Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கீத்தின் கவிகளா அல்லது.....
#21
சங்கீத் அருமையான கவி வரிகள்.வாழ்த்துக்கள்
----------
Reply
#22
உன் கண்ணுக்குள்
நானிருந்த போது
மகிழ்ந்தேன் - உனக்குள்
நான் கலந்துவிட்டேன் என்று.
ஆனால்
நீ எனது நண்பனை
நோக்கியபோது அவனும்
உன் கண்ணுக்குள் இருப்பதை
பார்த்தபோது,
இது காதல் அல்ல,
கானல் என்றுணர்ந்தேன்.
Reply
#23
sankeeth Wrote:அவளை நான்
உயிருக்குயிராய் காதலித்தபோதும்,
அந்தக் காதலில்
மலரும் நினைவுகள் இருந்ததில்லை.
மலர்ந்த மலர்களிடையே,
உறுத்துகின்ற முட்களாய் அவள்
நினைவுகள் மட்டுமே
இருக்கின்றன-ஏனெனில்
அது எனது
ஒரு தலைக்காதல் அல்லவா?

பாவம் ஆத்துக்காரி .. ம்ம் கவிகள் அருமை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#24
sankeeth Wrote:உன் கண்ணுக்குள்
நானிருந்த போது
மகிழ்ந்தேன் - உனக்குள்
நான் கலந்துவிட்டேன் என்று.
ஆனால்
நீ எனது நண்பனை
நோக்கியபோது அவனும்
உன் கண்ணுக்குள் இருப்பதை
பார்த்தபோது,
இது காதல் அல்ல,
கானல் என்றுணர்ந்தேன்.

ம்ம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கவி அருமை கீத்..
..
....
..!
Reply
#25
நல்ல காலம் வேளைக்கு அறிந்து விட்டீர்கள்....

நல்லாயிருக்கு வாழ்த்து

Reply
#26
முறை மச்சான்
நான் ஆறு வயதில்
மலர் தந்தபோது
மலர்ந்து சிரித்தாய்
பன்னிரண்டு வயதில்
பருவமெய்தியவுடன்
அம்மாவுடன் வந்து
மொய் தந்தபோது
நாணத்துடன் சிரித்தாய்
பதினெட்டு வயதிலே
என் காதலை
தந்தபோது மட்டும்
ஏன் கோபத்துடன் முறைத்தாய்?


காதல் என்பது
தப்பு என்று உனக்கு
யார் சொன்னது?
உனது அப்பாவா?
சொல்லியிருப்பார்-ஏனெனில்
அவரும் காதல் மணம்தானே.
Reply
#27
ம்ம் ம்ம் ம்ம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கவி அருமை கீத்
Reply
#28
சிறு கவிகள் சொல்லுகின்ற
சங்கீத்தே வாழ்க! மனச்
சுமைகளையே இறக்கி வைத்து
சுகம் பலவே பெறுக!

காதல்கதை கவிகளுக்கு கவினாகும்
கற்பவற்கும் கேட்பவற்கும் கனியாகும்
சோகத்திலே சொல்வதேனோ அனுபவமோ
சுரந்துவரும் சொல்ஊற்றின் தொடரலையோ!

Reply
#29
காதல் என்பது
தப்பு என்று உனக்கு
யார் சொன்னது?
உனது அப்பாவா?
சொல்லியிருப்பார்-ஏனெனில்
அவரும் காதல் மணம்தானே.



ம்ம்ம் நன்றாக இருக்கு
<<<<<..... .....>>>>>
Reply
#30
மழலைகள்
மண்ணில் வரும்
மரகதவீணைகள்
மலரும்போது
மனமதில்தான் எத்தனை
மகிழ்வு!
கள்ளமற்ற சிரிப்பு
சொற்களற்ற வார்த்தை
உறுதியற்ற நடை
வஞ்சனையற்ற உள்ளம்
கவலையற்ற வதனம்
இதுதான் மழலைகளின் உலகம்!
மொட்டவிழும் மலராய்
பட்டுப்போன்ற கன்னத்தால்
சிட்டாய் பறந்தடிக்கும்
சிட்டுக்குருவிகளல்லவோ இவர்கள்!
மண்ணும் ஒன்று உணவும் ஒன்று
பாம்பும் ஒன்று பந்தும் ஒன்று
என்பது இவர்கள் பார்வை
கொடிய மனதிலுள்ள கடிய செயலை படிய வைக்கும்பிறைமுகங்கள்
நிலவின் முகத்திலும் கருமை படியும்-ஆனால் இவர்கள் மதி முகங்களில் படியாது
மழலைகள் வாழ்வின் பேழைகள்.
Reply
#31
கள்ளமற்ற சிரிப்பு
சொற்களற்ற வார்த்தை
உறுதியற்ற நடை
வஞ்சனையற்ற உள்ளம்
கவலையற்ற வதனம்
இதுதான் மழலைகளின் உலகம்!


இந்த உலகம் நமக்கும் கிடைத்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.
நன்றயாய் இருக்கின்றது வரிகள். வாழ்த்துக்கள்.

Reply


Forum Jump:


Users browsing this thread: