?
Reply
#22
இல்லை......அவர் மறக்கவில்லை. இன்னும் இரக்கம் காட்டுகிறார். அதை தவறாகப் பயன்படுத்தாதீர்கள்... 4....இது எத்தனைவரை நீளும்?

-
Reply
#23
9 வரைதான் போகலாம் அதுக்குப்பிறது சோதனை எல்லோ? வகுப்பேற்றம் அதாவது உயர்தரம் எண்டு யாழை விட்டுட்டு வெளியிலை படிக்கபோறது.பெயில் விடாட்டி உள்ளக்கைதான்.
உங்களுக்கு எப்படிபுரியுதொதெரியாது
Reply
#24
sethu Wrote:9 வரைதான் போகலாம் அதுக்குப்பிறது சோதனை எல்லோ?
அதுவரைக்கும் எங்களுக்குச் சோதணையா?
இது உங்களுக்காக ஒதுக்கப்பட்ட பக்கம்தானே.
ஒன்பதுவரை இங்தப் பகுதியிலேயே எழுதினால் போற வழியிலை புண்ணியமாவது கிடைக்கும்
Reply
#25
விருப்பம் எண்டா எளுதங்கோ இல்லாட்டி யோசிச்சு முடிவ எடுங்கோ?
Reply
#26
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->விருப்பம் எண்டா எளுதங்கோ இல்லாட்டி யோசிச்சு முடிவ எடுங்கோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விருப்பமென்றபடியால்தான் இங்கே வருகிறேன்.
ஆனால் களத்தைப் பார்த்தால் ...............
சரி.. யோசித்து முடிவெடுப்போமே
Reply
#27
வணக்கம்
பிறேம் இது உங்களிற்கான தனிப்பட்ட செய்தியாக இடுவோம் என எண்ணியிருந்தேன். ஆனாலும் அது உங்களிற்கு உறைக்காது. அதனால் இங்கு எழுதுகின்றேன். நான் மொடரேட்டர் என்ற நிலையில் எழுதவில்லை. பரணீதரனாகவே கருத்துக்களை வைக்கின்றேன்

பிறேம் இந்த தளம் தொடங்கி ஒரு மாதம் ஆகவில்லை. அதனுள் 1000ற்கு மேற்பட்ட கருத்துக்கள் வைப்பதில் மட்டும் அக்கறை காட்டும் நீங்கள் தமிழ் எழுத்துப்பிழைகளை கவனத்தில் எடுக்கவில்லை. எங்கு நோக்கினும் எழுத்துப்பிழைகள். தமிழை கொலை செய்வது யார் என்று கேட்டால் உங்களை எல்லோரும் காட்டிக்கொள்வார்கள்.
செய்திகள் வைக்கின்றீர்கள். அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று குறிப்பிட தவறுகின்றீர்கள். வைக்கப்படும் செய்திகள் சிலவேளைகளில் தேவையற்றவையாகவும் இருக்கின்றன.

இந்த தளம் மோகன் அண்ணாவால் தொடங்கப்பட்டது உங்களிற்காக இல்லை. எல்லோரும் பயன் பெறவேண்டும் என்பதற்காக...
இங்கு எத்தனையோ கருத்தாளர்கள் எத்தனையோ எழுத்தாளர்கள் வந்து சென்றார்கள். அவர்கள் யாரையும் இப்போது காணமுடியவில்லை. ஏன் இங்கு வரவில்லை என்று கேட்டபோது பிறேம் தேவையில்லாத குப்பைகளையும் போட்டு களத்தை நாறடித்துக்கொண்டிருக்கின்றார். அதனால் களப்பக்கம் தலைவைக்கவே இடியாக இருக்கின்றது. மோகன் ஏன் அவற்றை கவனிக்கவில்லை. தளத்தை பிறேமிற்கு விட்டுக்கொடுத்துவிட்டாரா என்று கேடகின்றார்கள்.
பிறேம் நீங்கள் ஒரு சில வானொலிகளையும் ஒரு சிலரையும் சாடுவதற்காகவும்தான் இங்கு கருத்துக்கள் வைக்கின்றீர்கள்.
பத்திரிகையாளர் என்ற ஒரு சிறு துரும்புகூட உங்களிடம் காணமுடியவில்லை. உண்மையில் படித்துத்தான் பத்திரிகைத்துறைக்குள் கால் வைத்தீர்களா இல்லை............பணம் கொடுத்து வந்தீர்களா.........என சந்தேகமாக இருக்கின்றது. படித்து வந்திருந்தால் பத்திரிகை தர்மம் பத்திரிகை பொறுப்புணர்வு இருக்கும். மற்றவர்களை மதிக்கும் தன்மை இருக்கும். மற்றவர்களுடன் கருத்துக்களை பரிமாறுவதில் மரியாதை இருக்குமு; இது ஓன்றுமே உங்களிடம் இல்லை.

இங்கு வந்து இன்றைய ஒரு மாதமாகமுதலே 4 எச்சரிக்கை வேண்டிவிட்டீர்கள். வெட்கமாக இல்லை. கருத்துக்களை அடுக்குவது என்றால் நானும் அடுக்குவேன். இங்கு எல்லோராலும் அடுக்க முடியும்.

எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு முதலில் உங்களை படிக்க முயலுங்கள். அப்படி ஏதாவது குப்கைகளை இட விரும்பினால் உங்கள் தளத்தில் இட்டு ஆசைகளை புூர்த்தி செய்யுங்கள். இங்கே குப்பையாக்க வேண்டாம். தயவுசெய்து.............

புலி ஆதரவாளன் விடுதலைக்காக பாடுபடுபவன் என்று சொல்லும் நீங்கள் அதற்காக என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா.............நான் சொல்கின்றேன். ஓன்றுமே செய்யவில்லை. அங்கும் எச்சரிக்கை கடிதங்களை வேண்டிச்சேர்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்...................
[b] ?
Reply
#28
வணக்கம் பரணி,

பத்திரிகை தர்மம் எங்கேயும் பிழைத்ததாக நான் காணவில்லை.ஏனெனில் பத்திரிகையாளர்கள் அவரவர் பொறுப்புக்களையும் வேலையையும் சரிவரச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் கூறியது போன்று இந்தக்களத்pனை என்னுடைய து}ண்டுதலில் சில பத்திரிகையாளர்களும் செய்தி ஆசிரியர்களும் பார்த்தார்கள்.ஆனால் சில காரணங்களை அவர்களாலும் ஜீரணிக்கமுடியாமல் போனதுதான் உண்மை.

தொழில் ரீதியாக யாருடனாவது போட்டியிருந்தால் அதனை தொழில் ரீதியாகவே முறியடிக்க முயற்சிக்கவேண்டும்.சேதுவைப்பொறுத்தவரை தனக்கெனவொரு சொந்த இணையத்தளத்தினையும் வைத்துள்ளார்.தவிரவும் தமிழ் ஊடகவியலாளர் சங்கமொன்றின் அங்கத்துவராகவும் இருக்கின்றார்.எனவே அவரால் சாதிக்கக்கூடியதும் செய்யக்கூடியதும் நிறையவே இருக்கும் போது யாழில் வந்து பொறுப்பற்ற முறையில் ஏன் நடந்துகொள்கிறார் என்பது குழப்பமான ஒரு புதிரே.

கருத்துக்களம் என்பது எதிர்க்கருத்துக்களை மாத்திரம் வைக்கவேண்டும் என்றவொரு இடமில்லையே..அதைப்புரிந்து கொள்ள மிகவும் கஸ்டப்படுகிறார்.

வாரத்தில் ஓரிரு தடவைகள் தலைகாட்டும் என்னைவிட தினமும் கருத்தெழுதக்கூடிய மதிவதணண்,குருவிகள் போன்றோரும் ஒவ்வொரு கருத்திலும் இவரோடு முரண்படவேண்டிய அவசியம் ஏற்படுத்தப்பட்டிருப்பதை காணக்கூடியதாகவிருக்கின்றது.

தவிரவும் இதனால் கவலையடைந்த குருவிகள் தனியாகவே ஒரு தலைப்பின் கீழ் தனது ஆதங்கத்தினையம் வெளிப்படுத்தியருப்பது உண்மையில் சிந்திக்கப்படவேண்டியது.

அதே நேரம் சேதுவும் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணரவேண்டும்.இதுவரைக்கும் நீங்கள் இந்தக்களத்தில் சம்பாதித்து வைத்துள்ள பெயர்கள் போதும்.

எனவே தொடரும் காலங்களிலாவது எச்சரிக்கைகள் பெறுவதைத் தவிர்த்து நல்ல முறையில் ஆக்கபுூர்வமான கருத்துக்களை முன்வைத்து உங்கள் தொழில் சார்ந்த பெயரை காப்பாற்றுங்கள்.

இதேவேளை நீங்கள் தற்போது எந்தப்பத்திரிகைக்காகவும் கடமையாற்றவில்லையாதலால் உங்கள் ஆர்வமிக்க தொழிலான விமர்சகனாக அல்லது செய்தி ஆசிரியராக வரத்தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
பத்திரிகைத்துறையில் சேதுவின் பெயர் பொறிக்கப்பட்டுவிட்டது.எனவே தொழில் சார் பெயரை வளர்த்துக்கொள்ளுங்கள் சேது.
இறைவன் துணை இருக்கட்டும்.

-வாழ்க வளர்க.
Reply
#29
அகிம்சன் எழுத வந்தேன்.
நான் எண்ணிய பலவற்றை நீங்கள் மிக கண்ணியமாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..இவை சேதுவுக்சுகுப் புரிந்து ஏற்றுக் கொள்வாரா?.அல்லது .எச்சரிக்கை பெறுவதும் தகுதி யென எண்ணுவாரா? தெரியவில்லை...
அவரைப் பொறுத்தவரையில் இலங்கங்களை அதிகரிப்பதற்காக எதையாவத எழுதவேண்டுமென ஓ அப்பிடியா என எழுதுவதும் கருத்தாகிறது. பார்ப்போம்;

-
Reply
#30
எங்கைவிட்டினம் உளப்பாக்கினம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)