Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜேர்மனியில் தமிழரின் அவலம்
#41
நண்பர் யூட்டுக்கு

முதலில் நீங்கள் சொன்ன வாதங்களிலிலும் கருத்துகளிலும் பிரதிபலித்த எதிராளியைக் கீழ்த்தரமாக நோக்கும் பார்வைக்காகவே நான் எனது வாதத்தை முன்வைத்தேன்

நீங்கள் மறுபடியும் எனது கருத்துக்கு பதிலளிக்கும்போதும் என்னையும் அதேநிலையில் வைத்துப் பார்ப்பதாகத் தெரிகிறது பரவாயில்லை ஏனென்றால் எங்களுக்கு அது பழக்கமாகிவிட்டது.

நீங்கள் மட்டுமே ஊரில் படித்து உலகம் சுற்ற புறப்பட்டவர் என்ற மனநிலை உங்களுக்குப் பழகிவிட்ட காரணத்தால் என்னாலும் அதே கல்வியில் உங்களவுக்கு செயற்பட்டு ஒருநாட்டில் எனக்குரிய நிலையை அடைந்திருக்க முடியும் என நீங்கள் நம்பப்போவதில்லை.அதனை நிரூபிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை.

தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள் என்பது எனது கோட்பாடு அதற்காக நான் தன்மிழீழத்துக்காக ஒரு மின்பிறப்பாக்கியையோ அல்லது தமிழுக்காக ஒரு பயனுள்ள திட்டததையோ தரமுடியாத வாய்ய்ச்சவடால் பேர்வழி என நீங்கள் நினைத்திருப்பது உங்கள் பதிலில் தெரிகிறது.ஆதற்கும் நான் வருத்தப்படவில்லை ஏனென்றால் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் மற்றவன் எல்லாம் முட்டாள் என்று நினைப்பது உங்களுக்குப் பழக்கமாகிப்போயிருக்கலாம்.

எனக்குப் பதிலளித்து இதனை வளர்க்கவேண்டாம்.தமிழீழத்துக்குப் பயனுள்ளதாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற உங்களின் ஒரே ஒரு நல்லெண்ணத்துக்காக உங்களிடம் எனது கூற்றுக்களுக்கு மன்னிப்புக் கேட்கிறேன்.

விரும்பினால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்
\" \"
Reply
#42
ஈழவன்,


Quote:முதலில் நீங்கள் சொன்ன வாதங்களிலிலும் கருத்துகளிலும் பிரதிபலித்த எதிராளியைக் கீழ்த்தரமாக நோக்கும் பார்வைக்காகவே நான் எனது வாதத்தை முன்வைத்தேன்

நீங்கள் மறுபடியும் எனது கருத்துக்கு பதிலளிக்கும்போதும் என்னையும் அதேநிலையில் வைத்துப் பார்ப்பதாகத் தெரிகிறது பரவாயில்லை ஏனென்றால் எங்களுக்கு அது பழக்கமாகிவிட்டது.
நீங்கள் நினைப்பது போல நான் அகதியாக வந்தவரை கீழ்த்தரமாக பார்க்கவில்லை. விவாதம் என்று வந்தால், விவாதத்தின் போக்கில் வாதிப்பது வழக்கம். மனம் நோகக்கூடியதாக எழுதுவது எனது பலவீனம்.
Quote:நீங்கள் மட்டுமே ஊரில் படித்து உலகம் சுற்ற புறப்பட்டவர் என்ற மனநிலை உங்களுக்குப் பழகிவிட்ட காரணத்தால் என்னாலும் அதே கல்வியில் உங்களவுக்கு செயற்பட்டு ஒருநாட்டில் எனக்குரிய நிலையை அடைந்திருக்க முடியும் என நீங்கள் நம்பப்போவதில்லை.அதனை நிரூபிக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை.
எல்லோருக்கும் திறமைகளும் அறிவும் உண்டு. அனுபவரீதியாக நிறையவே கண்டிருக்கிறேன்.

வேலைவாயப்புடன் வந்து குடிமகனாகியிருந்தாலும் அரசியல்வாதிகளிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் தமிழ்மக்கள் பிரச்சினை பற்றி பேசும் போது நானும் அகதி என்று கருதி அப்படியே அறிமுகப்படுத்தி தான் நான் செயற்பட்டிருக்கிறேன்.

ஆனாhல் உங்கள் தமிழீழ பற்றுக்காரணமாகவாவது அகதிகள் மேன்முறையுPடு செய்யும் போது தயவு செய்து விடுதலைப்புலிகளின் காரணமாக தம்மால் நாடுதிரும்ப முடியவில்லை என்று எவரையும் எழுதிக்கொடுக்க விடாதீர்கள். இது ஒரு கீழ்த்தரமான செயல். ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள்.

Quote:தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள் என்பது எனது கோட்பாடு அதற்காக நான் தன்மிழீழத்துக்காக ஒரு மின்பிறப்பாக்கியையோ அல்லது தமிழுக்காக ஒரு பயனுள்ள திட்டததையோ தரமுடியாத வாய்ய்ச்சவடால் பேர்வழி என நீங்கள் நினைத்திருப்பது உங்கள் பதிலில் தெரிகிறது.ஆதற்கும் நான் வருத்தப்படவில்லை ஏனென்றால் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் மற்றவன் எல்லாம் முட்டாள் என்று நினைப்பது உங்களுக்குப் பழக்கமாகிப்போயிருக்கலாம்.
நான் மதிக்கும் சிறந்த அரசியல் தலைவர்களுள் ஒருவர் காமராஜர். அவர் மூன்றாம் வகுப்புவரைதான் படித்தவர். பாடசாலைக்கல்விக்கும் பட்டங்களுக்கும் இவை மக்களுக்கு பயன்படாவிட்டால் நான் மதிப்பு கொடுப்பதில்லை.
எனது சகோதரர்கள் குடும்பம் எல்லாம் அங்கே தான் வாழ்கின்றார்கள். அந்த நாட்டைவிட்டு வெளியேறும் நோக்கமும் அவர்களுக்கு இல்லை. அவர்ளது பிள்ளைகளும் அங்கு தான் வாழப்போகிறார்கள். ஆகவே அந்தநாடு வளர்ச்சியடைந்த நாடாகவர வேண்டும் என்பதில் எனக்கு சுயநலமும் உண்டு.
Quote:எனக்குப் பதிலளித்து இதனை வளர்க்கவேண்டாம்.தமிழீழத்துக்குப் பயனுள்ளதாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற உங்களின் ஒரே ஒரு நல்லெண்ணத்துக்காக உங்களிடம் எனது கூற்றுக்களுக்கு மன்னிப்புக் கேட்கிறேன்.
உங்கள் கருத்துக்ளுக்கு நன்றி ஈழவன்.
''
'' [.423]
Reply
#43
அன்பின் äட் அவர்களே

நீங்கள் ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்விர்கள் என்று நினைக்கின்றேன் ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு காரணத்திற்க்காக புலம் பெயந்திருக்கலாம் ஆனால் ஓட்டு மொத்த தமிழினத்தின் வளர்ச்சி (விஞ்ஞான ,அறிவியல் தொழில்நுட்பம்,பொருளாதாரம்) இவ்வளவு வேகமாக வளர்ந்திருப்பதற்கு என்ன காரணம் என்று எண்ணுகிறீர்கள் தமிழரின் புலப்பெயர்வு என்றால் ஏற்றுக்கொள்வீர்களா??????
குறிப்பாக சொன்னால் தாயகத்தில் இருந்த 1ம் தரமக்கள் வளந்திருக்கலாம் ஆனால் 2ம்,3ம் தர மக்கள் நிலை என்ன எண்ணிப்;பாருங்கள் äட அவர்களே
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#44
<span style='font-size:25pt;line-height:100%'>இன்று லண்டனிலிருந்து ஓலிபரப்பாகும் இ..சி என்ற வானொலியில் இரவு ஐரோப்பிய நேரம் 9:35:31 அளவில் ஊடகவியலாளர் ஓரு ....கதவு நிகழ்ச்சியில் ஜேர்மனியில் பிரஜாவுரிமை பெற்றவர்களிடம் அவர்களின் பிரஜாவுரிமை மீளப்பெறப்படுவதாக தவறான தகவலை தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர் என்பவர் உறுதிப்படுத்தப்படாத தகவலை தெரித்துள்ளார் இக்கருத்து தவறு என நினைக்கின்றேன் முக்கியமான இவ்விடயங்களில் தவறான கருத்தை அல்லது கற்பனைகளை தெரிவிக்க கூடாது ஜேர்மனியில் நடைபெறும் பிரச்சனையை தெரிந்து கூறவேண்டும்.
பிரஜாவுரிமை வேறு
அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு வழங்கப்பட்ட கடவுச்சீட்டு வேறு
ஜேர்மனியில் உள்ளபிரச்சனை தற் பொழுது அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு வழங்கப்பட்ட நீல கடவுச்சீட்டிற்கானது.
தெரியாதவிடயத்தை தெரிந்து கொண்டு ஆய்வு செய்வது அல்லது தகவல் தெரிவிப்பது எல்லோருக்கும் உதவியாய்யிருக்கும்.</span> :!: :!:
!!!!
Reply
#45
சுட்டிக் காட்டியதற் நன்றி சுடலை. சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் அடுத்த வார நிகழ்ச்சியில் தவறை திருத்திக்கொள்ளுவார் என நினைக்கிறேன்!
இதுவரை நான் அறிய எனது நகரத்தில் மூவருக்கு கடிதம் வந்துள்ளது. ஆனால் தற்சமயம் அவர்கள் வேலை எதுவும் இல்லாமல் 'சோசல்' எனும் சமூக உதவியில் இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
Reply
#46
அன்பின் ஆவி,

Quote:நீங்கள் ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்விர்கள் என்று நினைக்கின்றேன் ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு காரணத்திற்க்காக புலம் பெயந்திருக்கலாம் ஆனால் ஓட்டு மொத்த தமிழினத்தின் வளர்ச்சி (விஞ்ஞான ,அறிவியல் தொழில்நுட்பம்,பொருளாதாரம்) இவ்வளவு வேகமாக வளர்ந்திருப்பதற்கு என்ன காரணம் என்று எண்ணுகிறீர்கள் தமிழரின் புலப்பெயர்வு என்றால் ஏற்றுக்கொள்வீர்களா??????
குறிப்பாக சொன்னால் தாயகத்தில் இருந்த 1ம் தரமக்கள் வளந்திருக்கலாம் ஆனால் 2ம்,3ம் தர மக்கள் நிலை என்ன எண்ணிப்;பாருங்கள் äட அவர்களே
உங்கள் கருத்தை முழுழையாக ஏற்றுக்கொள்கின்றேன். எமது மக்கள் மத்தியில் உள்ள கடின உழைப்பாளிகளும் மாணவர்களும் சிறந்த வணிகர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் அறிஞர்களாகவும் வர நிச்சயமாக வளர்ச்சியடைந்த நாடுகள் நல்ல களத்தை அமைத்து தந்துள்ளன.
அவற்றை சிறப்புற பயன்படுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள். முன்மாதிரிகையானவர்கள்.
''
'' [.423]
Reply
#47
<b>இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்</b>
-டொக்டர் ஜெயலத் ஜயவர்தன

<span style='font-size:22pt;line-height:100%'>சுவிசுக்கு வந்திருக்கும் டொக்டர் ஜெயலத் ஜயவர்தன அவர்கள் அகதிகளுக்கான ஐ.நா தலைமைக்கு ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததை ஐ.நா. அகதிகளுக்கான கமிசனர் ஏற்றுக் கொண்டுள்ளார் என பீபீசி சிங்கள சேவைக்கு அவர் அளித்த பேட்டியில் இன்று (05.10.2004) குறிப்பிட்டார்.

தற்போதைய இலங்கையின் நிலவரங்கள் சுமுகமாக இல்லாத தருணத்தில் இவர்களை திருப்பி அனுப்ப எண்ணியிருப்பது தவறான முடிவாகும் என குறிப்பிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதை அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஸ்தானிகர் ஏற்றுக் கொண்டு
அதற்கான நடிவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.</span>
Reply
#48
தகவலுக்கு நன்றி அஜீவன்
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#49
மேலே உள்ள செய்தியை ஏன் முக்கியப்படுத்தினேன் என்றால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து திருப்பி அனுப்ப உத்தேசித்துள்ள அகதிகள் தமது வழக்கறிஞர்களுக்கு இந்த அறிக்கையை கொடுக்கலாம்.

அல்லது
டொக்டர் ஜெயலத் ஜயவர்தன அவர்கள் வழி வழக்கறிஞர்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி இது பற்றிய கடிதம் ஒன்றை வாங்கி தேவைப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுக்கலாம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)