11-04-2003, 06:20 AM
<img src='http://www.manchester.gov.uk/leisure/images/parks/avenue.jpg' border='0' alt='user posted image'>
<b>என் ஒருவழிப்பாதை</b>
நான் வந்த பாதையெல்லாம்
ஓருவழிப்பாதை
காதல் என்னும் ஒருவழிப்பாதை
அவையெல்லாம்
உன்னை நோக்கித்தான்.....
அங்கே நீ மட்டும் தான்..
நான் உன் காலடித் தடம்பார்த்து
தயங்கித்தயங்கி வந்துகொண்டிருந்தேன்
நீ மட்டும் வேகமாய் போய்க்கொண்டிருந்தாய்
என்னை நீ திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டாய்
பார்த்தாலும் கண்டுகொண்டிருக்கமாட்டாய்...
உனக்கும் எனக்கும் அவ்வளவு தூரம்...
நான் வெறும் புள்ளியாய்தான் தெரிந்திருப்பேன்
திடீரென என்பாதையில் இருந்த
உன் காலடிச்சுவடுகளைக்காணவில்லை.
ஒரு நாள்....
இரண்டு நாள்....
மூன்றாம் நாள்
மூச்சு விடக்கூட முடியவில்லை
தண்ணீரில் அமுக்கிவைத்ததுபோல..
துடிதுடித்தேன்....
உன் வீடுதேடிவந்தேன்
கொஞ்சம் என்சுவாசத்தை வாங்கிக்கொள்ள
கோளை நான்
சுவாசிக்க முடியவில்லை என்றபோதுதானே
ஓடோடிவந்தேன்..
நீ நேற்றுதான் போன் செய்தாயாம்
சுகமாய் போய் சேர்ந்துவிட்டதாக.....
அடுத்தமாதமே கல்யாணமாம் யுூகேயில்
சந்தோசமாய் சொன்னார் உன் அன்னை
சிரித்தபடி விடைபெற்றேன்
இன்றும் நான் சிரித்தபடிதான் ..
அன்புடன்
ஆதி
<b>என் ஒருவழிப்பாதை</b>
நான் வந்த பாதையெல்லாம்
ஓருவழிப்பாதை
காதல் என்னும் ஒருவழிப்பாதை
அவையெல்லாம்
உன்னை நோக்கித்தான்.....
அங்கே நீ மட்டும் தான்..
நான் உன் காலடித் தடம்பார்த்து
தயங்கித்தயங்கி வந்துகொண்டிருந்தேன்
நீ மட்டும் வேகமாய் போய்க்கொண்டிருந்தாய்
என்னை நீ திரும்பிக்கூட பார்த்திருக்க மாட்டாய்
பார்த்தாலும் கண்டுகொண்டிருக்கமாட்டாய்...
உனக்கும் எனக்கும் அவ்வளவு தூரம்...
நான் வெறும் புள்ளியாய்தான் தெரிந்திருப்பேன்
திடீரென என்பாதையில் இருந்த
உன் காலடிச்சுவடுகளைக்காணவில்லை.
ஒரு நாள்....
இரண்டு நாள்....
மூன்றாம் நாள்
மூச்சு விடக்கூட முடியவில்லை
தண்ணீரில் அமுக்கிவைத்ததுபோல..
துடிதுடித்தேன்....
உன் வீடுதேடிவந்தேன்
கொஞ்சம் என்சுவாசத்தை வாங்கிக்கொள்ள
கோளை நான்
சுவாசிக்க முடியவில்லை என்றபோதுதானே
ஓடோடிவந்தேன்..
நீ நேற்றுதான் போன் செய்தாயாம்
சுகமாய் போய் சேர்ந்துவிட்டதாக.....
அடுத்தமாதமே கல்யாணமாம் யுூகேயில்
சந்தோசமாய் சொன்னார் உன் அன்னை
சிரித்தபடி விடைபெற்றேன்
இன்றும் நான் சிரித்தபடிதான் ..
அன்புடன்
ஆதி

