09-15-2003, 05:34 PM
பகுத்தறிவு!
பதினைந்து
வயது இளைஞர்கள்
நீலப் படம்
பார்க்கிறபோது
வருகிற
பயம் போல்
எமக்கும் உண்டு!
லெனின்
பெரியாரின்
படங்களை
கட்டிலுக்கடியில்
இருந்து
அடிக்கடி
நாம் எடுத்து
து}சு
தட்டுகிறோம்
நாங்கள்
இவர்களை
மாற்ற நினைத்தோம்
இவர்களோ
எம்மை மாற்றி
விடுவதில்
வெற்றி
காண்கிறார்கள்..
எங்களைப்
பிடிக்காத
பெண்களுக்கு
எங்களில் பிடித்தது
ஒன்று மட்டுமே
சீதன ஒழிப்பு!
மற்றவையாவும்
எங்களின் வேண்டா
எச்சங்கள்!
பெற்றோர்களுக்கு
தலை வணங்கினோம்
சொந்தங்களுக்காய்
செவிகொடுத்தோம்
பந்தங்களுக்காய்
கொள்கைகளை
விட்டுக்கொடுத்தோம்..
இத்தனைக்குப்
பின்னும்
நாம் எங்கள்
கொள்கைகளோடு
வாழ விடாது
முரண்படுகிறது இந்த
சமூகம்...
அப்பனுக்கு
ஆகாது என்று
மொட்டை போடாததில்
தொடங்கி
திருமணத்தில்
அய்யரின் கும்மாளத்தோடு
எங்கள் பயணம்..
எல்லாமே அவர்களுக்காகத்தான்!!
இத்தோடு
முடிந்ததாய் பெருமூச்சு
விடுமுன்னால்
மனைவியின்
பெற்றோர்கள்!!
மாமாவின்
வேண்டுகோளுக்காய்
கோயில் வாசல்களில்
தவம் கிடக்க..
இது தான்
சந்தர்ப்பமாய்
வீட்டுக்குள்ளே
நுழையும்
அய்யரின்
அகங்காரம்..
வார இறுதியில்
குப்பை லொறி
எடுப்தற்காய்
வைத்த
குப்பைகள் யாவும்
திரும்பவும் உள்ளே
வருகிறது...
இப்படியே எங்கள்
வாழ்க்கை
தட்டித் தடுமாறி
போகிறது..
என் கொள்கைப்
படியே
நடப்போம்
என்கிறபோது
மனைவியின்
குரல்
இறுமாப்போடு வருகிறது..
எங்கோ எதற்கோ
நான் சொன்னதை
இப்போது
அவள் தனக்காய்
"இது தான்
உங்களின்
ஆணாதிக்கமோ?"
எம்
தத்துவங்களாலேயே
எம்மை
மடக்கி விடுவது
சுயநலவாதிகளின்
பெரு வெற்றியே!!
உறவுச் சனம்
எட்டி உதைத்திடும்
போதினில்
ஊர்ச் சனமோ
வெட்டிப் புதைத்திடும்
எம்மை!!
இந்(து)த சமூகம்
தடக்கி விழுகிற
போது எல்லாம்
இந்த(து) சமூகம்
பெரு மகிழ்வு
கொள்கிறது..
"நாத்திகருக்கு
கடவுள் கொடுக்கும்
தண்டனைகள் இதுவே"
இப்படியே
வாழ்க்கை தடுமாறிடும்
போதிலும்
சிறிதாய்
ஆலமரத்தடியில்
பகுத்தறிவாளர்கள்
ஒன்று கூடினால்..
பத்திரிகைகள்
கதவடைக்கின்றன
வானொலிகள்
எம் பெயர்
கேட்க பயம்
கொள்கின்றன..
தொலைக்காட்சிகளோ
வெளியே "போடா
நாயே" என்று
கதவைப்
புூட்டுகின்றன!!
முடியாது என்கிற
போதுதான்
ஆகாயத்தில்
பறந்தான் மனிதன்
இனியும் இயலாது
என்கிற போது தான்
துவக்குத் து}க்கினான் தமிழன்
எம் சந்ததிகள்
மாறும்
தடக்கி விழுகிற
இடத்திலும்
கோயில்கள் உள்ள
இந்நிலை மாறும்
பகுத்தறிவு பெறும்
எச்சங்களாய்
இருக்கும்
மதவெறியர்களின்
ஆணவம் அடங்கும்
கோயில்களாய் இருந்தவை
மக்களின் வதிவிடமாகும்
வங்கி கணக்குகள்
மக்களின் பசியைப்
போக்கும்..
கோயில கட்டி
இலட்சம் உழைத்தவன்
கல் உடைத்து
தன் குடும்பம்
காப்பான்!
மறைந்திருந்த
பெரியாரின்
படங்கள் வெளியே
வரும்..
கூனியிருந்த
மனிதர்கள்
கம்பீர
நடைபோடுவார்கள்
என்ன!!
காலம் தேவை
அது வரையும்
அங்கே இங்கே
பகுத்தறிவுவாதிகள்
து}சுதட்டுவதில்
மட்டுமே
கவனமாய்
இருந்தால்
போதும்...
கனடா-தம்பிதாசன்
பதினைந்து
வயது இளைஞர்கள்
நீலப் படம்
பார்க்கிறபோது
வருகிற
பயம் போல்
எமக்கும் உண்டு!
லெனின்
பெரியாரின்
படங்களை
கட்டிலுக்கடியில்
இருந்து
அடிக்கடி
நாம் எடுத்து
து}சு
தட்டுகிறோம்
நாங்கள்
இவர்களை
மாற்ற நினைத்தோம்
இவர்களோ
எம்மை மாற்றி
விடுவதில்
வெற்றி
காண்கிறார்கள்..
எங்களைப்
பிடிக்காத
பெண்களுக்கு
எங்களில் பிடித்தது
ஒன்று மட்டுமே
சீதன ஒழிப்பு!
மற்றவையாவும்
எங்களின் வேண்டா
எச்சங்கள்!
பெற்றோர்களுக்கு
தலை வணங்கினோம்
சொந்தங்களுக்காய்
செவிகொடுத்தோம்
பந்தங்களுக்காய்
கொள்கைகளை
விட்டுக்கொடுத்தோம்..
இத்தனைக்குப்
பின்னும்
நாம் எங்கள்
கொள்கைகளோடு
வாழ விடாது
முரண்படுகிறது இந்த
சமூகம்...
அப்பனுக்கு
ஆகாது என்று
மொட்டை போடாததில்
தொடங்கி
திருமணத்தில்
அய்யரின் கும்மாளத்தோடு
எங்கள் பயணம்..
எல்லாமே அவர்களுக்காகத்தான்!!
இத்தோடு
முடிந்ததாய் பெருமூச்சு
விடுமுன்னால்
மனைவியின்
பெற்றோர்கள்!!
மாமாவின்
வேண்டுகோளுக்காய்
கோயில் வாசல்களில்
தவம் கிடக்க..
இது தான்
சந்தர்ப்பமாய்
வீட்டுக்குள்ளே
நுழையும்
அய்யரின்
அகங்காரம்..
வார இறுதியில்
குப்பை லொறி
எடுப்தற்காய்
வைத்த
குப்பைகள் யாவும்
திரும்பவும் உள்ளே
வருகிறது...
இப்படியே எங்கள்
வாழ்க்கை
தட்டித் தடுமாறி
போகிறது..
என் கொள்கைப்
படியே
நடப்போம்
என்கிறபோது
மனைவியின்
குரல்
இறுமாப்போடு வருகிறது..
எங்கோ எதற்கோ
நான் சொன்னதை
இப்போது
அவள் தனக்காய்
"இது தான்
உங்களின்
ஆணாதிக்கமோ?"
எம்
தத்துவங்களாலேயே
எம்மை
மடக்கி விடுவது
சுயநலவாதிகளின்
பெரு வெற்றியே!!
உறவுச் சனம்
எட்டி உதைத்திடும்
போதினில்
ஊர்ச் சனமோ
வெட்டிப் புதைத்திடும்
எம்மை!!
இந்(து)த சமூகம்
தடக்கி விழுகிற
போது எல்லாம்
இந்த(து) சமூகம்
பெரு மகிழ்வு
கொள்கிறது..
"நாத்திகருக்கு
கடவுள் கொடுக்கும்
தண்டனைகள் இதுவே"
இப்படியே
வாழ்க்கை தடுமாறிடும்
போதிலும்
சிறிதாய்
ஆலமரத்தடியில்
பகுத்தறிவாளர்கள்
ஒன்று கூடினால்..
பத்திரிகைகள்
கதவடைக்கின்றன
வானொலிகள்
எம் பெயர்
கேட்க பயம்
கொள்கின்றன..
தொலைக்காட்சிகளோ
வெளியே "போடா
நாயே" என்று
கதவைப்
புூட்டுகின்றன!!
முடியாது என்கிற
போதுதான்
ஆகாயத்தில்
பறந்தான் மனிதன்
இனியும் இயலாது
என்கிற போது தான்
துவக்குத் து}க்கினான் தமிழன்
எம் சந்ததிகள்
மாறும்
தடக்கி விழுகிற
இடத்திலும்
கோயில்கள் உள்ள
இந்நிலை மாறும்
பகுத்தறிவு பெறும்
எச்சங்களாய்
இருக்கும்
மதவெறியர்களின்
ஆணவம் அடங்கும்
கோயில்களாய் இருந்தவை
மக்களின் வதிவிடமாகும்
வங்கி கணக்குகள்
மக்களின் பசியைப்
போக்கும்..
கோயில கட்டி
இலட்சம் உழைத்தவன்
கல் உடைத்து
தன் குடும்பம்
காப்பான்!
மறைந்திருந்த
பெரியாரின்
படங்கள் வெளியே
வரும்..
கூனியிருந்த
மனிதர்கள்
கம்பீர
நடைபோடுவார்கள்
என்ன!!
காலம் தேவை
அது வரையும்
அங்கே இங்கே
பகுத்தறிவுவாதிகள்
து}சுதட்டுவதில்
மட்டுமே
கவனமாய்
இருந்தால்
போதும்...
கனடா-தம்பிதாசன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->