Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏன் தீபாவளி....?
#21
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நீங்கள் ஒரு கிறிஸ்த்தவனாயே அல்லது முஸ்லீமாயே அல்லது பௌத்தனாயே இருந்தால் நீங்கள் மற்றைய மத்தின் வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்வீர்களா??  
ஆனால் நான் சொல்கின்றேன் என்னால் சகல ஆலயங்களுக்கும் அவர்கள் அனுமதித்தால் நான் செல்வேன் எனக்கு எனது மதம் எந்தத் தடையையும் விதிக்க வில்லை ஆனால் மற்றைய மதம்.... கட்டாய பெயர் மாற்றம்... சவுக்கடி.... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஐயா சாமி
நீங்கள் இந்துவாக இருந்து கொண்டு தேவாலயத்துக்கோ அல்லது விகாரைக்கோ போக முடியும். ஆனால் மற்ற மத்தினர் உங்கள் கோயிலுக்குள் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்பது தெரியாது. அதை விடுங்கள்...

அதைவிடப் பெரிய கேவலம் இந்துக் கோயிலுக்குள் ஒரு இந்துவே போகமுடியாது. இப்படி ஒரு கேவலம் வேறை எந்த மத்திலும் இல்லை. சூத்திரன் தாழ்த்தப்பட்டவன் எண்டு கூறி இந்து மதத்தைப் பின்பற்றுபவன் இந்துக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுதில்லை.
கோயில்களில் மாட்டு வடிவத்திலிருக்கும் நந்தன் கதை பற்றி நீங்கள் அறியவில்லையை?? அந்தப் பழைய கதை பொய்யோ உண்மையோ தெரியாது. தமிழ்நாட்டில் தங்களை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற காரணத்தினால் ஒரு தலித் கிராமமே முஸ்லீம் மதத்திற்கு மாறியது. இது இவ்வருடம் நடந்த உண்மைக் கதை. (அறிந்திருப்பீர்கள் எண்டு நினைக்கிறன்).

கிறிஸ்தவ மதத்திற்கு மாறீனால் ஆங்கிலப் பெயர்களை அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள், இஸ்லாமிற்கு மாறினால் அரபிய பெயர்களை வைக்கிறார்கள் இது கட்டாய பெயர் மாற்றம் நான் இதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நீங்களும் தமிழன் நானும் தமிழன் ஏனையா எங்கள் இருவருக்கும் தமிழ்ப் பெயர் இல்லை.??? எப்படி தமிழர்களான எமக்கு தமிழ்ப் பெயர் இல்லாமல்ப் போனது நமக்கு மட்டுமா ஈழத்தமிழர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கும், இந்தியத் தமிழர்களில் 75 சதவீத்திற்கும் அதிகமானோருக்கும் தமிழ் பெயர் இல்லை. இதைக் கேட்க வேதனையாய் இல்லை??
<b>
?
- . - .</b>
Reply
#22
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சங்க காலம் சங்க காலம் என்று கூறும் உங்கள் சங்ககாலம் பற்றிய கதை மட்மென்ன மூட நம்பிக்கையில்லையா??? எதை ஆதாரமாகக் கொண்டு நீங்கள் சங்ககாலம் பற்றி கூறுகின்றீர்கள்???  
கற்பனையில் கவி எழுதி அதை ஈழத்துடன் முடிச்சுப்போட்டு இராமனை நல்லவனாக்கிய கம்பரின் இராமயத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்கின்றீரோ?? (வான்மீகரின் இராமயணத்ததைப் படித்துப்பாருங்கள்)  
அல்லது அடுத்த மிகபெரும் கற்ப்பனைக்கடல் மகா பாரதத்தை வைத்துச சொல்கின்றீரோ???  
அல்லது உண்மையே பேசியதாய் கவிஞரின் பொய்யால் எழுதிய அரிந்சந்திரா புராணத்ததை வைத்துச் சொல்கின்றீரா???அல்லது சிலவேளை தென்னிந்திய கற்பனையியலாளர்களின் கற்பனையில் வந்த திரைப்படத்தை பார்த்து விட்டீரோ???  
கற்பனைகள் கதைகளில் கூட இந்து மதம் முன்னிலைப் பெறுவதை நீர் அறிவதில்லைப் போல.....  
சங்க காலம் பற்றி தமிழனுக்கு சொன்னது யார்???? அதன் ஆதாரச்சுவடுகளை வழங்கியது யார்????<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நிதர்சன் நீங்கள் நிச்சயமாக சங்ககாலம் எண்டா என்னவென்று அறியவில்லை. ஆனால் அறியாத விடயத்தை இப்படிப் போட்டுத் தாக்குவது வேதனையளிக்கிறது.

தமிழில் உள்ள இலக்கியங்களை வைத்து அவற்றின் தன்மைக்கேற்ற வகையில் காலங்கள் பிரிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான் சங்க காலம். இந்தச் சங்க காலமே தமிழர் வரலாற்றில் பொற்காலம் என்று சொல்லப்படுகிறது. இக் காலத்தில் தமிழர்கள் படைபலத்தில் சிறந்தவர்களாக அதேநேரம் ஒற்றுமையுடன் வாழ்ந்திருக்கிறார்கள். இக் காலத்தில் தமிழர்களிடம் மதம் எண்ட ஒண்டு இருக்கவில்லை ஆனால் போரில் மடிந்த வீரர்களுக்கு ஊருக்கு வெளியே ஒர் நினைவிடம் அமைத்து அவர்களை வாழிபட்டார்கள்(அஞ்சலி செலுத்தினார்கள்). அவ் வீரர்களின் நினைவாக ஒரு நாள் அவர்களின் நினைவிடத்தில் ஆடு, மாடு போன்ற விலங்குகளைப் பலியிட்டு அவற்றை அங்கு சமைத்து மாவீரர்களுக்கும் படைத்து தாங்களும் உண்டு மகிழ்ந்து ஊர் திரும்புவார்கள். இக் காலத்தில் தமிழர்கள் கணித அறிவில் கூட தேர்ச்சி பெற்றிருந்திருக்கிறார்கள். காக்கைப் பாடினர் என்ற அறிஞர் வட்டத்தின் பரப்பளவைக் காணும் சூத்திரத்தைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்.

இலக்கியங்களிற்கு ஏற்வகையில் காலங்கள் இவ்வாறு பிரிக்கப்பட்டன
1. சங்க காத்திறகு முற்காலம் (தமிழின் இலக்கண நூல் தொல்காப்பியம் இக் காலத்திலேயே உருவாகியது. இது கிமு 600ஆம் ஆண்டளவில் தொல்காப்பியரால் எழுதப்பட்டது. இந்த நூலின் மூலமே எமது மொழி உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என ஏற்றுக் கொள்ளப்பட்டது.)
2.சங்க காலம் (கிமு 300 - பத்துப் பாட்டு, கலத்தொகை போன்றவை)
3. சங்கமருவிய காலம் (திருக்குறள்,)
4.பக்திக் காலம்

நீங்கள் சங்ககாலத்துக்கு ஆதாரமா? எண்டு கேட்ட இராமாயணம் சங்க காலம் முடிந்து 2000 ஆண்டுகள் கழித்தே எழுதப்பட்டது. அதாவது இது 17ஆம் நூற்றாண்டுக்குரிய இலக்கியம். இவற்றை எழுதியது தமிழர்கள் அல்ல பார்ப்பனர். ஆனால் கம்பரின் இராமாயனம் தமிழ் இலக்கியங்களிலே தனிச் சிறப்புடையது. அதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் கம்பனின் இலக்கியத் திறமை போற்றப் படவேண்டியது. மதிக்கப்பட வேண்டியது.
ஆதாரச் சுவடிகளை யார் வழங்கியது என்று கேட்கிறீர்கள்?
தமிழ் இலக்கியங்களைச் சேகரித்து வைத்த பெருமை இந்து மதச் சாக்கடையில் கிடந்த ஒரு பார்ப்னனயே சாரும். ஊரூராக கால்நடையாகச் சென்று தீயிற்கும் கறையானுக்கும் பலியாகிக் கொண்டிருந்த பல இலக்கியங்களை காப்பாற்றி வைத்த பெருமை அவரையே சாரும். அதற்காக அவரிற்கு நாங்கள் தலை வணக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
<b>
?
- . - .</b>
Reply
#23
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இது 17ஆம் நூற்றாண்டுக்குரிய இலக்கியம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மன்னிக்கவும் தவறான தகவலலைத் தெரிவித்தமைக்கு. கம்பரின் இராமயணம் 12ஆம் நூற்றாண்டிலேயே பாடப்பட்டது.
<b>
?
- . - .</b>
Reply
#24
சளைக்காமல் உங்கள் பக்க நியாயத்துக்கு ஆதாரம் வைக்கிறீர்கள்... தொடருங்கள்.. நாங்கள் படிக்கின்றோம்...தேவையென்றால் பதில் அளிப்போம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
நன்றி சிறீ ரமணன் இத்தனை ஆதாரங்களை அடுக்கியுள்ளீர்கள்.

இந்த சங்க,சங்க மருவிய காலக்குறிப்புகளிலும் அந்தந்த காலத்து இலக்கியங்கள் கூறும் பொருட்கள் பற்றியும் எனது மயக்கம் இன்னும் தீரவில்லை.

தமிழின் பண்டைய இலக்கியங்கள் பௌத்த,சமண சமயங்களை முதலாக வைத்துப் படைக்கப்பட்டிருக்கின்றன.அந்தக் காலத்தில் தமிழர்கள் பௌத்த,சமண சமயத்தை பின்பற்றியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

நாம் சிங்களவரையும் இனைப்பிரச்சனையையும் பௌத்தத்துடன் தொடர்புபடுத்தி அதனை வெறுக்கின்றோம்.

ஆனால் ஞாயிறு போற்றுதும்,ஞாயிறு போற்றுதும் என உலக முதலாகிய சூரியனை வணங்கியவன் தமிழன் என்பதில் சந்தேகமே இல்லை.

நிதர்சனுக்கு
தமிழன் ஆண்டாண்டு காலமாய் பொங்கல் கொண்டாடியதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு கிறிஸ்தவம் இஸ்லாம் மதங்கள் தமிழர்களால் இடையிலிருந்து கைக்கொள்ளப்பட்டவை
யோசித்துப் பாருங்கள்

ஐரோப்பியர் இங்கு வருவதன் முன் இங்கு கிறித்தவர் இருக்கவில்லை ஆனால் இந்து மதத்தின் பெயரால் தமிழர் திருவிழாவான பொங்கலைக் கொண்டாடினோம்.பின்னர் வந்தவர்களால் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டவர்கள் அதனை இந்துத் திருவிழாவாக எண்ணி கொண்டாடாமல் விட்டார்கள்.

அரேபியரும் யவனியரும் இங்கு வருவதன் முன் இங்கு இஸ்லாமோ முஸ்லிமோ இருக்கவில்லை வந்ததும் மதம் மாறியவர்கள் பொங்கலை இந்துசமய விழாவாகக் கருதி கொண்டாடாமல் விட்டார்கள்

அவர்களும் தமிழர்கள் தாம் ஆனால் தவறான புரிந்துணர்வால் பொங்கல் கொண்டாடுவதில்லை.பொங்கல் என்று சொல்வதிலும் பார்க்க சூரியப் பெருநாள் என்று சொல்வது பொருத்தமானது.
\" \"
Reply
#26
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->
நிதர்சனுக்கு
தமிழன் ஆண்டாண்டு காலமாய் பொங்கல் கொண்டாடியதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு கிறிஸ்தவம் இஸ்லாம் மதங்கள் தமிழர்களால் இடையிலிருந்து கைக்கொள்ளப்பட்டவை
யோசித்துப் பாருங்கள்

ஐரோப்பியர் இங்கு வருவதன் முன் இங்கு கிறித்தவர் இருக்கவில்லை ஆனால் இந்து மதத்தின் பெயரால் தமிழர் திருவிழாவான பொங்கலைக் கொண்டாடினோம்.பின்னர் வந்தவர்களால் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டவர்கள் அதனை இந்துத் திருவிழாவாக எண்ணி கொண்டாடாமல் விட்டார்கள்.

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<ul>
<li> கிறிஸ்தவ÷களும் பொங்கல் கொண்டாடுகிறா÷கள். 1980களில் இருந்து கிறிஸ்தவ÷கள் (கத்தோலிக்க÷) தமது சமயச்சடங்குகளுடன் பொங்கல் நாளன்று, தமிழ் தேசிய உடையுடுத்து பொங்கி கொண்டாடுவது வழக்கம்.
<li> இந்தியாவில் கிறிஸ்தவம் முதன்முதலில் சேரநாட்டில் 2000ம் வருடங்களுக்கு முன்பே பரவிவிட்டது. கிறிஸ்துவின் 12 சீட÷களில் ஒருவரான தோமஸ் என்பவ÷ கிறிஸ்தவத்தை அங்கு பரப்பியதாக வரலாறு. அந்த காலத்திலேயே கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் இன்றும் அங்கு இருக்கின்றன.
<ul>
''
'' [.423]
Reply
#27
<!--QuoteBegin-நித÷சன்+-->QUOTE(நித÷சன்)<!--QuoteEBegin--> சங்க காலம் சங்க காலம் என்று கூறும் உங்கள் சங்ககாலம் பற்றிய கதை மட்மென்ன மூட நம்பிக்கையில்லையா??? எதை ஆதாரமாகக் கொண்டு நீங்கள் சங்ககாலம் பற்றி கூறுகின்றீர்கள்???<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பாண்டிய மன்ன÷கள் முதலாம் தமிழ் சங்கம், இரண்டாம் தமிழ் சங்கம்(இடைச்சங்கம்), மூன்றாம் தமிழ்சங்கம் (கடைச்சங்கம்) ஆகிய சங்கங்களை அமைத்து தமிழ் வள÷த்த காலம் சங்க காலம் எனப்படுகிறது. கிறிஸ்துவுக்கு முன் 3ம் நூற்றாண்டில் 3ம் தமிழ் சங்கம் இடம் பெற்றது. முதலாம் தமிழ்ச்சங்கத்துக்கு இறையனா÷ தலைமை தாங்கினா÷. இவரே "திரிபுறம் எறிந்த விரிசடைக்கடவுள்" என அறியப்பட்டவ÷. இரண்டாம் சங்கத்துக்கு முருகன் தலைமை தாங்கினா÷. கடைச்சங்கத்தில் சிவன் அகத்தியருடன் த÷க்கம் புரிந்தா÷. கடைச்சங்க காலத்திலேயே எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களும் இயற்றப்பெற்றதாக நம்பப்படுகின்றது.
முருகன், சிவன் ஆகியோ÷ பின்ன÷ கடவுள்களாக மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன÷. சிவனை வழிபடும் தமிழ÷ சைவ÷ என அழைக்கப்படுகின்றன÷.
Reply
#28
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin-->முதலாம் தமிழ்ச்சங்கத்துக்கு இறையனா÷ தலைமை தாங்கினா÷. இவரே \"திரிபுறம் எறிந்த விரிசடைக்கடவுள்\" என அறியப்பட்டவ÷. இரண்டாம் சங்கத்துக்கு முருகன் தலைமை தாங்கினா÷. கடைச்சங்கத்தில் சிவன் அகத்தியருடன் த÷க்கம் புரிந்தா÷. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin-->முருகன், சிவன் ஆகியோ÷ பின்ன÷ கடவுள்களாக மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன÷. சிவனை வழிபடும் தமிழ÷ சைவ÷ என அழைக்கப்படுகின்றன÷.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஜூட் இதெல்லாம் பார்ப்பனம் கட்டிவிட்ட கதை
கடைசி சங்கத்தில் சிவன் அகத்தியருடன் தர்க்கம் புரிந்தார் என்று எழுதியுள்ளீர்கள்.

ஆனால் அகத்தியரோ தொல்காப்பியருடைய குரு. தொல்காப்பியத்தில் பல இடங்களில் அகத்தியரின் அகத்தியதை தொல்காப்பியர் மேற்கோள் காட்டியிருக்கிறார். தொல்காப்பியரின் காலமோ கிமு6ஆம் நூற்றாண்டு ஆனால் கடைச் சங்கம் கிமு 3ஆம் நூற்றாண்டு
இதிலிருந்து தெரிகிறதல்லவா? இது ஒரு கட்டுக் கதையென்று
<b>
?
- . - .</b>
Reply
#29
சிறீரமணன்... அகத்தியன் தனி ஒரு காலத்தவர் அல்ல... இந்த அகத்தியர் பற்றி நாங்கள் படித்ததில்.... அகத்தியர்கள் காலத்துக்கு காலம் தோன்றியதாகவே உணரப்படுகிறது...அதனால்தான் இந்தக் கால இடைவெளியை நீங்கள் உணர்கிறீர்கள்....சிவன் எந்தக் காலத்து அகத்தியனுடன் தர்க்கித்தாரோ...???! Idea

Tamil language has the special claim of being at once classical like Sanskrit, Greek or Latin, and vigorous and modern like the modern Indian languages. Its history can be traced back to the age of Tolkappiyam the earliest extant Tamil grammar generally to 500 B.C. Among the Dravidian language it is least influenced be 'sanskrit' though there is a certain degree of influence.

The earliest extant literature of the Tamils is called Sangam literature and it is dated between 500 BC. and 200 A.D. Though a considerable part of the early poetry has been lost, some of the bards and patrons decided to preserve apart of it in certain anthologies (about 4th century A.D.). These are the Ten Idylls (Pattuppattu) and the Eight Anthologies (Ettuttohai). Four hundred and seventy three poets, of whom thirty are women, have been identified. These are mainly classified into two. Akam or esoteric dealing with love and Puram or exoteric dealing with war.

source : tamilcanadian.com

அத்தோடு இதையும் கொஞ்சம் நோக்குங்கள்.... Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
நன்றி குருவிகளே இந்தத் தகவலைத் தந்தமைக்கு

<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin-->முதலாம் தமிழ்ச்சங்கத்துக்கு இறையனா÷ தலைமை தாங்கினா÷. இவரே \"திரிபுறம் எறிந்த விரிசடைக்கடவுள்\" என அறியப்பட்டவ÷. இரண்டாம் சங்கத்துக்கு முருகன் தலைமை தாங்கினா÷. கடைச்சங்கத்தில் சிவன் அகத்தியருடன் த÷க்கம் புரிந்தா÷.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஜூட் நீங்கள் இவற்றை ஏதாவது இலக்கியத்தை ஆதாரமாக வைத்துச் சொல்கிறீர்களா? அப்படியென்றால் அது எந்த இலக்கியம் எண்டு விபரியுங்கோ
<b>
?
- . - .</b>
Reply
#31
வணக்கம் நிதர்சன்
என்ன ஆளையே காணோம்.
உங்கள் கருத்துக்கு பதில் கருத்தை அதிகாலை நான்கு மணிவரை நித்திரை விழித்து எழுதியிருந்தேன். எனது கருத்துக்குப் பதில் கருத்துத் தராவிட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து எனது (பதில்)கருத்துக்களைப் படியுங்கள்
<b>
?
- . - .</b>
Reply
#32
<!--QuoteBegin-Sriramanan+-->QUOTE(Sriramanan)<!--QuoteEBegin-->வணக்கம் நிதர்சன்
என்ன ஆளையே காணோம்.
உங்கள் கருத்துக்கு பதில் கருத்தை அதிகாலை நான்கு மணிவரை நித்திரை விழித்து எழுதியிருந்தேன். எனது கருத்துக்குப் பதில் கருத்துத் தராவிட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து எனது (பதில்)கருத்துக்களைப் படியுங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அவர் நல்லா நித்திரை கொள்ளுறார் போலை உங்கடை கருத்து படித்து கருத்து எழுதணும் எல்லா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#33
Jude Wrote:[quote=Eelavan]
நிதர்சனுக்கு
தமிழன் ஆண்டாண்டு காலமாய் பொங்கல் கொண்டாடியதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு கிறிஸ்தவம் இஸ்லாம் மதங்கள் தமிழர்களால் இடையிலிருந்து கைக்கொள்ளப்பட்டவை
யோசித்துப் பாருங்கள்

ஐரோப்பியர் இங்கு வருவதன் முன் இங்கு கிறித்தவர் இருக்கவில்லை ஆனால் இந்து மதத்தின் பெயரால் தமிழர் திருவிழாவான பொங்கலைக் கொண்டாடினோம்.பின்னர் வந்தவர்களால் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டவர்கள் அதனை இந்துத் திருவிழாவாக எண்ணி கொண்டாடாமல் விட்டார்கள்.
<ul>
<li> கிறிஸ்தவ÷களும் பொங்கல் கொண்டாடுகிறா÷கள். 1980களில் இருந்து கிறிஸ்தவ÷கள் (கத்தோலிக்க÷) தமது சமயச்சடங்குகளுடன் பொங்கல் நாளன்று, தமிழ் தேசிய உடையுடுத்து பொங்கி கொண்டாடுவது வழக்கம்.
<li> இந்தியாவில் கிறிஸ்தவம் முதன்முதலில் சேரநாட்டில் 2000ம் வருடங்களுக்கு முன்பே பரவிவிட்டது. கிறிஸ்துவின் 12 சீட÷களில் ஒருவரான தோமஸ் என்பவ÷ கிறிஸ்தவத்தை அங்கு பரப்பியதாக வரலாறு. அந்த காலத்திலேயே கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் இன்றும் அங்கு இருக்கின்றன.
<ul>

கிறிஸ்மஸ் கொண்டாடும் ஒரு சில இந்துக்களைப் போல பொங்கல் கொண்டாடும் ஒரு சில கத்தோலிக்கர் இருக்கிறார்கள் எனது நண்பர்கள் சிலரும் கொண்டாடுவதுண்டு

சதவீதப்படி பார்த்தால் கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடுவது இல்லை

தற்போதைய கேரளாவும் பண்டைய சேரநாடுமான மலையாள நாட்டில் பழைய தேவாலயங்கள் உண்டு
2000 கணக்கு சரியா எனத் தெரியாது
\" \"
Reply
#34
சிறீ ரமணன்

ஆராய்ச்சியின் படி ஒரு அவ்வையார் அல்ல பல அவ்வையார் இருந்திருக்கிறார்கள்.அதற்காக அவ்வையார் என்பது கற்பனை என்றும் அவரது பாடல்கள் கற்பனை என்றும் கூற முடியுமா

அகத்தியர் கதையும் அவ்வாறே இருக்கும் இது கொஞ்சம் கஷ்டமான விவாதம் நிறையப் படிக்கவேண்டி இருக்கிறது முடிந்தால் அதிகாலைக்குள் சொல்வேன்.

பார்ப்பனப் பரதேசிகள் என்ற உங்கள் வழக்கு அருவருப்பைத் தருகிறது அவர்கள் சொன்னதையெல்லாம் நம்பிய முட்டாள்கள் நாங்களும் எங்கள் மூதாதையரும் அதற்காக அவர்களை பரதேசிகள் என்று கூறுவது சரியல்ல என்பது எனது கருத்து.

யார் கண்டது நாளைக்கே இன்றைய சூத்திரரும் தாழ்த்தப்பட்டவரும் புனையும் இலக்கியங்கள் வரலாற்றுக் குறிப்புகளாகலாம் அன்று பார்ப்பனச் சிறுவர்கள் ஒரு வேளை சொல்வார்கள் தமிழ்ச் சனியன்கள் இவ்வாறு புனைந்து விட்டார்கள்
\" \"
Reply
#35
Quote:ஆராய்ச்சியின் படி ஒரு அவ்வையார் அல்ல பல அவ்வையார் இருந்திருக்கிறார்கள்.அதற்காக அவ்வையார் என்பது கற்பனை என்றும் அவரது பாடல்கள் கற்பனை என்றும் கூற முடியுமா

அகத்தியர் கதையும் அவ்வாறே இருக்கும் இது கொஞ்சம் கஷ்டமான விவாதம் நிறையப் படிக்கவேண்டி இருக்கிறது முடிந்தால் அதிகாலைக்குள் சொல்வேன்.
பல ஒளவையார்கள்தான் இருப்பதை அறிந்திருந்தேன். ஆனால் அகத்தியர் ஒருவர் என்றே அறிந்திந்தேன். அதனால்த்தான் அப்படி எழுத வேண்டியிருந்தது. அதற்காக வருந்துகிறேன் மன்னிப்புக் கேட்கிறேன்.

ஆனால் முதற்சங்கம், இடைச்சங்கம், மற்றும் கடைச் சங்கத்துடன் முருகன் சிவன் போன்றவரை இணைத்து எழுதப்பட்டதைத்தான் பார்ப்பனரின் கற்பனை எண்டு எழுதியிருந்தேன்.

நான் பார்ப்பனரைப் பரதேசிகள் எண்டு சொன்னதற்குக் காரணம் அவர்கள் மீதிருக்கும் கோபத்தின் வெளிப்பாடே. எமது இனம் சமயம் சாத்திரம் எண்டு தமது சொந்தப் பண்பாட்டை மறந்து ஏதிலி இனமாக இருப்பதற்கு அவர்கள் வழிவகுத்து விட்டார்களே எண்ட கோவம்தான். ஆனால் இவர்களின் ஆக்கிரமிப்புக் எமது தமிழ் மன்னர்களே ஊக்கம் அளித்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.
<b>
?
- . - .</b>
Reply
#36
நிச்சயமாக அகத்தியர் ஒருவரில்லை... நான்காக இருக்க வேண்டும்.. வெவ்வேறு காலத்தில் தோன்றியவர்கள்...பாடசாலையில் ஒரு நிகழ்ச்சியில் இந்துநாகரிக விரிவுரையாளர் மேற்கொண்ட சொற்பொழிவில் கேட்டது...முற்றும் நினைவில் இல்லை... அதனால் இதில் எங்களால் உறுதியாக ஒரு ஆதாரத்தைத் தரமுடியவில்லை... அதற்காக வருந்துகின்றோம்... நிச்சயம் ஆதாரம் கிடைத்தால் இங்கு தருவோம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
Eelavan Wrote:
Jude Wrote:[quote=Eelavan]
நிதர்சனுக்கு
தமிழன் ஆண்டாண்டு காலமாய் பொங்கல் கொண்டாடியதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு கிறிஸ்தவம் இஸ்லாம் மதங்கள் தமிழர்களால் இடையிலிருந்து கைக்கொள்ளப்பட்டவை
யோசித்துப் பாருங்கள்

ஐரோப்பியர் இங்கு வருவதன் முன் இங்கு கிறித்தவர் இருக்கவில்லை ஆனால் இந்து மதத்தின் பெயரால் தமிழர் திருவிழாவான பொங்கலைக் கொண்டாடினோம்.பின்னர் வந்தவர்களால் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டவர்கள் அதனை இந்துத் திருவிழாவாக எண்ணி கொண்டாடாமல் விட்டார்கள்.
<ul>
<li> கிறிஸ்தவ÷களும் பொங்கல் கொண்டாடுகிறா÷கள். 1980களில் இருந்து கிறிஸ்தவ÷கள் (கத்தோலிக்க÷) தமது சமயச்சடங்குகளுடன் பொங்கல் நாளன்று, தமிழ் தேசிய உடையுடுத்து பொங்கி கொண்டாடுவது வழக்கம்.
<li> இந்தியாவில் கிறிஸ்தவம் முதன்முதலில் சேரநாட்டில் 2000ம் வருடங்களுக்கு முன்பே பரவிவிட்டது. கிறிஸ்துவின் 12 சீட÷களில் ஒருவரான தோமஸ் என்பவ÷ கிறிஸ்தவத்தை அங்கு பரப்பியதாக வரலாறு. அந்த காலத்திலேயே கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் இன்றும் அங்கு இருக்கின்றன.
<ul>

கிறிஸ்மஸ் கொண்டாடும் ஒரு சில இந்துக்களைப் போல பொங்கல் கொண்டாடும் ஒரு சில கத்தோலிக்கர் இருக்கிறார்கள் எனது நண்பர்கள் சிலரும் கொண்டாடுவதுண்டு

சதவீதப்படி பார்த்தால் கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடுவது இல்லை
ஈழவன் 1980களுக்கு பிறகு, கத்தோலிக்க சமயம் அந்த அந்த நாட்டு மக்களின் பண்பாட்டுடன் சமயம் இணைந்து செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இந்தவகையில் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும், இலங்கையின் தமிழ்ப்பகுதிகளிலும் சமயம் பொங்கலை, பொங்கல் நாளன்று சமயச்சடங்குகளுடன் கொண்டாடுகின்றது. மக்கள் மத்தயில் வீட்டில் எவ்வளவு பே÷ கொண்டாடுகிறா÷கள் என்பதை பற்றி கருத்து கூற என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை.
லத்தீன் மொழியில் செய்யப்பட்ட வழிபாடுகள் தமிழுக்கு மாற்றப்பட்டது 1950 அல்லது 60 களில். இதுவும் கூட, கத்தோலிக்க சமயம் மக்கள் மொழிக்கு மாறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

பொங்கலை கத்தோலிக்க சமயம் தமது சமயவிழாக்களுடன் இணைத்துக்கொண்ட போது இது சைவ திருநாள் என்று எதி÷ப்பு கிளம்பியது. அதே வேளை, தீபாவளியையும் தமிழ÷ திருநாள் என்று கூறி, தீயதை அழித்து நன்மை வென்ற நாள், ஆகவே கத்தோலிக்கம் இதையும் தமது திருநாளாக்க வேண்டும் என்று முயற்சித்தவ÷களும் உண்டு. பின்ன÷, இறுதியாக பொங்கல் தமிழ÷ திருநாள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தீபாவளி, இந்து திருநாள் என விளக்கபட்டு கத்தோலிக்க÷களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
Eelavan Wrote:தற்போதைய கேரளாவும் பண்டைய சேரநாடுமான மலையாள நாட்டில் பழைய தேவாலயங்கள் உண்டு
2000 கணக்கு சரியா எனத் தெரியாது

வழக்கிலிருக்கும் ஆண்டுகள் கிறிஸ்து பிறந்த ஆண்டை அடிப்படையாக வைத்தே வகுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பியருக்கு முதல் சேரநாட்டில் (கேரளா) கிறிஸ்தவம் பரவியதற்கு ஒரே ஒரு விளக்கம் தான் இதுவரை கொடுக்கப்பட்டு வருகிறது. அது, கிறிஸ்துவின் நண்ப÷களில் ஒருவரான தோமஸ் கிறிஸ்தவத்தை அங்கு பரப்பினா÷ என்பதே. ஆகவே சேரநாட்டில் கிறிஸ்தவம் 2000 ஆண்டுகளாக இருந்திருக்க வேண்டும் என்பது சரியான கணிப்பீடு.மேலதிக தகவல்களுக்கு கீழ்வரும் இணயங்களை பாருங்கள்.
<ul>
<li>Encyclopedia: Saint Thomas Christians
<li>Saint Thomas Christians
<li>St. Thomas Christians and other Christian sects in Kerala History
<li>Kerala Syrian Christian Wedding
<li> The Myth of Saint Thomas and the Mylapore Shiva Temple
<ul>
கிறிஸ்து சிலுவையிலுருந்து இறக்கப்ப்ட்டு ஒரு குகைக்குள் அடக்கம் செய்யப்பட்டா÷. மூன்று நாட்களின் பின், அந்த குகை திறக்கப்பட்டு காணப்பட்டது. சில நாட்களின் பின் நண்ப÷கள் முன் அவ÷ மலை ஒன்றில் இருந்து வான் வழியே மேலே எடுத்துக் கொள்ளப்பட்டா÷ என பைபிள் சொல்கிறது. ஆனால் தப்பி நாட்டைவிட்டு ஓடிய கிறிஸ்து காஷ்மிரில் சிறிநகரில் வாழ்ந்து முதிய வயதில் இறந்தா÷ என்றும், அவரது கல்லறை அங்கே உள்ளது என்றும் படங்களுடன் விளக்கும் இணையத்தளங்களும் நிறைய உள்ளன.
Reply
#38
நான் முன்னார் கூறிபடி கருத்துக்களை முன் வைக்கலாம் ஆனால் என்னிடம் அதை நிருபிக்க ஆதாரங்கள் இல்லை அதனால் எழுதாமல் Confusedhock: உங்கள் கருத்துக்களை மட்ம் படிக்கிறேன் நித்திரை கொள்வது எனது பொழுது போக்கல்ல
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)