Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிதாமகன்
#21
நாடெங்கும் (தமிழகத்தை தவிர) திரைப்பட விழாக்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிற காலமிது. அந்த விழாக்கள் அம்மாநிலத்தின் கலைரசனையை வெளிப்படுத்துகிறது. தமிழ் சினிமா கலை ரசனையற்றதா...? கலை உணர்வுள்ள, நல்ல படங்களை பார்த்துக் கொள்கிற தமிழ் சினிமா மனோநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருப்பதை சமீபகால பிலிம்சேம்பர் திரையிடல்களில் காணமுடிகிறது. யதார்த்தத்துடனான பாத்திரச் சித்தரிப்பை சமீபகால தமிழ் வெற்றிப் படங்களில் காணமுடிகிறது. மெயின்ஸ்ட்ரீம் என்றும் பாரலல் என்றும் −ருக்கிற −ருவேறு பிரிவுகளில் ஒன்றில் மற்றதன் சாயல்களை காணமுடிகிறது. −ந்த −ருவேறு பிரிவுகளை −ணைக்கிற மையப்புள்ளியாக வெளிவந்திருப்பதுதான் 'பிதாமகன்'. −ந்த −ருவேறு கூறுகளின் −ணைப்பை −யக்குநர் பாலா மிகச் சரியாகச் செய்திருக்கிறார். மிகச் சரியாகச் சொல்வதனால் தமிழின் மாற்றுச் சினிமாவாக என்னால் −தைக் காண முடிகிறது.

பிதாமகன் சித்தன் (விக்ரம்) மயானத்திலேயே பிறந்து அங்கேயே வளர்ந்தவன். (சுடுகாட்டில் பிறந்ததால் சிவனின் குழந்தை என்று படம் சொல்கிறது. ஆக சிவனே பிதா) அவனுக்கான உணவு, உடை, பழக்கவழக்கங்கள் எல்லாமே பிணங்களிலிருந்து கிடைப்பவைதான். பிணங்களுடனேயே வாழ்ந்ததால் அழுதறியா கண்கள். சமூகத்துடன் ஒன்றிவாழாததால் சமூக நடைமுறைகள் எதுவுமே அறியாமல் வாழ்கிறான். (வெட்டியானின் உதவியுடன்) தன்னைச் சீண்டுகிற எதையுமே (அது காவல்நிலையமாக −ருந்தாலும் சரி, சிறைச்சாலையாக −ருந்தாலும் சரி) அவன் திருப்பித் தாக்குவான். அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்கிற அறிவெல்லாம் கிடையாது. வெட்டியானின் −றப்பிற்கு பிறகு வெளியே வருகிற அவனுக்கு பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அதே ஊரில் வசிக்கிற ஏமாற்றுவதையே தனது தொழிலாகக் கொண்ட சக்தி (சூர்யா) சிறையில் வைத்து சித்தனைக் காண்கிறான். அவனைப் பற்றி அறிய வருகிற சக்தி அவன் மீது −ரக்கம் கொள்கிறான். அவர்களுக்கிடையே நட்பு ஆரம்பமாகிறது. சக்தி விடுதலை அடைந்தவுடன் சித்தனை ஜாமீனில் எடுக்க வைக்கிறான். வெளியில் −ருவரும் சந்தோஷமாக நாட்களை கழிக்கின்றனர். ஒரு கெலைப்பழி சித்தன் மீது விழுகிறது. அந்த ஆபத்திலிருந்தும் காப்பாற்றுகிறான் சக்தி.

அதனால் வெறுப்புற்ற கொடியவர்கள் சக்தியைக் கொல்கின்றனர். அதுவரை அழுதறியாத சித்தன் சக்தி எரிவதைக் கண்டு கதறுகிறான். −றுதியில் கொடியவர்களைக் கொன்றுவிட்டு மனித சமூகத்தை வெறுத்துச் செல்வதுடன் படம் முடிகிறது.

படம் முழுக்க வசனமின்றி உணர்வுகளாலேயே பேசியிருக்கிறார் விக்ரம். நடிப்பின் −ன்னொரு பரிணாமம் சூர்யா.

−ருபெரும் வெற்றிப்பட நாயகர்கள் (விக்ரம், சூர்யா) அவர்களது சாயல்கள் துளியுமின்றி கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். மற்றவர்களும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் (கல்லூரி மாணவி, கஞ்சா விற்கிற பெண், கஞ்சா பயிரிடுகிற முதலாளி, போலிச்சாமியார்) நிகழ்வுகளும் (கஞ்சா பயிரிடுதல், ஏற்றுமதி, சூர்யாவின் ஏமாற்றுவித்தைகள் போன்றவை) சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக லேகியம் விற்கும் போது சூர்யா பேசுகிற வசனங்கள் சபை நாகரீகம் கருதி தமிழ் சினிமா ஒதுக்கி வைத்திருந்தவை. தமிழ் சினிமாவின் பல்வேறு வரைமுறைகளை கடக்க முயற்சிக்கிறது −ப்படம். −சை, ஒளிப்பதிவு, படம் பிடித்த −டம் என அனைத்துமே மிக நேர்த்தியாக −ருக்கிறது.

தமிழ் சினிமாவில் −துபோன்ற நம்பிக்கைத்துளிர்கள் பல்வேறு காலகட்டத்தில் வெளிவந்திருக்கிறது. ஆனால் அவைகள் முளையிலேயே கிள்ளி எறியவும் பட்டிருக்கிறது. அதுவும் −தே நடிகர்களால். மிகத்தீவிரமான அழுத்தமான ஒரு கதாபத்திரத்துடன் கலகலப்பான ஒரு கதாபாத்திரத்தையும் −ணைத்து வெகுநேர்த்தியாகப் பின்னி வெற்றிப்படமாக மாற்றிய −யக்குநர் பாலா பாராட்டுக்குரியவர். தமிழ்சினிமாவின் வளர்ச்சிப் போக்கில் −ந்தப் படத்திற்கு ஒரு மிகப்பெரிய −டம் நிச்சயம் உண்டு. தமிழ் சினிமாவின் −லக்கண வரம்புகளை மீறுகிற −துபோன்ற படத்தைத்தான் என்னால் மாற்றுச் சினிமாவாக காண முடிகிறது.


நன்றி: ஆறாம் திணை
[i][b]
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)